Loading

 

அழகியே என் மழலை நீ 27

 

 

 

 

 

வேதா, “இவனுங்க ரெண்டு பேர் மேலையும் போர்ஜரி கேஸ் போட்டு உள்ள தூக்கி வைக்கணும் ஆதி. என்னை மொத்தமா உங்க கிட்ட இருந்து பிரிச்சதுக்கு ஏதாச்சும் செஞ்சே ஆகணும். அப்போ தான் இவங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவு வரும். இவங்களுக்கு எவ்வளவு தைரியம்? சும்மா விட கூடாது”என்றவளை மற்றவர்கள் அதிர்ச்சியுடன் பார்க்க, ஆதி தான் மகிழ்வுடன் அதிரனை பார்த்தான்.

 

 

அது சில நிமிடங்களுக்கு மட்டுமே அடுத்தடுத்து அவள் பேசியதில் விக்கித்து போய் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.ரோட்ல போகும் போது ஆக்சிடென்ட் ஆனதும் அப்படியே ஓடிப் போகாம என்னை ஹாஸ்பிட்டல்ல சேர்த்து அவங்க இங்க பார்க்க முடியாது போலீஸ் கேஸ் ஆகிடும்னு சொன்னப்போ கொஞ்சம் கூட யோசிக்காம என் வைஃப் தான் மலைச் சரிவுல ஸ்லிப் ஆகி விழுந்துட்டான்னு பொய் சொல்லி என்னை காப்பாத்தினான். எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி ஒரு பொய் சொல்லிருப்பான். இதுக்கு கண்டிப்பா போர்ஜரி கேஸ் போட்டே ஆகணும்” என்றவள் திரும்பி செழியனை பார்க்க, அவனுக்கா தெரியாது அவள் ஆதி பேசியதற்கு பதிலடி தரவே இப்படி பேசுகிறாள் என்று…

 

 

“அப்பறம் நெக்ஸ்ட் பாயிண்ட் யாருன்னே தெரியாத என்னை காப்பாத்துனதோட விடாம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து, அவங்களை எல்லாம் எதிர்த்து அவங்கப்பா என்னை ஹோம்ல சேர்க்க சொன்னதுக்கு அவர்கிட்ட சண்டை கட்டி, அவங்கம்மா என்ன கதவுல தள்ளி விட்டு எனக்கு எல்லாம் நியாபகம் வந்து அவனையே பாத்துட்டு நிக்கிறேன் அது கூட தெரியாமல் எனக்காக சப்போர்ட் பண்ணிட்டு எல்லா சொத்தையும் சொந்தங்களையும் உதறிட்டு வெளியே வந்து எனக்காக என் கூட சேர்ந்து கஷ்டப்பட்டு, டிரைவர் வேலைக்கு போய், எனக்கு தேவையானதை செஞ்சு என் இலட்சியத்தை தெரிஞ்சுக்கிட்டு அதுக்காக கஷ்டப்பட்டு, அன்னிக்கே சாக வேண்டிய என்னை இப்படி உன் முன்னாடி பேச வச்சிட்டு இருக்கறதுக்காக ஒரு கேஸ் போடலாம், ஓகேவா. சரியா நோட் பண்ணிக்கோ என்ன, ஒரு பாயிண்ட் கூட மிஸ் ஆக கூடாது என்ன என்றவள்,இப்போ நான் சொன்ன எல்லாத்தையும் நோட் பண்ணிக்கோ. மறக்காம முக்கிய குற்றவாளி தேவான்னு இவன் பேரையும் சேர்த்துக்கோ. டீடெயில்ஸ் போதும் தான மேற் கொண்டு ஏதாச்சும் தோணுன கால் பண்ணி சொல்றேன் ஓகேவா” என்றவள் அவனை கூர் பார்வையுடன் நோக்க, ஆதி தலை குனிந்து நின்றான்.

