
காதல் – 15
விஹானின் மனதில் உள்ள காதலை அவன் மனம் கொள்ளை கொண்டவளிடம் தெரிவித்து விட்டான்….
அவன் காதலில் இவள் சொட்ட சொட்ட நனைந்தது போல இப்பொழுது கொட்டும் பணியில் இருவரும் இணைந்து காதல் மழையில் நனைந்து கொண்டு இருக்கிறார்கள்…..
நீ சொல்லுறது ரொம்ப ரொம்ப கரெக்ட் அஸ்வி , நா அப்போவே காலேஜ் போயிருக்கனும். இப்போ ஒன்னும் பிரச்சனை இல்ல இன்னும் ஒரு மாசம்தான் என்னோட சஸ்பென்ஷன் இருக்கு அதுக்கு அப்புறம் காலேஜ் போறேன்….
சூப்பர் விஹான்….
அஸ்வி உனக்கு என்ன பிடிக்குமா?
என்ன காதலிக்க உனக்கு சம்மதமா?
அவனின் அந்த கேள்விகளில் அவள் சிரித்து விட்டாள்….
ஹே சிரிக்காத சொல்லு….
நாளைக்கு சொல்லவா?
இப்போவே சொல்லேன் பிளீஸ்….
இப்போவா?
ஆமா….
சரி என்று அவள் அவன் மேல் அவளுக்கு இருக்கும் காதலை தெரிவிக்க போகும் சமயம் சித்திக் விஹானை அழைத்து விட்டார் …..
விஹான்….
விஹான்…
எங்கப்பா இருக்க??
விஹான் உங்கள உங்க அப்பா கூப்பிடுறாங்க போய் என்னன்னு கேளுங்க….
போயும் போயும் இப்போவா அவரு என்ன கூப்பிடனும்……
சரி நீங்க போய் உங்க அப்பாகிட்ட என்னன்னு போய் கேட்டுட்டு வாங்க…..
சரி என்கூட நீயும் வா, பணியில உக்காராத என்று அவன் அவளை ஹால் சோஃபாவில் அமர வைத்து விட்டு அவனின் தந்தையை பார்க்க சென்றான்…..
அஸ்வா, சோஃபாவில் படுத்து கொண்டு விஹான் அவளிடம் அவன் காதலை சொன்னதை நினைத்து நினைத்து சிரித்து கொண்டு இருந்தாள்…..
அவள் அவ்வாறு தனியாக அமர்ந்து சிரிப்பதை யாராவது பார்த்தால் கண்டிப்பாக அவளை பைத்தியம் என்று கூறுவார்கள்…..
விஹான் ஏன் என்ன காதலிக்கிறாங்க?என்ன என்னோட அம்மா அடிச்சிட்டே இருக்காங்கன்னா? அதுக்காக வந்த பரிவா? பரிவுன்னா அவங்க கண்ணுல ஏன் அவ்வளோ காதல் தெரியுது?
என்று அவள் தனக்கு தானே பேசிக்கொண்டும் சிரித்து கொண்டும் இருந்தாள்……
விஹான் என்ன நெத்தியில கிஸ் பண்ணாங்க , அப்போ …. அய்யோ வெக்கம் வெக்கமா வருதே என்று அவள் வெக்கத்தில் சோஃபாவில் இருந்து உருன்டாள் அப்பொழுது அவள் கீழே விழுந்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்க அவள் ஒரு பாதுகாப்பான கைகளில் இருந்தாள்….
ஆம் விஹான் அவளை கீழே விழாமல் பிடித்து கொண்டான்…..
பிறகு அவளை தூக்கி சோஃபாவில் அமர வைத்தான்….
என்ன நினைச்சி தான சிரிச்சிட்டு இருந்த?
அவன் இவ்வாறு கேட்கவும்….
நா மனசுல நினைச்சது விஹானுக்கு எப்படி தெரியும் என்று அவள் ஆச்சர்யத்தில் விழிகளை பெரிதாக்கி அவனை பார்த்தாள் …..
நா உங்களை தான் நினச்சிட்டு இருந்தேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?
இதோ இப்படித்தான் உன்னோட வாயால நீயே சொல்லிட்டியே என்று அவன் அவளை பார்த்து சிரித்தான்…..
