
காதல் – 61
அஸ்வதி, விஹான், விஹான்னா மூவரும் மாணவர்களை அழைத்துக் கொண்டு சயின்ஸ் சென்டர் மற்றும் பிளான்டேரியத்திற்கு அழைத்து சென்று அங்கு உள்ள அனைத்து பொருட்களையும் விளக்கி கூறிவிட்டு காஷ்மீரில் பிரபலமான சவுக் மார்க்கெட்டிற்கு மாணவர்களை ஷாப்பிங் அழைத்து சென்றனர்……
அங்கு அனைத்து மாணவர்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருக்க , அஸ்வதி மற்றும் விஹான் தனியாக ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர்……..
அஸ்வதிக்கு தேவையான பொருட்களை விஹான் பார்த்து பார்த்து ஒவ்வொன்றாக வாங்கி கொடுத்தான் பிறகு அனைவரும் தாங்கள் தங்கி இருந்த கெஸ்ட் ஹவுஸிற்கு சென்று பயண களைப்பில் அசந்து உறங்கி விட்டனர்……..
நேற்று அவர்கள் சென்ற இடங்களில் சுற்றி அலைந்த களைப்பில் மறு நாள் காலையில் யாருமே எழ முடியவில்லை அனைவரும் அந்த காஷ்மீரின் குளிருக்கு இதமாக போர்வையை நன்கு இழுத்து போர்த்தி கொண்டு உறங்கி கொண்டு இருந்தார்கள்…….
காலை ஆறு மணிக்கு அஸ்வதியின் அலாரம் ஒலிக்க, அஸ்வதி எழுந்து அலாரத்தை ஆஃப் செய்து விட்டு தூங்கும் தன் காதலன் முகத்தை சிறிது நேரம் ரசித்து விட்டு ஃப்ரெஷ் ஆகி விட்டு மாணவர்களை எழுப்ப சென்றாள்……
விஹான்னா நீ இங்க என்ன பண்ணுற?
நீ காலையில எழுந்துக்க மாட்டேன்னு நா பசங்களை எழுப்ப வந்தேன் ஆனா எல்லாரும் நேத்து சுத்துன சுத்துல நல்லா தூங்குறாங்க அதான் நம்ம முகல் கார்டன் போற பிளான மதியத்துக்கு மாத்திட்டேன், நா தூங்க போறேன் நீயும் போய் தூங்கு என்று விஹான்னா சென்று விட்டாள்……
அஸ்வதி திரும்ப தன் அறைக்கு வந்தாள் அங்கு விஹான்னை காணவில்லை……
விஹான் …..
எங்க போனீங்க?
விஹான்…..
நா இங்க இருக்கேன் என்று அவன் பாத்ரூமிருந்து வந்தான்……
என்ன எல்லாரும் ரெடி ஆகுறாங்களா?
இல்ல விஹான் பசங்க எல்லாரும் நேத்து சுத்துன சுத்துல நல்லா தூங்குறாங்க அதான் நம்ம முகல் கார்டன் போற பிளான நானும் விஹான்னாவும் மதியத்துக்கு மாத்திட்டோம் …….
ச்சே இது தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்ச நேரம் நல்லா ரெண்டு பேரும் தூங்கிருக்கலாமே, இப்போ நல்லா ஃப்ரெஷ் ஆகிட்டு வந்துட்டேனே……
விஹான் ……..
என்னம்மா ……
இன்னைக்கு மார்னிங் நம்ம ரெண்டு பேரும் உங்க காலேஜுக்கு போயிட்டு வரலாமா?
ஏன் ?
உங்க காலேஜ்ல நா ஸ்டூடண்ட்ஸ எஜூக்கேஷன் டூர் கூட்டிட்டு வரதுக்கு பெர்மிஷன் கேட்டதுக்கு உடனே ஓகே சொன்னாங்க அதனால அவங்கள பாத்து ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு வருவோமா??
நீ கேட்டா நோ அப்பீல், கிளம்பு போகலாம்…..
அவன் அவ்வாறு கூறவும் அஸ்வதி அவன் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளி விட்டு என்னோட செல்ல புருஷன் என்று அவன் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்ப சென்றாள்……
இருவரும் விஹான்னாவிடம் கூறிவிட்டு கல்லூரிக்கு கிளம்பி சென்றனர்…….
