
அழகியே என் மழலை நீ 40
அர்ச்சனா ஒன்றும் புரியாமல் அவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க, கண்களை மூடி தன்னை சமன் செய்து கொண்டவன்”வேதாவை உங்கம்மா தான் கடத்தி வச்சுருக்கறதா அதிரன் சொன்னதும், நான் தான் ஆள் அனுப்பி உங்கம்மாவை கொல்ல லாரி ஏற்பாடு பண்ணேன். நிஜமா அவங்க சாகணும்னு நினைச்சேன். எந்தங்கச்சிய கொல்ல பார்த்தவங்க யாரா இருந்த என்ன? அவங்க இந்த உலகத்துலயே இருக்க கூடாதுனு முடியாது பண்ணி தான் செஞ்சேன்”ஆனால் அவங்க தப்பிச்சுட்டாங்க என்றவன் கைகளை இறுக்கி சுவற்றில் குத்த அர்ச்சனா இரண்டு கைகளையும் வைத்து வாயை பொத்தி கொண்டவள் அழுகையை அடக்க மிகவும் சிரம பட்டாள்.
அதற்குள் “என்ன காரியம் செஞ்சுருக்க ஆதி நீ? “என்ற குரலில் திரும்ப, அங்கு அதிரன் அப்போது தான் உள்ளே வந்தவன் அங்கே அர்ச்சனாவை எதிர்பாராமல் திரும்ப முற்பட, அப்போது ஆதி சொன்னதை கேட்டவனுக்கு பேரதிர்ச்சி.
ஆதியிடம் வந்தவன்”அவங்க செஞ்ச பாவத்துக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கும். அதுக்காக தான் நாங்க இருக்கோம். சட்டம் இருக்கு. இப்போ உனக்கும் அவங்களுக்கும் வித்தியாசமே இல்லாமல் போய்டுச்சு பாத்தியா. அந்த லேடி கொலைகாரின்னா நீ கொலைகாரன் தான்”என்றவன் காட்டமாக அவனை முறைக்க…
ஆதி “இப்போ உங்க சட்டம் என்ன பண்ணுச்சு அதி. அவ்ளோ தான்”…
அதிரன்”நீ இப்படி ஒரு வேலையை பாக்காமா இருந்துருந்தா நடந்து இருக்கறதே வேற, சரி விடு இந்த மாதிரி கிரிமினல் வேலை பாக்குறது இத்தோட கடைசியா இருக்கனும் புரியுதா”என்றவனுக்கு எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டி வைத்தவன் அர்ச்சனாவிடம் திரும்பி “உங்கம்மா இனி ஏதும் செய்ய மாட்டாங்கல்லா மறுபடியும் ஏதாவது பண்ணாங்க, அடுத்த அட்டெம்ப்ட் கண்டிப்பா பெயில் ஆகாது. கண்டிப்பா விக்கெட் தான்”என்று கூறியவனை கண்டு தலையில் அடித்து கொண்ட அதிரன் “ஏன்டா இப்படி அந்த பொண்ணை மிரட்டுற”என்றவன் அர்ச்சனாவிடம் திரும்பி”இனி அவன் இந்த மாதிரி எதுவும் செய்ய மாட்டான் அர்ச்சனா அதுக்கு நான் பொறுப்பு. உங்க கல்யாணத்தை பத்தி வீட்ல நான் பேசுறேன். வேதா நார்மல் ஆகட்டும்”என்று கூற கண்களை துடைத்து கொண்டு அவனுக்கு மகிழ்வுடன் தலையாட்டினாள்.
