Loading

காதல் – 5

                    அஸ்வதி மயக்கம் தெளிந்து பார்க்கும்போது அவள் விஹானின் மார்பினில் சாய்ந்து கொண்டு இருந்தாள்….

அதை உணர்ந்து அவள் எழப்போக அவளால் முடியவில்லை , அவள் அவனின் மார்பினில் இருந்து எழ முடியாமல்  சிரமப்படுவதை பார்த்த விஹான் அவளை நேராக அமர வைத்தான்…..

அஸ்வதி இப்போ நீங்க ஓகேதான?

இப்போ பரவாயில்ல விஹான், ரொம்ப நாள் கழிச்சு புதுசா புது மூச்சு காத்த சுவாசிக்கிற மாதிரி இருக்கு என்று அவள் அழகாக அவனை பார்த்து சிரித்தாள்….

அஸ்வதி புது மூச்சு காற்று என்று கூறவும் விஹான் , யாருமரியாமல் மென்மையாக சிரித்து கொண்டான்…

சரி அப்போ இப்போ சொல்லு உனக்கு என்ன பிரச்சனை?
நாங்க இருக்கோம் , நீ தைரியமா சொல்லு நாங்க ரெண்டு பேரும் யாருக்கிட்டயும் சொல்ல மாட்டோம் …..

விஹான்னா அது …..

தான் இங்கு இருப்பதால்தான் அஸ்வதி அவளின் பிரச்சனையை சொல்ல தயங்குகிறாள் என்று எண்ணிய விஹான் ….

நா வாரேன் நீங்க பேசுங்க என்று அவன் அந்த இடத்தில் இருந்து எழப்போக அஸ்வதி அவனின் கைகளை பிடித்து கொண்டாள்….

நீங்களும் இருங்க என்று அவள் கேட்கவும் அவனும் அவள் அருகினில் அமர்ந்தான்….

நடுவில் அஸ்வதி அமர்ந்திருக்க , இடது பக்கம் விஹானும் வலது பக்கம் விஹான்னாவும் அமர்ந்து கொண்டு இருந்தார்கள்…..

அஸ்வதி இருவரின் கைகளையும் பிடித்து கொண்டாள்….

எங்கிட்ட யாரும் இதுவரை எனக்கு என்ன பிரச்சனை, நா ஏன் இப்படி இருகேன்னு கேட்டது இல்லப்பா, அதான் எனக்காக ஒருத்தங்க நேரம் ஒதுக்கி என்னோட கதைய கேக்க போறாங்கன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று அவள் அவர்கள் இருவரின் கைகளையும் இறுக்கமாக பிடித்து கொண்டாள்…..

சரி இப்போதான் நாங்க ரெண்டு பேரும் உனக்காக இருக்கோமே சோ நீ சொல்லு…

விஹான்னா , என்னோட அம்மாவுக்கும் என்னோட தங்கச்சிக்கும் என்ன சுத்தமா பிடிக்கவே பிடிக்காது….

அதான் தெரியுமே….

விஹான்னா அஸ்வதி பேசட்டும் நீ சும்மா இரு , நீங்க சொல்லுங்க ….

என்ன எப்பவும் திட்டிட்டு அடிச்சிட்டே இருப்பாங்க , ஏன்னு கேட்டா சொல்ல மாட்டாங்க….

அஸ்வா அவங்க உன்ன பெத்த அம்மாதான அப்புறம் ஏன் உன்மேல அவங்களுக்கு இவ்வளோ வெறுப்பு?

என்ன யாரு பெத்தாங்கன்னு எனக்கே தெரியாது என்று அஸ்வதி சிரித்தாள்….

என்ன சொல்லுற அஸ்வதி?

ஆமா விஹான் , என்ன  ஒரு அனாதை இல்லத்தில இருந்துதான் இவங்க அடோப்ட் பண்ணாங்க அப்போ எனக்கு அஞ்சு வயசு அந்த இல்லத்துல நா ரொம்ப சந்தோஷமா இருந்தேன் அன்னைக்கு ஒரு நாள்  நானும் என்னோட பெஸ்ட் பிரண்ட் துவாயியும் ஓடி பிடிச்சி விளையாடிட்டு இருந்தோம் அப்போ  வானியம்மா வந்து உங்க ரெண்டு பேரயும் பாக்க ரெண்டு பேரு வந்திருக்காங்கன்னு சொன்னாங்க  நாங்களும் எங்களுக்கு புது டிரஸ் அண்ட் ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வந்துருக்காங்கன்னு வேகமா ஓடினோம் அங்க சிஸ்டர் ரூம்ல சுலோச்சனா அம்மாவும் , தேவராஜ் அப்பாவும் உக்காந்துட்டு இருந்தாங்க ….

