Loading

பூகம்பம் – 42

“ஆதி ஏன் இவ்ளோ கோவப்படற.? அப்படி என்னதான் உங்க அப்பா சொன்னாரு.?” என்ற ரூபனின் கேள்விக்கு “அவரு என்னமோ சொல்லிட்டு போறாரு.. நம்ம என்ஜாய் பண்ணலாம் அபி.. வேலையை ரிசைன் பண்ணியும் இன்னும் ரெண்டு மாசத்துக்கு அங்க இருக்கணும்னு சொல்லி தொலைஞ்சுட்டாங்க.. அதைய நினைக்கறப்ப தான் ஃபீல் ஆகுது..” என்று பேச்சை மாற்றினாள்.

“ரெண்டு மாசம் தானே.? சீக்கிரம் ஓடிரும் ஆதி.. அப்பறம் என்கிட்ட வந்துருவீயே.? அது வரைக்கும் அங்க என்ஜாய் பண்ணு..” என்று இவன் சிரித்த சமயம் மீண்டும் ஆதிராவின் அலைப்பேசி சிணுங்கியது. அழைத்தது காவ்யா தான்.

எடுத்ததுமே “என்னடி அதிசயமா கோவிச்சுட்டு கிளம்பிட்டியாமா.? உனக்கு தான் ரோசம் எல்லாம் வராதே.? திடீர்னு என்ன அதெல்லாம் வந்துருக்குனு நான் யோசிச்சதும் தான் தெரியுது இதைய சாக்கா வெச்சுட்டு இன்னும் ரெண்டு நாள் என் அண்ணா கூட தனியா என்ஜாய் பண்ணலாம்னு கிளம்பிட்டேனு..” என்று கேலி செய்தாள்.

“வாயை மூடுடி குரங்கு.. நானே அங்கிருந்து செம கடுப்புல தான் கிளம்பிருக்கேன்..”

“நான் நம்ப மாட்டேன்.. இப்ப நீ ஹனிமூனுக்கு தானே போற.?”

“ஆமா அதுக்கென்ன.?”

“எவளாவது வீட்டுல கோவப்பட்டுட்டு ஹனிமூனுக்கு போவாளா.?”

“நான் போவேன்..”

“த்து அப்படியே மலைல இருந்து குதிச்சு செத்துரு.. திரும்பி வந்தராத..” என்றதும் “நீயும் வா சேர்ந்து குதிப்போம்.. அப்ப தான் ஜாலியா இருக்கும்..” என்ற ஆதிராவிற்கு சிலபல திட்டுக்களை வழங்கி விட்டு “போய் தொலை” என்றதோடு போனை வைத்தாள் காவ்யா.

இவளிடமும் கூறியது துருவினி தான்.. கடுப்பில் யாரிடம் கூறுவது என்று தெரியாமல் காவ்யாவிற்கு அழைத்து அவளின் காதில் ரத்தம் வரும்வரை தமக்கையை திட்டிட, அவளோ “எம்மா உன் அக்காக்காரி வந்தா நேர்ல திட்டவும் கொஞ்சம் வெய்யுமா.. என் காதுல இருந்து ரத்தமே வந்துருச்சு.. இனி என்னால முடியாதுமா..” என்று பாவமாக கெஞ்சி அழைப்பை துண்டித்து விட்டு தான் ஆதிராவிற்கும் அழைத்தது.

‘அக்கா தங்கச்சி ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்ல.. ரெண்டுமே நம்மளைய தான் பாடாப்படுத்தும்.. இதுல மட்டும் ரெண்டும் ஒரே மாதிரி ஒற்றுமையா இருக்கும்க..’ என்று புலம்பி கொண்டிருந்தாள் காவ்யா.

“ஏய் ஆதிரா எல்லாம் எடுத்து வெச்சுட்டியா.?” என்று காவ்யா வினவ, “ம்ம்ம்ம் எல்லாம் முடிஞ்சுது.. இனி அபி வந்தா மட்டும் போதும்..” என்று பதிலுரைத்திட, “இன்று முதல் எனக்கு விடுதலை கிடைச்சுரும்.. இனி இந்த பக்கம் வந்தராத.. வந்தாலும் துரத்தி விட்டுருவேனாக்கும்..” என்றாள் காவ்யா.

