Loading

காதல் – 28

 

அஸ்வதிக்காக விஹான் அவளுக்கு பிடித்த உணவை ஆசையாக சமைத்து இருவரும் மாறி மாறி ஊட்டி விட்டு கொண்டு சாப்பிட்டார்கள் , பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து படம் பார்த்துக் கொண்டிருந்தனர்,  அவர்கள் இருவரும் சந்தோஷமாக இருப்பதை அனந்தி மற்றும் சுலோச்சனா பார்த்து விட்டார்கள் அவர்களுக்கு அஸ்வதி சந்தோஷமாக இருப்பதை பார்க்க பார்க்க வயிறு எரிந்தது……

 

சுலோச்சனா  மற்றும் அனந்தி அஸ்வதியை முறைத்து கொண்டு இருப்பதை பீவி பார்த்து விட்டார்…..

 

என்ன சுலோச்சனா அங்கயே நின்னுட்டு இருக்குற இங்க வா எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று பீவி அவர்களை அழைக்க , இருவரும் சாப்பிட சென்றார்கள்……

 

சுலோச்சனா  இன்னிக்கு என்னோட மகன் சாப்பாடு செஞ்சுருக்குறான் அத சாப்பிட்டு பாத்து எப்படி இருக்குன்னு சொல்லு என்று பீவி,  அனந்தி மற்றும் சுலோச்சனாவிற்கு தட்டில் விஹான் செய்த பருப்பு சாதத்தை வைத்தார்…..

 

தேவராஜ் விஹான் செய்த பருப்பு சாதத்தை சாப்பிட்டுவிட்டு விஹானை பற்றி பீவியிடம் புகழ்ந்து கொண்டிருந்தார் , அதை பார்த்த சுலோச்சனா அந்த பருப்பு சாதத்தை ஒரு வாய் எடுத்து வாயில் வைத்தார் அவருக்கு காரம் பொறுக்கவில்லை …..

 

தன்னுடைய அம்மா சாப்பிட ஆரம்பித்து விட்டார் என்று அனந்தியும் ஒருவாய் எடுத்து வாயில் வைத்தாள் அவளுக்கும் காரம் தாளவில்லை  இருவருக்கும் வாயை திறக்க முடியவில்லை அவர்களின் வாய் மிகவும் எரிந்தது…….

 

அனந்தி மற்றும் சுலோச்சனா அந்த காரமான  சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும் …..

 

என்ன சுலோச்சனா என்னோட பையன் செஞ்ச சாப்பாடு சாப்பிட்டுட்டு உனக்கு வாயே பேச முடியலையா ?அவ்ளோ டேஸ்டா இருக்குதா?

 

ஆமா பீவி விஹான் கையில நிறைய திறமை இருக்குது போல நல்லா பாடம் எடுக்குறான் , நல்லா கார்டனிங் பண்றான் , நல்லா சமைக்குறான் ….

நம்ம விஹான் மல்டி டேலெண்டெட் தான் என்று தேவராஜ் புகழ , சுலோச்சனா மற்றும் அனந்திக்கு ஒன்றும் புரியவில்லை…….

 

இந்த காரமான சாப்பாட்டை போய் ஆஹா ஓஹோன்னு புகழ்ந்துட்டு இருக்குறாரு இவர் என்ன லூசா ? என்று சுலோச்சனா வாயில் வைத்த உணவை மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவஸ்தை பட்டு கொண்டிருந்தார்…….

 

சுலோச்சனா நல்லா சாப்பிடுமா , ஒன்னும் வெக்கப்படாத இது உன்னோட வீடு மாதிரி தயங்காம நிறைய சாப்பிடுமா என்று சித்திக் கூறவும் , அவர்கள் அனைவரின் முன் சாப்பாட்டை வேண்டாம் என்று கூறினால் நன்றாக இருக்காது என்று எண்ணி அந்த காரமான உணவை கஷ்டப்பட்டு இருவரும் சாப்பிட்டு முடித்தனர்……

 

சுலோச்சனா மற்றும் அனந்திக்கு இரவு முழுவதும் பாத்ரூமில் லைட் எரிந்து கொண்டே இருந்தது……..

