
அழகியே என் மழலை நீ 33
தாமரை, “அவ போன் சுவிட்ச் ஆப்ல இருக்கு. நான் காலைல இருந்து நாலு தடவ ட்ரை பண்ணேன். ஆபீஸ்ல இருக்கறதால ஆப் பண்ணிருப்பான்னு நினைச்சேன். ஐயோ எனக்கு வேற பயமா இருக்கு. எங்க போனா சொல்லிட்டு போயிருக்கலாம்.. இவளுக்கு விளையாட்டுதனம் அதிகமாகிடுச்சு” என்று கூறினார்.
சரியாய் அதே நேரம் செழியனின் போன் அடிக்க, எடுத்து பார்த்தவன் புது நம்பராய் இருக்க அவளாய் இருக்குமோ என்று அட்டென்ட் செய்து காதில் வைக்க எதிர்முனையில், “என்ன ASP சார் சௌக்கியமா? வேலைல சேர்ந்துட்டிங்க போல. ஆபீஸ்லயே உட்கார்ந்து சேர தேச்சுட்டு இருக்கறதுக்கு போர் அடிக்குது இல்லை. நான் வேணா உனக்கு ஒரு புது கேஸ் குடுக்கட்டுமா?” என்று கேட்க, செழியன் யார் என தெரிந்து கொண்டவனோ,
“டேய் இப்போ நீ எதுக்கு போன் பண்ணிருக்க. சம்பந்தமே இல்லாம கண்டதையும் பேசிட்டு இருக்க. நான் ஏற்கனவே டென்ஷன்ல இருக்கேன். மரியாதையா போன வச்சிரு” என்று கத்த, சுற்றி நின்ற அனைவரும் செழியனின் குரலில் இருந்த ஆத்திரத்தையும் முகத்தின் சிவப்பையும் கண்டு அதிர்ச்சியாய் அவனின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தனர்.
அவனோ, “சம்பந்தம் இல்லையா? அப்போ உன் பொண்டாட்டி உனக்கு வேணாமா? உன் குடும்பத்துல மூணு உயிர் இப்போ என் கையில, இப்போ சொல்லு போன் வச்சிரவா” என்று கேட்க, செழியன் அதிர்ந்து பின்னால் திரும்பி அனைவரையும் பார்த்தான்.
“என்ன போலீசு எல்லாரும் பத்திரமா இருக்காங்களான்னு சுத்தி பார்க்கறியா? எல்லாரும் இருப்பாங்க. கண்டவங்களையும் தூக்கி நான் என்ன பண்ண போறேன். நான் தூக்கிருக்கறது உன் உயிர சுமக்கற உன் பொண்டாட்டிய, புரியுதா? கண்டிப்பா புரியும் நீ போலீஸ் ஆச்சே” என்று கூறியவன் பலமாய் சிரிக்க, செழியன் கண்களில் கண்ணீர் முட்ட அப்படியே பொத்தேன சோபாவில் அமர்ந்து விட்டான்.
சுற்றி இருந்த அனைவரும் பயந்துவிட, “அட போலீசு லைன்லதான இருக்க, ஓ அதிர்ச்சியில இருக்கியா? முதல்ல நான் சொல்லிறேன் அப்புறம் அதிர்ச்சியாகு” என்று அவன் பேச பேச செழியனோ, “டேய் பொறுக்கி ****நாயே என் பொண்டாட்டிக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சு அன்னைக்கு தான் நீ உயிரோட இருக்கா கடைசி நாளா இருக்கும். உனக்கு என் கையாலதான்டா சாவு” என்று கத்த, தேவ்வோ வேகமாக அவனின் கையில் இருந்த போனை வாங்கி ஸ்பீக்கரில் போட்டான்.
