Loading

காதல் – 30

அஸ்வதி  மற்றும் விஹான் சந்தோஷமாக இரவு பொழுதை இணைந்து கழித்துவிட்டு வீடு திரும்பினர்,  பிறகு அவர்கள் இருவரின் காதல் பொழுதுகள் வழக்கம் போல் நடக்க,  இருவரும் நேற்றை போலவே இன்றும் படம் பார்த்துவிட்டு நேரம் காலம் தெரியாமல் இருந்தனர் , அப்பொழுது அங்கு வந்த விஹானா இருவருக்கும் இரவு உணவை கொடுத்துவிட்டு தன்னுடைய தந்தை தன்னுடைய அண்ணனின் காதலுக்கு ஒப்புதல் அளித்த விஷயத்தை கூறிக் கொண்டிருந்தாள்……

 

ஆம் என்று நேற்று சித்திக் கூறிய அனைத்தையும் அஸ்வதி மற்றும் விஹானிடம் விஹானா கூறினாள்…..

 

விஹான் பீவி அம்மா அண்ட் சித்திக் அப்பா நம்ம ரெண்டு பேரு லவ்வுக்கும் ஓகே சொல்லிட்டாங்க ஜாலி ஜாலி  என்று அஸ்வதி சந்தோஷத்தில் விஹானின் கைகளை பிடித்து கொண்டு  நம்ம ரெண்டு பேருக்குள்ள எவ்வளவு ஒரு கனெக்சன் என்று அஸ்வதி அவனை கட்டி அணைத்துக் கொண்டாள்……

 

சரி சரி ரொமான்ஸ் போதும் இப்ப ரெண்டு பேரும் சாப்பிடுங்க என்று விஹானா கூறினாள்……

 

பிறகு இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு நேற்றை போலவே அனைவரும் உறங்கிய பிறகு விஹானாவிடம் கூறிவிட்டு ஊர் பார்க்க சென்று விட்டனர்…….

 

இன்று இருவரும் ஒரு பனிமலையில் மேலே ஏறி சென்று கொண்டிருந்தார்கள் , விஹான் அஸ்வதியை தன் கைகளில் ஏந்தியவாறு நடந்து கொண்டிருந்தான்….

 

பிறகு அந்த மலையின் உச்சியில் இருவரும் அமர்ந்து கொண்டு பணியில் நனையும் நிலவை ரசித்துக் கொண்டிருந்தார்கள்…….

 

அப்பொழுது விஹான் தனது கையடக்க ரேடியோவை ஆன்  செய்தான் அதில்…..

 

நேரம் சரியாக ஒன்றாக போகிறது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது மெல்லிசை தென்றல் நான் உங்கள் அனுஷி இப்பொழுது நாம் கேட்கவிருக்கும் பாடல் நம் செவிகளுக்கு விருந்தாகவும்,  நமது ஊரின் காலநிலைக்கு ஏற்பவும் , காதல் ஜோடிகளுக்கு ஏற்பவும் இருக்கப் போகிறது என்று நினைக்கிறேன் இதோ உங்களுக்காக அந்த மெல்லிசை தென்றல் என்று அந்த ஆர் ஜே கூறிவிட்டு சென்ற பின்……

 

“பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது வா வா வா”……

 

என்று மனதை மயக்கும் குரலில் எஸ்பிபியும் ஜானகி அம்மாவும் பாடிக் கொண்டிருந்தனர்……

 

விஹான் நீங்க சின்ன வயசுல நா பெரிய வயசான பிறகு இது தான் ஆக போறேன் அப்படின்னு உங்களுக்கு எந்த அம்பிஷனும் இல்லையா?

 

நா என்னோட சின்ன வயசுல ரொம்ப சேட்டை பண்ணுவேன், யாராயாவது அடிச்சிட்டே இருப்பேன் ,இல்ல சண்டை போட்டுட்டு  வந்துருவேன் அதனால  அந்த வயசுல எனக்கு அப்படி ஒன்னும் கனவு இருந்த மாதிரி ஞாபகம் இல்ல ஆனா இப்போ எம்எஸ்சி முடிச்ச பிறகு வீட்ல சும்மா தான் ஒரு மாசம் இருந்தேன் அப்போதான் நா டிராயிங் நிறைய பண்ண ஆரம்பிச்சேன் , அப்பா கிட்ட போய் நான் ஒரு ஆர்டிஸ்ட் ஆக போறேன்னு சொன்னேன் அதுக்கு அப்பா என்ன சொன்னாங்க தெரியுமா?

