Loading

காதல் – 60

 

அஸ்வதி தன் காதலனிடம் தன் வாழ்வில் நடந்த மற்றுமொரு கசப்பான  சம்பவத்தை அவனிடம் கூறிவிட்டு தன் மன பாரத்தை அவனிடம் இறக்கி வைத்த சந்தோஷத்தில் நிம்மதியாக உறங்கினாள்…….

 

மறுநாள் எப்பொழுது போல தன்னுடைய காதலனின் நெஞ்சினிலே சாய்ந்து கொண்டு உறங்கி அவனின் அழகிய திருமுகத்தை பார்த்தவாரே அவளின் அழகிய காலை  விடிந்தது…..

 

விஹானிடம் அவர்கள் இருவரின் காதல் கதையை பற்றி மாணவர்கள் கேட்க விஹானும் கூறினான்……

 

அப்பொழுது மாணவர்கள் கல்லூரியில் அஸ்வதிக்கு நேர்ந்த தவறான சம்பவத்தை வேறு கோணத்தில்  மாணவர்கள் கூறினார்கள் அதை விஹான் மறுத்தான் அப்பொழுது அஸ்வதி அந்த இடத்திற்கு கோபமாக வந்து மாணவர்களை திட்டினாள்……

 

மேடம் மேடம் நாங்க சும்மா பேசிட்டு இருந்தோம்……

 

எப்படி எப்படி என்ன  அந்த துருவ் ரேப் பண்ணிட்டான் அதனால நா பிரக்னண்டா ஆகி அத அபார்ஷன் பண்ணிட்டேன் என்ன என்று அவள் கோபமாக பேசினாள்……

 

அஸ்வி போதும்மா சின்ன பசங்க தெரியாம பேசுறாங்க …….

 

விஹான் இப்போ உங்களுக்கு புரியுதா நா எதுக்கு இந்த விஷயத்த உங்ககிட்ட சொல்றதுக்கு இவ்வளவு நாளாச்சுன்னு என்று அஸ்வதி விஹான் மார்பினில் சாய்ந்து கொண்டு அழுதாள்……

 

சரிடா கண்ணம்மா விடு போதும் , சின்ன பசங்க ஏதோ தெரியாம பேசிட்டாங்க விடும்மா  அழுகாத,  எனக்கு உன்ன பத்தி நல்லா தெரியும் சரியா?யார் உன்ன பத்தி சொன்னாலும் நா நம்ப மாட்டேன் உன்ன பத்தி உன்ன விட எனக்கு தான் நல்லா தெரியும் அதனால யாரு சொல்றதையும் மனசுல போட்டு  குழப்பிக்காத உனக்காக நா இருக்குறேன் சரியா என்று விஹான் அஸ்வதி நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்று பதித்தான்……..

 

அதில் அவளின் அழுகை நின்றது……

 

மேடம் சாரி மேடம் என்று அனைத்து மாணவர்களும் ஒன்று சேர அவளிடம் மன்னிப்பு கேட்டனர்……

 

அஸ்வதி அவர்களை பார்த்து ஒரு புன்னகையை வீசி விட்டு சென்றாள்……

 

சார் சார்……

 

என்னடா??

 

மேடம் எங்கள மன்னிச்சிட்டாங்களா இல்லையா?

 

அத அவங்க கிட்டயே கேளுடா , என்கிட்ட ஏன் கேக்குற?

 

சார் இப்ப தானே நீங்க சொன்னீங்க?

 

என்ன சொன்னேன்?

 

மேடம்ம அவங்கள விட உங்களுக்குதான்  நல்லா தெரியும்ன்னு சொன்னீங்க அதனால தான் உங்ககிட்ட கேக்குறோம்……

 

வாய் ரொம்ப கூடி போச்சு என்ன? என்னோட பொண்டாட்டிய கூப்பிட்டாடா?

 

இல்ல சார் , மேடம் எங்க எல்லாரையும் மன்னிச்சிட்டாங்க என்று அனைத்து மாணவர்களும் வீட்டிற்குள் ஓடினார்கள்…..

