
பூகம்பம் – 8
ஏரியின் கரையில் அமர்ந்திருந்த ரூபன் இருகாலையும் நீரினுள் வைத்து லேசாக ஆட்டியபடி ஓடும் தண்ணீரையே பார்த்திருந்தவனுள் பலவிதமான யோசனைகள். தாயும் மகனும் நேற்றிரவு தான் கிராமத்திற்கு வந்திருந்தனர்.
அவன் கொள்ளுப்பாட்டி இறப்பின் விளிம்பில் இருப்பதாக தகவல் வந்ததும் எதையும் யோசிக்காமல் அன்னையை அழைத்து கொண்டு வந்து விட்டான். அவன் பாட்டி வேலுச்சாமியின் மகன்களை விட இவனுக்கு தான் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வார்.
அவருக்கு ஒன்றென்றால் இவன் தன் வேலையை மட்டும் பார்த்து கொண்டு இருந்து விடுவானா என்ன.? எமனின் பிடியில் சிக்கி தவித்திருப்பவரின் உயிர்கூட்டு பறவை எப்போது வேண்டுமானாலும் பறந்து விடலாம் என்பதை நினைக்கவே சற்று வருத்தமாக இருந்தது.
தாயும் மகனும் கிராமத்திற்கு வருவதற்கு முக்கிய காரணமே அவனின் பாட்டி இருப்பதால் மட்டுமே.. தன்னை கண்டால் “வாயா ராசா.. இந்த கிழவியை இப்பதான் பாக்கணும்னு தோணுச்சா.?” என்று கண்ணீருடன் கேட்பவரின் முகம் மகிழ்ச்சியில் பிரகாசத்தை தான் எதிரொலிக்கும்.
நிலம் விசயத்தை அறிந்து இரண்டாவது மகனிடம் சண்டை இட்டார் என்பதை நேற்றிரவு பக்கத்து வீட்டு பெண்மணியின் மூலம் அறிந்தவனுக்கு சொல்லவொண்ணா உணர்வு.. தனக்கு ஆதரவாக இருக்கும் ஒரு உறவும் இனி இல்லையே என்று நினைக்கும் போது சுள்ளென்ற ஒரு வலி அவனை தாக்கியது.
“என்னயா இங்கன படுத்து கிடக்க.?” என்று வந்த குரலில் தன்னிலை மீண்டவன் “சும்ம்மா தான் பாட்டி” என்றவாறு எழுந்தான்.
அவர்களின் வீட்டினருகில் இருக்கும் கிழவி ஒன்று தான் அழுக்கு துணிகள் அடங்கிய வாளியுடன் நின்று இவனிடம் பேசியது. “வெயில்ல கிடக்காம வூட்டுக்கு போயா.. ஒடம்பு எனத்துக்கு ஆவும்.?” என்று உரிமையாக அதட்டியது கிழவி.
சின்ன சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்த ரூபன் வீட்டிற்கு செல்லாமல் அப்படியே நடக்க தொடங்கினான் தனிமையிலும் இசையிலும் கை கோர்த்து.!!
சாத்விக் உறக்கத்தின் பிடியில் இருக்க, அவனருகில் வெறுமனே படுத்திருந்த ஆதிராவின் கவனம் நிவேதாவின் பேச்சில் சென்றது. சாத்விக்கின் தூக்கம் கலையாதவாறு மெதுவாக எழுந்து ஆதிராவும் வெளியில் வந்தாள்.
தங்கையிடம் “யாருடி போனுல.? என் பேரு அடிபடுது” என்று குழப்பத்துடன் வினவ, சாதாரணமாக துருவினியும் “ரஞ்சித்னு நினைக்கறேன்” என்றிட, ‘இவனுக்கு வேற வேலையே இல்ல’ என்று முணுமுணுத்தவளுக்கு பெரும் கடுப்பு.
அதற்குள் போன் பேசி முடித்திருந்த நிவேதா “திரா போனுல ரஞ்சித் தான்.. உனக்கு போன் பண்ணுனா எடுக்க மாட்டிங்கறேனு புலம்பறான்.. ஏதாவது சண்டையா.?” என்று கேட்க, இடவலமாக தலையசைத்து இல்லையென்றவள் “நான் பேசிக்கறேன்கா” என்றாள் ஒற்றை வார்த்தையில்.