நானும் துவாயியும் அவங்கக்கிட்ட ஓடி போய் …….

( ஃபிளாஷ் பேக்)

ஹாய் அங்கிள் , ஹாய் ஆன்ட்டி மை நேம் இஸ் அஸ்வதி ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் ஏ செக்சன், ஹாய் ஆன்ட்டி அங்கிள் மை நேம் இஸ் துவாயி ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் ஏ செக்சன் என்று இருவரும் அவர்களை பார்த்து அழகாக தங்கள் மழலை மொழியில் சிரித்தனர் ……

ஹலோ செல்லக்குட்டிகளா , நீங்க ரெண்டு பேரும் எங்கக்கூட எங்க வீட்டுக்கு வாரீங்களா?

வாரரோமே, ஆனா எங்களுக்கு ரெட் கலர் டெடி வாங்கி தருவீங்களா?

எத்தனை ரெட் கலர் டெடி வேனும்?

ஒரு ஆறு போதும்….

ஏன் ஆறு?

எங்க இல்லத்துல ஆறு பேருதான் இருக்கோம் அதான் ஆறு என்று இருவரும் சிரித்து கொண்டே கூறினார்கள்….

சரிடா கண்ணா நா வாங்கி தாரேன் என்று தேவராஜ் கூறினார்….

தேவா உங்கக்கிட்ட கொஞ்சம் பேசனும், கொஞ்சம் வாங்க என்று சுலோச்சனா தேவராஜை தனியாக அழைத்து சென்றார் பிறகு அவர்கள் இருவரும் திரும்பி வந்தனர்…..

சிஸ்டர் நாங்க அஸ்வதிய மட்டும் அடாப்ட் பண்ணிக்கிறோம் என்று சுலோச்சனா கூற அந்த சிஸ்டர் தயங்கினார்….

அது வந்துங்க மேடம் , ரெண்டு குழந்தைகளும்  சின்ன வயசுல இருந்தே ஒன்னா வளந்தவங்க அதான் பிரிச்சா ரொம்ப தவிச்சி போயிடுவாங்க ….

அதுக்குன்னு இந்த கருப்பு பொன்ன என்ன அடாப்ட் பண்ண சொல்லுறீங்களா?

மேடம் ஒரு நிமிஷம் , துவா, ஆஸ்வா கொஞ்ச நேரம் ஊஞ்சல் ஆடிட்டு வாரீங்களா?

ஓகே சிஸ்டர் என்று இருவரும் வெளியே ஓடி விட்டனர்…..

என்ன மேடம் சின்ன குழந்தை முன்னால போய் நீ கருப்பு அதான் உன்ன நா தத்து எடுக்கலன்னு சொல்லுறீங்க அவ மனசுல அது ஆழமா பதிஞ்சா அது கஷ்டம் …..

அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு அஸ்வதி மட்டும்தான் வேனும் ….

தங்கள் இல்லத்தில் வளர்ந்த ஒரு குழந்தை மேம்பட்ட வாழ்க்கைக்கு போக வேண்டும் என்று அந்த சிஸ்டர் அஸ்வதியை சுலோச்சனா , தேவராஜ் உடன் அனுப்பி வைத்தார் ….

அஸ்வதி துவாயியை பார்த்து அழுது கொண்டே சென்றாள் , துவாயியும் அதே நிலைதான் அவர்களின் கார் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்து அழுது கொண்டே இருந்தாள்……

அஸ்வதியை சுலோச்சனா மற்றும் தேவராஜ் அவர்களின் வீட்டிற்க்கு அழைத்து சென்றார்கள்….

ஆன்ட்டி இவ்வளோ பெரிய வீடா உங்க வீடு?

ஆன்ட்டி இல்ல , என்ன நீ அம்மான்னு கூப்பிடு….

ஓகே அம்மா , இந்த வீடு யாருக்கு?

அஸ்வதி முதன் முதலாக சுலோச்சனாவை அம்மா என்று அழைக்கவும் அவர் அவளை அப்படியே அனைத்து கொண்டார் ….

இன்னொரு தடவை என்ன அம்மான்னு கூப்பிடு அஸ்வா…..

அம்மா என்று மழலை கொஞ்சும் மொழியில் அவள் அழைத்தாள்….

