Loading

காதல் – 9

 

அஸ்வதி,  விஹான்னா மற்றும் விஹானோடு சந்தோஷமாக சிரித்து பேசி கொண்டு இருந்தாள் அதை அங்கு வந்த சுலோச்சனாவும் அனந்தியும் பார்த்து விட்டார்கள்…..

 

அஸ்வதி சந்தோஷமாக சிரித்து பேசுவதை அவர்களால் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியுமா?

அவளை எதாவது செய்தாக வேண்டும் என்று அவர்கள் அவளை கிட்சனுக்கு அழைத்தனர் அங்கு தோசை கரண்டியை திருப்பி அடுப்பில் வைத்து சூடு பண்ணி கொண்டு இருந்தார்கள் அதை பார்த்த அஸ்வதி பயத்தில் நடுங்கி கொண்டு இருந்தாள்…..

 

அம்மா ….

நா எதுமே பண்ணல , அப்புறம் ஏன் சூடு போட போறீங்க? என்று அழுகை குரலில் கேட்டாள்….

 

நீ எங்கள பத்திதான அவங்க ரெண்டு பேருக்கிட்டையும் தப்பு தப்பா சொல்லிட்டு இருந்த என்று அனந்தி கேட்கவும் , இவளுக்கு நாங்கள் மூவரும் பேசியது எப்படி தெரிந்தது என்று  அஸ்வதி முழித்து கொண்டு இருந்தாள்….

 

அம்மா பாருங்க நா அப்போவே சொன்னேன்ல  இவ நம்மள பத்தி தான் அந்த விஹான்கிட்டயும் விஹான்னாக்கிட்டயும் தப்பு தப்பா சொல்லிட்டு இருந்துருக்கா எப்படி திருதிருன்னு முழிக்கிறான்னு பாருங்க நல்லா முதுகுல சூடு போடுங்க அப்போதான் இவ வாய் மூடும்….

 

நானும் பாத்தேன் அனந்து இவ அந்த பையன் மேல எப்படி சாஞ்சி சாஞ்சி பேசுறான்னு பாத்தியா?

நா வந்த அன்னைக்கே நினைச்சேன் இவ அவன இவளோட காதல் வலையில விழ வச்சிருவான்னு…..

 

அம்மா அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை….

 

பின்ன எப்படி?

ஃபர்ஸ்ட் என்னோட புருஷன ஏமாத்தி அவரோட பாதி சொத்த ஆட்டய போட்டுட்ட , இப்போ இந்த பையன் நல்லா வசதின்னு தெரிஞ்ச உடனே அவன லவ் பண்ணுற மாதிரி லவ் பண்ணிட்டு அவனோட சொத்த ஆட்டய போட பாக்குறியா?

 

அம்மா எனக்கு அப்பா சொத்தெல்லாம் ஒன்னும் வேணாம் நா திரும்ப அவருக்கே எழுதி குடுத்துடுறேன் , அப்பாக்கிட்ட நா நெறய தடவை சொல்லிட்டேன் அப்பாதான் கேக்க மாட்டேங்குறாங்க என்று அவள் அழுதாள் …….

 

ஓஹோ இப்போ தேவாவோட சொத்து உனக்கு தேவையில்லாம போச்சு என்ன?

 

ஆமா அம்மா நீங்க சொல்லுறது ரொம்ப சரி ,  அப்பா சொத்து இப்போ இவளுக்கு கம்மியா தெரியுது போல ?

 

அதான் கொஞ்ச நாளா சூடு வைக்கலல்ல அதான் குளிர் விட்டு அலயுறா என்று சுலோச்சனா அந்த சூடான தோசை கரண்டியை அவள் மேல் வைக்க போகும் சமயம் அங்கு விஹான்னா மற்றும் விஹான் வந்து விட்டார்கள் , அவர்களை பார்த்ததும் சுலோச்சனா தோசை கரண்டியை கீழே வைத்து விட்டார்…..

 

ஹாய் ஆன்ட்டி ….

 

ஹாய் விஹான்னா  விஹான்….

 

ஆன்ட்டி என்ன உங்க ரெண்டு பொண்ணுங்கள மட்டும் தனியா கூட்டிட்டு வந்து  ஸ்பெஷலா எதும் செஞ்சு குடுக்குறீங்களா?

 

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல விஹான்னா, சும்மாதான் பேசிட்டு இருந்தோம்…..

 

விஹான்னா , சுலோச்சனா அஸ்வதிக்கு சூடு வைக்க போனதை அவளும் அவள் அண்ணனும் தூரத்தில் இருந்தே பார்த்து விட்டார்கள் அதனால்தான் அவர்கள் அங்கு வந்ததே , சுலோச்சனா அவளிடம் சமாளிப்பதை காட்டிக்கொள்ளமல் பேசி கொண்டு இருந்தாள்……

 

ஆன்ட்டி நீங்க மசாலா தோசை சூப்பரா செய்வீங்கன்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க எங்களுக்காக செஞ்சு தருவீங்களா?

