Loading

காதல் – 21

 

அந்த மீட்புப்படை குழுவினர் கங்கையில் இறந்து மிதந்து  கொண்டிருந்த ஜோடிகளை தூக்கி வந்து இதுதான் உங்களின் பிள்ளைகள் என்று கூற ……

 

அதை கேட்ட சுலோச்சனா மற்றும் அனந்திக்கு சந்தோஷம் தாளவில்லை….

 

அப்பொழுது…..

 

இது என்னோட அண்ணாவும் அஸ்வதியும் இல்ல என்று விஹானா கூறினாள்…..

 

நல்லா பாத்து சொல்லுமா…..

 

அய்யோ சார் நா தான்  தெளிவா சொல்றேனே இது என்னோட அண்ணாவும் அஸ்வதியும் இல்லன்னு…..

 

சரிய்யா போங்க இன்னும் நல்லா தேடுங்க போங்க என்று அந்த போலீஸ்காரர் மீட்பு குழுவினரை விரட்டினார்……

 

அப்பொழுது  விஹானா தேவராஜிடம் சென்றாள்…..

 

அந்த மீட்பு படை குழுவினரால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட டென்டில் சோகமே உருவாக தேவராஜ் அமர்ந்து கொண்டு இருந்தார்…..

 

தேவா அங்கிள் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்…..

 

சொல்லு விஹானா என்ன விஷயம்?

 

அங்கிள் நிஜமாவே உங்களுக்கு அஸ்வதிய சுலோச்சனா ஆன்ட்டியும் அனந்தியும் கொடுமைப்படுத்துறது தெரியாதா?                                                      இல்ல தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்கீங்களா?

 

அஸ்வதிக்கு நடக்குற கொடுமைய தடுக்கனும்தான் நினைப்பேன் ஆனா என்னால தடுக்க முடியல……

 

ஏன் …….                                                                ஏன் உங்களால தடுக்க முடியல?

 

அஸ்வதிக்கு என்ன பிரச்சனை நடக்குதுன்னு எனக்கு தெரியாதும்மா, ஆனா அவளுக்கு ஏதோ ஒரு பெரிய பிரச்சனை இருக்குன்னு மட்டும் புரியும் …..

 

நீங்க என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல??

 

விஹானா , அஸ்வதி ஏழாவது படிச்சிட்டு இருக்கும்போது எனக்கும் சுலோச்சனாவுக்கும் , அவளுடைய அம்மாவுக்கும் சரியான சண்டை அதுல சுலோச்சனா என்னோட ஷேர்ஸ் எல்லாம் லாஸ் பண்ண வச்சுட்டு என்னோட ஷேர்ஸ் எல்லாம் டேக் ஓவர் பண்ணிக்கிட்டா , அதனால எனக்கு நிறைய லாஸ் …….

எதுக்கு இப்படி எல்லாம் பண்ணின அப்படின்னு அவக்கிட்ட கேட்டதுக்கு அஸ்வதிய போய் அனாதை ஆசிரமத்தில் விட்டுட்டு வந்துடுங்க அப்படின்னு ஒரே சண்டை அம்மாவும் பொண்ணும் அதனால அந்த டென்ஷன்ல உக்காந்துட்டு இருந்தேன் அப்போ அஸ்வதி கால்ல சுலோச்சனாவோட அம்மா சூடு வச்சிட்டாங்கபோல , அத என் பொண்ணு என்கிட்ட சொல்ல அழுதுட்டே ஓடி வந்தா நா கோவத்துலயும் , டென்ஷன்லயும் அவகிட்ட சின்ன பொண்ணுன்னு கூட பாக்காம ரொம்ப மோசமா பேசிட்டேன் அதுலருந்து சுலோச்சனா ஆகட்டும் அவளோட அம்மா லீலாவாகட்டும்,  அனந்தியாகட்டும் அவளுக்கு என்ன கொடுமை,  டார்ச்சர் பண்ணினாலும் என்கிட்ட சொல்ல மாட்டா அவளே சமாளிச்சிக்கிறா ஆனா சுலோச்சனா சொத்துக்காக இவ்வளவு கொடூரமா மாறுவான்னு  நினைச்சி கூட பார்க்கல என்று தேவராஜ் வேதனை நிறைந்த குரலில் கூறினார்…….

 

அஸ்வதி உங்க மனைவிக்கிட்டயும் உங்க பொண்ணுக்கிட்டயும் எவ்வளவு கொடுமை அனுபவிச்சிட்டு இருக்குறான்னு உங்களுக்கு தெரியாது, அவங்க ரெண்டு பேரும் அஸ்வதிய எவ்வளவு கொடுமைப்டுத்துறாங்கன்னு உங்களுக்கு தெரியுதுல்ல , அப்புறம் ஏன் அதை தடுக்கல??

