
பூகம்பம் – 35
“நிவே அக்கா ஏன் இவ்ளோ அவசரப்படறாங்கனு எனக்கு புரில மாமா.. வாழ போறது நான்தானே.? என்கிட்ட அப்பா கேட்கறப்ப நான் பிடிக்கலனு தான் சொல்ல போறேன்.. என் முடிவுல நான் உறுதியா இருக்கேன்..” என்றாள் அழுத்தமாக.
நெற்றியை நீவி கொண்டவன் “உன் மனசுல வேற யாராவது இருக்காங்களா.?” என்று ஒரு வார்த்தைக்கு கேட்டதில் எதையும் யோசிக்காமல் ஆதிராவும் “ஆமா மாமா” என்று விட்டாள்.
அவன் இதை எதிர்பார்க்கவில்லை.. அதிர்ந்து போய் “என்ன சொல்ற.?” என்று கேட்க, “எனக்கு வேற ஒருத்தனை பிடிச்சுருக்கு..” என்றவளுக்கு மாமனை பார்க்க தைரியமில்லை.. தலையை குனிந்து கொண்டாள்.
சிவாவோ கோவத்தில் பல்லை கடித்தாலும் “யாரு அது.?” என்றிட, சொல்ல பயமாக இருந்தாலும் இப்போது சொல்லாமல் விட்டால் வற்புறுத்தி ரஞ்சித்தை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று பயந்து “ரூபன்” என்றாள் மெல்லிய குரலில்.
அவன் திகைத்ததற்கு சாட்சியாக விழிகள் இரண்டும் விரிந்து கொள்ள, “நம்ம ரூபனா.?” என்று இன்னும் நம்ப முடியாமல் வினவியவனிடம் “ம்ம்ம்ம்” என்றாள்.
எதுவும் பேசாமல் இவளை முறைத்தவாறு ரூபனுக்கு அழைத்து “என்னடா இது.?” என்று காட்டத்துடன் கேட்க, சிவாவின் கோவம் எதற்கென்று புரியாயல் “அண்ணே..” என்று திணறினான்.
“உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க.? உன்கிட்ட இதைய நான் எதிர்பார்க்கலடா..” என்று உண்மையான வருத்தத்தில் சிவா கூறியதும், காரணம் என்றவென்று புரிந்ததில் “அ..ண்..ணே..” என்று பதிலளிக்க முடியாமல் திக்கி பதறினான்.
இடையில் நுழைந்த ஆதிராவோ “மாமா அவன் மேல எந்த தப்பும் இல்ல..” என்றிட, அவளை கடுமையாக முறைத்து “உன்கிட்ட பேசல” என்றது ரூபனுக்கும் கேட்டது.
“உண்மையாவே அவன்கிட்ட நான்தான் மாமா முதல்ல பேசுனது.. உன் போன்ல இருந்து நம்பர் எடுத்ததும் நான்தான்.. என் காதலை சொன்னதும் நான்தான்.. அவன் விலகி தான் போனான்.. ஆனா நான் தான் விடல.. எனக்கு அவனை பிடிச்சுருக்கு மாமா..” என்று உண்மையை கூறி விட்டாள்.
பொது இடம் என்பதால் அவளிடம் சத்தமாக பேச கூட முடியாத நிலை. போனை கட் செய்து விட்டவன் “ரஞ்சித் நிலைமையை யோசிச்சீயா.?” என்று கடுகடுக்க, அவன் கிட்ட நான் ரூபனை லவ் பண்றதை சொல்லிட்டேன்.. ரூபனையும் இன்ட்ரோ குடுத்துட்டேன்..” என்றாள் அவனை பாராமல்.!
தலையை பிய்த்து கொள்ளலாம் என்றிருந்தது சிவாவுக்கு.!
“அப்பறம் எனத்துக்கு அந்த மடையன் அவன் அம்மா கல்யாணத்தை பத்தி பேசுனப்ப அமைதியா இருந்தான்.?”
“நான் பிடிக்கலனு சொல்லிருவேனு நினைச்சு அவன் பேசாம இருந்துருப்பான் மாமா..”
“அப்ப எல்லாத்தையும் ஏமாத்திட்டு இருந்துருக்க.? ஆனா உன்கிட்ட இதைய எதிர்பார்க்கல திரா..”
“இது என் வாழ்க்கை மாமா.. எனக்கு பிடிச்சதை தானே சொல்ல முடியும்.?” என்றவளை அழுத்தமாக பார்த்தவன் “கிளம்பலாம்” என்று எழுந்தான்.
