Loading

பூகம்பம் – 23

 

 

அசோக் வருவதை கண்ட மங்கை “என்னப்பா இந்த நேரத்துல.? ஒண்ணும் பிரச்சனை இல்லயே.?” என்று ஒரு தாயாக அவர் பதறி வினவ, “அதெல்லாம் இல்லமா.. ரூபன் கிட்ட கொஞ்சம் பேசணும் அதான் வந்தேன்..” என்றான்.

 

நண்பனின் சத்தத்தில் வெளியில் வந்த ரூபன் “வாடா வந்து உட்காரு..” என்றழைத்தான்.. “ரூபன் நேரடியாவே விசயத்தை சொல்றேன்.. அக்காக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கறது உனக்கும் தெரியும்.. மறுபடியும் ஒரு வரன் வந்துருக்கு பொருத்தமும் பொருந்தி இருக்குனு போன் பண்ணினாங்க” என்று நிறுத்தினான்.

 

“நல்ல விசயம் தான்டா.. இதைய சந்தோசமா சொல்லாம ஏன் மூஞ்சியை இப்படி வெச்சிட்டு சொல்ற.?” – ரூபன்

 

“ப்ச் இதுல தான் ஒரு சிக்கல்டா..” – அசோக்

 

“என்ன சிக்கல்.? பணம் ஏதாவது பிரச்சனையா.?” – ரூபன்

 

“அது இல்லடா.. மாப்பிள்ளைக்கு ஒரு கால் ஊனம்னு சொன்னாங்க அதான்..” என்றபோது இருவருக்கும் காஃபி எடுத்து வந்த மங்கையோ “எந்த மனுசனுக்கு தான் குறையில்லாம இருக்கு.?” என்று கேட்டார்.

 

அமைதியாக அவரை இவன் ஏறிட, “உடம்புல குறை இருக்கறது தான்பா எல்லாருக்கும் ஒரு குறையாவே தெரியுது.. ஆனா மனசுல வக்கிரப்புத்தியோட வாழ்ந்துட்டு இருக்கறது ஒரு குறையா தெரிய மாட்டிங்குதுல.?

 

இவனோட சித்தப்பனே அந்த நிலம் இவனுக்கு தான் உரிமைனு தெரிஞ்சும் மனசாட்சியே இல்லாம அவங்க பையன் பேருக்கு எழுதி வெச்சுருக்காரு.. நம்ம கேட்டாலும என் பையனுக்கு உரிமையில்லைனு தான் வாய் கூசாம சொல்லுவாரு..

 

இதெல்லாம் ஒரு குறை இல்லனா உடம்புல இருக்குற ஊனமும் ஒரு குறையே இல்லபா.. உங்க அக்காக்கு சம்மதம்னா ரெண்டு பேரும் மொதல்ல பேசட்டும்.. அப்பறம் மத்ததை யோசிக்கலாமே..” என்று தன் தரப்பு நியாயத்தை கூறினார்.

 

“அம்மா நானும் குறையை பெரிசா நினைக்கல.. என் அம்மா எப்படியோ அக்காக்கு கல்யாணமான போதும்னு தான் நினைப்பாங்க.. ஆனா அக்காக்குனு ஒரு மனசு இருக்குல.? அவங்க விருப்பத்தையும் நம்ம மதிக்கணும்.. ஏன்னா வாழ போறது அவங்க தானே.?

 

என் சந்தேகமே அம்மா தான் அக்காவை வற்புறுத்தி சம்மதிக்க வெச்சிருப்பாங்களோனு தான்.. நான் கேட்டா சொல்ல மாட்டா.. அதான் ரூபனை பேச சொல்லலாம்னு வந்தேன்..” என்று தான் வந்த காரணத்தை கூறினான் அசோக்.

 

“ஊருக்கு போறப்ப ரூபனையும் கூட்டிட்டு போய்ட்டு வாப்பா இதுல என்ன இருக்கு.?” என்று மங்கையே சம்மதமளித்திட, ‘நல்லவேளை அம்மாவே போக சொல்லிட்டாங்க’ என்று மகிழ்ந்தான் ரூபன்.

 

இன்னும் வேலுச்சாமியின் செயலை ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளுக்குள் மருகும் மங்கையிடம நிலத்தை விற்க பேரம் பேசி விட்டார்கள் என்று கூறினால்..???