 

அதெல்லாம் பண்ண கூடாதுன்னு சொன்னாங்களா?

 

அப்படி எல்லாம் எங்க அப்பா சொல்ல மாட்டாங்க அஸ்வி , நீ தாராளமா ஆர்டிஸ்ட் ஆகு , அதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் ஆனா , இது வந்து உன்னுடைய ப்ரொபஷன் ஆகிட கூடாது நீ எம்எஸ்சி முடிச்சிருக்க, அதுக்கு ஏத்த மாதிரி ஒரு ஜாப் போ சைடுல டிராயிங் பண்ணிக்கோ சோ உன்னோட ப்ரொபஷனயும் விட்ட மாதிரி இருக்காது உன்னோட பேஷனையும் விட்ட மாதிரி இருக்காதுன்னு சொன்னாங்க ……

 

சித்திக் அப்பா கெத்து சூப்பர், சரி நீங்க எப்படி ப்ரோபசர் ஆனிங்க?  உங்களுக்கு டீச்சிங் ரொம்ப பிடிக்குமா?

 

நா எம்எஸ்சி முடிச்சு ஒரு மாசம்தான் ஆச்சு  அதனால நான் நெட் எக்ஸாம்க்கு பிரிப்பர் பண்ண ஆரம்பிச்சேன், அந்த நெட் சிலபஸ் எல்லாம் அஞ்சு வருஷம் படிச்சது தான் இருந்தது அதனால எனக்கு அந்த எக்ஸாம் ரொம்ப ஈசியா தான் இருந்துச்சு  சோ ஒரே அட்டம்ட்ல பாஸ் ஆயிட்டேன் வேலைக்கும் சேர்த்துட்டேன்…….

 

விஹான் உங்களுக்கு உங்க அப்பா உங்களுக்கு  கைடு பண்ணாங்க சோ நீங்க நல்ல முடிவு எடுத்தீங்க , ஆனா எனக்கு கைடு பண்ண யாருமே இல்ல அதனால நான் ரொம்ப நல்லா படிக்க ஆரம்பிச்சேன் , காலேஜ்ல ஃபர்ஸ்ட் மார்க் எடுக்க ஆரம்பிச்சேன் அப்புறம் எப்படி டீச்சர் ஆகணும்ன்னு எனக்கு தெரியல …..

அப்போ நா டெய்லி போற எங்க வீட்டு பக்கத்துல இருக்குற பெருமாள் கோவிலுக்கு போனேன் அங்க ஒரு பூசாரி உண்டு அவர் பேரு சுப்பிரமணிய ஐயர் அவருக்கு என்ன பத்தி எல்லாம் தெரியும் அவரு டெய்லி எனக்கு மதிய சாப்பாடு கொடுப்பாரு அவரு தான் எனக்கு எப்படி ப்ரொபசர் ஆகணும் அப்படின்னு சொல்லி கொடுத்தாரு அவரோட கைடன்ஸ்னால தான் இப்ப நான் ப்ரொபசாரா  இருக்குறேன்……

 

ஆமா அஸ்வதி உன்கிட்ட கேட்க மறந்துட்டேன் நீ  உங்க வீட்ல சென்னைல சாப்பிடவே மாட்டியா?

