
காதல் – 26
அனந்தியின் சூழ்ச்சியால் அஸ்வதியின் பாதங்கள் இரண்டும் ஆசிட் பட்டு வெந்து, சிவந்து, புண்ணாகி போனது, விஹான் தன்னவளை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு சென்று அவளுக்கு சிகிச்சை அளிக்க வைத்துவிட்டு அவளை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தான் வீட்டிற்கு வந்தவுடன் அஸ்வதி உறங்கி விட்டாள் ஆனால் விஹானோ அஸ்வதி அருகில் அமர்ந்து கொண்டு தூங்கும் அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவளின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான் அதை அவனின் தாயார் பார்த்து விட்டார் பார்த்துவிட்டு அவனிடம் தனியாக பேச வேண்டும் என்று தன்னுடைய அறைக்கு அழைத்தார்……..
பீவி தனது அறையில் கட்டிலில் அமர்ந்து கொண்டு கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு அமர்ந்து கொண்டிருந்தார்…..
அம்மா என்று விஹான் அவரின் அறைக்கு வெளியில் நின்றான்….
எதுக்கு வெளியே நிக்குற உள்ள வா….
விஹானும் உள்ளே வந்தான்…..
உட்காரு…..
விஹானும் அவருக்கு சற்று தள்ளி அமர்ந்தான்……
அது வந்து….
அம்மா….
நா….
அஸ்வதி ….
அது….
அஸ்வதி ….
அஸ்வதி….
எனக்கு….
அது….
என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி திக்கித்திக்கி பேசுற?அஸ்வதி அஸ்வதின்னு சொல்ற என்னாச்சு அவளுக்கு?
அம்மா அது வந்து அஸ்வதிக்கு ரொம்ப குளிருச்சி, அதான் அவ கைய புடிச்சு கொஞ்சம் சூடு படுத்திட்டு இருந்தேன்….
விஹான் உனக்கு பொய் பேச வராதுன்னு எனக்கு நல்லாவே தெரியும் சோ பொய் பேச ட்ரை பண்ணாத , நா ஹாஸ்பிடல்லயே வச்சி எல்லாம் பாத்துட்டேன் , அதனால சுத்தி வளச்சி பேசாம நா நேராவே கேக்குறேன் , நா கேக்குற கேள்விக்கு உண்மையா பதில் சொல்லணும் சரியா?
தனது தாயார் இவ்வாறு கேட்கவும் விஹானுக்கு உண்மையைத் தவிர வேறு எதுவும் கூற முடியாது என்று புரிய , சரிமா கேளுங்க என்றான்…..
நீ அஸ்வதிய விரும்புறயா?
ஆமாம்மா நா அஸ்வதிய உயிருக்கு உயிரா நேசிக்கிறேன்…….. அவ இல்லாம என்னால இருக்க முடியாது…..
இத சொல்றதுக்காடா இவ்வளவு தயக்கம்? அம்மா கிட்ட சொல்றதுல என்ன உனக்கு பயம்? நா உங்க ரெண்டு பேரயும் பிரிச்சிடுவேன்னு நினைச்சியோ?
இல்லம்மா அது வந்து…..
இங்க பாரு விஹான் எனக்கு அஸ்வதிய ரொம்ப ரொம்ப பிடிக்கும், அதுவும் அன்னைக்கு நீயும் விஹானாவும் அஸ்வதி சின்ன வயசுல எவ்வளவு கஷ்டம் அனுபவிச்சா அப்படின்னு சொன்னீங்கல்ல அப்ப நா அவள நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டேன், எந்த குழந்தைக்கும் அஸ்வதி மாதிரி ஒரு நிலைமை வந்துடக்கூடாதுன்னு அல்லா கிட்ட வேண்டிக்கிட்டேன் அஸ்வதிய நீ கல்யாணம் பண்ணி இங்க நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துரு, என்னோட செல்ல மருமக அஸ்வதிய நா ரொம்ப தங்கமா பாத்துப்பேன் சரியா இப்ப போய் என் மருமகள பத்திரமா பாத்துக்கோ போ என்று பீவி கூறவும் விஹானுக்கு ஒன்றும் புரியவில்லை அவன் அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்……
என்னடா என்னோட முகத்தையே பார்த்துட்டு இருக்குற?
அம்மா அஸ்வதி உங்களுக்கு ஓகேவா? அவள நீங்க மருமகளா ஏத்துக்கிட்டீங்களா?
ஆமாடா அத தானடா இவ்ளோ நேரமா பேசிட்டு இருக்கேன்……. என்னத்த நீ கவனிச்சிட்டு இருக்குற?
