Loading

 

காதல் – 1

சென்னை சர்வதேச விமான நிலையம் ……..

 

அந்த விமான நிலையம் பரபரப்பாக  இயங்கி கொண்டு இருந்தது, அடுத்தடுத்து விமானங்கள் வருவதும் போவதுமாக இருக்க மக்கள் கூட்டம் மொய்ப்பதும் பிறகு கூட்டம் குறைவதுமாக இருந்தது…..

 

ஒருவர் அவரின் குடும்பத்தை விட்டுவிட்டு வெளிநாடு செல்கிறார் போல அவரின் மனைவி கண்ணீரால் அந்த விமான நிலையத்தை மூழ்கடித்து கொண்டு இருந்தார் …..

 

இன்னொருவர் வேலை கிடைத்து வெளிநாடு செல்கிறார் போல அவரின் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியபடி இருந்தார் ….

 

இன்னொருவர் காதல் ஜோடிகள் போல அவர்களின் கட்டிப்பிடி வைத்தியத்தை நாம் பார்த்தால் நமக்கும் அது தேவைப்படும் என்று தோன்றும் ஆனால்  கட்டிப்பிடிக்கத்தான் ஆள் இல்லை சரி அது பிறகு பார்த்து கொள்வோம்…..

 

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான ஒரே உணர்ச்சியான அழுகையை மட்டுமே திரும்ப திரும்ப வெளிப்படுத்தி கொண்டு இருந்தார்கள்…….

 

வேதனையில் இருப்பவர்களை காட்டிலும் விமான நிலையத்தில் சென்ட் ஆஃப் வழியனுப்ப வருபவர்களும் வழியனுப்பி வைக்கப்படுபவர்களும்தான் அதிகமான கண்ணீரை உதிர்க்கின்றார்கள்…..

 

அவள் ஒரு ஓரமாக தன் கைப்பையை இறுக்கமாக பிடித்து கொண்டு அங்கு நடக்கும் அனைத்து சம்பாஷனைகளையும் பார்த்து கொண்டு இருந்தாள்……

 

அவளின் வாழ்நாளில் இதுதான் அவளின் முதல் உல்லாச பயணம், மனதில் ஒரு மூலையில் புது இடத்திற்கு சுற்றுலா செல்ல போகிறோம் என்ற மகிழ்ச்சி இருந்தாலும் இன்னொருபுறம் அவளின் தாய் மற்றும் தங்கையை நினைத்து பயம் என்று இரு உணர்வுகள் ஒரு மனதிற்குள் மாறி மாறி ஆட்டிப்படைக்க அவள் அமைதியாக அமர்ந்து கொண்டு இருந்தாள்……

 

ஹே அனந்து இங்க ஒழுங்கா கேமராவ பாரு , லெஃப்ட் சைட் ஃபேஸ் காட்டு அப்போதான் ஆலியா பட் மாதிரி இருக்கன்னு கமெண்ட்ஸ் வரும் என்று அவளின் தாயான சுலோச்சனா அவளின் தங்கையிடம் கூறி கொண்டு இருந்தார்…..

 

அவளின் தாய் சுலோச்சனாவும் அவளின் தங்கை அனந்தியும் அந்த விமான நிலையத்தில் ஒரு இடம் விடாமல் அனைத்து இடங்களிலும் புகைப்படங்களை எடுத்து தள்ளினர்…..

 

அவள் அவர்கள் இருவரையும் ஏக்கம் கலந்த ஒரு பார்வை பார்த்து கொண்டு இருந்தாள் அப்பொழுது அவள் தோளில் யாரோ கை வைப்பது போன்ற உணர்வு அவள் திரும்பி பார்த்தாள் அவளின் தந்தை தேவராஜ்தான் சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருந்தார்…..

 

என்னம்மா ஏன் இப்படி சோகமா உக்காந்துட்டு இருக்க?

 

அதெல்லாம் ஒன்னுமில்லப்பா சும்மாதான் வேடிக்கை பாத்துட்டு இருக்கேன்…..

