Loading

அழகியே 18

 

 

 

அரவிந்த் வீட்டுக்கு வர, அனைவரும் ஹாலில் இருந்தனர். மகன் கீழே அமர்ந்து விளையாண்டு கொண்டிருக்க, அவனின் அருகில் வந்து அமர்ந்தவன், “அர்னவ் குட்டி இங்க பாருங்க.. சித்தி உனக்காக ட்ரெஸ் டிசைன் பண்ணிருக்காங்க போட்டு பாக்கலாமா” என்றவன் மனைவியை அழைக்க அவளோ, “வேதா டிசைன் பண்ணதா அழகா இருக்கு” என்றவள் உடையை குழந்தைக்கு போட்டு விட, குழந்தையோ, “ரொம்ப நல்லாக்கு பா” என்றான்.

 

லாவண்யாவோ, “அப்போ சித்திக்கு தேங்க் யூ சொல்லிடலாமா” என்று கேட்க,அப்போது தான் உள்ளே வந்த அகரன், “ஹேய் ட்ரெஸ் அழகா இருக்கு. பிரின்ஸ் மாறி இருக்கீங்க என் செல்ல குட்டி” என்று அவனுக்கு முத்தமிட்டு அவர்களுடன் தரையில் அமர, லாவண்யா வேதாவிற்கு போன் செய்ய எடுத்ததென்னவோ செழியன்தான்.

 

“ஹெலோ அண்ணி சொல்லுங்க நல்லாருக்கீங்களா? அர்னவ் குட்டி எப்படி இருக்கான்” என்று கேட்க, “நல்லாருக்கான் செழியா. நீ எப்படி இருக்க” என்று கேட்டாள்.

 

 

அர்னவ் பிறந்த போது வந்து பார்த்தவன், மூன்று வருடங்கள் ஆயிற்று, அனைவரும் அவனை கண்டு. அவ்வப்போது அரவிந்த், லாவண்யா பேசும்போது நலம் தெரிந்து கொள்வார்கள்.

 

மகனின் குரலை கேட்டதும் அறிவழகனுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது. அகரனுக்கும் அப்படிதான். மீனாட்சி எந்த உணர்வையும் காட்டாமல் இருக்க வேத நாயகி அமைதியாக இருந்தார். அர்ச்சனா ஏற்கனவே அர்ணவுடன்தான் விளையாடி கொண்டிருக்க அண்ணனின் குரல் கேட்க, அமைதியாக அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்தாள்.

 

 

“நல்லா இருக்கேன் அண்ணி. இருங்க வேதாகிட்ட தரேன்” என்றவன் “தங்கமே போன் உனக்கு தான் அண்ணி பேசுறாங்க வந்து பேசு.இங்க வைக்குறேன் எனக்கு ஒரு ஆபீஸ் கால் பேசிட்டு வரேன் நீ எடுத்து பேசு” என்றவன் லாவண்யாவிடம் கூறிவிட்டு போனை வைத்துவிட்டு சென்றுவிட்டான். அர்னவ் பேசுவதால் ஸ்பீக்கரில் இருக்க, அவன் பேசியது அனைத்துமே தெளிவாய் கேட்டது.

 

 

“ஹான் இதோ வரேன் மாமா” என்றவள், ஒரு நிமிடம் கழித்து, “ஹெலோ அரு குட்டி என்ன பண்றீங்க? மம்மு சாப்டாச்சா தங்கபிள்ள” என்று குரல் கேட்க, அவனோ, “தித்தி.. தேங்க் யூ திரஸ்.. அழகா இருக்கு. பிச்சுருக்கு” என்று மழலை மொழியில் கூறினான்.

 

 

அவளோ, “ஓ தேங்க்ஸ்டி செல்லமே. சித்திக்கு தேங்க் யூ சொல்ற அளவுக்கு பிக் பாய் ஆயிட்டாங்களா என் தங்கக்கட்டி. இனிமேல் அருக்குட்டி போடற எல்லா ட்ரெஸும் சித்திதான் செஞ்சு தரப் போறேன் அழகு பையனுக்கு பிடிச்ச மாதிரி. அதுக்கு தங்ககுட்டி நாளைக்கு சித்திய பாக்க வரும்போது போர் கிசஸ் குடுக்கணும் டீல் ஓகேவா” என்று கேட்க, அவனோ அப்போதே போனை பிடிங்கியவன் முத்தம் தர, ”அவளோ தேங்க் யூ செல்ல குட்டி. இப்போதைக்கு இது போதும்” என்று கூறி சிரிக்க, லாவண்யாவோ, “பாப்பு ட்ரெஸ் கியூட்டா இருக்குடா” என்று கூறினாள்.