அவனின் கோவத்தை இவள் எதிர்பார்த்தது தான்.. அதனால் அவள் கலங்கவில்லை. வீட்டிற்கு வந்ததும் “உன் வாழ்க்கைல என்ன நடக்கணுமோ அதைய நீயே பண்ணிக்கோ.. நான் எதுவும் பேச போறது இல்ல..” என்று யாரோ போல் கூறியவன் நகர்ந்தான்.
கலங்கிய விழிகளை துடைத்து கொண்டாள். “யாரும் பேச வேணாம்.. நானே பேசிப்பேன்..” என்று முணுமுணுத்தாள்.
மனைவியையும் மகனையும் வீட்டில் விட்டு விட்டு ஆதிராவை மட்டும் வெளியில் அழைத்து சென்றிருந்தான். “கிளம்பறோம்” என்றவனிடம் “சாப்பிட்டு போடா..” என்று ஆதிராவின் தந்தை வற்புறுத்த, வேறு வழியின்றி அமர்ந்தான்.
ஆதிராவின் மேலுள்ள கோவத்தை இவர்களிடம் காட்ட அவன் விரும்பவில்லை. அவளின் முடிவை இவர்கள் அறியும் போது அவர்களின் நிலையும் இப்படிதான் இருக்கும்.. என்றுணர்ந்தவன் பாவமாக மாமாவை பார்த்தான்.
“ஏங்க ரஞ்சித் அம்மா போன்…” என்று ஏதோ பச வந்த மனைவியை “நீ ஏன் இதுல தலையிடற.? கம்முனு இருக்க மாட்டியா.? இதெல்லாம் அவங்களே பேசிப்பாங்க.. நீ அமைதியா இரு..” என்று தன் கோவத்தை அவளிடமும் காட்டினான்.
“ஹேய் ஆதி மாமாக்கும் உன் லவ் மேட்டர் தெரிஞ்சுருச்சா.?” என்று தமக்கையிடம் துருவினி கிசுகிசுக்க, “ம்ம்ம்ம் ஆமா.. ரூபனை பிடிச்சு திட்டிட்டு இப்ப என்கிட்ட சிடுசிடுக்கறாங்க.. எனக்கு புரில லவ் பண்றது என்ன உலகமகா குத்தமா.?” என்று நொந்தாள்.
“நான் வேணா மாமாகிட்ட கேட்டு சொல்லட்டுமா.?” என்று துருவினி அவளை வெறுப்பேற்ற, “ஒரு ஆணியும் புடுங்க வேணாம்.. கம்முனு நில்லு” என்று கடுகடுத்தாள்.
அவள் மேலுள்ள கோவத்தில் சிவா அவளை கண்டு கொள்ளாமல் இருக்க, இவளும் வீம்புடன் முகத்தை திருப்பி கொண்டாள். இவர்களுக்கிடையில் மாட்டிய ரூபனின் நிலைமை தான் படுமோசம்.. இருவருக்கும் அழைத்து அழைத்து ஓய்ந்திருந்தான்.. ஆனால் இருவருமே அழைப்பை ஏற்கவில்லை.
“திரா தப்பு உன்மேல தான்.. சிவா மாமாவோட கோவம் நியாயம் தான்.. நீ கோவமா இருக்கறது தப்புடி.. மாமா தான் ரூபன் மாமாவை பத்தி அப்பாகிட்ட எடுத்து சொல்லணும்.. அதைய மறந்தராத..” என்ற துருவினியின் பேச்சும் நியாயமாக இருந்ததில் தன்னை தானே திட்டி கொண்டாள்.
அதற்குள் சிவா கிளம்பி இருந்தான்.. செலலும் முன்பு “மாமா அவசரப்படாம நிதானமா யோசிச்சு முடிவு பண்ணுங்க.. முதல்ல திராவுக்கு பிடிச்சுருக்கானு கேளுங்க.. அவளுக்கு பிடிக்கலனா அதோட அந்த பேச்சை விட்டரணும்.. இப்பவே சொல்லிட்டேன்..” என்று விட்டு சென்றிருந்தான்.
அவனுக்கு ஆதிரா மேல் கோவம் தான்.. அதற்காக அவளின் காதலை வெறுக்கும் அளவிற்கு கல்நெஞ்சக்காரனும் இல்லை. அவளின் சந்தோசம் எதுவோ அதை தான் இவனும் தேடி தர நினைப்பான்.. பெண்ணவளின் மகிழ்ச்சி ரூபனிடம் இருப்பதை அறிந்தும் வேறொருவனிடம் அவளை ஒப்படைக்க நினைப்பானா என்ன.?
