Loading

காதல் – 27

 

விஹானின் காதலை அறிந்து கொண்ட பீவி தன் மகனின் காதலுக்கு பச்சை கொடி காட்ட , தன் தாயாரின் ஒப்புதலை வாங்கிய விஹான் தன்னுடைய தந்தையின் சம்மதத்தையும் வாங்கி தரும்படி தன்னுடைய தாயிடம் கேட்க அவரும் சரி என்று தனது கணவர் சிந்திக்கிடம் தன்னுடைய மகனின் காதல் பற்றி கூறி சம்மதம் வாங்கி விட்டார் ….

அஸ்வதியின் சிறுவயதில் சுலோச்சனா மட்டும் தேவராஜ் தத்தெடுத்ததை கூறியதை எனக்கு முன்பே தெரியும் என்று அவர் கூறினார்……

 

என்னது உங்களுக்கு முன்னாலேயே தெரியுமா? எனக்கே நேத்து தான் தெரியும் உங்களுக்கு எப்படி முன்னாலயே தெரியும்?

 

பீவியின் இந்த கேள்வியில் சித்திக் சிரித்து விட்டார்……

 

என்னங்க சிரிக்காதீங்க சொல்லுங்க உங்களுக்கு எப்படி தெரியும் ?                                     தேவா அண்ணா சொன்னாங்களா?

 

பீவி , அஸ்வதிய நா தான் ஆசிரமத்தில் கொண்டு போய் சேர்த்தேன்…..

 

என்னங்க சொல்றீங்க ?        எனக்கு ஒன்னும் புரியல…..

 

பீவி நம்ம ஃபர்ஸ்ட் சென்னையில தான குடி இருந்தோம்  அப்போ தானே  நம்ம குடும்பத்துக்கும் தேவா குடும்பத்துக்கும் நல்ல பழக்கம் ஆச்சு?

 

ஆமாங்க…..

 

அப்போ ஒரு நாள் நா ஆபீஸ் விட்டு என்னோட பைக்ல வந்துட்டு இருந்தேன் அப்போ ஒரு குப்பை தொட்டி பக்கத்துல ஒரு குழந்தை அழுகுற சத்தம் கேட்டுச்சு அத நா எடுத்து பார்த்தேன் குட்டி குழந்தைய  ஒரு குட்டி துண்டுல சுத்தி அங்க யாரோ போட்டுட்டு போயிருக்காங்க…….

 

எனக்கு அந்த குழந்தையை முதல்ல பார்த்த உடனே தேவாவுடைய குடும்பம் தான் ஞாபகம் வந்துச்சு ஏன்னா தேவாவுக்கு ரெண்டு வருஷமா குழந்தை இல்லை அதான் இந்த குழந்தைய அவன் கிட்ட கொடுக்கலாம்ன்னு நினைச்சேன் ஆனா சுலோச்சனா குப்பையில் இருந்த குழந்தை எனக்கு வேணாம் அப்படின்னு சொல்லிட்டா சோ நா இந்த குழந்தையை அஸ்வதின்னு பேரு வச்சி ஆசிரமத்தில் சேர்த்துட்டு வந்தேன் , ஆனா கடவுள் சித்தமா நா யார்கிட்ட அஸ்வதியே  கொடுக்கணும்னு நினைச்சேனோ அவங்க கிட்டயே கரெக்டா அஸ்வதி போய் சேர்ந்துட்டா என்று அவர் கூறினார்…….

 

என்னங்க எதுக்கு அஸ்வதி ஆசிரமத்தில் சேர்த்துட்டு வந்தீங்க?                                    அவள நம்ம  வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல்ல?

 

நீ சொல்ற மாதிரி அஸ்வதிய நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கலாம்தான் , ஆனா அப்போ அந்த சமயத்துல நம்ம ஒன்னும் அவ்வளவு பெரிய பணக்காரங்க இல்லை,  ஏற்கனவே ரெண்டு குழந்தைங்க நம்ம கிட்ட இருக்குது அதனால மூணாவதா ஒரு குழந்தை வளர்க்க முடியாது அப்படின்னு ஆசிரமத்துல விட்டுட்டு வந்தேன்……

 

நமக்கு கொஞ்சம் வசதி வாய்ப்பு வந்த பிறகு  நீங்க அஸ்வதிய கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல்ல?

