
காதல் – 31
அஸ்வதி மற்றும் விஹான் தங்களின் காதல் உலகில் சந்தோஷமாக இருந்தனர் , அதை இரு தீய சக்திகள் பார்த்துக் கொண்டிருந்தன….
அந்த தீய சக்திகளின் சூழ்ச்சிகளில் இருந்து இந்த காதல் ஜோடி தப்புமா என்று பார்ப்போம்……
விஹான் மற்றும் அஸ்வதி காலையில் எழுந்த உடனே தங்களின் பிரத்யேக காதல் உலகில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தனர்……
சரி இப்போ என்னோட செல்ல காதலி பிரஷப் ஆக போறா என்று அவன் அவளை மெதுவாக தூக்கிக்கொண்டு நேற்றை போலவே இன்றும் குளித்து முடித்து விட்டு வந்தனர்…….
இவ்வாறு தினமும் இருவரும் இரவில் வெளியில் சுற்றுவதும் பிறகு பகல் முழுவதும் உறங்குவதும் பிறகு மீண்டும் இரவில் வெளியே சுற்றவும் என்று அஸ்வதி மற்றும் விஹானின் காதல் வாழ்க்கை மிக மிக அழகாக சென்று கொண்டிருந்தது, விஹானின் கவனிப்பிலும், அக்கறையிலும் அஸ்வதியின் ஆசிட் பட்ட பாதங்கள் விரைவில் குணமடைந்து விட்டது……..
அன்று ஒரு நாள்……
வெளியில் ஹாலில் தேவராஜ் மற்றும் சித்திக் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்…..
சுலோச்சனா மற்றும் அனந்தி விஹானோடு கைகளை கோர்த்து கொண்டு வரும் அஸ்வதியை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தனர்….
பீவி மற்றும் விஹானா போனில் எதையோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்…..
அம்மா குட் மார்னிங்…..
குட் மார்னிங் அஸ்வதி விஹான், வாங்க ரெண்டு பேரும் காலைல சாப்பாடு சாப்பிடுங்க என்று பீவி அவர்கள் இருவருக்கும் தட்டில் பூரி மற்றும் உருளைக்கிழங்கு குருமா வைத்து கொடுத்தார்……
அம்மா பூரி சூப்பரா இருக்குதும்மா….
அப்படியா அஸ்வதி கண்ணா , இந்தா இன்னொரு பூரி சாப்பிட்டுக்கோ என்று அவர் அஸ்வதி தட்டில் இரண்டு பூரி வைத்தார்…..
அம்மா நீங்க எவ்வளவு பூரி வேணாலும் வைங்க நா சாப்பிட்டுட்டே இருப்பேன் அவ்வளவு சூப்பரா இருக்குது என்று அஸ்வதி அந்த பூரி குருமாவை ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டு இருந்தாள் ….
அஸ்வதி ரசித்து ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை விஹான் ரசித்து ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்…..
விஹான் என்ன பார்த்தது போதும் நீங்க சாப்பிடுங்க என்று பூரியை ஒரு விள்ளல் எடுத்து அவன் வாயில் வைத்தாள்…..
இருவரும் மாறி மாறி ஊட்டி விட்டுக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர், அதைப் பார்த்த சுலோச்சனாவிற்கு கோபம் கரையை கடந்தது , அவர் எழுந்து அஸ்வதியிடம் ஏதோ கோபமாக பேச வந்தார் ஆனால் அதற்குள் ஐந்து நாட்கள் முன்பு சாப்பிட்ட காரமான சாதம் வயிற்றைப் பிரட்ட பாத்ரூமிற்குள் ஓடினார்……..
அம்மா நா இவள வெளிய ஒரு ஸ்பெஷல் இடத்துக்கு கூட்டிட்டு போக போறேன்……
ஹய்யா ஜாலி ஜாலி நம்ம ரெண்டு பேரும் ஸ்பெஷல் இடத்துக்கு போக போறோம் , விஹான் நா சாப்பிட்டு முடிச்சிட்டேன் சீக்கிரம் கிளம்பி ரெடி ஆகிட்டு வரேன் என்று அஸ்வதி அவர்கள் அறைக்குள் ஓடினாள்…….