சிவா வேறு அமைதியாக இல்லாமல் “அவளுக்கு வெக்கமா இருக்கும் நிவே.. அதான் பேச மாட்டிங்கறா..” என்று கிண்டலடிக்க, “அட அட என் அக்காக்கு வெக்கமா.? ச்சே அந்த கண்கொள்ளா காட்சியை நான் பார்க்காம மிஸ் பண்ணிட்டனே.?” என்று துருவினியும் ஆதிராவின் காலை வாரினாள்.
விழிகளில் கனலை கக்கி “நான் எதுக்கு மாம்ஸ் அவனை கண்டு வெக்கப்படணும்.? எனக்கு பேசணும்னு தோணும் போது பேச போறேன்..” என்று தன் விருப்பமில்லா தன்மையை ஆதிரா வெளிப்படுத்திட, கலகலவென சிரித்தனர் துருவினியும் சிவாவும்.
மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன்
யார் சொல்லு என்று வெகுவாக நக்கலை ஏற்றி துருவினி பாடிட, நறநறவென்று பல்லை கடித்த ஆதிரா அவள் தலையில் நங்கென்று கொட்டினாள்.
அப்போதும் துருவினி அடங்காமல் “புதுசா ஒரு வெக்கம் மொளைக்குது டும் டும்.. புடிச்சா ஒரு வெப்பமடிக்குது டும் டும்..” என்று பாடி இன்னும் ஆதிராவை வெறுப்பேற்ற, “ச்சீ போடி அங்குட்டு” என்று சீறினாள் பெண்ணவள்.
“ஹே திரா.. வொய்டா இவ்ளோ கடுப்பு..” – நிவேதா
“நத்திங் நிவே அக்கா..” – ஆதிரா
“அவளுக்கு கடுப்புடன் சேர்ந்த வெக்கம்கா..” – துருவினி
“உன் வேலையை பாருடி.. வெக்கமாமா வெக்கம்.. என் வாய்ல நல்லா வருது பார்த்துக்கோ..” – ஆதிரா
“துரு அமைதியா இரேன்டா.. அவ ரொம்ப கடுப்பாகிட்டா..” – நிவேதா
“இதுதான் எங்களுக்கும் வேணும்..” என்று சிவாவும் துருவினியும் ஹைபை குடுத்து கொண்டு சிரித்தனர்.
அங்கிருப்பது கடுப்பாக இருந்ததால் “அக்கா நான் கொஞ்சம் நடந்துட்டு வர்றேன்” என்றிட, “ஹே நானும் நானும்” என்ற துருவினியை முறைத்து விட்டு நகர்ந்தாள் ஆதிரா.
எங்கு செல்வது என்று யோசித்தவளுக்கு சட்டென்று ஏரியின் ஞாபகம் வர, ‘இங்க இருக்கறதுக்கு அங்கயே போவோம்.. இந்த துருவினிக்கு ரொம்ப திமிரு ஏறிருச்சு’ என்று மனதிலேறிய சினத்தை தணிக்கவே தங்கையை உள்ளூர கருவி கொண்டு நடந்தாள்.
பொடிநடையாக பாதி தூரம் சென்ற ரூபனும் தன்னை காணாமல் அன்னை தேடுவார் என்பதற்காகவே வீட்டிற்கு செல்லலாம் என்று அவ்வழியில் வந்தவனின் கவனம் மகிழ்ச்சியாக நீருக்குள் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை கண்டதும் தடைப்பட்டது.
அதனை ரசித்தபடி அவன் நின்றிருக்க, அங்கு ரூபனை எதிர்பார்க்காத ஆதிரா இன்ப அதிர்ச்சியில் ‘அட நம்ம ஆளு’ என்றவளுக்கு இவ்வளவு நேரம் மனதை தைத்த வெம்மை சூரியனை கண்டதும் உருகும் பனிதுளியாய் உருகி.. அவளுள் மென்சாரலை வீசியது.
‘அவன் வருவானு நான் நினைக்கவே இல்லை.. தேங்க்ஸ் கடவுளே..’ என்று சந்தோசத்தில் ஆதிரா மிதந்தாலும் இப்போது அங்கு செல்வதா.? வேணாமா.? என்ற குழப்பமே மேலோங்கியது.