 

மம்மி இன்னைக்கு என்ன சாப்பாடு ரொம்ப டேஸ்ட்டா இருக்கு என்று அஸ்வதி பீவி அம்மா செய்து வைத்த அனைத்து உணவுகளையும் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்……

 

பிறகு விஹான் மற்றும் மாணவர்கள் சாப்பிட வந்தனர்……..

 

அவர்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு சயின்ஸ் சென்டருக்கு கிளம்பினார்கள்…….

 

அவர்கள் அனைவரும் ஸ்ரீ நகரில் உள்ள சயின்ஸ் சென்டருக்கு சென்றனர்……

 

தங்களுடைய அனுமதி கடிதத்தை சயின்ஸ் சென்டரில் உள்ள அலுவலகத்தில் கொடுத்துவிட்டு உள்ளே சென்றனர்…….

 

ஸ்ரீநகர் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் (Science Centre & Planetarium), நேரு பூங்காவிற்கு அருகில் பவுலேவர்டு சாலையில் அமைந்துள்ள ஒரு சிறந்த கல்விச் சுற்றுலாத் தலமாகும்……ஜம்மு & காஷ்மீர் சுற்றுலாத் துறையின் கீழ் இது நிர்வகிக்கப்படுகிறது…….

 

இங்கே மாணவர்கள் காணக்கூடிய முக்கிய அம்சங்கள் என்னவென்றால்…..

 

🪐 விண்வெளி மற்றும் கோளரங்கம் (Planetarium)

டிஜிட்டல் கோளரங்கம் (Digital Planetarium) அங்கு அதிநவீன டிஜிட்டல் திரையில் பிரபஞ்சத்தின் ரகசியங்கள், விண்மீன் கூட்டங்கள் மற்றும் கோள்களின் இயக்கம் பற்றிய காட்சிகள் திரையிடப்பட்டன மற்றும் சூரிய குடும்ப மாடல்கள் , கோள்களின் அளவு, அவற்றின் தூரம் மற்றும் சுழற்சி முறையை விளக்கும் தத்ரூபமான மாதிரிகள் அங்கே மாணவர்களுக்கு காண்பித்து விளக்கினார்கள் பிறகு ஆழ்ந்த விண்வெளியில் உள்ள (Deep Space), கருந்துளைகள் (Black Holes), விண்மீன் திரள்கள் (Galaxies) மற்றும் விண்மீன் வெடிப்பு (Supernova) போன்ற சிக்கலான கருத்துக்கள் எளிமையாக விளக்கப்பட்டன……

 

பிறகு ஒரு பெரிய ஆடிட்டோரியத்தில் இயற்பியல் மற்றும் அறிவியல் கருத்துக்கள் (Physics Concepts), இயற்பியல் விதிகளை செய்முறை விளக்கங்களுடன் (Hands-on exhibits) அங்கே புரிந்துகொள்ளும்படி விளக்கினார்கள்…..

 

பிறகு கோள்களின் இயக்க விதிகளான கெப்லரின் விதிகள் மற்றும் கோள்கள் ஏன் குறிப்பிட்ட பாதையில் சுற்றுகின்றன என்பதற்கான விளக்கங்கள் ஈர்ப்பு விசை (Gravitation) ,பூமியிலும் மற்ற கோள்களிலும் ஈர்ப்பு விசை எவ்வாறு மாறுபடுகிறது என்பதை விளக்கும் ஊடாடும் கருவிகள்,பிரபஞ்ச விரிவாக்கம் (Cosmology) ,பெருவெடிப்பு கொள்கை (Big Bang Theory) மற்றும் பிரபஞ்சம் எவ்வாறு விரிவடைந்து வருகிறது என்ற அடிப்படை உண்மைகள் , ஒளியியல் மற்றும் ஆற்றல்களான ஒளி ஊடுருவல், லென்ஸ்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த தனிப்பயன் கண்காட்சிகள் என மாணவர்கள் அனைவரும் அந்த சயின்ஸ் சென்டரில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டனர்……..

 

பிறகு அனைத்து மாணவர்களையும் இருவரும் காஷ்மீரின் மிகவும் பிரசித்தி பெற்ற மார்க்கெட்டானா புல்வார்ட் ரோட்டில் உள்ள சவுக் மார்கெட்டிற்கு அழைத்து சென்றனர்……

 

அந்த சாலை தால் ஏரியின் அழகிய கரையோரமாக அமைந்துள்ள மார்க்கெட்…..

