
காதல் – 34
அஸ்வதி மற்றும் விஹான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து இருவரும் காதலாக இணைந்து சமைத்து சாப்பிட்டு விட்டு அவளுக்காக அவள் தூங்குவதற்காக மட்டுமே அவன் பாட்டு பாடி அவளை தூங்க வைத்தான்…..
அஸ்வதி தன்னுடைய காதலனின் இனிமையான குரலிலும் அவனின் காதலிலும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்……
முதலில் விஹான் தான் கண் விழித்து தன் மடியில் நிம்மதியாக உறங்கும் தன் காதலியை பார்த்தான்……
அவன் கண் விழித்து பார்க்கும்போது அஸ்வதி அவனின் வயிற்றை கட்டி பிடித்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்…….
பிறகு விஹான் மணியை பார்த்தான் அது இரவு ஏழு மணி என காட்ட அவன் அஸ்வதியின் தூக்கம் கலையாதவாறு அவளை மெதுவாக சோபாவில் படுக்க வைத்து விட்டு வீட்டில் அவனின் தாயார் போட்டுவிட்டு சென்ற அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வந்தான் , அஸ்வதி அப்பொழுதும் கன் விழிக்கவில்லை…..
பிறகு விஹான் அஸ்வதியை தன்னுடய அறைக்கு அழைத்து சென்றான்….
அவன் அஸ்வதியை தன்னுடைய அறைக்கு அழைத்துச் செல்லவும் அஸ்வதி கண் விழித்து விட்டாள்…..
செல்லக்குட்டி தூங்கி முழிச்சிட்டியா?
ஆமா விஹான் , இன்னைக்கு உங்க மடியில் தூங்குனது ரொம்ப நல்லா இருந்துச்சு, ரொம்ப நிம்மதியா தூக்கம் வந்துருச்சு ரொம்ப தேங்க்ஸ் என்று அஸ்வதி அவனின் கன்னங்களை பிடித்து செல்லமாக கிள்ளினாள் …..
அவன் கன்னத்தை கிள்ளி விளையாடி கொண்டு இருந்த அஸ்வதியின் இரு கைகளையும் விஹான் பிடித்துக் கொண்டு அவளை செல்லமாக முறைத்தான்……
எதுக்கு இப்ப என்ன பாத்து முறைக்குறீங்க?
இப்போ நீ என்ன பாத்து என்ன சொன்ன?
என்ன சொன்னேன்? தேங்க்ஸ் சொன்னேன் , அதுக்கு என்ன இப்போ?
நா யாரு?
முகமது விஹான்…..
அடியே என்னோட செல்ல காதலியே , என்னோட பேர நா கேக்கல ……
பின்ன நா யாருன்னா என்ன அர்த்தம்?
நா உனக்கு யாரு?
“என் காதல் மன்னவன்”……
“என் கனவில் புகுந்த கள்வன் “….
“என்னிடம் கேட்காமலே என் இதயத்திற்குள் நுழைந்த காதல் திருடன்”…..
“என் மனம் கவர்ந்த என் காதலன்”…..
ஹே அஸ்வி அழகா கவிதை சொல்லுறம்மா…..
இது கவிதை மாதிரியா இருக்கு?
ஆமாடா செல்லம் ஒரு அழகிய கவிதை இன்னொரு அழகிய கவிதை வடித்து இன்று தான் பார்க்கிறேன், நா உனக்கு இவ்வளவு ஸ்பெஷலான பெர்சன் தான எனக்கு நீ தேங்க்ஸ் எல்லாம் சொல்லுவியா?
நா தேங்க்ஸ் சொல்லிட்டிடேனே இப்போ என்ன பன்றது? வாபஸ் வாங்கிடவா?
நானே வாபஸ் வாங்கிக்குறேன் என்று அவன் அவளின் அழகிய முகத்தை தன் கைகளில் ஏந்தி கொண்டு அவளின் இதழை சிறை செய்தான்…….