 

நானும் அதான் நினைச்சேன்ம்மா ஆனா அதுக்குள்ள தேவா அஸ்வதிய தத்தெடுத்துக்கிட்டான் அவங்க ரெண்டு பேர் கிட்டயும் அஸ்வதி சந்தோஷமாக இருப்பா அப்படின்னு விட்டுட்டேன்…..

 

இல்லங்க நீங்க நினைக்கிற மாதிரி அஸ்வதி  அவங்க வீட்டுல ஒன்னும் சந்தோஷமா இல்ல , அஸ்வதிய சுலோச்சனா ரொம்ப கொடுமைப்படுத்தி இருக்கிறா என்று சுலோச்சனா , லீலாவதி , அனந்தி மூவரும் அஸ்வதிக்கு செய்த கொடுமைகளை சிந்திக்கிடம் பீவி கூறினார்…….

 

அடக்கடவுளே ,  இப்படி எல்லாம் மனுஷங்க இருப்பாங்களா? அந்த குழந்தை ரொம்ப பாவம் , பீவி நா சொல்றேன் அஸ்வதி தான் என்னோட மருமக  நம்ம விஹானுக்கும் அஸ்வதிக்கும் ஜாம் ஜாம்ன்னு நா கல்யாணம் பண்ணி வைக்கிறேன் , அஸ்வதிய நம்ம ரொம்ப நல்லா பாத்துப்போம் என்று சித்திக் கூற பீவியின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது…….

 

அட என்ன பீவி கண்ணுல தண்ணி வச்சிக்கிட்டு கன்ன தொடம்மா என்று அவர் பீவியின் கண்ணீரை துடைத்து விட்டார்…….

 

என்னங்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குதுங்க…….

 

எனக்கும் தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று ஒரு குரல் கேட்டது…..

 

சித்திக் மற்றும் பீவி திரும்பி  பார்த்தார்கள் அவர்களின் அறை வாசலில் விஹானா சிரித்து கொண்டே நின்றாள்……

 

ஏய்  வாயாடி நீ எப்ப வந்த?

 

அதெல்லாம் அப்பவே வந்தாச்சு, அப்பா உங்களுக்கு அஸ்வதிய அண்ணா கல்யாணம் பண்ணிக்கிறதுல உங்களுக்கு சம்மதமா?

 

எனக்கு முழு  சம்மதம் விஹானா…..

 

ஆமா இப்போ உங்க அண்ணன் என்ன பண்ணிட்டு  இருக்குறான்?

 

அவ என்னப்பா பண்ணிட்டு இருக்க போறான் ?              தூங்குற அஸ்வதி கைய புடிச்சிட்டு அவ கிட்ட தனியா பேசிகிட்டு இருப்பான்…..

 

என்னோட மகன் காதல் செய்யுறத நா அத பார்க்கணுமே……

 

வாங்கப்பா போய் பாக்கலாம் என்று விஹானா தனது பெற்றோர்களை தனது அறைக்கு அழைத்து சென்றாள்…..

 

விஹானா கூறியது போலவே விஹான் அஸ்வதியின் கைகளை பிடித்துக் கொண்டு தூங்கும் அவளை பார்த்து ரசித்துக் கொண்டு  இருந்தான்……

 

அப்போது அஸ்வதி விழித்துவிட்டாள்…..

 

அவள் முதலில்  கண் விழித்ததும் தன்னுடைய காதல் மண்ணவனை பார்த்து அழகாக சிரித்தாள்……

 

விஹான் என்ன விட்டுட்டு எங்கேயும் போயிட மாட்டீங்க தானே?

என்று அவள் பெட்டில் இருந்து எழுந்தவாறு கேட்க அப்பொழுது அவளின் கை டிவி ரிமோட் மேல் பட்டு டிவி ஆன் ஆனது அதில்…..

 

உயிரே என் உயிரே

உனக்காக நான் இருப்பேன்

உலகம் வந்தாலும்

உனக்காக நான் எதிர்ப்பேன்

கண்களில் சோகம் என்ன

காதலால் காவல் செய்வேன்

கண்மணி உன்னை தீண்டும்

காற்றுக்கும் வேலி செய்வேன்

ஆயிரம் தடை தாண்டியே

உன்னை பாதுகாப்பேன்

நானே நானே

பார்த்து தான் ரசிச்சேனே

பார்வையில அணைச்சேனே

உன் கூட தான்

என் நாளும் இருப்பேனே 

தோழனா வருவேனே

தோள்களை தருவேனே

உன்னோட தான்

எப்போதும் தொடர்வேனே

ஆகாயமே சாய்ந்தாலும்

தூணாக என் காதல் தாங்குமே

பூகம்பமே வந்தால் என்ன

பூ போல நான் காப்பேன்”

 

என்று விஷால் சுருதிஹாசனுக்காக யுவன் சங்கர் ராஜா பாடி கொண்டு இருந்தார்……

 

நா சொல்ல நினச்சத யுவன் அண்ணனே சொல்லிட்டாங்க என்று அவன் சிரித்து கொண்டே என்னோட செல்ல தேவதைக்கு இப்ப கால் வலி பரவாயில்லையா?

