Loading

காதல் – 6

 

அஸ்வதி லீலாவை பார்த்து அழகாக மழலை கொஞ்சம் மொழியில் நீங்க யாரு ?

எதுக்கு எங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்க?

என்று கேட்டாள் அதற்கு அந்த லீலா அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டார் அதில் நிலை தடுமாறி அஸ்வதி கீழே விழுந்தாள்……

 

சத்தம் கேட்கவும் சுலோச்சனா ஓடி வந்தார் அங்கே அஸ்வதி கீழே விழுந்து கிடந்தாள் ….

 

அஸ்வதி என்ன ஆச்சு?

என்று சுலோச்சனா அவளை தூக்கி விட்டார்…..

 

அம்மா இந்த ஆன்ட்டி என்னை அடிச்சுட்டாங்க என்று அழுது கொண்டே கூறினாள்…..

 

அம்மா எதுக்குமா என்னோட பொண்ண அடிச்ச?

 

யாரு இந்த அனாதை நாய் உனக்கு பொண்ணா?

 

அம்மா அஸ்வதிய பாத்து இப்படி பேசாத,

இவ என்னோட பொண்ணு…..

 

ஏய்  எதுக்குடி நீ இப்படி ஒரு அனாதை பொண்ண தத்து எடுத்த?

 

பின்ன என்னமா பண்ண சொல்ற கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆகப்போகுது இன்னும் எங்க ரெண்டு பேருக்கும் குழந்தை இல்லை எங்க போனாலும் குழந்தை இல்லையா குழந்தை இல்லையான்னு  கேக்குறாறாங்க என்னால முடியலம்மா…

 

அதுக்குன்னு இப்படி குழந்தையை தத்து எடுப்பியா?

 

அம்மா இவ்வளவு நாளா நாங்க குழந்தை இல்லாம ரொம்ப வருத்தப்பட்டோம் ஆனா இப்போ அஸ்வதி வந்த உடனே எங்க வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா….

 

ஏய் இதுக்குன்னு நிறைய டாக்டர்ஸ் இருக்காங்கடி இதுக்கு போயா நீ ஒரு குழந்தையை தத்தெடுப்ப?

 

அத்தை போதும் குழந்தை பாக்குறா , உங்களோட சண்டைய நிறுத்துங்க ,

அஸ்வா ஒரு குழந்தைன்னு கூட பாக்காம இப்படியா அடிப்பீங்க?

குழந்தை கன்னம் எப்படி சிவந்துருச்சுன்னு பாருங்க என்று தேவராஜ் அவளின் கன்னத்தை மெதுவாக தடவி விட்டார்……

அஸ்வா செல்லம் ரொம்ப வலிக்குதுடா?

 

ஆமா அப்பா ரொம்ப வலிக்குது , இந்த ஆன்டி ரொம்ப ஸ்பீடா அடிச்சிட்டாங்க ,யாராவது நம்ம வீட்டுக்கு வந்தா நீங்க யாரு ?

எதுக்கு எங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்கன்னுதான கேக்க சொன்னீங்க?

 

ஆமாடா கண்ணா , யாரு வீட்டுக்கு வந்தாலும்

நீங்க யாரு ?

எதுக்கு எங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்கன்னு கேக்கனும் எல்லாரையும் வீட்டுக்குள்ள விட கூடாதுன்னு சொல்லி குடுத்தேன் அதுக்கு என்ன இப்போ?

 

அதான்ப்பா நானும் இவங்களை பாத்து கேட்டேன் அதுக்குதான் அடிச்சிட்டாங்க என்று அவள் அழுது கொண்டே இருந்தாள்…….

 

சரிடா கண்ணா அழாத அப்பா உனக்கு டைரி மில்க் சாக்லேட் வாங்கி தாரேன் என்று அவர் அவளை வெளியே அழைத்து சென்றார்…..

 

அம்மா சின்ன குழந்தைம்மா அவ அவளை போய் இப்படி அடிச்சி வச்சிருக்க?

 

ஏய் சுலோ உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?

யாரு பெத்ததயோ நீ ஏன் எடுத்து வளக்கனும்?

உன்னாலயும் அம்மா ஆக முடியும்டி அந்த அனாதை பிள்ளைய எங்க புடிச்சிட்டு வந்தீங்களோ அங்கேயே விட்டுட்டு வந்துருங்க,

இந்த அனாதை பொண்ணு  நம்ம குடும்பத்துக்கு தேவையில்லை…..

 

அம்மா அப்படி எல்லாம் விட்டுட்டு வந்துற முடியாது , அஸ்வதான் இனிமே என்னோட  பொண்ணு சோ இதப்பத்தி நீ எதுவும் பேசாத…..