அய்யோ போட்டு வாங்கிட்டீங்களே என்று அவள் அவனின் குறும்பு மின்னும் விழிகளில் இருந்து தப்பிக்க தன் முகத்தை இரு கைகளாலும் மூடி கொண்டாள்….
வெக்கத்தில் அவள் முகத்தை மூடியிருந்த கைகளை அவன் மெதுவாக எடுத்து விட்டான்…..
அவள் முகம் வெக்கத்தில் சிவந்து போய் காணப்பட்டது…..
அவனின் அந்த வார்த்தை ஜாலத்தால் அவள் கன்னங்களில் ரோஜா மலர்ந்தது போல சொல்லாத காதல் முகத்தில் மட்டும் எழுதிக்காட்டியது…
அஸ்வி உன்ன எனக்கு முதல் தடவை பாக்குறப்போ எதோ ஒரு நல்ல ஃபீல், உன்னோட இந்த அப்பாவியான முகம், பெரிய பெரிய கண்ணு , குட்டி குடை மிளகா மாதிரி மூக்கு, செர்ரி பழம் போல சிவந்த உதடு , என்ன நீ விஹான் விஹான்னு நீ ஒவ்வொரு தடவை கூப்பிடுறப்போலாம் எனக்குள்ள ஒரு மாதிரி நல்லா இருக்கும், நீ எங்கிட்ட நெருங்கி வரப்போ என்னோட இதயத்துடிப்பு எனக்கே கேக்கும், நீ அழுதா என்னால தாங்கிக்க முடியல …..
அப்புறம்….
போதும் விஹான் என்று அவள் அவனின் காதல் வார்த்தைகளில் கரைந்து போய் அவனை கட்டி அணைத்து கொண்டாள்…..
அவனும் அவளை தன்னோடு இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டான்…..
அந்த அணைத்தல் காட்சி நீண்டு கொண்டே இருந்தது……
அந்த காதல் காட்சிகளை கெடுக்க வழக்கம் போல அவளே வந்தாள் 🤭…..
ஹலோ ஹலோ ……. நா எதும் பாக்கல , நேரமாச்சு ரெண்டு பேரும் இன்னும் தூங்கல சீக்கிரம் தூங்க வாங்க என்று விஹான்னா திரும்பி நின்றபடி கூறி கொண்டு இருந்தாள்…..
விஹான்னாவை பார்த்த அஸ்வதி அவசரமாக விஹாணை விட்டு விலகினாள் அப்பொழுது வேகமாக எழுந்ததில் அவளின் தீ காயத்தில் சோபா இடித்து விட்டது….
ஆஹ்….
என்று அவள் வலியில் முகம் சுணங்கினாள்…..
ஏய் அஸ்வி ஏன் இப்படி வேகமா எழுந்த ?முதுகுல உள்ள தீக்காயம் மேல இடிச்சிட்ட என்று அவன் பதற…..
அஸ்வதி நீ எங்க ரூமுக்கு வா உனக்கு நா மருந்து போட்டு விடுறேன் என்று அவள் அஸ்வதியை அவர்களின் அறைக்கு அழைத்து சென்றனர்….
அஸ்வதிக்கு , விஹான்னா அந்த தீக்காயம் பட்ட இடத்தில் மருந்தை தடவினாள் அதில் அஸ்வதி வலி தாங்க முடியாமல் விஹான் மேல் சாய்ந்து கொண்டு அழுதாள்…..
விஹான்னா மெதுவா மெதுவா… மெதுவா தடவி விடு , அஸ்விக்கு வலிக்குது பாரு என்று அவள் அழுவதை பார்த்த அவன் கண்களிலும் ஈரம்…..
அண்ணா அஸ்வதிக்கு காயம் சீக்கிரம் ஆறிடும் நீ கவலைப்படாத சரி சரி நேரமாச்சு அஸ்வா நீ என்னோட பெட்ல என்கூட படுத்துக்கோ என்று அவள் அஸ்வதியை தன் பெட்டில் படுக்க வைத்தாள்…..
அஸ்வதி அந்த பக்கமாக திரும்பி விஹான் படுத்திருந்த பெட்டை பார்த்தாள்…..
அவனும் அவளைதான் பார்த்து கொண்டே இருந்தான்…..
தூங்கு என்று அவன் கண்களால் செய்கை செய்ய அவள் அவனின் முகத்தை பார்த்தவாறு உறங்கிப் போனாள்….