 

ஆமா விஹான் இப்ப கால் வலி கொஞ்சம் குறைஞ்சிருக்கு…..

 

சூப்பரு….                                              சரி என்னோட காதலிக்கு இப்ப என்ன சாப்பிட வேண்டும்? நீ மதியத்துல இருந்து ஒண்ணுமே சாப்பிடல, சோ சொல்லு உனக்கு என்ன சாப்பிட பிடிக்கும் ?            நா உனக்கு செஞ்சு தாரேன்…..

 

எனக்கு புடிச்ச சாப்பாடு என்னன்னு எனக்கு தெரியலையே விஹான்…..

 

உனக்கு புடிச்ச சாப்பாடு என்னன்னு தெரியலையா?

 

ஆமா விஹான் , நா சின்ன வயசா இருக்கும்போது ஆசிரமத்துல யாருக்காவது பிறந்தநாள்  அப்படின்னா பிரியாணி செஞ்சு கொண்டு வருவாங்க , அது கொஞ்சம் நல்லா டேஸ்டா இருக்கும் சோ அத விரும்பி சாப்பிடுவேன் ஆனா அதுக்குன்னு எனக்கு பிரியாணி பிடிக்குமா அப்படின்னு கேட்டா எனக்கு தெரியல ஆனா எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியலையே என்று அவள் சோகமாக கூற……

 

அப்போ உனக்கு என்ன பிடிக்காதா?

 

ஐயோ அப்படி நான் சொல்லவே இல்லையே உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்று தன்னுடைய கைகளை விரித்து காட்டினாள்…..

 

இப்ப நீதான சொன்ன உனக்கு என்ன புடிக்கும்ன்னு  உனக்கே தெரியல அப்படின்னு……

 

அட அது சாப்பாடு பத்தி சொன்னேன் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என்று அவள் அவனைப் பார்த்து சிரித்தாள்……

 

நல்லா யோசிச்சு பாரும்மா ஏதாவது உனக்கு ஞாபகம் வரும், உனக்கு புடிச்ச சாப்பாடு கண்டிப்பாக உனக்கு நியாபகம் இருக்கும்……

 

அஸ்வதி நீண்ட நேரம் யோசித்தாள்….

 

ஞாபகம் வந்திருச்சு விஹான்…..

 

சொல்லு உனக்கு என்ன சாப்பாடு ரொம்ப பிடிக்கும்?

 

ஆசிரமத்துல நாங்க சின்ன புள்ளைங்களா இருக்கும் போது வாணியம்மா செவ்வாய், வெள்ளிக்கிழமையில பருப்பு சாதம்ன்னு ஒன்னு செய்வாங்க செம சூப்பரா இருக்கும் அப்படியே என்ன சொல்றது ……

நெய் அங்க இருக்காது ,  எப்பவாவது வாணி அம்மா அவங்க வீட்ல இருந்து கொஞ்சம் நெய் கொண்டு வருவாங்க சூடான பருப்பு சாதத்துல  நெய் போட்டு சாப்பிட்டா ரொம்ப டேஸ்டா இருக்கும் அதை செஞ்சு தரீங்களா?

 

என்னோட செல்ல இளவரசி கேட்டு நா செஞ்சு தராம இருப்பேனா?நீ என்கூட கிச்சன் வரியா இல்ல இங்கே ரெஸ்ட் எடுக்குறியா?

 

நான் உங்க கூட கிச்சன் வரேன்….

 

சரி அப்ப வா என்று விஹான் அஸ்வதியை தூக்கிக் கொண்டு கிட்சன் சென்றான் இதை விஹானா, பீவி, சித்திக் பார்த்துக் கொண்டிருந்தார்கள்….

