Loading

காதல் – 55

 

அஸ்வதியை கொல்ல நினைத்த அவளின் வளர்ப்புத் தாயாரையும் அவளின் மாற்றந்தாய் வயிற்றில் பிறந்த  தங்கையையும் ஜெயிலில் அடைத்து விட்டனர்…..

 

பிறகு அஸ்வதி அவளின் மூன்று பால்ய கால நண்பர்களை சந்தித்து விட்டாள் இன்னும் இருவர் தான் பாக்கி இருக்கிறார்கள் அவர்களயும் அஸ்வதி சந்திப்பாளா?

 

அஸ்வதி தன்னுடைய வகுப்பு மாணவர்களை அவளுக்கு பிடித்த இடமான காஷ்மீருக்கு அழைத்துச் செல்லும்படி பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது கரும்பு தின்ன கூலி கொடுத்தால் அவளுக்கு என்ன கசக்குமா அதன்படி அஸ்வதி தன்னுடைய மாணவர்களை காஷ்மீர் இன்ப சுற்றுலா அழைத்து செல்ல சம்மதம் கூறிவிட்டாள்…..

 

ஆனால் நாற்பத்தி ஒன்பது மாணவர்களில் மூவர் மட்டும் டூரின் அமௌன்ட் கேட்டு வர முடியாது என்று சோகத்தோடு கூறிக் கொண்டிருந்தார்கள்……

 

சில்பா ,சோனா ,ஷங்கர் மூனு பேரும் என்கிட்ட வாங்க என்று அவள் அவர்கள் மூன்று பேரையும் அஸ்வதி அழைத்தாள்……

 

மேம்…….

 

உங்க வீட்டுல இவ்வளோ அமௌன்ட்ன்னு சொன்னா கொடுக்க மாட்டாங்களா?

 

மேம் எங்க மூணு பேரோட அப்பா அம்மாவும் இங்க இருக்குற காட்டன் மில்ல தான் வேலை பார்க்குறாங்க அதனால அவங்க கிட்ட இவ்வளவு அமௌன்ட்ன்னு சொல்லி அவங்கள கஷ்டப்படுத்த நாங்க விரும்பல மேடம் அதான் நாங்க வரல மேடம் நீங்க எல்லாரும் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க என்று அவர்கள் மூவரும் கூறவும்…….

 

சரி நா உங்க மூனு பேரையும் கூட்டிட்டு போனா எங்க கூட இந்த காஷ்மீர் ட்ரிப்புக்கு வருவீங்களா?

 

மேம் அதெல்லாம் வேனாம் மேம், இவ்ளோ அமௌன்ட் எங்களுக்காக நீங்க கொடுக்க வேணாம் மேம்…..

 

அதெல்லாம் தெரியாது நா உங்க மூனு பேரையும் டூர் கூட்டிட்டு போக போறேன் நீங்க வந்து தான் ஆகனும் புரியுதா என்று அஸ்வதி கண்டிப்பு கலந்த குரலில் கேட்கவும் அவர்கள் மூவரின் தலையும் தானாக ஆடியது……

 

மேடம் மேடம் ரொம்ப தேங்க்ஸ் மேடம் என்று அவர்கள் மூவரும் அஸ்வதியை கட்டி அணைத்துக் கொண்டு அழுதனர்…..

 

அடடே என்னடா காலேஜ் பைனல் இயர் வந்தாச்சு இன்னும்  சின்ன குழந்தைங்க மாதிரி அழுதுட்டு கண்ணை தொடங்கடா என்று அஸ்வதி அவர்கள் மூவரின் கண்களையும் துடைத்து விட்டாள் ……..

 

சரி இப்போ எல்லாரும் ஒன்னா  சேர்ந்து ஜாலியா ட்ரிப் போக போறோம் சோ காஷ்மீர்ல ரொம்ப குளிர்ன்னு உங்களுக்கு தெரியும் அதனால குளிர் தாங்க கூடிய ஸ்வட்டர், குல்லா , மஃப்ளர் எல்லாம் மறக்காம எடுத்துட்டு வாங்க புரியுதா ?அப்புறம் டூருக்கு போறோம் அப்படின்னு புதுசா எதுவும் அப்பா அம்மா கிட்ட சொல்லி அடம் பிடிச்சி வாங்கிட்டு வர வேணாம் என்ன இருக்கோ அத கொண்டு வாங்க புரியுதா?

