Loading

பூகம்பம் – 41

துருவினியின் தந்தை எப்போது இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் சொன்னார்.? அந்த அதிசயம் எப்போது நடந்தது.? அதை நம் பார்க்கவில்லையல்லவா.? வாருங்கள் அதையும் பார்த்து விட்டு வந்து விடலாம்.!!

ஆதிராவின் திருமணத்தில் விருப்பமே இல்லாமல் சுற்றி கொண்டிருந்த பாண்டியனை பிடித்து வைத்து இப்ப என்ன ஆச்சுனு இப்படி சுத்திட்டு இருக்க.? இது உன் புள்ள கல்யாணம்யா.. நீ ஆசைப்பட்டேனு தான் கோவில்ல வைக்க வேண்டிய கல்யாணத்தை மண்டபத்துல வெச்சுக்கலாம்னு ரூபன் சொன்னான்.. மொத்த செலவையும் அவனே ஏத்துக்கவும் செஞ்சுட்டான்..

அவன் கிட்ட என்ன குறையை கண்டேனு இப்ப வரைக்கும் எனக்கு புரியல.? நம்ம புள்ளையை அவன் தங்கமா பார்த்துப்பான்யா.. என்னைய நம்பு.. நான் என்ன நம்ம புள்ளையை குழிக்குள்ளயே தள்ளி விட நினைப்பேன்.?” என்று வீரச்சாமி சமாதான வார்த்தைகளை உரைத்தார்.

ஆனால் அப்போதும் “அந்த ரஞ்சித் பையன் குடும்பமும் தங்கமான குடும்பம் தான்.. நம்ம வேணாம்னு சொன்னாலும் கல்யாணத்துக்கு கூப்பிட்டதும் வந்துருக்காங்க பாருங்க.. அவங்கள பார்க்க முடியாம எனக்கு தான் குற்றவுணர்ச்சியா இருக்கு..” என்று தன் வருத்தத்திற்கான காரணத்தை கூறினார்.

“இவ்ளோ தானே.? அவன் பெரிய மருமகனா வரலனா என்ன.? சின்ன மருமகனா வந்துட்டு போறான்.. அவன் அப்பாகிட்ட நான் பேசறேன்.. நம்ம துருவினியை அவனுக்கே கட்டி வெச்சரலாம்.. இதுக்கு போய் இப்படி பண்ணிட்டு..? துருவினி புள்ள நம்ம சொன்னா கேட்டுக்கும்..

பெரிய புள்ள மாதிரி இல்ல சின்னவ.. ஆனா என்ன ஒரு வருசம் கழிச்சு கல்யாணத்தை வெச்சுக்கலாம்.. இப்பவே புள்ளயை கல்யாணம் பண்ணி அனுப்ப கூடாது..” என்று கூறி பாண்டியனை மாற்றி இருந்தார் வீரச்சாமி.

இதுவும் நல்ல யோசனை தான் என்று பாண்டியனும் சமாதானமாகி விட, ஏதேச்சையாக இவர்கள் பேசுவதை கேட்ட துருவினி தான் வானில் பறந்தாள்.. தன் காதல் வெளியில் கூறாமலே நிறைவேற போகின்றது என்ற ஆனந்தமே அவர்களின் முகத்தை இன்னும் பிரகாசமாக்கிட, தன்னவனை காணும் ஆவலில் அவனை தேடினாள்.

அவன் நிவேதாவுடன் பேசி கொண்டிருப்பதை பார்த்து இவளும் அங்கு செல்ல, அப்போது தான் ஆதிராவை பற்றி நிவே கூறியதை கேட்டு கோபமுற்று இவளும் திருப்பி பதிலுரைத்து விட்டு வந்தது.

எப்படியோ இந்த துருவினியோட காதல்ல எந்த பூகம்பமும் வராம கை கூடிருச்சு.. அது வரைக்கும் நல்லது தான்.!! காவ்யாவோட நிலைமை தான் என்னவாகும்னு தெரியல.. இனி அதையும் பார்த்தரலாம்.!!

