Loading

காதல் – 2

 

சித்திக், தேவராஜ், சுலோச்சனா மற்றும் அனந்தியின் கார் முன்னே செல்ல அந்த காரை பின்தொடர்ந்து அஸ்வா விஹானின் கார் வந்தது…..

 

வழி நெடுகிலும் பணி போர்த்திய, சாலைகளும் , பணி போர்த்திய மலைகளும் , அந்த பணிமலைகளை அனைத்தப்படி செல்லும் வென்பஞ்சு மேகங்களும் என ஒன்று விடாமல் அவள் ரசித்து கொண்டு வந்தாள்…..

 

ரசித்து கொண்டே வந்ததில் அஸ்வாவிற்கு குளிரெடுக்க ஆரம்பித்தது ,  அந்த பணி மலைகளை போலவே அவள் அணிந்திருந்த வெள்ளை நிற சுடிக்கு மேல் குளிரடித்தது அதில் அவள் கைகளை குறுக்கே கட்டி கொண்டு குளிரில் நடுங்கியப்படி வந்தாள்….

 

அவள் குளிரில் அவஸ்தை படுவதை  பார்த்த விஹான் காரை ஸ்லோ செய்து விட்டு அவன் அணிந்திருந்த ஓவர் கோட்டை கழட்டி அஸ்வாவிடம் கொடுத்தான் …..

 

அஸ்வாவிற்கு இந்த நாள் வரை அவள் எதாவது பிரச்சனையில் இருக்கும்போது யாரும் அவளுக்கு  உதவியதில்லை ஆனால்  இன்று அவள் குளிரில் நடுங்கியபடி வருவதை பார்த்த விஹான் அவளிடம் எதுவும் கேட்காமலே   அவனின் கோட்டை கொடுத்ததை வித்தியாசமாக பார்த்தாள்….

 

என்னங்க ஹலோ என்று அவன் அவளை அழைத்தப்பொழுது தான் தன்னிலை அடைந்து …

 

என்ன ….

சொல்லுங்க….

 

நீங்க குளிருல நடுங்கிட்டு வந்தீங்க அதான் என்னோட ஓவர் கோட்டை குடுத்தேன்  , நீங்க இன்னும் அதை வாங்கல ,நீங்க ஒன்னும் பயப்பட வேண்டாம் இந்த கோட் நல்லா துவச்சதுதான் என்று அவன் கூற அஸ்வா சிரித்து விட்டாள்…..

 

அவளின் முத்துப்பல்  தெரிய சிரிக்கும் அந்த சிரிப்பை அவன் கண்ணிமைக்காமல் பார்த்தான் …..

 

அவன் கொடுத்த கோட்டை மறுக்காமல் வாங்கி அணிந்து கொண்டாள்….

 

அவன் கொடுத்த கோட்டின் கதகதப்பும் அவனின் அக்கறையில் இருந்த கதகதப்பும் அவளை நன்றாக தூங்க வைத்தது……

 

அஸ்வா நன்றாக தூங்கி விட்டாள் , தூக்கத்தில் அவள் விஹான் மேல் சாய்ந்து கொண்டு உறங்கி கொண்டு இருந்தாள்…..

 

அவள் அவன் மேல் சாய்ந்து உறங்குவதை அவன் கண்டுக்கொண்டதாய் தெரியவில்லை அவன் கடமையே கண்ணாக அந்த ட்ராஃபிக் மிகுந்த சாலையில் காரை ஓட்டிக்கொண்டு இருந்தான்…..

 

திடீரென்று ஒரு பைக் அவன் காரின் குறுக்கே வர விஹான் சடன் பிரேக் போட்டான் அதில் அஸ்வா முன்னே பேனனெட்டில் முட்ட போனாள் அதற்குள் விஹான் அவளை இடிக்காமல் பிடித்து கொண்டான்…..

 

ஆஆஆஆஆஆஆ என்னங்க என்னோட முடி என்று அஸ்வா அலறினாள் ………

 

அச்சச்சோ என்னோட முடியும் மாட்டிக்கிச்சு என்று அவன் கூற , அப்பொழுதுதான் விஹான் கவனித்தான் அவள் தலையில் போட்டிருந்த கல் பதித்த கிளிப் அவனின் முடியில் நன்றாக சிக்கி கொண்டது ……

 

அவள் பிரிக்க பார்த்தாள் அதை பிரிக்கவே முடியவில்லை ….

