
காதல் -76
அஸ்வதி மற்றும் அவளின் நண்பர்களுக்கு ஒரே மேடையில் நிச்சயதார்த்தம் நடந்து அவர்கள் அனைவரும் பாதி கணவன் மனைவியாக மாறிவிட்டனர்……
அந்த நிச்சயதார்த்த வைபோகத்திற்கு சுலோச்சனாவும் அனந்தியும் வந்தனர்…..
ஒரு நாள் காலை குடும்பமாக அவர்கள் அனைவரும் மாமல்லபுரத்திற்கு சென்று வரும்போது அஸ்வதி மற்றும் விஹானாவை கொல்ல அனந்தி ஏற்பாடு செய்திருந்த லாரி அஸ்வதியை இடித்து தள்ளி விட்டு சென்றது……….
விஹான் அஸ்வதியை தலையில் வழியும் ரத்தத்தோடு மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு சென்றான்……
தேவராஜ் சுலோச்சனாவின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார்…..
ஏய் இன்னுமாடி நீ திருந்தல நீ பெத்த பொண்ணையே இப்படி கொல்ல பார்த்துருக்கியே நீ எல்லாம் ஒரு தாயா என்று அவர் மீண்டும் மீண்டும் சுலோச்சனாவை அடித்துக் கொண்டே இருந்தார்……
என்னங்க நா சொல்றத கேளுங்க சத்தியமா நா அஸ்வதிய கொல்ல பிளான் பண்ணலங்க , என்ன நம்புங்க…..
உன்னை எப்படி நம்புறது இதோட நீ அவள எத்தனை தடவை கொல்ல ட்ரை பண்ணி இருக்க?எதுக்கு இப்படி பண்ண?
என்னங்க உண்மையா சத்தியமா நா அஸ்வதிய கொல்ல ட்ரை பண்ணலங்க அது நா கிடையாதுங்க என்று சுலோச்சனா அழுது மன்றாடினார் ஆனால் தேவராஜ் அவர் கூறியதை எதையும் நம்பவில்லை அவர் சுலோச்சனா மற்றும் அனந்தியை மருத்துவமனை விட்டு வெளியே தள்ளி விட்டார்…..
சுலோச்சனா அழுது கொண்டே என்னங்க ப்ளீஸ்ங்க என்ன நம்புங்க நான் நம்ம பொண்ண கொல்ல ட்ரை பண்ணலங்க…….
அம்மா இத்தனை நாளா எனக்கு நீ மட்டும் தான் இருந்த உனக்கு நா மட்டும் தான் இருந்தேன் இனிமேலும் நம்ம அப்படியே இருப்போம் நமக்கு யாருமே வேணாம், நம்மள இவங்க வேணாம்னு சொல்றாங்கல்ல நமக்கும் இவங்க வேண்டாம் அந்த அஸ்வதியயும் , விஹான்னாவையும் கொல்ல ட்ரை பண்ணதுக்கு குடும்பத்தையே கொல்ல ட்ரை பண்ணிருக்கலாம் என்று அனந்தி கூற சுலோச்சனா ஆடிப் போய்விட்டார்….
ஏய் அனந்தி இப்ப என்னடி சொன்ன நீயா என்னோட பொண்ணு அஸ்வதியை கொல்ல பாத்த?
அம்மா இனிமே ஒரு தடவை உன்னோட வாயால அந்த அனாத நாயே உன்னோட பொண்ணுன்னு சொன்னன்னு வை நா மனுஷியா இருக்க மாட்டேன்….
ஏன்டி இப்படி பண்ண?