கண்டு விட்டான்.. இதோ ஆடவனும் கண்டு விட்டான்.. அவனை இம்சித்து ஆட்டி படைக்கும் செல்ல இம்சையரசியை.!! அவள் வருவாள் என்று இவனும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை போலும் அகன்ற விழிகளே காட்டி குடுத்தது ஆடவனின் திகைப்புடன் கூடிய இன்பத்தினை.!!
பெண்ணவள் காணாதது போல் விழிகளை அவள்புறம் திருப்பாமல் ரூபன் நின்றிருக்க, இதில் கசங்கிய மலராய் வாடிய மனதை கடிவாளமிட்டு அடக்கவே வீட்டிற்கு சென்று விடலாம் என்று நினைத்து ஆதிரா திரும்பிய, இவளை ஓரக்கண்ணால் பார்த்திருந்த ரூபனின் முகமும் சுருங்கியது.
ஆடவனின் சுருங்கிய முகம் பெண்ணவளின் அகக்கண்களில் அகப்பட்டதோ என்னவோ ‘நானா.? அவனானு பார்த்தரலாம்’ என்று கடிந்து உம்மென்ற முகத்துடன் ஏரியின் கரையில் அமர்ந்தாள்.
அவள் அமர்ந்ததை கண்டதும் பூவாய் மலர்ந்து சிரிக்க துடித்த இதழ்களை கட்டுப்படுத்த முடியாமல் முகத்தை அழுத்த துடைப்பது போல் சிரித்து கொண்டான்.
அவளை பார்த்து விட்டான்.. பெண்ணவளின் அருகில் செல்ல துடிக்கும் கால்களுக்கும் அணையிட்டு விட்டான்.. சிரிப்பை உதிக்க முனையும் இதழ்களையும் அடக்கி விட்டான்.. ஆனால் அவளையே பார்க்க நினைக்கும் இமைப்பாவைகளுக்கு மட்டும் கடிவாளமிடும் வழியின்றி தவிக்கிறான்..
தவிப்பாய் தவிக்கிறேனடி
என்னை காண
மாட்டாயா என்று.!
துடியாய் துடிக்கிறேனடி
உன்னருகில் வரும் வரம்
வேண்டும் என்று!
பனியாய் உருகி
நிற்கிறேனடி உன்
நயனங்களின் அசைவில்!
நெருப்பாய் காய்கிறேனடி
உனக்கும் எனக்கும்
இடைப்பட்ட தொலைவினை
கண்டு.!!!
ஏரியின் இருபுறமும் ஆறெழு பெண்கள் துணி துவைத்து கொண்டிருக்க, ரூபனிடம் பேசிய கிழவி முகத்தை சுருக்கி ஆதிராவை யோசனையாக கண்டது.
பின்பு தன் சந்தேகத்தை தீர்க்கவே “ஏலேய் நீ கல்யாணி புள்ள தானே.?” என்று சத்தமாக கேட்க, ‘யாருடா அது.?’ என்று நாலாப்புறமும் விழிகளை பரவ விட்டு தன்னையே குறுகுறுவென பார்த்திருந்த கிழவியை யாரென்று தெரியாமல் போனாலும் “ஆமா பாட்டி” என்றாள் பதிலாக.
“உன் ஆத்தா அப்பன் அல்லாரும் நல்லாருக்காவூகளா.?”
“நல்லா இருக்காங்க பாட்டி”
“நீ ஒத்த மவளா தாயி.?”
“இல்ல பாட்டி.. தங்கச்சி ஒருத்தி இருக்கா..”
“என்ன தாயி பண்ணிட்டு இருக்க.?”
“சென்னைல வேலைக்கு போய்ட்டு இருக்கேன் பாட்டி”
‘அடியாத்தி’ என்று முகவாயில் கை வைத்து “உன் ஆத்தாளுக்கு என்ன மூளை மழுங்கி போய்ருச்சா.? பொட்டப்புள்ளக்கு கண்ணாலத்தை பண்ணி வெக்கறதை வுட்டுப்புட்டு அவ்ளோ தூரம் தனியா வுட்டுருக்கா.?” என்று தன் திகைப்பிற்கான காரணத்தையும் உரைத்தது கிழவி.