ஒருபுறம் ஏரியின் காட்சியும், மறுபுறம் கடைகள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களும் உள்ளன…….

 

பசங்களா இதுதான்  சவுக் மார்க்கெட் இங்க எல்லா பொருளும் விலை கம்மியாவும் சூப்பராவும் இருக்கும் சோ பார்த்து வாங்குங்க உங்களுக்கு த்ரீ ஹவர்ஸ் டைம் தரேன் அதுக்குள்ள ஷாப்பிங் முடிச்சிட்டு வந்துருங்க ,நா இங்க தான் இருப்பேன் சோ எல்லாரும் ஷாப்பிங் முடிச்சுட்டு இந்த இடத்துல அசம்பல் ஆகிடனும் புரியுதா?

 

புரியுது மேடம் என்று மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க சென்றனர்…..

 

ஹே அஸ்வா நீ எதும் வாங்கலயா?உனக்கு நெறய வாங்கனும்ன்னு சொன்ன?

 

வாங்கனும் தான் ஆனா ஸ்டுடென்ட்ஸ பாத்துக்கணும்ல ?

 

அட கடவுளே அஸ்வதி  நீ அண்ணன் கூட போய் ஷாப்பிங் பண்ணு நானும் அப்பாவும் பசங்கள பார்த்துக்குறோம்…..

 

டாடி இங்க வராங்களா?

 

ஆமா நா தான் வர சொன்னேன் நீங்க ரெண்டு பேரும் ஷாப்பிங் பண்ண போங்க நா பசங்கள பார்த்துக்குறேன் என்று விஹானா இரு காதல் பறவைகளையும் ஷாப்பிங் செய்ய அனுப்பி வைத்தாள்…..

 

அவர்கள் இருவரும் சென்ற சிறிது நேரத்தில் சிந்திக்கப்பா வந்து விட்டார் சித்திக் அப்பாவும் விஹானாவும் அனைத்து மாணவர்களையும் கவனமாக கவனித்துக் கொண்டனர்……

 

அஸ்வதிக்கு ஊரில் சாப்பிட விஹான் மற்ற பாதாமை விட அதிக சத்துக்கள் மற்றும் எண்ணெய் தன்மை கொண்ட காஷ்மீரி மாம்ரா பாதாம் நிறைய வாங்கி கொடுத்தான் பிறகு மிகவும் சுவையான கைகளால் உடைக்கக்கூடிய காக்சி (Kagzi) ரகத்தை சார்ந்த காஷ்மீரி வால்நட்களை வாங்கி கொடுத்தான்,பிறகு இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்த  ஆரோக்கியமான உலர்ந்த ஆப்ரிகாட் பழங்களை வாங்கி கொடுத்தான் பிறகு குங்குமப்பூ, ஏலக்காய் மற்றும் பாதாம் துண்டுகள் கலந்த காஷ்மீரி கஹ்வா மிக்ஸ் நிறைய வாங்கி கொடுத்தான் பிறகு காஷ்மீரின் புகழ்பெற்ற ஜான் பேக்கரி போன்ற புகழ்பெற்ற கடைகளில் கிடைக்கும் கிரிஸ்பியான பிஸ்கட்கள் நிறைய நிறைய அவளுக்கு வாங்கி கொடுத்தான் பிறகு நிறைய காஷ்மீரி ஆப்பிள்களை அவளுக்கு வாங்கி கொடுத்தான் பிறகு சருமத்திற்கு பொலிவு தரும் காஷ்மீரி குங்குமப்பூ சாறு கலந்த இயற்கை அழகு சாதனப் பொருட்களான குங்குமப்பூ சீரம் மற்றும் க்ரீம் மற்றும் தூய்மையான ஆர்கானிக் ரோஸ் வாட்டர்,  அமைதியான தூக்கம் மற்றும் சருமப் பராமரிப்பிற்கு உதவும் தரமான லாவெண்டர் எண்ணெய்கள் மற்றும் சமையல் மற்றும் மசாலாப் பொருட்களான உணவிற்கு அதிக காரமில்லாமல் அடர் சிவப்பு நிறத்தைத் தரும் அசல் காஷ்மீரி மிளகாய் தூள்,காஷ்மீரின் பாரம்பரிய மசாலா கலவையான வரமிளகாய் வார்,  இது குழம்பு மற்றும் பொரியல் வகைகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கும்,இமயமலையில் கிடைக்கும் மிகவும் அரிய மற்றும் விலை உயர்ந்த காளான்களான குச்சி காளான்கள்….