 

சுலோச்சனா என்னோட ஷேர் எல்லாம் லாஸ் பண்ணிட்டால்ல , அதனால அவளை விட அதிக ஷேர் வச்சுக்கணும் அப்படின்னு ஆசைப்பட்டு நிறைய பிசினஸ்  பண்ணினேன்  நிறைய பிராபிட்டும் கிடைச்சது , அந்த சமயத்துல என்னால என்னோட பொண்ணு அஸ்வதிய நல்லா கவனிச்சுக்க முடியல……                                                அதனால என்னோட பொண்ணு அஸ்வதி பேர்ல என்னோட பாதி சொத்த எழுதி வச்சேன் அதுதான் சுலோச்சனாவுக்கு  அஸ்வதிய கொல்லுற அளவுக்கு வர வச்சிருக்கு……..

 

தேவராஜ் மற்றும் விஹானா பேசிக் கொண்டிருக்கும் போது வெளியில் நிறைய சத்தம் கேட்டது இருவரும் வெளியே சென்று பார்த்தபோது இன்னும் இரண்டு இறந்து போன ஒரு பெண் மற்றும் ஒரு ஆணின் உடல்களை அந்த மீட்பு குழுவினர் கொண்டு வந்தனர் கூடவே ஒரு கொலுசையும் எடுத்து வந்தனர்…….

 

மேடம் இந்த ரெண்டு பாடியும் அந்த தூரமா ஒரு இடத்தில் மிதந்துட்டு இருந்துச்சு இது உங்க புள்ளைங்களான்னு பாருங்க என்று அந்த மீட்பு குழுவினர் விஹானாவிடம் கேட்டனர்?

 

அந்த இரு உடல்களும் நீண்ட நேரம் தண்ணீரில் இருந்தமையால் முகம் கூட தெரியாத அளவிற்கு சிதைந்து போய் இருந்தது…..

 

மேடம் இந்த கொலுசு உள்ள தண்ணில கிடந்துச்சு  , இது உங்களுக்கு வேண்டப்பட்டவங்களோட கொலுசான்னு பாத்து சொல்லுங்க என்று ஒரு கொலுசை விஹானாவிடம் அந்த மீட்பு குழுவினர் காட்டினர்……

 

அந்த கொலுசை பார்த்த விஹானாவிற்கு , அந்த கொலுசை அஸ்வதி காலில் அணிந்த நாள் ஞாபகம் வந்தது……

 

அஸ்வதி ….

அஸ்வதி….

எங்க இருக்குற என்று விஹானாவும் விஹானும் அவளைத் தேடிக் கொண்டு வந்தனர் அஸ்வதியோ வீட்டின் முன் சோஜோ, மோஜோவுடன் விளையாடி கொண்டு இருந்தாள்…..

 

ஹே அஸ்வதி நீ இங்கதான் இருக்குறியா உன்ன எங்கெல்லாம் தேடுறது?

 

ஏன் என்னாச்சு ?                                        எதுக்கு என்ன ரெண்டு பேரும் தேடுனிங்க?

 

கண்ண மூடு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் என்று விஹானா அஸ்வதியின் கண்களை மூடினாள்…..

 

இப்பொழுது விஹான் அஸ்வதியின் கால்களில் ஒரு கொலுசை போட்டு விட்டான்….

 

அஸ்விம்மா இப்ப கண்ண தொறந்து பாரு என்று விஹான் கூறவும்  அஸ்வதி கண்ணை திறந்து பார்த்தாள் , அப்பொழுது விஹான் தரையில் அமர்ந்து கொண்டு கொலுசு அணிந்த அவள் காலில் முத்தமிட்டான்….

 

அச்சோ என்ன விஹான் இது?    என்னோட கால்ல போய் நீங்க  என்று அவள் பதற…..

 

அடியே அஸ்வதி இதுல என்ன இருக்கு? எப்பவும் பொண்ணுங்க தான் பசங்க கால்ல விழனுமா?                                            ஏன் பசங்க பொன்னு கால்ல முத்தம் கொடுத்தா தப்பா?                              அண்ணே நீப்பாட்டுக்கு முத்தம் கொடு ஒரு பிரச்சனையும் இல்ல என்று விஹானா கூறவும் அஸ்வதி சிரித்து விட்டாள்….

அப்பொழுது விஹான் தரையில் இருந்து எழுந்து தன் காதலியின் முகத்தை கையில் ஏந்தி கொண்டு அவளின்  கண்களை பார்த்தவாறு இப்படியே நீ எப்பவுமே சிரிச்சிட்டே இருக்கணும் என்று அஸ்வதியின் நெற்றியில் முத்தமிட்டான் அதை விஹானா தன் செல்போனில் அழகாக படம் பிடித்துக் கொண்டாள்…….