சந்தோசமாக அசோக்குடன் உணவருந்த ரஞ்சித் செல்ல, புதுமண தம்பதிகளும் சாப்பிட வர, “ஹேய் ஆதிரா எப்படியோ கல்யாணம் பண்ணிட்ட.. ரொம்ப சந்தோசம்..” என்று அவளிடம் வாழ்த்து கூறியவன் பின்பு ரூபனிடம் “வாழ்த்துக்கள் சகல.. இனி இவளை கட்டி மேய்க்கற பொறுப்பு உங்ககிட்ட வந்துருச்சு..” என்றான் சிரிப்புடன்.

மற்ற வார்த்தைகள் எல்லாம் காதில் விழாமல் அவனின் ‘சகல’ என்ற வார்த்தை மட்டுமே கேட்டதில் மெதுவாக அசோக்கிடம் அவன் என்னடா என்னைய சகலனு சொல்றான்.? என்று கேட்க, “உன் கொழுந்தியாளை அவன் கல்யாணம் பண்ணுனா நீ சகல தான்டா..” என்றதில் “இது எப்போ நடந்துச்சு.?” என்று திகைத்தான்.

“எனக்கும் தெரியல.. ஆனா ஆதிரா அப்பாவே சம்மதம் சொல்லிட்டாங்கனு துருவினி சொன்னாடா.. அதைய அப்பறம் பார்த்துக்கலாம்.. முதல்ல நீங்க சாப்பிட உட்காருங்க” என்று இருவரையும் அமர வைத்தான்.

அடுத்தடுத்த சடங்குகளும் நிறைவேறிட, முதலில் புகுந்த வீட்டிற்கு தான் செல்ல வேண்டும் என்பதால் கிராமத்தில் இருக்கும் ரூபனின் வீட்டிற்கே சென்றனர் புதுமண தம்பதிகள் இருவரும்.!! அங்கு சென்று விளக்கேற்றி இன்னபிற சடங்குகளும் முடிய, அதன் பிறகு ஆதிராவின் வீட்டிற்கு புறப்பட தயாராகினர்..

இனி மூன்று நாட்கள் ஆதிராவின் பிறந்த வீட்டில் இருந்து விட்டு அதன் பிறகு பெங்களூர் கிளம்புவதாக ஏற்பாடு.. அங்கும் இங்கும் மாறி மாறி அலைய முடியாது என்பதால் அனைத்து சடங்குகளும் முடிந்த பிறகே கிளம்பி கொள்ளுங்கள் என்று விட்டார் வீரச்சாமி.

அதுவும் சரிதான் என்பதால் அதை ரூபனின் அன்னையும் ஏற்றுக் கொள்ள, மணமக்களுடன் ஆதிராவின் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் கிராமத்தில் இருக்கும் தங்களின் வீட்டிலே தங்கி கொள்கிறேன் என்று இவரும் கூறிட, அன்னையின் முடிவில் ரூபனுக்கும் மாற்று கருத்து இல்லாததால் சரியென்று விட்டிருந்தான்.

தனி அறையில் மணமக்களை விட்டிருக்க, அனைவரும் செல்லும் வரை அமைதியாக இருந்த ஆதிரா அடுத்த நிமிடமே தன்னவனை தாவி அணைத்திருந்தாள்.

“என்னால நம்பவே முடியலடா.. எல்லாம் கனவு மாதிரி இருக்கு.. என் அப்பா சம்மதம் சொல்லுவாங்கனு எனக்கு நம்பிக்கையே இல்ல.. நம்ம ஓடி போய் தான் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சுருந்தேன்..” என்று அதீத சந்தோசத்தில் துள்ளிட, “ஹேய் ஆதி சத்தம் போடாத.. வெளில கேட்க போகுது..” என்று அவளை அடக்கினான்.

