
காதல் – 7
அஸ்வதி அவ்வாறு கூறவும் சுலோச்சனா தன் தாயாரை பார்த்து முறைத்தார்…….
ஏய் சுலோச்சனா உனக்கு என்ன புத்தி கித்தி கெட்டு போச்சா?
இவ பேசுறத கேட்டுட்டு என்னயவே முறைக்கிறியா?
நா எதுக்கு இவள அடிக்க போறேன்?
அம்மா உனக்கு இவள ஃபர்ஸ்டல இருந்தே பிடிக்காது பார்க்கும்போதெல்லாம் முறைச்சுட்டே இருப்ப , நானே நிறைய தடவை பார்த்து இருக்கேன் ஏம்மா குழந்தை இப்படி போட்டு அடிச்சி இருக்க?உனக்கு மனசாட்சி இருக்கா?
போதும் நிறுத்துடி நா ஒன்னும் இவள அடிக்கல…..
அப்போ இது யார் அத்தை என்று தேவராஜ் அந்த அறைக்குள் வந்தார்….
சுலோச்சனா இத பாரு என்று அவர் தன் போனில் ஒரு வீடியோவை காட்டினார் அதை பார்த்த சுலோச்சனாவிற்கு ஒன்றும் புரியவில்லை…..
அந்த வீடியோவில் லீலா அஸ்வதியை மிதித்து தள்ளுவது போலவும்…
அஸ்வதி அவர் மிதித்ததில் தள்ளிபோய் டேபிளில் மோதி விழுவதும் பதிவாகி இருந்தது….
இது நீங்க தானே???
என்ன மாப்ள நல்லா கிராபிக்ஸ் பண்ணி இருக்கீங்க என்ன மாதிரியே இன்று லீலா சிரித்தார்…..
எப்படி அத்தை கூச்சமே இல்லாம இப்படி பொய் சொல்றீங்க?
நான் ஏன் பொய் சொல்லணும் மாப்பிள்ளை ?
நா இவள அடிக்கவே இல்லை என்று வீடியோ ஆதாரத்தை தேவராஜ் காட்டிய பிறகும் லீலா இல்லை என்று சாதித்தார்…….
அஸ்வதிக்கண்ணா உன்ன இந்த பாட்டிதான அடிச்சாங்க?
ஆமாப்பா என்ன எட்டி மிதிச்சிட்டாங்க என்று அஸ்வதி அழுது கொண்டே கூறினாள்….
அச்சோ என்னோட செல்லப்பொண்ணு அழுக கூடாது கண்ண தொட பாப்பா என்று தேவராஜ் அஸ்வதியின் கண்ணீரை துடைத்து விட்டார்…..
அஸ்வா கண்ணா இப்போ நீ நல்லா படுத்து தூங்குவியாம் அப்பாவும் அம்மாவும் உனக்கு போய் ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வருவோமா என்ன?
ஓகேப்பா எனக்கு ஒரியோ பிஸ்கட் வேணும்….
சரிடா கண்ணா அப்பா உனக்கு ஓரியோ பிஸ்கட் வாங்கிட்டு வரேன் இப்ப நீ நல்ல பிள்ளையா தூங்குவியாம் என்று அவர் சுலோச்சனாவையும் லீலாவையும் பார்த்து ……
அத்தை சுலோச்சனா கொஞ்சம் வெளியே வாங்க என்று அழைத்து சென்றார்…….
என்ன மாப்ள என்ன பேசணும் எதுக்கு வெளியே கூப்பிட்டீங்க?
அத்தை நீங்கல்லாம் ஒரு பெரிய மனுஷியா?
ஒரு குழந்தைன்னு பாக்காம இப்படி போட்டு அடிச்சு இருக்கீங்க?
இதை நா போலீஸ்ல சொன்னா உங்களுக்கு என்ன ஆகும்னு தெரியும்ல்ல?
மாப்பிள்ளை என்ன பேசிட்டு இருக்கீங்க எனக்கு ஒன்னும் புரியல!
