
அத்தியாயம் 2
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து நேராக அவனின் வீட்டுக்கு செல்லலாம் என்று நினைத்தவனோ அவளின் உடல்நிலை கருதி இன்று ஓய்வெடுத்து விட்டு நாளை அழைத்து செல்லலாம் என்று தான் தங்கியிருந்த ரிசார்ட்டுக்கு அழைத்து வந்திருந்தான்.
அவள் மிகவும் சோர்ந்து போய் இருக்க, அவனே அவளுக்கு உணவளித்து அவளை தட்டிக்கொடுத்து உறங்க வைத்துவிட்டு, அறையில் இருந்த சோபாவில் உறங்க ஆரம்பித்தான்.
நடு இரவில் பயத்தில், “ஆஹ் அம்மா பயமாயிருக்கு.. ம்மா ஆ” என்று கத்தும் சத்தம் கேட்டு,நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தவன் அவளின் சத்தத்தில் எழுந்து விளக்கை போட, அவளோ வியர்த்து வடிய கண்களில் நீருடன் அழுது கொண்டிருந்தாள்.
அதிர்ந்து போய் அவளருகே வந்தவனோ அவளை தோளில் சாய்த்துக்கொண்டு, “ஒண்ணுமில்ல தங்கமே.. பயப்படக்கூடாது. நான் பக்கத்துல தான் இருக்கேன், ஒண்ணுமில்ல” என்று அவளை தட்டி கொடுக்க, அவளறியாமலே அவன் மீது சாய்ந்து கண்களை மூடிக்கொள்ள, அவனோ அவளின் தலையை வருடிக்கொண்டே இருந்தான்.
அவனுக்கே புரியவில்லை தான் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்று, கொஞ்சம் முயற்சி செய்தால் அவனே அவளின் அடையாளத்தை கண்டறிந்து அவளை உரிய இடம் சேர்ப்பிக்க முடியும்.
அவள் தன்மனைவி என்று கூறிவிட்டவனுக்கு அதை மாற்றிக்கொள்ள முடியவில்லை. அவன் அறியாமலே அவளின் மீது ஒருவித உரிமை உணர்வு. தன்னுடனே வைத்துக்கொள்ள வேண்டும் என்று.இந்த வயதில் இது தவறென்று புரிந்தாலும் அவன் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது.
தன் குடும்பத்தை வேறு சமாளிக்க வேண்டும். அவனுக்கே இப்போதுதான் இருபது வயது. தன்னால் சமாளிக்க முடியுமா என்று அனைத்தையும் யோசித்தவன், இறுதியாய் அவள்தான் தன்னவள் என்று முடிவெடுத்தவனாய் அவளின் நெற்றிமீது இதழ் பதித்து, அவளை தன் கைக்குள்ளேயே வைத்தப்படியே உறங்க ஆரம்பித்து இருந்தான்.
மறுநாள் காலை விடியலிலே அவளை கிளம்ப வைத்து, தானும் கிளம்பியிருந்தான் அவர்களின் வீடு நோக்கி.
ஊட்டியில் இருந்து அவன் வீடு செல்லவே 8 மணிநேரத்திற்கு மேலாகும். இதில் அவளே முடியாதவள் ஒரேடியாய் அவ்வளவு தூரம் உட்கார்ந்து வரவும் முடியாது. அவளுக்கு தேவையானதையும் கவனித்து மெதுவாய் அவன் வந்து சேர, மாலை மணி நான்காகி இருந்தது.
வீட்டிற்கு அருகில் வந்ததும் அவளை திரும்பி பார்க்க, அவளோ மாத்திரை போட்டதாலும் நெடுநேர பயணத்தாலும் உறங்கி கொண்டு இருந்தாள்.
அவன் எதற்காகவும் பயப்படாதவன்தான். இருந்தாலும் தற்போது அவன் செய்திருப்பது சாதாரணமான காரியம் அல்லவே. அவனுக்கே சிறிது பதட்டமாகத்தான் இருந்தது.
பார்த்துக்கொள்வோம் என்று ஒரு நம்பிக்கையில் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியவனோ, அவளை பார்க்க அவள் அப்போதும் உறக்கத்திலே இருக்க, அவன் மட்டும் முதலில் உள்ளே சென்றான்.
அவன் வீட்டுக்குள் நுழையும் போதே நாளை காலை திருமணம் என்பதால், அனைவரும் பரபரப்பாக மண்டபத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டு இருந்தனர்.