 

லீலவுக்கு அஸ்வதியை கண்டாலே பிடிக்கவில்லை , அவளை எப்பொழுதும் திட்டி தீர்த்து கொண்டு இருந்தார், அவள் அழும் சமயம் மட்டும் அவள் அவளின் அனாதை இல்லத்தை நினைத்து அழுகிறாள் என்று அவர் மழுப்பி விட்டு சென்று விடுவார்…..

 

இதற்கு இடையில் லீலா சுலோச்சனாவை தேவரஜுக்கு தெரியாமல் குழந்தை கருத்தரிப்பு மையத்திற்கு அழைத்து சென்று வந்தார்….

 

சுலோச்சனாவிற்கு அவளின் தாயோடு செல்ல விருப்பமில்லைதான் , ஆனாலும் மனதில் ஒரு மூலையில் தன் உயிரில் கலந்து பிறந்த குழந்தை வேண்டும் என்ற ஏக்கம் …

அந்த ஏக்கம்தான் லீலாவோடு அவளை செல்ல வைத்தது…..

 

அஸ்வதி அன்று பார்பி பொம்மைகளை வைத்து விளையாடி கொண்டு இருந்தாள் அதை லீலா பார்த்து விட்டார்….

 

அய்யோ இந்த பொம்மை எவ்வளோ காஸ்ட்லி இதை வச்சி இந்த அனாதை நாய் விளையாடிட்டு இருக்கு ….

 

ஏய் ….

 

சொல்லுங்க பாட்டி….

 

ஏய் என்ன தைரியம் இருந்தா என்ன பாட்டின்னு கூப்பிடுவ என்று அவர் அவளை அடிக்க கை ஓங்க அஸ்வதி ஒரு தூண் பின்னால் ஓடி ஒளிந்து கொண்டே சொன்னாள்….

 

அப்பாதான் உங்களை அப்படி கூப்பிட சொன்னாங்க என்று அழுகை குரலில் கூறினாள்….

 

ஏய் இங்க என் கண்ணு முன்னால வா….

 

இல்ல வந்தா நீங்க அடிப்பீங்க….

 

இல்ல நா உன்ன அடிக்க மாட்டேன் , அஸ்வா கண்ணா  பாட்டிட்க்கிட்ட வா என்று அவர் பாசமாக அழைத்தார் அதை நம்பிய அஸ்வா லீலாவிடம் ஓடினாள்…

 

பாட்டி என்று ஆசையாக ஓடி சென்று அவரின் கால்களை கட்டி பிடித்து கொண்டாள்…..

 

அந்த லீலா அஸ்வதியை தன் ஹீல்ஸ் அணிந்த கால்களால் எட்டி மிதித்து தள்ளினார்….

 

அதில் அஸ்வதி டேபிளில் தலை மோதி மயங்கி விழுந்தாள்…..

 

சத்தம் கேட்கவும் சுலோச்சனா ஓடி வந்தார்….

 

அய்யயோ அஸ்வதி செல்லம் உனக்கு என்ன ஆச்சு?

அய்யோ எவ்வளோ ரத்தம் போகுது என்று அவர் அழுதார்…..

 

தேவா தேவா….

அம்மா என்னம்மா பாத்துட்டு நிக்குற போய் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்துட்டு வா என்னோட குழந்தைக்கு எவ்வளோ ரத்தம் போகுது பாரு என்று அவர் அழுதார்…..

 

ஏய் சுலோச்சனா இவள உன்னோட குழந்தைன்னு சொல்லாதடி கேக்கவே அருவருப்பா இருக்கு…..

 

அம்மா என்ன பேச்சு இது?

போம்மா போய் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்துட்டு வா….

 

தேவா ….

தேவா சீக்கிரம் வாங்களேன்….

 

சுலோச்சனாவின் அழுகுரல் கேட்கவும் தேவராஜ் ஓடி வந்தார்….

 

என்னங்க நம்ம பொண்ணு தலையில அடி பட்டுருக்கு என்று அவர் அழுதார்…..

 

அழாதே சுலோ , என்று அவர் அவளை அப்படியே தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்….

 

டாக்டர் என்னோட பொண்ணு டேபிள்ல்ல முட்டி ரத்தம் வருது என்று தேவராஜும் சுலோச்சனாவும் அழுதார்கள்….

 

கூல் கூல் மிஸ்டர் நாங்க பாக்குறோம் என்று அந்த மருத்துவர் அவளின் நெற்றியில் வழிந்த ரத்தத்தை சுத்தம் செய்து அவளுக்கு சிகிச்சை அளித்து விட்டு வெளியே வந்தார்….