“என்னைய துரத்தி விடறதுல உனக்கு எவ்ளோ சந்தோசம்.. தனியா கிடந்து சாவுடி..”

“நான் ஏன்டி சாவணும்.? நல்லா சாப்பிட்டு என்ஜாய் பண்ணுவேன்டி வெண்ணை.. நீ போய் வீட்டு வேலையை எல்லாம் ஒழுங்கா செய்ய பாரு..”

“நீயும் ஒரு நாள் மாட்டுவ..”

“ஹஹஹஹஹ நான் ரெடி தான்.. ஆனா அவன் தான் கண்டுக்க மாட்டிங்கறானே.?”

“என்ன முடிவுல இருக்க நீ.?”

“நான் எப்பவும் ஒரு முடிவுல தான் இருக்கேன்..”

“அப்ப அசோக் அண்ணா.?”

“அவனும் ஒரே முடிவுல தான் இருக்கான்..”

“என்ன நீ வேணாம்னா.?” என்று கேட்டு ஆதிரா சிரிக்க, “ரொம்ப சிரிக்காத.. அவனுக்கும் என்னைய பிடிக்கும்.. ஆனா என் அப்பாவை நினைச்சு வேணாம்னு சொல்றான்.. அதான் நான் என் அப்பாகிட்டயே பேசிக்கலாம்னு இருக்கேன்..” என்று தான் எடுத்த முடிவையும் கூறினாள்.

“அதுவும் சரிதான்.. இப்ப அபி கூட அசோக் அண்ணாவும் வருவாங்கனு நினைக்கறேன்டி.. நீ அவங்ககிட்டயே இந்த முடிவை சொல்லி ஷாக் குடு.. அப்பவாவது அவங்க மனசுல இருக்கறதை சொல்றாங்களானு பார்ப்போம்..” என்ற ஆதிராவின் கூற்றும் சரியென பட்டதில் “டோன் டோன் சொல்லிருவோம்.. அதுல என்ன கஷ்டம்.?” என்றதும் ஹைபை குடுத்து கொண்டனர் இருவரும்.

ஆதிரா கூறியதும் சரி தான்.. ரூபனுடன் அசோக்கும் வந்திருந்தான் ஆதிராவை பெங்களூர் அழைத்து செல்ல.!! ஹனிமூன் முடிந்ததும் ஆதிரா சென்னைக்கும் ரூபன் பெங்களூருக்கும் புறப்பட்டு விட்டனர்.. ஆதிராவின் பிறந்தகத்திற்கு சென்று விட்டு பின்பு கிளம்பலாம் என்ற ரூபனின் வார்த்தைக்கு அவள் செவிமடுக்கவே இல்லை..

நேராக சென்னைக்கு கிளம்பி விட்டாள்.. போனிலே தங்கள் காதலை இன்னும் பலப்படுத்திட, அவ்வப்போது ஆதிராவை காண ரூபன் வந்து விடுவான்…இதோ இரண்டு மாதங்கள் ஓடி இப்போது புகுந்தகத்திக்கு சென்றிட தயாராக நிற்கிறாள் பெண்ணவள்.

இனி அவளின் பயணங்கள் அவளவனுடனே.. அதை நினைத்து இறக்கை இல்லாமல் வானில் பறந்து கொண்டிருக்கிறாள்.. வீட்டிலே இருந்து விடும் எண்ணமெல்லாம் இல்லை அவளுக்கு.. பெங்களூரிலே வேலையும் தேடி விட்டாள்.. அங்கு சென்றதும் ஓரிரு வாரங்களில் வேலைக்கும் கிளம்பி விடுவாள்.

தன்னவனிடம் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று வார்த்தைக்கு வார்த்தை கூறும் தகப்பனின் முன்பு தலை நிமிர்ந்து வாழ வேண்டும்.. அதற்கு சில காலங்கள் கஷ்டப்பட்டாலும் பின்பு மனநிறைவுடன் வாழலாம் என்பதற்காகவே இந்த முடிவை அவள் எடுத்திருக்கிறாள்.