விஹான் அஸ்வதியை கல்லூரி முதல்வர் அறைக்கு அழைத்து சென்றான்……
மே ஐ கம் இன் மேம் …..
அடடே வாங்க அஸ்வதி மேடம் , வாங்க விஹான் சார்…..
வணக்கம் மேடம்…..
வணக்கம் மேடம் , என்ன விஷயம்?எதும் பிரச்சனையா?
பிரச்சனையெல்லாம் ஒன்னுமில்ல , எங்க காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் இங்க எஜூக்கேஷன் டூர் கூட்டிட்டு வரதுக்கு பெர்மிஷன் கேட்டதுக்கு உடனே ஓகே சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி மேடம்……
அச்சோ இத சொல்லுறதுக்கா இவ்வளோ தூரம் வந்தீங்க?ஸ்டுடென்ட்ஸ் எல்லாரும் புதுசு புதுசான விஷயங்களை கத்துக்கணும் அப்படிங்கறது என்னுடைய ஆசை அதனால என்னால என்ன உதவி செய்ய முடியுமோ அதை நான் செய்வேன் அப்படி நான் செஞ்ச உதவி தான் இது தேங்க்ஸ் எல்லாம் வேணாம் மேடம் இது என்னோட கடமை என்று அந்த கல்லூரிப் முதல்வர் ஹசீனா கூறினார்…….
பிறகு மூவரும் கல்லூரி பற்றி, மாணவர்கள், சமூகம் , அரசியல் என்று சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தார்கள் பிறகு கல்லூரியில் செமஸ்டர் எக்ஸ்சாம் நடப்பதால் அந்த கல்லூரி முதல்வர் அவர்கள் இருவரிடமும் கூறி விட்டு சென்றார்……
பிறகு அஸ்வதி, விஹான், ஹர்ஷா மற்றும் அர்ச்சனா நால்வரும் கேன்டீனில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தார்கள்…….
அஸ்வதியும் அர்ச்சனாவும் பழகிய சிறிது காலத்திலேயே நல்ல தோழிகளாகி போயினர்……
அஸ்வா உன்கூட இருக்குற சமயத்துல எல்லாம் விஹான் சார் முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரியுது என்று அவள் சிரித்தாள்…..
கரெக்டா தான் சொல்லுறீங்க அர்ச்சனா , இவனோட இந்த பல்ப் ஸ்விட்ச் அஸ்வதி கையில தான் இருக்கு என்று ஹர்ஷா சிரித்தான்…..
அஸ்வா இங்க எங்க காலேஜ்ல சூடா பாவ் பாஜி சாப்பிட்டா சூப்பரா இருக்கும் வா நம்ம வாங்கிட்டு வருவோம் என்று இருவரும் கேன்டின்ற்குள் சென்றனர்…..
அப்பொழுது விஹான் பின்னாலிருந்து யாரோ சொடக்கு போடும் சத்தம் கேட்டது அந்த சத்தத்தை கேட்டு நண்பர்கள் இருவரும் திரும்பி பார்த்தனர் அங்கு மனீஷா நின்று கொண்டு இருந்தாள்……
அவர்கள் இருவரும் அவளை அங்கு பார்த்து விட்டு முகத்தை சுளித்தனர் பிறகு அவளை கண்டுகொள்ளாமல் இருவரும் திரும்பி விட்டனர்…..
ஹே ஹலோ நா யாருன்னு மறந்து போச்சா? கழுத்த டக்குன்னு திருப்பிக்குறீங்க?
நீ யாரு , என்னன்னு எங்களுக்கு எல்லாம் தெரிய போயிதான் டக்குன்னு திரும்பிட்டோம் …….
ஹே ஹர்ஷா……
அவள் அவனை மரியாதை இல்லாமல் பெயர் சொல்லி அழைக்கவும் ஹர்ஷா ஏய்……என்று உருமி விட்டு ஒரு முறைப்புதான் முறைத்தான் …..
அவள் அவனை பார்த்து பயந்து போய் போய்……
இல்ல ஹே ஹர்ஷா சார்ன்னு கூப்பிட வந்தேன் என்று அவள் மழுப்ப…..