 

டாக்டர் எங்க பொன்னுக்கு ஒண்ணுமில்ல தானே?

 

ஏங்க நீங்க ரெண்டு பேரும் அந்த குழந்தையோட அம்மா அப்பாதானா?

 

ஆமா டாக்டர் ஏன் கேக்குறீங்க?

 

இப்படியா இந்த குழந்தைய அடிப்பீங்க?

அவ காலுல எப்படி எட்டி உதச்சிருக்கீங்க காலுல நல்ல அடி…

தலையில பட்ட  அடி கொஞ்சம் மிஸ் ஆகி கீழ  பட்டிருந்தா இந்த குழந்தை கண்ணு போயிருக்கும் என்ன அம்மா அப்பா நீங்க ?

என்று அந்த மருத்துவர் அவர்கள் இருவரையும் நன்றாக திட்டி தீர்த்து விட்டு சென்றார்…..

 

சுலோச்சனாவுக்கும் தேவராஜூக்கும் ஒன்றும் புரியவில்லை….

 

சுலோ நீதான அஸ்வாவ பாத்துட்டு இருந்த?

அப்புறம் எப்படி இப்படி ஆச்சு?

 

அவ டைனிங் டேபில்ல பொம்மை வச்சி விளையாடிட்டு இருந்தா சோ நா கொஞ்ச நேரம் கிச்சன்ல வேலை பாத்துட்டு இருந்தேன் அப்போ ஏதோ  சத்தம் கேட்டுச்சு நான் உடனே ஓடி போய் பார்த்தேன் அங்க அஸ்வதி தலையில் அடிபட்டு , தலையில் ரத்தம் வழிய கீழ  விழுந்து கிடந்தா…..

 

எப்படி அவளே கீழே விழுந்திருப்பா அவ என்ன அவ்ளோ ஒன்னும் சின்ன பொண்ணு இல்லையே……

 

எனக்கு தெரியல தேவா நா அஸ்வதிய தூக்கும்போது அம்மா தான் பக்கத்துல இருந்தாங்க….

 

சுலோ எனக்கு உங்க அம்மா மேல சந்தேகமா இருக்கு…..

 

எங்கம்மா அப்படி எல்லாம் பண்ணிருக்க வாய்ப்பில்லை…..

 

சரி நீ இங்கேயே இரு நான் வரேன் என்றிட்டு தேவராஜ் எங்கோ சென்றார்……..

 

அப்பொழுது டாக்டர்கள் அஸ்வதி சிகிச்சை அறையில் இருந்து வெளியே வர …..

 

மேடம் உங்க பொண்ணு கன்னு முழிச்சிட்டா நீங்க போய் அவளை பார்க்கலாம் என்று கூற சுலோச்சனா வேகமாக அஸ்வதியை பார்க்க ஓடினார்….

 

அஸ்வதி தலையில் கட்டோடு படுத்திருந்தாள் அவளை அவ்வாறு பார்க்கவும் சுலோச்சனா துக்கம் தாளாமல் அழுதுவிட்டார்…..

 

அஸ்வா உனக்கு என்ன ஆச்சும்மா உன்ன யாரும் கீழ தள்ளி விட்டாங்களா?

 

ஆமா அம்மா பாட்டி என்ன கீழ தள்ளி விட்டுட்டாங்க…..

 

பாட்டியா அவங்க ஏன் உன்னை கீழே தள்ளி விட்டாங்க?

 

நா… நா….. என்னோட பார்பி டால வச்சி விளையாடிட்டு இருந்தனா அப்போ பாட்டி வந்தாங்க , என்ன ஏய்ன்னு கூப்பிட்டாங்க நான் என்ன பாட்டின்னு கேட்டேன் அதுக்கு அவங்க என்ன நீ எப்படி பாட்டின்னு கூப்பிடலாம்ன்னு அடிக்க கை ஓங்கினாங்க சோ நான் பயந்துட்டேன் உடனே ஓடி போய் அந்த பில்லர் பின்னால ஒளிஞ்சிகிட்டேன் அப்புறம் பாட்டி என்னைய பாசமா இங்க வா அஸ்வா கன்னான்னு கூப்பிட்டாங்க நானும் பாட்டி என்ன பாசமா கூப்பிடுறாங்கன்னு பாட்டின்னு ஓடிப்போய் அவங்க கால கட்டி புடிச்சுக்கிட்டேன் உடனே பாட்டி என்ன எட்டி மிதிச்சுட்டாங்க அதுல  நா தள்ளி போயி டேபிள்ல முட்டிட்டேன் அப்புறம் எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல…….