இன்னும் ரூபனுக்கு இதைப்பற்றி தெரியாது.. அவன் மறுத்தாலும் இந்த அடங்காபிடாரிக்கு அவனை சமாளிக்க தெரியாதா என்ன.? கெஞ்சி பார்ப்பாள் அவன் மிஞ்சினால் முகத்தை தூக்கி வைத்து கொண்டால் ரூபனே இவளிடம் தணிந்து விடுவானே.!! அதை தனக்கு சாதகமாக மாற்றி கொண்டு அவனிடம் சம்மதமும் வாங்கி விடுவாளே இவள்.!!!

தன்னவனின் பேச்சை கேட்க கூடாது என்பது எல்லாம் இவளின் எண்ணமில்லை.. தான் தேர்ந்தெடுத்த வாழ்வு தவறானது என்று பேசியவர்களின் வாய் மூலமே அவளின் முடிவு சரியானது தான் என்று கூற வைக்க வேண்டும் என்ற வெறி தான் அவளுள்.!!

காதலித்து கல்யாணம் செய்வது பெரிதல்ல.. ஆனால் அக்காதலில் வெற்றி பெற்று திருமணத்தில் இணைந்து மற்றவர்கள் மெச்சும்படி வாழ்வது தான் பெரிது.. தன்னவனை இழிவாக பேசியது பெற்றோர் என்றாலும் அவர்களின் முன்பு வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் எழுவதும் தவறு அல்லவே.? இது தானே உண்மை காதலின் அடையாளமும்.!!

ரூபனுடன் அசோக்கும் வந்து சேர, அவனை குறுகுறுவென பார்த்த காவ்யா “எனக்கு எப்ப ஓக்கே சொல்லுவ.?” என்று கண்ணடித்து கேட்க, கடுகடுவென முகத்தை மாற்றி “வாய்லயே அப்ப போறேன் பாரு.. உனக்கு வேற வேலையே இல்லையா.?” என்று சீறினான்.

“என் தலையாய வேலையே இது தான்.. எனக்கு ஓக்கே சொல்லு..”

“ஒரு அப்பு வேணா விடுவேன்..”

“ஓஹோ என்னைய அடிக்கறதுல தான் உனக்கு விருப்பம்னா இந்தா ரெண்டு அடி தானே அடிச்சுக்கோ.. யாரு வேணாம்னு சொல்ல போறது.?”

“அண்ணா இது தான் சாக்குனு இன்னும் ரெண்டு சேர்த்து விடுங்க.. இவ நம்மளைய பண்ற டார்ச்சல் கொஞ்சநஞ்சமில்லை.. எனக்கு எல்லாம் இந்த சான்ஸ் கிடைச்சா யோசிக்க மாட்டேன் அடுத்த நொடியே அடிச்சுருப்பேன்.. நீங்க ரொம்ப லேட்டு அண்ணா.. சீக்கிரம் அடிங்க..” என்று அசோக்கை அவசரப்படுத்தினாள் ஆதிரா.

அடிப்பாவி இவ இருக்கா பாரு.. என்று நினைத்த ரூபன் வாயை பிளக்க, அவனை பார்த்து கண்ணடித்து பின்பு அசோக்கிடம் “என்ன யோசனை.? சீக்கிரம் அடிச்சுட்டு கிளம்பலாம் அண்ணா.. நேரமாகுது பாருங்க..” என்றாள் வேணுமென்றே.!!

காவ்யாவையே உறுத்து விழித்தவன் பின்பு அவளை பாராமல் “நம்ம கிளம்பலாம் ரூபன்.. நேரமாகுது.. எதுக்கு வெட்டிப் பேச்சு பேசிட்டு நிற்கணும்.?” என்றிட, இடுப்பில் கை வைத்து புசுபுசுவென அவனை முறைத்து “இது உனக்கு வெட்டிப்பேச்சாடா.?” என்று கடுகடுத்தாள் காவ்யா.

பின்பு ரூபனிடம் “நீங்க மட்டும் கிளம்புனீங்க அவ்ளோதான் சொல்லிட்டேன்” என்று மிரட்டலையும் விட, அவளை முறைத்து “ப்ச் கிளம்பலாம் ரூபன்” என்று அசோக்கும் அவசரப்படுத்த, இருவருக்கும் இடையில் மாட்டி கொண்ட ரூபனின் நிலையை என்னவென்று சொல்வது.?