 

எனக்கு யாரும் சாப்பாடு தர மாட்டாங்க விஹான் , எனக்கு மட்டும் என்னோட சாப்பாட்டில உப்பு , காரத்தை அள்ளி போட்டுருவாங்க சோ நா வீட்ல அவ்வளவா சாப்பிட மாட்டேன் , காலையில காலேஜ் கிளம்பி போயிட்டு அங்க கேன்டின்ல காலையில சாப்பாடு சாப்பிட்டு,  மதியமும் கேண்டின்லயே சாப்பிட்டுருவேன் அப்புறம் நைட் என் வீட்டு பக்கத்துல ஒரு பார்க் உண்டு அங்க ரொம்ப நேரம் உட்கார்ந்துட்டு இருப்பேன் எல்லாரும் தூங்கின பிறகு தான் வீட்டுக்கு நா லேட்டா வருவேன் , நான் அவங்க செஞ்ச சாப்பாட்ட சாப்பிட்டுருவேன்னு சாப்பாட்டுல  தண்ணி ஊத்தி வச்சிருவாங்க ஆனா அவங்களுக்கு தெரியல எனக்கு கஞ்சி சாதம்ன்னா ரொம்ப பிடிக்கும்ன்னு நான் நல்லா கஞ்சி சாதம் சாப்பிட்டு நிம்மதியா தூங்குவேன் இதே லீவ் நாள்ல நான் என்னோட ரூம்லயே இருப்பேன் ரொம்ப போர் அடிச்சா பெருமாள் கோவில் போயிடுவேன் அங்க போய் சுப்ரமணி ஐயர் கிட்ட பேசிட்டு இருப்பேன் அப்புறம் நைட் லேட்டா வீட்டுக்கு வந்து தூங்கிடுவேன்……

 

சரி உன்னோட அப்பா இதெல்லாம் கண்டுக்க மாட்டாங்களா?

 

அப்பா வீட்டிலேயே இருக்க மாட்டாங்க அவங்க வீட்டுக்கு மாசத்துல ஒரு நாலு நாள் தான் வருவாங்க அதனால என்ன பத்தி அவ்வளவு கண்டுக்க மாட்டாங்க….    அப்படி அப்பா வீட்டுக்கு வர சமயத்துல எல்லாம் எனக்கு நிறைய காசு கொடுப்பாங்க ஆனா எனக்கு அதெல்லாம் பிடிக்காது , அப்பா கொடுத்த காசு எல்லாம் நா எங்க வீட்டு பக்கத்துல இருக்குற ஆசிரமத்துக்கு குடுத்துருவேன்……

 

அப்போ உனக்கு செலவு பண்ண காசு?

 

அதான் என்னோட சம்பளம் இருக்கே அது போதும் எனக்கு ….

 

அந்த சுலோச்சனா உன்னோட சம்பளத்தை கேட்க மாட்டாங்களா?

 

நா அவங்ககிட்ட என்னோட சம்பளத்த கொடுத்தது இல்ல……

 

உன்கிட்ட உன்னோட சம்பளத்தை அவங்க கேட்பாங்களா?

 

பின்ன கேட்காம இருப்பாங்களா? என்னோட கிரெடிட் கார்டு கேப்பாங்க ஆனா நான் என்னுடைய எல்லா கார்ட்ஸையும் என்னோட காலேஜ் லாக்கர்ல வச்சுட்டு வந்துருவேன் எனக்கு ஏதோ அவங்க கிட்ட என்னோட சம்பளத்தை கொடுக்க வேண்டாம்ன்னு  தோணுச்சு அதனால இதுவரை நான் அவங்க கிட்ட என்னோட சம்பளத்தை கொடுத்ததில்லை…..

 

ரொம்ப நல்ல முடிவு தான் எடுத்துருக்கிற அஸ்வி நீ…..

 

விஹான் நான் உங்க வீட்டுக்கு வர முன்னாடி வர  சாப்பாடு அப்படின்னா பசிக்கு கிடைச்ச சாப்பாட்ட சாப்பிடலாம்ன்னு நெனச்சிட்டு இருந்தேன் ஆனா உங்கள பார்த்த பிறகு தான் ருசிக்காகவும் சாப்பிடலாம்ன்னு தோணிச்சு……..

 

அஸ்வதி இனி நீ நல்லா சாப்பிடணும் என்ன?

 

சரி என்று அவள் அவனை இறுக்கமாக அனைத்து கொண்டாள்…….

 

பிறகு  அஸ்வதி தான் வேலை பார்க்கும் கல்லூரியை பற்றி சுவாரசியமாக ஏதோ கூறிக் கொண்டிருந்தாள்…….