வாங்குன அடி இன்னும் நியாபகம் இருக்கு போல என்று ஹர்ஷா சிரித்தான்……
ஹலோ ஹர்ஷா சார் , ஹலோ விஹான் சார் எப்படி இருக்கீங்க என்று அவள் அவர்களுக்கு எதிரில் உள்ள சேரில் அமர்ந்தாள்……
நீ வர வரைக்கும் நல்லாதான் இருந்தோம்…….
ஹர்ஷா சார் , விஹான் சார் பேச மாட்டாங்களா? அந்த விஷயத்துக்கு அப்புறம் விஹான் சார் அவமானம் தாங்காம தூக்குல தொங்கிருப்பங்கன்னு நினைச்சேன் ஆனா சார் பழையபடி ஹன்ட்சமா மாறி காலேஜ் வந்துருக்காரு……
கேவலமான வேலைய செஞ்சிட்டு நீயே இப்படி தைரியமா உலகத்துல சுத்திட்டு இருக்குறப்போ ஒரு தப்பும் செய்யாத என்னோட விஹான் ஏன் சாகனும் என்று விஹான் அருகில் அவனை இடித்து கொண்டு அஸ்வதி அமர்ந்தாள்…..
அவள் அவ்வாறு பேசுவாள் என்று யாரும் அங்கு எதிர்பார்க்கவில்லை அனைவரும் அவளை அதிசயமாக பார்த்து கொண்டு இருந்தார்கள்……
ஏய் யாருடி நீ ? என்னோட விஹான் என்று மனீஷா கூறி முடிக்கவில்லை அவள் முகத்தில் அஸ்வதி பாவ் பாஜி குழம்பை ஊற்றி விட்டாள்…..
நல்லவேலை குளிரில் அந்த குழம்பு ஆறி போய் விட்டது இல்லையெனில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை…..
ஹே இடியட் அறிவு இருக்கா உனக்கு ? ஆர் யூ மேட்? லூசு என்று மனீஷா கூற அஸ்வதி அவள் முகத்தில் தண்ணீரை ஊற்றி விட்டு அவள் அருகில் சென்று அவளின் முடியை பிடித்து அவள் கன்னத்தில் பளார் பளாரென்று அரை விட்டாள்……
இங்க பாரு ஒரு தடவை தான் சொல்லுவேன் ரெண்டு காதை திறந்து நல்லா கேட்டுக்கோ மூனு தடவை எல்லாம் சொல்ல முடியாது விஹான் என்னோட காதல் கணவர் அவங்களை பத்தி நீ எதாவது தப்பா பேசுனன்னு வை உன்ன நானே கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன் என்னோட புருஷன் விஹான் என்ன பெயில் எடுத்துருவாங்க…….
என்ன…..
விஹான் சார்க்கு கல்யாணம் ஆகிடுச்சா?
இவளோ நேரம் அதான சொல்லிட்டு இருக்கேன் டால்டா டப்பி மூஞ்சி, ஓஹோ இப்போ புரியுது ஸ்பீக்கர் ரெண்டும் அவுட்டா?
நிஜமா விஹான் சாருக்கு கல்யாணம் ஆகிடுச்சா?
அச்சோ மிஸ் மனீஷா இங்க பாருங்க என்று அவள் கையிலும் விஹான் கையிலும் அணிந்திருந்த மோதிரத்தை அவளுக்கு காட்டினாள்……
அதை பார்த்து அவள் வெறி பிடித்தவள் போல கத்தினாள்………
பிறகு மனீஷா, அஸ்வதியிடம் வந்து இங்க பாரு நீ வசமா ஒரு பொய்க்காரன்கிட்ட மாட்டிக்கிட்ட , விஹான் சார் என்ன ஸ்டாப் ரூமுக்குள்ள யாருக்கும் இல்லாத நேரத்துல என்ன ரேப் பண்ணிட்டாங்க தெரியுமா என்று அவள் கூற இப்பொழுது அஸ்வதியின் உபயத்தால் அவளின் இன்னொரு கண்ணமும் பழுத்தது…….