ஆதிராவோ வாயை மூடி சிரித்து நிற்க, “இங்க பாருடா…” என்று ஆரம்பித்த காவ்யாவை அலட்சியமாக பார்த்து “உன்கிட்ட பேச எனக்கு நேரமில்ல.. குறுக்கமறுக்க வராம அப்படி ஓரமா போ..” என்று விட, “ஓஹோ அப்ப வேற எவ கூட பேச உனக்கு நேரமிருக்கு.? நான் ஏன்டா ஓரமா போகணும்.? நான் இங்க தான் நிற்பேன்..

இப்படி உன் முன்னாடி தான் இருப்பேன்.. இதோ இப்படி உன் மூஞ்சி முன்னாடி தான் என் மூஞ்சியையும் வெப்பேன்.. உன்னால என்ன பண்ண முடியும்.? ஹான் என்ன சொன்ன.? குறுக்கமறுக்க வர்றனா.? இப்ப வரைக்கும் அப்படி வந்த மாதிரி தெரியல.. இனி கண்டிப்பா வருவேன்..” என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்து விட்டாள் அவள்.

அவளை முறைத்து நிற்பதை தவிர அவனுக்கு வேறு வழியில்லை.. இப்போது அவளிடம் வாயை குடுத்தாலும் அதற்கும் சேர்த்தல்லவா குதிப்பாள்.? என்று நினைத்து அமைதியாகி போனான்.

இப்ப உனக்கு என்ன பிரச்சனை.? என்னைய ஏன் வேணாம்னு சொல்ற.? நானும் உன் பின்னாடி விடாம சுத்தறேன்.. என்னைய ஒரு ஆளாவே மதிக்க மாட்டிங்கற.? அடடா நம்ம பின்னாடியும் ஒரு பொண்ணு சுத்துதே அதுக்கு ஓக்கே சொல்லுவோம்னு தோணுதா உனக்கு.?

என்னைய வேணாம்னு சொல்ல காரணம் என் அப்பாவா.? அப்ப என் அப்பா சம்மதம் சொன்னா என்னைய ஏத்துக்குவ தானே.? உன் பின்னாடி சுத்தறது வேஸ்ட்டுனு முடிவாகிருச்சு.. இனி என் அப்பாகிட்ட நேரடியா என் விருப்பத்தை சொல்லி அவங்க சம்மதத்தோட தான் உன் முன்னாடி வருவேன்.. இது இந்த காவ்யாவோட சபதமும் கூட..

அது வரைக்கும் ஜாலியா இருந்துக்கோ.. அப்பறம் என்னைய வேணாம்னு சொல்ல உனக்கு ஒரு காரணமும் கிடைக்காது.. சம்மதிச்சு தான் ஆகணும்..” என்று கூறி அசோக்கின் வயிற்றில் புளியை கரைத்தாள் அந்த இம்சைக்காரி.

அடிப்பாவி அப்பாவி பையன்டி இந்த அசோக்கு.!! அவனை போய்..??

ராசா அசோக்கு சிலையாகி போய்ராத.. கொஞ்சம் மூச்சு விட்டுட்டு இவளை முறைச்சு தள்ளுப்பா…நீ பயந்துட்டா இந்த இம்சை இன்னும் உன்னைய வெச்சு செஞ்சுருவா..

இந்த இம்சைகிட்ட இருந்து நீ ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது போல..!!

எல்லாம் விதி.!!

நோ நோ நோ

நான் செஞ்ச சதி தான்.!!!

ஹிஹிஹிஹிஹிஹிஹி

வரட்டா..

அடுத்த யூடில மீட் பண்ணுவோம்.!!!

பூகம்பம் – 50

உள்ளுக்குள் அவன் பதட்டமானாலும்‌ வெளியில் அவளை கடுமையாக முறைத்து “இப்படி மிரட்டுனா நான் பயந்துருவனா என்ன.? எனக்கு உன்னைய கல்யாணம் பண்ணிக்கற ஐடியாவே இல்லை.. இதுல உன் அப்பா சொன்னா சரினு தலையை ஆட்டிருவனா.? சின்னப்புள்ள தனமா இருக்கு..

என்னைய இப்படி மிரட்டுனா நானும் அய்யோ அம்மானு பதறி சம்மதம் சொல்லிருவேனு நினைச்சீயா.? போய் வேலையை பாரு போ..” என்று அலட்சியமாக பதிலுரைத்து விட்டு நகர்ந்தான் அசோக்.