 

அஸ்வதியை கிச்சன் ஸ்லாப்பில் அமர வைத்துவிட்டு விஹான் பருப்பு சாதம் செய்ய ஆரம்பித்தான்……

 

விஹான் முதலில் அரிசி மற்றும் பருப்பை ஒன்றாகச் சேர்த்து, 3 முறை நன்கு கழுவினான் , பின்னர் 20 நிமிடங்கள் அதை ஊற வைத்தான் ,பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, நெய்  ஊற்றி சூடாக்கினான் , அதன் பின்னர் கடுகு, சீரகம் போட்டு பொரிய விட்டு பின்னர் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்க்கினான், பிறகு  நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி கொண்ட இருந்தான்  அதன்பின் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி விட்டு ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பு கலவையை வடிகட்டி குக்கரில் சேர்த்தான் அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன்  4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கினான் , பிறகு குக்கரை மூடி, நடுத்தர தீயில் வைத்து 4 விசில் வரும் வரை வைத்தான், விசில் வந்த பிறகு, குக்கரில் உள்ள அழுத்தத்தை வெளியேற்றி பின்னர் மூடியைத் திறந்தான் ……

 

விஹான் வாசம் தூள் பறக்குது…..

 

அவள் கூறியதை கேட்டு சிரித்து கொண்டே சாதத்தை மெதுவாகக் கிளறி விட்டான்  அதன் மேலே ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்துப் அப்பளம் பொரித்து ஊறுகாய் மற்றும் தயிருடன் சேர்த்து தட்டில் வைத்து அவளுக்கு சாப்பிட கொடுத்தான்…….

 

நீங்களும் என்கூடவே சாப்பிடுங்க ….

 

சரி என்று அவளும் அவனும் சேர்ந்து ஒரே தட்டில் இருவரும் மாறி மாறி ஊட்டி விட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்…..

 

அஸ்வதி மற்றும் விஹான் சந்தோஷமாக சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை சித்திக் பார்த்தார் அந்த காட்சி அவருக்கு நிறைவாக இருந்தது, பிறகு அவர் தனது அறைக்கு சென்றார் அவர் பின்னாலே , பீவி மற்றும் விஹான்னா சென்றனர்……

 

அப்பா அவங்க ரெண்டு பேரையும் பாத்தீங்களா எவ்வளவு சந்தோஷமா இருக்காங்கன்னு??  அஸ்வதி சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சுப்பா,  விஹான் ரூம் விட்டு வெளியே வர மாட்டான் , யார் கூடவும் பேசவும் மாட்டான் ஆனா இப்ப பாருங்க வாழ்க்கையில ரொம்ப அடிபட்டு வாழ்க்கையை நொந்து போயிருந்தவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்து ரொம்ப சந்தோஷமா இருக்காங்க…….

 

நீ சொல்லுறது ரொம்ப சரி விஹான்னா அவங்க ரெண்டு பேரும் ஓன்னா சந்தோஷமா இருப்பாங்க…..

 

விஹான் சாப்பாடு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு, நா சின்ன வயசுல சாப்பிட்ட அதே டேஸ்ட்……

 

உனக்கு புடிச்சிருக்குல்ல எனக்கு அதுவே போதும் சரி பிளேட்ட கொடு நான் கழுவி வச்சுட்டு வரேன் என்றிட்டு அவன் அவள் கையில் வைத்திருந்த தட்டை வாங்கிவிட்டு அவளை சிங்க் அருகே தூக்கி சென்று விட்டு அவளின் கைகளை கழுவ செய்து விட்டு அதே கிட்சென் ஸ்லாப்பில்  அமர வைத்து விட்டான்….

 

பாத்திரமெலாம் கழுவி வெச்சாச்சு இப்ப நம்ம இரண்டு பேரும் சேர்ந்து டிவி பார்ப்போம் என்று அவன் அவளை ஹாலுக்கு அழைத்து சென்றான்……

 

விஹான் டிவி ஆன் செய்தான் அதில் நானி, சாய் பல்லவி நடித்த ஷ்யாம் சிங்கா ராய் படம் ஓடி கொண்டு இருந்தது இருவரும் அதை பார்த்து கொண்டு இருந்தார்கள்……

 

விஹான் மற்றும் அஸ்வதி ஒன்றாக சந்தோஷமாக படம் பார்த்துக் கொண்டிருப்பதை சுலோச்சனா  மற்றும் அனந்தி வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தனர்……

 

அடுத்து நடக்க போவது என்ன???

 

பொறுத்திருந்து பார்ப்போம்…..

 

தொடரும்….

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்