பின்ன உனக்கு உன்னோட பொண்ணு கிடைச்சுட்டா அப்படின்னு என்ன அப்படியே மறந்துட்ட, அப்புறம் நா சின்ன வயசுல இருந்து காதலிச்ச என்னோட விக்ரம் மாமாவ அந்த விஹானா தட்டி பறிக்க பார்த்தா அதான் அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா போட பார்த்தேன் மிஸ் ஆயிட்டாங்க என்று அனந்தி கூறி முடிக்கவும் துவாரகா அவளின் கன்னத்தில் மாறி மாறி அடித்தாள்……
ஏண்டி நாயே உனக்கு ஒரு மனுஷன கொல்றது அவ்ளோ ஈஸியா போச்சு என்ன? தேவா அப்பா இந்த மிருகத்த எல்லாம் எதுக்குப்பா வெளியே கூட்டிட்டு வந்தீங்க? இப்ப பாருங்க நம்ம அஸ்வதிய இவ என்ன பண்ணிட்டான்னு பாருங்க என்று அவள் அனந்தியை அவள் கை வலிக்கும் வரை அடித்துக் கொண்டே இருந்தாள் பிறகு துருவ் அவளை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்…….
விஹான் வேகமாக அனந்தியிடம் வந்து அவள் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டான் அதில் அவள் இரண்டடி தள்ளிப் போய் விழுந்தாள்…….
மதன் இனிமே இந்த நாய் ஜெயில விட்டு வெளியேவே வரக்கூடாது அதுக்கு என்ன பண்ணனுமோ அதை பண்ணு…….
மதன் நீங்க இருங்க நா இவள ஜெயில கொண்டு போய் போடுறேன் என்று விக்ரம் அங்கு வந்தான்…..
அவனை அங்கு பார்த்ததும் அனந்தி சந்தோஷத்தில் அவனிடம் ஓடி வந்தாள்……
விக்ரம் மாமா எப்படி இருக்கீங்க?நல்லா இருக்கீங்களா? உங்களுக்கு அந்த விஹானா வேண்டாம் என்ன கல்யாணம் பண்ணிக்கோங்க நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா வாழலாம்……..
விக்ரம் அனந்தியின் கைகளை அருவருப்பாக தட்டி விட்டான், ஏய் உன்ன மாதிரி ஒரு கேவலமான மனுஷ ஜென்மத்தை நான் பார்த்ததே இல்லை நீ எல்லாம் உயிரோட இருந்து என்ன பண்ண போற ?உன்னோட மூஞ்சில முழிச்சாலே பாவம்டி, அஸ்வதி இந்த நாள் வர உனக்கு ஏதாவது ஒரு கெடுதல் நினச்சிருக்காளா?அவ அப்படி நினைக்க மாட்டா, ஆனா அவளுக்கு என்னல்லாம் பண்ணக்கூடாதோ அதை எல்லாம் நீங்க ரெண்டு பேரும் அவளுக்கு பண்ணி இருக்கீங்க அதனால இனிமே நீங்க ரெண்டு பேரும் வெயில்ல கூட வெளியே வர முடியாது என்று விக்ரம் அவர்கள் இருவரின் கைகளிலும் விலங்கு மாட்டி ஜெயிலுக்கு அழைத்து சென்றான்…….
தான் உயிருக்கு உயிராக காதலித்த விக்ரமின் வாயில் இருந்து அப்படி ஒரு வார்த்தைகளை கேட்ட பிறகு அனந்திக்கு உயிர் வாழ பிடிக்கவில்லை அவள் பித்து பிடித்தது போல சிறைக்குள் சுற்றி திரிந்து கொண்டிருந்தாள்…….
சுலோச்சனா தன்னுடைய மகளை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று அவர் வேதனையில் இருந்தார்……
அஸ்வதிக்கு அந்த ஆக்சிடென்ட் நடந்து இன்றோடு ஒரு வாரமாக போகிறது ஆனால் அஸ்வதி கண் திறக்கவில்லை டாக்டர்களிடம் கேட்டால் அஸ்வதி கோமா நிலைக்கு சென்று விட்டாள் என்று கூறினார்கள்……..