இன்னும் ஒரே ஒரு தடவை என்ன அம்மான்னு கூப்பிடு அஸ்வா…..

அம்மா…
அம்மா…
எத்தனை தடவை கூப்பிட?
நீங்க இன்னும் நா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்ல ….

ஆமாடா கண்ணா இந்த வீடு நமக்குத்தான் என்று தேவராஜ் அங்கு வந்தார்….

ஹை சிம்மிங் ஃபுல் என்று அஸ்வதி அந்த நீச்சல் குளத்தை பார்த்து குதுகலித்து கொண்டு இருந்தாள்….

சரிடா கண்ணா இப்போ வீட்டுக்கு  உள்ள போகலாமா?

போவோம் அங்கிள்….

அவங்க உனக்கு அம்மான்னா நா உனக்கு அப்பாடா அஸ்வா கண்ணா , என்ன அப்பான்னு கூப்பிடு பாப்போம்…..

அப்பா….

தட்ஸ் மை கேர்ள் என்று அவர் அவளை தூக்கி கொண்டு தங்களது வீட்டிற்குள் அழைத்து சென்றார்……

அப்பா இந்த வீடு ரொம்ப அழகா இருக்கு….

உனக்கு புடிச்சிருக்குல்ல?

ஆமா அப்பா ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு…..

சரி இப்போ நீங்க என்ன சாப்பிடுறீங்க?

எனக்கு ஒரு முட்ட சோறு வேனும்….

முட்ட சோறா?
அது எப்படி இருக்கும்?

தேவராஜ் அவ்வாறு கேட்கவும் அஸ்வதி தன் மழலை கொஞ்சும் சிரிப்பை சிரித்தாள்….

அப்பா உங்களுக்கு முட்ட சோறு தெரியாதா?

தெரியாதே….

டெய்லி எங்களுக்கு ஹோம்ல முட்ட சோறுதான் குடுப்பாங்க , எனக்கு அதை செய்யக்கூட தெரியும் ….

உனக்கு செய்ய தெரியுமா?
யாரு சொல்லி குடுத்தா?

அம்மா , அன்னைக்கு வாணி அம்மா முட்ட சோறு செஞ்சிட்டு இருந்தாங்களாம் அப்போ இந்த துவாயி இருக்கால்ல அவ அவங்க பக்கத்துல போய் அவங்க செய்யுறதை பாத்துட்டு வந்து எனக்கு சொல்லி குடுத்தா….

சரி எனக்கும் நீ முட்ட சோறு எப்படி செய்யனும்ன்னு சொல்லி குடு நானும் உனக்கு செஞ்சு தாரேன் என்று சுலோச்சனா கூறினார்…..

அம்மா அது ரொம்ப ரொம்ப ஈஸி ஃபர்ஸ்ட் அடுப்பு ஆன் பண்ணனும் அப்புறம் சட்டிய வைக்கனும் அதுல ஆயில் கொஞ்சமா ஊத்தனும் அப்புறம் சாதத்தை உள்ள போட்டு நல்லா கிண்டனும் அதுக்கு அப்புறம் நடுவுல ஒரு குழி மாதிரி போட்டுட்டு ஏழு முட்டைய ஓடச்சி ஊத்தனும் அப்புறம் முட்டை , சோறு எல்லாம் நல்லா கின்டனும் அவ்வளோதான் முட்ட சோறு ரெடி ……

வாவ் சூப்பரா செய்முறை சொல்லுறியே ….

அப்பா இப்போ துவாயி சாப்பிட்டுருப்பாளா?

ஆமா சாப்பிட்டுருப்பாடா….

அப்பா துவாயிய ஏன் நீங்க கூப்பிடல?
அவ கருப்பா இருக்கான்னா?
அவ என்னோட பெஸ்ட் பிரண்ட் தெரியுமா என்று அஸ்வா அழ ஆரம்பித்தாள்…..

அஸ்வா அழ கூடாது இந்தா இந்த பிரியாணிய சாப்பிடு என்று சுலோச்சனா அவளுக்கு பிரியாணி கொடுத்தார்…..

ஹே பிரியாணி , பிரியாணி என்று அஸ்வா அதை எடுத்து உன்ன ஆரம்பித்தாள்….

ஆமா அம்மா இன்னைக்கு யாருக்கு ஹாப்பி பர்த்டே?
யாரு உங்களுக்கு பிரியாணி கொடுத்தா?
நாங்க பிரேயர் பண்ண வேண்டாமா?
அதுக்குள்ள நீங்க சாப்பிட சொல்லுறீங்க?

