Loading

அழகியே 34

 

 

நான்கு மாதங்கள் ஓடி விட்டது காற்றை போல அது வரை எந்த தகவலும் கிடைக்கவே இல்லை.

 

செழியனுக்கு அன்றைய நாள் விடிவதும் முடிவதும் அவளின் புகைப்படத்தில் தான். தாமரை கர்ப்பமாக இருக்கும் மகளின் இந்த நிலை அறிந்து படுக்கையில் விழுந்திருந்தார்.

 

 

அவளின் தமையன்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் அவளை பற்றியே நினைத்துக் கொண்டும் ஏதேனும் சிறு தடையம் கிடைத்து விடாதா என்று தவித்து கொண்டிருந்தனர். தேவ் மனைவியை கூட மறந்து செழியனுடனே இருந்தான்.

 

 

இங்கு வேதாவின் நிலையோ நாளுக்கு நாள் மோசமாகி கொண்டிருந்தது. அவளுக்கு ஆறு மாதம் ஆகியிருந்தது. வயிற்றில் குழந்தைகள் அசைவு நன்றாகவே தெரிந்தது. அவளுக்கு ஏற்கனவே வயிற்றில் அடிபட்டு இருந்ததால் குழந்தைகள் வளர வளர அவளுக்கு வலியும் அதிகமானது. அதை கூட உணராத நிலையில் மயக்கத்தில் இருந்தாள். அவளுக்கு சிறிது நினைவு வந்தாலும் மீண்டும் மருந்தை செலுத்தி அவளை மயக்கமடைய செய்திருந்தனர் அந்த கொடும்பாவிகள்.

 

 

செழியனின் மூளைக்குள் ஓடிகொண்டிருந்த ஒரு கேள்வி வேதாவை அழைத்துச் சென்ற பெண் யார்? எந்த நம்பிக்கையில் அவள் அழைத்ததும் அவள் உடன் சென்றாள். ஒருவேளை தெரிந்த பெண்ணாக இருக்குமோ யார் என்று யோசிக்க அவனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. காணும் அனைவரிடமும் ஒருமுறை பேசி விட்டாளே அவளை அவர்களுக்கு பிடித்து விடுமே, இப்படிப்பட்ட காரியத்தை யார் செய்திருப்பார்கள் என்று யோசித்து பார்க்க, ஒன்றும் அகப்படவில்லை.

 

 

வீட்டில் உள்ள அனைவரையும் கூட சந்தேகப்பட்டான். இறுதியாய் அவன் பார்வை விழுந்தது என்னவோ சவிதாவிடமும் மீனாட்சியிடமும்தான். இருவரும் அடிக்கடி வெளியே சந்தித்து பேசுவதும், கண் அசைவும் செழியனே நான்கைந்து முறை பார்த்து விட்டான்.

 

 

அவன் அறையில் அமர்ந்து இருக்க, அவனின் அறைக்குள் நுழைந்தான் அன்பினியன். செழியன் முன் வந்தமர்ந்தவனோ, “எல்லா பக்கமும் லாக் பண்ணி வச்சிருக்கான். இதுவரைக்கும் இப்படி ஒரு மோசமான கேஸ் நான் டீல் பண்ணது இல்லை செழியன். ரொம்ப வெக்கமா இருக்கு. நாம இத்தனை பேர் இருந்தும் வேதாவை நம்மாள மீட்க முடியல. அவனுக்கு இதுவரைக்கும் யாருமே பார்க்காத ஒரு சாவை கொடுக்கணும்” என்று ஆத்திரத்துடன் கூறினான்.

 

நண்பனின் மனைவிதான். அவனுக்கே இத்தனை ஆத்திரம் வரும் போது கணவனான அவனுக்கு தன் கையாலாகாததனத்தை நினைத்து வெட்கிப் போனான்.

 

 

செழியன், “எனக்கு நான் பக்கத்துலயே வச்சுக்கிட்டு வேறெங்கியோ தடயத்தை தேடுற மாதிரி தோணுது” என்று கூற, அதிர்ந்து போனான் இனியன்,

 

 

“என்ன செழியா புரியல?” என்று கேட்க, “ஒருவேளை வேதாவை கடத்துனதுல என் குடும்பத்து ஆளுங்க பங்கு இருக்குமோனு தோணுது. சத்தியமா அப்படி இருக்கக்கூடாதுனு மனசு அடிச்சுக்குது. அதுமட்டும் உண்மையா இருந்தா இந்த செழியனோட இன்னொரு அவதாரத்தை அவங்க பார்ப்பாங்க” என்று ஆவேசத்துடன் கூறியவனை கண்டு திகைத்து போனான் இனியன்.