“ப்ச் போடா.. நான் எவ்ளோ சந்தோசத்துல சொல்றேன்.. நீ அதைய கண்டுக்க மாட்டிங்கற.?”

“சத்தம் போடாதனு தானேமா சொன்னேன்.. வெளில இருக்கறவங்களுக்கு கேட்டா சங்கடமா இருக்கும்ல.?”

“இருந்துட்டு போகட்டும்.. நான் கவலைப்பட மாட்டேன்..”

“நீ இப்பதான் இப்படியா.?”

“இல்ல எப்பவும் இப்படித்தான்..”

“உன்னைய வெச்சுட்டு..” என்றவனிடம்”இந்தா என்னைய நீயே வச்சுக்கோ..” என்ற பெணணவள் அவனின் கை வளைவுக்குள் புகுந்து கொண்டாள்.

தானாக ரூபனின் இதழ்களும் புன்னகையை படர விட்டு அவனவளின் உச்சந்தலையில் அழுத்தமாக முத்தத்தை பதித்து ‘நீ எப்படி இருந்தாலும் எனக்கு உன்னைய மட்டும் தான் பிடிக்கும் ஆதி’ என்று அவனாகவே கூறி கொண்டான் மனதினுள்.!

இரவும் வந்தது.. உறவுக்கார பெண்மணி சிலபல அறிவுரைகளை கூறி அறைக்குள் விட, அவர் கூறியதை அவள் காதில் வாங்கினாளா.? என்று கேட்டால் இல்லையென்பது தான் அவளின் பதில்.!!

செல்பேசியில் எதையோ பார்த்திருந்தவனின் அருகில் சாதாரணமாக வந்து அமர்ந்தவள் “ஏன் அபி நீ சரியா சாப்பிடல.?” என்று கேட்டிட, “ஆதி நீ எப்போ வந்த.?” என்று கேட்டு பின்பு “நான் நல்லா தான்மா சாப்பிட்டேன்..” என்றான் அமைதியாக.

“உனக்கு பொய் சொல்ல வரல அபி.. என் அப்பா ஏதாவது சொன்னாரா.?”

“அவரு என்ன சொல்ல போறாரு.?”

“ஓஓஓ என்கிட்ட சொல்ல கூடாதுனு இருக்கீயா.?”

“ஏதாவது இருந்தா தானே சொல்ல முடியும் ஆதி.. புது இடம்ல.? அதான் சரியா சாப்பிட முடியல..”

அவன் சமாளிக்கிறான் என்பதை நன்றாகவே உணர்ந்து இப்போது இந்த பேச்சு வேணாம்னு என்பதற்காகவே “புது இடம்னால கூச்சமா இருக்காடா.?” என்று கேலி செய்தாள்.

அவளை செல்லமாக முறைத்து “ஏன் உனக்கு இருக்காதா.?” என்று எதிர்பதிலும் கேட்டிட, “வீட்டுக்கு ஒருத்தருக்கு கூச்சம் இருந்தா போதும்.. சோ அது எனக்கு தேவையில்லையே.!” என்றவளை இவன் தான் பே வென்று பார்த்தான்.

“ஆதி உன்னைய…” என்று செல்லமாக அவளின் நெற்றியில் முட்டி “சத்தியமா முடியலமா..” என்று கூறி சிரித்தான் கன்னங்குழி விழக.!! அதில் மொத்தமாக சரிந்த பெண்ணவள் இதழையும் அழுத்தமாக அதில் பதித்திட, ஆடவன் முதலில் சற்று அதிர்ந்தாலும் பின்பு அவளின் செயலை தனதாக்கி கொண்டான்.

கண்டதும் பூகம்பகமாய் உருவாகிய இவர்களின் பார்வை.. காதலில் இணைந்து பின்பு திருமணத்தில் முடிந்து இதோ சங்கமத்தில் முடிவு பெற்று இருவரையும் ஓருயிராய் மாறவும் செய்திருக்கிறது.!!