டேய் மகனே நீ எங்க அவள கூட்டிட்டு போறன்னு கூட சொல்லல அதுக்குள்ள அஸ்வதி கிளம்ப ஓடிட்டா உன்கிட்ட எங்க போறோம்ன்னு கூட கேக்கல? எப்படிடா?
தன்னுடைய தாயாரின் இந்த கேள்வியில் விஹான் சிரித்து விட்டான்…..
என்னடா மகனே கேள்வி கேட்டா சிரிக்கிற?
என்ன நடக்குது இங்க என்று சித்திக் மற்றும் விஹானா அங்கு வந்தனர்…..
என்னங்க இந்த விஹான் , அஸ்வதிய எங்கேயோ ஸ்பெஷல் இடத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்றான் ஆனா அஸ்வதி இவன் கிட்ட எங்க போறோம்ன்னு கூட கேக்கல அவ பாட்டுக்கு கிளம்ப ஓடிட்டா , அதான் எப்படிடா மகனே அப்படின்னு கேட்டுட்டு இருக்கேன்……
அட பீவி அஸ்வதி நம்ம பையன அவ்ளோ நம்பறா அதான் இவன் கூப்பிட்ட உடனே அவ சந்தோஷமா கிளம்ப ஓடிட்டா…..
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அஸ்வதி தயாராகி வந்து விட்டாள்…..
விஹான் நா ரெடி , உங்களோட ஓவர் கோட் , ஜாக்கெட் நான் வெச்சிருக்கிறேன் போகலாமா?
அம்மாடி அஸ்வதி நாங்க யாரும் உன்னோட கண்ணுக்கு தெரியுறோமா?விஹான பாத்து மட்டும் பேசிட்டு இருக்க…..
அப்படி இல்லப்பா..
அது வந்து…
விஹான் என்ன ஏதோ ஸ்பெஷல் இடத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க அந்த ஆர்வத்துல உங்கள கவனிக்கல சாரிப்பா…..
அட அஸ்வதி நா உன் கிட்ட சும்மா விளையான்டேன்ம்மா , நீங்க கிளம்புங்க பத்திரமா போயிட்டு வாங்க…..
தேங்க்ஸ் அப்பா என்று அஸ்வதி சித்திக்கை கட்டியணைத்துக் விட்டு விஹானின் கைப்பிடித்து கொண்டு வெளியில் ஓடினாள்…..
அஸ்வதி மற்றும் விஹான் செல்லும் வழியை சித்திக் பார்த்துக் கொண்டிருந்தார்……
விஹானா , அஸ்வதி நம்ம விஹான் வாழ்க்கையில வந்த பிறகு விஹான் ரொம்ப சந்தோஷமா இருக்குறான்ல்ல?
ஆமாப்பா எப்பவும் அண்ணன் சோகமான மூஞ்சிய வச்சிக்கிட்டு தான் திரிவான் ஆனா இப்போ அஸ்வதி வந்த பிறகு அண்ணன் முகத்துல அந்த சோகம் எங்க காணாம போச்சுன்னு தெரியல …..
ஆமா விஹானா யாரு கண்ணும் படாம ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கணும்……
அப்பொழுது சுலோச்சனா பாத்ரூமில் இருந்து வந்தார்……
பீவி சுடுதண்ணி கேட்டேனே போட்டியாப்பா?
ஆமா சுலோச்சனா அடுப்புல வச்சிருக்குறேன் , கொதிச்சிருக்கும்ன்னு நினைக்குறேன் , நீ உட்காரு உனக்கு நான் கிளாஸ்ல ஊத்தி எடுத்துட்டு வரேன்…….
இல்ல பீவி இருக்கட்டும் நானே போய் எடுத்துக்குறேன் என்று சுலோச்சனா கிச்சன் செல்ல அவர் பின்னாலே அனந்தியும் சென்றாள்…….
அம்மா அந்த அஸ்வதி , விஹான லவ் பண்றது அவனோட குடும்பத்துக்கு தெரியும் போல எல்லாரும் அந்த பிச்சைக்காரி அஸ்வதிய தலையில தூக்கி வெச்சிட்டு கொண்டாடுறாங்க எனக்கு அதை பாக்க சகிக்கல அம்மா….