 

விஹான் மற்றும் அஸ்வதி ஷியாம் சிங்கா ராய் படத்தை முழுவதுமாக பார்த்து முடித்தனர் படம் முடிந்த பிறகு தான் இருவரும் மணியைப் பார்த்தனர்…..

 

மணியோ பன்னிரெண்டு ஆக இன்னும் பத்து நிமிடங்களே உள்ளது என கூறியது……

 

அஸ்வதி நாம படம் பார்த்த ஆர்வத்துல மணிய பாக்க மறந்துட்டோம் எல்லாரும் சாப்பிட்டு போய் தூங்கிட்டாங்க , உனக்கு இப்ப தூக்கம் வருதா?

 

இல்ல விஹான் நா மதியம் ரொம்ப நேரம் தூங்கிட்டேன் அதான் எனக்கு தூக்கம் வரல……

 

நானும் ஹாஸ்பிடல்ல வெச்சி கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டே தூங்கிட்டேன் அதனால எனக்கு இப்ப தூக்கம் வரல, உன்ன நா ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் என் கூட அந்த இடத்துக்கு வரியா?

 

வாரேன் போலாம் என்று அவள் அவனின் கைகளை பிடித்து கொண்டாள்……

 

எங்க போறோம்ன்னு கேக்க மாட்டியா?

 

நீங்க எங்க கூட்டிட்டு போனாலும் நா உங்க கூட வருவேன் என்று அவள் அவனின் தோள்களில் சாய்ந்து கொண்டாள்……

 

அவள் அவ்வாறு கூறவும் விஹான் அவளின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தான்……

 

வா நா உன்ன அந்த இடத்துக்கு கூட்டிட்டு போறேன் , ஆனா அதுக்கு முன்னால நீ ஸ்வெட்டர் போட்டுக்கணும் வெளியே ரொம்ப குளுருது என்று விஹான் அஸ்வதியை  தன் அறைக்கு தூக்கி சென்று அவளுக்கு குளிரை தாங்கக்கூடிய கனமான ஸ்வட்டர் அணிவித்துவிட்டு,  அவனும் ஸ்வெட்டர் அணிந்து விட்டு அவளை தூக்கிக்கொண்டு யாருக்கும் சத்தம் வராதவாறும், யாரின் தூக்கமும் கலையாதவாறும் மெதுவாக வெளியில் வந்து அவனது பைக்கில் அஸ்வதியை அமர வைத்து விட்டு தனது வீட்டிற்கு வெளியில் சிறிது தூரம் வண்டியை உருட்டியவாறு சென்று விட்டு சிறிது தூரம் சென்ற பின் பைக்கை ஆன் செய்து இருவரும் விஹான் சொன்ன  இடத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்…….

 

அந்த இரவு நேரமும் , யாரும் இல்லா சாலையும் நிலவின் ஒலியும் , பணி படர்ந்த மலைகளும் , பணி படர்ந்த சாலைகளும் தன் மனதிற்கு பிடித்தவனுடன் அந்த பைக்கில் செல்வது அவளுக்கு ஏதோ தேவ லோகத்திற்குள் செல்வது போன்ற உணர்வு…….

 

தொடுவானந்தான் கொடசாயுதே…

ஒரு நேசம் தான் கைய கோத்திடுதே…

ஓ ஹோ ஹோ தூரமா…

ஓ ஹோ ஹோ போகலாம்…

ஓ ஹோ ஹோ மேகமா…

ஓ ஹோ ஹோ மாறலாம்…..

 

விஹான் அப்பொழுது ஆன் செய்த கையாடக்க ரேடியோவில் அவர்களின் மன நிலைக்கு ஏற்ப பாட்டு  ஒலித்தது …..

