
காதல் – 53
அஸ்வதியை கொல்ல பார்த்த அனந்தி மற்றும் சுலோச்சனாவை கையும் களவுமாக போலீசார் பிடித்து நடத்திய கிடுக்கு பிடி விசாரணையில் அனைத்து உண்மைகளையும் அவர்கள் இருவரும் கூறிவிட்டனர்…….
அவர்கள் இருவரும் இன்று கோர்ட்டில் ஆஜராகிகின்றனர்……..
சுலோச்சனா மற்றும் அனந்தி , அஸ்வதியை கொல்ல பார்த்த இந்த விஷயத்தை கேள்விப்பட்டு எந்த சலணமும் இல்லாமல் எப்பொழுதும் போல கல்லூரிக்கு கிளம்பி சென்றாள்……..
அனந்தி மற்றும் சுலோச்சனா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்………
நீதிபதி வந்துவிட்டார் அனைவரும் அவருக்கு எழுந்து மரியாதை செலுத்தினார்கள்…….
சுலோச்சனா மற்றும் அனந்தி குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டனர்…..
நீதிபதி வழக்கை விசாரிக்க ஆரம்பித்தார்…….
மிசஸ் சுலோச்சனா மற்றும் அனந்தி ஆகிய இருவருக்கும்
IPC 307 – கொலை செய்ய முயற்சி (Attempt to Murder)
IPC 328 – விஷம் கொடுத்து தீங்கு செய்யும் நோக்கம்
IPC 120B – குற்றச் சதி போன்ற வழக்குகள் உங்க மேல பதிய பட்டுருக்கு அதுக்கு நீங்க என்ன விளக்கம் கொடுக்க போறீங்க?
சார் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அவள கொல்ல பாக்கல……
அப்போ எதுக்கு உங்க வீட்ல சைனைட் இருந்தது?
அது….
வந்து….
அப்பொழுது நீதிபதி அந்த கேஸின் சமந்தப்பட்ட போலீஸ் அதிகாரியை விசாரிக்க அழைக்க சொல்லி உத்தரவிட்டார்…..
மிஸ்டர் மதன் குமார் ……. மதன்குமார் என்று அந்தக் கோட்டில் உள்ள டவாலி அழைக்கவும் மதன் கூண்டில் ஏறி நின்று ஜட்ஜ்க்கு வணக்கம் வைத்துவிட்டு நின்றான்……
மிஸ்டர் மதன்குமார் நீங்க சொல்லுங்க உங்களுக்கு இந்த நியூஸ் எப்படி கிடைச்சது? யார் உங்களுக்கு இவங்க வீட்ல சையனைடு இருக்கு அப்படின்னு சொன்னாங்க?
சார் நேத்து நாங்க ஒரு நகை கடைக்கு செக்கிங் போனோம் அந்த கடையில கணக்குல இருக்குறத விட சைனைட் கம்மியா இருந்தது அப்போ அந்த சைனைட் சூப்பர்வைசர் மிஸ்டர் பீட்டர்க்கிட்ட நாங்க விசாரிச்சோம் அவர்தான் இந்த உண்மை எல்லாம் சொன்னாரு……..
எந்த உண்மை சார்? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க….. என்று அந்த ஜட்ஜ் கேட்கவும் மதன் அனைத்து உண்மையையும் கூறினான்…..
இவங்க ரெண்டு பேரும் எதுக்கு சயனைடு வாங்கினாங்கன்னு நா சொல்றேன் என்று அந்த போலீஸ் அதிகாரியான மதன் கூறத் தொடங்கினார்……
இவங்க தத்து எடுத்து வளர்த்த பொண்ணு பேரு அஸ்வதி , அப்போ அந்த பொண்ணு சின்ன வயசுல இருந்த சமயத்துல இவங்களுக்கு அந்த பொண்ண ரொம்ப புடிச்சி இருந்தது ஆனா இவங்க ஹஸ்பண்ட் அந்த பொண்ணுக்கு அவரோட பாதி சொத்த எழுதி வச்ச உடனே அந்த சொத்து இவங்க கைக்கு கிடைக்காம போன கோவத்துல அந்த பொண்ண கொலை பண்ண சயனைடு வாங்கி இருக்காங்க இப்போ அந்த பொண்ணு சாப்பிடுற சாப்பாட்டுல சயனைடு கலந்து இருக்காங்க , அந்த சயனைடு கலந்த சாப்பாட்ட அஸ்வதி சாப்பிடணும் அப்புறம் அந்த பொண்ணு செத்துப் போகணும் அப்புறம் அஸ்வதியோட சொத்து எல்லாம் இ்வங்க பேருக்கு வரனும் அதான் இவங்க ரெண்டு பேரோட பிளான்…….