முதலில் அவன் உள்ளே நுழைந்ததும் கண்டதென்னவோ பதட்டமாக இருந்த அவனின் அன்னையைதான். அதே நேரம் சரியாக அவனை பார்த்து விட்டவரோ, “செழியா எங்க போன நீ. உன் போன் என்ன ஆச்சு? ரெண்டு நாளைக்கு முன்னாடியே வரேன்னு சொன்னவன் எங்க போயிருந்த நீ? உன் கூட வந்தவனுங்கெல்லாம் மூணு நாளைக்கு முன்னாடி இருந்து இங்கதான் இருக்கானுங்க. அவனுகளை கேட்ட வந்துருவான்னு சொல்றாங்க. வேற ஒன்னும் சொல்ல மாட்டிக்கிறாங்க. மென்னு மென்னு முழுங்குறானுங்க ரொம்ப பயந்து போய்ட்டேன் தெரியுமா? எங்க போன நீ” என்று மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க, அவனருகில் வந்த தந்தையோ, “என்னாச்சு ஏன்பா இவ்ளோ டல்லா இருக்க? நல்லா இருக்க தானே?” என்று கேட்டார்.
சட்டையை மடித்து விட்டவாரே மாடியில் இருந்து வந்த அரவிந்தோ, “நீங்க இப்படி கேள்வி கேட்டுட்டே இருந்தா அவன் எப்படி பதில் சொல்லுவான்? டையார்டா இருப்பான்,கொஞ்ச நேரம் விடுங்களேன், வந்தும் வராததும் இப்படியே கேள்வி மேல கேள்வி கேட்டா அவன் என்ன சொல்ல முடியும்” என்றவனோ அவனின் தலையை வருடியவாறே, “போய் குளிச்சிட்டு கொஞ்ச நேரம் தூங்கு செழியா. கிளம்பும் போது வந்து எழுப்புறேன்” என்று கூறினான்.
அரவிந்த் செழியனை விட ஏழு வருடம் பெரியவன். தகப்பனுக்கு இணையான பாசத்தை காட்டுபவன். அவனுக்கு மற்ற இருவரையும் விட தீர்க்கமாக யோசித்து சுயமாய் முடிவெடுக்கும் இவனையே மிகவும் பிடிக்கும்.
அவன் அருகில் நின்றிருந்த எழிலன், “டேய் என்ன எல்லாரும் மாத்தி பேசுறாங்க கேள்வி கேக்குறாங்க நீ எதுவும் பேசாம அமைதியாவே நிக்குற, என்னடா ஆச்சு? உடம்பு நல்லாருக்குல்ல? பிவேர் ஆஹ்” என்றவாறே நெற்றியில் கைவைத்து பார்த்தவன், “இல்லையே நார்மலா தான் இருக்கு” என்று கூற, செழியனோ அமைதியாக அனைவரையும் ஒரு முறை பார்த்தவனோ, “பாட்டியும் அர்ச்சனாவும் எங்க?” என்று கேட்டான்.
எழிலன், “அவங்க ரெண்டு பேரும் உள்ள அண்ணிக்கு தரவேண்டிய நகை, டிரஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டு இருக்காங்க, உனக்கென்ன ஆச்சு செழியா உன் கிட்ட ஏதோ ஒரு மாற்றம் இருக்கு என்னடா சொல்லு” என்று அவனை ஆராய்ச்சியாக பார்த்தான்.
செழியன், “அகரா நீ போய் அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வா” என்று கூற, அவனோ, “எதுக்குடா? என்னனு சொல்லு ” என்று கேட்டவனிடம், “நீ போய் கூட்டிட்டு வா நான் சொல்றேன்” என்றவனை, “பிடிவாதக்காரன்” என்று திட்டியவாறே சென்றவன் இருவரையும் அழைத்து வந்தான்.
அர்ச்சனாவோ, “அண்ணா” என்று வந்து அவனை அணைத்து கொண்டாள்.
வேதநாயகி, “செழியா நீ எப்போ வந்த.. உங்கம்மா தான் நீ போன் எடுக்கவும் மாட்டிக்கிற. எங்க போனயோன்னு பயந்துட்டா,உனக்கு ஒண்ணும் இல்லையே கண்ணா நல்லாருக்க தானே” என்று அவன் முகம் பிடித்து கேட்டவரை பார்த்தவனுக்கு ஒவ்வொரு நிமிடமும் பதற்றமும் பயமும் போட்டி போட்டுகொண்டு வந்தது.
அவனோ தன் அருகில் நின்றிருந்த, அரவிந்தை அணைத்து கொண்டவன், “சாரி அண்ணா,வேணும்னு ன எதுவும் செய்யல” என்று கூறி அவனை விட்டு விலக, அனைவருக்குமே அவனின் நடவடிக்கை புதிதாய் இருந்தது.
