
காதல் – 23
விஹானின் காதல் பார்வைகளிலும் , அவனின் காதல் முத்தங்களாலும் அஸ்வதியை கன்னம் சிவக்க வைத்து கொண்டு இருந்தான் அந்த காதல் கள்வன் , இதை பார்த்த பீவிக்கு அவளின் கன்னங்கள் இரண்டும் இப்படி சிவந்திருக்க காரணம் அந்த ரூமில் பொருத்தப்பட்டுள்ள ஹீட்டரா அல்ல அந்த காஷ்மீரின் குளிரா என்று அவருக்கு ஒன்றும் புரியவில்லை…..
அஸ்வா கன்னா உனக்கு ஏன் இப்படி கன்னம் சிவக்குதுன்னு எனக்கு ஒன்னும் புரியல,இந்த விஹான்னா வேற புரியாத மாதிரி எதோ பேசிட்டு இருக்கா , என்று அவர் கடிகாரத்தில் மணியை பார்க்க அது பதினொன்று ஆக பத்து நிமிடங்களே உள்ளது என்று கூற…..
சரி சரி நேரமாச்சு எல்லாரும் போய் தூங்குங்க என்று பீவி கூறவும் அஸ்வதி, விஹான் , விஹான்னா மூவரும் உறங்க சென்றார்கள்…..
அஸ்வதி வழக்கம் போல விஹான்னா பெட்டில் படுத்து தூங்கினாள் (விஹானை பார்த்து கொண்டே தான் , அவனும் அதே தான் செய்தான்🤭)
நள்ளிரவு நேரம்……
அனைவரும் நிம்மதியாக உறங்கி கொண்டு இருந்த நேரம்……
அம்மா…
இல்ல…
இல்ல….
நீங்க என்னோட அம்மா இல்ல…
நீங்க என்னயும் என்னோட விஹானயும் கொல்ல பாக்குறீங்க ….
எங்கள விட்டுருங்க….
உங்களுக்கு என்ன அந்த சொத்துதான வேனும் ?
நா அத உங்ககிட்ட தந்துடுறேன் ….
எனக்கு உங்களோட எந்த சொத்து பத்தும் தேவயில்ல….
எனக்கு என்னோட விஹான் மட்டும் போதும்…..
விஹான அடிக்காதீங்க, என்னய என்ன வேணாலும் பண்ணிக்கோங்க பிளீஸ் என்னோட விஹான விட்டுருங்க என்று அஸ்வதி தூக்கத்தில் அழுது புலம்பி பெட்டில் இருந்து கீழே விழ போகும் சமயம் அவளை விஹான் பிடித்து விட்டான்….
அவளை தூக்கி தன் பெட்டில் சுவர் ஓரமாக படுக்க வைத்து விட்டு…….. ஒன்னுமில்லம்மா ……… ஒன்னுமில்ல…. அவங்க என்னயோ, உன்னயோ எதுவும் செய்ய முடியாது நா செய்யவும் விட மாட்டேன் என்று அவன் அவளை கட்டி அணைத்து கொண்டு அவளின் முதுகை ஆதரவாக தடவி விட்டு அவளை ஆசுவாசப்படுத்தினான்………. அதில் அவளின் அழுகை நின்றது , அவள் அவன் மார்பினில் சாய்ந்து கொண்டே உறங்கி போனாள்…….
சாரிடி கண்ணம்மா இன்னைக்கு நா கொஞ்சம் டையர்ட்டா இருந்தேன் அதான் , தூங்கிடேன் இல்லனா முன்னாலேயே உன்ன பாத்துருப்பேன் என்று அவன் அவளை கட்டி அணைத்து கொண்டான்……..
