Loading

8

 

 

விழுப்புரத்தில் இருந்து காலை எட்டு மணிக்கு கிளம்பியவர்கள் காலை உணவையும் முடித்து கொண்டு சுமார் பனிரெண்டு மணியளவில் அவர்கள் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர். செழியனும் வேதாவும் இறங்கியதும்

தேவ், “மச்சி நல்லா ரெஸ்ட் எடுங்க. ட்ராவல் பண்ணது டையர்ட்டா இருக்கும். நான் வீட்டுல போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறேன். சரி லஞ்ச் வாங்கி தந்துட்டு போகவா” என்று கேட்டான்.

 

 

“இல்லடா நீ போய் ரெஸ்ட் எடு, நைட் கார்ல தூங்க கம்போர்ட்டபிள்ல இருந்துருக்காது, பெருசா பசி ஒன்னும் இல்லை. வேணும்னா இங்க பக்கத்துல கடை இருக்குல்ல நான் வாங்கிக்கிறேன். நீ கிளம்பு” என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தனர்.

 

 

வேதா வீட்டில் இருந்த பொருட்களை யோசனையாக பார்த்துவிட்டு செழியனை பார்க்க, அவனோ நடந்ததை கூற வேதாவோ, “உங்களுக்கு முன்னாடியே இவங்களை தெரியுமா, தெரியாத ஒருத்தங்களுக்கு இவ்ளோ செய்றாங்களே” என்று கேட்டாள்.

 

 

செழியனோ “எனக்கும் அவங்களை தெரியாது. வீடு பார்க்க வந்தப்பதான் நானே பர்ஸ்ட் டைம் அவங்கள பார்த்தேன். ஆனா இதுல எந்த உள்நோக்கமும் இல்லை. அவங்கள பார்த்தாலே தெரியுது வெள்ளந்தியான மனுசங்க தப்பா எதுவும் இருக்காது. நான் பாத்துக்கிறேன்” என்று கூறியவனுக்கு தலையசைத்தவள் உள்ளே சென்று விட்டாள்.

 

 

அவளின் தலை காயங்கள் ஓரளவிற்கு ஆறியிருக்க, காலை அந்த மருத்துவரே கட்டையும் பிரித்து இருந்தார். வேதா தலைக்கு குளித்து ஈர தலையுடன் வெளியே வர, செழியன் அப்போதும் ஏதோ யோசனையுடனே இருந்தான்.

 

 

அரவம் உணர்ந்து திரும்பியவனோ அவளையே பார்க்க, தலையில் இருந்து நீர் சொட்ட சொட்ட இடுப்பு வரை இருந்த கூந்தலுடன் போராடிக் கொண்டிருந்தவளின் சிறுபிள்ளைத்தனமான முகபாவனைகளை ரசித்துக்கொண்டிருந்தவன், எழுந்து சென்று அவளின் கையில் இருந்த டவலை வாங்கி “இவ்ளோ ஈரத்தோடயா இருப்ப, காயத்துல தண்ணி பட்ருக்கு, இப்படியே இருந்தா எப்படி சரியாகும்” என்று கூறிக்கொண்டே அவளின் முடியை உலர்த்த, வேதாவின் எண்ணங்கள் எங்கெங்கோ செல்ல கண்ணீர் வழிந்தது.

 

 

அவளின் கண்ணீரை உணர்ந்தவன், “என்னாச்சு வலிக்குதா? கை காயத்துல பட்ருச்சா.. ரொம்ப வலிக்குதா? இரு வர்றேன்” என்றவன் ஓடிச்சென்று மருத்துவமனையில் இருந்து கொண்டு வந்தா பையில் இருந்த மருந்தையும் பேண்டெஜும் எடுத்து போட்டுவிட, அவள் எங்கோ வெறித்து கொண்டிருந்தாள்.