அத்தை நீங்க அஸ்வதிய அடிச்சது டைனிங் ரூம் கேமராவுல ரெக்கார்ட் ஆகிருக்கு இந்த ஒரு எவிடன்ஸ் போதும் உங்களை புடிச்சு உள்ள தள்ளுறதுக்கு ஏன் இப்படி பண்றீங்கன்னு சொல்லுங்க…..
அதற்குப் பின் உண்மையை மறைக்காமல் அவர் கூறினார்…..
மாப்ள நம்ம குடும்பத்துக்கு இந்த அனாதை பொண்ணு வேணாம் , எங்கயோ எவளோ பெத்து போட்ட பொண்ணுக்கு நீங்க ஏன் செலவு பண்ணிக்கணும்?
நம்ம ஸ்டேட்டஸ்க்கு கால் தூசிக்கு இந்த பொண்ணு பெறுவாளா?
இவளை நீங்க எங்க எடுத்துட்டு வந்தீங்களே அங்கேயே விட்டுட்டு வந்துருங்க அதான் நல்லது….
ஏன் அத்தை உங்களுக்கு அஸ்வதி மேல இவ்வளவு வெறுப்பு?
பின்ன எதோ ஒரு அனாத நாய் உங்க சொத்து பத்து எல்லாம் ஆண்டுட்டு இருக்க முடியுமா?
ஓஹோ உங்களுக்கு இதுதான் பிரச்சனையா?
சரி அப்போ நா சொல்றத நல்லா கேட்டுக்கோங்க நா அஸ்வதிய எங்கேயும் கொண்டு போய் விடமாட்டேன் இவ என்னோட பொண்ணு இவ என்கூடவேதான் இருப்பா , உங்களுக்கு வேணும்னா உங்க பொண்ண கூட்டிட்டு போங்க என்று தேவராஜ் கோபத்தில் கூறினார் அந்த வார்த்தை” உங்க பொண்ண கூட்டிட்டு போங்க”
அதுதான் சண்டை வருவதற்கான முதல் விளைவு…….
தேவா என்ன பேசிட்டு இருக்கீங்க அம்மாவ என்ன அவங்க கூட கூட்டிட்டு போக சொல்றீங்க?
உங்களுக்கு அப்போ நா முக்கியம் இல்லையா?
பின்ன என்ன சுலோச்சனா உன்னோட அம்மா இவ்ளோ இது பண்ணி இருக்காங்க நீ அவங்களை எதுவுமே சொல்ல மாட்டேங்குற நம்ம குழந்தையோட உயிர் போயிருந்தா என்ன பண்ணி இருப்ப?
தேவராஜ் இவ்வாறு கேட்கவும் சுலோச்சனா தன் தாயை முறைத்துப் பார்த்தார்……
அம்மா நீ இங்க இருந்து போயிடுமா,
நாங்க ரெண்டு பேரும் குழந்தை கூட ரொம்ப சந்தோஷமா இருக்கிறோம் அத கெடுத்துறாத…..
சுலோச்சனா நா சொல்றத கேளு உனக்கு கண்டிப்பா குழந்தை பொறக்கும் அதனால இந்த அனாதை நாய எங்க புடிச்சிட்டு வந்தயோ அங்கேயே விட்டுட்டு வந்துரு…..
ஷட் அப் என்று தேவராஜ் கத்தவும் இருவரும் அமைதியாகி விட்டனர்….
அத்தை நீங்க ஒரு நிமிஷம் இங்க இருக்க கூடாது ப்ளீஸ் வெளிய போயிருங்க……
அம்மா நீ வெளியே போம்மா…..
அவர்கள் இருவரும் அவ்வாறு கூறவும் லீலா வேகமாக வெளியே சென்று விட்டார்…..
அனாத நாயி என் மாப்பிள்ளையே எனக்கு எதிரா பேச வச்சிட்டா , அவள நான் சும்மா விட மாட்டேன் என்று அவர் தன் காரில் ஓங்கி அடித்தார்……
தேவா எனக்கு நிஜமா எங்க அம்மா பண்ணி இருப்பாங்கன்னு தெரியாது…..