 

உன் முத்து முத்து பேச்சு…

என் சங்கீதமா ஆச்சு…

உன் சுண்டு விரல் தீண்டையில…

நின்னு போச்சு என் மூச்சு…

 

என்று அந்த ரேடியோவில் கேட்கும் பாடலுக்கு ஏற்ப விஹான் அஸ்வதியை ரசித்துக் கொண்டிருந்தான்…….

 

பிறகு விடியற்காலை மூன்று மணி ஆகவும் விஹான் அஸ்வதியை தூக்கிக்கொண்டு மலையில் இருந்து கீழே இறங்கி தங்களின் வீட்டிற்கு சென்றனர்……

 

நேற்றைய போலவே இன்றும் இருவரும் நீண்ட நேரம் உறங்கி விட்டனர்……

 

இன்று  அஸ்வதி தான் முதலில் கண்விழித்தாள் அவள் கண் விழித்து பார்க்கும் போது , விஹான் அவள் அருகே அவள் படுத்திருந்த பெட்டில் அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்…….

 

அஸ்வதி காற்றில் அலையும் அவனின் தேசத்தை கோதி விட்டு கொண்டு இருந்தாள்…….

 

பிறகு விஹானின் நெஞ்சில் நன்றாக சாய்ந்து கொண்டு அவனை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டு அவனின் முகத்தையே அஸ்வதி பார்த்துக் ரசித்து கொண்டிருந்தாள் ……

 

அப்பொழுது விஹானின் மூடிய விழிகளுக்குள் அவனது கருவிழிகள் அங்கும் இங்குமாக உருன்டது, அவன் மீசைக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தான் அதை கவனித்த அஸ்வதி அவனின் இதழில் தன் இதழை  பொருத்தினாள் , அவளின் இந்த திடீர் செய்கையில் விஹானின் கண்கள் இரண்டும் தெறித்து விடும் அளவிற்கு விரிந்தது…..

 

அவன் அவ்வாறு முழிக்கவும் அஸ்வதி சிரித்து விட்டாள்…….

 

ஏய் என்னடி நீயே ஆயுதத்தை கையில எடுத்துட்ட?

 

பின்ன நீங்க தூங்குற மாதிரி நடிச்சிட்டே இருந்தா நா எப்படி உங்கக்கிட்ட பேசுறது அதான் இப்படி என்று அவள் அவனை பார்த்து அழகாக சிரித்தாள்……

 

அவளின் அழகிய சிரிப்பில் அவன் அவனை மறந்து அவளுள் அழகாக தொலைந்து போனான்……

 

அஸ்வதி இதே மாதிரி டெய்லியும் காலைல முழிக்கும்போது நா பாக்குற முதல் முகம் உன்னுடையதா இருக்கனும் அதே மாதிரி நைட் தூங்கும் போதும் நா கடைசியா பாக்குற முகம் உன்னோட முகமாக இருக்கணும் என்று அவன் கூறிவிட்டு அவள் முகத்தை தன் இரு கைகளிலும் ஏந்தி கொண்டு அவளின் கண்களை மறைத்துக் கொண்டிருந்த அவளின் முடிகளை காதோரம் ஒதுக்கிவிட்டு அவளின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தான்……

 

அவனின் நெற்றி முத்தத்தில் அவளின் கன்னங்கள் இரண்டும் சிவந்து விட்டது…..

 

அஸ்வி இதோட நா உனக்கு நெறய தடவை கிஸ் பன்னிருப்பேன் ஆனா எப்ப நா கிஸ் பன்னாலும் உன்னோட முகம் எப்பவும் இப்படி சிவந்து போறத பாக்க ரொம்ப அழகா இருக்கு என்று அவன் அவளை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டான்……

 

அவளும் அவனுள் அழகாக புதைந்து போனாள்……

 

அந்த காட்சியை  இரு ஜோடி கண்கள் குரூரமாக பார்த்து கொண்டு இருந்தது…..

 

காதல் காட்சிகள் தொடருமா அல்லது சோக காட்சிகள் ஆரம்பம் ஆகுமா?

 

பொறுத்திருந்து பார்ப்போம்……

 

தொடரும்……

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……..

 

💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்