அம்மா நிஜமா உங்களுக்கு அஸ்வதிய மருமகளா ஏத்துக்க சம்மதமா?
ஆமாடா , ஆமா என்று அவர் சிரித்தார்…..
அம்மா எனக்கு இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா, அஸ்வதிய உங்க மருமகளா ஏத்துக்கிட்டது நினைச்சு எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று விஹான் தனது தாயாரின் கைகளை பிடித்துக் கொண்டு ஆனந்தமாக கூறினான்…..
இப்ப நா உனக்காக எடுத்த முடிவு உனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுக்குது அப்படின்னா எனக்கு அதுல பேரானந்தம் தான் விஹான், என்னோட விஹான் எப்போதுமே சந்தோஷமாவே இருக்கணும் அதுக்கு நா என்ன வேணாலும் பண்ணுவேன் சரியா??
நீங்க ஒத்துக்கிட்டீங்க அதுல எனக்கு ரொம்ப சந்தோசம் ஆனா அப்பா?
உங்க அப்பாவ ஒத்துக்க வைக்கிறது என்னோட பொறுப்பு நீ கவலைப்படாதே என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது விஹானா தனது தாயாரை கவனிக்காமல் தனது தமையனை மட்டுமே பார்த்துக் கொண்டே வந்து…..
அண்ணா இந்த போட்டோஸ், புட்டேஜ் பாரு என்று அவள் தனது போனை அவனிடம் நீட்டினாள்…..
அண்ணா அந்த சுலோச்சனாவும் அனந்தியும் எல்லை மீறி போயிட்டாங்க , இனி அவங்கள சும்மா விடக்கூடாது என்று அவள் பேசிக்கொண்டே அப்பொழுதுதான் தனது தாயாரை கவனித்து விட்டு…..
அண்ணா நா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் நா அப்புறமா வரேன் நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க என்று கூறிவிட்டு அவள் ஓட பார்க்க , பீவி அவளின் கைகளை பிடித்துக் கொண்டார்……
என்னடி புட்டேஜ் அது?சுலோச்சனா அனந்தி என்ன பண்ணாங்க?
அம்மா அது வந்து….
எனக்கு எல்லா விஷயமும் தெரியும் நீ தைரியமா என்கிட்ட சொல்லு…..
அம்மா அது வந்து அண்ணா அஸ்வதி லவ்…. அது வந்து……
அடியே அதான் எல்லாம் எனக்கு தெரியும் அப்படின்னு சொல்றேன்ல இப்போ இது என்ன புட்டேஜ்? அத சொல்லு…..
தனது தாயார் அவ்வாறு கூறவும்,
விஹானா தனது தமைனை பார்த்து, அண்ணா அம்மாவுக்கு எல்லாம் தெரிஞ்சிருச்சா?
ஆமா விஹானா அம்மாக்கிட்ட நா எல்லாம் சொல்லிட்டேன்…..
நீ அஸ்வதியை லவ் பண்றது?அவள சைட் அடிச்சது எல்லாம் சொல்லிட்டியா?
ஏய் விஹானா வாய மூடு , அம்மாவுக்கு நா அஸ்வதியை லவ் பண்றது தெரியும் நீ வந்த விஷயத்தை சொல்லு….
அப்ப சரி ஒரு ரூட்டு கிளியர் உனக்கு, இந்த வீடியோவ பாரு அண்ணா என்று தனது போனில் சுலோச்சனா மட்டும் மற்றும் அனந்தி பேசிக் கொண்டிருப்பதை அவர்களுக்கு தெரியாமல் விஹானா வீடியோ எடுத்திருந்தாள் அதை அவனிடம் காட்டினாள்…..
அந்த வீடியோவில் அஸ்வதியை விஹான் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பின் இருவரும் பேசிக்கொண்டதை விஹானா வீடியோ எடுத்திருந்தாள்…..
அதில் இருப்பதாவது…..
அம்மா இனி அந்த அஸ்வதிக்கு ஒரு வாரம் நடக்கவே முடியாது எனக்கு இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா……
ஆமா அனந்தி நீ செஞ்சது ரொம்ப ரொம்ப நல்ல காரியம், அன்னிக்கி உன்கிட்டயே எதிர்த்து பேசுறா என்ன?நம்மகிட்ட வச்சுக்கிட்டா இதுதான் கதி அப்படின்னு அவளுக்கு புரிஞ்சுருக்கும் என்று இருவரும் சிரித்தனர்…..
அம்மா நா பாக்குறப்போ அந்த அஸ்வதி விஹான கட்டிபிடிச்சுட்டு சந்தோஷமா சிரிச்சிட்டு இருந்தா என்னால அதை பார்த்து சகிக்க முடியலம்மா , அதான் அவளுக்கு ஒரு நல்ல தண்டனை கொடுத்தேன்…..