 

வா உனக்கு நா சாப்பிட எதாவது வாங்கி தாரேன் என்று அவர் அவளின் கை பிடிக்க போகும் சமயம்…..

 

டாடி எனக்கு சீஸ் பீட்ஸா வேனும் வாங்க வாங்கி குடுங்க என்று அனந்து அவரை பிடித்து இழுத்து கொண்டு சென்றாள்….

 

அனந்து செய்த செயல் அவளை பாதித்த மாதிரி தெரியவில்லை , முன்பு அவள் செய்து கொண்டு இருந்த வேடிக்கை பார்ப்பதை திரும்ப செய்து கொண்டு இருந்தாள்……

 

மம்மி சீஸ் பீட்ஸா அருமையா இருக்கு கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பாருங்க….

 

சூப்பரா இருக்கு அனந்து , இந்தா இந்த ஆப்பிள் ஜுஸ் குடிம்மா வீட்டுலயே போட்டது அப்புறம் கெட்டு போயிரும் என்று அவனின் அம்மா அவளின் தங்கைக்கு ஆப்பிள் ஜுசை புகட்டி கொண்டு இருந்தார்…..

 

அவள் எண்ணத்தில் அங்கு நடப்பது எதுவும் பதியவில்லை…..

 

அம்மாடி அஸ்வா …..

 

இந்த இனிமையான அழைப்புக்கு சொந்தக்காரரான அவளின் அப்பா தேவராஜ் அவளை அழைக்கவும் அவள் அவரிடம் ஓடி சென்றாள்….

 

அப்பா….

 

இந்தா செல்லம் இதுல ஆரஞ்சு ஜூஸ் இருக்குது குடிடாம்மா…..

 

தேங்க்ஸ் பா…..

 

அடடா அப்பாவுக்கு தேங்க்ஸ் எல்லாம்  சொல்லுவிங்களோ?

என்று அவர் செல்லமாக முறைக்க….

 

ஐயோ அப்படியெல்லாம் இல்லப்பா ஓகே ஓகே தேங்க்ஸ் வாபஸ்……

 

அது ….

அப்படியே இருக்கணும் இப்ப நீங்க நல்ல புள்ளயா எல்லா ஜூஸயும் குடிச்சு முடிப்ப்பீங்களாம் அப்பா நம்மளோட ஃப்ளைட் டைம் எப்பன்னு பாத்துட்டு வருவேனாம்…..

 

ஓகேப்பா என்று அஸ்வா சிரித்து கொண்டே அவள் அப்பா வாங்கி கொடுத்த ஜூசை குடித்து கொண்டு இருந்தாள்…..

 

அவளின் அப்பா தங்களின் விமான நேரத்தை பார்த்து விட்டு வந்தார்….

 

ஆஸ்வாம்மா நம்ம பிளைட் இன்னும் அரைமணி நேரத்தில் வந்துரும் …..

 

ஓகேப்பா …..

 

அஸ்வா அப்பா சொல்லுறத கவனமாக கேக்கனும் என்ன….

 

சரிப்பா….

 

இப்போ அப்பா  உனக்கு பிளைட்ல எப்படி போகனும் ,செக்கிங் எல்லாம் சொல்லி தர போறேன் ஒழுங்கா கவனிக்கனும் என்ன?

 

ஓகே அப்பா நீங்க சொல்லுங்க நா கவனிக்கிறேன்….

 

குட் கேர்ள்….

விமானப் பயணத்துக்குப் போகும் நேரத்துல ஃபர்ஸ்ட் நீ புறப்படுவதற்கான அரங்கத்துக்கு (departure terminal) போகனும்,  அப்புறம் பதிவு சாளரத்தில( check in counter)  உன்னோட டிக்கெட் மற்றும்  பாஸ்போர்ட  காட்டி பதிவு செய்யனும் அதுக்கு பிறகு செக்யூரிட்டி செக், பைலட் அண்ட் உன்னோட கையில உள்ள உன்னோட ஹேன்ட்பேக்க செக் பண்ணனும், கடைசியா கேசின் வழியா நம்ம போற பிளைட் கதவு கிட்ட போவ இவ்வளவு படிகளைக் கடந்து போனாதான் நம்ம டெல்லி போக முடியும் புரியுதா அஸ்வா?