எனக்கும் அந்த கருமம் புடிச்ச காதல் காட்சிகள பாக்க பாக்க கடுப்பா வருது என்று சுலோச்சனா பேசிக்கொண்டே வெந்நீர் வைத்திருந்த பாத்திரத்தை இறக்கினார் அது அவரின் கையில் இருந்து நழுவி இருவரின் காலில் சட்டியோடு கவிழ்ந்து விட்டது ……
தண்ணீரின் கொதிநிலை நூறு டிகிரி செல்சியஸ் ஆனால் பீவி வைத்திருந்த தண்ணீர் வெந்நீராக மாறி நூறு டிகிரி செல்சியஸையும் கடந்து கொதித்துக் கொண்டிருந்தது… அத்தகைய , அத்தனை சூடான வெந்நீரை அனந்தி மற்றும் சுலோச்சனா மேல் கொட்டி விட்டது அதில் இருவரும் வலியில் அலறி துடித்தனர்…….
அவர்கள் இருவரின் அலறல் கேட்டு அங்கு இருந்த அனைவரும் ஓடி வந்தனர்……
என்ன ஆச்சு??
ஏன் இப்படி ரெண்டு பேரும் கத்துறீங்க?
தேவா அண்ணா ரெண்டு பேரும் கால்லயும் சுடு தண்ணி கொட்டிடுச்சு சீக்கிரம் இவங்கள ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போவோம் என்று அவர்கள் அனந்தி மற்றும் சுலோச்சனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்…….
இங்கு இப்படி நிலவரம் கலவரமாக இருக்க , இது நடந்தது எதுவும் தெரியாமல் விஹான் மற்றும் அஸ்வதி சந்தோஷமாக பைக்கில் சென்று கொண்டிருந்தனர்…….
அஸ்வதி இப்ப நம்ம ரோப் கார்ல போக போறோம் என்று விஹான் அவளை ரோப் காரில் ஒரு இடத்திற்கு அழைத்து சென்றான்…….
அந்த ரோப் கார் இருவரையும் சுமந்து கொண்டு ஒரு மலை உச்சிக்கு சென்றது……..
விஹான் இங்க உக்காந்து நம்ம என்ன பண்ண போறோம்?
நம்ம ரெண்டு பேரும் இப்ப பறக்க போறோம் அஸ்வதி…..
அவன் அவ்வாறு கூறவும் அஸ்வதி விஹானின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டே…..
விஹான் எனக்கு ஹைட்ன்னா ரொம்ப பயம் என்று அவள் அவனை பயத்தில் கட்டியணைத்துக் கொண்டாள்……
அஸ்வதி என்ன பாருடா கண்ணா என்று அவன் அவளின் பயந்த முகத்தை நிமிர்த்தி பார்த்தான்……..
அஸ்வதி இதுக்கு முன்னால நீ இப்படி பாரா க்ளைடிங் பண்ணிருக்கியா?
இல்ல விஹான் எனக்கு ஹைட்ன்னா சின்ன வயசுல இருந்தே ரொம்ப ரொம்ப பயம் அதான் நான் இந்த மாதிரி பேரா கிளைடிங் எல்லாம் பண்ணது இல்ல…..
சரி என்ன நீ நம்பறியா?
நா என்னோட வாழ்க்கையில என்ன விட உங்கள தான் அதிகமா நம்புறேன்…..
சரி அப்ப என்ன டைட்டா கட்டி பிடிச்சுக்கோ உன்ன நான் பறக்க வைக்கிறேன் சரியா?
உங்களுக்கு இந்த பாரா கிளைடிங் பண்ண தெரியுமா? எப்படி கத்துக்கிட்டீங்க ?