எனக்கு உன்னை நினைச்ச ரொம்ப பெருமையா இருக்கு அனந்தி என்று இருவரும் பேசிக்கொண்டது அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது…..
அடப்பாவிகளா இவங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் அஸ்வதியோட கால்ல ஆசிட் பட வச்சாங்களா? இப்படியும் மனுஷங்க இருக்கத்தான் செய்கிறாங்க என்ன?
ஆமா அம்மா அந்த சுலோச்சனாவும் அனந்தியும் ரொம்ப மோசமானவங்க, அவங்க ரெண்டு பேரும் அஸ்வதியோட சொத்த அவங்க பேருக்கு மாத்துறதுக்காக அவங்க எந்த எல்லைக்கும் போவாங்க நம்ம மூணு பேரும் சேர்ந்து அஸ்வதிய பத்திரமா பாத்துக்கணும்……
ஆமா அண்ணா நீ சொல்றது ரொம்ப சரி, நம்ம மூணு பேரும் சேந்து அஸ்வதிய பத்திரமா பாத்துக்கணும் ……
நீங்க ரெண்டு பேரும் சொல்றது சரிதான் ஆனா இங்க நம்ம வீட்ல இருக்குற வர நம்ம மூணு பேரும் சேர்ந்து அஸ்வதிய பத்திரமா பாத்துப்போம் ஆனா அவ சென்னைக்கு போயிட்டா யாரு அவளை பார்த்துப்பா? அங்க போய் அவங்க ரெண்டு பேரும் அவள ஏதாவது செஞ்சுட்டா?
பீவி இவ்வாறு கேட்கவும் அண்ணன் தங்கை இருவருக்கும் , ஆமாம் இப்படி ஒன்று இருக்கிறதே என்று அப்பொழுதுதான் இருவருக்கும் புரிந்தது……
அம்மா இப்ப நம்ம என்ன பண்றது?
நா ஒரு ஐடியா சொல்றேன் அதுபடி நீங்க செய்வீங்களா?
சொல்லுங்கம்மா செய்றோம்…..
பீவி தனது பிளானை தனது மகன் மற்றும் மகளிடம் கூறினார் அதைக் கேட்ட இருவரும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர்……
அம்மா சூப்பர் பிளான்ம்மா , இன்னைக்கே அதுக்கு தேவையான எல்லாத்தையும் நா ஏற்பாடு பண்றேன்….
அண்ணா நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன்…..
சரி விஹானா…..
அப்புறம் விஹான் உன்னோட காலேஜ் ஃப்ரண்ட் சென்னையில ஐஜியா இருக்கான்ல்ல? அவன் பேரு என்ன?
மதன்குமார்…..
கரெக்ட் கரெக்ட் …… அவனேதான் அவன்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லி வைப்பியா?
சரிம்மா நா அவன்கிட்ட பேசுறேன்……
சரி விஹான் நீ போய் அஸ்வதிய பார்த்துக்கோ போ……
விஹானும் அவன் தாயார் கூறியதை கேட்டு சந்தோஷமாக அஸ்வதியை பார்க்க சென்றான்……
அவன் அறையில் அஸ்வதி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அப்பொழுது அனந்தி அவளின் கையில் சிறிது மண்ணை எடுத்துக்கொண்டு அவளின் காயம் பட்ட காலில் , தூவ பார்த்தாள் அதை விஹான் பார்த்துவிட்டான்…..
ஏய் அனந்தி என்ன பண்ற?
அவனை அங்கு எதிர்பார்க்காத அனந்தி அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்……
என்ன பண்ணிட்டு இருக்க நீ?உன்னோட கையில என்ன வச்சிட்டு இருக்குற?
அது ஒன்னும் இல்ல நான் சும்மா அஸ்வதியை பார்க்க வந்தேன்….. சரி நா போறேன் என்று கூறிவிட்டு அவள் ஓடிவிட்டாள்…..
விஹான் அஸ்வதி அருகில் அமர்ந்து கொண்டு தூங்கும் தனது அழகிய காதலியின் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தான்……
இங்கு அவரின் அறையில் பீவி விஹானாவிடம் பேசிக் கொண்டிருந்தார்…..
ஆமா உனக்கு விஹான் அஸ்வதிய விரும்புறது முன்னாலயே தெரியுமா?
எனக்கு அவங்க ரெண்டு பேரும் விரும்புறது முன்னாலயே தெரியும் , உங்களுக்கு ஒன்னு தெரியுமா? அண்ணன் அஸ்வதிய விரும்புறான்னு நா தான் முதல்ல கண்டுபிடிச்சேன் அது அவனுக்கே தெரியல தெரியுமா?