 

 

அனைவரும் செழியனை பெருமையாய் பார்க்க, ஆதி செழியனின் அருகில் வந்தவன் “சாரி செழியன், நான் தான் தப்பா நெனச்சுட்டேன். சாரி” என்று கூறியவன் தங்கையின் அருகில் வந்தவன், “இதனால தான் நீ என்கிட்ட பேசவே இல்லையா மித்து. சாரிடா” என்று கூறினான்.

 

 

அதிரன், “பேசும் போது யோசிச்சு பேசணும் ஆதி. ஒருமுறை வார்த்தைய விட்டா அதை அள்ளுறது ரொம்ப கஷ்டம். இனியாச்சும் புரிஞ்சுக்கோ. பாஸ்ட் இஸ் பாஸ்ட். நம்ம செழியனுக்கு நன்றி தான் சொல்லணும். அன்னைக்கு அப்டி நடக்கலைன்னா இன்னிக்கு நாம இப்படி மித்துகிட்ட பேசிட்டு இருக்க முடியாது” என்று கூற, அண்ணன் கூறியதை கேட்டவன் செழியனின் கைகளை பிடித்துக் கொண்டு, “நான் பேசினது எல்லாம் மறந்துருங்க, பிரண்ட்ஸ்” என்று கைக் கொடுக்க, செழியனோ இல்லையென தலையாட்டி மறுக்க அனைவரும் செழியனை அதிர்ந்து போய் பார்த்தனர்.

 

 

அவனோ, “கைய விட்டீங்கன்னா கை கொடுக்க வசதியா இருக்கும்” என்று கூற, அப்போது தான் அனைவரும் கவனித்தனர் ஆதி செழியனின் வலது கையை தன் இடது கையால் பிடித்திருக்க அவன் கையை விடவும் இருவரும் கை குலுக்கி கொண்டனர்.

 

 

 

வேதா பேசியதும் தான் அறிவழகனுக்கு அவர் செய்த தவறும் மண்டையில் உரைக்க, மருமகளிடம் வந்தவர், “தெரியாம பண்ணிட்டேன் சொல்லி மன்னிப்பு கேக்க வரலம்மா, உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ மன்னிச்சிருங்க போதும். வயக்கேத்த அறிவு அப்போ என் கிட்ட இல்லை. இருந்து இருந்தா இப்படி தங்கங்களை தொலைச்சிட்டு தவிச்சிட்டு இருந்து இருக்க மாட்டேன்” என்றவர் கதவை திறந்து கொண்டு சென்று விட்டார்.

 

வேத நாயகி பேத்தியின் அருகில் வந்தவர் தலையை வருடி விட்டு கண்களில் வழிந்த நீரை துடைத்து கொண்டு செழியனை பார்க்க அவனோ எங்கோ விறைத்து கொண்டு நிற்க கனத்த மனதுடன் வெளியே சென்று விட்டார்.மீனாட்சி கணவர் சென்றதுமே வேகமாய் சென்று விட்டார்.

 

 

மற்றவர்களும் வேதாவிடம் பேசி விட்டு செழியனிடம் பார்த்து கொள்ள சொல்லி விட்டு செல்ல அங்கு இருந்த தென்னவோ செழியன், அதிரன், ஆதி, தாமரை, அன்பரசன் தான். செழியனும் அவர்களுக்கு தனிமை கொடுத்து செல்ல போக, வேதா அவனின் கைகளை இறுக பற்றிக் கொண்டுதான் தந்தையிடம் தாயிடமும் பேசிகொண்டிருந்தாள். அது அதிரனின் கண்களில் பட, ஆதியை கண்களால் அழைத்தவன் அதை காட்ட, வேதாவின் மனநிலை நன்றாகவே புரிந்தது அவர்களுக்கு.

 

 

இரவு ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூற, செழியன் தாமரை உடன் இருக்கிறேன் என்று கூறிவிடுவாரோ என்று தவித்து போக, தாமரை செழியனின் அருகே வந்தவர், “நாங்க போய்ட்டு வரோம் செழியா. நீ வேதா கூட இரு. உன்னைவிட அவளை யாராலயும் நல்லா பாத்துக்க முடியாது” என்று கூறினார்.