எனக்கு இப்படி ஹைட்ல இருந்து பாரா கிளைடிங் பண்ண ரொம்ப புடிக்கும் அதான் அடிக்கடி பண்ணுவேன் சோ தெரியும் , என்ன நம்பி என்கூட வா உன்ன நா பத்திரமா பாத்துக்குறேன் என்று அவன் கூறினான்……
அவனின் விழிகளில் தெரிந்த காதலை பார்த்தவாரே அஸ்வதியின் தலை தானாக ஆடியது………
பேரா கிளைடிங் என்பது மலையிலிருந்து பாராசூட்( parachute) மாதிரி ஒரு பெரிய கவர் கட்டிக் கொண்டு வானில் இருந்து மெதுவா பறந்து கீழே இறங்குற ஒரு சாகச விளையாட்டு(adventure sport).
பிறகு விஹான் அஸ்வதிக்கு ஹெல்மெட், உடம்பை பிடித்துக் கொள்கிற பெல்ட் (harnees) மற்றும் பாராசூட் பேக் அவளுக்கு போட்டு விட்டான், பிறகு அவனும் ஹெல்மெட், பெல்ட் ,பாராசூட் பேக் அணிந்து கொண்டு அஸ்வதியின் பெல்டையும் அவனின் பெல்ட்டையும் ஒன்றாக இணைத்து விட்டு அவளின் பாராசூட் பேக்கை அவன் பின்னால் அணிந்து கொண்டு அஸ்வதியின் பின்னால் அவன் நின்றான்……
அஸ்வதி ரெடியா……
அஸ்வதிக்கு உள்ளுக்குள் அத்துனை உயரத்தில் இருந்து குதிக்கப் போகிறோம் என்று பயம் ஒரு பக்கம் இருந்தாலும் தன்னவன் ,தன் காதலன் தன் பக்கம் இருக்கிறான் என்று அதீத நம்பிக்கையில் ரெடி விஹான் என்று அவள் கூறினாள்……
விஹான் அஸ்வதியை பின்னால் இருந்தபடியே மெதுவாக தூக்கிக்கொண்டு ஓடினான் ,பிறகு மலை உச்சியில் இருந்து அவளை தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்தபடி குதித்தான்……
அஸ்வதி விஹானின் கழுத்தினில் சாய்ந்து கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டாள்…..
அஸ்வி கண்ண திறந்து பாரு உலகமே இப்ப நமக்கு கீழ தான் இருக்குது, கன்ன திறந்து பாரு நா உன் கூட தான் இருக்குறேன் தைரியமாக கண்ண திறந்து பாரு செல்லம் என்று அவன் கூறவும் அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்தவாரே அஸ்வதி கண்களை திறந்து பார்த்தாள்…….
அவள் கண்களை திறந்து பார்த்தபோது , அவள் கண்ட காட்சி…..
வெள்ளைப் பனி மலைகள் அவர்களின் கீழே இருந்தது , பெரிய பெரிய மரங்களும் அவளின் கண்களுக்கு எறும்பு போல தெரிந்தது, அப்பொழுது அங்கு பொழிந்து கொண்டிருந்த பணி அவர்கள் இருவரின் தலையிலும் அட்சதை தூவுவது போல இருந்தது அவளுக்கு, அந்த வாடைக்காற்று அவளின் மேனியை கூசச் செய்தது இதையெல்லாம் பார்க்காமல் இத்தனை நாள் வீணாக்கி விட்டோமே என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க அவளின் காதல் மன்னவன் அவளை அழைத்தான்……
அஸ்வி செல்லம் என்று அவன் அவளை காதலாக அழைத்தான்……
அஸ்வதி அவனை கட்டி அணைத்தவாறு அவன் முகத்தை மிக மிக நெருக்கத்தில் பார்த்தாள்…..
அவனின் சூடான மூச்சுக்காற்று அவளை தீண்டவும் குளிரால் சிவந்த அவளின் முகம் வெட்கத்தில் சிவந்தது…..
சொல்…
சொல்லுங்க….
எனக்கு ஒரு ஆசை அத நீ நிறைவேத்தி வைப்பியா?
அவன் காதலாக அவளின் கண்களை பார்த்து கேட்கவும் அவளின் தலை தானாக ஆடியது……
என்ன ஆசை அது?
அடுத்து நடக்கப் போவது என்ன…..
பொறுத்திருந்து பார்ப்போம்…..
தொடரும்…
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……
💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