 

 

கதவு தள்ளும் சத்தம் கேட்டு செழியனும் இனியனும் திரும்ப, அங்கு தேவ்வும் அதிரனும் கனல் கக்கும் விழிகளுடன் நின்று கொண்டிருந்தனர். தேவ் வேகமாக செழியனின் அருகில் வந்தவன், “இப்போ நீ யார பத்தி சொல்லிட்டு இருக்க செழியா? உன் குடும்பத்துல இருக்கவங்கன்னா யாரு சொல்லு?நீ யாரை பத்தி சொல்லிட்டு இருக்க செழியா” என்று அவனை உலுக்க, சரியாக உண்மை தெரியாமல் அவர்களிடம் கூறவும் அவனுக்கு தயக்கமாக இருந்தது.

 

 

அற்காக அதை உள்ளே வைத்து தவித்துகொண்டு இருந்தால் அங்கே துடித்து கொண்டிருப்பது அவனின் உயிர்கள் அல்லவா.

 

 

செழியன் வேகமாக எழுந்தவன், “நான் நினைக்கிறது உண்மையா இருந்துச்சுன்னா அவங்க இதுவரை செஞ்சதுக்கும் சேர்த்து இன்னைக்கு அவங்களோட விதியை நான் எழுதிருவேன்” என்றவன் அவனின் துப்பாக்கியை எடுத்து லோட் செய்துக் கொண்டான்.

 

 

இனியன், அதிரன் இருவரும் புரியாமல் அவனை பார்க்க, தேவ்க்கு மட்டும் ஏதோ கொஞ்சம் புரிந்தது.

 

 

அதிரனோ, “செழியன் என்ன பேசறேன்னு தெளிவா சொல்லு. அம்மாக்கு ரொம்ப உடம்பு சரியில்லை. உன்னோட பேமிலி மொத்தமும் எங்க வீட்டுல தன் இருக்காங்க. நீ ஏதோ அவசரத்துல தப்பா பேசாத. சந்தேகத்துல சில விசயத்த செஞ்சிட்டு அது இல்லனு தெரியும் போது அதோட குற்ற உணர்ச்சி நம்ம வாழ்நாள் முழுவதும் நரகமாகதான் இருக்கும்” என்று கூற,

 

 

அதிரன் கூறியது தேவையே இல்லை என்பது போல செழியனின் மொபைல் அடிக்க அழைத்தது என்னவோ ஆதில். அவனும் இவனின் நண்பன்தான். அதை அட்டென்ட் செய்யாமல் இருக்க, மீண்டும் போன் அடிக்க,

 

 

தேவ் “ஆதில்தான போன் எடுடா. காரணம் இல்லாமல் அவன் கால் பண்ண மாட்டான். இப்போ இருக்கா நிலைமைக்கு நாம எந்த போன் காலையும் அவாய்ட் பண்ண கூடாது” என்றவன் போனை ஆன் செய்து அவனே பேச, “ஹெலோ ஆதில் நான் தேவ் பேசுறேன் சொல்லுடா” என்று கேட்க,

 

 

அவனோ, “தேவ் இப்போ நீங்க என்ன டென்ஷன்ல இருப்பிங்கனு தெரியும். இருந்தாலும் நான் சொல்றேன்டா.. போன் ஸ்பீக்கர் போடு. நானும் வைஷுவும் மார்னிங் இங்க இருக்க எங்க பார்ம் ஹவுஸ்ல இருந்து வர ரூட்ல ஒரு காட்டு பகுதில உன்னோட பேமிலி மெம்பெர்ஸ் ரெண்டு பேர பார்த்தேன்டா. அதுவும் வேதாவை கடத்துன அந்த ரௌடி கூட. நான் அவனை பாலோவ் பண்ணேன் பட் மிஸ் ஆகிட்டான்” என்று கூறினான்.

 

 

செழியனோ, “ஆதில் அவன் கூட இருந்தாங்கன்னு சொன்னியே அது யாருடா?” என்று கேட்க, “நீ தேவ் மேரேஜ்ல எடுத்த போட்டோஸ் இன்ஸ்டால போட்ருந்த இல்லை மை பேமிலினு. அதுலதான் நான் அவங்களை பார்த்தேன். அந்த ரெண்டு பேரும் யாருனு தெரியல எனக்கு. நீ கண்டிப்பா அவங்களை விசாரிச்சா உண்மை தெரியும். இப்போ நான் வைஷுவ ஹாஸ்பிடல விட்டுட்டு ரிட்டர்ன் அந்த பாரஸ்ட்க்கு கிளம்புறேன். நீ அவங்களை பார்த்துட்டு சீக்கிரமா நான் ஷேர் பண்ற லொகேஷன்க்கு வந்துரு. இன்னிக்கு என்ன ஆனாலும் சிஸ்டர் கண்டுபிடிக்குறோம்” என்று கூற, செழியனோ மனதில் சிறு இதமாய் உணர்ந்தவனுக்கு கண்கள் தானாய் சிறு துளி நீரை வெளியேற்றியது.