அரவிந்தன், “என்னடா எதுக்கு சாரி? லேட்டா வந்ததுக்குதானே. விடு நீ போய் ரெஸ்ட் எடு” என்று கூற, “நான் கொஞ்சம் பேசணும். இடைல யாரும் கேள்வி கேக்காதீங்க?” என்றவனோ, விபத்து நடந்ததில் இருந்து தற்போது வரை அனைத்தையும் கூற, அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றிருந்தனர்.
வேகமாக வெளியே சென்றவனோ உறக்கத்தில் இருந்தவளை, எழுப்பி கைத்தாங்கலாய் உள்ளே அழைத்து வந்தான்.
அறிவழகன், “செழியா நீ என்ன காரியம் பண்ணிருக்கேனு உனக்கு தெரியுதா?” என்று கேட்க, மீனாட்சி செழியனின் கைவளைவில் அவனின் மீது சாய்ந்து அரை மயக்கத்தில் தலையை சுற்றி கட்டு கட்டியிருக்க, கையிலும் பேண்டஜ் போட்டிருக்க கலைந்த ஓவியமாய் நின்றிருந்தவளை பார்த்து முகத்தை சுழித்து அருவருப்பை அப்பட்டமாக காட்டினார்.
அகரனும் அரவிந்தனும் செழியனையும் அவளையுமே அதிர்ச்சியாக பார்த்திருந்தனர்.அவர்களுக்கு ஒன்று புரியாத நிலை. அவர்களை பொறுத்தவரை அவன் ஒரு சிறுபிள்ளை.
அறிவழகன், “சரி விடு, நீ பண்ண ஆக்சிடெண்ட்க்கு இந்த பொண்ண காப்பாத்தி விட்டாச்சுல்ல, இங்க பக்கத்துல எனக்கு தெரிஞ்ச ஒரு இடம் இருக்கு அங்க விட்ரலாம். நல்லா பாத்துக்குவாங்க” என்றவர் போனை எடுத்தார்.
செழியன், “அப்பா என்ன பண்றீங்க? முதல்ல கால் கட் பண்ணுங்க. நான் உங்ககிட்ட என்ன நடந்துச்சுனு தெளிவா சொல்லிருக்கேன். இவளை எனக்கு பிடிச்சுருக்கு. என்கூடதான் இருக்கப்போறா, அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்குறேன். தெளிவா நான் உங்ககிட்ட சொல்லிட்டேன் என்னோட முடிவ” என்று கூறியவன் அவரை பார்க்க, “நான் பேசறது உனக்கு புரியுதா இல்லையா செழியா? உனக்கு என்னடா வயசு. இன்னும் இருபது கூட முடியல. அதுக்கு மேல நாளைக்கு உங்கண்ணன் கல்யாணம். இப்போ நீ இப்படி வந்து நிக்குற. இந்த விஷயம் உங்கத்தை வீட்டுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியுமா? நாளைக்கு நான் இந்த சொசைட்டில தல நிமிர்ந்து நடக்க வேணாமா? நிலைமையை புரிஞ்சுக்கோ செழியா.. இந்த பொண்ண கொண்டு போய் எங்காச்சும் விட்ரலாம்” என்று கூறினார்.
செழியன், “போதும்ப்பா இதுதான் என்னோட டெசிசன். நான் சொல்லியாச்சு. அவ்ளோதான். நீங்க கண்டதையும் பேசாதீங்க?” என்றான்.
மீனாட்சியோ வேகமாக, அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அவனின் கைவளைவில் நின்றிருந்தவளை பிடித்து இழுத்தவர், “என்னடி பொண்டாட்டி மாறி ஒட்டிக்கிட்டு நிக்குற, பிச்சைக்காரிக்கு என் பையன் கேக்குதா” என்றவர், செழியன் வாங்கி அடியில் சுதாரிக்கும் முன்பே, அவளை பிடித்து இழுத்து தள்ளியிருக்க, நெற்றி கதவின் முனையில் இடிக்க தலையில் போடப்பட்டு இருந்த கட்டில் இருந்து ரத்தம் கசிந்தது.
செழியன் ஆக்ரோசமாக, “ம்மா என்ன பண்றீங்க தள்ளிபோங்க” என்று அவரை அந்த பக்கம் இழுத்துவிட்டு, அவன் அவளின் அருகில் செல்ல, மீனாட்சி தடுமாற, அரவிந்த் அவரை தாங்கி பிடித்தான்.
