Loading

அழகியே என் மழலை நீ 26

 

 

செழியன் அதீத கோபத்திலும் அடக்க முடியாத ஆக்ரோ சத்திலும் கையை சுவற்றில் ஓங்கி குத்த அது அருகில் இருந்தக ஜன்னல் கம்பியில் பட்டு கைவிரல்களில் ரத்தம் தெரித்தது. தேவ் தான் அவனை ஓடிச்சென்று இழுத்தவன் டேய் பைத்தியமா உனக்கு கொஞ்சம் பொறுமையா இரு, தேவையில்லாம அவசரத்துலயும் ஆத்திரத்துலயும் உன்னை நீயே காயப்படுத்திக்காத கண்டிப்பா ஏதாச்சும் பண்ணுவோம். வேதாவ இப்படி படுக்க வச்சவனை சும்மா விட்டுருவோமா கண்டிப்பா இதுக்கு ஏதாச்சும் பண்ணலாம். அதுக்கு கொஞ்சம் பொறுமையா இரு. முதல்ல கோவ படாத. முதல்ல அவளுக்கு சரி ஆகட்டும். இந்த மாதிரி ஏதும் கிறுக்கு தனம் பண்ணா அதோ பாரு பக்கத்துல ஒரு இடம் காலியா இருக்கு இல்லை. அங்க போய் நீயும் படுத்துக்க வேண்டியது தான்”என்று அவனை சமாதான படுத்தி அழைத்து வந்து அமர வைத்து இருந்தான்.

 

 

 

 

மூன்று மணிநேரம் கடந்து இருந்தது,செழியன் எழுந்து உள்ளே சென்று வேதாவின் அருகில் அமர்ந்து கொள்ள, தேவ் மட்டும் உள்ளே எட்டி பார்த்து விட்டு அதிரனிடம் அதிரா நீ அன்பு கிட்ட பேசி அடுத்து என்னனு பாத்துக்கோ செழியனை இதுல உள்ள இழுத்து விட வேண்டாம் என்று கூற, அதிரனுக்கும் அது சரியாக பட, தலையை ஆட்டி கொண்டான்.

 

சரி நான் வீட்டுக்கு போய்ட்டு வரேன் என்று அவனிடம் கூறியவன் சென்று விட்டான். சென்று அரைமணி நேரத்தில் திரும்பி வந்து இருக்க, அப்போதும் வேதா கண் விழிக்க வில்லை.

 

அனைவரும் வெளியில் அமர்ந்திருக்க, செழியன் மட்டும் வேதாவின் அருகிலேயே அமர்ந்திருந்தான். தேவ் செழியனுக்கு ஒரு செட் உடை எடுத்து வந்தவன், அவனிடம் கொடுத்து மாற்றிக்கொள்ள கூறிவிட்டு, அவன் எடுத்து வந்த வேதாவின் முந்தைய பரிசோதனை பைல்கள் அனைத்தையும் மருத்துவரிடம் சென்று கொடுத்து விட்டு வந்தான்.

 

 

சிறிது நேரம் சென்றதும் மருத்துவர் அழைப்பதாக செவிலியர் வந்து செழியனை அழைக்க, அவன் அவரை பார்க்க உள்ளே சென்றான்.

 

 

 

அன்பரசன் அவ்வளவு நேரம் பொறுமை காத்தவரால் அங்கே அமரவே முடிய வில்லை.மகன்களின் உதவியுடன் கதவை திறந்து கொண்டு உள்ளே வருவதற்கும் வேதா கண் விழிப்பதற்கும் சரியாக இருந்தது.

