
அழகியே என் மழலை நீ 25
அனைவரும் அப்படியே நின்றுவிட செழியன் ஓடிவந்தவன் ரத்தவெள்ளத்தில் கிடந்த வேதாவை தூக்கி தான் மேல் சாய்த்தவனோ, “தங்கமே.. தங்கமே இங்க பாருடா.. கண்ண திற.. தேவ் காரை எடு” என்று கத்த அடுத்த ஐந்தாம் நிமிடம் வேதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாள்.
அன்பரசனோ, “எல்லாமே என்னாலதான், நான் கொஞ்சம் பொறுமையா இருந்துருக்கலாம். என்னாலதான இப்படி ஆகிடுச்சு. நாலு வருஷம் கழிச்சு பாத்த என் தாயி இப்படி ஆக நானே காரணம் ஆகிட்டேனே” என்று அழ, அறிவழகன், வேதநாயகி, மீனாட்சி அனைவரும் உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருந்தனர். வேதநாயகிக்கு அவள் தன் பேத்தியா, தான் மகளின் மகளா? என்று அதிர்ச்சி.
மீனாட்சி இது எப்படி சாத்தியம்? என்று யோசித்து கொண்டு இருக்க, தேவ் தலையில் அடித்துக்கொண்டவன் “எல்லாம் என்னாலதான், வரலன்னு சொன்னவளை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்தேனே.. இப்படி ஆகிடுச்சு, எல்லாம் என் தப்பு தான்” என்று அழ, தாமரை அழுதழுது அரைமயக்கத்துடன் லாவண்யாவின் தோளில் சாய்ந்திருக்க, செழியன் கண்களை மூடி அமர்ந்திருக்க, கண்களில் தானாய் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
அரவிந்தன்தான் செழியனின் அருகில் வந்தவன், “செழியா வேதாக்கு ஒன்னும் ஆகாதுடா, சரி ஆகிடும்” என்று கூற, செழியனோ தன் கைகளை பார்க்க, அவனின் உடையிலும் அவனின் கரங்களிலும் அவளின் உதிரம்.
மருத்துவர் வெளியே வந்தவர், “சார் இங்க பேசன்டோட ஹஸ்பண்ட் யாரு” என்று கேட்க, செழியன் எழுந்து முன் வந்தவன், “என்னாச்சு டாக்டர் அவளுக்கு ஒன்னும் ஆகலையே நல்லாருக்காதானே” என்று உயிரை கையில் பிடித்து கொண்டு கேட்க அவரோ, “இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது சார். அவங்களுக்கு தலையும் ஸ்டொமக்லயும் நல்ல அடிபட்ருக்கு. ஸ்கேன் பண்ணி பார்த்தாதான் தெரியும். இதுக்கு முன்னாடி அவங்களுக்கு எதுவும் தலையில எதுவும் அடிபட்ருக்கா” என்று கேட்டார்.
கண்களை துடைத்தவன், “ஹ்ம்ம் போர் இயர்ஸ் முன்னாடி தலைல அடிபட்டு இருந்துச்சு. ஆனால் அது அப்போவே க்யூர் ஆகிடுச்சு. சில நினைவுகள் கூட மறந்து போச்சு. அதுவும் ஒரு ஒன் வீக்ல நியாபகம் வந்துருச்சு டாக்டர். அதனால் எந்த ப்ரோப்லேம் இல்லனு சொன்னாங்களே இப்போ அதை ஏன் கேட்குறீங்க” என்று பதட்டமாக கேட்க,
மருத்துவரோ, “சார் நீங்க டென்ஷன் ஆக வேண்டாம். இது நார்மலா செக் பண்றதுதான். ஸ்கேனிங் ரிப்போர்ட்ஸ் பார்க்கணும்” என்று அவர் உறுதியாய் கூறியதிலேயே அவனுக்கு பெரிதாய் ஏதோ பிரச்சனை என்று தோன்ற, அப்படியே தொப்பென்று சேரில் அமர்ந்துவிட்டான். அதுவரை மருத்துவர் பேசிகொண்டிருந்ததை கேட்டவர்கள் அதிர்ந்து போய் செழியனை பார்த்தனர்.