‘நான் கேட்டதும் அவங்க விட்டாங்க.. அதைய நீங்க பார்த்தீங்க.. எத்தனை நான் அழுது புரண்டு சம்மதம் வாங்குனேனு எனக்கு மட்டும் தான் தெரியுமே.?’ என்று மனதினுள் கிழவியை கருவிய ஆதிரா “அது ஆகறப்ப ஆகட்டும் பாட்டி.. இப்பவே என்ன அவசரம்.?” என்றாள் சிறிது சத்தமாகவே.
யாருக்கு கேட்க வேண்டும் என்று நினைத்து சத்தமாக கூறினாளோ அவனுக்கும் கேட்டது தான்.. ஆனால் முகத்தில் எந்த பிரதிபலிப்பும் தென்படவில்லை..
“அந்த கூறுகெட்டவ மாப்ளை பாக்கறாளா.? அதுவும் இல்லயா.?”
“அவங்க பார்க்கலனு சொன்னா நீங்க பார்க்க போறீங்களா.?
“அதுக்கென்ன தாயி பாத்தரலாம்.. என் பேரன் ஒருத்தன் ஜம்முனு ராசா கணக்கா இருக்கான்..”
விளையாட்டுக்கு தான் ஆதிரா அப்படி கேட்க, பாட்டியோ அவள் தலையில் குண்டை இறக்கியதில் “எதே.? உங்க பேரனா.?” என்று அதிர்ந்து கத்தியவளின் குரலே காட்டி குடுத்தது அவளின் அப்பாட்டமான அதிர்ச்சியினை.!!
இவ்வளவு நேரம் இவர்களின் சம்பாஜனையை கேட்டவாறு அலைப்பேசியில் கவனத்தை வைத்திருந்த ரூபன் போன் பேசுவது போல் திரும்பிட, அவன் கன்னத்தில் விழுந்த கன்னங்குழியே கூறியது ஆடவன் சிரிப்பை அடக்க முயல்வதை.!
‘ச்சை எங்க போனாலும் இதே பேச்சு’ என்று வெகுவாக புலம்பிய ஆதிரா திரும்பி நின்றிருந்த ரூபனின் முதுகை முறைத்து ‘போடா நான் போறேன்’ என்று முணுமுணுத்தவள் செல்ல கோவத்துடன் எழுந்தாள்.
‘கிராமம்னா என்னனு இன்னும் உனக்கு புரில ஆதி’ என்று சிரித்து கொண்டவன் திரும்பிட, பெண்ணவளை காணாமல் படபடத்த இமைகளுடன் எங்குவென்று தேடினான். அவன் செல்வது இவன் விழிகளில் அகப்பட்டதும் தான் நிம்மதி அடைந்தான்.
ஆதிராவை வெகு நேரமாக காணாமல் அவளுக்கு அழைத்த நிவேதா வீட்டிற்கு வர கூறிட, மறுபேச்சு போச மனமின்றி வருவதாக கூறி நடந்தாள் அதுவும் அடிக்கடி ரூபனை திரும்பி பார்த்தவாறு.!
‘ச்சே ஏதேச்சையா பார்த்தும் பேச முடியாம போய்ருச்சே’ என்று பெண்ணவளின் மனம் வருத்தத்தில் துடித்தது. அவளின் மனநிலையை கலைக்கவே அவளுக்கு எதிர் திசையில் இருந்து நாய் ஒன்று குறைத்திட, பயத்தில் பக்கென்றான இதயம் வேகமாக துடித்தது.
‘அய்யய்யோ இது எதுக்கு இப்ப வந்துச்சு.? வந்தது தான் வந்துச்சு அப்படி ஓரமா போகாம என்னைய வேற கடிச்சு குதறிருவேனு ரேன்ஜூக்கு முறைச்சுட்டு நிற்குது.. எனக்கும் அதுக்கும் எந்த பகையும் இல்லயே.. அதைய முன்னபின்ன பார்த்ததும் கிடையாதே.? அப்பறமும் வொய்.? வொய்ய்ய்.?’ என்று நினைத்த ஆதிராவுக்கு உள்ளுக்குள் ஏற்பட்ட உதறல் நன்றாகவே வெளியிலும் தெரிந்தது.
திரும்
பி ஓடிருவோமா.? இல்ல அப்படியே நடப்போமா.? என்று புரியாமல் மலங்க மலங்க முழித்தவாறு நின்றாள் பெண்ணவள்.
அழகிய பூகம்பம் தொடரும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