ஏற்கனவே அரை மயக்கத்தில் இருந்தவள் அவர் தள்ளி விட்டதில் முழுதாய் மயங்கியிருக்க, கீழே விழுந்தவளை தாங்கி தன் மேல் சாய்த்தவனோ, “ஹேய் வேதா.. இங்க பாரு வேதா” என்று அவளின் கன்னம் தட்ட, அகரன் ஓடிச்சென்று நீரை எடுத்து வந்து அவளுக்கு தெளிக்க கண்களை முழித்தவளோ மீனாட்சியை கண்டு பயந்து செழியனை இறுக்க அணைத்து கொண்டாள்.
அவளை எழுப்பி கைபிடித்து நிற்க வைத்தவனோ, “என்னமா பண்றீங்க நீங்க? அவளுக்கே உடம்பு சரியில்ல, எல்லாம் மறந்து, தான் யாருன்னே தெரியாம இருக்கா.. அப்படி பிடிச்சு தள்ளி விடுறிங்க? என்ன அடிக்க மட்டும்தான் உங்களுக்கு உரிமை இருக்கு. இதான் கடைசியா இருக்கனும் நீங்க அவளை இப்படி கேவலமா பேசறதும் கை நீட்டுறதும்” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.
அவரோ, “ஏன்டா யாருன்னே தெரியாத ஒருத்திக்காக உன் அம்மாவையே இவ்ளோ கேவலமா பேசுவயா செழியா?” என்று அதிர்ந்து போய் கேட்டார்.
அறிவழகன், “கடைசியா என்ன சொல்ல வர்ற செழியா? இந்த பொண்ண கொண்டு போய் ஆசிரமத்துல விட்டுட்டு வந்துருலாம். இப்போவாச்சும் என்னோட பேச்சை கேளு” என்று கூறிய தந்தைக்கு மறுப்பு தெரிவித்தவன், “நோ டாட்.. இவளை ஹாஸ்பிடல சேர்க்கும்போது என்னோட வைஃப்ன்னு சொல்லி சைன் பண்ணிருக்கேன். ஆக்சிடேன்ட்ல எல்லாமே மறந்து குழந்தை மாதிரி இருக்க இவளை என்னால கைவிட முடியாது டாட்” என்றான்.
“இதோட சீரியஸ் உனக்கு புரியல செழியன், நீ பண்ணிட்டு இருக்கறது உன்னை எங்க கொண்டு பொய் விட போகுதுனு தெரியல கொஞ்சமாச்சும் புரிஞ்சு நடந்துக்கோ,எங்களை விட உனக்கு இந்த பைத்தியம் முக்கியமா போயிருச்சா?” என்று கேட்க, “இதான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங், இதுக்கு மேல நீங்க இவளை பைத்தியம்னு சொன்னிங்கன்னா அவ்ளோதான்” என்று விரல் நீட்டி எச்சரித்தவனை ஏளனமாக பார்த்தவர்,
“பைத்தியத்தை பைத்தியம்னுதான் சொல்ல முடியும், இத கொண்டு போய் எங்காச்சும் விட்டுட்டு வர மாதிரி இருந்தா வீட்டுக்குள்ள வா.. இல்லனா அப்டியே அவளோடயே போயிரு” என்றவர் கூறிய மறுநிமிடம் அவளின் கைப்பற்றியவன் அவளை அழைத்து கொண்டு அங்கிருந்து வெளியேறி இருந்தான்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


செய்த தவறிற்கு பிராயச்சித்தம் தேட நினைக்கின்றான் அவள் மீது ஒரு ஈர்ப்பும் கூட.
20வயது சிறு பையன் உனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறுகிறார்கள் ஆனால் அவனுக்கு இருக்கும் பொறுப்புணர்வு கூட மற்றவர்களுக்கு இல்லையே.
செழியன் எதையும் மறைக்காமல் கூறிய பிறகு அந்த பெண்ணை சரி ஆகும் வரையினில் பாதுகாப்பாக வைத்து கொள்வதுதானே சரி. அந்த பெண்ணின் மீதான அவனது உரிமையுணர்வை குறைத்துக்கொள்ள சொல்ல மட்டுமே அவர்களுக்கு உரிமை உள்ளது. அதிலும் அவர்கள் பையன் தான் விபத்திற்கே காரணம் எனும் போது, தான் யார் என்றே தெரியாமல் இருக்கும் பெண்ணிடம் இவ்வாறு நடந்து கொள்வதும் அவளை ஏசுவதும் என்ன சொல்ல! 😕