
அழகியே 21
“ஏய் போலீசு மரியாதையா எங்க தம்பிய விட்டுரு, இல்ல இந்தம்மா சங்கை அறுத்துப்போட்ருவேன்” என்று கூறியவன் மீனாட்சியின் கழுத்தில் கத்தியை வைத்து இருக்க, அதிர்ந்து போனான் அவன்.
அந்த ரவுடி, “என்ன ASP சார் அவளோ பேசுனீங்க. இப்போ அமைதியாயிட்டீங்க? போட்ருவோமா உங்கம்மாவ.. அப்படியே துடிக்குமே.. துடிக்கணுமே.. பெத்த தாயாச்சே யாரு மேல கையை வைக்குற இருக்குற இடம் தெரியாம போயிருவ” என்று அவனை எச்சரிக்க, தாமரையின் குடும்பத்தினர் அறிவழகனை அதிர்ச்சியாக பார்க்க, அதிரனோ கண்கள் விரிய செழியனை பார்த்தான்.
அந்த ரவுடிகள் அவர்கள் இருவரையும் தாக்க தொடங்க, மீனாட்சி அவர்களின் வசம் இருக்க செழியனோ, “ஹேய் அதிரா அவனை சுட்டுறாத” என்று கூறியதில் அனைவரும் அதிரனின் புறம் திரும்ப அந்த சமயத்தை பயன்படுத்தி கொண்டவன் முதுகில் இருந்த துப்பாக்கியை எடுத்து மீனாட்சியின் கழுத்தில் கத்தி வைத்திருந்தவனின் கையில் சுட்டிருக்க, அவனோ துடித்து விழ, அரவிந்தன் ஓடி வந்து அன்னையை அழைத்து சென்றான்.
மிச்சம் இருந்த அனைவரையும் இருவரும் அடிக்க, அந்த ரவுடி அருணோ, “ஏய் என் மேலயே கை வச்சுட்டே இல்ல. உன்னை சும்மா விடமாட்டேன்டா. உன்னையும் உன் குடும்பத்தையும் உருதெரியாம அழிச்சுருவேன். உன்னை என்னை செய்றேன் பாரு” என்றவன் கூறி முடிப்பதற்குள் அவனின் நெஞ்சில் உதைத்து கீழே தள்ளியவன் அவனின் கழுத்தில் கால் வைத்து, “அதுக்கு நீ முதல உயிரோட இருக்கணுமே.. ஏன்டா தரம் கெட்ட தெருபொறுக்கி நாயே.. காதலிக்கலைன்னா கடத்தி சித்ரவதை பண்ணி கொல்லுவியா? அவளோ பெரிய புடுங்கியா நீ? ***மவனே பொண்ண பெத்தவங்களோட வலி தெரியுமாடா உனக்கு? அந்த பொண்ணு அனுபவிச்சதுல கொஞ்சம் கூட அனுபவிக்க வேணாம் நீ” என்றவன் ஷூ காலால் அவனின் கழுத்தில் கால் வைத்து அழுத்தினான்.
அவனோ, “நான் அவளை எவ்ளோ காதலிச்சேன் தெரியுமா? அவ என்னை வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டா, என்ன வேணான்னு சொன்னவ எவனுக்கும் கிடைக்க கூடாது” என்று வன்மத்துடன் கூற, செழியன், “காதல்னா என்னனு தெரியுமாடா உனக்கு. உனக்கு வந்தது காதலா? இது பேரு வன்மம் காதல் இல்ல என்றவன் அவனை எட்டி உதைக்க, அனைவரும் செழியனை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தனர்.
அதே நேரத்தில் போன் அடிக்க எடுத்து பேசிய அதிரனோ, “தேவ் என்ன சொல்ற நீ” என்று கேட்டவனிடம் “அதிரா என்னாச்சு அங்க அவனை பிடுச்சுட்டீங்களா. ஹாஸ்பிட்டல்ல வச்சு அந்த பொண்ணை கொன்னுட்டாங்க. அந்த பொண்ணை பெத்தவங்க துடிக்கிறாங்க. அவனை சும்மா விட்ராதிங்கடா. ரெண்டு பேர் நாங்க தான் பண்ணோம்னு ஸ்டேஷன் வந்துருக்கானுங்க. ஈஸியா ரெண்டு நாளுல வெளியே வந்துருவானுக. முடிச்சுருங்க” என்று கூறியவன் போனை வைத்துவிட்டான்.