“சொந்தரக்காரனு ஒரு பயலுகளும் இல்லாத வீட்டுல பொண்ணை குடுத்து வெச்சுருக்கோம்.. என்னமோ இந்த உலகத்துல வேற பையனே இல்லாத மாதிரி.. மறுவீடுனு யாராவது ஒருத்தராச்சும் கூப்பிட்டுருக்காங்களா.? கருமம் கருமம்.. எனக்கு தான் அவமானமா இருக்கு.. நீயே அதுகளுக்கு வடிச்சு கொட்டிட்டு கிட..” என்று மனைவியிடம் கத்தினார் வீரச்சாமி.

நல்லவேளை அது ரூபன் உறங்கி கொண்டிருந்ததால் அவனுக்கு கேட்கவில்லை.. ஆனால் வெளியில் வந்த ஆதிராவின் செவியில் விழுந்து தொலைக்க, விறுவிறுவென அவரை நெருங்கியவள் “இப்ப என்ன உங்களுக்கு அவமானமாகி போய்ருச்சு.? முதல்ல நம்ம பக்கமே யாராவது என்னைய கூப்பிட்டாங்களா.?” என்று கேட்டு அவரின் மூக்கை உடைத்து நின்றாள் அவர் பெற்ற அருமை மகள்.!!

தந்தையின் கூற்றில் கோவமுற்றவள் “முதல்ல நம்ம பக்கமிருந்தே யாராவது எங்களைய கூப்பிட்டாங்களா.?” என்று கேட்டு அவரின் மூக்கை உடைக்க, இப்போது அவர் தான் மகளை முறைத்து நிற்கிறார்.!!

“ப்ச் கத்தாம இருடி.. சொந்தக்காரங்க எல்லாம் கேட்டா மோசமா பேசுவாங்க..” என்று மகளை அவளின் அன்னை தான் அடக்க முயல, “ஙே உன் புருசன் பேசறப்ப வாயை மூடிட்டு தானே நின்னுருந்த.? இப்பவும் அப்படியே நில்லு.. அவங்க பேசுனா உன் புருசனை தான் பேசுவாங்கனு என்னைய வாயை மூட சொல்ற.?” என்று அன்னையிடமும் எகிறினாள்.

“போதும் நீங்க பேசுனதும்.. நான் அமைதியா இருந்ததும்.. அப்படி என்ன நான் கொலைக்குத்தம் பண்ணிட்டேனு இப்படி பேசிட்டு திரியறீங்க.? ரூபனை ஏன் பிடிக்காம போய்ருச்சுனு எனக்கு தெரியல.. அதற்கான காரணத்தையும் நீங்க சொல்லி கிழிக்க வேணாம்..

எனக்கு அவனை பிடிச்சுருக்கு அது போதும்.. நீங்க உங்க மானத்தையும் இழக்க வேணாம்.. மரியாதையும் இழக்க வேணாம்.. நாங்க இங்க இருந்தா தானே உங்களுக்கு பிரச்சனை.. நாங்க இன்னைக்கே கிளம்பறோம்.. ஆனா ஒன்னு சொல்லிக்கறேன் அவன் இப்ப நம்ம அளவுக்கு வசதியா இல்லாம இருக்கலாம்.. ஒரு நாள் முன்னேறுவான்..

அவனோட குணமும் உங்களுக்கு புரிய வரும்.. அப்ப நான் பேசிக்கறேன்.. இப்ப நான் பேசுனாலும் உங்க ஆணவம் தான் பேசும்.. அதைய கேட்கணும்னு எனக்கு அவசியமும் இல்லை..” என்றவள் அறைக்கு செல்ல, “ஏய் ஏய் அவரு தான் புரியாம பேசறாருனா நீயும் ஏன்டி இப்படி பண்ற.?” என்று அவளின் அன்னை கத்தியதையும் காதில் வாங்கவில்லை.