 

விஹானா அதுவரை தன் அண்ணனுக்கும் அஸ்வதிக்கும்  எதுவும் ஆகி இருக்காது அவர்கள்  நன்றாக எங்கேயாவது இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு அந்த கொலுசை பார்த்தவுடன் அவளின் தைரியம் மொத்தமும் உடைந்து போனது அந்த கொலுசை பார்த்துவிட்டு அவள் கதறி அழுக ஆரம்பித்தாள்……

 

விஹானா  இவ்வாறு கதறி அழுகவும்  அங்கு சுற்றி இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை…..

 

தன்னுடைய அண்ணனும் அஸ்வதியும் பல பிரச்சனைகளுக்கும்,  போராட்டங்களுக்கும் பிறகு வாழ்க்கை சந்தோஷமாக வாழ்வதற்கே என்பதற்கு இணங்க தங்களின் காதல் வாழ்வை தற்பொழுதுதான் தொடங்கினார்கள் அவர்களுக்கு ஏன் இப்படி ஒரு மோசமான முடிவு வர வேண்டும் என்று நினைத்த விஹானாவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது……

 

அதுவரை தன்னுடைய தாயாரை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த விஹானா தற்பொழுது அவளை அனைவரும் சமாதானப்படுத்தினாலும் சமாதானம் ஆகாமல்,  யாருடைய பேச்சையும் கேட்காமல் அழுதப்படியே இருந்தாள்……

 

விஹானா என்ன ஆச்சு உனக்கு?            ஏன் இப்படி அழுதுட்டே இருக்குற ?       இந்த ரெண்டு பாடி யாருன்னே தெரியல அவங்கள பார்த்து நீ ஏன் அழுகுற?

 

அப்பா இது அஸ்வதியோட கொலுசுப்பா என்று விஹானா சித்திக்கை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள்…..

 

அவள் கூறியதைக் கேட்ட பீவி பெரும்குரலெடுத்து அழ ஆரம்பித்தார்…..

 

அய்யோ என்னோட ரெண்டு புள்ளைங்களும் இன்னும் உலகத்த நல்லா கூட  பாக்கல அதுக்குள்ள ஏன் இப்படி பண்ண கடவுளே என்று அவர் கதறி அழுதார்…….

 

அப்பொழுது……

 

அம்மா என்று விஹானின் குரல் கேட்டது……

 

அனைவரும் ஒரு சேர திரும்பி பார்த்தனர் அங்கு அஸ்வதியும் விஹானும் கைகளை கோர்த்தவாறு நின்று கொண்டிருந்தனர்….

 

அவர்கள் இருவரையும் அங்கு பார்த்தவுடன் விஹானா ஓடி சென்று அவர்கள் இருவரையும் கட்டி அணைத்துக் கொண்டு அழுது தீர்த்தாள்….

 

பீவியும்  ஓடி சென்று தன்னுடைய மகனையும் அஸ்வதியையும் கட்டி அணைத்துக் கொண்டு  அழுதார்……

 

மாஷா அல்லா …..                          நல்லவேலை என்னோட ரெண்டு பிள்ளைகளுக்கும் ஒன்னும் ஆகல என்று அவர் இருவரின் நெற்றியிலும் முத்தமிட்டார்………

 

சரி உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு?நேத்துல இருந்து உங்கள நாங்க தேடிக்கிட்டு இருக்கிறோம்                            எங்க போனீங்க?                                          என்ன ஆச்சு?

 

விஹான் அவர்கள் இருவருக்கும் நடந்தது அனைத்தையும் அவர்களிடம் கூறினான்…….

 

செல்லங்களா உங்க ரெண்டு பேர் மேலயும் நிறைய கண்ணு பட்டுருச்சு அதான் உங்களுக்கு இப்படி ஆகுது நா வீட்டுக்கு போய் உங்க ரெண்டு பேருக்கும் சுத்தி போடுறேன் என்று பீவி கூறவும் அஸ்வதி அவரை ஆச்சரியமாக பார்த்தாள்……..

 

என்ன அஸ்வா கண்ணா அப்படி ஆச்சரியமா பாக்குற?

 

அம்மா உங்களுக்கு சுத்தி போடுறதெல்லாம் தெரியுமா?

 

அஸ்வதி கேட்ட கேள்வியை  நினைத்து பீவி சிரித்தார்……

 

என்னம்மா சிரிக்கிறீங்க??