அதிரன் செழியன் அருகில் வந்தவன், “சார் அந்த பொண்ண போட்டுட்டாங்க சார். ரெண்டு பேர் சரணடஞ்சுருக்காங்களாம்” என்று கூற, செழியனின் கோவம் எல்லை கடந்தது. “அதிரன் கர்ஷிப் வச்சு அந்த அருவாளை எடு” என்று கூற, அதிரன் தன் பாக்கெடிலிருந்து கைக்குட்டையை வைத்து எடுக்க, “அப்படியே வெட்டு” என்று செழியன் கூற, அவனோ, “சார்” என்று அலறியேவிட்டான்.
அரவிந்தன், “செழியா என்னை சொல்ற நீ” என்று கூற, வேதநாயகி, “அதிரா வேணாம் அப்படி செய்யாதே” என்று கூற,
செழியனோ, “ஒரு நிமிஷம் அந்த பொண்ண நினச்சு பாரு அதிரன். அந்த பொண்ண அவன்கிட்ட இருந்து மீட்கும் போது என்ன சொன்ன நீ. இந்த பொண்ண பாக்கும் போது என்ன தங்கச்சி மாதிரி இருக்குனு அழுதியே. உண்மையாவே நீ அந்த பொண்ண உன் தங்கையா நினைச்சது உண்மைனா நான் சொல்றத மறுப்பேச்சு கேட்காம செய். இனிமேல் யார இருந்தாலும் தப்பு செய்ய யோசிக்கணும். கண்ணு முன்னாடி அந்த பொண்ண கொண்டு வந்து நிறுத்து” என்று கூற, அதிரன் கண்ணை மூட வேதாவும் அந்த பெண்ணும் கண்முன் மாறி மாறி வந்து போக அருவாளை கையில் எடுத்தவன் கண்களை மூட, அதிரன் அரிவாளை அருனின் அருகில் கொண்டு செல்ல, செழியன் அருணை தரையில் தள்ளி அவன் கை படுமாறு வைக்க, அதிரன் பலமாய் குறி வைத்திருக்க, செழியனே எதிர்பார்க்கவில்லை. ஒருநொடிதான் செழியன் அனைத்தையும் மாற்றி இருந்தான்.
செழியனின் தோளுக்கு கீழே முழங்கையிக்கு மேல் வெட்டு விழுந்திருந்தது. ரத்தம் ஆறாய் கொட்ட, அனைவரும் செழியா என்று அதிர்ந்து போய் கத்த, அனைவரும் செழியன் வெட்ட சொன்னது அருணை என்று தன் நினைத்திருந்தனர். அனைவரும் அருகில் வர, செழியன் கைநீட்டி தடுத்திருந்தான்.
அதிரனோ, “என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க” என்றவன் தாமரை தோளில் போட்டிருந்த துண்டை ஓடிச்சென்று எடுத்து வந்தவன் கையை சுற்றி கட்ட, செழியனோ வலியை கஷ்டப்பட்டு பொறுத்து கொண்டவனோ அருணிடம், “நீ அந்த பொண்ண ரொம்ப காதலிச்சன்னு சொன்ன இல்லை. நான் உங்களை சேர்த்து வைக்குறேன், சந்தோசமா இரு சொர்க்கத்துல” என்றவன் அதிரனிடம், “உன் கன்ன எடுத்து இவன சுடு அதிரா” என்று கூறினான்.
அவனோ அதிர்ந்து போய் அவனை பார்த்தவனுக்கு செழியனின் கணக்கு புரிந்து போக, கை நடுங்க தன் துப்பாக்கியை எடுத்தவன் செழியனை பார்க்க, “அவனோ சுடு” என்று கூற, அதிரன் அனைவரையும் திரும்பி பார்க்க அவர்களுமே அவனை அதிர்ச்சியாக பார்க்க செழியனோ, “ப்ளீஸ் அதிரன் என்னால முடியல. ஷூட் பண்ணு. எனக்கு மயக்கம் வருது நான் ரொம்ப கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன்” என்று கூற அவனின் வெள்ளை டி ஷர்ட் சிவப்பாகி இருக்க, அதிரனோ அருணை குறி வைத்து சுட, இரண்டாவது புல்லட்டில் உயிர் துறந்திருந்தான்.
அதேநேரம் தேவ் சரியாய் அங்கு வந்து சேர, அவனுடன் சில அதிகாரிகளும் அந்த ரௌடியின் தந்தையும் வந்திருந்தனர். தேவ் ஓடிவந்தவன் செழியா என்று அவன் அருகில் வர, அவனோ அனைவரிடமும், “அவன் என்னை வெட்டிட்டான். அதிரன் என்னை காப்பாத்துரத்துக்காக அவனை ஷூட் பண்ணிட்டாரு” என்று கூறியவன், மயக்கமாகி தேவின் மேல் சரிந்தான்.