 

நண்பர்கள் இருவரும் பேசியபடி வெளியில் வந்தனர்.. “ரொம்ப தேங்க்ஸ்டா.. நானே அங்க வர்றதுக்கு அம்மாகிட்ட என்ன பொய் சொல்லலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன்..” என்றதும் “என்னடா சொல்ற.? அம்மா என்ன என்னமோ சொன்னாங்க.. உங்க சித்தப்பா என்னடா பண்ணுனாரு” என்று அசோக்கும் கேட்டான்.

 

“அதுதான்டா இப்ப பெரிய பிரச்சனையே.. எனக்கு சேர வேண்டிய நிலத்தை என் சித்தப்பா அவங்க பசங்க பேருக்கு மாத்திருக்காங்க.. இதே நாங்க திருவிழாவுக்கு போனப்ப ஊர்க்காரங்க சொல்லி தான் தெரியும்..

 

இப்ப என்னடானா அந்த நிலத்தை விற்க பேரம் பேசிட்டாங்கனு சிவா அண்ணா போன் பண்ணுனாங்க.. சரி போகட்டும் விட்டரலாம்னு பார்த்தா முடிலடா.. அவருகிட்டயே பேசி பார்க்கலாம்னு நினைச்சேன்..

 

விற்க முடிவு பண்ணுனதை அம்மாகிட்ட இன்னும் சொல்லலடா.. உண்மையை சொல்லிட்டும் வர முடியாதுல.? அதான் என்ன பொய் சொல்லலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன்.. நீயே என்னைய கூட்டிட்டு போக ஐடியா குடுத்துட்ட..” என்றான் எதையும் மறைக்காமல்.

 

“உங்க சித்தப்பா ஏன்டா இப்படி பண்றாரு.? அன்னைக்கே நீ கேட்டுருக்கணும்.. கேட்காம விட்டது உன் தப்புதான்..” – அசோக்

 

“ப்ச் புரியாம பேசாத அசோக்.. நான் கேட்டா இது என் பேருல இருக்கற நிலம்னு என் மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லுவாரு..” – ரூபன்

 

“இப்ப மட்டும் சொல்ல மாட்டாரா.?” – அசோக்

 

“சொல்லுவாரு தான்.. பட் ஒரு தடவை பேசி பார்க்கலாம்னு தோணுதுடா.. அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு தான் அந்த நிலத்தை மீட்டுருக்காரு.. அப்படியே விடவும் மனசு வர மாட்டிங்குது..” – ரூபன்

 

“நானும் வர்றேன்டா.. கேட்க யாருமில்லனு உங்க சித்தப்பாக்கு இளக்காரமோ.?” என்று கொஞ்சம் கோவமாக கூறிய அசோக் “முதல்ல நம்ம வீட்டுக்கு போய்ட்டு அப்பறம் அங்க போய்க்கலாம்டா..” என்றிட, “எதுக்குடா அம்மாக்கு சிரமம்.?” என்று தயக்கத்துடன் ரூபன் மறுத்தான்.

 

“என்னைய பேச வெக்காத.. போறோம் அவ்ளோதான்..” என்று முடிவாக அசோக் உரைத்திட, “மாட்டேனு சொன்னாலும் விடவா போற.?” என்று பொய் கோவத்துடன் கூறியவன் பின்பு “அப்படியே ஆதியையும் பார்த்துட்டு வந்தரலாம்டா..” என்றான் அவனவளை மறக்காமல்.!

 

வார இறுதியில் செல்லலாம் என்று திட்டமிட்டனர் இருவரும்.. அப்போது தான் ஆதிராவை பார்க்க முடியும் என்பதால்.!! முதலில் அசோக்கின் தமக்கையிடம் பேசிவிட்டு அவருக்கு சம்மதம் என்றால் மாப்பிள்ளை வீட்டார் வரும் தேதியினையும் குறித்து விட்டு இறுதியில் சித்தப்பாவிடம் பேசி கொள்ளலாம் என்றிருந்தான் ரூபன்.

 

அசோக் மறுக்க, இதுதான் முடிவு என்பது போல் ரூபன் இருந்தான். தான் வரும் செய்தியினை சிவாவிடமும் ரூபன் கூறிட, “முதல்ல வந்து சேருடா.. நீ வரலனா நானே அங்க வந்து உன்னைய இழுத்தட்டு வந்துருப்பேன்” என்று பொய்யாக மிரட்டினான் சிவா.