லூக் உனக்கு உன்மை தெரியல அதான் இப்படி பண்ற……
அடியே மன்ட கோளாறு புடிச்ச மனீஷா என்ற புருஷர பத்தி எனக்கு எல்லாம் நல்லா தெரியும் நீ மூடிட்டு உன்னோட வேலைய பாரு சாமி என்று அஸ்வதி விஹான் அருகில் அமர்ந்து கொண்டு அவனுக்கு பாவ் பாஜி ஊட்டி விட்டாள்……
விஹான் பாவ் பாஜி கொஞ்சம் நமத்து போன மாதிரி இருக்குல்ல?
மனிஷா , அஸ்வதியையும் விஹானையும் பார்த்துக் கொண்டே நின்றாள் என்று சொல்வதை விட முறைத்துக் கொண்டே நின்றாள்……
அஸ்வதி மனிஷாவை பார்த்து சாப்பிட காசு இல்லையா ? இந்தா இந்த காச வச்சுக்கோ என்று ஒரு நூறு ரூபாய் தாளை அவள் கையில் திணித்துவிட்டு விஹானையும் தன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு அஸ்வதி சென்றாள்…….
மனிஷா கோபமாக அந்த இடத்தை விட்டு சென்றாள்…….
மதியத்தில் அஸ்வதி, விஹான், ஹர்ஷத்,அர்ச்சனா நால்வரும் கல்லூரி முடிந்து ஒன்றாக ஹர்ஷா காரில் தங்களது வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர்….
ஹர்ஷா நீ பேப்பர் வேல்யூ பண்ண சாயங்காலமா இங்க காலேஜுக்கு வருவல்ல, அப்போ விஹானோட பைக்க எடுத்துட்டு வீட்டுக்கு வந்துரு சரியா என்று அஸ்வதி காரில் உள்ள பிளேயரில் பாடல் போட நல்ல பாடலைத் தேடிக் கொண்டிருந்தாள்………
விஹான் , ஹர்ஷா, அர்ச்சனா மூவரும் எதுவும் பேசாமல் அஸ்வதியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்……
ஹே என்னப்பா எல்லாரும் என்னோட முகத்தையே பார்த்துட்டு இருக்கீங்க?
அஸ்வா அப்பவே அந்த மனிஷா கிட்ட அவ்ளோ தைரியமா எப்படி பேசின?
அவ கிட்ட பேசுறதுக்கு தைரியம் எதுக்கு வேணும் அர்ச்சனா?வாய் இருந்தா போதும்…..என்ன தைரியம் இருந்தா என் முன்னாலேயே என்னோட விஹான பாத்து அவளோட விஹான்னு சொல்லுவா?அதான் ரெண்டு குடுத்தேன்……
அஸ்வா நீ இவ்ளோ கோபப்படுவன்னு நா நினைக்கவே இல்ல, எவ்வளோ கோவம்…….
அர்ச்சு என்னோட விஹான யாரு தப்பா பேசினாலும் அவங்களுக்கு இந்த நிலைமைதான் என்று அஸ்வதி விஹானின் தோள்களில் சாய்ந்து கொண்டாள்………
விஹான் அஸ்வதியின் முகத்தை நிமிர்த்தி பார்த்தான் , அவள் அவனை பார்த்து அழகாக சிரித்தாள்……..
பிறகு அவன் காது அருகே சென்று அவன் காதில் மென்மையாக முத்தமிட்டாள் ………
அப்போது……..
“கண்ணுக்குள்ள நிக்கிற என் காதலியே…
உன்ன விட்டா யார் துணையே…
கண்ண மூடி திறந்தாலும் உன் முகம்தான்…
உன் நினைவுகள் போகலயே…
நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் ஹார்ட்டு…
உன் பேர் சொல்லுதடி…
என்ன விட்டு போக நீ நெனச்சா…
உசுரே போகுதடி…..
பயப்பட வேணாம்டி…
உன் புருஷன் நான் தான்டி…
பல தடைகளையும் தாண்டி…
உன்ன நான் வாழ வெப்பேன்டி…
சாவே வந்தாலும்…
நான் சாக மாட்டேன்டி…
செத்தே போனாலும்…
உன்னவிட்டு போக மாட்டேன்டி”…
என்று அவர்கள் இருவரும் காதலாக நோக்கி கொண்டு இருக்கும் சமயத்தில் அவர்களின் காதல் பார்வைக்கு ஏற்ற பாடல் பிளேயரில் ஒலித்தது……
தொடரும்……
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்………
💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