 

நல்லா புரியுதுப்பா…..

 

சென்னையில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் விமானம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்தடையும் , அனைத்து பயணிகளும் தயார் ஆகவும் என்று அறிவிப்பு வர அஸ்வாவின் குடும்பம் பரபரப்பானது …..

 

அஸ்வா உனக்கு எத்தனை லக்கேஜ்?

 

ஒரு டிராலிதான்ப்பா…..

 

சரி சுலோ உனக்கு எத்தனை லக்கேஜ்?

 

மூனு டிராலி தேவா…

 

சரி அனந்து உனக்கு எத்தனை லக்கேஜ்?

 

ரெண்டு டிராலிப்பா…..

 

சரி எனக்கு ஒரு டிராலி ஆக மொத்தம் ஏழு லக்கேஜ் சரி வாங்க எல்லாரும் செக் இன் பண்ணிட்டு போவோம் என்று அனைவரும் செக் இன் செய்ய சென்றனர்…..

 

செக் இன் கவுண்டருக்கு அவர்கள் சென்று விட்டார்கள்…..

 

அப்பா …..

 

என்னாச்சு அஸ்வா ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க?

உடம்புக்கு எதும் பண்ணுதா?

 

அப்பா  என்னோட பாஸ்போர்ட் டிக்கெட்  கானும் என்று அவள் கண்ணில் கண்ணீரை தேக்கி வைத்தப்படி கூறினாள்…..

 

அவள் கூறியதில் அவள் பின்னால் நின்று கொண்டிருந்த அவளின் தாயும் , தங்கையும் அவளை பார்த்து கேலி சிரிப்பு சிரித்தனர்…..

 

அஸ்வாவின் தலையை மெதுவாக வருடிய அவளின் தந்தை அவளை பார்த்து இதமாக சிரித்தார்…..

 

இந்தியாவுல உள்ள உள்ளூர் டிராவல்ஸ்க்கு, உதாரணமா சென்னை டூ டெல்லி  அண்ட் டெல்லி டூ காஷ்மீர் வர போகும்போது, பாஸ்போர்ட் தேவையில்லை. ஒரு செல்லுபடியான கவர்ன்மென்ட் வழங்குற ஆதார் கார்டும் , டிக்கெட்டும்  மட்டும் இருந்தாலே போதும்……..

 

ஆனா அப்பா என்னோட டிக்கெட் காணுமே…..

 

அஸ்வா அவளின் தந்தையிடம் அழுது கொண்டே பேசிக்கொண்டு இருந்த சமயத்தில் அவளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த அவளின் தாயும் தங்கையும் ஹைஃபை அடித்து கொண்டார்கள்…..

 

அச்சோ என்னோட செல்ல பொண்ணு இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்குகெல்லாம் கண்ணீர வேஸ்ட் பண்ணலாமா?

இங்க பாரு இதுவா உன்னோட டிக்கெட் என்று அவர் அவளிடம் ஒரு டிக்கெட்டை காட்டினார்…..

 

ஆமாப்பா இதை நா என்னோட ஹேன்ட்பேக்ல வச்சிருந்தேன் உங்கக்கிட்ட எப்படி வந்துச்சு?

 

அது ஒரு செக்யூரிட்டி பர்போஸ்காக நா வச்சிருந்தேன் என்று அவர் அவள் பின்னால் நின்று கொண்டிருந்த அவளின் தங்கை மற்றும் தாயின் முகத்தை பார்த்தார் , அந்த முகங்கள் ஏமாற்றதில் வெளிறி போய் இருந்தது…..