 

அன்பரசனோ, “மாப்பிள்ளை எப்போவும் பொண்ண கட்டிக் குடுக்கும்போது அந்த அப்பா அந்த மாப்பிள்ளைய ஒரு சந்தேக கண்ணோட தான் பார்ப்பாங்க அவன் பொண்ண நல்லா பாத்துப்பானான்னு. ஆனால் உங்களை நாங்க சந்தேகப்படவே தேவை இல்லை. எங்களைவிட அவளுக்கு என்ன வேணும்னு உங்களுக்கு நல்லா தெரியும். நீங்க போய் பார்த்துக்கோங்க எதா இருந்தாலும் ஒருபோன் பண்ணுங்க. இந்த நாலு வருசத்துல இன்னைக்குதான் நைட் நான் சந்தோசமா உறங்குவேன்” என்றவர் சென்று விட, அதிரனும் ஆதியும் வெளியே செல்ல, வரவேற்பரையில் தேவ் கண்களை மூடி அமர்ந்திருந்தான்.

 

அதிரன் தான் அவனை பார்த்து அருகில் வர, தேவ்வை தட்டியவன், “நீ வீட்டுக்கு போகலையா தேவ்?” என்று கேட்க, அவனோ, “இல்லை அதிரா நைட் ஏதாச்சும் தேவைப்பட்டுச்சுன்னா செழியன் தனியா இருக்கான். நான் கொஞ்ச நேரத்துல காருக்கு போய்டுவேன். நீங்க பாத்து போங்க. லேட் ஆகிடுச்சு. நான் போய் அவங்க ரெண்டு பேருக்கும் சாப்பிட ஏதாச்சும் வாங்கி குடுத்துட்டு போய்க்கிறேன்” என்று கூற, அதிரன் திரும்பி ஆதியை பார்க்க, அவனோ தேவ்வை ஆச்சிரியமாக பார்த்து கொண்டிருந்தான். நண்பன் மீது எத்தனை பாசம், இப்படி ஒரு நண்பன் கிடைக்க கொடுத்து வைக்க வேண்டுமே என்று…

 

அங்கு இருப்பது தன் தங்கை அவளின் கணவன், அத்தை மகன் பல உறவுமுறை கொண்ட சொந்தம் ஆனாலும் அவர்களுக்கு அது தோன்ற கூட இல்லை. அவர்கள் பாட்டுக்கு பார்த்து கொள் என்று கூறி விட்டு கிளம்பி சென்று விட்டனர். அவர்களுக்கு தேவை நினைத்தால் இப்போதும் வியப்பு மட்டுமே…

 

 

அவர்கள் இருவரும் கிளம்பிவிட, தேவ் அவர்களுக்கு இரவு உணவு வாங்கி கொடுத்தவன், அன்று போலவே காரிலேயே தங்கி கொண்டான். மூன்று நாட்களில் வேதா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துவிட, மொத்த குடும்பமும் அவளை கொண்டு வந்து விட்டு விட்டுதான் சென்றனர்.தாமரைக்கும் அன்பரசனுக்கும் மகளை சில நாட்கள் தங்களுடன் வைத்து சீராட வேண்டும் என்று ஆசை தான்.ஆனாலும் மகளுக்கு செழியனுடன் இருக்க தான் விருப்பம் என்பதை புரிந்து கொண்டவர்கள் அவளை தொல்லை செய்ய விரும்ப வில்லை.

 

வேதாவுக்கும் அவர்களின் மேல் சிறிய வருத்தம் இருக்க தான் செய்தது. அவர்கள் அப்படி விட்டு சென்றது இன்னுமே. அவளால் ஏற்க முடியாமல் தான் இருந்தது. அதை பேசி அவர்களை மேற் கொண்டு நோகடிக்கவும் தோன்றாமல் செழியனுடன் வீட்டுக்கு வந்து விட்டாள்.