இரவு நேரம் விஹான் மற்றும் விஹான்னா நன்றாக உறங்கி கொண்டு இருந்தார்கள்…..
அப்பொழுது….
அம்மா…. நாதான விஹான காதலிக்கிறேன் , விஹான் ஒன்னும் பண்ணல அவர விட்டுருங்க….. என்ன என்ன வேணாலும் பண்ணிக்கோங்க விஹான் பாவம்… அய்யோ அம்மா முதுகு எரியுது என்று அஸ்வதி தூக்கத்தில் புலம்பி கொண்டும் அழுது கொண்டும் இருந்தாள்……
விஹான்னா காதில் ஹெட்போன்ஸ் போட்டு கொண்டு தூங்குவதால் அவளுக்கு எதுவும் கேட்கவில்லை …..
அஸ்வதியின் அலறல் கேட்டு விஹான் விழித்து கொண்டான் …..
அப்பொழுது முகத்தில் வியர்வை வழிய அஸ்வதி பயத்திலும் , தூக்கத்திலும் பெட்டில் இருந்து கீழே உருண்டு அவள் விழ போக அவளை கீழே விழ விடாமல் விஹான் பிடித்து கொண்டான்…..
அம்மா ….
அம்மா , வலிக்குது….
அம்மா ….
என்று அவள் தூக்கத்தில் தொடர்ந்து உலற….
ஒன்னுமில்ல அஸ்வி…… ஒண்ணுமில்லம்மா நா இங்கதான் உங்கூடவே இருக்கேன், பயப்படாத கண்ணம்மா , உன்ன யாரும் எதுவும் செய்ய நா விட மாட்டேன்
அழாத செல்லமே என்று அவன் அவளை தன் மார்பினில் சாய்த்து கொண்டு அவளின் முதுகை ஆதரவாக தடவி விட்டான் அதில் அவளின் அழுகை நின்றது …..
சிறிது நேரம் அவளை தன் மடியில் அமர வைத்து அவளை தன் நெஞ்சினில் சாய்த்து கொண்டு இருந்தான் , பிறகு அவளின் விசும்பல் நின்ற பிறகு அவளை அப்படியே தூக்கி தன் பெட்டில் சுவர் ஓரமாக படுக்க வைத்து விட்டு அவன் சைடில் படுத்து கொண்டான்….
தூக்கத்தில் அஸ்வதி விஹானை கட்டி அணைத்து கொண்டு உறங்கினாள் அவனும் அவளை தன் நெஞ்சினில் சாய்த்து கொண்டு அவளை இறுக்கி அணைத்தபடியே தூங்கினான்…..
காலையில் அஸ்வதிக்கு முன்னால் விஹான் எழுந்து சென்று விட்டான்….
அஸ்வதி எழுந்து பார்க்கும்போது அவள் விஹான் பெட்டில் படுத்து கொண்டு இருந்தாள்…..
நா எப்படி விஹான் பெட்டுக்கு வந்தேன்?நான் விஹானா பெட்ல தானே படுத்து தூங்கினேன் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க…..
அப்பொழுது அங்கு விஹானா வந்தாள்….
குட் மார்னிங் அஸ்வதி….
குட் மார்னிங் விஹானா….
சீக்கிரம் எந்திரிச்சி குளிச்சு கிளம்பு….
ஏன் நம்ம எங்க போறோம்?
இன்னைக்கு நம்ம போக போற இடம் உனக்கு ரொம்ப பிடிக்கும் , சோ சீக்கிரம் கிளம்பு…..
ஹே விஹானா நம்ம எங்க போறோம்ன்னு சொல்லுப்பா…..
அதெல்லாம் சஸ்பென்ஸ் நீ நேர்ல வந்து பாத்துக்கோ என்றிட்டு அவள் சென்று விட்டாள்…..
இந்த விஹான்னாவுக்கு இதே வேலையா போச்சு என்று கூறிவிட்டு தன்னுடைய உடைகளை எடுத்து கொண்டு விஹான் பாத்ரூமிலே குளித்து முடித்து விட்டு வந்தாள்….
வெளியில் விஹானா சோஜா மோஜோ இருவருக்கும் சிக்கன் வைத்து சாதத்தை பிசைந்து கொண்டு இருந்தாள்…..