இதில் காவ்யா மட்டுமின்றி மற்ற இருவரும் அதிர்ந்து கேட்க, அவளை மீறி துளிர்த்த நீர்துளிகள் வழிந்திடும் தடங்களாகி போனது கன்னமிரண்டும்.!! செல்லும் அவனையே வெறித்து நின்றவளை ஆட்கொண்டது எவ்வகை உணர்வென்றே புரியாமல் போனது.

ரூபனும் “காவ்யா நான் சொல்றேனு தப்பா நினைக்காத.. அவனுக்கு அப்படி ஒரு எண்ணமில்லாதப்ப எப்படிமா அவனை கல்யாணம் பண்ணுவான்.? கட்டாயபபடுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அவன் சந்தோசமா இருப்பனா.? உனக்கு பிடிச்சுருக்கு ஓக்கே.. அவனுக்கும் பிடிக்கணும்ல.?

அவனை தொந்தரவு பண்றது வேஸ்ட்டு தானு எனக்கு தோணுது.. நீ மனசை மாத்திக்கறது தான்மா நல்ல வழி.. இல்லனா இன்னும் நீ தான் கஷ்டப்படுவ..” என்று ஒரு அண்ணனாக அவளுக்கு அறிவுரை வழங்கியவன் தன்னவளிடம் ‘பேசிட்டு வா’ என்று கண்ணை காட்டி விட்டு சென்றான்.

பதிலின்றி நின்றவளை உலுக்கி “அண்ணன் பொய் சொல்றாங்கனு நினைக்கறேன்டி.. பேசாம நீ அவங்க அம்மாகிட்டயே அவனை பிடிச்சுருக்கற விசயத்தை சொல்லிரு.. அண்ணனுக்கு எதுக்கு இவ்ளோ வீம்புனு தெரியல.. பிடிச்சுருக்கறதை மட்டும் ஒத்துக்கவே மாட்டிங்கறாங்க..

நான் விடாம பேசி பார்க்கறேன்டி.. நீ இப்படி நிற்காத.. நம்ம இறங்கி போனா இதுக இப்படி தான் ஓவரா பிகு பண்ணுவாங்க.. பார்த்துக்கலாம்..” என்று ஆறுதல் கூறி அவளை அணைத்து விடுவித்து பிரியாவிடை பெற்றாள் ஆதிரா.

இச்சமயம் தோழியுடன் இருக்க முடியாமல் போன தன் நிலையை நினைத்து ஆதிரா வருந்தினாலும் வேறு வழியின்றி மனதை தேற்றி கொண்டு புகுந்தகத்திற்கு கிளம்பினாள்.

கிளம்பிய சமயம் இருந்த மகிழ்வு இப்போது அவளிடம் இல்லை.. அவளின் மனது காவ்யாவின் நிலையை நினைத்தே வருந்தியது. அசோக்கை கோவமாக வெறித்தவள் “நீங்க பண்றது உங்களுக்கே நல்லா இருக்கா.? பொண்ணுக பிடிச்சுருக்குனு சொன்னா நீங்க ஓவரா பண்றீங்க.? இதே நீங்க பிடிச்சுருக்குனு சொன்னா மட்டும் நாங்க உடனே சரினு சொல்லிரணும்னு நினைக்கறீங்க.?

அவ என்ன ஆறு மாசமாவா உங்க பின்னாடி சுத்தறா.? ஆறு வருசத்துக்கு மேல பிடிச்சுருக்கு பிடிச்சுருக்குனு சொல்லிட்டு இருக்கா.. அப்பவும் நீங்க இப்படி பண்றீங்க.? உண்மையாவே அவளை பிடிக்கலயா.? இல்ல அவ அப்பாக்காக பிடிக்கலனு நடிக்கறீங்களா.? ச்சைக் உங்களைய பார்க்க பார்க்க அவ்ளோ ஆத்திரமா வருது..” என்று வெடித்தாள்.