ஏன் யாருக்காவது ஹாப்பி பர்த்டேன்னாதான் பிரியாணி சாப்பிடுவீங்களா?

ஆமா அப்பா யாருக்காவது ஹாப்பி பர்த்டேன்னா ஒரு பெரிய அண்டா நெறய பிரியாணி கொண்டு வருவாங்க பெரிய ஆட்டோல அந்த ஹாப்பி பர்த்டே பெர்சன் அண்ட் அவங்க அப்பா அம்மா எங்கக்கிட்ட அவங்க ஹாப்பி பர்த்டே பையனுக்காக பிரேயர் பண்ண சொல்லுவாங்க நாங்களும் பிரேயர் பண்ணுவோம் அப்புறம் சாக்லேட், கேக், பிரியாணி குடுப்பாங்க என்று அஸ்வா சாப்பிட்டு கொண்டே கூறினாள்….

இனி உனக்கு அம்மா டெய்லி பிரியாணி செஞ்சு தாரேன் என்று சுலோச்சனா அவளின் நெற்றியில் முத்தமிட்டார்….

தேங்க்ஸ் அம்மா என்று அஸ்வா சிரித்து கொண்டே சாப்பிட்டு கொண்டு இருந்தாள்…..

இவ்வாறு அஸ்வா அந்த வீட்டில் செல்ல பிள்ளையாக மாறிப்போனாள், அவளை பணக்காரர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் சேர்த்து விட்டார்கள் , அவள் நினைத்துக்கூட  பார்த்திடாத பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்தார்கள்…..

அஸ்வா அவர்களின் பாசமலையில் திக்கி திளைத்தாள்……

இப்பொழுதெல்லாம் அஸ்வா வாயில் இருந்து எப்பொழுதுமே அம்மா அப்பா என்ற வார்த்தைகள் மட்டுமே தான் வந்து கொண்டிருந்தது …..

அவர்களும் இவளை கையில் வைத்து தாங்கினார்கள்…..

அந்த பெரிய மாளிகையில் முடி சூடா சிறிய இளவரசியாக அவள் வலம் வந்தாள்…..

எல்லா விழாக்களுக்கும் அஸ்வாவை அவர்கள் இருவரும் அழைத்து சென்றார்கள் , இவளை அவர்களின் மகள் என்று கூறுவதில் சுலோச்சனா மற்றும் தேவராஜ்க்கு அத்தனை  மகிழ்ச்சி மற்றும் பெருமை…..

அன்று ஒரு நாள் சுலோச்சனா தாயார் லீலா அவர்கள் வீட்டிற்கு வந்தார்…..

அவர் காலிங் பெல்லை அடித்துக் கொண்டிருந்தார்….

அஸ்வதி தான் போய் கதவைத் திறந்தாள்…..

ஹலோ நீங்க யாரு நீங்க எதுக்கு எங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்க?

அஸ்வதியை பார்த்த உடன்   சுலோச்சனாவின் அம்மா லீலாவின் முகத்தில் கோபம் பரவியது……

அஸ்வதி அவ்வாறு கேட்கவும் அவளின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார் , அவர் அறைந்த அறையில் அஸ்வதி கீழே போய் விழுந்தாள்……

அவளின் சிறுவயதின் காயத்திற்கு மருந்தாக இவன் வருவானா?

தொடரும்…..

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…..

💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
12
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. ஆசிரம நிர்வாகி துவாயியை குறித்து கூறிய சொற்களிலேயே அவரின் குணம் கண்டு தத்து கொடுக்க மறுத்து இருக்கவேண்டும்.
    சமூகத்தின் முன் நல்ல மதிப்புடன் தாங்கள் இருக்க காரணமாக திகழ்வதால் மட்டுமே அஸ்வாவை அவர் சகித்துள்ளார்.
    துவாயி அஸ்வா நட்பு அழகு. இளவரசியாக வலம் வந்த வீட்டினில் இன்று மனிஷியாக கூட மதிப்பற்று இருக்கிறாள் பாவம்.
    அஸ்வா வாழ்வில் துவாயி மீண்டும் இடைபடுவாளா? பார்ப்போம்.

    1. Author

      பாக்கலாம்…..
      , Thanks for your valuable comments 😇

    2. aswathiya thathu kotuthurka kutathu.. ipa ava tha kasta patura

      1. Author

        Aama pa😔
        Thanks for your valuable comments 😇

    1. Author

      Ama ….
      Thank you for your valuable comments 😇