 

விஹான் அஸ்வதியை ஒரு நதிக்கரையோரம் அழைத்து சென்றான் பிறகு பைக்கில் இருந்து அவளை மெதுவாக தூக்கிக்கொண்டு  படகில் அமர வைத்தான்……

 

பிறகு கரையில் கட்டி இருந்த படகின் கயிறை அவிழ்த்து விட்டான் படகு நகர்ந்தது…..

 

விஹான் உங்களுக்கு படகு ஓட்ட தெரியுமா?

 

ஒரு பைக் ஓட்ட தெரிஞ்சவனுக்கு படகு ஓட்ட தெரியாதா என்ன ?

 

அதுவும் சரிதான் ….                                   ஏதே…..

 

அவளின் முக பாவனைகளை பார்த்து விஹான் சிரித்து விட்டான்……

 

எனக்கு நல்லா படகோட்ட தெரியும் என்று அவன் சிரித்து கொண்டே கூறினான்……

 

அவன் சிரிப்பதை பார்த்து அவளும் சிரித்து விட்டாள்……

 

அஸ்வதி நீ சின்ன வயசுல இருந்து சந்தோஷமா இருந்தததே இல்லையா?

 

அப்படின்னு சொல்லிட முடியாது நா சின்ன வயசா இருக்கும்போது ஆசிரமத்துல நாங்க மொத்தம் ஆறு பேரு இருந்தோம் , அங்க ஆறு பேரும் சேர்ந்து ரொம்ப சந்தோஷமா விளையாடிட்டே இருப்போம் , எங்களுக்கு அப்ப கஷ்டம்ன்னா என்னன்னே தெரியாது அவ்வளவு சந்தோஷமா இருப்போம்……

 

உங்க ஆசிரமத்தில் ஆறு பேர் தானா?

 

எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து நாங்க ஆறு பேரு தான் இருந்தோம் …….

 

உன்கிட்ட உன்னோட சின்ன வயசு போட்டோ ஏதும் இருக்குதா?

 

ஒரே ஒரு போட்டோ  என்னோட போன்ல இருக்குது பாக்குறீங்களா?

 

காட்டு என்னோட குட்டி அஸ்வதி எப்படி இருக்கிறான்னு பார்ப்போம் என்று அவன் கேட்க்க , அஸ்வதி தனது போனில் இருந்த அவளின் ஆஷ்ரம நண்பர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட சிறு வயது குழு புகைப்படத்தை அவனிடம் காட்டினாள்…..

 

விஹான் அஸ்வதி காட்டிய புகைப்படத்தில் அஸ்வதியை தேடிக்கொண்டிருந்தான்……

 

அஸ்வி இந்த கிரீன் கலர் கவுன் போட்ட குட்டி பாப்பா தானே நீ?

 

எப்படி விஹான் கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க?

 

என்னோட காதலியோட கண்ணு எனக்கு தெரியாதா?   உன்னோட கன்ன வச்சிதான் உன்ன கண்டுபிடிச்சேன் என்று அவன் அவளின் கண்களை பார்த்தவாரே கூறினான்…….

 

அஸ்வதி உனக்கு இவங்களோட பேர் எல்லாம் ஞாபகம் இருக்குதா?

 

ஓ சூப்பரா ஞாபகம் இருக்குதே…..

 

அப்படியா சொல்லு பாப்போம்…..

 

இவன் பேரு மதன் , அப்புறம் இவன் பேரு சூர்யா, அப்பறம் இவன் பேரு ஹர்ஷத்,  அப்புறம் இவ பேரு வள்ளி அப்புறம் இவதான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் துவாயி ……

 

உங்களுக்கு பின்னால உக்காந்துட்டு இருக்குற சிஸ்டர் பேரு ஞாபகம் இருக்குதா?     அப்புறம் இந்த மஞ்சள் புடவை கட்டுனவங்க  பேர் என்ன?இவங்க யாரு ?   ஒரு போலீஸ் உட்கார்ந்துட்டு இருக்காங்க,  யார் அவங்க?