அதில் அஸ்வதி அவனின் சட்டையை இறுக்கமாக பிடித்து கொண்டாள்……
நீண்ட இதழ் முத்தத்திற்கு பிறகு அவன் அவளை விடுவித்தான்…..
அவளுக்கு அவனின் முகத்தை பார்க்க வெக்கம் தடை போட அவன் அவனின் மார்பினில் முகம் புதைத்துக் கொண்டாள்……..
அவளின் வெக்கம் நிறைந்து சிவந்த முகத்தை விஹான் நிமிர்த்தி பார்த்தான் ………
அஸ்வதியின் கண்களில் அவனுக்கான வெக்கமும் காதலும் கலந்து போட்டி போட்டு கொண்டு அவளை முகம் சிவக்க, உடல் சிலிர்க்க வைத்து கொண்டு இருந்தது……
“உன்னை கண்டேனே
முதல் முறை நான் என்னை
தொலைத்தேனே முற்றிலுமாய்
தான் காதல் பூதமே என்னை
நீயும் தொட்டாய் ஹய்யோ
ஹய்யயோ அச்சம் வருதே
தப்பி செல்லவே வழிகள் இல்லை
இங்கே ஹய்யோ ஹய்யயோ
என்னவோ பண்ணினாய் நீயே”……
தூரத்தில் எங்கோ கேட்ட பாடல் அவளின் மனதை அவனுக்கு கூறுவது போல இருந்தது……
அஸ்ஸ்வி…….
ம்ம்ம்ம்ம்ம்ம்……
சொல்லுங்க…..
ஏன்டி நீ இவ்வளோ அழகா இருக்க?என்னால முடியலடி என்று அவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்து கொண்டு பேசினான்…..
“நிஜமுள்ள பொய்
இது நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது
மரணத்தின் வால் இது
அந்தரத்தின் கடல் இது
கட்டி வந்த கனவு இது
அகிம்சையில் கொல்லுவது
ஏன் பெண்ணே”……
அவனின் மனதை அந்த பாடல் வரிகள் அவளிடம் கூறியது…..
அவனின் மீசை மற்றும் தாடி அவளின் கழுத்தில் உரச அவளின் மேனி கூச அவளுக்கு இதுவரை இல்லாத புது வித உணர்வுகள் கிளர்ந்து கொண்டு இருந்தன அந்த உணர்வுகளின் கணம் அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் அவளின் உதட்டை கடிக்க அதில் அவளின் உதடுகள் இரத்த சிவப்புக்கு மாற அந்த உதடுகளுக்கு அவன் இதழால் விடுதலை அளித்தான்…….
பிறகு அஸ்வதிக்கு மூச்சு விட வேண்டும் என்று எண்ணி அவன் மனமே இல்லாமல் அவளின் இதழை விடுவித்தான்……
அஸ்வி என்ன கல்யாணம் பண்ணிக்கோ……
சரி எப்ப பண்ணிக்கலாம் ? என்று அவள் அவனின் தோள்களில் சாய்ந்து கொண்டே அவன் முகத்தை பார்த்து கேட்டாள்……
அவளின் கேள்வியில் விஹான் ஆச்சர்யமாக அவளை பார்த்தான்…..
அஸ்வி எனக்கு இப்ப வேலை இல்ல, நா சஸ்பென்ஷன்ல இருக்கேன் , ஆனா எப்படி நீ நா கேட்ட உடனே சரின்னு சொல்லுற??
நீங்க கண்டிப்பா வேலைக்கு திரும்பவும் போவீங்க , நம்ம கல்யாணம் பன்னிப்போம் அப்புறம் உங்கள மாதிரி எனக்கு நாலு பசங்க வேனும் என்று அவள் அவனின் மார்பினில் சாய்ந்து கொண்டாள்……
நாலு பசங்க வேனுமா?
ஆமா …..