 

 

மெதுவாய் கண் விழித்தவள் தந்தையை பார்க்க பார்த்தவளின் கண்களில் கண்ணீர் தானாய் வழிய, “அப்பா” என்று அழைக்க, அன்பரசன் மகளிடம் வந்தவர், “அம்மாடி முழிச்சுட்டியா பார்த்து வந்துருக்கலாம்ல. இப்போ பாரு என்னாலதான் உனக்கு இப்படி ஆகிடுச்சு. என்னால தான் நீ இப்படி வந்து படுத்திருக்க, வலிக்குதாமா. இப்போ பரவால்லையே ஏதாவது செய்யுதா சொல்லுடா அப்பா போய் டாக்டர் வர சொல்றேன்” என்று பட படத்தவரை கண்ணீர் மல்க பார்த்தவள் சாரி பா என்னால தானே உங்களுக்கு இப்படி ஆச்சு என்று திக்கி திணறி பேச, மகள் பேச வந்ததை புரிந்து கொண்டவர் வேணாம் தாயி, அதெல்லாம் எதுவும் பேசாத மா, ஒண்ணும் இல்லை எங்கம்மா வந்துட்டாங்க, என் மகள் உயிரோட இருக்கா, என் பக்கத்துல இருக்கா அது போதும் தாயி எனக்கு வேண்டாம் சாமி அழுகாத என்றவரின் மகளின் கண்களில் வழிந்த நீரை துடைக்க, அவளின் கைகளை இறுக்க பற்றி கொண்டாள்.

 

அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே அனைவரும் உள்ளே வந்து இருந்தனர்.

ஆதியோ, “அப்பா எல்லாம் அந்த செழியன் காட்டுன ஹீரோயிசத்தால வந்தா வினை. நீங்க என்ன பண்ணீங்க.அவன் பண்ணது எல்லாமே. எல்லாத்துக்கும் காரணம் அவன் தான் அவனை நான் சும்மா விட மாட்டேன்” என்று கோபத்தில் கத்தினான் வேதா ஆதியை பார்க்க அவனின் பார்வையில் செழியனை பேசும் போது அத்தனை வெறுப்பு என்று ஒரு நொடியில் கண்டு கொண்டாள்.

 

 

தந்தையிடம் மீண்டும் திரும்பியவள், “சாரிப்பா, என்னாலதான் நீங்க அங்க இருந்து எல்லாத்தையும் இழந்துட்டு வந்துடீங்க. எப்படி இருந்த நீங்க இப்படி மாற நான்தானே காரணம்” என்று அழ, அன்பரசனோ, “வேணாம் மித்துமா எல்லாத்தையும் மறந்துரு. என் பொண்ணு கிடைச்சிட்டா அந்த சந்தோஷத்துல இருக்கேன். விட்டுருலாம் தங்கம்” என்றவர் அவளின் முகம் வருடி நெற்றியில் முத்த மிட்டார்.

 

 

அதிரன் தங்கையின் அருகில் வந்தவன், “மித்துமா அண்ணன நியாபகம் இருக்குல்ல” என்று கேட்கும் போதே அவனின் உடைந்து போக, “சாரிண்ணா” என்றவள் கலங்க, தாமரையும் மகளின் அருகில் வந்தவர், “வேதா” என்று அழைக்க, அவளோ முகம் திருப்பிக் கொள்ள அவரோ, “வேதா அம்மா மேல கோவமா நான் என்னடா பண்ணேன்” அழுதுக் கொண்டே கேட்க அவளோ, “நீ ஹாஸ்பிட்டல்ல என்னை பார்த்தல்ல அப்போவே உனக்கு என்மேல பாசம் இருந்தா என்கிட்ட ஓடி வந்துருப்ப இல்லை” என்று கேட்கும் போதே அவளால் பேச முடியாமல் மூச்சு திணற, சுற்றி இருந்தவர்கள் பயந்து போயினர்.

 

 

தாமரையோ “வேணாம்டா அப்புறம் பேசிக்கலாம். கஷ்டப்படாத,அம்மாக்கு அப்டி உன் மேல எந்த வருத்தமும் இல்லடா. உன் மேல எனக்கு பாசம் இல்லையா? நீ இல்லாம அம்மா எப்படிடா இருப்பேன். எப்படி இந்த மாதிரி உன்னால யோசிக்க முடிஞ்சது தங்கம். நீ இல்லாம நாங்க இந்த நாலு வருசமா நடை பொணமா தான் வாழ்ந்துட்டு இருக்கோம்”அழுது கொண்டே என்று கூற,அவளுக்கும் கண்ணீர் வந்தது.மகளின் அருகில் வந்து அவளின் முகத்தை வருடி பார்த்தவருக்கு அப்போது தான் உண்மையிலே அவ்வளவு மகிழ்வு.