 

சரி இப்போ எல்லாம் கிளியர், முதல்ல எல்லாரும் வாங்க பிளைட்ல ஏறுவோம் என்று அவர் அஸ்வாவின் கைகளை பிடித்து கொண்டு சென்றார்…..

 

அஸ்வா அந்த விமானத்தை ஆச்சர்யமாக பார்த்து கொண்டு வந்தாள்……

 

அப்பா இவ்வளோ நாள் நா நம்ம மாடியில இருந்துதான் மேல வானத்துல போற ஏரோபிளேன பாத்திருக்கேன் ஆனா இப்ப நானே அந்த ஏரோபிளேன்ல போக போறேன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு அவள் துள்ளி குதித்தபடி வந்தாள்……

 

அப்பா எனக்கு ஜன்னல் சீட் ஜாலி ஜாலி என்று அவள் வெளியே நிற்கும் விமானங்களை பார்த்து கொண்டு இருந்தாள்……

 

அஸ்வா பிளைட் டேக் ஆஃப் ஆக போகுது இப்போ சீட் பெல்ட் போட்டுக்கோ என்று அவர் அவளுக்கு சீட் பெல்ட்டை அணிவித்து விட்டார்…..

 

பிளைட் டேக் ஆஃப் ஆகியது…..

 

அப்பா வயித்துல என்னமோ ஒரு மாதிரி பண்ணுது…….

 

அவள் கூறியதை கேட்டு அவர் சிரித்து விட்டார்……

 

அது உனக்கு இது முதல் தடவைல்ல அதான் இப்படி இருக்கு , போக போக பழகிடும்…..

 

அப்போ சரிப்பா என்று அவள் வானில் மிதந்து செல்லும் மேகத்தை விமானத்தில் மிதந்தபடி பார்த்து ரசித்து கொண்டு வந்தாள்……

 

அப்பா கீழே பாருங்க வீடெல்லாம் எவ்வளோ குட்டி குட்டியா தெரியுதுன்னு என்று அவள் பார்ப்பதையெல்லாம் சிரித்து கொண்டும் ரசித்து கொண்டும் வந்தாள்……..

 

இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு அவர்கள் டெல்லியை வந்தடைந்தனர்….

 

தேவராஜ் அவர்கள் அனைவரின் லக்கேஜை சரி பார்த்து கொண்டு இருந்தார்……

 

சரி எல்லா லக்கேஜ்ஜும் சரியா இருக்கு , இப்போ வாங்க காஷ்மீர் பிளைட்ட பிடிக்க போவோம் என்று அவர்கள்  அனைவரும் செக் இன் சென்று விஸ்டாரா பிள்ளைட்டில் ஏறி அமர்ந்தனர்…….

 

அப்பப்பா எவ்வளோ ஹைட்டல போறோம் , ஜாலியா இருக்குப்பா என்று அவள் சிரித்து கொண்டே வந்தாள் , நீண்ட நாட்களுக்கு பிறகு அவளின் முகத்தில் சிரிப்பை காண்கிறார் அவர்….

 

 

தேவராஜ் அவளின் சிரிப்பையும் , பேச்சையும்  ரசித்து பார்த்து கொண்டு வந்தார்……..

 

இப்போதான் அஞ்சு வயசு பொண்ணா உன்ன பாத்த நியாபகம் அதுக்குள்ள நீ காலேஜ் பிரஃபசர் ஆகி உனக்கு கல்யாண வயசு வந்துடுச்சுன்னு நினச்சாசலே ஆச்சர்யமா இருக்கு என்று அவர் அஸ்வாவை பற்றி நினைத்து கொண்டு வந்தார்…..

 

ஒரு மனி நேர பயணத்திற்கு பிறகு அவர்கள் அனைவரும் காஷ்மீரின் தலைநகரான ஶ்ரீநகருக்கு வந்தடைந்தனர் …..

 

நம்ம எல்லாரும் இப்போ காஷ்மீர் வந்துட்டோம் சோ அவங்கவங்களோட  லக்கேஜ பாத்து எடுத்துட்டு வாங்க ….