 

ரொம்ப ரொம்ப சாரிங்க நா தெரியாம உங்க மேல தூங்கிட்டேன் ரொம்ப ரொம்ப சாரி என்னாலதான் இப்படி நம்ம ரெண்டு பேரோட முடி மாட்டிக்கிச்சு என்று அழுக ஆரம்பித்தாள்…..

 

அய்யோ கூல் கூல், இதுக்கெல்லாம் ஏன் அழுகுறீங்க?

நீங்க எம்மேல சாஞ்சு தூங்கினத இப்போதான் நானே கவனிச்சேன் நோ பிராப்ளம், இப்போ இங்க ரொம்ப ட்ராஃபிக்கா இருக்கு சோ என்னாலயும் உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாது கார எங்கேயும் ஓரமாவும் நிப்பாட்ட முடியாது சோ கொஞ்ச நேரம் இப்படியே என்னோட தோள்ல சாஞ்சுக்கோங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வீடு வந்துடும் அப்புறம் பிரிச்சி எடுத்துக்கலாம் , இப்போ நீங்க உங்களோட கிளிப்ப பிரிச்சி எடுத்தா என்னால கார ஒட்ட முடியல சோ பிளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க….

 

அட பிளீஸ் எல்லாம் எதுக்கு சொல்லுறீங்க ? என்னாலதான் உங்களுக்கு இப்படி ஒரு நிலமை , பரவாயில்ல நா உங்க தோள்ல சாஞ்சுக்க்குறேன் என்று அவள் அவனின் தோள்களில் சாய்ந்து கொண்டாள்….

 

முதல் தடவை தூக்கத்தில் அவனின் தோள்களில் சாய்ந்து கொண்டு வரும்போது அவளுக்கு எதுவும் தெரியவில்லை ஆனால் இப்பொழுது தன் வாழ்கையில் முதன் முதலாக ஒரு ஆடவனின் தோள்களில் சாய்ந்து கொண்டு வருவது அவளுக்கு புதிதாக இருந்தது, இதுவரை அவளது தந்தையின் தோள்களில்க்கூட சாய்ந்தது கிடையாது ….

 

விஹானின் தோள்களில் அவள் சாய்ந்து கொண்டு வருவதை நினைத்து அவள் வயிற்றில் ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகள் பிறந்து பறந்து அவளின் வயிற்றில் சுற்றி கொண்டு இருந்தது , ஏற்கனவே குளிரால் அவளின் முகம் சிவந்து காணப்பட்டது இப்போது விஹானின் தயவால் இன்னும் சிவந்து காணப்பட்டது ……..

 

முதன் முதலாக அவனின் தங்கையை விடுத்து வேறு ஒரு பெண் அவன் தோளில் சாய்ந்து கொண்டு வருவதால் அவனுக்கும் எதோ உணர்வுகள் உந்தி தள்ளுகிறதுதான் ஆனால் அந்த உணர்வுகளை தன் தாடி மீசைக்குளே ஒளித்து வைத்து கொண்டான் அந்த கள்வன்……

 

நீண்ட நேரம் அஸ்வாவின் கிளிப் விஹானின் முடியை பிடித்து இழுத்து இருந்தமையால் அவனின் முன் நெற்றி சிவப்பபேற ஆரம்பித்தது அதை முன்கண்ணாடி வழியே பார்த்த அஸ்வா எட்டி அவளின் கிளிப்பை கழட்டி விட்டாள் அதில் அவளின் முடி கலைந்து விட்டது அந்த கிளிப் அவனின் தலை முடியில் நன்றாக சிக்கி இருந்தது…….

 

என்னங்க ஏங்க உங்க கிளிப்ப கழட்டிடீங்க?

உங்க தலை கலஞ்சு போச்சு பாருங்க….

 

அது ஒன்னும் பிரச்சனை இல்ல , உங்க தலைமுடிய என்னோட கிளிப் இழுத்து உங்க முன் தலை ரெட் கலர்ல சிவந்து போகுது பாருங்க அதனால இருக்கட்டும் வீட்டுக்குத்தான போக போறோம் மண்டை எப்படி இருந்தா என்ன என்று அவள் அவனை பார்த்து மென்மையாக சிரித்தாள்…..