 

ஆதி”நீங்க அழாதீங்க நீங்க அழுதா அவளும் அழுவுறா இப்போ தான் கண் முழிச்சுருக்கா மறுபடியும் ஏதும் பண்ணிடாதீங்க இங்க வாங்க என்றவன் அவளின் அருகில் அவளின் தலையை வருடி விட, அவளோ நிமிர்ந்து கூட அவனை பார்க்க வில்லை. ஆதிக்கு அவளின் ஒதுக்கம் புரிய தான் செய்தது. ஆனாலும் அதை அவன் அப்போது அதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை.

 

 

அரவிந்த், லாவண்யா என அனைவரும் வந்து பேச, அனைவர்க்கும் தலையாட்டியவள் கண்கள் கணவனை தான் தேடியது, அது அங்கிருந்த அனைவருக்குமே புரிந்து போனது. அனைவருமே திரும்பி செழியனை தேட அவன் அவளுக்கே தெரியாமல் வெளியே நின்று கண்ணாடியின் வழியே அவளை தான் பார்த்து கொண்டிருந்தான்.அவனுக்கு பயம் இன்னும் கூடியது. கண்கள் களை இழந்து போனது. வேதனைக்கு மேல் வேதனை. அவனால் நடக்கும் அடுத்தடுத்த விஷயங்களை ஜீரணிக்கவே முடியவில்லை. அவள் இப்போது நன்றாக இருக்கிறாள். ஆனால் மருத்துவர் கூறிய விஷயங்களை நினைக்கும் போது அடிவயிற்றில் பயப்பந்து ஒன்று உருண்டு போனது.

 

 

தேவ் அப்போது தான் மற்றொரு கதவின் வழியே வந்தவன் அவளின் அருகே வந்து, “குட்டிமா இப்போ ஓகேவா நல்லாருக்கல்ல பார்த்து வந்துருக்கலாம்ல, நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா?கொஞ்ச நேரத்துல பயமுறுத்திட்ட தெரியுமா? இப்போ பரவால்ல தானே வலி இன்னும் இருக்கா” என்று கேட்டான்

 

வேதாவோ, “கவலைப்படாத அண்ணா உன்னை வச்சு பாய்சன் காபி ட்ரெயில் பார்க்காம எனக்கு ஒண்ணும் ஆகாது. நான் நல்லா தான் இருக்கேன். நீ கவலை படாத சரியா?” என்று சீரியஸாக அவனுக்கு ஆறுதல் கூற, அங்கிருத்தவர்களின் இதழ்கள் மெலிதாய் விரிந்தது.

 

அவள் நார்மலாக பேசியதை கேட்டதும் தான் செழியனுக்கு உயிரே வந்தது. தேவை அவளுக்கு நினைவு இருக்கிறது என்று…

 

தேவ்க்கு அவள் பேசியதில் கண்ணீரே வந்து விட்டது, “வாயாடி நான் எவ்ளோ பீல் பண்ணி பேசுறேன் நீ என்னை கிண்டல் பண்ற” என்று கூறியவன், “உனக்காக நான் அதைகூட குடிப்பேன்டா” என்றவன் அவளின் தலையை தடவி விட, அங்கிருந்தோர்களுக்கு அவர்களின் பிணைப்பு புரிந்தது.

 

 

வேதா இப்போது நன்றாகவே பார்வையை அலை பாய விடசெழியனை தேடுவது அனைவர்க்கும் நன்றாகவே தெரிந்தது. செழியன் அதற்கு மேல் அவளை தவிக்க வைக்க விரும்பாதவன் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல, படுத்திருந்திவள் அவனை கண்டதும் எழுந்து கொள்ள முற்பட, அவள் சிரமப்படுவதை கண்டவன் அவளை அணைத்து பிடித்தவாறே சாய்வாக அமர வைக்க, அவளோ “அவுச்” வலியால் கத்திவிட்டாள் வயிற்றை பிடித்து கொண்டு.