அதிரனும் தேவும் மயங்கிய செழியனை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அதிரன் செழியன் கூறிய விஷயத்தை அப்படியே பிடித்து கொண்டவன், “நாங்க அவன் இங்க இருக்கறது தெரிஞ்சு அர்ரெஸ்ட் பண்ண வந்தோம் சார். எதிர்பாராத நேரத்துல செழியன் சாரை அவங்க வெட்டவும், அவர காப்பாத்துறதுக்காக நான்தான் ஷூட் பண்ணேன்” என்று அதிரன் ஒப்புக்கொள்ள, அந்த ரௌடியோ செழியனை அறிந்தவனாயிற்றே ‘உன்னை விடமாட்டேன்டா துடிக்க வைக்குறேன்’ என்று நினைத்தவன் அமைதியாக செல்வதை போல் சென்றுவிட்டவனின் மனம் வஞ்சத்தில் தவித்து கொண்டிருந்தது.
அதிரனின் மேலதிகாரிகளோ அதிரனின் வேலையை பாராட்டிவிட்டு சென்றனர். அவர்களுமே இந்த கேசில் அருணின் மேல் கடும் கோவத்தில் இருக்க, தற்காப்புக்காக செய்தது என்று கூறி கேஸை முடித்தனர். குடும்பத்தினரரை செழியனை ஆம்புலன்சில் ஏறியதுமே அதிரன் அவர்களை அனுப்பி விட, அவர்களோ அதிர்ச்சியிலே வீடு வந்து சேர்ந்தனர்.
அவர்கள் அனைவரும் தாமரையின் வீட்டுக்கு தான் வந்திருந்தனர். செழியனுக்கு என்னவானதோ என்று தவித்து கொண்டிருந்தனர். அரவிந்தன் அப்போதே சென்றிருக்க, அதிரன்தான் மற்றவர்களை வீட்டிலேயே இருக்க சொன்னான்.
மீனாட்சி வேறு மகனை பார்க்க வேண்டும் அழ தொடங்க, வேதநாயகி பாட்டியும் அழுது கொண்டிருந்தார். மற்றவர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். இதேயெல்லாம் படத்தில் மட்டுமே பார்த்தவர்கள் நேரில் அதுவும் தங்களின் மகன்களே அவர்களின் அவதாரத்தில் அதிர்ந்து போயினர்.
அதேசமயம் அதிரன் வீட்டுக்கு வர, தாமரை சென்று நீர் எடுத்து வந்து தர, அதை வாங்கி குடித்தவன் அனைவரையும் பார்க்க மீனாட்சி, “என்ன பையன் எப்படி இருக்கான் அதிரா.. நீ ஏன் அவன வெட்டுன” என்று கோவமாக கேட்டார்.
அவனோ, “சாரி அத்தை செழியன் சார் அப்படி பண்ணுவார்னு நானே எதிர்பார்க்கல. இன்னிக்கு நான் எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன்” என்று கூற, ஆதியோ, “பீல் பண்ணாதடா” என்று கூற, “நல்ல மனுஷன்டா அந்த நாய்க்காக, அவனை வெட்டுறோம்னு போர்ஷா வெட்டிட்டேன். ச்சை” என்று தலையில் அடித்துக்கொண்டவன், “உங்க எல்லார்கிட்டயும் ஒரு விஷயம் சொல்றேன். அங்க நடந்த விஷயம் எக்காரணத்தை கொண்டும் வெளியே போகக்கூடாது. அங்க பார்த்ததை இதோட விட்டுருங்க” என்று கூற அனைவரும் தலையாட்ட, அனைவரும் ஹாஸ்பிடளுக்கு செல்ல அகரனோ செழியன் கல்லூரி படிக்கும்போதே திருமணம் செய்து கொண்டதால் வீட்டை விட்டு சென்று விட்டதாக கூறினான்.