ஆதியோ, “மித்துவுக்கு என்னமோ ஆகிடுச்சு, எல்லாமே இவனால தான்” என்றவன் ஓடி வந்து செழியனின் சட்டையை பிடித்து கன்னத்தில் ஓங்கி அறையை, அதிரன் ஓடிவந்து தடுப்பதற்குள் அவன் அடித்தேவிட்டான். செழியன் எதையும் உணரும் நிலையில் இல்லை.
செழியனை அடித்ததும் அழுத்துகொண்டிருந்த தேவ் பாய்ந்து சென்று ஆதியின் முகத்தில் ஒரு குத்து விட்டவன், “கொன்றுவேன் யார் மேல கைய வைக்குற. உனக்கென்னடா தெரியும் அவனை பத்தி” என்று கத்த, அகரனும் அரவிந்தும் தேவ்வை சமாதானப்படுத்தி இழுத்து வர,
ஆதியோ, “டேய் இவன்தான்டா என் தங்கச்சிய மிரட்டி வச்சுருக்கணும். இல்லனா நியாபகம் இருந்தும் எங்களை யாருன்னே தெரியாத மாதிரி நிப்பாளா? நாலுவருசத்துக்கும் முன்னாடி கூட இவன்தான் என் தங்கச்சிய ஆக்சிடென்ட் பண்ணிருக்கான். இவன நான் சும்மா விடமாட்டேன்” என்றவன் எகிறிக்கொண்டு செல்ல,
தேவ்வோ அகரனையும் அரவிந்தனையும் தள்ளிவிட்டு சென்றவன், “என்னடா செய்வ. செய்டா பார்க்கலாம். என்னை தாண்டி நீ என் நண்பனை தொட்ட இன்னிக்கு உன் சாவு என் கைலதான்டா” என்று சட்டையை மடித்து விட்டு எகிறிக்கொண்டு வந்தான்.
லாவண்யா, “டேய் அமைதியா இருங்கடா. பாவம்டா அவன். ஆதி அவன் என்ன நிலமைல இருக்கான். இப்போ போய் அவனை அடிக்க போறேன் குத்தபோறேன்னு. உனக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா? அன்னைக்கு செழியன் கார்ல ஆக்சிடென்ட் ஆகலைனா உன் தங்கச்சி இப்போ உயிரோட இல்லை. நிலசரிவுல சிக்கி என்னாகியிருப்பான்னு யோசிச்சு பாரு. முட்டாள்தனமா பேசிட்டு இருக்காத” என்று பொறுமையாய் கூறினாள்.
அதிர்ந்து போய் அங்கே அமர்ந்திருந்த செழியனின் அருகில் வந்த தேவ், ”செழியா” என்று அவனின் தோள் தொட, நண்பனை கட்டிக்கொண்டவன் கதறி தீர்த்துவிட்டான்.
“தேவ் எனக்கு பயமா இருக்குடா. அண்ணிக்கு ஊட்டியிலையும் இப்படிதான் தோணுச்சு. அவளுக்கு ஏதாச்சும் ஆகிடுமா? அப்பறம் நான் என்னடா பண்ணுவேன். இல்லை எனக்கு அவ வேணும்டா. அவ இல்லனா நான் உயிரோடவே இருக்கமாட்டேன்” என்றவன் வாய்விட்டு கதறிஅழ, சாய்ந்து அழ கூட துணை இல்லாமல் இருந்தவன் தோழனின் ஸ்பரிசத்தில் தன்னை மறந்து கதறிவிட்டான்.
இதுவரை அவன் அழுது பார்த்ததே இல்லை அல்லவா யாரும். கண்கள் விரிய அத்தனை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தனர் அவனின் குடும்பத்தினர். அங்கு நின்றிருந்த மருத்துவரே செழியனின் காதலில் வியந்துபோனார், முன்பே அவனை நான்கைந்து முறை பார்த்திருக்கிறார் அத்தனை கம்பீரமாய்.