நம்ம வேனா இப்படி பண்ணலாமா?
எப்படி?
ஃபர்ஸ்ட் உன்ன மாதிரி ரெண்டு பொண்ணுங்க பெத்துக்கலாம் அப்புறம் ரெண்டு பசங்க பெத்துக்களாம் என்ன??
அவன் அவ்வாறு கூறவும் அஸ்வதி சிறிது நேரம் யோசித்து கொண்டு இருந்தாள்……
என்னடி செல்லமே அவ்வளோ யோசனை?ஓகே சொல்லுடி செல்லக்குட்டி எனக்கும் உன்ன மாதிரி பொன்னு வேனும்…..
சரி ஓகே நீங்க சொன்ன மாதிரியே ரெண்டு பொண்ணு , ரெண்டு பசங்க ஓகேவா??
ஓகேடி மை டியர் செல்ல அஸ்வி என்று அவன் அவளை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டான்…….
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது……
விஹான்தான் கதவை திறந்தான்…..
சுலோச்சனா மற்றும் அனந்தி இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு தேவராஜை அவர்கள் இருவருக்கும் துணையாக வைத்து விட்டு சித்திக் , பீவி, விஹான்னா மூவரும் வீட்டுக்கு வந்தனர்……
விஹான் ரொம்ப பசிக்குதுடா எதாவது செஞ்சு வை நாங்க ஃப்ரெஷ் ஆகிட்டு வரோம் என்று அவர்கள் மூவரும் சென்றனர்……
விஹான் மற்றும் அஸ்வதி இருவரும் இணைந்து ஒன்றாக சமைத்தனர், சப்பாத்தி மாவு எப்படி பிசைய வேண்டும் , எப்படி உருட்ட வேண்டும் , எப்படி கல்லில் போட்டு எடுக்க வேண்டும் என்று ஒவ்வொன்றாக விஹான் அஸ்வதிக்கு சொல்லி கொடுத்தான்……
அவன் சொல்லி கொடுத்தது போலவே அஸ்வதி அழகாக சப்பாத்தி மாவு பிசைந்து ,மாவை உருட்டி , தேய்த்து கல்லில் போட்டு எடுத்து அவனிடம் காட்டினாள்……
சூப்பர்டா செல்லம் சப்பாத்தி செய்யுறது உனக்கு தெரிஞ்சிடுச்சு அடுத்து உருளைக்கிழங்கு , பட்டானி போட்ட குருமா எப்படி வைக்கனும்ன்னு சொல்லி தாரேன் என்று அவன் அவளுக்கு சொல்லி கொடுத்தான்…..
ஃபர்ஸ்ட் தேங்காய், சோம்பு அப்புறம் கொஞ்சம் முந்திரிய கொஞ்சம் தண்ணி சேத்து நைசாக அரைச்சிப்போம் என்று அந்த கலவையை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக எடுத்து வைத்து கொண்டான் ……
அப்புறம் ஒரு வாணலியில எண்ணெய் கொஞ்சமா ஊத்தி காஞ்சதும் கடுகு, சோம்பு, பட்டை, கிராம்பு அப்புறம் கொஞ்சம் கறிவேப்பிலை சேத்துத் தாளிக்கனும் அப்புறம் நறுக்கி வச்ச வெங்காயத்தை சேத்து பொன்னிறமா வர வதக்கனும். அதுக்கூடவே இஞ்சி பூண்டு விழுது சேத்து பச்சை வாசனை போகுற வர இப்படி மெதுவா வதக்கனும் அடுத்து தக்காளியைச் சேத்து குலைய வதக்கனும்…….
வெங்காயம் வாசனை ரொம்ப நல்லா இருக்கு விஹான் அடுத்து என்ன போடனும்?
அந்த அவிச்சு வச்ச உருளைக்கிழங்கு அண்ட் ஊற வச்ச பட்டாணி இருக்கு அதை எடு…..