அது எப்படி விஹான்னா அவனுக்கே தெரியாம இருக்கும் ?
அண்ணனுக்கு அஸ்வதிய ரொம்ப பிடிக்கும் ஆனா அது காதலா அப்படின்னு அவனுக்கு தெரியல , அண்ணன் அந்த மனீஷா பிராப்ளம நினைச்சு அஸ்வதி கிட்ட பேச தயங்கினான், ஆனா நா அஸ்வதிக்கிட்ட மனீஷா விஷயத்தை பத்தி சொல்றப்ப அவ யோசிக்காம அண்ணனுக்கு தான் சப்போர்ட் பண்ணா எனக்கு அப்பவே ரொம்ப ஆச்சரியமா இருந்தது அண்ணன் தனியா அந்த விஷயத்தை நினைச்சி எவ்வளவு வருத்தப்பட்டான்னு அவளுக்கு புரிஞ்சது கூட நம்மளுக்கு புரியலையே அப்படின்னு……
அஸ்வதி நம்ம விஹான ரொம்ப நல்லா புரிஞ்சு வச்சிருக்கா, அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்தா ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க இந்த விஷயத்தை உடனே நான் உங்க அப்பா கிட்ட சொல்லிட்டு வரேன்……
அம்மா அப்பாவ அண்ணனோட காதலுக்கு ஓகே சொல்ல வச்சிருங்கம்மா……
பீவி இருக்க பயமேன் நா உங்க அப்பாவ ஓகே சொல்ல வைக்கிறேன் பாரு என்று கூறிவிட்டு பீபி சித்திக்கின் அறைக்கு சென்றார்……
சித்திக் தன்னுடைய அறையில் தனது மடிக்கணினியில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார்……
அப்பொழுது பீவி அங்கு சென்றார்…..
என்னங்க…..
சொல்லுமா என்ன விஷயம்?
அது….
வந்து….
என்னம்மா ஆச்சு? என்ன விஷயம் ? என்கிட்ட சொல்றதுக்கு உனக்கு என்ன அவ்வளவு தயக்கம்?தயங்காம சொல்லும்மா……
என்னங்க நம்ம விஹான்….
நம்ம விஹான்னுக்கு என்ன?
என்னங்க நம்ம விஹான் நம்ம அஸ்வதியை உயிருக்கு உயிரா விரும்புறான் , அவளையே கல்யாணம் செஞ்சுக்க விரும்புறான் அதுக்கு நீங்க சம்மதிக்கனும் …….
பீவி எந்த ஒளிவு மறைவு இல்லாமல் நேராக விஷயத்தை கூறவும் சித்திக் தனது மடிக்கணினியை ஓரமாக வைத்துவிட்டு தனது மனைவியின் முகத்தை பார்த்தார்……
உனக்கு அஸ்வதிய புடிச்சிருக்கா?
எனக்கு அவள ரொம்ப புடிச்சிருக்கு , நம்ம விஹான் அவள கல்யாணம் பண்ணிக்கிட்டா ரொம்ப சந்தோஷமா இருப்பான்……..
அதான் நீயே சொல்லிட்டியே நம்ம விஹான் அஸ்வதிய கல்யாணம் பண்ணிக்கிட்டா ரொம்ப சந்தோஷமா இருப்பான்னு, அப்புறம் வேற என்ன வேணும் ? எனக்கு நம்மளோட குழந்தைங்க சந்தோஷம்தான் முக்கியம் அஸ்வதிய நம்ம விஹான் கல்யாணம் பண்ணிக்கட்டும் , எனக்கு அதுல முழு சம்மதம் என்று சித்திக் கூறவும் சந்தோஷத்தில் பீவி அவரை கட்டியணைத்துக் கொண்டார் ……
பிறகு அவரை விட்டு விலகி…..
என்னங்க இன்னொரு விஷயம்….. அது வந்து …. அஸ்வதிக்கு அம்மா அப்பா கிடையாது சுலோச்சனா , தேவா அண்ணா அஸ்வதிய தத்தெடுத்து வளக்கறாங்க அது என்று அவர் தயங்க……
அதான் எனக்கு தெரியுமே…..
ஏதே தெரியுமா 😳என்று பீவி தன் கணவரை அதிர்ச்சியாக பார்த்தார்…..
எப்படி சித்திக்கு இந்த விஷயம் தெரியும்?
அடுத்து நடக்க போவது என்ன?
பொறுத்திருந்து பார்ப்போம்……
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….
💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