விஹான் அஸ்வதி அருகில் அமர்ந்து கொண்டு அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்……
“இன்று நேற்று
நாளை யாவும் கொண்டு
போகும் காதலே உன்னை
சேர வேண்டித்தானே மண்ணில்
எங்கும் வாழ்கிறேன்
வானவில் என்
வாழ்க்கையில் தோன்றும்
முன்பு மறைந்து போன
தேன் துளி பூக்களில்
தேடும் தேனீ நான் என
காதலே என்
காதலே எங்கு போகிறாய்
என் வாழ்வை வாழும் முன்
வீழ்கிறேன் தேவதை உன்னை
தேடியே”
விஹான் கண்களில் வழியும் கண்ணீரோடு தன் காதலியின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தான்…….
அப்பொழுது மருத்துவர்கள் அஸ்வதி இருக்கும் அறைக்குள் வந்தனர்……
மிஸ்டர் விஹான் உங்களோட மனைவி கோமா ஸ்டேஜ்க்கு போய் ரொம்ப நாளாச்சு இனிமே அவங்க கண்ணு முழிக்கிறது ரொம்ப கஷ்டம் அதனால நீங்க விருப்பப்பட்டா உங்களுடைய மனைவியை நாங்க கருணை கொலை பண்ணிட்டு அவங்களோட உடல் உறுப்புகளை தானம் பண்ணலாம் என்று கூறிய மருத்துவரின் சட்டையை பிடித்து அவரை அடிக்க சென்றான் விஹானை நண்பர்கள் அனைவரும் பிடித்துக் கொண்டனர்…….
சாரி டாக்டர் நீங்க கொஞ்சம் வெளியே இருங்க, நாங்க இவன் கிட்ட பேசுறோம்…..
டேய் என்னடா நெனச்சிட்டு இருக்க டாக்டர் பிரக்டிகலா நடக்குறத தானே சொல்லிட்டு இருக்காரு , நம்ம அஸ்வதி கோமாவுக்கு போய் இன்னையோட எட்டு நாள் ஆக போகுது , இன்னும் எந்த நம்பிக்கையில அவ கண்ணு முழிப்பான்னு காத்துட்டு இருக்க?
எனக்கு என்னோட காதல் மேலயும் என்னோட காதலி அஸ்வதி மேலயும் ரொம்ப நம்பிக்கை இருக்குது அஸ்வதி என்ன விட்டுட்டு எங்கேயும் போக மாட்டா நீங்க எல்லாரும் வெளியே போங்க என்று அவன் அவனின் நண்பர்களை வெளியே தள்ளிவிட்டு கோமாவில் இருக்கும் அஸ்வதியிடம் பேச ஆரம்பித்தான்……
அஸ்வி செல்லம் இவங்க எல்லாரும் என்னென்னமோ சொல்றாங்க எனக்கு அதெல்லாம் கேட்டா பயமா இருக்குது நிஜமாவே நீ என்ன விட்டுட்டு தூரமா போயிட்டியா ?எப்படி உன்னால என்ன விட்டுட்டு தனியா போக முடிஞ்சது? நீ என்ன விட்டுட்டு தனியா போயிட்டேனா உன்ன அப்படியே விட்டுருவேனா ? உன் கூட நானும் வந்துருவேன் என்று விஹான் பக்கத்தில் இருந்த பழம் வெட்டும் கத்தியை எடுத்து அவனின் மன்னிக்கட்டிற்கு அருகில் கொண்டு சென்று அஸ்வதி நா பத்து வரை எண்ணுவேன் அதுக்குள்ள நீ கண்ணு முழிக்கணும் இல்லன்னா நானும் உன் கூடவே வந்துடுவேன் என்று விஹான் என்ன ஆரம்பித்தான்…….
ஒன்று .
இரண்டு..
மூன்று…
நான்கு….
ஐந்து…..
ஆறு……
ஏழு…….
எட்டு……..