அதான் அஸ்வா உன்கிட்ட அப்போவே சொன்னாளே அப்போ உங்க அம்மாவ புடிச்சு என்னன்னு கேக்க வேண்டியது தானே?
ஏன் அமைதியா இருந்த?
நம்ம குழந்தை உங்க அம்மாவ பாத்து எப்படி பயந்து நடுங்கினானு பாத்தல்ல?
உங்கம்மா நம்ம குழந்தையை அப்படி அடிச்சிருக்காங்க ,அதான் நம்ம குழந்தை அப்படி பயப்படுறா……
தேவா நம்ம அஸ்வாவுக்கு ஒன்னும் ஆகாதுல ?
அவ சீக்கிரம் குணமாகிருவால்ல?
அழும் தன் மனைவியை நெஞ்சோடு அணைந்து கொண்டார் தேவராஜ்….
நம்ம குழந்தைக்கு ஒன்னும் ஆகாது அவ சீக்கிரம் குணமாகிடுவா…..
சரி வா நம்ம குழந்தை ரொம்ப நேரம் குழந்தை தனியா இருக்குறா என்று இருவரும் அஸ்வதி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்றனர்…..
அஸ்வதி நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்……
தேவராஜ் அவளின் கால்களை மென்மையாக தடவி விட்டார்….
சுலோச்சனா அஸ்வதி காலில் தன் தாயாரின் ஹீல்ஸ் தடத்தை பார்த்தார்…
சுலோச்சனா பார்ப்பதை தேவராஜும் பார்த்தார்……
தேவா எங்க அம்மா என்ன இப்படி போட்டு அடிச்சு இருக்காங்க?
உங்கம்மாவுக்கு நம்ம அஸ்வாவ பார்த்தாலே ரொம்ப வெறுப்பு அதான்…..
அதன் பிறகு வந்த நாட்களில் அஸ்வதி நன்றாக குணமாகிவிட்டாள்…..
லீலா அந்த வீட்டை விட்டு சென்றுவிட்டார் …..
அஸ்வதி மீண்டும் சந்தோஷமாக இருந்தாள்…..
இதுவும் சில காலம் தான் என்பது போல , அஸ்வதியின் மகிழ்ச்சியான காலங்கள் சில காலம் மட்டும்தான் என்பது போல அவளின் சந்தோஷத்திற்கு பெரிய பங்கம் வந்தது….
ஆம் ஐந்து வருடத்திற்கு பிறகு சுலோச்சனா கருவுற்றிருந்தாள்…..
இந்த செய்தியை கேட்டவுடன் லீலாவதி ஓடி வந்து விட்டார் அந்த வீட்டிற்கு……
லீலாவதி சுலோச்சனாவை நன்றாக பார்த்துக் கொண்டார்…..
அஸ்வதியை சுலோசனாவிடம் லீலாவதி நெருங்க விடுவதில்லை….
அன்று ஒரு நாள் லீலாவதி சுலோசனாவிடம் பேசிக் கொண்டிருந்தார்…..
அம்மா சுலோச்சனா அதான் உனக்குன்னு ஒரு குழந்தை வரப் போகுதில்ல அப்புறமாவும் ஏன் அந்த அனாதை பிள்ளைய வச்சிட்டு இருக்க?
அம்மா அஸ்வதி என்னோட மொத பொண்ணு அவள அனாதைன்னு சொல்லாத…..
அடி முட்டாள் இப்படி மூளை கெட்ட தனமா பேசாதே உனக்கு ஒரு குழந்தை பிறந்துருச்சுன்னா அதுக்கு நீ எவ்வளவு சொத்து எழுதி வைப்பியோ அதே சொத்த நீ இவளுக்கும் எழுதி வைக்கணுமில்ல?