நீங்க எப்ப உருளைக்கிழங்க அவிச்சீங்க?எப்ப பட்டானி ஊற வச்சீங்க?
நம்ம சப்பாத்திக்கு மாவு பிசையும்போதே ரெண்டும் ரெடி பண்ணி வச்சிட்டேன்…..
சூப்பர் விஹான் என்று அவள் எடுத்து கொடுத்தாள்……
இப்போ வேக வச்ச உருளைக்கிழங்கு அண்ட் ஊற வச்ச பட்டாணிய சேத்து வதக்கனும். அப்புறம் இதுக்கூடவே மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடனும் அப்புறம் தேவையான அளவு தண்ணி ஊத்தி மூடி வைக்கனும் கொஞ்ச நேரம் காய் வேகுற வர வெயிட் பண்ணுவோம்……
எவ்வளோ நேரம் வெயிட் பண்ணனும்?
ஒரு பத்து நிமிஷம் இது திக் கண்சிஸ்டன்சியா வர வரைக்கும் வெயிட் பண்ணனும்…..
இப்போ இது நல்லா திக் கண்சிஸ்டன்சிக்கு வந்துடுச்சு , குருமா கெட்டியானதும் மல்லித்தழை தூவி இறக்கினால், சுவையான பட்டாணி உருளைக்கிழங்கு குருமா தயார்……
நா சொல்லி கொடுத்தது உனக்கு புரிஞ்சுதுல?
ரொம்ப நல்லா புரிஞ்சுது நெக்ஸ்ட் டைம் உங்களுக்கு நானே செஞ்சு தாரேன்…..
சரி செஞ்சு கொடு நா சாப்பிடுறேன் இப்போ வா நம்ம எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறலாம் என்று இருவரும் அவர்களின் குடும்பத்தினருக்கு சாப்பாடு பரிமாறினார்கள்……
அவர்கள் மூவருக்கும் இருந்த பசியில் சப்பாத்தி குருமாவை ஒரு பிடி பிடித்து விட்டனர்……
சாப்பாடு ரொம்ப சூப்பர் …..
விஹான் தான் செஞ்சாங்க …..
அப்பா அஸ்விதான் சப்பாத்தி போட்டு எடுத்தா…..
ரெண்டு பேரும் சூப்பரா சாப்பாடு செஞ்சிருக்கீங்க எங்களுக்கு ரொம்ப டையர்ட்டா இருக்கு நாங்க ரெஸ்ட் எடுக்க போறோம் என்று அவர்கள் அனைவரும் ஓய்வு எடுக்க சென்றனர்…..
விஹான்னா அவள் பெட்டில் படுத்து கொண்டு ஃபோன் பார்த்து கொண்டு இருந்தாள்……
விஹான்னா…..
சொல்லு அஸ்வதி …..
அது……….. வந்து …… அம்மா , அனந்திக்கு இப்போ எப்படி இருக்கு?
அவளின் கேள்வியில் விஹான்னா அஸ்வதியை கேள்வியாக பார்த்தாள்…..
அவங்களை பத்தி ஏன் கேக்குற?
அது அவங்களுக்கு கால்ல அவ்வளோ பெரிய காயம்….அது…..
அந்த காயம் அவங்க அவங்களுக்கே விதச்சது , சோ இப்போ நல்லா அனுபவிக்குறாங்க……
விஹான்னா எனக்கு புரியுது…..
ஆனா…..
என்ன ஆனா?
என்று அவள் பின்னல் விஹானின் குரல் கேட்டது…….
அவன் குரலில் இருந்த கோபத்தை அவளால் உணர முடிந்தது…..
அவள் பயம் நிறைந்த விழிகளோடு அவனை திரும்பி பார்த்தாள்…..
அடுத்து நடக்க போவது என்ன??
பொறுத்திருந்து பார்ப்போம்…..
தொடரும்…..
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….
❄️💕❄️❄️❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