 

அது ஒன்னும் இல்லடாம்மா எனக்கும் சுலோச்சனா மாதிரி நிறைய ஹிந்து பிரண்ட்ஸ் இருக்காங்க அவங்க எனக்கு இதெல்லாம் சொல்லி கொடுத்தாங்க சோ எனக்கு இதெல்லாம் தெரியும் என்று அவர் சிரித்தார்……

 

சரிம்மா எவ்வளவு நேரம் தான் இங்கேயே நின்னுட்டு இருக்குறது ?        அண்ணனயும் , அஸ்வதியையும் வீட்டுக்கு கூட்டிட்டு போலாம் வாங்க என்று விஹானா அஸ்வதி மற்றும் விஹானை வீட்டுக்கு அழைத்துச் சென்றாள்……

 

அஸ்வதி மற்றும் விஹான் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர் , அஸ்வதி மறந்தும் தன்னுடைய தந்தையை திரும்பிக்கூட பார்க்கவில்லை…….

 

அவர்கள் அனைவரும் சித்திக்கின் வீட்டை அடைந்தனர்……

 

அஸ்வதி விஹான் ரெண்டு பேரும் இங்கேயே நில்லுங்க என்று பீவி வீட்டுக்குள்ளே சென்று ஒரு கை நிறைய வத்தல் எடுத்துக்கொண்டு வந்து அவர்கள் இருவருக்கும் திருஷ்டி சுற்றி போட்டு அந்த திருஷ்டி சுற்றிய வத்தலை ஒரு பேப்பரில் மடித்து தீ  வைத்துக் கொளுத்தினார் , அந்த  வத்தலில் தீ வைத்ததும் பட்டாசு வெடிப்பது போல படப்படவென்று வெடித்தது……

 

அதைப் பார்த்த விஹானா ,   அண்ணன் மேலயும் அஸ்வதி மேலயும் யாரோ ரொம்ப கண்ணு வச்சுருக்காங்க போல அம்மா என்று சுலோச்சனா மற்றும் அனந்தியை பார்த்து அவள் கூறினாள்……

 

ஆமா விஹானா எனக்கும் அப்படித்தான் தோணுது என்று பீவியும் சுலோச்சனா மற்றும் அனந்தியை பார்த்து முறைத்தார்…….

 

விஹானாவையும் , பீவியையும் சுலோச்சனா மற்றும் அனந்தி கண்டு கொள்ளவில்லை அவர்களுக்கு அஸ்வதி உயிரோடு வந்தததை நினைத்து கோபமாகவும் , எரிச்சலாகவும் இருந்தார்கள்…..

 

சரி எல்லாரும் உள்ள வாங்க என்று அவர்கள் அனைவரும் வீட்டுக்குள் சென்றனர்…….

 

அஸ்வதி விஹான் ரெண்டு பேரும் ஃபிரெஷ் ஆகிட்டு வாங்க உங்களுக்கு நா சாப்பிட செஞ்சு வைக்கிறேன் என்று பீவி கூறவும் சரி என்று இருவரும் குளித்து முடித்துவிட்டு வந்தனர்…….

 

அனைவரும் டைனிங் டேபிளுக்கு சாப்பிட வந்தனர்……

 

ஹைய் அம்மா இன்னைக்கு நீங்க பிரியாணி செஞ்சி இருக்கீங்களா? எனக்கு பிரியாணின்னா ரொம்ப பிடிக்கும் என்று அஸ்வதி கண்கள் மின்ன ஆசையாக கூறினாள்……

 

தேவராஜ் அஸ்வதியை முதன்முதலாக தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்த போது சுலோச்சனா செய்த பிரியாணியை பார்த்துவிட்டு கண்கள் மின்ன ஆசையாக கூறியதை அவர் நினைத்து பார்த்தார்……

 

அஸ்வதி இன்னும் மாறவே இல்லை அவ சின்ன குழந்தையா அப்படியே தான் இருக்குறா, நம்ம தான் நிறைய மாறிட்டோம் என்று அவர் தன் மகளை நினைத்து வருத்தப்பட்டார்…….

 

அஸ்வதி இந்தாம்மா  பிரட் அல்வா வச்சுக்கோ உனக்கு புடிக்கும்ல்ல என்று பீவி அவளை விழுந்து விழுந்து கவனித்தார் அஸ்வதியும் நன்றாகவும் திருப்தியாகவும் சாப்பிட்டாள்……

 

பிறகு நீண்ட நேரம் பீவி அஸ்வதியிடமும் , விஹானிடமும் நிறைய பேசிக்கொண்டு இருந்தார்…..

 

பீவி அஸ்வதியிடம் நிறைய நிறைய விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தார் …

அஸ்வதியும்  அவரோடு சந்தோஷமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தாள் இதை விஹான் மற்றும் விஹானா சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்……

 

அஸ்வதிக்கு புது சொந்தம் கிடைத்துவிட்டது ……

இந்த சொந்தம் நிறைந்த வாழ்க்கை  அவளுக்கு நிரந்தரமாக கிடைக்குமா???

 

பொறுத்திருந்து பார்ப்போம்……

 

தொடரும்……

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்………

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ஒருவழியா திரும்ப வந்துட்டாங்க …

    1. Author

      Aama…..
      Thanks for your valuable comments ☺️