நீ மாசமா இருக்கறத நினச்சி உன் புருஷன் சந்தோஷமாவே இல்ல போல எப்பவுமே அந்த அஸ்வதி கூடத்தான் இருக்கிறாரு உன்ன வந்து என்ன ஏதுன்னு கூட கேக்க மாட்டேங்குறாரு அன்னைக்கே ஹாஸ்பிடல்ல வெச்சி சொன்னாரு ஞாபகம் இருக்கா ?
என்ன சொன்னாரு அவரு?
உங்களுக்கு வேணும்னா உங்க பொண்ண கூட்டிட்டு போங்கன்னு தேவராஜ் கோபத்துல சொன்னது மறந்து போச்சா?
எனக்கு தெரிஞ்சு அவரு உன் குழந்தை மேல பாசமா இருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன் அந்த அஸ்வா மேலத்தான் பாசமா இருப்பாரு போல என்று லீலா சுலோச்சனா மனதில் வஞ்சம் ஊட்டும் வார்த்தைகளை விதைத்தார்…..
முதலில் அதை கண்டுகொள்ளாத சுலோச்சனா பிறகு அதை பின்பற்ற தொடங்கினார் அஸ்வதியிடம் பேசுவதை சுலோச்சனை நிறுத்திவிட்டார் , அஸ்வதி சுலோச்சனாவை தேடி வந்தாலும் அஸ்வதியை திட்டி அனுப்பி விடுவார் இவ்வாறு நாட்கள் சென்றது…..
தேவராஜ் வீட்டில் இல்லாத சமயத்தில் அஸ்வதியிடம் யாரும் பேசுவதில்லை அவள் தனியாகவே இருந்தாள்…..
தேவராஜ் அடிக்கடி பிசினஸ் விஷயமாக வெளியூர் சென்று விடுவார் அந்த நேரத்தில் அஸ்வதியை லீலாவதி நன்றாக அடிப்பார் அதை சுலோ சொன்ன பார்த்து ஒன்றும் சொல்லாமல் இருப்பார்……
அந்த வீட்டில் நடப்பதை தேவராஜிடம் சொன்னால் உன்னை அடித்து விடுவேன் என்று லீலாவதி மிரட்டவும் பயத்தில் அஸ்வதி அங்கு நடப்பது எதுவும் அவளது அப்பாவிடம் கூற மாட்டாள் , அவளுக்குள்ளே பூட்டி வைத்தாள்…..
அங்க அஸ்வதி நடக்கும் கொடுமைகளை தேவராஜ் ஒருநாள் அறிந்து கொண்டார் அதனால் அவர் செய்த செயல் சுலோச்சனாவிற்கு கோபத்தை மூட்டியது அதனால் அவர் அஸ்வதியை முழுவதுமாக வெறுத்து விட்டார்……
தேவா என்ன பண்ணி வச்சிருக்கீங்க?
இதை உடனே போய் மாத்திட்டு வாங்க…
இதுதான் பைனல் இத என்னால இனி மாத்த முடியாது…..
தேவா நீங்க தெரிஞ்சி தான் பேசுறீங்களா?
நான் எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறேன்…
தேவா நீங்க பண்றது எதுவுமே சரி இல்ல தேவா…….
நீ பண்றதும்தான் எதுவும் சரி இல்ல சுலோச்சனா……
நான் என்ன பண்ணேன்?
எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கியோ?
என்னது உங்களுக்கு தெரியல?
ஏண்டி நீயும் உங்க அம்மா ஒரு மனுஷ ஜென்மமா?
அந்த குழந்தையை போட்டு இப்படி டார்ச்சர் பண்றீங்களே?
உங்க ரெண்டு பேருக்கும் மனசாட்சின்னு கொஞ்சமாவது இருக்கா?
இருந்தா நீங்க ஏன் இப்படி இருக்க போறீங்க?
உங்க அம்மா அவ காலுல எப்படி சூடு போட்டு வச்சிருக்காங்க தெரியுமா?
தெரியும்….
தெரியுமா?
ஆமா அன்னைக்கு அம்மா பர்ஸ்ல இருந்து காசு திருடி இருக்கிறா அத அம்மா பாத்து அவள கையும் களவுமா புடிச்சுட்டாங்க அதான் அவளுக்கு தண்டனையா சூடு போட்டாங்க …..