விஹானா , சோஜா மோஜோ ரெண்டு பேருக்கும் நீ சாப்பாடு வைக்க போறியா ?
ஆமா அஸ்வதி இவங்க ரெண்டு பேருக்கும் காலையில் சாப்பாடு கொடுக்கணும்ல….
ஹே அத என்கிட்ட கூடேன் நா ரெண்டு பேருக்கும் சாப்பாட்டை பிசைஞ்சு குடுக்கிறேன்….
இந்தா நீயே இவங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு குடு என்று விஹானா சாப்பாடு பாத்திரத்தை அஸ்வதி கையில் கொடுத்து விட்டாள்…..
அஸ்வதி அழகாக சிக்கனை பிய்த்து சாப்பாடுடன் சேர்ந்து பிசைந்து சோஜோ மோஜோ இருவருக்கும் தனித்தனி தட்டில் வைத்தாள்……
அஸ்வதி தட்டில் சாப்பாட்டை வைத்தவுடன் சோஜோ மோஜோ இருவரும் வேகவேகமாக சாப்பிட்டனர்….
ஹே இரண்டு பேரும் பொறுமையா சாப்பிடுங்கப்பா உங்களுக்கு நிறைய சாப்பாடு இருக்கு….
அஸ்வதி முதலில் வைத்த சாப்பாட்டை இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டனர் அதனால் இன்னொரு தடவையும் சிக்கன் சாப்பாட்டை அவர்களின் தட்டில் வைத்தாள் அதையும் வேக வேகமாக இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்…..
சோஜோ மோஜோ இருவரும் சாப்பிடும் அழகை அஸ்வதி ரசித்து கொண்டிருந்தாள்…..
சோஜோ மோஜோ இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டு இருவரும் அஸ்வதியிடம் வாலாட்டி கொண்டு வந்தார்கள்….
அஸ்வதியும் அவர்கள் இருவரிடம் குனிந்து இருவரையும் கொஞ்சி கொண்டு இருந்தாள்……
அப்பொழுது அவள் பின்னால் ஏதோ நிழலாடுவது போல தெரியவும் அஸ்வதி திரும்பி பார்த்தாள் அங்கு விஹான் நின்று கொண்டிருந்தான் அதுவும் முடியை அழகாக வெட்டி , தாடியை ட்ரிம் செய்துவிட்டு புதிய தோற்றத்தில் அவள் முன் நின்றான்….
விஹான் அத்துணை அழகாக இருந்தான்…..
அஸ்வதி அவனைப் பார்த்து அவன் அழகில் மயங்கி அவனை அவ்வாறு பார்த்த மகிழ்ச்சியில் சோஜோ மோஜோ இருவரும் இணைந்து நக்கிய அவளின் கைகளை அவள் வாயில் வைக்க போக அதை அவள் வாயில் வைக்காமல் அவன் பிடித்து கொண்டான்…..
அஸ்வதியின் விழிகள் இரண்டும் தெறித்து விழுந்து விடுவது போல கண்களை விரித்து பார்த்தாள் …..
அவள் அவனை பார்த்தபடியே பின்னால் நகர்ந்து சென்றவள் பூந்தொட்டி மீது கால் மோதி கீழே விழப் போனாள் …..
அப்பொழுது அவள் விழுந்து விடாமல் இருக்க விஹான் அவளை இடை வளைத்து தாங்கி பிடித்துக் கொண்டான்…….
ஓஹோ இதுதான் அழகுல மயங்குறதோ?
யாரு கண்டா?
அவர்களின் காதல் காட்சிகள் தொடருமா??
பொறுத்திருந்து பார்ப்போம்….
தொடரும்…..
உங்களின் பொன்னான கருத்துக்களை அவளோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……..
💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


தொடரணும்னு தான் நாங்க ஆசைப்படுறோம்
அவளது மனக்காயங்களுக்கும், உடல் காயங்களுக்கும் ஆறுதலாக இருக்கின்றான் விஹான்.
இருவரது காதலும், தவிப்பும் அழகு.
நீண்ட நாட்களுக்கு பிறகு சோஜோ, மோஜோ 😍😍
தங்கை முன் காதல் படம் ஓட்டியது பத்தாது என்று சோஜோ, மோஜோ முன்பு ஓட்ட ஆரம்பித்து விட்டார்கள். ❤️