 

அதுக்கு என்ன செஞ்சு குடுத்துட்டா போச்சு என்று சுலோச்சனா மசாலா தோசை செய்ய ஆரம்பித்தார்….

 

விஹான்னா எந்தெந்த பொருள் எங்க இருக்குன்னு கொஞ்சம் எடுத்து தருவியா?

 

ஓகே ஆன்ட்டி என்று விஹான்னா கூறி விட்டு சுலோச்சனா கேட்ட பொருட்களை எடுத்து கொண்டு இருக்கும்போது அங்கு பீவி வந்து விட்டார்….

 

என்ன நடக்குது இங்க?

 

அம்மா நீங்க அடிக்கடி சொல்லுவீங்கல்ல சுலோச்சனா ஆன்ட்டி சூப்பரா மசாலா தோசை செய்வாங்கன்னு அதான் செஞ்சு தர கேட்டேன் ஆன்ட்டியும் செஞ்சு தாரேன்னு சொல்லிட்டாங்க ….

 

ஹே விஹான்னா என்ன இது? சுலோச்சனா நம்ம  வீட்டுக்கு கெஸ்ட்டி , அவள போய் சமையல் எல்லாம் செய்ய சொல்ற?

சுலோ நீ தள்ளு நான் செய்றேன் ….

 

இதுல என்ன இருக்கு பீவி, விஹான்னா ஆசையா என்கிட்ட கேட்டா நான் செஞ்சு கொடுக்குறேன் ஒரு பிரச்சனையும் இல்லை, நீ எனக்கு இந்த தோசை செய்ய தேவையான  பொருளெல்லாம் எங்கெங்க இருக்குன்னு மட்டும் எடுத்துக் கொடு போதும்…..

 

சரி என்று பீவியும் , சுலோச்சனா கேட்ட அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொடுத்தார் சுலோச்சனா மசாலா தோசை செய்ய ஆரம்பித்தார் மற்ற அனைவரும் அவருக்கு உதவி செய்தனர்……

 

விஹானா உருளைக்கிழங்கை வேக வைத்தாள் ….

அஸ்வதி வெங்காயம் ,மிளகாய் , இஞ்சி முதலியவற்றை தோல் நீக்கி விட்டு சிறிதுசிறிதாக  வெட்டிக் கொண்டிருந்தாள்…..

 

முதல்ல வெங்காய சட்னி நம்ம வச்சிருவோம் அப்புறம் தோசை சுட்டா நல்லா சூடா சாப்பிடலாம் ….

 

ஓகே சுலோச்சனா அப்படியே பண்ணலாம் என்றார் பீவி……

 

முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கினார் , அதில் உளுத்தம் பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து சிவக்க வதக்கினார், பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க்கி கொண்டு இருக்கும்போதே வாசனை தூள் பறந்தது…..

 

ஆன்ட்டி வாசனை தூள் பறக்குது என்று விஹான்னா வாசனை பிடித்து கொண்டு இருந்தாள்….

 

அவள் கூறியதை கேட்டு சிரித்து கொண்டே வெங்காயம் வதக்கி விட்டு சிறிது  புளி மற்றும் தேவையான உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து கொண்டார்….

அந்த கலவை ஆறியதும், அதை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து மென்மையாக அரைத்துக் கொண்டார்

கடைசியாக, ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் கொட்டினார்…..

 

வெங்காய சட்னி ரெடி நெக்ஸ்ட் தோசை சுடலாம் என்று  சுலோச்சனா ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கொண்டார் பிறகு

வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கினார்….

பிறகு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்த பிறகு, மசித்து வைத்த உருளைக்கிழங்கைப்போட்டு கிளறி இறக்கி தனியே வைத்தார்……

 

பிறகு அடுப்பில் தோசைக்கல்லை சூடாக்கி, ஒரு கரண்டி மாவை எடுத்து மெல்லியதாகத் தேய்துக்கொண்டார் பின்னர் தோசையைச் சுற்றிலும் நெய் ஊற்றினார்  தோசை பொன்னிறமாக சிவந்து வந்ததது, அப்பொழுது முன்னர் தயார் செய்த உருளைக்கிழங்கு மசாலாவை அதன் நடுவில் வைத்தார் பிறகு தோசையை மடித்து எடுத்து சூடாகப்  ஒரு தட்டில் வைத்து விஹான்னாவுக்கு கொடுத்தார்…..

 

விஹான்னா தோசையை பிய்த்து ஒரு விள்ளல் வாயில் எடுத்து வைத்தாள் ….