என்று அவர்கள் இருவரும் போட்ட பிளானை ஒன்று விடாமல் அந்த நீதிபதியிடம் மதன் கூறினான்……..
மதனின் வாக்குமூலத்தை கேட்ட நீதிபதி சார்ஜ் சீட்டு கொண்டு வாங்க என்று அந்த கேசின் சார்ட் சீட்டை படித்துப் பார்த்தார்……
அதில்……
பாரன்சிக் ரிப்போர்ட்டின்படி சாப்பாட்டில் சயனைடு இருந்ததற்கான ஆதாரம் , பீட்டருடன் சுலோச்சனா பேசிய கால் ரெக்கார்டிங்ஸ், கொலை செய்ய தூண்டியதற்கான காரணங்களான சொத்து, பொறாமை, குடும்ப விரோதம் மற்றும் இந்த வழக்கின் முக்கிய சாட்சியான பீட்டரின் பெயரும் அதில் இருந்தது……
அந்த சார்ஜ் சீட்டை அங்கு இருந்த மாஜிஸ்ட்ரேட் ஏற்றுக்கொண்டார்…..
மிஸஸ் சுலோச்சனா உங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் புரியுதா?
புரியுது மை லார்ட் …….
அதன் பிறகு அரசு வழக்கறிஞர் சுலோச்சனாவிடமும் அனந்திடமும் தனித்தனியாக ஒவ்வொரு கேள்விகளயும் சரமாரியாக கேட்டார் …….
அந்த கேள்விகள் பின்வருமாறு…..
இந்த சாப்பாட்ட தயாரிக்க உத்தரவிட்டது யாரு?
யாரும் உத்தரவு போடல சார்….
சரி உங்களுக்கு யாரும் உத்தரவு போடல, இப்படி சைனைட் சாப்பாட்டில கலந்து குடுத்தா செத்து போயிடுவாங்க அப்படிங்கற இந்த விஷயம் பத்தி உங்களுக்கு அறிவு இருந்ததா?
ஆமா சார்…..
நீங்க இதை யார் கிட்ட இருந்து கத்துக்கிட்டீங்க?
அது……..
இங்க உண்மைய மட்டுதான் பேனும் சோ ஒழுங்கா உண்மைய சொல்லுங்க….
நா தான் எங்க அம்மாவுக்கு சைனைட் சாப்பாட்டில் கலந்து கொடுத்தா செத்து போயிடுவாங்க அப்படின்னு சொல்லி கொடுத்தேன் என்று அனந்தி கூறினாள்…..
சரி எதுக்கு அப்படி பண்ணீங்க ரெண்டு பேரும்? உங்க வீட்டில சொத்து பிரச்சனை இருந்ததா?
சார் எனக்கு அஸ்வதி என்னோட அப்பாவோட சொத்த அனுபவிக்கிறது எனக்கு பிடிக்கல அதனால அவ்வளவு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து கொள்ள பார்த்தோம்…….
அவ்வளவு தான் மை லார்ட் இவங்க ரெண்டு பேர் வாயாலே உண்மையை ஒத்துக்கிட்டாங்க சோ கேஸ் கிளோஸ் அதனால இவங்களுக்கு அதிகபட்ச தண்டனையா ஆயுள் தண்டனை கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்…..
அப்பொழுது திடீரென்று ஒருவர் வந்து அப்ஜெக்ஷன் மை லார்ட் என்று சுலோச்சனா மற்றும் அனந்தி பக்கம் பேச டிபன்ஸ் லாயர் வந்தார் அவர் எப்படி வந்தார் என்று அனத்தி மற்றும் சுலோச்சனா ஆச்சரியமாக பார்க்க அவருக்கு பின்னால் சுலோச்சனாவின் தாயார் லீலாவதி நின்றார்…….