 

இங்க லெப்ட் சைடுல உக்காந்துட்டு இருக்குறாங்கல்ல இவங்க பேரு அக்னஸ் சிஸ்டர் அண்ட் ரைட் சைடு உக்காந்துட்டு இருக்கிறவங்க பேரு மரியா சிஸ்டர், அப்புறம் இந்த மஞ்சள் புடவை கட்டிட்டு இருக்குறவங்க தான் வாணி அம்மா , அப்புறம் இந்த போலீஸ் விஜய் அப்பா…….

 

அது என்ன விஜய் அப்பா?

 

விஜய் அப்பா தினமும் எங்க ஆஷ்ரமத்துக்கு வந்துருவாரு எங்க கூட தான் நைட் சாப்பாடு சாப்பிடுவாரு , விஜய் அப்பா ரொம்ப நல்லவரு எங்க கூட எப்பவுமே ஜாலியா விளையாடிட்டே இருப்பாரு………

 

விஜய் அப்பா, ஃபேமிலி உங்ககிட்ட பேச மாட்டாங்களா?

 

விஜய் அப்பா ஒரு போலீஸ் அப்போ ஒரு நாள் விஜய் அப்பா வீட்டுக்கு ரவுடிஸ் வந்து விஜய் அப்பாவோட குடும்பத்தை கொன்னு சாமிகிட்ட அனுப்பிட்டாங்க அதனால விஜய் அப்பா தனியா ஆகிட்டாங்க அதனால எங்க கூட வந்து எப்பவும் இருப்பாங்க எங்க எல்லாருக்கும் அவர ரொம்ப பிடிக்கும், அப்புறம் விஹான் உங்களுக்கு ஒன்னு தெரியுமா ?

விஜய் அப்பா ரொம்ப கெத்தா போலீஸ் டிரஸ் போட்டுட்டு வருவாங்க அதை பார்த்து இந்த மதனும் வள்ளியும் நா பெரிய வயசான பிறகு போலீஸ் ஆவேன்னு சொல்லிட்டு திரிவாங்க தெரியுமா???

 

அப்போ அந்த வயசுலயே உங்களுக்குன்னு கனவு வச்சிருந்தீங்களா?     நா பெரிய வயசா ஆனா பிறகு இது தான்  ஆவேன்னு எல்லாம்  நினைச்சு வச்சு இருந்தீங்களா?

 

விஹான் எங்களோட உலகம் ரொம்ப சின்னது தான் ஆனா எங்களோட கனவு ரொம்ப ரொம்ப பெருசா இருந்தது , மதனும் வள்ளியும் போலீசாகனும்ன்னு நினைச்சிட்டு இருந்தாங்க, நா,  துவாயி, ஹார்ஷத் மூனு பேரும் டீச்சர் ஆகலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தோம், சூர்யாவுக்கு ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட் ஆரம்பிக்கணும்னு ஆசை இப்படி எங்களுக்கு நிறைய நிறைய கனவு இருந்துச்சு என்னோட கணவ நான் அடஞ்சுட்டேன் என்னோட ஃபிரண்ட்ஸ் அவங்களோட கணவ அடஞ்சிருப்பாங்க அப்படின்னு நினைக்குறேன்……

 

சரி நீங்க எல்லாரும் டீச்சர் ஆகனும் போலீஸ் ஆகனும்ன்னு நினைச்சீங்க ஆனா சூர்யா மட்டும் ஏன் சூப்பர் மார்க்கெட் வைக்கணும்னு நினைச்சாங்க?