 

ஆன்ட்டி சான்சே இல்ல செம டேஸ்டா இருக்கு அதுவும் அந்த உள்ளே உள்ள உருளைக்கிழங்கு குருமா அண்ட் வெங்காய சட்னி செம்ம காம்பினேஷன் இந்தா அஸ்வா ஒரு வாய்  சாப்பிட்டு பாரு என்று அவள் அஸ்வாவுக்கு தோசை ஒரு வாய் ஊட்டி கொடுத்தாள் அதை  அஸ்வாவும் சாப்பிட்டாள்….

 

சூப்பரா இருக்குல்ல அஸ்வா?

 

அவளும் ஆம் என்பது போல் தலையைசைத்தாள்….

 

பிறகு அனைவரும் ஒன்றாக சேர்ந்து மசாலா தோசை சாப்பிட்டனர்….

 

பீவி, சுலோச்சனா,  அனந்தி மூவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்….

 

அஸ்வதி , விஹானா மற்றும் விஹான் மூவரும் விஹானா விஹான் ரூமில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்….

 

விஹானா  எப்படி கரெக்டா அம்மா எனக்கு சூடு வைக்க வரும் போது  அங்க  ரெண்டு பேரும் வந்தீங்க?

 

உங்க அம்மா உன்ன கூப்பிட்டப்போ உன் பின்னாடியே நாங்களும் வந்தோம் உனக்கு உங்க அம்மா சூடு வைக்கிறத நாங்க  முன்னாடியே பாத்துட்டோம் அதனால உனக்கு சூடு வைக்க விடாம தடுக்க நாங்க வந்துட்டோம்…..

 

உங்க ரெண்டு பேருக்குருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் , முதல் தடவயா எங்க அம்மா சூடு கரண்டிய சூடு பண்ணிட்டு எனக்கு  சூடு வைக்காம விட்டடுருக்காங்க என்று அவள் சிரித்தாள்…..

 

நீ இப்படியே சிரிச்சிட்டே இருக்கணும்  அஸ்வதி , நீ சிரிச்சா ரொம்ப அழகா இருக்குற என்று விஹான் கூறினான்….

 

விஹான் இவ்வாறு கூறியதும் அஸ்வதி அவனை பார்த்து மென்மையாக  சிரித்தாள்…..

 

அவர்கள் இருவரின் இந்த சம்பாஷனங்களை விஹானா பார்த்துக் கொண்டே இருந்தாள் அவளுக்கு ஏதோ புரிவது போல இருந்தது……

 

சரி நாளைக்கு நீ எங்க கூட குல்மார்க் வாரல்ல?

 

என்ன எங்கேயும் கூட்டிட்டு போக மாட்டாங்க விஹானா என்று அவள் சோகமாக கூறினாள்…..

 

எதுக்கு உன்ன கூட்டிட்டு போக மாட்டாங்க?

 

நாளைக்கு நான் வரக்கூடாது அப்படின்னு இன்னைக்கே எனக்கு பிளான் போட்டு வச்சுட்டாங்க…..

 

பிளான்னா?

 

ஆமா விஹான் , நாளைக்கு  இங்க இருந்து கார்ல தான போறீங்க?

 

ஆமா….

 

எங்க அம்மா என்கிட்ட என்ன சொன்னாங்கன்னா, நாளைக்கு கார்ல நீங்க எல்லாரும் ஒன்னா போவீங்களாம் அப்போ எனக்கு உள்ள இடம் இல்ல அப்படின்னு சொல்லிட்டு என்ன வீட்ல விட்டுட்டுப் போய்ருவாங்களாம் , அப்படியே என்ன எல்லாரும் வற்புறுத்தி நீங்க கூப்பிட்டீங்கன்னா எனக்கு கால் வலி அப்படின்னு சொல்லிருவாங்களாம்……

 

அஸ்வதி உனக்கு குல்மார்க் வரனும்ன்னு ஆசை இருக்கா இல்லையா?

 

எனக்கு குல்மார்க் போகனும்ன்னு ரொம்ப ஆசை , அந்த பணி , கேபிள் கார், ஸ்கையிங்,  ஸ்னோஃபால் எல்லா பாக்கணும்னு ஆசையா இருக்கு…..

 

நாளைக்கு நம்ம போறோம், செமையா என்ஜாய் பண்றோம்…..

 

ஆனா எப்படி நா வர்றது?

அம்மாதான் என்ன வர விட மாட்டாங்களே…..

 

அதைப்பத்தி நீ ஏன் கவலைப்படுற? நாங்க உன்ன கூட்டிட்டு போறோம்….

 

அதான் எப்படி என்னோட  அம்மாவ மீறி கூட்டிட்டு போவ  ?

 

அத நீ நாளைக்கு பாப்ப….

 

ஹே விஹானா சஸ்பென்ஸ் வைக்காதப்பா சொல்லிடுப்பா….