 

“வந்துருவேன் அண்ணே..” என்ற ரூபனுக்கு பேசாமல் ஆதிராவை காதலிப்பதை இப்போதே சிவாவிடம் கூறி விடலாமா.? என்று தோன்றியதில் “அண்ணே” என்றழைக்க போனவன் பின்பு நேரில் சொல்லி கொள்ளலாம் என்று போனை வைத்தான்.

 

ஆதிராவிடம் பேசும்போது தான் வருவதை கூறாமல் ஒரு சர்பிரைஸ் என்று மட்டும் கூறி இருந்தான்.. அவள் என்னவென்று கேட்டும் இவன் சிரிப்புடனே பதிலளிக்காமல் இருக்க, ‘சரிதான் போடா’ என்று கோவித்து கொண்டாள் பெண்ணவள்.

 

இவர்கள் வந்ததை கண்டதும் அசோக்கின் அன்னை இருவரையும் வரவேற்றனர்.. அவனின் சின்ன அக்காவும் நெடுநாட்கள் கழித்து தம்பியை பார்த்ததில் மகழ்வுடன் “வாடா அசோக்” என்று முகம் மலர்ந்து அழைத்தாள்.

 

ரூபனிடமும் இருவரும் நலம் விசாரித்தனர்.. உணவுண்டதும் நண்பர்கள் இருவரும் மாடியில் இருக்கும் அறைக்கு சென்றனர் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று.!!

 

சலுப்பில் இருவரும் படுத்தாலும் ஏனோ உறங்காமல் கதையளக்க, “அக்கா ரொம்ப சந்தோசமா தான்டா இருக்காங்க” என்ற ரூபனின் வினாவிற்கு அசோக்கும் “எனக்கும் அப்படித்தான்டா தெரியுது.. இருந்தாலும் பேசி பார்க்கலாம்” என்றான்.

 

“அதெல்லாம் சரிதான்டா.. நீ கேட்டே சொல்ல மாட்டாங்கனு சொன்ன.. அப்பறம் நான் கேட்டா எப்படிடா சொல்லுவாங்க.? இதைய அங்கயே கேட்கணும்னு இருந்தேன்.. பட் மறந்துட்டேன்..” என்று கேட்க நினைத்ததை ரூபன் கேட்டான்.

 

“நீயும் என்கூட இருந்தா எனக்கு கொஞ்சம் நம்பிக்கையா இருக்கும்டா.. அதுக்கு தான் அம்மாகிட்ட அப்படி சொன்னேன்.. அதுவும் இல்லாம இதுவும் வேணாம்னு முடிவாகிருச்சுனா…” என்ற ஏதோ கூற வந்த அசோக்கை பாதியில் நிறுத்திய ரூபன் “எல்லாம் நல்லதா நடக்கும்டா” என்றான் ரூபன் நம்பிக்கையுடன்.

 

அவனின் மனநிலை புரிந்ததில் அதோடு ரூபனும் அமைதியாகி விட்டான்.. இருவரும் வேறு வேறு சிந்தனையில் லயித்திருக்க, “ஹாய் அண்ணா..” என்ற சத்தத்தில் இருவரும் எழுந்தமர்ந்து யாரென்று பார்க்க, நின்றிருந்தது ஆதிராவே.

 

அசோக்கின் முகம் பிரகாசமாக மலர்ந்திட, ரூபனின் முகமும் அதிர்ச்சி கலந்த மகிழ்வை வெளிப்படுத்தியது.. “வந்ததை சொல்லவே இல்ல பாரு” என்றபடி உள்ளே வந்தது காவ்யாவை கண்டதும் அசோக்கின் முகம் கடுகடுத்தது.

 

லேசாக கதவில் சாய்ந்து கைகளை மார்புக்கு குறுக்கே கட்டி இதழில் பூத்த புன்னகை மலருடன் தன்னவனை விழியால் பருகி இன்னும் அப்படியே நின்றிருந்தாள் மிஸ்ஸஸ். அபி ரூபன்.

 

 

தெவிட்டா தேன்

சுவையா நீயடா(டி)

பார்க்க பார்க்க

தெவிட்டாமல்

இனிக்கிறதே.!!!!

 

தன் கண் முன்னே நிற்பது தன் ஆதியா.? என்று இன்னும் ரூபனால் நம்ப முடியவில்லை. காண்பது பிரம்மையோ என்ற நினைவும் எழுந்தது. ஆனால் அவனின் எண்ணத்தை பொய்யாக்கி “எப்படி என் சர்பிரைஸ்” என்று கண்ணடித்து சிரித்ததில் தான் அது நிஜமென்றே விளங்கியது ஆடவனுக்கு.