அவனோ, “பரவாயில்லையே நல்லாதான் துடிக்கிற. இன்னொரு விசயம் சொல்லவா உன் பொண்டாட்டி கூட இப்படிதான் ரொம்ப துள்ளுனா. போலீஸ்காரன் பொண்டாட்டி இல்லை இருக்கதான செய்யும். ஓங்கி ஒண்ணு விட்டேன் மயக்கம் போட்டு அப்போ விழுந்தவதான், இன்னும் முழிக்கல. ஆனா நீ கவலைபடாத உயிரோட தான் இருக்கா அதுக்குள்ள கொன்னுட மாட்டேன்” என்று கூற, “டேய்” என செழியன் ஆத்திரத்தில் கத்தினான்.
“என் ஒத்த பிள்ளையை கொன்னு என்னை துடிக்க வெச்ச இல்லை. இப்போ உன் ரெண்டு குழந்தைகளோட உன் பொண்டாட்டியையும் சேர்த்து மூணா தூக்கிட்டேன். ஆனா நீ கவலைப்படாதே. உடனே கொல்லமாட்டேன். நீ தவிக்கனும் துடிக்கணும் கண்டுபிடிக்க முடியாம என் காலுல வந்து விழுவடா. அப்போ உன் கண்ணு முன்னாடி துடிக்க துடிக்க கொல்லுவேன். அப்போதான் என் ஆத்திரம் அடங்கும். இப்போ வைக்குறேன் உன் போலீஸ் மூளையை வச்சு முடிஞ்சா கண்டுபிடி. இல்லனா அவங்களுக்கு இறுதி காரியம் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணு. வைக்கட்டா” என்றவன் போனை அணைத்துவிட்டான்.
செழியன், “டேய் மரியாதையா அவளை விட்டுரு.. டேய்” என்று கத்த அதற்குள் போன் கட்டாகி இருக்க, தாமரை அழவே தொடங்கி இருந்தார். அதிரன் செழியனையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
சுற்றி நின்ற அனைவரின் அதிர்ச்சியுடன் செழியனை பார்க்க, அப்போது மீண்டும் அவனின் போன் அடிக்க புது நம்பராய் இருக்க அதை அட்டென்ட் செய்யவே கைகள் நடுங்க தேவ்தான் அதையும் ஸ்பீக்கரில் போட, எதிர்முனையில்,
“ஹெலோ செழியன் ஹொவ் ஆர் யு? நான் டாக்டர் வைஷ்ணவி ஆதில்சைத்ரேயன் பேசுறேன். கங்க்ராட்ஸ் மேன். வேதா சொல்லிட்டா இல்ல. ஷி இஸ் ப்ரெக்னெண்ட். மார்னிங் இங்கதான் ஹாஸ்பிடல்க்கு வந்துருந்தா. அப்போதான் கான்போர்ம் பண்ணேன். நான் அப்போவே கால் பண்ணலாம்னு நினைச்சேன். அவ உனக்கு சர்ப்ரைஸ் குடுப்பானுதான் கால் பண்ணல” என்று கூற, சட்டென செழியனோ, “வைஷு வேதா உன் ஹாஸ்பிடல்க்கு வந்தாளா? அப்போ டைம் என்னா இருக்கும்? கூட யாராச்சும் வந்தாங்களா? ரிட்டர்ன் கிளம்பும் போது டைம் என்ன இருக்கும்?” என்று வேக வேகமாக கேள்வி கேட்க,
அவளோ, “ஹேய் ரிலாக்ஸ் எதுக்கு இவ்ளோ டென்ஷன். அவ வரும்போது 10ஓ கிளாக் இருக்கும். ரெட்டர்ன் டைம் சரியா தெரியல. ஒரு ஹாஃப் அன் ஹவர் சம்திங்தான் இருக்கும். தனியாதான் வந்தா. நான் இப்போ கால் பண்ணதே அதுக்குதான். அவ ஹெல்த் ஸ்டேபிளா இல்லை. இப்போ நான் கால் பண்ணாதே அதை பத்தி உங்கிட்ட பேச தான்” என்று கூற செழியனோ, “புரியல தெளிவா சொல்லு” என்றவன் கேட்கும் போதே குரல் நடுங்கியது.