 

 

ஒரே நொடி கண்களில் நீர் நிறைய அவனோ, “வலிக்குதா தங்கமே. டாக்டர் கூப்பிடவா” என்று பதற, அவளோ, “சடனா எழுந்ததால வலிச்சது போல. இப்போ இல்லை” என்று கூற, அரைகுறை மனதுடன் தலையாட்டினான்.

 

அவளின் கத்தலில் அனைவரும் ஆடி போய் விட, செழியனுக்கு அவளின் வலியும் கண்ணீரும் எதனால் என்று தெரிந்து இருக்க, அவளின் சமாளிப்பில் அவனுக்குமே கண்களில் கண்ணீர் வழிய யாருக்கும் தெரியாமல் துடைத்து கொண்டான்.

 

ஆதி தான் மேற் கொண்டு அமைதியாக இருக்காமல் செழியனிடம், “நான் உன் மேல கண்டிப்பா கேஸ் போடுவேன் செழியன். என் தங்கச்சி சுய நினைவு இல்லாதபோது அவளை கல்யாணம் பண்ணிருக்க நீ. நான் இத அப்படியே விடமாட்டேன்.அவளை எங்க குடும்பத்துல இருந்து பிரிச்சு, நாங்க பட்ட எல்லா கஷ்டத்துக்கு காரணம் நீதான். இதுக்கு எல்லாம் நீ அனுபவிச்சே ஆகணும் விட மாட்டேன் டா உன்னை” என்று கத்த அங்கிருந்த அனைவருமே அதிர்ந்து போயினர்.

 

 

தேவ், “டேய் ஒழுங்கா இரு. தேவையில்லாம பேசி அடி வாங்கி சாகாத. நானும் பாக்குறேன் ரொம்ப நேரமா பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்க நீ” என்று திட்ட, அதிரன் “ஆதி நீ வாய மூட போறியா இல்லையா? கொஞ்சமாச்சும் அறிவிருக்கா? இங்க நடந்த எல்லாம் பார்த்த அப்புறமும் அவனையே எல்லாத்துக்கும் தப்பு சொல்லிட்டு இருக்க, இதுக்கு மேல நீ ஏதாவது பேசினா அப்புறம் அவ்வளவு தான் சொல்லிட்டேன். மரியாதையா இருக்கனும் புரிஞ்சுதா? என்று அதிரன் ஆதியை அதட்டினான்.

 

அவனோ”எனக்கு எல்லாம் புரியும் அதனால தான் நான் பேசுறேன். நீ உன் வேலையை பாரு இவனை நான் சும்மா விட மாட்டேன்”என்று அடங்காத

 

வேதாவோ, “ஆதி அப்படியே இந்த ஆந்தைகண்ணன் மேலையும் ஒரு கேஸ் போடு. இவன்தான் அவன் கையால தாலி எடுத்து குடுத்து கல்யாணம் பண்ணி வச்சான்” என்று கூற, அனைவரின் பார்வையும் தேவ்வின் மேல் திரும்ப, அவனோ வேதாவை முறைத்து கொண்டிருந்தான்.

 

அவளோ அதை கண்டுகொள்ளாமல், “இதோ இவன் வாழ்க்கை முழுசும் வெளியேவே வரக்கூடாது உங்களை விட்டு நாலு வருஷம் என்னை பிரிச்சிருக்கான். சேர்த்துவச்சு அனுபவிக்கனும்”

என்று தீவிரமாக செழியனை காட்டி கூறினாள்.

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. வேதா இந்த நிலைமையிலும் காமெடி பண்ற நீ .. இன்னும் வேதாவுக்கு வேற ஹெல்த் ப்ராப்ளம் இருக்கா செழியா ..