“ஆதி சிவா அண்ணா என்ன சொன்னாங்க.? நான் போன் பண்ணுனாலும் எடுக்க மாட்டிங்கறாங்க” என்று ரூபன் உரைத்திட, “மாமா கோவமா இருக்கு அபி.. கோவம் குறைஞ்சா சரியாகிருவாங்க..” என்றாள் ஆதிராவும்.
ரூபன் மௌனமாகிட, “ஹலோ இதற்காக லவ்வு வேணாம்.. நான் வேணாம்னு சொன்ன.. உண்மையாவே நான் செத்துருவேன் அபி..” என்றதில் பதறி விட்டான் அவன்.
“ஆதி என் மேல நம்பிக்கை இல்லையா.? சிவா அண்ணாவுக்காக உன்னைய விட்டுருவேனு நினைச்சுட்டியல்ல.?” என்று தேய்ந்த குரலில் கூற, “ஹேய் அபி நான் அப்படி சொல்ல வரல..” என்றவள் பின்பு “நீதான் வேணும்னு நான் உறுதியா இருக்கேன்.. கஷ்டப்படாம பிடிச்ச வாழ்க்கை கிடைக்குமா என்ன.?” என்றவளின் வார்த்தையிலும் அத்தனை அழுத்தம்.
“நானும் உறுதியா தான் இருக்கேன் ஆதி.. என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்.. எந்த நிலைமையிலும் உன்னைய விட்டுட்டு போய்ர மாட்டேன்.. என்னைய நம்பு ஆதிமா..” என்று ரூபனும் உறுதியாக உரைத்தான்.
இதற்கு மேல் வேற என்ன வேண்டும் பெண்ணவளுக்கு.? இருந்த அச்சத்தையும் துடைத்தெறிந்து அவள் தந்தையிடம் பேசவும் அவள் தயாராகிட, அவரோ இப்போது எதுவும் கேட்க போவதில்லை என்று இருக்கிறார் போலும்..
அவளிடம் திருமணத்தை பற்றி ஒரு வார்த்தையும் கேட்கவில்லை.. ரஞ்சித்திடம் இதை பற்றி வினவ, “உங்க அப்பா எதுவும் சொல்லலனு சொன்னாங்க திரா.. நான் வேணாம்னு சொல்லிரட்டுமா.?” என்று கேட்க, “அடேய் என் காதலை சொல்ல எனக்கு இருக்கற ஒரு சான்ஸையும் கெடுத்து விட்டராத தெய்வமே.. நானே சொல்றேன்..” என்று அவனை அடக்கி வைத்தாள்.
இது பக்கம் இருந்தாலும் சுமதியின் திருமண நாளும் நெருங்கி கொண்டிருந்தது. “டி திரா ஆபிஸூக்கு வர சொல்றாங்கடி..” என்று சோகமாக காவ்யா கூறிட, “ஹப்பாடி.. நான் கூட என்னைய மட்டும் தான் வர சொல்றாங்களோனு பயந்துட்டேன்.. இப்பதான் நிம்மதியா இருக்கு” என்ற ஆதிராவை கொலைவெறியில் முறைத்தாள் காவ்யா.
“ப்ச் காவு சுமதி அக்கா மேரேஜ் முடிஞ்தும் வர சொன்னாங்கனு சந்தோப்படு.. அதைய விட்டுட்டு இப்படி ஃபீல் பண்ணிட்டு இருக்க.?”
“ம்ம்ம்ம் உன் லவ்வு டப்பா டான்ஸ் ஆடிட்டு இருக்கறப்ப கூட நீ ஜாலியா தான்டி இருக்க..”
“ஹஹஹஹ அது ஒரு பக்கம் ஆடட்டும்.. நான் ஒரு பக்கம் ஆடிட்டு போறேன்..”
“வெக்கமா இல்ல.?”
“வாழ்க்கைல இதெல்லாம் இருந்தா தான் கிக்கு.. இல்லனா ரொம்ப மொக்கையாகிரும்.. எல்லாத்தையும் என்ஜாய் பண்ணுவோம்.. ப்யூச்சர்ல பேபிஸ் கிட்ட கெத்தா சொல்லலாம்ல.?” என்றவளை காவ்யாவோ காறி துப்பினாள்.