தாமரையோ, “எவ்ளோ தைரியம் வேணும் இப்படி செய்றதுக்கு, நல்ல புள்ள, நீங்க கொஞ்சம் யோசிச்சுருக்கலாம் அண்ணே” கூற, ஆதி, “அம்மா நல்ல பிள்ளையா? என்ன பேசுறீங்க.. அவன் அதிய விட கண்டிப்பா சின்ன பையன் தான். வயசுக்கு மரியாதை இல்லாம இவன எவ்ளோ கேவலமா பேசுனான்” என்று அவனுக்கு திட்ட, அதிரனோ,
“வாய மூடு ஆதி, அங்க என்ன நடந்துச்சு பார்த்தே இல்லை. உங்க சேப்டிகாகதான் அவர் என்னை திட்டுனார். என்னை விட மூணு வயசு சின்னவன்தான். எவ்ளோ திறமைசாலி தெரியுமா.. அவளோ கஷ்டப்பட்டு அந்த இடத்துக்கு வந்துருக்கான். அந்த பதவிக்காக மட்டுமில்ல அவர் குணத்துக்காகவும் மரியாதை தரேன். நான் வேலைக்கு சேர்ந்த ஆறு மாசத்துல அங்க பார்த்த நேர்மையான மனுசன்ல அவரும் ஒருத்தர். இனிமேல் இப்படி மரியாதை இல்லாம பேசுனா நான் டென்ஷன் ஆகிடுவேன் அமைதியா இரு” என்று கூற, அவனும் அமைதியாகிவிட்டான்.
அதற்குள் மருத்துவமனை வந்துவிட அதிரனுக்கு அவனின் அறை தெரியும் இங்கு வந்துவிட்டுதான் வீட்டுக்கே சென்றான். அவர்கள் அறைக்குள் நுழைய போக உள்ளிருந்து குரல் கேட்க லாவண்யாவோ, “அது அவன் வைஃப் உள்ள இருக்கா நாம வெயிட் பண்ணுவோம்” என்று கூற, அனைவரும் அங்கிருந்த சேரில் அமர, உள்ளிருந்து வேதாவின் அழுகுரல் கேட்டது.
செழியன், “இப்போ எதுக்கு தங்கமே அழற. எனக்கு ஒன்னும் இல்லை. நான் நல்லா தான் இருக்கேன்” என்று கூற, அவளோ, “இவ்ளோ ரத்தம் போயிருக்கு. எப்படி வலிக்கும். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றவளால் மேற்கொண்டு பேச முடியாமல் போக, அவனோ, “இங்க பாரு தங்கமே… நிஜமா எனக்கு வலிக்கல. நீ அழுவுறது தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ப்ளீஸ்டா” என்று கூற, “இப்போ நான் அழ கூட கூடாதா? எனக்கும் தான் வலிக்குது” என்று கூற, அவர்கள் பேசிக்கொள்வது வெளியே நன்றாக கேட்டது.
அதிரன், ஆதி, தாமரை மூவரும் பேரதிர்ச்சியில் இருந்தனர் உள்ளிருந்து கேட்ட குரலில். தேவ், “விடுடா அவளுக்கும் கஷ்டமா இருக்கும் இல்ல” என்றவனுக்கும் அழுகை வர, அவனோ, “நீ ஏன்டா அழற” என்று கேட்க, வேதாவோ, “இப்போ என்ன பிரச்னை உங்களுக்கு? எதுக்கு அழற, எதுக்கு அழறன்னு சும்மா சவுண்ட் விடுறீங்க? உங்களுக்கு ஏதாச்சும் ஆயிடுச்சுன்னா நாங்க என்ன பண்ணுவோம்” என்றவள் கோபத்தில் தொடங்கி அழுகையில் முடிக்க, கதவு திறக்கும் சத்தம் கேட்டு செழியனும் வேதாவும் திரும்ப மொத்த குடும்பமும் நின்றிருந்தனர்.
அதிரன், ஆதி, தாமரை இன்ப அதிர்ச்சியில் நிற்க அவர்களை கண்ட வேதாவின் முகமோ இறுகி போய் இருந்தது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அடடா பார்த்துட்டங்களா … சூப்பர் … சூப்பரா இருந்தது ஆக்ஷன் சீன் … இப்போ அண்ணன் மேல கோபப்பட போகுதோ வேதா …
பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் அதட்டி அதிகாரம் செய்தால் தான் காரியம் கச்சிதமாக நடக்கும்.
அதுவும் இது போன்றதொரு அபாயமான நேரத்தினில் முன்பே கூறியிருந்தும் கூட மெத்தனமாக செயல்பட்டால் யாராயிருந்தாலும் கோபம் வருவது இயல்பே.
ஆதி எதற்காக இந்த விசயத்தை வைத்து செழியனை தவறாக மதிப்பிடுகின்றான்.
சாமர்த்தியமாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டான் செழியன்.
வேதா அவள் குடும்பத்தினர் மீது இன்னமும் அதிருப்தியில் தான் உள்ளாள் போல. முன்பே அறிந்திருப்பாளோ அவர்கள் இருப்பிடத்தை?