 

புரியுது மேடம் என்று அந்த மாணவர்கள் அனைவரும் டூர் செல்வது பற்றி ஆலோசனை செய்ய ஆரம்பித்தார்கள்……

 

அஸ்வதி மறுபடியும் தன்னுடைய காதலனை பார்க்க போகிறோம் என்று அவளின் உள்ளம் முழுக்க மகிழ்ச்சி நிரம்பி வழிந்து கொண்டிருந்தது…….

 

அன்று இரவு அஸ்வதி சித்திக் அப்பாவிற்கு கால் செய்தாள்……

 

போன் அடிக்கிறது என்று சிந்திக்கப்பா போனை எடுக்க போனார், பிறகு டிஸ்ப்ளேயில் தெரிந்த பெயரை பார்த்து  சந்தோஷமாகி போனை அட்டென்ட் செய்து பேசினார்…….

 

ஹலோ அஸ்வதி கண்ணா எப்படிம்மா இருக்க? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா ?தேவராஜ் எப்படி இருக்கிறான்?

 

எல்லாரும்  நல்லா இருக்காங்க அப்பா, பீவி அம்மா விஹானா எல்லாரும் எப்படி இருக்காங்க? சோஜோ மோஜோ ரெண்டு பேரும் எப்படி இருக்கிறாங்க?

 

எல்லாரும் சூப்பரா  இருக்கிறோம்மா நீ தான் ஊருக்கு போன பிறகு விஹான்கிட்ட மட்டுமே பேசிட்டு இருக்குற என்கிட்ட எல்லாம் பேசணும்னு உனக்கு தோணவே இல்லை என்ன?

 

ஐயோ அப்படி இல்லப்பா அது வந்து……

 

நான் சும்மா தான் விளையாட்டுக்கும் உன்கிட்ட கேட்டன்ம்மா ,  சுலோச்சனா அனந்தி கேஸ் விஷயம் பத்தி விஹான் சொன்னான் எனக்கு அதை கேட்ட உடனே ரொம்ப கஷ்டமா போச்சும்மா…….

 

அத விடுங்கப்பா அப்புறம் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதான் உங்களுக்கு நான் கால் பண்ணேன்…….

 

சொல்லுடா கண்ணா என்ன முக்கியமான விஷயம் அது?

 

அப்பா எங்க காலேஜ்ல இருந்து டூர் போக சர்குலர்ல வந்த பிளேஸ் காஷ்மீர் அதுவும் எங்களுக்கு டூரிஸ்ட்  கைடா போட்டு இருக்கிறது நம்ம கம்பெனி பேரு அண்ட் நா அண்ட் ஸ்டுடென்ட்ஸ் தங்க போற இடம் நம்மளோட கெஸ்ட் ஹவுஸ்  அதனால……..

 

வெயிட் வெயிட் அந்த சென்னையில உள்ள கவர்மெண்ட் காலேஜ்ல இருந்து வர பசங்களா ?

நீ சொல்றது நாற்பத்தி ஒன்பது பசங்க ஒரு டீச்சர்?

 

ஆமாப்பா இன்னைக்கு காலையில தான் ஆபீஸ் டீடைல்ஸ் பார்த்தேன் அதுல செம கம்பெனி பேரு தான் போட்டு இருந்தது அதான் உங்ககிட்ட கேட்கலாம்னு போன்  பண்ணேன்…..

 

அஸ்வதி  அப்போ நீ நாளை மறுநாள் நீ காஷ்மீருக்கு வரியா?

 

ஆமா அப்பா இந்த விஷயத்தை நீங்கள் விஹான்கிட்ட சொல்லாதீங்க  விஹானுக்கு நா அங்க வரது சப்ரைஸ்சா இருக்கட்டும்……..

 

சரிம்மா நா  நீங்க இங்க வர்றதுக்கான அரேஞ்ச்மெண்ட்ஸ் பண்றேன் சரியா…….

 

சரிப்பா ……

 

சரிடா கண்ணா நா போன வச்சுடறேன் உடம்ப பாத்துக்கோ என்று சித்திக் அப்பா போனை வைத்து விட்டார்………

 

இரண்டு நாட்கள் கழித்து  அஸ்வதியும் அவளின் வகுப்பு மாணவர்களும் டூர் செல்ல வேண்டிய நாளும் வந்தது…….

 

ஸ்டுடென்ட்ஸ்  எல்லாரும் வந்தாச்சா?