 

இவன் அவளுக்கு சர்பிரைஸ் குடுக்கலாம் என்று வந்தால் இவளெல்லவா அவனுக்கு அதிர்ச்சி அளித்து அவனின் முன்பே நிற்கிறாள்.!!!

 

“வர்றேனு சொல்லவே இல்ல பாரு” என்று அசோக்கிடம் கேட்பதை போல் ரூபனிடம் கேட்டு முகத்தை சுருக்கிட, “வந்ததும் சொல்லிக்கலாம்னு இருந்தேன் திரா.. அதுக்குள்ள நீயே வந்துட்ட..” என்று சிரித்தான் அசோக்.

 

“இங்க நானும் இருக்கேன்” என்று கடுப்புடன் காவ்யா கூற, அப்போதும் அவளை கண்டு கொள்ளாமல் திராவிடம் நலம் விசாரித்து விட்டு “இது என் ப்ரெண்டு திரா.. பேரு அபி ரூபன்” என்று அறிமுகப்படுத்தினான்.

 

‘அய்யோ அய்யோ அவளோட ஆளையே அவகிட்ட அறிமுகப்படுத்தறான் பாரு இந்த லூசு’ என்று புலம்பிய காவ்யா “ஹாய் அண்ணா நான் தான் காவ்யா” என்றதிலே ரூபனுக்கு புரிந்து விட்டது வீடியோவை அனுப்பிய ஆதியின் தோழி இவளென்று.!

 

என்ன பதிலளிப்பது என்று புரியாமல் புன்னகையுடன் தலையசைத்து ஏற்று கொண்டான்.. இன்னும் ஆதிராவின் பார்வை ரூபனிடமே நிலைத்து நின்றிருந்தது.

 

“ரூபன் இது ஆதிராடா..” என்று அசோக் கூறியதும் இதற்கு மேல் முடியாமல் காவ்யாவோ “அடேய் அவங்க லவ்வர்ஸ்டா.. அவங்களுக்கு எதுக்கு இன்ட்ரோ குடுத்துட்டு இருக்க.?” என்று கடுப்பாகி கேட்டு விட, ஆடவனும் பெண்ணவளை இனம்புரியாத பேரானந்தத்தில் கண்டு கன்னங்குழி சிரிப்பை சிதற விட்டான்.

 

இப்போது அசோக் திகைத்து நண்பனை பார்க்க, “நான் சொன்ன ஆதி இவங்க தான்டா” என்றதில் “ஆதி ஆதினு சொன்னீயே முழு பேரை சொன்னீயாடா.? இந்த மூஞ்சியை பார்த்தா சாக போற மாதிரியா தெரியுது.? நீயும் பயந்து என்னையும் பயப்படுத்திட்டீயே.?” என்று சீறினான்.

 

பின்பு “பையன் ரொம்ப நல்லவனு வெச்சு செஞ்சுட்ட போல.?” என்று கேலியுடன் கேட்க, “அட அண்ணா நான் மட்டும் அன்னைக்கு அப்படி பேசல இப்ப வரைக்கும் இவன்கிட்ட கெஞ்சிட்டு இருக்கணும்.. நான் அத்தனை தடவை கெஞ்சறேன் மனசாட்சியே இல்லாத மாதிரி பதில் சொல்லாம உம்முனே இருந்தா கோவம் வருமா.? வராதா.?” என்று வெளிப்படையாகவே கூறினாள் ஆதிரா.

 

‘லூசு ஆதி.. ஏன் மானத்தை வாங்கற.?’ என்று நினைக்க மட்டும் முடிந்தது ரூபனால்.!! “அடியேய் அப்ப என்னைய எல்லாம் எந்த லிஸ்ட்டுல சேர்ந்துவ.? இவன் கிட்ட நான் கெஞ்சுன கெஞ்சல் எல்லாம் கணக்குல சேர்க்க முடியாது.. இப்ப வரைக்கும் அதைய தான் பண்ணிட்டு இருக்கேன்..” என்று அசோக்கை முறைத்தபடி காவ்யா வினவ, ‘இதென்ன புது டிவிஸ்ட்டா இருக்கு.?’ என்று நண்பனை பார்த்தான் ரூபன்.

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்