 

 

செழியன், “அச்சோ சாரிம்மா, காயம் இருக்கறது மறந்து வேகமா தொடச்சிட்டேன். அவ்ளோதான் மருந்து போட்ருக்கேன். சரியாகிடும்” என்று கூற,

 

 

அவளோ குரல் கமற, “எங்கம்மா கூட இப்படிதான் எனக்கு தலை துவட்டி விடுவாங்க. நான் இல்லாம அவங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க. நான் கொஞ்சம் கூட எதையும் யோசிக்கவே இல்லை. இப்போ எங்க எப்படி இருக்காங்கனு தெரியல” என்று கூறியவளை தோளோடு சேர்த்து அணைத்தவன். “கண்டிப்பா நல்லாதான் இருப்பாங்க. நீ பீல் பண்ணாத, அவங்கள கண்டுபிடிக்கலாம்.” என்று கூறி அவளை சமாதானப் படுத்தியவனுக்கு அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று நன்றாகவே புரிந்தது.

 

 

செழியன், “வேதா உன் வயசு என்ன” என்று கேட்க, அவளோ, “18ஸ்டார்ட் ஆகி ஒன் மந்த் ஆச்சு” என்று கூற, அவனுக்கு அது அதிர்ச்சியாக இல்லை. அவன் எதிர்பார்த்தது தான். அவனுக்கே 21தானே…

 

 

செழியன் அமைதியாக இருந்தவன் அவளிடம், “உனக்கு எப்போ நியாபகம் வந்துச்சு”என்று கேட்க, அவளோ மாட்டிகிட்டேன் என்றவாறே அவனை பாவமாக பார்த்து வைத்தாள்.

 

 

செழியனோ அதை ரசித்தாலும் அவளிடம் காட்டிகொள்ளாமல், “சொல்லு, ஒருவேளை உனக்கு ஆக்சிடெண்ட் ஆனப்போ எதுவும் மறக்கலையா?” என்று கேட்க, அதில் பதறிப்போனவளோ, “அப்படியெல்லாம் இல்லை. எனக்கு அப்போ எதுவும் நிஜமாவே நியாபகம் இல்லை. அது அன்னிக்கு உங்க வீட்டுலதான் நியாபகம் வந்துச்சு. அப்போ எனக்கு எதுவும் புரியல. நான் எப்படி அங்க வந்தேன். நீங்க என்ன பேசுறீங்கன்னு. அப்புறம் நீங்க உங்க அப்பாகிட்ட லாஸ்ட் பேசும்போது தான் தெளிவா புரிஞ்சது. நீங்க இவளை என்னால விடமுடியாதுன்னு சொல்லும்போது எனக்கு அப்படி ஒரு பீல். லவ்ன்னுலாம் சொல்ல முடில. ஆனா அப்போ உங்களை எனக்கு அவ்ளோ பிடிச்சிருந்தது. அப்பறம் கோவில்ல உங்க பிரண்ட் கிட்ட முதல்ல இருந்து நடந்த எல்லாத்தையும் சொன்னீங்க. அப்போதான் எனக்கு நடந்த ஆக்சிடென்ட் எல்லாம் நியாபகம் வந்துச்சு. அப்போ எனக்கு நியாபகம் வந்துருச்சுன்னு சொன்னா என்னை கொண்டு போய் வீட்டுல விட்டுருவீங்க, என்ன விட்டு போயிடுவீங்களாண்ணு பயமா இருந்துச்சு. அதான் நான் எதையுமே சொல்லாம மறச்சுட்டேன். எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருந்துச்சு. நான் யார்னே தெரியாம எனக்காக பேசுனது, நியாபகம் இல்லாம இருந்தாலும் தாலி கட்றதுக்கு முன்னாடி ஒரு செகண்ட் என்ன பார்த்து, நான் சம்மதிச்சதும்தான் தாலி கட்டுனீங்க. நானே இது எல்லாத்தையும் சொல்லுணும்னு நினைச்சேன், நான் வேணும்னே எதையும் மறைக்க நினைக்கல ப்ளீஸ் என்னை தப்பா நினைச்சுடாதீங்க” என்று அழுதவளின் கண்களை துடைத்து விட்டான்.