 

அஸ்வா இவ்வாறு கூறவும் சுலோசனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை தான் பெத்த தாய் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும் என்று…. சின்ன குழந்தை மீது அவருக்கு ஏன் அத்தனை வெறுப்பு ?

இவள் அவருக்கு என்ன செய்தாள்?

இவளை ஏன் அவர் அப்படி வெறுப்பாக பார்க்கிறார்?

என்று அவர் மனதில் ஆயிரம் ஆயிரம் கேள்விகள்…..

 

அப்பொழுது அந்த அறைக்குள் லீலாவதி வந்தார் லீலாவை பார்த்ததும் அஸ்வதி பயந்து போய் அம்மா அம்மா என்று கத்தினாள் …..

 

என்னாச்சு அஸ்வா ஏன் இப்படி கத்துற?

 

அம்மா இவங்க என்ன அடிப்பாங்க என்று அஸ்வதி அழுது கொண்டே இருந்தாள்…..

 

அம்மா உன் கூட தானே இருக்கிறேன் அப்ப எப்படி இவங்க உன்ன அடிக்க முடியும்?

அழாத அஸ்வா இவங்க உன்ன ஒன்னும் பண்ண மாட்டாங்க…..

 

என்னாச்சு அஸ்வா கண்ணா ஏன்  பாட்டியை பார்த்து பயப்படுறீங்க என்று சுலோச்சனாவை தாண்டி அஸ்வா அருகில் லீலா வந்தார்…..

 

அம்மா இவங்கள தள்ளிப்போக சொல்லுங்கம்மா எனக்கு பயமா இருக்கு என்று அஸ்வதி அழுதாள்….

 

ஏய் சுலோச்சனா இந்த பொண்ணு என்ன பார்த்து ஏன் இப்படி கத்துது?

 

நீதானே என்னோட பொண்ண இந்த  நிலைமைக்கு ஆக்கி இருக்க?

 

நானா ……

நான் எதுக்கு இவள இப்படி அடிக்க போறேன் ?

 

நடிக்காதம்மா அஸ்வா எங்கிட்ட எல்லாம் சொல்லிட்டா ……

 

சுலோ இவ்வாறு கேட்கவும் லீலா அஸ்வதியை முறைத்துப் பார்த்தாள்…..

 

அஸ்வதி லீலாவை பயந்து நடுங்கி கொண்டு இருந்தாள்….

 

அவளின் கடந்த காலத்தில் அவள் கசப்பையும் , வெறுப்பையும் மட்டுமே பார்த்து வளர்ந்தவள் அவளை அவனின் காதலால் அவளின் கடந்த காலத்தை மறக்க செய்வானா?

 

தொடரும் …..

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…..

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
10
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. சின்ன வயதில் அஸ்வதிய சுலோ நல்ல தான் பார்த்துட்டு இருந்துருக்கங்க… இப்ப ஏன் இப்படி அடிக்கிறாங்க??? 🤔

    1. Author

      Ini theriyum thodarndhu padinga …
      Thank you for your valuable comments 😇

  2. குழந்தை இல்லாமல் ஏங்கி தவித்து, சமூகத்தின் அவ சொற்களை தாங்கி துயரத்தில் இருக்கும் போது துயர் களைவதற்கும், ஏக்கம் தீர்ப்பதற்கும் வலிய சென்று வருவித்து கொண்ட ஒரு உறவை தன் தேவைகள் தீர்ந்ததும் அவர்கள் தேவையில்லை என்ற நிலை வந்ததும் தூக்கி எரிந்து விடுகின்றனர்.

    இங்கே தூக்கி எரிதலையும் தாண்டி ஒவ்வொரு கனமும் துயரத்தை பரிசளிக்கின்றனர்.

    தேவராஜ் தான் கூடவே வைத்துக் கொள்ள வற்புறுத்தி இருப்பாரோ? அழகு திறமை என்று தான் பெற்ற மகவுக்கும், தத்து எடுக்கப்பட்ட மகவுக்கும் பொறுத்தி பார்த்து பரிதவித்து அதனை அஸ்வா மேல் வெறுப்பாக திணித்து கொண்டாரோ சுலோ?

    1. Author

      Unga comments enaku romba boost pa….
      Neraya aacharyangal iruku…
      Thodarndhu padinga 😇

  3. சுலோ எல்லாம் சரிதான் … ஆனா உனக்குனு ஒரு குழந்தை வந்ததும் இவளை வேணாம்னு டார்ச்சர் பண்ற

    1. Author

      Aama paavam aswathy….
      Thank you for your valuable comments 😇