 

எங்களோட ஆசிரமத்துக்கு எதிர்க்க புதுசா ஒரு சூப்பர் மார்க்கெட்  வந்துச்சு அப்போ அந்த காலத்துல சூப்பர் மார்க்கெட் எல்லாம்  பாக்க ரொம்ப புதுசா இருந்தது , நம்மளே நமக்கு தேவையான பொருள் எல்லாம் அந்த ட்ராலில்ல எடுத்து போட்டுட்டு நம்ம அந்த சூப்பர் மார்க்கெட் உள்ள எங்க வேனாலும் சுத்தலாம் , சூப்பர் மார்க்கெட்ல எல்லா பொருளும் அழகா அடுக்கி வச்சிருப்பாங்க , உள்ள கலர் கலரா நிறைய லைட் எரிஞ்சிட்டு இருக்கும் , அந்த சூப்பர் மார்க்கெட்ட நாங்க ஆஷ்ரமத்துல இருந்து எட்டி எட்டி பாத்துட்டு இருப்போம் , ஒரு நாள் , எங்களுக்கு அந்த சூப்பர் மார்க்கெட் உள்ள போய் பாக்கனும்ன்னு ஆசை வந்துடுச்சு இத நாங்க சிஸ்டர் கிட்ட கேட்டா விட மாட்டாங்க அதனால ரெண்டு  சிஸ்டர்ஸ்ஸும் ஊர்ல இல்லாத சமையம் நாங்க ஆறு பேரும் சேர்ந்து வாணி அம்மா கிட்ட அழுது , கெஞ்சி நல்ல டிரஸ் எல்லாம் போட்டுட்டு அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு போனோம் ஆனா அந்த சூப்பர் மார்க்கெட் உள்ள கூட எங்கள விடவே இல்ல , வானியம்மா அந்த சூப்பர் மார்க்கெட்ல இருந்த அன்னாக்கிட்ட ரொம்ப கெஞ்சி பாத்தாங்க உள்ள விட சொல்லி,

நாங்க வேடிக்கை பாக்க வரல பொருள் வாங்க தான் வந்தோம்ன்னு  எவ்வளவோ சொல்லி பாத்தாங்க ஆனா அந்த அண்ணா எங்கள உள்ள விடவே இல்ல அது ஏன்னு இன்னும் எனக்கு புரியல  …..

அப்போ அந்த சூர்யா நா பெரிய பையன் ஆன பிறகு ஒரு சூப்பர் மார்க்கெட் திறக்குறேன் அந்த சூப்பர் மார்கெட் பேரு சூர்யா சூப்பர் மார்கெட் அப்போ நீங்க எல்லாரும் அங்க வாங்க உங்களுக்கு என்ன தேவனாலும்  தாராளமா எடுத்துக்கோங்கன்னு சொன்னான் இதனாலதான் அவன் சூப்பர் மார்க்கெட் ஒப்பன் பண்ண போறேன்னு சொன்னான்…….

 

உங்க எல்லாருக்கும் இவ்வளவு ஸ்ட்ராங்கான கணவு இருந்துச்சா?

 

ஆமா விஹான் , உங்களுக்கு ஒன்னு தெரியுமா விஹான்?

 

என்ன அஸ்வி?

 

நான் இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் இதெல்லாம் சொன்னது இல்ல உங்ககிட்ட தான் ஃபர்ஸ்ட் டைம் இதெல்லாம் ஷேர் பண்றேன் என்று அவள் நிறைய நிறைய பேசிக்கொண்டே இருந்தாள் அதை சந்தோஷமாக விஹான் கேட்டுக் கொண்டே படகை செலுத்தியவாறு அந்த நதியில் பயணித்துக் கொண்டிருந்தனர்……

 

நீ உரையாடு விடிய விடிய…

ஊர் கத பேசு நிறைய நிறைய…

இந்த ரா முழுசும் நிலவு எரியும்…

அட உறங்காதே.….

 

ரெக்கைய கட்டுதே கட்டுதே நொடி…

மின்னல வெட்டுதே வெட்டுதே விழி…

மின்மினி வார்த்தைய பேசி…

இரு உசிர் எங்கோ ஊர்வலம் போயிடுதே…

அட காதலின் கண்ணுல ரெண்டுமே மாட்டிடுதே…….

 

அந்த நதியில் , நிலவின் ஒளியில் இருவரும் காதலாக கதைத்துக் கொண்டே சென்றனர்…….

 

காதல் காட்சிகள் தொடருமா??

 

தொடரும்…..

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்