மை லார்ட் என்னுடைய கிளென்ட் சாப்பாட்டுல விஷம் கலந்தது உண்மைதான், ஆனா யாருமே அத சாப்பிடலையே அதனால எந்த உயிரும் போகலையே அதனால என்னுடைய கிளைன்ட்டுக்கு குறைந்தபட்ச தண்டனை கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்…..
டிபன்ஸ் லாயரின் அந்த கூற்றை எதிர்த்து அரசு வழக்கறிஞர் வாதாடினார்……
மை லார்ட் சாப்பிட்டார்களா இல்லையா என்பது முக்கியம் இல்லை.கொல்லும் எண்ணத்துடன் விஷம் கலந்ததே பெரிய குற்றம் , அதனால் இவர்கள் இருவருக்கும் அதிகபட்ச தண்டனையான ஆயுள் தண்டனையை கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்…….
அப்பொழுது நீதிபதி சுலோச்சனாவிடம் அனந்திடமும் சில கேள்விகள் கேட்டார்…..
நீதிபதி : போலீஸ் வரலனா அந்த பொண்ணு உயிரோட இருப்பாளா?
சுலோச்சனா : இல்ல செத்துருப்பா…..
நீதிபதி : ஏன் இவ்வளவு கொடிய விஷத்தை தேர்ந்தெடுத்தீங்க?
சுலோச்சனா : எனக்கு அந்த அஸ்வதி உயிரோட இருக்கக் கூடாது அதான் ஒரேடியா உயிர் போற மாதிரி சைனைட் விஷத்த தேர்ந்தெடுத்தேன்……
நீதிபதி : இது திடீர் சம்பவமா? இல்ல முன்கூட்டியே திட்டமிட்டதா?
சுலோச்சனா : நானும் என்னோட பொண்ணும் ஒரு மாசமா இந்த இந்த விஷயத்த பத்தி பிளான் போட்டோம்…..
இறுதியாக நீதிபதி தனது தீர்ப்பை கூறினார்…….
ஒரு உயிர் போகும் வரைக்கும் இந்த நீதிமன்றம் அமைதியாக இருக்க முடியாது……
ஒரு உயிர் போன பிறகுதான் நீதிமன்றம் தண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.உயிரைக் கொள்ளும் எண்ணமே குற்றம்……
ஒரு உயிர் போகும் வரைக்கும் காத்திருக்க நீதிக்குக் கடமை இல்லை சாட்சிகள், மருத்துவ அறிக்கைகள்,மற்றும் குற்றவாளிகளின் நோக்கம் எல்லாவற்றையும் பரிசீலித்த பின்,இந்த நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வருகிறது.சாப்பாடு சாப்பிடப்படவில்லை என்பதாலே குற்றம் இல்லையென்று ஆகிவிடாது,கொலை செய்யும் எண்ணத்துடன் விஷம் கலந்த அந்த நிமிடமே மனிதத்தன்மை கொல்லப்பட்டது.
அதனால்………
கோர்ட் முழுக்க அமைதியானது , நீதிபதி என்ன சொல்ல போகிறார் என்று அனைவரும் காத்திருக்க நீதிபதி மேலும் பேசினார்……
குற்றம் சாட்டப்பட்ட சுலோச்சனா மற்றும் அனந்தி ஆகிய இருவரும் இந்த நீதிமன்றத்தால்,
இந்திய தண்டனைச் சட்டத்தின்
307-வது பிரிவு —கொலை செய்ய முயற்சி
328-வது பிரிவு —விஷம் கொடுத்து தீங்கு செய்யும் குற்றம்,
மற்றும் 120B-வது பிரிவு —குற்றச் சதி,
இந்த மூன்று பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படுகின்றனர் எனவே இவர்கள் இருவருக்கும் பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனைமற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இரண்டு லட்சம் அபராத தொகை செலுத்த வேண்டும் என்று நான் தீர்ப்பு விதிக்கிறேன் ……
என்று அந்த நீதிபதி தீர்ப்பு கூறினார்…..