அவளோ “தெளிவா என்னால சொல்ல முடியல. இப்போ ஸ்கேன் பாத்ததுல ட்வின்ஸ் இது மட்டும் தெரிஞ்சது. அடுத்த மாசம் கூட்டிட்டு வா. அப்போ சில டெஸ்ட் எடுத்துட்டுதான் நான் சொல்ல முடியும். அவ ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கனும் செழியன். நீ எப்படி பாத்துப்பன்னு தெரியும். உன்னைவிட பெஸ்ட் ஹஸ்பண்ட் யாருக்கும் கிடைக்க மாட்டாங்க. அதே போல இன்னும் கொஞ்சம் கேர் எடுத்துக்கோ. அவளுக்கு கொஞ்சம் ரிஸ்க் இருக்கு. இப்போ என்னால எதுவும் விளக்க முடியாது. நேர்ல மீட் பண்ணலாம். அகைன் சொல்றேன் கேர் ஹெர்” என்றவள் அலைபேசியை வைத்துவிட்டாள்.
செழியனோ தலையில் அடித்து கொண்டவன், “எல்லாம் நான் பண்ண தப்பு. காலைலயே என்ன விட்டு போகாதன்னு சொன்னா. நான்தான் அர்ஜெண்ட் ஒர்க்ன்னு கிளம்பிட்டேன். நான் கொஞ்சம் யோசிச்சிருக்கணும்” என்றவன் அழுதுவிட, மற்றவர்களுமே பயத்தில் தான் இருந்தனர்.
தேவ்க்கு பேச்சே வரவில்லை. சந்தோஷமான விஷயம். அவள் இங்கு இருந்திருந்தால் அனைவரும் கொண்டாடி தீர்த்துத்திருப்பார்கள். இப்போது அவளின் உயிரே ஊஞ்சலாடி கொண்டிருக்கிறது அல்லவா. அதிரனோ, “செழியா இப்போ என்ன செய்றது அதை மட்டும் யோசி” என்று கூறினான்.
செழியனோ, “ASV ஹாஸ்பிடல். அதான் வைஷுவோட ஹாஸ்பிடல். அங்க பக்கத்துல எதாச்சும் கடைல விசாரிக்கலாம். எந்த வண்டியில போனா தெரிஞ்சா ஏதாச்சும் க்ளு கிடைக்கும்” என்றவன் வேகமாக எழுந்து செல்ல, அதிரன், ஆதி, தேவ், அகரன், அரவிந்தன் ஆறு பேரும் செல்ல, அங்கு சென்று விசாரித்தவர்களுக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்க வில்லை.
தேவ் அருகில் இருந்த ஒரு கடையை பார்த்தவன், அதில் இருந்த சிசிடிவி பார்த்து அதை போட்டுகாட்ட சொல்லி கேட்க, அனைவருமே அதை பார்த்தனர்.
வேதா மருத்துவமனையில் இருந்து வெளியே வர, தலையில் துப்பட்டா போட்ட ஒருபெண் அவளிடம் வந்து பேசுவதும் அவளுடன் வேதா செல்வதும் தெரிய, அந்த பெண் யாரென அவள் முகம் தெரியவே இல்லை.
அதிரனோ, “செழியன் அவன் பேசுன நம்பர் டிரேஸ் பண்ணி பார்க்கலாம்” என்று கூற, செழியனோ தலையாட்டி மறுத்தவன், “அப்போவே ட்ரை பண்ணிட்டேன். அந்த போன் இப்போ ஆன்லையே இல்லை. அவன் அதை தூக்கி போட்ருப்பான். பக்கவா பிளான் பண்ணிருக்கான். அவன் என் கையில கிடைச்சான் அவளோதான்” என்று கூறி சுவற்றில் கையை குத்த, கண்ணாடி உடைந்து அவன் கையில் ரத்தம் வர, அவனுடன் இருந்தவர்கள் அவனின் உடன் இருந்தவர்களே அவனின் ஆக்ரோசத்தை கண்டு பயந்துபோயினர்.