அதிரன் செழியனை இப்படி ஒரு அவதாரத்தில் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அரவிந்தன், அகரன் இருவரும் செழியனை வந்து அணைத்துக்கொள்ள, அவர்களின் அணைப்பில் அழுகை மட்டுபட்டாலும் அவனின் பதட்டம் குறையவே இல்லை.
அன்பரசன் கூட நெகிழ்ந்து போய்விட்டார் மகளின் மீதான செழியனின் காதலில். அவனை அனைவரும் விரைப்பாகவே பார்த்து பழகியதால் அவனின் இந்தபுறம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
வேகமாக கதவை திறந்து கொண்டு ஒரு நர்ஸ் மருத்துவரை அழைக்க மருத்துவரும் வேகமாக ஓடிவர, அனைவரும் பதட்டத்துடன் அறையையே பார்த்திருந்தனர்.
அறையிலிருந்து ஸ்க்ரீன் விலக்கிய நர்ஸ், “சார் நீங்க மட்டும் உள்ள வாங்க அவங்களுக்கு பிட்ஸ் வந்துருச்சு” என்று செழியனை அழைக்க, அடுத்த நொடியே கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய, அறைக்கு வெளியே நின்று விலகிய ஸ்க்ரீனின் வழியே வேதாவை பார்க்க உறைந்துபோய் நின்றனர் அனைவரும்.
செழியன் ஓடிச்சென்று அவளின் தலையோடு சேர்த்து அணைத்துக்கொள்ள, அவனின் இதழ்களோ, “ஒண்ணுமில்ல.. தங்கமே ஒண்ணுமில்ல” என்று முணுமுணுக்க, கண்ணீர் தாரை தாரையாய் வழிய தொடங்கியது.
அவளின் தூக்கி தூக்கி போட, மருத்துவர்களோ கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டுவர, வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்களோ நடுங்கிபோயினர்.
வேதா கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாக, மருத்துவரோ, “நோ ப்ராப்லம் செழியன் சார். தலை ஸ்கேன் பண்ணியாச்சு எந்த ப்ரோப்லமும் இல்லை இப்போதைக்கு. ஆனா அவங்க கண் விழிக்கிற வரைக்கும் காத்து இருக்கலாம். பயப்படற அளவுக்கு எதுவும் இல்லை ஆனால்” என்று மருத்துவர் இழுக்க,
செழியன் அதிர்வாய் அவரையே பார்த்தான்.
செழியனோ “என்ன டாக்டர் சொல்லுங்க எனக்கு பயமா இருக்கு”என்று கேட்க, “ட்ராப் ஸ்கேன் ரிப்போர்ட் வரட்டும் பார்த்துட்டு சொல்றேன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் மறுபடியும் பிட்ஸ் வராம இருக்கனும்” என்றவர் செல்ல, செழியனோ, “டாக்டர் அவங்க எல்லாரும் ஒரு தடவை பார்த்துட்டு போகட்டும்” என்று கேட்டான்.
அவரோ, “ஒரு பைவ் மினிட்ஸ் மட்டும் பார்க்கட்டும். கண் விழிச்சதும் அப்புறம் பாத்துக்கலாம்” என்று கூறியவர், ஒரு நிமிடம் அவன் அருகில் வந்து, “யூ ஆர் தெ பெஸ்ட் ஹஸ்பண்ட். ஐ லைக் யூ யங் மேன்” என்றவர் அவனின் தோளை தட்டில் விட்டு வெளியே இருப்பவர்களிடம் ஐந்து நிமிடம் மட்டும் பார்த்து விட்டு வருமாறு கூறி சென்றார்.
கதவை திறந்து கொண்டு அனைவரும் உள்ளே நுழைய செழியன் அவளின் அருகே அமர்ந்திருந்தவன் நகர, அனைவரும் மௌனமாக அவளை பார்க்க, தலையில் கட்டு மூக்கில் கைகளில் வைர் செருகியிருக்க ட்ரிப்ஸ் இறங்கிகொண்டிருந்தது இடது கையில்.