 

பிறகு அவளுக்கு சாப்பிட குங்குமப்பூ கலந்த ஒரு இனிப்பான, மென்மையான ரொட்டியான ஷீர்மல் அவளுக்கு அவன் வாங்கி கொடுத்தான் பிறகு காஷ்மீரின் ஸ்பெஷல் சிப்ஸ்சான தாமரைத் தண்டிலிருந்து செய்யப்படும்   மொறுமொறுப்பான நாதூர் சிப்ஸ் அவளுக்கு வாங்கி கொடுத்தான் பிறகு காஷ்மீர் மிகவும்  குளிர்ச்சியான ஊர் என்பதால் இங்கு கிடைக்கும் தேன் மிகவும் சுவையாக இருக்கும் அதனால் அவளுக்கு அவன் தூய்மையான மற்றும் தரம் வாய்ந்த அகாசியா ஹனியை அவளுக்கு வாங்கி கொடுத்தான் பிறகு வால்நட் மற்றும் வெல்லம், சர்க்கரை கலந்து செய்யப்படும் வால்நட் ஃபட்ஜ் ஸ்வீட் காஷ்மீரில் மிகவும் பிரபலம் அந்த சுவீட்டை அவளுக்கு வாங்கி கொடுத்தான்……..

 

இவ்வாறு அவன் அவளுக்கு நிறைய நிறைய பொருட்கள் வாங்கி கொடுத்தான்……

 

பிறகு மூன்று மணி நேரம் கழித்து அனைத்து மாணவர்களும் அஸ்வதி கூறிய இடத்திற்கு வந்தனர்……

 

பிறகு அனைவரும் கெஸ்ட் ஹவுஸ்சிற்கு சென்றனர்……

 

அனைத்து மாணவர்களும் பயன களைப்பில் நன்றாக உறங்கி போனார்கள்……

 

விஹான் மற்றும் அஸ்வதி இருவரும் பணியில் குளித்து கொண்டிருக்கும் நிலவை ரசித்து கொண்டு இருந்தார்கள்……

 

விஹான் அந்த சுலோச்சனா அண்ட் அனந்தி ஜெயிலுக்கு போன பிறகு நா  வீட்டுல ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?ஃபர்ஸ்ட் கொஞ்ச நாள் சோகமா இருந்துச்சி…..

 

அவள் அவ்வாறு கூறவும் விஹான் அவளை பார்த்து முறைத்தான்…..

 

சரி சரி முறைக்காதீங்க , கொஞ்ச நாள்தான் அதுக்கு அப்புறம் நா ரொம்ப ஜாலியா இருந்தேன் , அப்பா இப்பல்லாம் என்கூட ரொம்ப நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணுறாங்க தெரியுமா என்று அவள் அவனிடம் அவன் வாழ்வில் அந்த ஐந்து மாதங்கள் நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி கொண்டு இருந்தாள்……

 

அவள் அழகாக தலையை ஆட்டி ஆட்டி பேசி கொண்டு இருந்தாள் அவள் பேச பேச அவளின் காதில் அணிந்திருந்த ஜிமிக்கியும் அவளின் பேச்சின் இசைக்கு ஏற்ப அழகாக ஆடியது……

 

விஹான் அவளை தன் பக்கம் இழுத்து அவளின் காதோரம் இருந்த முடிகளை விலக்கி விட்டு அவளின் காதுகளில் முத்தமிட்டான்……

 

அந்த முத்தத்தில் அவள் கிறங்கி அவன் மேலே சாய்ந்து கொண்டாள்……

 

பிறகு அப்படியே விஹான் மற்றும் அஸ்வதி இருவரும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொண்டு நிம்மதியாக உறங்கி  போனார்கள்……….

 

தொடரும்……

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்………

 

💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்