நீ பாத்தியா நம்ம அஸ்வதி உங்க அம்மா பர்ஸ்ல இருந்து பணம் திருடறத?
இல்ல நா பாக்கல….
அப்ப எப்படி அது அஸ்வதி தான் திருடுனான்னு சொல்ற?
எங்க அம்மா பார்த்தாங்கல்ல?
அவங்க சொன்னாங்க நான் நம்புனேன்…….
உங்க அம்மா முன்னாடியே நம்ம குழந்தையை அப்படி போட்டு அடிச்சிட்டு அடிக்கவே இல்லைன்னு சாதிச்சவங்கதானே அவங்களை போய் நம்புறியா?
ஆமா நா என்னோட அம்மாவ நம்புவேன்….
நீயும் உங்க அம்மாவும் இந்த வீட்டு விட்டு வெளியே போயிடுங்க…..
எங்க அம்மா அன்னைக்கே சொன்னாங்க உங்களுக்கு அந்த அஸ்வதி தான் முக்கியம் நா முக்கியம் இல்லன்னு , அப்போ நான் நம்பல ஆனா இப்போ நம்புறேன்,
ஏன் நீங்க அந்த அஸ்வதி பேர்ல உங்களோட எழுபது பர்சன்ட் ஷேர எழுதி வச்சிருக்கீங்கன்னு……..
நீ என்ன வேணாலும் புரிஞ்சுக்கோ சுலோச்சனா இனி என்னோட பொண்ண உங்க அம்மா எதுவுமே பண்ண கூடாது அப்படி பண்ணாங்கன்னா அதுதான் நீயும் உங்க அம்மாவும் இந்த வீட்டுல இருக்குற கடைசி நாள் புரிஞ்சுதா?
தேவா இப்ப நமக்கு ஒரு குழந்தை பிறக்க போது ஞாபகம் இருக்கா அதை நினச்சு உங்களுக்கு சந்தோஷமவே இல்லையா?
ரொம்ப சந்தோஷமா இருக்குடி,
எப்படி சந்தோஷமா இல்லாம இருக்க முடியும் ?
ஆனா அதுக்குன்னு நம்ம மொத குழந்தையை இப்படி நீ பண்ணலாமா?
தேவா நமக்கு அஸ்வதி வேணாம் அவள நம்ம அந்த ஆசிரமத்துலயே விட்டுட்டு வந்துருவோம் என்று அவர் கூறவும்…
தேவராஜின் ஐந்து விரல்களும் சுலோச்சனாவின் பதிந்து இருந்தது …..
அஸ்வதியின் வாழ்க்கை இதன் பிறகு மிக கொடூரமாக மாற போவதை அவள் அறிவாளா ?
தொடரும்…..
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….
💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


மனிதனின் மனம் விசித்திரமானது.
என்னதான் தன் பெண்ணாக நினைத்தாலும், தன் அன்னை அவளுக்கு செய்த செயலினால் அவர் மீது ஆதங்கம் மட்டுமே எழுந்துள்ளது சுலோவிற்கு.
கருவுற்றதும் மீண்டும் வந்துவிட்ட அன்னையின் மீது பழைய பாசம் ஒட்டிக்கொண்டது. எப்பொழுதுமே தன் சொந்த ரத்தம் என்பது வேறு.
அஸ்வாவின் நிலை பரிதாபத்துக்குரியது தான். யாருமற்று வாழ்ந்து, இங்கு வந்து உறவுகள் எப்படி இருக்கும் என்று அறிந்து கொண்டாடப்பட்டு இப்பொழுது தூக்கியெறியப்படுகிறாள்.
Thanks for your valuable comments 😇
அதான் சுலோ இப்படி லாம் பண்ணுது … சுயநலக்கார உலகம் தான் … தேவராஜ் கூடவே வச்சுகிட்டு அஸ்வதி ய இம்சைல மாட்டி விட்டுட்டார்
Ama paa…
Thank you for your valuable comments 😇