ரெப்ரசடேட்டிவ் எங்க?

 

மேம் நா இங்க இருக்கேன் என்று ஒருவன் வந்தான்…….

 

தம்பி உன் பெயர் விக்னேஷ் தான?

 

ஆமா மேடம்……

 

சரி இந்த டிரிப் முடியறவரை நீதான் ஸ்டூடண்ட்ஸ் எல்லாரையும் ஒழுங்கா கார்டினேட் பண்ணி கூட்டிட்டு வரனும் புரியுதா?

 

புரியுது மேடம்……

 

அண்ட் கேர்ள்ஸ் சைட்ல இருந்து மூணு பேரு லீடரா இருக்கணும்  ஒருத்தர் எல்லா கேர்ள்ஸ்சும் வந்துட்டாங்களான்னு பாக்கணும் இன்னொருத்தவங்க எல்லா கேர்ள்ஸ்சுக்கும் போற இடம் ஒத்துக்குமா அப்படின்னு கேட்கணும் கேட்டு என்கிட்ட சொல்லனும் அப்புறம் இன்னொருத்தவங்க  நம்ம தங்க போற ரூம்ல எல்லாம் கரெக்டா எடுத்துட்டு வந்துட்டோமா அப்படின்னு செக் பண்ணனும் இதே மாதிரி தான் பாய்ஸுக்கும் மூணு பேர் வேணும் இவங்க எல்லாருக்கும் ஹெட் விக்னேஷ் புரியுதா?

 

புரியுது மேடம்…….

 

சரி சரி நா இப்போ நம்மளோட டூர் பிளான் சொல்ல போறேன் நல்லா கவனிச்சுக்கோங்க இப்ப நம்ம காலேஜிலிருந்து,  காலேஜ் பஸ்ல ஏர்போர்ட்டுக்கு போறோம் அங்கிருந்து டெல்லி போறோம் டெல்லியில இருந்து ஸ்ரீநகருக்கு ஒரு பிளைட்ல போறோம் அப்புறம் ஸ்ரீ நகர்லதான் நம்ம எல்லாரும் ஸ்டே பண்ண போறோம் அங்க இருந்து சுத்தி பார்க்க ஒரு டூரிஸ்ட் பிளானர் நம்ம கூடவே இருந்து நம்ம எல்லாரயும் கைட் பண்ணுவாங்க புரியுதா?

 

புரியுது மேடம்…..

 

சரி எல்லாரும் பஸ்ல ஏறுங்க, பிளைட்டுக்கு டைம் ஆகுது என்று அவள் கூறவும் அனைத்து மாணவர்களும் பஸ்ஸில் ஏறினர்……

 

அஸ்வதி முன் சீட்டில் அமர்ந்து கொண்டிருந்தாள்……

 

மேடம் எல்லாரும் பஸ்ல ஏறிட்டாங்க நான் கவுண்ட் பண்ணிட்டேன் மேடம்…..

 

குட் விக்னேஷ் டிரைவர் அண்ணா எல்லாரும் வந்துட்டாங்க நீங்க வண்டி எடுங்க அண்ணா என்று அவள் கூறவும் அந்த காலேஜ் பஸ் அவர்களின் கல்லூரியில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றது…….

 

அங்கு அனைத்து செக்கிங்கும் முடிந்து அனைவரும்  பிளைட்டில் ஏறி அமர்ந்தனர்………..

 

அனைத்து மாணவர்களும் முதன் முதலாக பிளைட்டில் செல்வது எண்ணி சந்தோஷப்பட்டு கொண்டிருந்தனர்…….

 

இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு அவர்கள் டெல்லியை வந்தடைந்தனர்…….

 

விக்னேஷ் எல்லாரும் பிளைட்ல இருந்து இறங்கிட்டாங்களா? எல்லாருடைய திங்ஸ்சும் ஒழுங்கா, கரெக்டா இருக்கா?

 

ஆமா மேடம் எல்லாரும் ப்ளைட்டிலிருந்து இறங்கிட்டாங்க எல்லாருடைய திங்ஸ்சும் ஒழுங்கா இருக்கு மேம்…….