யாரிடமும் எதுவும் கூறவில்லை.. ரூபனிடம் என்ன கூறினாள் என்பதும் தெரியவில்லை.. காலை உணவை கூட உண்ணாமல் இருவரும் புறப்பட்டிருக்க, அதற்குள் சிவாவே அங்கு வந்திருந்தான்.

அவனிடம் மட்டும் “மாமா நாங்க கிளம்பறோம்..” என்ற ஆதிரா அவளின் பெற்றோரை கண்டு கொள்ளாமல் செல்ல, ஒன்றும் புரியாமல் முழித்து நின்ற துருவினிக்கு அழுகை முட்டியது.

“இப்ப உங்களுக்கு ரொம்ப சந்தோஷம்ல.?” என்று தந்தையிடம் கேட்டவள் உள்ளே ஓடிட, வெளியில் வந்த ஆதிராவோ “அத்தைகிட்ட சொல்லிருங்க மாமா.. நாங்க ரெண்டு பேரும் ஊட்டிக்கு போறோம்னு.. வந்ததும் பெங்களூர் கிளம்பிரலாம்னு..” என்று தன் மாமியாரிடம் கூற சொன்னாள்.

“அடிப்பாவி அங்க உன் அம்மாவும் துருவினியும் அழுதுட்டு இருக்காங்க.. நீ என்னடான்னா ஹனிமூன் கிளம்ப ரெடியா இருக்க.?” என்று சிவா கேட்க, “அவங்க அழுதா நான் ஹனிமூன் போகாம இருக்க முடியுமா.? இங்கிருந்தா என் அப்பா சும்ம்ம்மா டென்சன் படுத்திட்டே இருப்பாரு.. நான் நிம்மதியா இருக்க போறேன்.. அபி கிளம்பலாமா.?” என்று கேட்டாள்.

திறந்த வாயை மூடாமல் நின்றான் சிவா.!!

அவனின் மனதிலோ ‘உன்னைய எந்த நேரத்துல அவங்க பெத்தாங்கனு தெரில.. அவங்க ஏதாவது உன்னைய கஷ்டப்படுத்தணும்னு நினைச்சா நீ அவங்கள கஷ்டப்படுத்திட்டு ஹாயா எனக்கு என்னனு இருக்க.? இருந்தாலும் செம கேடிடி நீ.!!’ என்ற எண்ணம் தான் ஓடியது.

பின்பு “உன் அப்பா அப்படி பேசுனாங்கனு நீ கோவப்பட்டு கிளம்பறீயோனு பயந்து ஓடி வந்தேன்.. இங்க வேற என்னமோ நடந்துட்டு இருக்கு..” என்று நொந்து கொள்ள, “அவரு பேச தான் செய்வாரு.. அதற்காக நான் எங்கையாவது ஓடிரணுமா என்ன.? மாட்டேன் இங்க தான் இருப்பேன்.. முதல்லயே ஊட்டிக்கு போகலாம்னு தான் பிளான் பண்ணிருந்தேன்..

இப்ப கொஞ்ச முன்னாடியே போற மாதிரி ஆகிருச்சு அவ்ளோதான்.. போறோம் நல்லா என்ஜாய் பண்றோம்.. மாமா நீ கவலைப்படாம கிளம்பு” என்றவள் பின்பு “மாமா ஒரு முக்கியக்குறிப்பு..” என்று நிறுத்தினாள்.

‘நான் எதுக்குடி உன்னைய நினைச்சு கவலைப்படணும்.? ரூபனை நினைச்சா தான் பாவமா இருக்கு’ என்று மனதில் நொந்து “என்ன.?” என்று பாவனை மாறாமல் கேட்க, “இப்ப நான் பேசுனதை மட்டும் யாராவது கிட்ட சொன்னீனா வெய்யேன் அப்பறம் இந்த ஐடியா குடுத்தது நீதானு சொல்லிடுவேன்..” என்று மிரட்டினாள்.