எந்த ஒரு தடையமும் கிடைக்கவே இல்லை. இரண்டு நாட்கள் கடந்து இருந்தது. செழியன் ஒவ்வொரு நொடிகளையும் நரகமாய் கழித்தான். அப்போது அவனின் போனுக்கு ஒரு வீடியோ வந்தது. அதில் வேதாவை ஒரு சேரில் வைத்து கட்டிப்போட்டு இருக்க, கன்னங்கள் கன்னி சிவந்து போய் இருக்க மயக்கத்தில் இருந்தாள். செழியன் துடித்துப் போனான்.
அந்த வீடியோவை பார்த்தவன் தலையில் அடித்து கொண்டு வாய்விட்டே “ஐயோ தங்கமே” என்று அழ, அவளின் நிலை கண்டு உறைந்துபோனான். உள்ளே இருந்தவர்கள் அவனின் குரலில் வெளியே ஓடி வந்து பார்க்க, செழியன் தரையில் உட்கார்ந்து இருக்க, கையில் போனை வைத்து அழுது கொண்டிருக்க, அதிரன் வேகமாய் போனை வாங்கி பார்த்தவனும் அழுதுவிட, அனைவருமே பார்க்க செழியனோ கையை தரையில் அடித்தவன் பற்களை கடிக்க, இந்த நேரம் அவன் மட்டும் செழியனின் எதிரில் இருந்திருந்தால் கண்ணிலே எரிந்து பஸ்பமாகி இருப்பான்.
யாராலும் அவனை சமாதானபடுத்தவே முடியவில்லை. வெறி கொண்ட வேங்கையாய் சிலிர்த்த கொண்டு இருந்தான். அப்போது சரியாய் அவனின் போன் அடிக்க எடுத்தது என்னவோ அதிரன்தான்.
“என்ன போலீசு பார்த்தியா உன் பொண்டாட்டி. சேப்டியாதான் இருக்கா, அவளுக்காக ஸ்பெஷல்லா மருந்து வாங்கி போட்ருக்கேன். இருபத்தி நாலு மணி நேரமும் மயக்கத்துலயே இருப்பா. கவலைபடாதே குழந்தைகளுக்கு எதுவும் ஆகாது. ஏன்னா என் கையால போக வேண்டிய உயிருங்கள ஒரு ஊசியால கொன்றுவேனா” என்று கொக்கரித்து சிரிக்க, செழியனோ அவனின் கையில் இருந்து போனை பிடிங்கியவன், “டேய் நீ என் கண்ணுல படற வரைக்கும் மட்டும்தான் உன் நேரம். விடமாட்டேன்டா உன்னை” என்று கர்ஜித்தான்.
அதில் சிரித்தவன், “ரொம்ப கஷ்டபட வேண்டாம் ASP. நானே உனக்கு போன் பண்ணுவேன். இப்போ இல்லை இன்னும் எட்டு மாசம் கழிச்சு. அதுவரைக்கும் நீ துடிக்கணும்டா. உன்னால என் ம *** கூட பிடுங்கமுடியாது. இப்போ வேற வேலைய பாரு. நீ எவ்வளவு முயற்சி பண்ணாலும் உன்னால என்னை நெருங்கமுடியாது” என்றவன் போனை வைத்துவிட்டான்.
செழியனின் முயற்சிகள் ஒன்றுமே பலிக்கவில்லை. அவனை சுட்டு பிடிக்க என்கவுண்டர் ஆர்டரும் வழங்கப்பட்டு இருக்க, அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியாமல் போனது. அவன் தேடல் மட்டும் முடிவிற்கே வரவில்லை. மற்றவர்களுக்கு அவனை எண்ணி பயமாக இருந்தது. அவனுக்கு ஏதேனும் ஆகி விடுமோ என்று. உணவு உறக்கம் இன்றி வெறி கொண்டு அலைந்து கொண்டு இருந்தான்.
நான்கு மாதங்கள் கடந்திருந்தது.இதுவரை அவளை பற்றி எந்த தகவலும் யாருக்கும் கிடைக்க வில்லை.