வெளியில் கெத்தாக இருந்தாலும் அடிக்கடி “பயமா இருக்கு அபி” என்று ரூபனையும் “காவு பயமா இருக்குடி” என்று காவ்யாவையும் படுத்தி எடுத்தாள்.
“லவ் பண்ணுனதுக்கு நீ புலம்பி சாவு.. நான் ஏன் சாவணும்.?” என்று அவளை இன்னும் இன்னும் வெறுபேற்றி விட்டாள் காவ்யா.
காதலித்து பார்
நீ அழகாய் தெரிவாய்..
பின்பு நீ அசிங்கப்படுவது
ஊருக்கே தெரியும்.. என்று சீரியஸான பாவனைகளுடன் காவ்யா கூறியதும் “வாயை வெச்சுட்டு சும்மாவே இரு
க்க மாட்டியா.?” என்று கடுப்பாகி அவளை அடிக்க பாய்ந்தாள் ஆதிரா..
சுமதியின் திருமணமும் நன்றாக முடிந்திருந்தது. அசோக்கின் பெரிய தமக்கை முகத்தை தூக்கி வைத்து கொண்டு சுற்றினாலும் அவரிடம் என்னவென்று ஒரு வார்த்தையும் வினவாமல் இளைய தமக்கையின் திருமணத்தை நன்றாகவே நடத்தி முடித்திருந்தான் அசோக்.
ரூபனும் அவனின் அன்னையை அழைத்து வந்திருந்தான். காவ்யாவே திருமணத்திற்கு ரஞ்சித்தையும் அழைத்திருக்க, அவனோ தயங்கினான்.. அசோக் அழைக்காமல் தான் எப்படி வருவது என்று.?
பின்பு அசோக்கே அழைத்து அவனை திருமணத்திற்கு அழைத்திட, முதல் ஆளாக கிளம்பி வந்திருந்தான் அவனும். அசோக்குடனும் ரூபனுடனும் நன்றாகவே பழக்கம் ஏற்பட்டிருந்ததால் சாதாரணமாகவே அங்கு வலம் வந்தான்.. ஒரு சில உதவிகளையும் தாமாகவே செய்தும் குடுத்தான்.
ரஞ்சித் வந்திருப்பதை அறிந்த ஆதிராவின் பெற்றோர் தான் ஆதிராவை அங்கு அனுப்ப தயங்கிட, ப்ச் போங்கமா அங்குட்டு என்று அவர்களின் பேச்சை கேளாமல் அசோக்கின் வீட்டிற்கு தங்கையுடன் சென்றிருந்தாள்.
அவ்வப்போது தன்னவனை சைட்டடிப்பதும் காவ்யாவுடன் சேர்ந்து ரஞ்சித்தை கேலி செய்வதுமாக இருந்தாள். இப்போது கூட திருமணம் முடிந்ததும் அனைவரும் கிளம்பி இருக்க, அசோக்கிற்கு துணையாக பெண்கள் மூவரும் வீட்டை ஒழுங்குப்படுத்தி கொண்டிருக்க, ரூபனின் அன்னையை பஸ் வைத்து விட சென்றிருந்தனர் ரூபனும் ரஞ்சித்தும்.
யாரையும் தெரியாமல் அங்கிருக்க சங்கடமாக இருந்ததில் ரூபனின் அன்னை கிளம்புவதாக அடம்பிடிக்க, வேறு வழியின்றி சம்மதித்து இருந்தனர். ரூபன் அசோக்குடன் வருவதாக கூறியதில் அவரும் சரியென்றவர் கிளம்பியும் விட்டார்.
“ப்ரோ என் அம்மா மட்டும் வந்திருந்தாங்கனா வெய்யுங்க நீ இங்கிருந்து கிழிச்சது போதும் முதல்ல கிளம்புனு என்னைய தான் துரத்தி விட்டுருப்பாங்க” என்ற ரஞ்சித்தின் கூற்றில் புன்னைகையை படரவிட்டான் ரூபன்.
அவனோ “நானும் பார்த்துட்டே இருக்கேன் என்ன சொன்னாலும் இப்படி சிரிச்சுட்டு இருக்கீங்க.. வாயை திறந்து பேச மாட்டிங்களா.?” என்று முறைத்திட, இதற்கும் சிரிப்பை பதிலாக தந்து “நான் அவ்வளவா பேச மாட்டேன் ரஞ்சித்.. பழக்கமும் இல்லை” என்றான்.
தொடரும்…