 

குட் விக்னேஷ் , சரி பசங்களா அடுத்து நமக்கு டெல்லியில் இருந்து ஸ்ரீ நகருக்கு ஒரு பிளைட் இருக்கு அந்த பிளைட்டுக்கு நம்ம செக்கிங் பண்ணி போலாம் வாங்க என்று அனைத்து மாணவர்களையும் அழைத்துக் கொண்டு செக்கிங் எல்லாம் முடித்துவிட்டு ஸ்ரீநகர் செல்லும் பிளைட்டில் அனைவரும் ஏறி அமர்ந்தனர்…….

 

ஒரு மனி நேர பயணத்திற்கு பிறகு அவர்கள் அனைவரும் காஷ்மீரின் தலைநகரான ஶ்ரீநகருக்கு வந்தடைந்தனர் …..

 

நம்ம எல்லாரும் இப்போ காஷ்மீர் வந்துட்டோம் சோ அவங்கவங்களோட  லக்கேஜ பாத்து எடுத்துட்டு வாங்க என்று அஸ்வதி கூறவும் அனைத்து மாணவர்களும்  அவரவரரின்  லக்கேஜ்களை எடுத்து கொண்டு வந்தனர்…….

 

அப்பொழுது சித்திக் அப்பா மற்றும்

விஹானா வெல்கம் டூ காஷ்மீர் கவர்ன்மென்ட் காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் அண்ட் மேடம் என்ற பதாகையோடு நின்று கொண்டிருந்தனர்……..

 

அவர்களைப் பார்த்தவுடன் அஸ்வதி ஓடிச்சென்று அவர்கள் இருவரையும் கட்டி அணைத்துக் கொண்டாள்…….

 

அப்பா விஹானா ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா?

 

நாங்க எல்லாரும் சூப்பரா இருக்கோம்டா கண்ணா, இவங்கதான் உன்னோட ஸ்டுடென்ட்ஸ்ஸா?

 

ஆமா அப்பா இவங்க தான் என்னோட ஸ்டூடண்ட்ஸ் விக்னேஷ் இவங்க பேரு தான் சித்திக் அப்பா அண்ட் இது விஹான்னா , இவங்கதான் சித்பீ  டூரிசமோட ஓனர்ஸ் அண்ட் நம்மளோட ட்ராவல் பார்ட்னரும் இவங்கதான்……

 

அஸ்வதி அவர்களை விக்னேஷிற்கு அறிமுகம் செய்து வைக்கவும் விக்னேஷ் மற்றும் அனைத்து மாணவர்களும் சித்திக் அப்பா மற்றும் விஹானாவிற்கு வணக்கம் கூறினார்கள்……

 

வணக்கம்  பசங்களா, உங்க எல்லாரோட லக்கேஜ பத்திரமா எடுத்துட்டு வாங்க என்று அவர் அவர்களை ஒரு பெரிய டூரிஸ்ட் பஸ்சிற்க்கு அழைத்து சென்றார்…….

 

பசங்களா உங்களோட லக்கேஜ பஸ் பின்னால இருக்குற லக்கேஜ் வைக்கிற இடத்துலயும் வைக்கலாம் அப்படி இல்லன்னா பஸ் உள்ள மேல லக்கேஜ் வைக்கிற மாதிரி இடமும் இருக்கு உங்களுக்கு எங்க வைக்க இஷ்டம் இருக்கோ அங்க வச்சுக்கோங்க என்று சித்திக் அப்பா கூறினார்…….

 

பின்னர்  அனைத்து மாணவர்களும் தங்களது உடைமைகளை வைத்துவிட்டு பஸ்ஸில் அமர்ந்தனர்……..

 

மேடம் மேடம்……

 

சொல்லுங்கடா என்ன எல்லாரும் ஒண்ணா என்ன கூப்பிடுறீங்க?

என்ன விஷயம்?

 

மேடம் நீங்க காலேஜ்ல எங்க கிட்ட மட்டும் தான் நல்லா பேசுவீங்க வேற யார்கிட்டயும் அவ்வளவா பேச மாட்டீங்க ஆனா அவங்க ரெண்டு பேரு கிட்ட அவ்ளோ நேரம் சிரிச்சு சந்தோஷமா பேசுறீங்க?

அவங்க ரெண்டு பேரும் உங்க சொந்தக்காரங்களா?

 

அப்படித்தான் வச்சுக்கோயேன் என்று அவள் சிரித்தாள்……..

 

அஸ்வதி கூறிய பதிலைக் கேட்டு அனைத்து மாணவர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்……..

 

தொடரும்…….

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…………

 

💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்