வேதாவை அன்று டிஸ்சார்ஜ் செய்திருக்க, வைஷுவிடம் அத்தனை முறை கேட்டான் மீண்டும் அவளுக்கு அந்த வலி வராதே என்று அவள் நிச்சயமாக வர வாய்ப்பு இல்லை.முன்பு நடந்த விபத்தில் இடுப்பில் அடி பட்டு இருக்க, அது இப்போது வேலையை காட்ட தொடங்கி இருந்தது.அதை தான் கேட்டு கொண்டு இருந்தான்.மருந்துகளை வேளாவேளைக்கு சரியாய் எடுத்துக் கொண்டால் நிச்சயம் சரியாகும் என்று கூறி இருந்தாள்.இந்தமுறை வேதா உறங்கி கொண்டிருக்கிறாள் என்று நினைத்து தாமரை செழியனிடம் சண்டைக்கே வந்து விட்டார். அவளை தான்தான் அழைத்து செல்வேன் என்று. செழியனுக்கு மிகவும் அதிர்ச்சியாய் இருந்தது தாமரையின் செயல்…
தாமரை, “இப்போதான் அவ கொஞ்சம் கொஞ்சமா தேறி வர்றா. நீ நல்லா பாத்துக்குவேன்னு எனக்கு தெரியும் செழியா. இருந்தாலும் பத்திய சாப்பாடு எல்லாம் குடுத்து நல்லபடியா பாத்துக்கனும். குழந்தை பிறக்கட்டும் அப்பறம் அவ வருவா,இப்போவாச்சும் நான் சொல்றதை கேளு” என்று கூற,
அதிரன் தான், “அம்மா நீங்க பேசறது கொஞ்சம் கூட சரியில்லை. அவனை ரொம்ப டார்ச்சர் பண்றீங்க நீங்க. முதல்ல என்னடானா வேலையை விடணும் இல்லனா அவ கூட வரமாட்டான்னு சொன்னீங்க. இப்போ பார்த்தா நான் கூட்டிட்டு போறேன்னு சொல்றீங்க. ஒன்னும் தேவையில்லை. வேதா அவனோடவே இருக்கட்டும். அவன் நல்லா பாத்துப்பான். அதான் உங்க ஆசைப்படி வேலையை விட்டுட்டான் இல்லை. இனி மேல என்ன பிரச்னை” என்று கோவமாய் கேட்க, தாமரைக்கு இந்த விஷயம் புதிது அல்லவா, அவர் ஏதோ கோபத்தில் திட்டி விட்டார். தன் மகளுக்காக உயிராய் நேசித்த வேலையையே விட்டு விட்டானா என்று வியப்புடன் அவனை பார்த்தார்.
அன்பரசன், “மாப்பிள்ளை நீங்களே கூட்டிட்டு போங்க. ஆனால் தாமரையும் உங்களோட வரட்டும். ஒரு பத்துநாள் கூட இருந்து பார்த்துகட்டும்” என்று கூற, செழியனுக்கு வயிற்றில் பால் வார்த்த உணர்வு.
ஆதி, “போதும் பேசுனது வெளியே போய் பேசலாம் வாங்க. மித்து முழிச்சிக்க போறா” என்று கூற, அனைவரும் வெளியே சென்றனர் செழியன் உட்பட.
அவர்கள் சென்றதும் கண் விழித்தவளின் கண்களில் கண்ணீர். வேகமாய் படுக்கையில் இருந்த போனை எடுத்தவள் இனியனுக்கு அழைக்க, அதை எடுத்தவன், “ஹலோ வேதா எப்படி இருக்கடா? ஹெல்த் ஓகேவா?” என்று கேட்க, “பைன் அண்ணா. நான் கேட்கறதுக்கு மறைக்காம உண்மைய சொல்லுங்க அண்ணா. அவர் வேலையை ரிசைன் பண்ணிட்டாரா?” என்று கேட்டாள்.
அதில் சிறிது நேரம் மௌனம் காத்தவன், “ஆமாம் டா. அந்த வேலையால உனக்கு மறுபடியும் ஏதாச்சும் ஆபத்து வந்துரும்னு பயப்படுறான். லெட்டர் என்கிட்டதான் இருக்கு. நான் இன்னும் ஒரு ஒன் ஹவர்ல மேலிடத்துல கொடுக்கலாம்னு இருக்கேன். அவன் மனசு மாறும்னு த்ரீ டேஸ்ஸா நான்தான் கைல வச்சுருக்கேன். இனி வெயிட் பண்றதுல எந்த யூசும் இல்லை. அவன் இத பத்தி பேசவே விரும்பல” என்று கூற,
அதுவரை நடுக்கத்தில் இருந்தவள் அவனின் பதிலை கேட்டு நெஞ்சில் கைவைத்தவள், “அண்ணா ப்ளீஸ் அப்படி எதுவும் பண்ணிடாதீங்க. நான் அவர்கிட்ட பேசுறேன். மறுபடியும் அவர் டூட்டில ஜாயின் பண்ணுவார்” என்று கூற, இனியனுக்கும் அதுதானே தேவை. மகிழ்வுடன் அவளுக்கு தலையாட்டியவன் முதல் வேலையாய் அந்த கடிதத்தை கிழித்து குப்பையில் போட்டிருந்தான்.