அவளின் வார்த்தையை காதில் கேளாமல் சாவகாசமாக அவன் கார் ஓட்டி கொண்டிருக்க, ரூபன் தான் “ஆதி நீ பேசறது உனக்கே நல்லா இருக்கா.? காவ்யா தான் இவனை கட்டாயப்படுத்திட்டு இருக்கா.. இவனுக்கும் சம்மதம் இருந்தா தானே ஓக்கு சொல்லுவான்.. இவன் மனசை நீங்க புரிஞ்சுக்க மாட்டிங்களா.?” என்று நண்பனுக்கு துணை நின்றான்.

“வேணும்னே பண்ணிட்டு இருக்காங்க.. அது உனக்கு புரியலயா.?” என்று தன்னவனுக்கு புரிய வைத்திடும் நோக்கில் ஆதிரா பேசிட, “ப்ச் நீ முதல்ல புரிஞ்சுக்கமா..” என்றான் ரூபனும் தன்மையாக.!

இல்ல அபி… என்று பேச வந்தவளை பேச விடாமல் அசோக்கே “ஆதிரா நீ ரொம்ப ஹீட்டா இருக்க.. போய் ஜில்லுனு ஏதாவது குடிச்சுட்டு வாங்க..” என்றவன் ரூபனிடமும் “போய்ட்டு வாங்கடா” என்றபடி காரை நிறுத்தினான்.

“நீ.?” என்று ரூபன் வினவ, “எனக்கு எதுவும் வேணாம்.. நீங்க போய்ட்டு வாங்க.. ஆதிரா காலைல சாப்பிட்டது தான் போல.. இந்த பக்கம் நல்ல ஹோட்டல் இல்லை.. சோ இப்போதைக்கு ஜூஸ் குடிச்சுட்டு வாங்க.. அப்பறம் சாப்பிட்டுக்கலாம்..” என்று அவர்களை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தான்.

அது வரை புன்னகைத்திருந்த இதழ்கள் அவர்கள் நகர்ந்ததும் இறுகி கொள்ள, கண்ணாடியில் தலையை சாய்த்தவனின் விழிகளோ பலவிதமான உணர்வுகளை பிரதிபலித்து கலங்கிடவும் செய்தது.

இவனின் கண்ணீர் துளிகளே கூறும் காவ்யாவின் மீதான நேசத்தினை.!! அவளுக்கு முன்னால் இவன் தானே அவளின் மேல் காதலும் கொண்டது.!!

குடும்ப சூழ்நிலை காரணமாக அக்காதலை ஒதுக்கி வைத்தவன் இப்போது பெண்ணவளையும் வலுக்கட்டாயமாக ஒதுக்கி வைக்க முயல்கிறான் அவன் வாழ்க்கையில் இருந்து.!! ஆனால் அவள் தான் விலகி செல்ல மாட்டேன் என்கிறாளே.!!

இன்னும் வாங்கிய கடன்களையே அடைக்க முடியாத நிலை.. இதில் பெண்ணவளையும் தன் வாழ்க்கையில் நுழைந்து அவளையும் கஷ்டப்பட வைக்கும் எண்ணம் இவனிடம் இல்லை.. தமக்கைகளுக்கு செய்ய வேண்டிய கடமையும் இருக்கின்றது.. இதில் எப்படி பெண்ணை பெற்றவர்கள் தனக்கு கட்டி வைக்க சம்மதிப்பார்கள்.?

அவர்களை மீறி திருமணம் செய்திடவும் இவனுக்கு விருப்பமில்லை.. கஷ்டமான நேரங்களில் அவனுடன் துணையாக நிற்பது காவ்யாவின் தந்தை தானே.? இதில் எங்ஙனம் இவனால் அவரை கலங்க வைக்க முடியும்.. தன் காதல் ஜெயிக்காமல் போனாலும் பரவாயில்லை காவ்யாவின் தந்தை தன் மீது வைத்திருக்கும் பாசமாவாது ஜெயிக்கட்டுமே என்ற நிலையில் தான் உள்ளான் இவன்.!!

யார் பேசினாலும் அதை கண்டு கொள்ள போவதே இல்லை என்ற எண்ணம்.. இப்போது அவர்களின் முன்பு கலங்கிட கூடாது என்பதற்காக தான் அவர்களை அனுப்பியும் வைத்தது. அவர்கள் வருவதை கண்டதும் முகத்தை அழுத்த துடைத்தவன் சாதாரணமாக சீட்டில் சாய்ந்து கண் மூடி இருப்பதை போல் நடித்தான்.