 

 

கண்களை துடைத்து கொண்டவன்”தேங்க்ஸ் மச்சி” என்று கூற, அவனோ, “டேய் வாயில ஏதாச்சும் வந்துர போகுது, மரியாதையா கிளம்பி வா. அவ எனக்கு தங்கச்சிடா. எல்லாரும் என்னை பார்த்து பயந்து நடுங்கனாலும் அண்ணான்னு உரிமை எடுத்த்து என் கிட்ட பழகுனவடா வேதா, கம் பாஸ்ட். கேர்ஃபுல்” என்று கூறினான்.

 

 

செழியனோ தொப்பென அமர்ந்தவன் நெஞ்சை தடவி கொண்டு கண்களை மூடிக்கொண்டு கண்ணீர் வழிய அமர்ந்துவிட, இனியன் தான், “செழியா வாடா” என்று அவனை எழுப்பி அழைத்து சென்றான்.

 

 

ஆதில் அந்த காட்டயே சல்லடை போட்டு சலித்து தேடிவிட்டான். அவன் கண்ணு கெட்டும் வகையில் எதுவும் தென்படவில்லை.

 

 

 

செழியன், “முதல்ல நாம ஆதில் சொன்ன லொகேஷன்க்கு போகலாம். இந்த விஷயம் நம்ம நாலு பேரோட மட்டும் இருக்கட்டும். வெளியே தெரிய வேணாம். முதல்ல வேதா முக்கியம் அப்பறம் மத்தவங்களை பத்தி முடிவு செய்யலாம்” என்றவன், அவர்களோடு ஆதில் கூறிய காட்டு பகுதியை அடைந்தனர்.

 

 

ஆதில் தேடிக்கொண்டே சென்றவன் முன்னேறி செல்லும் போது ஒரு மலையின் அடியில் இருந்த சிறு குடிலை கண்டுகொண்டவன் மேற்கொண்டு சில அடிகள் முன்னேறியவனுக்கு, அந்த குடிலை சுற்றி பதினைந்து பேர் கைகளில் துப்பாக்கியுடன் நிற்பது தெரிய, ஒரு மரத்தின் பின் ஒளிந்து நின்றுகொள்ள, பின்னால் காலடி ஓசை கேட்டு திரும்ப அதிரன், செழியன், இனியன், தேவ் நால்வரும்தான், செழியன் முதலில் ஆதிலை பார்த்துவிட அவனை நோக்கி ஓடி வந்தவன்,

 

 

“என்னாச்சு” என்று கேட்க, ஆதில் அந்த குடில் போன்று இருந்ததை செழியனுக்கு காட்ட, அதற்கு மேல் அவனால் அங்கே நிற்க முடியவில்லை.

 

 

ஓரடி முன்னேற ஆதில் தான், “பத்து பேர் நிக்குறானுங்க துப்பாக்கியோட. நாம் அஞ்சு பேர் இருக்கோம். எல்லாரும் கையில பிஸ்டல் இருக்குல்ல” என்று கேட்க, அனைவரும் வைத்து இருந்தனர்.

 

அங்கு இருந்தவர்களை இரண்டு இரண்டு பேராய் தடுத்து முன்னேற நினைக்க, செழியனுக்கு வந்த ஆத்திரத்தில் ஒரே நிமிடம்தான் அனைவரையும் துப்பாக்கிக்கு இரையாக்கி இருந்தான். அவனின்பின் இருந்த நால்வருமே ஆடிபோயினர் அவனின் ஆவேசத்தில்.

 

நான்கு மாதங்களாக நரக வேதனையை அனுபவிப்பவனுக்கு அங்கே தான் அவள் இருக்கிறாள் என்று தெரிந்தும் மற்றவர்களுக்கு இரக்கம் பார்க்கும் அளவிற்கு பொறுமை இல்லாததால் அனைவரையும் கொன்றுவிட்டான்.

 

 

சத்தம் கேட்டு வெளியே வந்த ரௌடியோ தன் எதிரில் ருத்ரனாய் நின்றிருந்த செழியனை கண்டு அரண்டு போனவனாய் அவனை சுட துப்பாக்கியை எடுக்க, செழியனின் கண்கள் வேதாவை தேடி அலை பாய்ந்தது.

 

அவன் துப்பாக்கியை செழியனை நோக்கி நீட்ட, இனியன் அவனின் கைகளில் சுட்டிருக்க, துடித்து போய் அவன் கையை உதறி “ஏய்” என்று கத்தினான்.