“சொல்லு நான் பயப்பட மாட்டேன்.. நீ நடிச்சேனு நான் சொல்ல தான் போறேன்..” என்ற சிவாவிடம் “மாமா ப்ளீஸ் நான் கோவமா போனதாகவே இருக்கட்டும்.. அப்பதான் இந்த ஆதிராக்கும் கோவம் வரும்னு நம்புவாங்க..” என்றவளை என்ன செய்தால் தகுமென்ற ரீதியில் பார்த்தான் சிவா.

ரூபனும் தலையில் அடித்து கொள்ள, சிவா தான் “ரொம்ப கஷ்டம்டா” என்று ரூபனிடம் புலம்பினான். மாமா என்று பெண்ணவள் பல்லை கடித்திட, அவளை கண்டு கொள்ளாமல் “சரி நீங்க கிளம்புங்க.. இவங்க என்ன பண்றாங்கனு பார்க்கலாம்” என்று அவர்களை வழி அனுப்பி வைத்தான்.

மகள் எங்கு சென்றாளோ.? என்று பதைபதைத்து போய் ஆதிராவின் அன்னை அமர்ந்திருக்க, பாண்டியனோ எப்போதும் போல் வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

ரஞ்சித்திற்கு அழைத்து துருவினி அழுக, “நான் ஆதிரா கிட்ட பேசிட்டு எங்க இருக்கானு சொல்றேன் துரு.. நீ அழுகாம இரு..” என்று தன்னவளை சமாதானப்படுத்தி விட்டு ஆதிராவின் எண்ணிற்கு அழைத்தான்.

அவளோ வேண்டுமென்றே அழைப்பை ஏற்காமல் இருக்க, ‘இவ ஏன் இப்படி பண்றா.?’ என்று புலம்பி ரூபனுக்கும் அழைத்திட, அவன் எடுக்க போகும் சமயத்தில் அவனிடம் இருந்து போனை பிடுங்கி “அந்த துரு தான் இவனை பேச சொல்லிருக்கும்.. நீ கம்முனு இருடா” என்றவளை அவன் முறைத்தான்.

“நீ பண்றது உனக்கே அநியாயமா தெரியலயா.? உன் அப்பா என்னமோ சொன்னாங்கனு இப்படி இவங்களையும் படுத்தி எடுத்துட்டு இருக்க.? நீ பேசலனா பரவால்ல.. நான் பேசிக்கறேன் குடு..” என்று போனை பிடுங்கி “சொல்லு ரஞ்சித்” என்றான்.

“ரூபன் எங்க இருக்கீங்க.? மாமா ஏதோ சொல்லிட்டு போறாரு.. அதுக்கு அத்தையும் துருவினியும் என்ன பண்ணுவாங்க.?”

“அய்யோ ரஞ்சித்.. எனக்கே என்ன பிரச்சனைனு தெரில..”

“எதே.? அப்பறம் ஏன் சகல வீட்டை விட்டு கிளம்புனீங்க.?”

“ஊட்டிக்கு போக தான் கிளம்புனோம் ரஞ்சித்..”

“எதே.? ஏய் சகல.. என்ன இது.? உங்களால என் ஆளு அழுது வடிஞ்சு ஓவரா ஃபீல் பண்ணிட்டு இருக்கா.. நீங்க என்னடான்னா ஊட்டிக்கு போக தான் கிளம்புனோம்னு அசால்ட்டா சொல்றீங்க.? வாட் இஸ் திஸ்.?” என்று இவன் வினவ, “இங்கிலீஷ்ல பேசிட்டா பதில் சொல்லிருவோமா.? துரைக்கு பெரிய இங்கிலீஷ் லெக்சருனு நினைப்பு.. போனை வெய்யுடா வெண்ணை..” என்று கூறியது வேறு யாருமில்லை ஆதிரா தான்..

இப்போது ரூபனிடம் இருந்து ஆதிராவின் கைக்கு அலைப்பேசி மாறி இருந்தது.

“ஏய் ஆதிரா உன் விளையாட்டுதனத்துக்கு அளவே இல்லையா.?”