சுலோச்சனா மற்றும் அனந்தியின் கைகளில் விலங்கு மாட்டி ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்……..
அனந்தி மற்றும் சுலோச்சனா கையில் விலங்குடன் செல்வதை கண்களில் கண்ணீரோடு அஸ்வதி பார்த்துக் கொண்டு நின்றாள்……
அப்பொழுது அஸ்வதியின் தோள்களில் யாரோ கை வைப்பது போன்ற உணர்வு அவள் திரும்பிப் பார்த்தாள் மதன்குமார் நின்று கொண்டிருந்தான்…….
மேடம் நீங்கதான் அஸ்வதியா?
ஆமா சார்…..
நீங்க தான் இந்த ஆசிரமத்தில் வளர்ந்த பொண்ணா?
ஆமா சார்……
நீங்கதான் விஹானோட லவ்வரா?
ஆமா சார் விஹான உங்களுக்கு எப்படி தெரியும்?
எனக்கு ஹர்ஷத்தயும் ரொம்ப நல்லா தெரியும்…….
ஹர்ஷாவ தெரியுமா?எப்படி சார் உங்களுக்கு இவங்க எல்லாம் தெரியும்?
அஸ்வதி அவ்வாறு கேட்கவும் மதன் சிரித்து விட்டான்…….
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது மதன் உயரத்திற்கு ஏற்ப காக்கி உடைய அணிந்த பெண் போலீஸ் ஒருவர் ஓடி வந்து அஸ்வதியை கட்டியணைத்துக் கொண்டார்…….
அஸ்வா எப்படி இருக்கடி?
நா நல்லா இருக்கேன், ஆமா நீங்க யாரு?என்னோட பேரு உங்களுக்கு எப்படி தெரியும்?
அஸ்வதி அவ்வாறு கேட்கவும் மதன் மற்றும் அதை காக்கி உடை அணிந்து வந்த பெண் போலீஸ் இருவரும் இணைந்து சிரித்தனர்……
ஏன் ரெண்டு பேரும் சிரிக்கிறீங்க? எனக்கு ஒண்ணுமே புரியல…நீங்க ரெண்டு பேரும் யாரு ?என்ன பத்தி விஹான பத்தி, ஹர்ஷத்த பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்?
அடியே இவளே என்னோட நேம் பேட்ச்ல என்ன பேர் போட்டு இருக்கு?
வள்ளியம்மைன்னு போட்டுருக்கு…..
அடியே அடியே…..நாதான்டி வள்ளி உன்னோட சின்ன வயசு ஆசிரம ப்ரெண்ட் என்று அவர்கள் அனைவரும் ஆசிரம நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அந்த பெண் போலீஸ் அஸ்வதியிடம் காட்டினார்……..
அதைப் பார்த்த அஸ்வதி வள்ளியை கட்டி அணைத்துக் கொண்டு அழுதாள்…..
வள்ளி எப்படி இருக்க நம்ம ஆசிரமத்தையும் , உங்களயும் நான் தேடாத நாள் இல்ல தெரியுமா? இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க?
ஹலோ ஹலோ நா யாருன்னு உனக்கு தெரியுதா?
அஸ்வதி அவனின் நேம் பேட்ச்சை பார்த்தாள்…..
அதில் மதன் குமார் என்று இருந்தது…..
டேய் மதனு…..என்று அஸ்வதி மதனை அவன் உயரத்திற்கு ஏற்ப குதித்து அவனை கட்டியணைத்துக் கொண்டாள்…….
அவர்கள் இருவரையும் சேர்த்து வள்ளி கட்டி அணைத்து கொண்டாள்…..
அஸ்வதி நீண்ட நேரம் தன்னுடைய பால்ய கால நண்பர்களை பார்த்து அழுதாள்……
ஹலோ ஹலோ மிசஸ் விஹான் நீங்க ரொம்ப நேரம் அழுதா உங்களுக்கு வீசிங் வரும்ன்னு உங்க புருசர் சொன்னாரு சோ அழுகை போதுமே…..
ஆமா மதன் என்னோட விஹான உனக்கு எப்படி தெரியும்?
தொடரும்…….
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……..
💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