ஒன்பது………
விஹான் ஒன்பது கூறவும் அஸ்வதியின் உடம்பில் இணைக்கப்பட்டிருந்த வயர்களில் கனெக்ட் செய்து இருந்த கம்ப்யூட்டர் வேகமாக சத்தம் கொடுக்க ஆரம்பித்தது……
சத்தம் கேட்டு மருத்துவர்கள் மற்றும் அனைவரும் உள்ளே ஓடி வந்தனர் மருத்துவர்கள் நர்சிடம் ஏதோ எடுத்து வரச் சொன்னார் நர்சும் மருத்துவர் கூறியதை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடி வந்தார் அந்த நர்ஸ் கொண்டு வந்திருந்த அயன் பாக்ஸ் போன்ற ஒன்றை வைத்து அஸ்வதி நெஞ்சினில் டாக்டர்கள் வைத்தனர் இரண்டு மூன்று முறை வைத்த பிறகு நான்காம் முறை வைத்தவுடன் அஸ்வதி அரையடிக்கு மேலே எழும்பி சென்று பெட்டில் விழுந்தாள்……
மிஸ்டர் விஹான் இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள் உங்களோட மனைவி இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சுடுவாங்க கங்கிராஜுலேசன்ஸ் மிஸ்டர் விஹான் என்று அந்த மருத்துவர்கள் சிரித்து விட்டு சென்றனர்……..
அங்கிருந்த அனைவருக்கும் அஸ்வதியை பார்த்து சந்தோஷம் தாளவில்லை அவர்கள் அனைவரும் அஸ்வதி எப்பொழுது கண்விழிப்பாள் என்று பார்த்துக் கொண்டிருந்தனர்…….
அவர்கள் அனைவரயும் நீண்ட நேரம் காக்க வைக்காமல் அஸ்வதி சீக்கிரமாக கண்விழித்து விட்டாள்……
அஸ்வதி கண்விழித்தவுடன் அவள் முதலில் பார்த்த முகம் தன்னுடைய காதலனின் முகம் தான்……
அஸ்வதி விஹானை பக்கத்தில் அழைத்தாள்…..
அவனும் அவள் முகமருகே சென்றான்…..
ஏன் இப்படி ஷேவ் பண்ணாம தாடியோட இருக்கீங்க?என்று அவள் கேட்கவும் நீண்ட நாட்களுக்கு பிறகு விஹான் சத்தமாக சிரித்தான்……
பிறகு அவளின் நண்பர்கள் அனைவரும் அவளிடம் சந்தோஷமாக பேசிக் கொண்டே இருந்தனர்…….
திருமணத்திற்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் அஸ்வதியை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்க்கு அழைத்து வந்தனர்…….
அஸ்வதியை அவர்கள் அனைவரும் மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டனர், அவர்களின் கவனமான கவனிப்பில் அஸ்வதி சீக்கிரமாக எழுந்து நடக்க ஆரம்பித்தாள்…….
அஸ்வதிக்கு இப்பொழுது முற்றிலுமாக குணமடைந்து விட்டது…….
நாளை அவர்கள் அனைவருக்கும் திருமணம் அதனால் மணப்பெண்கள் அனைவரும் கைகளில் மருதாணி வைத்துக் கொண்டிருந்தனர் மணமகன்களோ தங்களின் மனைவிமார்களுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தனர்…….
துவாரகா உனக்கு ஒரு ரவுடி தெரியுமா?
என்ன விட இங்க யாரு பெரிய ரவுடி இருக்கிறா?
பக்கத்துல உக்காந்துட்டு இருக்காரே ஒருத்தர் அவர்தான் இங்க இருக்குறதுலயே பெரிய ரவுடி தெரியுமா?அன்னைக்கு என்கிட்ட எப்படி மிரட்டி பேசினாரு தெரியுமா என்று அஸ்வதி துருவை பற்றி கூறவும் துவாரகா அவனை முறைத்து பார்த்தாள்…..
பத்த வச்சுட்டியே பரட்டை என்று துருவ் அங்கிருந்து ஓடினான் அவனைப் பார்த்து நண்பர்கள் அனைவரும் சிரித்தனர்…….
நாளை நம் அனைத்து கதாநாயகன் கதாநாயகிக்கும் திருமணம்…..
வாருங்கள் அழகிய இருமனம் இணையும் திருமணத்திற்கு செல்வோம்……
தொடரும்……
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்………
💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