 

 

“தேங்க்ஸ் கா.. உங்க ட்ரெஸ் எப்படி இருந்துச்சு சொல்லவே இல்ல. பிடிக்கலையா” என்று கூற, அரவிந்தோ, “சாரி லாவி மறந்துட்டேன்” என்றவாறே ஒரு பையை எடுத்து தர, அதிலிருந்தா சாரீயை எடுத்து பார்த்தவள் அசந்து போனாள். அத்தனை அழகாய் இருந்தது. மீனாட்சியுமே வாயை பிளந்து கொண்டு பார்த்தார். அர்ச்சனாவுக்கு கண்ணை எடுக்கவே முடியவில்லை அந்த புடவையில் இருந்து. அத்தனை அழகாய் வேலைப்பாடுகள் செய்யப்படிருந்தது அந்த புடவையில்.

 

 

“நிஜமாவே நீதான் டிசைன் பண்ணியா பாப்பு அழகா இருக்கு. தேங்க் யூ சோ மச் டா” என்றாள். “அக்கா நான் டிசைனர் நியாபகம் இருக்குல்ல. இவ்ளோ டவுட் ஆஹ் கேக்குறீங்க” என்று சிணுங்க, அரவிந்தோ, “அதான் டவுட்டே” என்று கூற,

 

 

அவளோ, “அவளோ டவுட் இருந்தா தேவ் அண்ணாக்கு கால் பண்ணி கேளுங்க காபீ எப்படி இருந்துச்சுன்னு. நாளைக்கு வீட்டுக்கு வரும்போது யூஸ் ஆகும்” என்று கூற, அவனோ, “தெய்வமே இன்னும் பத்து நாளைக்கு உன் வீட்டு பக்கமே வரமாட்டேன். போன் வச்சிடுறேன்” என்றவன் வேகமாக காலை கட் செய்து நெஞ்சில் கைவைத்து பெருமூச்சு விட, லாவண்யா, “என்ன ஆச்சு” என்று கேட்டாள்.

 

 

காலை நடந்ததை வேதா காபி கொடுத்த வரை அரவிந்த் கூறி முடிக்க, அப்புறம் ஒரு கேள்வி கேட்டா பாரு தேவ்கிட்ட என்றவனால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

 

 

லாவண்யா, “சொல்லிட்டு சிரிங்க மாமா” என்று கூற, “உப்புல காபி கொஞ்சம் கம்மியா இருக்கா அண்ணா. இன்னும் கொஞ்சம் போடவான்னு” என்றவன் சிரிக்க, “அதுவாச்சும் பரவால்ல.. மூவில முன்னாடியே வந்துருக்கு. தேவ் வேற இந்த உப்பு காபீக்கு விஷமே நல்லாருந்துருக்கும்னு வேற சொன்னான் பாரு. அடுத்த செகண்ட் கிட்சேன்ல இருந்து மாஸ் ரிப்ளை, அதுவும் இருக்கு கலந்து தரேன் டேஸ்ட் பாக்கறியான்னு தேவ் அரண்டு போய்ட்டான்” என்று கூறி சிரிக்க, அனைவருமே சிரித்தனர் மீனாட்சியை தவிர.

 

 

மீனாட்சி, “வீட்டுக்கு வந்தவனுக்கு விஷம் வைக்கிறேன்னு சொன்னது ஒரு காமெடியா அதுக்கு இப்படி சிரிக்கிறீங்க. என்ன வளர்ப்பு வளர்த்துருக்காங்க அது வீட்டுல பொம்பளைய பாரு லட்சணத்தையும் பாரு” என்று முகத்தை வெட்டிக்கொண்டு திட்ட, யாருமே அவரை கண்டுகொள்ளவில்லை. அறிவழகன் மட்டுமே வழக்கம் போல முறைத்தார்.

 

 

அகரனோ, “அவ்ளோ சேட்டையா செழியன் எப்பிடிடா சமாளிக்கிறான்” என்று கேட்க, “அவன் எங்க சமாளிக்கிறான். அவ என்ன பண்ணாலும் அவளை ரசிக்கிறான். அவளோதான். செம்ம வாலு” என்று கூற, அகரனுக்குமே தானும் இவர்களை போல அவர்களுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

 

 

மறுநாள் காலை அதிரன் எழுந்ததும் அன்னையை தேட, அவனின் தந்தையோ, “அவ கோவிலுக்கு போய் இருக்கா அதி. டிபன் சமைச்சு எடுத்து வச்சிருக்கறத சொல்லிட்டுதான் போனா. நீ சாப்பிட்டு கிளம்பு. வண்டியை பார்த்து டிரைவ் பண்ணு” என்று தகவல் போலவே கூறியவர் வீல் சேரை உருட்டிக்கொண்டு உள்ளே சென்று விட்டார்.

 

 

“அகரா என்னை கொஞ்சம் கோவிலுக்கு கூட்டிட்டு போறீயா? மனசு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு” என்று கேட்டப் படியே வந்தார் வேதநாயகி.