 

அனைவரும் தங்களின் உடைமைகளை எடுத்து கொண்டு தேவராஜ் பின்னால் சென்றார்கள்…..

 

வெல்கம் டூ காஷ்மீர் தேவராஜ் அண்ட் ஃபேமிலி என்று அவர்களுக்காக ஒருவர் கையில் வரவேற்பு பலகையோடு காத்துகொண்டு இருந்தார்…..

 

அப்பா அங்க பாருங்க அவரு உங்க பேரதான் வச்சிட்டு நிக்கிறாரு…..

 

ஆமா ….

ஹே சித்திக்….

 

ஹாய் தேவா எல்லாரும் எப்படி இருக்கீங்க?

டிராவல் எல்லாம் ஓகே தான?

 

ஓகேதான் சித்திக் …..

 

சரி வாங்க எல்லாரும் காருக்கு போவோம் என்று அவர் தேவராஜ் குடும்பத்தை காருக்கு அழைத்து சென்றார்……..

 

விஹாம்மா இங்க வா இவங்க லக்கேஜ் எல்லாம் டிக்கியில வைக்க ஹெல்ப் பண்ணு என்று சித்திக் கூற முகமே தெரியாத அளவுக்கு அதிகமாக தாடியையும் , முடியையும் வைத்து கொண்டு இருந்த ஒருவன் வந்து அவர்களின் லக்கேஜ்களை டிக்கியில் அழகாக அடுக்கி வைத்தான்……

 

அப்பா ஒரு மூனு லக்கேஜ்க்கு மட்டும் இடம் இல்ல, அதை நா பின் சீட்டுல வச்சிக்குறேன் சோ நீங்க வந்த கார்ல ஒரு மூனு பேர கூட்டிட்டு போங்க , ஒருத்தருக்கு மட்டும்தான்  என்னோட கார்ல இடம் இருக்கு….

 

டாடி நீங்க மம்மி நா எல்லாரும் சித்திக் அங்கிள் கார்ல போலாம், ஹே அஸ்வா நீ இவங்ககூட வா என்று அனந்தி அவளின் தாய் மற்றும் தந்தையை அழைத்து கொண்டு போனாள்…..

 

சித்திக்கின் கார் முன்னால் சென்றது , விஹானின் கார் அதை பின் தொடர்ந்து சென்றது , பின் சீட்டில் அவர்களின் ட்ராலி இருக்க அவள் முன் சீட்டில் விஹான் அருகில் அமர்ந்து கொண்டு இருந்தாள்……

 

வழி நெடுகிலும் பணி போர்த்திய சாலைகளை ரசித்து பார்த்து கொண்டே வந்தாள் அஸ்வா……

 

அவளின் ஆசை, கனவு , சுதந்திரத்தை இவன் மீட்டெடுக்க உதவுவானா???

 

அவனின் மனதின் காயத்திற்கு இவள் மருந்தாக வருவாளா???

 

 

பார்ப்போம்…..

 

ஓல்ட் இஸ் கோல்ட் கதைக்கு நான் இந்த கதையை எழுதுறேன் எல்லாரும் படிச்சிட்டு உங்களோட ஏகோபித்த ஓஹோபித்த வரவேற்ப குடுப்பீங்கன்னு நம்புறேன் …..

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……

 

தொடரும்…..

 

🌨️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

 

Click on a star to rate it!

Rating 3.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அழகான ஆரம்பம். நாயகி தனக்குள்ளாகவே ஒரு தனிமை வட்டத்தை போட்டுக்கொண்டு வாழ்கிறார். அவள் கடந்து வந்த சூழ்நிலைகள் எவ்வாறோ? நாயகன் நாயகி அறிமுகபடலம் அருமை. பொருத்திருந்து பார்ப்போம்.
    படைப்பாளருக்கு வாழ்த்துகள் 👏🏼

    1. Author

      நன்றிகள்….. தொடர்ந்து கதை படிச்சிட்டு கமென்ட் பண்ணுங்க😇