 

 

அதற்குள் தேவ் அவனின் நெஞ்சில் எட்டி உதைத்து. அவனின் கைகளை சுற்றி பிடிக்க, செழியன் வேகமாக அந்த குடிலுக்குள் நுழைந்தவன் கண்களை சுழற்ற, அந்த குடிலின் ஒரு மூலையில் ஒரு நாற்காலியில் கைகள் கட்டப்பட்டு வாயில் துணி வைத்து அடைத்திருக்க, வலியை தாங்கிய முகத்துடன் அரை மயக்கத்தில் இருந்தாள் வேதா.

 

 

செழியனோ அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தவனின் கண்கள் அத்தனை வலியை பிரதிபலித்தது. அவள் முகம் சிறு வலியில் சுணங்கினால் கூட தாங்கிக் கொள்ள முடியாதவன் அவளின் இந்த நிலையை கண்டு கதறி அழ, அதிரனோ செழியனின் சத்தம் கேட்டு உள்ளே நுழைந்தவன் தங்கையை கண்டு மகிழ்ந்து போனாலும் அவளின் நிலையை எண்ணி அவனுமே தவித்து போனான்.

 

 

செழியனின் உணர்வுகளை புரிந்து கொண்டவன் வேகமாக வேதாவின் அருகில் சென்று வாயில் இருந்த துணியை எடுத்துவிட்டு கை, கால் கட்டுக்களை அவிழ்த்துவிட்டவன் தங்கையை எழுப்பி நிற்க வைக்க, அவளோ மருந்தின் பிடியில் அரைமயக்கத்தில் இருந்தாள்.

 

செழியன் எழுந்து வேதாவை தாங்கிக்கொள்ள அவளோ நிற்க முடியாமல் துவண்டு போய் செழியனின் மடியில் விழ, அவளின் கண்களோ கண்ணை சுற்றி கருவளையங்களுடன், கன்னத்தில் அறைந்த தடங்கள் கண்ணி போய் கருப்பாக காணப்பட, உதடுகள் வெடித்து போய் ஆறுமாத தாய்மையுடன் மயக்கத்தில் இருக்க அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

 

 

அவளின் முகம் வருடி அவளின் முகத்தோடு முகம் வைத்தவன் கண்ணீர் அவளின் முகத்தில் பட்டு தெறிக்க, அவளின் நிலை கண்டு கோபத்தில் தகித்தவன் வேதாவை அகரனிடம் கொடுத்துவிட்டு வெளியேவர, தேவ், ஆதில், இனியன் மூவரிடமும் அந்த ரவுடி அடி வாங்கி அவர்களை எதிர்த்து போராடி கொண்டு இருக்க, அவனை முதுகில் எட்டி உதைத்தவன் கண்களில் தெரிந்த ஆக்ரோசம் கைகளில் வெளிப்பட, அவனை அடித்து அறை உயிராக்கி இருந்தான்.

 

“சொல்லுடா உனக்கு உதவி செஞ்ச அந்த ரெண்டு பேர் யாரு” என்று கேட்டு அவனை அடிக்க, அவன் எதுவும் கூறும் நிலையில் இல்லை. தேவ்வும் உள்ளே சென்றிருந்தான் தங்கையை பார்க்க.

 

 

இனியன் ஆதில் இருவரும் அவனை கொன்றுவிடுவானோ என்று அவனை தடுக்க பார்க்க, செழியன்தான் முடிவு எடுத்துவிட்டானே அவனை விடக்கூடாது என்று.

 

 

சுற்றி எங்கும் பார்க்க, அவனின் கைகெட்டும் தூரத்தில் கிடைத்த கல்லை எடுத்தவன், அவனின் இறுதி முடிவை கொடூரமாக எழுதி இருந்தான்.

 

 

அவன் இறந்த பின்னுமே அவனின் ஆவேசம் அடங்கவில்லை. முகம் முழுவதும் ரத்தம் தெறித்து கோரமாக இருந்தது. ஆதில் அவனின் ஆக்ரோசத்தில் பயந்துபோனவன், அவனை பிடித்து இழுக்க, இனியன், “செழியா செழியா விட்டுரு அவன் செத்துட்டான்” என்று கத்தி அவனை பிடித்து இழுத்தான்.

 

அப்போதும் எழுந்தவன் அவனின் முகத்தில் ஷூவை வைத்து அழுத்தியவன் அவனை எட்டி உதைக்க, அதற்குள் அதிரனும் தேவ்வும் வேதாவை கையில் ஏந்தி கொண்டு வெளியே வந்திருந்தனர். ஆதிலும் இனியனுமே அவளின் நிலை கண்டு துடித்து போயினர்.

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்