என்னோட தங்கத்த அந்த சுலோச்சனா ரொம்ப பயம்புகறுத்தி வச்சிருக்கா , அவள நா சும்மா விட மாட்டேன் என்று அவன் மனதில் நினைத்து கொண்டான்……
அஸ்வதிக்கு அதிகாலையில் விழிப்பு தட்டியது ,அவள் கண் விழித்து பார்க்கும்போது அவள் விஹானின் மார்பினில் சாய்ந்து கொண்டு இருந்தாள்…….
நம்ம எப்படி விஹான் கூட தூங்கிட்டு இருக்கோம் என்று அவள் யோசித்து கொண்டு இருக்கும்போதே அவன் அவளை கட்டி அணைத்தப்படியே புரண்டு படுத்தான் அப்பொழுது அவனின் அழகிய தூங்கிய முகம் அவளின் முகத்திற்கு மிக மிக அருகில் இருந்தது……
அவ்வாறு அவனை அவள் மிக மிக நெருக்கமாக பார்க்கவும் அவளுக்குள் எதோ சொல்ல முடியாத உணர்வுகள் பொங்கி எழுந்தது ,அவனின் நெற்றி முடிகளை விலக்கி விட்டு அவனின் தலையை மெதுவாக கோதி விட்டாள் பிறகு அந்த உணர்வின் வீரியத்தில் அவள் அவனின் கன்னத்தில் முத்தமிட்டாள்…….
முத்தம் அவளேதான் அவனுக்கு கொடுத்தாள் , ஆனாலும் அவளின் கன்னங்கள் இரண்டும் சிவந்து விட்டது……
மறுபடியும் அவனின் மற்றொரு கன்னத்தில் முத்தம் கொடுக்க திரும்பிய சமயம் ……
விஹான் மீண்டும் புரண்டு படுக்க…. கன்னத்தில் கொடுக்க வந்த முத்தம் அவனின் உதடுகளில் பதிந்தது ……..
அதில் அஸ்வதிக்கு உடம்பில் ஷாக் அடித்த உணர்வு……
அந்த எதிர்பாரா முதல் இதழ் ஒற்றலில் விஹானும் விழித்து விட்டான் …..
அவன் அவளை நோக்க…
அவளும் அவணை நோக்க….
இருவரும் ஒருவரை ஒருவர் நோக்க….
நீண்ட நேரம் நடந்த இந்த நோக்கியாவில் அஸ்வதிதான் வெக்கத்தில் தலை குனிந்து கொண்டாள்…….
விஹான் அவளின் அழகிய முகத்தை நிமிர்த்தி பார்த்தான் , அந்திவானம் மறைக்கும் சிவப்பு நிறத்தில் இருந்தது அவளின் முகம்…..
என்ன ஒரு கன்னத்துல மட்டும்தான் கிஸ் பண்ணுவியா? ஒரு கன்னத்துல கிஸ் பண்ணிட்டு இன்னொரு கன்னத்துல கிஸ் பண்ணாம விட்டா தெய்வ குத்தம் ஆகிரும் தெரியுமா என்று அவன் குறும்பு மின்னும் கண்களோடு கேட்டான்…..
அவனின் கேள்வியில் 😳 அஸ்வதி முழிக்க……
நீ…
நீங்….
நீங்க….
ஆமா நா….
நாதான் ….
நாதான் உன்னோட இப்போதைய காதலன் வருங்கால கணவன் என்று அவன் அவளை பார்த்து கண் அடித்தான்…..
அது தெரியும்….
அது….
சரி ….. அது என்ன?
நீங்க எப்ப………. எப்ப முழிச்சீங்க?
இது ஒரு நல்ல கேள்வி…. நீ முழிச்ச பிறகு என்னோட முகத்த ரொம்ப நேரம் சைட் அடிச்சிட்டு , என்னோட தலைய கோதி விட்டப்போவே நா முழிச்சிட்டேன் …..
அடி ஆத்தி…..😳 என்று அவள் வாயை பிளக்க…..