 

சஸ்பென்ஸ் எல்லாம் உடனே சொல்ல முடியாது நாளைக்கு பாத்து தெரிஞ்சுக்கோ குட் நைட் என்று அவள்  பெட்டில் படுத்து விட்டாள்…..

 

விஹான் நீங்களாவது அந்த சஸ்பென்ஸ் என்னன்னு சொல்லுங்கப்பா…..

 

இவ  மண்டையில என்ன யோசிச்சு வச்சுருக்கான்னு எனக்கு ஒன்னும் தெரியல அஸ்வதி….

 

விஹான் விஹானா உங்கள நம்பிதான் நா இன்னைக்கு  நிம்மதியா தூங்க போறேன் சோ என்ன ஏமாத்திடாதீங்கப்பா ப்ளீஸ் என்று அஸ்வதி தூங்க சென்றாள்……

 

அஸ்வதி சென்றதும் விஹான் விஹானாவிடம் நாளைக்கு என்ன பிளான் என்று கேட்டான்…..

 

விஹானா நாளைக்கு அவள் போட்ட  பிளானை பற்றி விஹானிடம்  கூறினாள்…..

 

சூப்பர் விஹானா நாளைக்கு பாத்துக்கலாம் என்று விஹான் விஹான்னா பெட்டிற்கு அருகில் உள்ள தன் பெட்டில் படுத்து தூங்கினான்…..

 

இரவில் விஹானுக்கு தண்ணீர் தாகம் எடுக்கவே அவன் கிச்சன் சென்று தண்ணீர் குடிக்க வந்தான் அப்பொழுது அவன் சோபாவில் படுத்துக் கொண்டிருந்த  அஸ்வதியை பார்த்தான் …..

 

அவள் குளிரில் நடுங்கியப்படி தூங்கி கொண்டு இருந்தாள்……

 

அதைப் பார்த்த விஹான் அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டான்….

 

பிறகு அவள் படுத்துக் கொண்டிருந்த சோபாவை எக்ஸ்டெண்ட் செய்து பெட்டாக மாற்றினான் பின்பு  சோபாவின் அளவிற்கு ஏற்ப குறுகி படுத்திருந்த ஆஸ்வதியின் கால்களை நேராக படுக்க வைத்து விட்டு அவளின் அருகில் அவன் அமர்ந்து கொண்டு அவள் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான்…..

 

திடீரென்று அஸ்வதி தூக்கத்தில் அழுக ஆரம்பித்தாள்…..

 

அம்மா …

அம்மா…

ரொம்ப சுடுது, நா ஒன்னுமே பண்ணல என்ன விட்டுருங்க என்று அவள் அழுதாள்…..

 

அவள் அழுவதை பார்த்து பொறுக்க முடியாத விஹான் அவளை அணைத்து கொண்டான்….

 

ஒன்னுமில்ல அஸ்வதி , நா இங்கதான் இருக்கேன் உனக்கு ஒன்னும்மில்ல என்று அவன் அவளின் தலையை மெதுவாக வருடி விட்டான் அதில் அவளின் அழுகை நின்றது , அவள் தூக்கத்தில் விஹானின் கைகளை கெட்டியமாக பிடித்து கொண்டாள்…..

 

அவள் தலையை மெதுவாக வருடி விட்டு கொண்டே அவன் அங்கேயே அமர்ந்தபடி உறங்கி போனான்…..

 

இந்த காட்சியை ஒரு ஜோடி கண்கள் பார்த்து கொண்டு இருந்தது…..

 

நாளை அவளுக்கு நடக்க போகும் கொடுமைகளில் இருந்து அவன் அவளை காப்பாற்றுவானா?

 

பொறுத்திருந்து பார்ப்போம்….

 

தொடரும் …..

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….

 

💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. யார் பார்க்கிறாங்க தெரியலையே … விஹானுக்கு ஏற்கனவே அஸ்வதியை தெரியுமோ 🤔

    1. Author

      Haha ….
      Thank you for your valuable comments 😇

  2. இந்த முறை அஸ்வதியை அவள் அன்னையிடம் இருந்து காப்பாற்றி விட்டார்கள். இனியும் அவளை காப்பாற்ற உறவும் உரிமையும் வளப்பட வேண்டும்.

    விஹானின் மனம் அஷ்வாவிற்காக வருத்தப்படும் அதே நேரம் அவளை சந்தோஷமாக பார்த்துக்கொள்ளவும் எண்ணுகிறது.

    மசாலா தோசை, வெங்காய சட்னி செய்வதை குறிப்பிட்டதை பார்க்கும் போது அதை சுவைத்து பார்த்த உணர்வு. 😍

    பார்ப்போம் விஹான், விஹானா என்ன செய்ய போகிறார்கள் என.

    1. Author

      Thank you for your valuable comments 😇