அதன் பிறகு மூவரின் பயணமும் அமைதியுடனே கழிந்தது. ரூபனின் சொல்லிற்கிணங்க அவ்விசயத்தை அதோடு விட்டும் விட்டாள் ஆதிரா.. ‘அவர்கள் என்னமோ பண்ணி கொள்ளட்டும்..’ என்ற மனநிலை தான் அவளுக்கும்.!! வேறு என்ன செய்திட முடியும் இவளால்.!!

ஆர்த்தி எடுத்து இருவரையும் மங்கை வரவேற்க, முதலில் தயக்கமாக இருந்தாலும் பின்பு அவருடன் இணைந்து இரவுணவு தயாரிக்க தொடங்கினாள் ஆதிரா.. எப்போதும் பேசி கொண்டிருக்கும் அவளின் வாயோ இப்போது பூட்டு இல்லாமல் பூட்டி இருந்தது.

மாமியார் என்பதால் என்னவோ அவருடன் ஒன்றவும் முடியவில்லை.. கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதிலுரைத்து பின்பு விட்டால் போதுமென்று அறைக்குள் புகுந்து கொண்டாள். வேலையாக இருந்த ரூபனை பின்னிருந்து அணைத்து கொள்ள, “என் ஆதிக்கு என்ன ஆச்சு.?” என்று கணினியில் இருந்து பார்வையை அகற்றாமலே வினவினான் ரூபன்.

“என்னனு தெரியல அபி.. புது இடம்னால தயக்கமா இருக்கலாம்.. பழக கொஞ்சம் டைம் எடுத்துக்கும் போல..”

“அம்மா ஏதாவது சொன்னாங்களா.?”

“ச்சே ச்சே அவங்க என்னடா சொல்ல போறாங்க.?”

“அம்மா, அப்பா ஞாபகம் வந்துருச்சா.?”

“ஹூம் அப்பா ஞாபகம் இல்ல.. லைட்டா அம்மா ஞாபகம் தான்..”

“போன் பண்ணி பேசுடா..”

“வேணாம் அபி.. விடு..” என்றவள் பேச்சை வேறு திசையில் மாற்றிட, அவனும் தன்னவளிடம் மனம் விட்டு பேசினான்.. வேலையை ஒதுக்கி வைத்து விட்டு அவளுடனே நேரங்களையும் கழித்தான்.. அவனின் அன்னையிடமும் ‘ஆதியிடம் சாதாரணமாக பேசுங்க’ என்றிட, அவருக்கோ ‘இப்ப நான் என்ன கொடுமையா படுத்திட்டேன்’ என்ற எண்ணம் தான்..

இருந்தாலும் சரியென்று விட, கொஞ்சம் கொஞ்சமாக அவ்வீட்டில் ஒன்றி விட்டாள் பெண்ணவள்.. காலையில் எழுந்து மாமியாருடன் சமையல் செய்வாள்.. ரூபன் கிளம்பியதும் வீட்டு வேலைகளை முடித்து விட்டு போனும் கையுமாக அமர்ந்து விடுவாள்.. இதில் மங்கைக்கு கொஞ்சம் கடுப்பே.!

பால்கனி ஊஞ்சலில் தன்னவனுடன் அமர்ந்திருந்த பெண்ணவளுக்கோ ஜில்லென்ற உணர்வு.. அவளின் மனம் மட்டுமா அன்று காலநிலையும் மழைச்சாரலை தூவி ஆங்காங்கு ஜில்லென்ற மாலையை தான் தோற்றுவித்திருந்தது.

“ஈவ்னிங் டைம் நல்லாருக்குல.?” என்று கேட்ட பெண்ணவளின் இடையை ஆடவனின் கரங்கள் தழுவி சட்டென்று அவனின் புறம் இழுத்து “இதுவும் நல்லா தான் இருக்கு ஆதி” என்றா

ன் குறையாத நேசத்தில்.!!!!

என்னருகில் நீ

இருந்தாலே

பூகம்பம் தானடா

என்னுள்.!!

அந்த இம்சைகளுக்கு

என்ன பெயர்

வைப்பதென்று

தெரியாமல் தவித்து

மருகுகிறேனடா

என் ஆருயிரே.!!

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்