அவன் அவளை நெஞ்சோடு சேர்த்து கட்டி அணைத்து கொண்டபடியே பேசினான்……
கன்னத்துல குடுத்த கிஸ்க்கு தொன்னூறு பெர்சென்ட்தான் கிக்கு ஏறுச்சு, இப்ப அடுத்து லிப்ஸ்ல கொடுத்தியே அதுல நூறு பெர்சென்ட் கிக்கு ஏறிடுச்சு என்று அவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்தவாறு கூறினான்……
கேடி விஹான் என்று அவள் அவனின் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளினாள்…..
அவனின் கன்னத்தை பிடித்து கிள்ளிய அவளின் கைகளை பிடித்து அவன் முத்தமிட்டான்……
ஆமா நா விஹான்னா பெட்லதான படுத்து தூங்கிட்டு இருந்தேன், உங்க பெட்டுக்கு எப்படி நா வந்தேன்?
நீ எதோ பயங்கரமான கனவு கண்டு பயந்து போய் கட்டில்ல இருந்து கீழே விழ போன அதான் உன்ன தூக்கி இங்க நா பத்திரமா என்னோட நெஞ்சுல சாச்சிக்கிட்டேன் என்று அவளின் கண்களை பார்த்தவாறு காதலாக கூறினான்……
அவன் பயங்கரமான கனவு என்று கூறவும் அவளுக்கு அவள் கண்ட கனவு நினைவுக்கு வர அவள் பயத்தில் அவனை கட்டி பிடித்து கொண்டாள், பயத்தில் அவளின் உடல் நடுங்கியது அதை அவனால் நன்கு உணர முடிந்தது…..
என்னாச்சு அஸ்விம்மா? ஏன் இப்படி உடம்பெல்லாம் இப்படி நடுங்குது?
விஹான் …….
விஹான்……..
அந்த சுலோச்சனா உங்களயும் என்னயும் ஒரு பெரிய இரும்பு கம்பி வச்சி அடிக்குறாங்க , நம்ம ரெண்டு பேரும் சாக போறோம் நா அந்த சுலோச்சனாக்கிட்ட அழுது கெஞ்சுறேன் என்னய என்ன வேணாலும் பண்ணிக்கோங்க என்னோட விஹான விட்டுருங்கன்னு அவ்வளோ அழுவுறேன் ஆனா அந்த பொம்பள என்னோட கண்ணு முன்னாலேயே உண்கள அடிக்கிறா என்று அவள் அவனின் மார்பினில் முகத்தை புதைத்துக் கொண்டு அழுதாள்…..
அச்சோ…. அஸ்வி செல்லம் அவங்களால உன்ன எதுவும் செய்ய முடியாது நா செய்யவும் விட மாட்டேன் என்று அவன் அவளின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தான்……
அதில் அவளின் அழுகை சிறிது மட்டுப்பட்டது……
விஹான் எனக்கு என்ன ஆனாலும் நா தாங்கிப்பேன் ஆனா உங்களுக்கு ஒன்னுன்னா என்னால தாங்கிக்க முடியாது………
“என்ன காயம் ஆன போதும்
என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே”
என்ற ரீதியில் அஸ்வதி அவனை பார்க்க……
உனக்கு எதுவும் ஆக நா விட மாட்டேன்…..
அவனின் நம்பிக்கையான பேச்சில் அவளின் பயம் நீங்கியது…….
என்னோட அஸ்வி இனி எப்பவும் அழவே கூடாது என்று அவன் அவளின் கண்களை துடைத்து விட்டான்…….
சரி இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் …..
நா விஹான்னா பெட்டுக்கு போறேன் என்று அவள் எழப்போக அவன் அவளை எழ விடாமல் இறுக்கமாக பிடித்து கொண்டான்…….
அவனின் அந்த செய்கையில் அவள் தன் முட்டை கண்ணை அரை அடிக்கும் பெரிதாக விரித்து அதிர்ச்சியில் உறைந்து போய் அவனை பார்த்து கொண்டு இருந்தாள்……
என்னடி அப்படி முழிக்குற என்று அவன் அவளின் மூக்கை தன் மூக்கால் உரசினான்…….