 

 

“நான் இப்போ வரைக்கும் உன்ன எப்படி இவ்ளோ லவ் பண்றேன்னு யோசிச்சுட்டு இருந்தேன். ஆனா நீ இப்போ என்னை லவ் பண்ணியிருக்க. அதுவும் உனக்கு அவ்ளோ ப்ரோப்லம் இருக்கும்போது நீ எனக்காக என்ன நேசிச்சுருக்க. இதுக்கு என்ன சொல்லணும்னு எனக்கு புரியல. ஆனா இது நமக்கு காதலிக்கறதுக்கோ கல்யாணம் பண்ணிக்கிறதுக்கான வயசு நிச்சயம் இல்ல. இப்போ நாம கல்யாணம் முடிஞ்சுருச்சு. இனிமேல் நடக்க வேண்டியதைதான் நாம யோசிக்கணும். சரிவிடு அதை நான் பாத்துக்குறேன். இப்போ நான் போய் சாப்பிட ஏதாச்சும் வாங்கிட்டு வரேன். சாப்பிட்டு டேப்லெட் போட்டு ரெஸ்ட் எடு. பாத்துக்கலாம். வந்து டோர் லாக் பண்ணிக்கோ. நான் வந்து கூப்பிட்டாதான் கதவை திறக்கணும் ஓகேவா” என்றவாறே முன் சென்றவன், திடீரென அருகில் வந்தான். “இல்ல அதுவந்து என் வீட்டுல உனக்காக பேசுன அப்போதான் புடிச்சது. அப்போ இப்போ” என்று கேட்க, அதில் சிரித்தவள், “ரொம்ப பிடிச்சுருக்கு” என்று கூற, அதில் வெட்கம் கொண்டவன் தலையை கோதி விட்டு சிரித்து கொண்டே சென்றுவிட்டான்.

 

 

 

செழியன் ஹோட்டலுக்கு செல்லும் வழியில் ட்ராவல்ஸ் ஒன்றில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் இருக்க, ஒரு நிமிடம் யோசித்தவன் அந்த கம்பெனியை நோக்கி நடக்க தொடங்கினான்.

 

 

அவன் அங்கே செல்ல அங்கு நடுத்தர வயது ஆண் ஒருவர் அமர்ந்திருந்தார். சார் என்றழைக்க, அவரோ, “உள்ள வாங்க தம்பி, உட்காருங்க வண்டி புக் பண்ணனுமா? எப்போ வேணும்? எந்த ஊருக்கு” என்று கேட்க, மறுத்து தலையாட்டியவனோ, “அதுவந்து சார் வெளியே வேலைக்கு ஆட்கள் தேவைன்னு போட்ருந்துச்சு அதான் வந்தேன்” என்று கூறினான்.

 

 

அவரோ, “ஆமாம்பா ஆள் வேணும், உனக்கு தெரிஞ்ச ஆள் யாராச்சுக்கும் வேலை வேணுமா? அவங்களை வர சொல்லு பார்க்கலாம், வரும்போது ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் எடுத்துட்டு வர சொல்லுப்பா” என்று தன்மையாக கூற, தன் வாலட்டை எடுத்தவனோ அவனது ஆதார், லைசென்ஸ் இரண்டையும் எடுத்து அவர் முன் வைக்க, அவர் அவனை குழப்பமாக பார்த்தார்.

 

 

“என் பேர் இன்பசெழியன். எனக்குதான் சார் வேலை வேணும். என்னோட ப்ரூப்ஸ் இதுல இருக்கு. நான் நல்லாவே வண்டி ஓட்டுவேன். மலை சரிவுல டிரைவ் பண்ண அனுபவம் கூட இருக்கு” என்று கூற, அவரோ, “என்ன தம்பி சொல்றிங்க? உங்களை பார்த்தாலே பெரிய பணக்கார வீட்டுப்பிள்ளை போல இருக்கு. உங்களுக்கு வேலை வேணும்ன்னு காமெடி பண்றீங்களா?” என்று கேட்டார்.

 

 

செழியன், “காமெடியெல்லாம் பண்ணல சார். நிஜமாவே எனக்கு வேலை வேணும். பணக்கார வீட்டு பசங்க வேலை பார்க்கக் கூடாதா? கண்டிப்பா நான் நல்லா செய்வேன் சார்” என்று கூற, “ச்ச ச்ச அப்படி சொல்லலப்பா உன்னை பார்த்தாலே நல்ல குடும்பத்து பையனாதான் தெரியுது. நம்பிக்கை இல்லாம இல்லை. இவ்ளோ தைரியமா எந்த உளறளும் இல்லாம நீ பேசும்போதே தெரியுது. அதுக்காக சொல்லல” என்று அவர் இழுக்க,

 

 

அவனோ, “லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் சார், வீட்டுல ஒத்துக்கலை. அந்த பொண்ணையும் என்னால விட முடியல. சோ வீட்ட விட்டு வெளியே வந்துட்டேன். படிப்பும் முடிஞ்சுது. எக்ஸாம் மட்டும் இடைல பண்ணனும். இப்போதைக்கு எனக்கு ஒரு வேலை தேவை. எனக்கு டிரைவிங் ரொம்ப புடிக்கும் சார். ஏதோ ஒரு வேலை செய்றதுக்கு புடிச்ச வேலை செய்யணும் அதான்” என்று நேரிடையாக கூறிவிட்டான்.