“நான் எங்க விளையாட்டிட்டு இருக்கேன்.? நான் கோவிச்சுட்டு தான் வீட்டை விட்டு வந்துருக்கேன்.. இனி அங்க வர போறதும் இல்லை.”

“லூசா நீ.?”

“இல்லை ரொம்ப தெளிவு..”

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..”

“குறைச்சல் இல்லனா நீ போனை வெய்யு..”

“ப்ச் துரு பாவம்.. அவகிட்டயாவது பேசு.. விடாம அழுதுட்டு இருக்கா..” என்று ரஞ்சித் கெஞ்ச, சட்டென்று ஆதிராவும் “சரி பேசறேன்..” என்று ஒத்துக் கொண்டாள்.

“மாமா என்ன சொன்னாங்கனு கோவிச்சுட்டு வந்துருக்க.?” என்று அவன் கேட்டதும் ரூபனை ஒரு பார்வை பார்த்தவள் “அவரு என்னமோ சொல்லிக்கட்டும்.. நீ அதைய கேட்டு என்ன பண்ண போற.? போடா டேய்.. நீ கேட்டா நான் சொல்லிரணுமா.?” என்று சமாளித்து வைத்தாள் அவளின் தந்தை கூறியதை ரூபனிடம் கூறவே கூடாது என்ற காரணத்திற்காக.!!

ரஞ்சித் ஏதோ பேச வர, “கரடி தலையனே இப்பதான் கல்யாணமாகிருக்கு அவங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாதுனு கூட அறிவில்ல.?பேசாம போனை வெய்யு..” என்று திட்டி விட்டு போனை வைத்திட, ‘எதே.? கரடி தலையனா.? இவ இருக்கா பாரு.. புதுசு புதுசு கண்டுபிடிப்பா.?’ என்று புலம்பினான் தனியாக.!!

பின்பு துருவினிக்கு அழைத்து ஆதிரா ஊட்டிக்கு செல்வதாக கூறிட, கண்ணீருடன் வாயை பிளந்த துருவினி தான் “அவளை பத்தி தெரிஞ்சும் என் கண்ணீரை வீணாக்குனேன் பாரு என்னைய சொல்லணும்.. மறுபடியும் இந்த பக்கம் வர வேணாம்னு சொல்லிரு.. மீறி வந்தா வாசலோட துரத்தி விட்டுருவேனும் மறக்காம சொல்லு..

கோவப்படற மூஞ்சியை பாரு.. ச்சை போனை வெய்யுடா” என்று ஆதிராவின் மேலிருந்த கோவம் அனைத்தையும் ரஞ்சித்தின் மேல் கொட்டி விட்டு போனையும் வைத்து விட்டாள்.

பாவம் ரஞ்சித் தான்.. முதலில் அக்காவிடம் சம்மந்தமே இல்லாமல் வாங்கி கட்டி கொண்டு இப்போது தங்கையிடமும் காரணமேமின்றி வாங்கி கொண்டான் திட்டுக்களை.!!

‘என்னங்கடா இது.? முதல்ல இவதானே போன் பண்ணி புலம்புனா.. பாவமேனு ஆதிராவுக்கு போன் பண்ணுனா அவளும் விடாம திட்டி போனை வெய்யு போனை வெய்யுனு சொன்னா.. இப்ப இவளும் அப்படியே சொல்றா.. உங்களைய நான் என்னங்கடா பண்ணுனேன்.? சிவனேனு நான் பாட்டுக்கு தானே இருந்தேன்.?’ என்று புலம்பி கொண்டிருந்தான் பாவமாக.!!

உனக்கு இது தேவையாடா.? இவன் எதையும் தாங்கும் இதயம்.. சோ எல்

லாத்தையும் தாங்குவான்.. ஆனாலும் இந்த வாய் தானே ஆதிரா இல்லனா காவ்யா.. காவ்யாவும் இல்லனா ஒரு துருவினினு சொல்லுச்சு.. அனுபவி ராசா அனுபவி.!!

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்