அன்பரசனுக்கு அழுகை முட்டியது. தாமரை அவளின் முகத்தை தடவியவாறே அழ, அதிரன் செழியன் அருகில் வந்தவன், “ஒண்ணும் ப்ராப்லம் இல்லைதானே செழியன். நார்மலா இருக்கால்லை” என்று கேட்க, அவனோ, “ஹ்ம்ம்” என்று தலையை ஆட்டியவன், “தேவ் வீட்டுல போய் கபோர்டுல இவளோட மெடிக்கல் பைல்ஸ் இருக்கும். அதையும் கொஞ்சம் கேஷ் இருக்கும் அதையும் எடுத்துட்டு வா. வீட்டு சாவி கார்லதான் இருக்கு” என்று கூற, அவன் தலையாட்டி விட்டு வெளியே செல்ல போக கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் அன்பினியன்.
அவனை கண்டதும் அதிரன், தேவ் இருவரும் அவனை கண்டதும் அவன் அருகில் வந்து அவனுக்கு சல்யூட் அடிக்க, அன்பினியன் அவர்களுக்கு தலையாட்டியவன் செழியனிடம் வந்து, “எப்படியிருக்காங்க இப்போ ஓகேவா” என்று கேட்டான்.
செழியனுக்கு சமமான பொசிசனில் வேலை செய்பவன். அவனை விட இருவருடங்கள் மட்டுமே பெரியவன் இருவரும் நல்ல தோழர்கள். செழியன், “இனியா நான் சொன்னது என்னாச்சு” என்று முகத்தை தீவிரமாக மாற்றிக்கொண்டு கேட்க அவனோ, “நீ கெஸ் பண்ணது சரிதான் செழியா. சிசிடிவி செக் பண்ணிட்டு தான் வர்றேன். முதல்ல உன்னைதான் டார்கெட் பண்ணிருக்காங்க, நீ மிஸ் ஆனதும் வேதாவ தூக்கிட்டாங்க” என்று கூறினான்.
குடும்பத்தினர் அவர்கள் பேசிக்கொண்டதை நம்ப முடியாமல் கேட்க, இனியனோ, “அவன் வெறும் அம்பு மட்டும்தான்டா. அந்த ரௌடி இதுல சிக்குனாலும் அமைச்சர், எம்.எல். னு இன்ஃப்ளூயன்ஸ் வச்சு வெளியே வந்துருவான். நான் அந்த டிரைவர தட்டிவிடுறேன். அவன் வேறொரு விசயத்துல சிக்குவான் அப்போ பார்த்துக்குவோம். இப்போ நம்ம ரிவென்ஜ் எடுத்தோம்னா அது வேற மாதிரி ஆகிடும். நீ வேதாவை பாரு. எனக்கு உன்வலி புரியுதுடா. இதே மாதிரி ஒருவலியை நானும் அனுபவிச்சுருக்கேன்” என்று வேதனையுடன் கூறியவன்,
“நீ பாத்துக்கோ, நம்ம இத பத்தி இன்னொரு நாள் பேசுவோம்” என்றவன் வெளியே சென்றுவிட்டான். தேவ் செழியனின் அருகில் வந்தவன், “இது அப்போ அவன் வேலையா மச்சி” என்று கேட்க, செழியன் தலையாட்டி விட்டு சென்று வேதாவின் அருகில் அமர்ந்துவிட்டான்.
செழியனின் கண்கள் குரோதமாக மாற, “நீ அந்த டிரைவரா தூக்கு, நைட்குள்ள அவன் என் கஷ்டடில இருக்கனும். அவனுக்கு இன்னிக்கு என் கையாலதான் சாவு” கழுத்து நரம்புகள் விடைக்க கூற, அதிரனும் தேவ்வும் செழியா என்று கத்தினர்.
செழியன் மிச்சம் வைத்த வன்மத்தின் எச்சம் ஒன்று ஒரு உயிரை காவு வாங்க காத்திருந்தது. அது அவன் உயிர் வரை ஆட்டி விட்டே அடங்கும் என்று அறியாமல் போனான் அவன்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இதுக்கே தாங்கல .. இன்னும் நிறைய பிரச்சனை வருமா .. வேதாவுக்கு வேற ஏதாவது ஹெல்த் பிரச்சனை??
Thanks ma