 

 

அவன் பதிலில் அசந்து போனவர், “என்ன ஒரு வேகம், பரவாயில்லை மறைக்காம உண்மையை சொல்லிட்டீங்க. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு தம்பி உங்க நேர்மை. நாளைல இருந்து வேலைக்கு வந்துருங்க. இங்க எல்லா ரூட்டும் தெரியும்தானே” என்று கேட்க, “நல்லா தெரியும் சார்” என்றான்.

 

 

“சரிப்பா இன்னும் என்ன சார். அண்ணன்னு சொல்லு. சரி நாளைக்கு வந்துருங்க. இப்போ எங்க தங்கிருக்க. அட்ரஸ் இதுல எழுதி குடு செழியா” என்று கூறியவர், “நமக்கு பேர் சொல்லி கூப்பிடுறதுதான் வசதி. உனக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே” என்று கேட்க, “அதெல்லாம் இல்லை அண்ணே. ரொம்ப நன்றி. நான் நாளைக்கு வந்துறேன்” என்று கூறிவிட்டு வெளியே வந்தான்.

 

 

அப்போது அவனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. எதுவும் புரியாமல் தவித்திருந்தவனுக்கு இந்த வேலை அத்தனை நிம்மதி அளித்தது.

 

 

மேற்கொண்டு சிறிது தூரம் நடந்தவன், அங்கிருந்த ஒரு உணவகத்தில் இருவருக்கும் உணவை வாங்கிக்கொண்டு நடந்து வர, சரியான வெயில் இதற்கு முன் வெயிலில் அலைந்து திரிந்து பழக்கம் இல்லாதவன், சோர்ந்து போனான்.

 

 

மிகவும் களைப்புடன் நடந்து வந்தவன், தன் எதிரே இருந்த காரில் இருந்து இறங்கிய அரவிந்தை கண்டு, அதிர்ந்தவனாய் ஓடி வந்து அவனை அணைத்துக்கொண்டான்.

 

 

அரவிந்தனுக்கு வியர்த்து வழிந்து வெயிலில் நடந்து வந்தவனை கண்டு கண்களில் நீர் நிறைந்து போனது/ பிறந்ததில் இருந்து வசதியாய் வளர்ந்தவன் அவன்.

 

 

“அரவிந்த் சாரிடா.. வெரி வெரி சாரிடா.. எல்லாரையும் விட உன்னைதான் நான் ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். என்னோட சுட்டிவேஷன் அப்டி. என்னால அவளை விடவும் முடில. எல்லாரும் நல்லாருக்காங்க தானே?” என்று கேட்க,

 

 

அவனோ அவனின் கன்னத்தில் கை வைத்து, “முதல்ல நீ எப்படி இருக்க?” என்று கேட்டவனின் அன்பில் நெகிழ்ந்து போனவனோ, “ஐ ம் ஓகேடா” என்று கூற, “அது அந்த பொண்ணு எப்படி இருக்கு? ஹெல்த் இப்போ ஓகேவா இருக்கா?” என்று கேட்க, அவனோ, “ஹ்ம்ம் இப்போ ஓகே. இன்னும் காயம் எதுவும் ஆறலை” என்றவனிடம் “நல்லா பாத்துக்கோ செழியா. உன்னோட முன் கோபத்தை எல்லாம் அங்க காட்டிறாத” என்று கூறினான்.

 

 

“அவளை ரொம்ப நல்லா பாத்துக்குவேன் அரவிந்தா, எல்லாரையும் விட அவதான் ரொம்ப பாதிக்கப்பட்டுருக்கா, எனக்காக எல்லாத்தையும் தொலைச்சுட்டு நிக்குறா. கண்டிப்பா நான் அவளை பத்திரமா பாத்துக்குவேன்” என்று கூறினான்.

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்