 

அவளின் கிளிப் அவனின் தலை முடியில் சிக்கி தொங்கி கொண்டு இருந்தது அதை அவள் எடுக்க முயற்சி செய்து பார்த்தாள் , எவ்வளவு முயன்றும் எடுக்க முடியவில்லை …..

 

அவள் அவ்வாறு எடுக்கவும் அவனால் காரை ஒழுங்காக ஒட்ட முடியவில்லை அதனால் அப்படியே விட்டு விட்டாள்…..

 

அவனின் வீடும் வந்துவிட்டது …..

 

சித்திக் காரில் இருந்து அஸ்வா குடும்பத்தினரின் லக்கேஜ்களை எடுத்து வைத்து கொண்டு இருந்தார், தேவராஜ் அவருக்கு உதவி செய்து கொண்டு இருந்தார்…..

 

விஹான் காரை நிறுத்தி விட்டு பின்னால் சென்று அந்த காரில் வைத்த லக்கேஜ்களை எடுத்து கொண்டு இருந்தான், அப்பொழுது அவன் அருகினில் அஸ்வா வந்து நின்றாள்….

 

என்னங்க சாரிங்க தெரியாம உங்க மேல தூங்கிட்டேன் ரொம்ப சாரி, இப்போதைக்கு நா உங்களுக்கு என்னோட ரப்பர் பேண்ட் வச்சி போனி டெயில் போட்டு விடுறேன் அப்புறமா வந்து உங்களுக்கு கிளிப் எடுக்க ஹெல்ப் பண்ணுறேன்….

 

ஏன் என்னோட தலையில ரப்பர் பேண்ட் வச்சி போனி டெயில் போடுறீங்க?

 

அது இப்போ கிளிப் உள்ள போற மாதிரி போனி டெயில் போட்டு விடுறேன் அப்புறமா வந்து கிளிப்ப எடுத்து விடுறேன் என்று அவள் அவளின் டிராலியை எடுத்து கொண்டு அவனுக்கு போனி டெயில் போட பார்த்தாள் அவன் நல்ல உயரம் அதனால் அவளால் போட முடியவில்லை அவள் தவிப்பதை பார்த்த விஹான் அவளின் உயரத்திற்கு ஏற்ப டிக்கியில் அமர்ந்து கொண்டான் அதில் அவள் அந்த கிளிப் உள்ளே செல்லும் வகையில் போனி டெயில் போட்டு விட்டாள்…..

 

நா வாரேன் என்றிட்டு அவள் வேகமாக தன்னுடைய டிராலியோடு ஓடினாள்….

 

சித்திக்கும் அவரது மனைவி ஹைரூன் பீவியும் அவரது மகளும் அஸ்வாவின் குடும்பத்தினரை முகம் மலர வரவேற்றனர்……

 

விஹான் இங்க வாம்மா வந்து தேவராஜ் அங்கிளோட ஃபேமிலிய வெல்கம் பண்ணலாம் என்று அவனின் தாயார் அழைக்க அவனும் அவன் குடும்பத்தோடு அஸ்வாவின் குடும்பத்தினரை வரவேற்றான்….

 

எல்லாரும் உள்ள வாங்க …..

 

அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்…..

 

தேவா அண்ணா நீங்க உங்க ஃபேமிலியோட வரீங்கன்னு தெரிஞ்ச உடனே இவரு நீங்க இங்க ஸ்டே பண்ணுற எல்லா அரஞ்மெண்ட்ஸ இவரு பண்ணிட்டாரு , மத்த ஆளுங்க இங்க டூர் வந்தா கெஸ்ட் ஹவுஸ்லதான் தங்க வைப்பாரு ஆனா நீங்க இவருக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் அதான் இப்படி என்று ஹைரூன் சிரித்தார்….

 

பின்ன இருக்காதா இந்த தேவா எனக்கு எத்தனை வருஷ நண்பன் அவன போய் நா கெஸ்ட் ஹவுஸ்ல தங்க வைப்பேனா?