 

 

வீட்டுக்கு வந்ததும் தான் செழியன் நிம்மதியாக உணர்ந்தான். அமைதியாக இரு இடத்தில் அமர்ந்தவன் மூச்சுக்களை இழுத்து விட, அவனை கண்டு வேதா இதழ் மடித்து சிரிக்க, அவள் சிரிப்பதை கண்டவன் அவளின் அருகில் சென்று தோளில் கைப் போட்டு நெருங்கி அமர்ந்தவனோ, “எதுக்கு தங்கமே சிரிச்ச” என்று கேட்க, அவளோ, “அதை அங்க இருந்தே கேட்கலாமே” என்று கூற, வேகமாய் அவளை அணைத்து கொண்டான்.

 

 

அவளோ, “பயந்துடீங்களா மாமா” என்று கேட்க, “செத்துட்டேன்” என்று சிறு அழுகையுடனே கூறினான். “அப்புறம் ஏன் நான் கண் விழிக்கும் போது என் பக்கத்துல இல்லை நீங்க” என்று கேட்க அவனோ பதில் கூறாமல் தடுமாற, “உங்களை மறந்துருப்பேன்னு நினைச்சிட்டீங்க தானே” என்று கேட்க, செழியன் அதுக்குதான் உண்மை என்பது போல தலைகுனிந்தான்.

 

 

அவளோ அவனின் முகத்தை நிமிர்த்தியவள், “எனக்கு எதுவும் நியாபகம் இல்லாதபோதே உங்கள நம்பி உங்ககூட வந்தவ. நாலு வருஷம் வாழ்ந்தபுறம் எல்லாம் மறந்துருச்சுன்னா உங்களை விட்டு போயிருவேனா. இந்த உயிர் இருக்கற வரை உன்னைவிட்டு போகமாட்டேன் மாமா.எனக்கு எதுவும் ஆகலை தானே அப்புறம் என்ன விடுங்க” என்று கூறியவளின் நெற்றியில் இதழ் பதிக்க, அவளின் கண்ணிலிருந்து ஒற்றை துளி நீர் வெளியேறியது

 

அவனின் மீது அத்தனை நம்பிக்கை வைத்து கூறியவளுக்கு தெரிய வில்லை. அவன் செய்த காரியத்தால் தான் மீண்டும் அவள் அவனை விட்டு வெகு தூரம் செல்ல போவதை..

 

 

சும்மா இருக்கும் போதே அப்படி தாங்குபவன் முடியாமல் இருக்கும் போது விட்டு விடுவானோ தினந் தோறும் அவளின் பெற்றோர்கள் வந்தாலும் அவர்களுக்கு அங்கே எந்த வேலையும் இல்லாமல் போனது. மகளின் வாழ்வை கண்டு பூரித்துப்போயினர்.அவர்களுக்கு பேரானந்தம் அவர்களே பார்த்து அமைத்து வைத்தாலும் மகளின் வாழ்வு இப்படி மலர்ந்திருக்குமா என்று…

 

 

வேதாவுக்கும் கொஞ்சம் கொஞ்சமாய் உடல்நிலை சீராக தொடங்கியது. அவளும் அவளின் அலுவலகத்துக்கு செல்ல தொடங்கினாள்.தேவின் திருமணமும் பக்கத்தில் இருக்க அவளுக்கு வேலை இரு மடங்காகி போனது. செழியனின் வற்புறுத்தலில் கொஞ்சம் ஓய்வெடுத்து அதான் பின் அவளின் பணிகளை செய்ய தொடங்கினாள். இதற்க்கு இடையில் தான் அப்போது அவளுக்கு ஆதியின் மூலம் சில உண்மைகள் தெரிய வர, அதில் மேலும் அவள் உடைந்து போனாள். அதிலிருந்து அவளை தேற்றி கொண்டு வர செழியன் தான் படாத பாடு பட்டு போனான்.

 

 

அடுத்த இரண்டு நாட்களில் தேவின் திருமணம் கோலகலமாக தொடங்கியது.

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அவளுக்கு வேற ஏதாவது ஹெல்த் ப்ராப்ளம் .. அதை செழியன் மறச்சுட்டான் போல ..