செழியன் உள்ளே வர, வேதா அவனின் முகத்தையே பார்த்திருக்க, அவள் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவன், “என்ன தங்கமே ஏதாச்சும் வேணுமா?” என்று கேட்க, “என்ன உங்களுக்கு எவ்ளோ பிடிக்கும் மாமா” என்று கேட்க, அவளின் அருகில் வந்து அமர்ந்தவனோ, “எனக்கு எல்லாமே நீதான். எவ்ளோ பிடிக்கும்னு கேட்டா நான் என்ன சொல்ல” என்று கேட்க, “நீங்க உயிரா நினைக்குற வேலைய விடற அளவுக்கு என்ன பிடிக்குமா?” என்று கேட்க, செழியன் அதிர்ந்து போய் அவளை பார்த்தான்.
அவளோ, “எனக்கு உங்கள பிடிக்கல. இப்படி உங்க சுயத்தை தொலைச்சுதான் நான் உங்களோட இருக்கணும்னா அது வேணாம். உங்களுக்கு அந்த வேலை எவ்ளோ பிடிக்கும்னு எனக்கு தெரியும். ஒருநாள் இல்லனா ஒருநாள் இவளாலதான் நம்மளோட கனவ தொலைச்சுட்டோம்னு தோணிடுச்சுன்னா சத்தியமா அதை என்னால தாங்கிக்க முடியாது. இப்படி கண்ணுல கொஞ்சம் கூட உயிர்ப்பே இல்லாம இருக்க நீங்க எனக்கு வேணாம். எனக்கு எப்போவும் கம்பீரமா எல்லாத்தையும் யோசிச்சு ஸ்ட்ரோங்கா முடிவெடுத்து அந்த முடிவுல இருந்து கொஞ்சம் கூட மாறாத செழியனை தான் ரொம்ப பிடிக்கும்” என்று கூற, செழியன் அவளையே பார்த்திருந்தான்.
பின் “வேணாம் தங்கமே. நீ இப்படியெல்லாம் பேசாத சத்தியமா என்னால தாங்கிக்க முடியாது. நான் சுயமா முடிவெடுத்துதான் வேலைய ரிசைன் பண்னேன். இன்னொருமுறை இந்த வேலையால உன்னை தொலைச்சுட்டு என்னால தவிக்க முடியாது” என்று கூற, அவனின் கையை எடுத்து தன் தலையில் வைத்தவளோ, “என் மேல சத்தியம் பண்ணி சொல்லுங்க. இதுல உங்களுக்கு எந்த வருத்தமும் இல்லனு. நீங்க சந்தோசமா இந்த முடிவெடுத்தேன்னு என்மேல ப்ரோமிஸ் பண்ணுங்க” என்று கூற, அவள் கூறுவதற்குள்ளே அவன் வேகமாய் அவளின் தலையில் இருந்து கையை எடுத்திருந்தான்.
அவனுக்குத்தான் தெரியுமே என்னதான் வாய் வலிக்க வெளியில் பேசினாலும், நான்கு நாட்களாய் அவ்வளவு வேதனையை அனுபவிக்கிறானே, அவனை பொறுத்தவரை வேதாவை எவ்வளவு நேசிக்கிறானோ அதே அளவுக்கு அவனின் வேலையையும் நேசிக்கிறான் அல்லவா.
வேதா அவனை பார்த்தவள், “இங்க பாருங்க அம்மா சொன்னாங்க ஆட்டுக்குட்டி சொன்னாங்கன்னு இப்படி லூசுத்தனமா ஏதாச்சும் பண்ணீங்க? அவளோதான். இனியன் அண்ணா இன்னும் லெட்டர் பாஸ் பண்ணல. நான் அதை குடுக்க வேணாம்னு சொல்லிருக்கேன். ஒழுங்கா வேலைக்கு கிளம்புற வழிய பாருங்க” என்று கைநீட்டி மிரட்ட, அவளின் கையை பிடித்தவன் அவனின் மார்பில் வைத்து, “ஐ லவ் யூ” என்று ஆத்மார்த்தமாக உரைத்தவன் அவளை அணைத்து கொண்டான்.