டேய் தேவா இது உன்னோட வீடு என்ன வேணாலும் சாப்பிட கேளு செஞ்சு தருவோம் அண்ட் உன்னோட டூரிஸ்ட் கைட் நாதான் என்ன…..

 

டேய் நீ எனக்கு டூரிஸ்ட் கைட்டா?

 

பின்ன நா உனக்கு கைடா இருக்காம வேற யாருக்கு இருக்க போறேன் , எங்கிட்ட சார்டட் பிளைட்ஸ் இருக்கு, கார் இருக்கு எல்லாம் உனக்காகத்தான் சோ எங்க வேணாலும் சொல்லு போலாம் என்று சித்கிக் சிரித்தார்…..

 

நீ எவ்வளவோ உயரத்துக்கு போனாலும் நம்ம நட்ப மறக்காம வச்சிருக்கியே…..

 

அடடா போதும் போதும் உங்க பாச மழை இப்போதான் எல்லாரும் டிராவல் பண்ணி அசதியா வந்துருப்பாங்க அவங்களை கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க விடுங்க…..

 

அஸ்வா இதான் என்னோட பெஸ்ட் பிரண்ட் முகமது சித்திக் அண்ட் இது இவனோட காதல் மனைவி ஹைரூன் பீவி , இது சித்திக்கோட மூத்த பையன் முகமது விஹான், இது இவனோட இளைய பொண்ணு முகமது விஹான்னா….

 

அஸ்வா எல்லாரையும் பார்த்து அழகாக சிரித்து கொண்டே வணக்கம் கூறினாள்…..

 

வணக்கம்டா அஸ்வா கண்ணா, இவ்வளோ நாள் ஆச்சு ஒரு தடவைகூட நீ இங்க வந்தது இல்ல உன்னோட தங்கச்சியத்தான் பாத்துருக்கேன் என்று பீவி சிரித்தார் ……

 

அஸ்வாவும் அவர்களோடு அப்பொழுதே வந்துருக்கலாம்தான் ஆனால்….

 

வரமுடியாத காரணத்தை எண்ணி அவள் அவளின் தாய் மற்றும் தங்கையை பார்த்தாள் அவர்கள் அவளை கவனியாது டீயை பருகி கொண்டு இருந்தார்கள்……

 

சரி நீங்க எல்லாரும் ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுங்க உங்களுக்கு நைட் சாப்பாடு நா செஞ்சு கொண்டு வாரேன்….

 

தேவராஜும் , சித்திக்கும் நீண்ட நாட்கள் பேசாத பேச்சுக்களை பேசிக்கொண்டு இருந்தார்கள்……

 

அஸ்வா, அவளின் தாய் மற்றும் அவளின் தங்கை அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு சென்றார்கள் ……

 

அனந்து போய் கதவை சாத்திட்டு வா…..

 

அம்மா அம்மா நா எதுமே பண்ணல ஏன் கதவை சாத்த சொல்லுறீங்க என்று அஸ்வதி பயத்தில் முகம் வெளிறி போய் நின்றாள்…….

 

என்னடி பண்ண?

 

இவள் இங்கே அனுபவிக்கும் கொடுமைகளை அவன் அறிவானா?

 

அவளை இந்த கொடுமைகளில் இருந்து காப்பற்றுவானா?

 

பொறுத்திருந்து பார்ப்போம் …..

 

தொடரும்…..

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….

 

💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
14
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. விஹான் அஸ்வா உரையாடல் அருமை.
    முதல் முறை அவளுக்கு உதவும் ஒருவன். அவனது உடையின் கதகதப்புடன் அவனது அக்கறையும் சேர்ந்து அவளுக்கு ஆறுதலை அளிக்கின்றது.
    குளிரில் சிவந்த அஸ்வாவை தனது அன்பான செயல்களாலும் சிவக்க வைக்கின்றான்.
    அஸ்வாவிற்கு அடுத்து என்ன ஆக போகின்றதோ? பொருத்திருந்து பார்ப்போம்.

    1. Author

      Ungaloda valuable comments ku romba nandrigal….
      Keep supporting 😇

    1. Author

      Yes he does….🥰
      Thank you for your valuable comments 😇

  2. லவ் மோட் ஸ்டார்ட் ஆகிடுச்சு

    1. Author

      Aama aama…
      Thank you for your valuable comments 😇