விஹான் நீங்க ரொம்ப ரொம்ப அமைதியான பையன்னு நினைச்சேன் ஆனா……
ஆனா என்னடி???
நீங்க ரொம்ப ரொமான்டிக் பெர்சனா இருக்கீங்க என்று அவள் சிரித்தாள்…..
நா நீ சொன்ன மாதிரியே ரொம்ப ரொம்ப அமைதியான பையன் தான் , ஆனா உன்ன பாத்தா மட்டும் என்னோட மூளை , மனசு எல்லாம் என்னோட பேச்ச கேக்காம உன் பின்னாலயே சுத்துது என்று அவன் அவளின் கண்களை பார்த்தவாறு காதலாக கூறினான்…….
சரி இப்போ நா விஹான்னா பெட்டுக்கு போகாம உங்க பெட்டுலயே நா உங்க கூட சேந்து தூங்குறத விஹான்னா பாத்துட்டா???
அவ ஏற்கனவே அந்த கோலத்துல நம்ம ரெண்டு பேரையும் பாத்துட்டா…..
ஏதே, எப்ப 😳???
நம்ம உத்தர்காண்ட் போன அன்னைக்கு…..
அட ஆமா , அன்னைக்கி நா உங்க பெட்டுலதான் தூங்கி முழிச்சேன் , அன்னைக்கும் நா கணவுல உளறினேனா?
ஆமாடா நீ அன்னைக்கு ரொம்ப பயந்து போய் கீழ விழ போன ……
விஹான் நா என்ன புண்ணியம் செஞ்சேன்னு எனக்கு தெரியல , ஆனா தவம் எதுவும் செய்யாம எனக்கு நீங்க என்னோட வாழ்க்கையில கிடச்சிருக்கீங்க அதுக்கு நா அந்த கடவுளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி கடன் பட்டுருக்கேன் என்று அவள் அவனை பார்த்து அழகாக சிரித்து கொண்டே கூறினாள்………
அப்போ நானும் நீ சொல்லுற அந்த தவம் , புண்ணியமெல்லம் செஞ்சிருக்கேன் போல அதான் எனக்கு உன்ன மாதிரி ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு எனக்கு காதலியா மனைவியா கிடச்சிருக்கா……
மனைவியா நா இன்னும் ஆகலயே?
இப்போ நா உங்க காதலிதானே?
நீ எப்ப என்னோட காதல ஏத்துக்கிட்டியோ அப்போவே நீ எனக்கு பொண்டாட்டி ஆகிட்ட…….
ஓஹோ அப்படியா காதல் கணவரே??
ஆமாம் காதல் மனைவியே என்று அவன் அவளின் நெற்றியில் மெல்லமாகவும் செல்லமாகவும் முட்டினான்……..
ஹலோ…..
ஹலோ….
உங்கள் காதல் காட்சிகளை அறைக்கு வெளியில் சென்று ஓட்டி கொள்ளுங்கள் , எனக்கு என்னுடைய தூக்கம் கலைகிறது என்று விஹான்னா திரும்பி படுத்தவாறே கூற……..
விஹான் விடுங்க நா போறேன் விஹான்னா முழிச்சிட்டா என்று அவள் அவனிடமிருந்து விலக நினைக்க , அவளால் நினைக்க மட்டும்தான் முடிந்தது , அவனிடமிருந்து ஒரு இன்ச் கூட அவளால் நகர முடியவில்லை அவனின் பிடி இரும்பு பிடியாக இருந்தது……..
என்னங்க என்ன விடுங்க என்று அவள் நாணத்தில் நெளிய அவளின் நானத்தை அவன் ரசித்து கொண்டு இருந்தான்………
காதல் காட்சிகள் தொடருமா??
பொறுத்திருந்து பார்ப்போம்……..
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்………
💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