மூன்று மாதங்கள் கடந்திருந்தது. செழியன் மீண்டும் வேலைக்கு திரும்பிருக்க, வேலைக்கு சேர்ந்த ஒரு வாரத்தில் அந்த விபத்தை ஏற்பாடு செய்தது ஆதிதான் என்று தெரியவந்திருக்க, செழியன் அதை பெரிது படுத்தவே இல்லை. அதை அப்படியே மூடி மறைத்திருந்தான். அவர்களுக்காக நீதி கேட்க அவர்கள் நியாயவான்கள் இல்லையே.
அதிரன் ஆதி, அர்ச்சனா விஷயத்தை வீட்டில் கூறி இருக்க, தாமரைக்கு அர்ச்சனாவை ஏற்கனவே பிடித்து இருந்ததால் பெரிய எதிர்ப்பு எதுவும் இல்லை. அவர்களின் காதலுக்கு பச்சை கொடி தான். அறிவழகனுக்கு இது இரட்டிப்பு மகிழ்வு… அர்ச்சனாவின் படிப்பு முடிந்ததும் திருமணத்தை வைத்து கொள்ளலாம், என்று முடிவு எடுக்க பட்டது.
இடையில் வேதாவின் வளைகாப்பு வெகு விமர்சையாய் நடந்து முடிந்திருந்தது. திருமணத்திற்கும் சேர்த்து இதை கொண்டாடிவிட்டனர் அவளின் குடும்பத்தினர்.
வளைகாப்பு முடிந்த பத்து நாட்களில் வேதாவிற்கு வலி எடுக்க, செழியன்தான் அவளைவிட துடித்து போனான். செழியன் அவளுடன் உள்ளே இருக்க, வெளியில் அவளின் கதறலை கேட்டு அனைவரும் பயத்தில் இருக்க, தேவ் கண்களில் கண்ணீர் வர, அவனருகில் இருந்த அதிரன் தேவ்வை பார்த்தவன், “டேய் தேவ் அழறியா?” என்று அதிர்ந்து போய் கேட்டான்.
அனைவரும் அவனையே பார்க்க அவனோ, “வேதா பாவம் வலிக்கும் ரொம்ப அழறா” என்று கூறும்போதே அவனுக்கு அழுகை வந்துவிட்டது உடன்பிறவா தங்கையின் கதறலில்.
செழியனின் பிள்ளைகளோ மேலும் அன்னையை துடிக்கவைக்க விரும்பாமல் ஒருவர் பின் ஒருவராய் ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டும் பெண் குழந்தைகளாய் அப்படியே வேதாவை உரித்து வைத்து பிறந்தது.
பின் வேதா அறைக்கு வந்ததும் ஒவ்வொருவராய் வந்து பார்க்க, கடைசியாய் தேவ் வர, அவனை பார்த்த வேதா அவன் முகத்தை கண்டதுமே அவன் அழுததை கண்டுபிடித்துவிட, செழியனுக்கு கண்ணைகாட்ட, அவனோ ஒரு குழந்தையை அவனிடம் கொடுக்க, ஒரு குழந்தையை அவன் வைத்து கொண்டு வேதாவின்புறம் நின்றான். அதிரன் அவன் அழுததை கூற செழியன் அவனை நக்கலடிக்க வேதாவும் சிரிக்க, அவர்கள் மூவரும் அவர்களுக்கான உலகில்…
மரகதம் மூலம் விஷயம் அறிந்த மீனாட்சிக்கு குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று தோன்றினாலும் மேலும் அவர்களை சங்கடப்படுத்த விரும்பாமல் வீட்டிலேயே இருந்து விட்டார்.
செழியனை பொறுத்தவரை அவனுக்கு நண்பனும் சரி துணைவியும் சரி, அவனுக்கு நன்றாக அமைந்துவிட அவன் வாழ்வில் என்றும் வசந்தமே…
வேதா செழியனின் காதலில் திளைக்க, அவர்கள் வாழ்வும் சிறக்க அவனின் முதல் மழலையாய் அவள்.
அழகியே என் மழலை நீ…
முடிந்தது…
இத்தனை நாட்கள் பொறுமையாக படித்த அனைவர்க்கும் நன்றி 🙏🙏🙏…
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சிறப்பு.. செழியனுக்கு எப்பவுமே முதல் மழலை வேதா தான்