 

 

அவனோ, “சாரி பாட்டி ப்ளீஸ். தப்பா எடுத்துக்காதீங்க, அர்ஜன்ட் மீட்டிங். அரவிந்தன் அண்ணா ஆல்ரெடி போய்ட்டு கால் பண்ணிட்டே இருக்கான். நீங்க அம்மாவ கூட்டிட்டு கோவிலுக்கு போய்ட்டு வாங்க” என்றவன் கிளம்பி சென்றுவிட, லாவண்யாவும் அர்னவ்வும் காலையே வேதாவை பார்க்க போகிறோம் என்று கிளம்பி சென்று இருந்தனர்.

 

 

அவரோ, “நான் போறதே மனசு கஷ்டமா இருக்குனுதான். இதுல பிரச்னைய கூட கூட்டிட்டு வேற போகணுமா?அங்க போறதே நிம்மதியா இருக்க தான்.அறிவு அந்த டிரைவர் பயல வண்டிய எடுக்க சொல்லுய்யா?” என்று கூற, அவரும் அன்னையை பார்த்து கோவிலுக்கு கூட்டி செல்லுமாறு டிரைவரிடம் பத்திரம் கூறி மற்றொரு காரில் கிளம்பிவிட்டார்.

 

சிறிது தூரம் சென்றதும் வண்டி நின்று நின்று மெதுவாகவே செல்ல, “என்னை ரவி வண்டி கோளாறா? இப்படி நிறுத்தி நிறுத்தி போகுது” என்று கேட்க, அவரோ “இல்ல பெரியம்மா ஒன் வே வேற,ஒரு அம்மா முன்னாடி போறாங்க. முடியல போல தடுமாறிட்டு நடந்து போறாங்க” என்று கூறினார்.

 

 

அவரோ, “பாத்து பொறுமையா அவங்க போனதும் போப்பா, அதுக்கு என்ன பிரச்சனையோ? எந்த பிரச்னையும் இல்லன இந்தா உலகத்துல நமக்கு வேலையே இல்ல ஒவ்வொரு மனுசனுக்கும் ஒரு பிரச்னை. பிரச்சினை இல்லாத வீடும் இல்லை மனுசங்களும் இல்லை” என்று புலம்பிக்கொண்டவர் திடிர் பிரேக்கில், “என்னப்பா என்னை ஆச்சு?” என்று கேட்க, “பெரியம்மா அந்தம்மா விழுந்துட்டாங்க” என்று கூற, அவரின் மனம் துடித்து போனது.

 

 

“ஐயோ பக்கத்துல போய் பாருப்பா” என்று கூற, அவர் இறங்கி செல்வதற்குள் கூட்டம் கூடிவிட, அந்த பெண்ணோ விழுந்ததில் தலையில் அடிபட்டு ரத்தம் கொட்ட மயங்கியிருந்தார்.

 

 

டிரைவர் வேகமாக ஓடிவந்தவர் காரின் கதவை திறந்து அவர் தண்ணி பாட்டலை எடுத்தவர், “அம்மா அந்தம்மா கீழ விழுந்ததுல தலையில் அடி பட்டு மயக்கம் ஆகிட்டாங்க” என்றவர் ஓடிச்சென்று தண்ணீர் தெளிக்க, அப்போதும் மயக்கம் தெளியவில்லை.

 

 

வேதநாயகிக்கோ காரில் அமர முடியவில்லை. அவருக்கு உள்ளுக்குள் ஏதோ துடிக்க, காரை விட்டு இறங்கி கூட்டத்தை விளக்கி பார்த்தவர் கண்களில் கண்ணீர் வழிய, “தாமரை அம்மாடி தாமரை, இத்தன வருசத்துக்கு அப்புறம் என் பொண்ண இந்தா நிலைமையில பாக்கணும். ஐயோ ரவி தூக்குப்பா ஆஸ்பத்திரிக்கு” என்று கதறி துடித்தார்.

 

 

தாமரை அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு இருக்க, வேதநாயகி அழுத வண்ணமே அமர்ந்திருந்தார். ரவியின் மகள் பிரசவத்திற்காக அனுமதிக்கபட்டுள்ளதாக தகவல் வர மருத்துவமனையில் சேர்த்த கையோடு வேதநாயகியிடம் கூறிவிட்டு கிளம்பி சென்றுவிட்டார்.

 

 

தாமரை இருபத்தேழு வருடங்களுக்கு முன் கல்லூரி முதல் வருடம் படிக்கும் போதே குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.வேதநாயகியின் கணவரோ அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ள,அதில் மகளை முழுதாய் வெறுத்தவர் தலை முழுகிவிட்டார்.

 

 

காலங்கள் செல்ல மனம் பக்குவபட்டது. கணவர் பேசி புரிந்துகொள்ளாமல் தற்கொலை செய்து கொண்டதற்கு மகள் எப்படி காரணமாவாள் என்று ஏதேதோ நினைத்து மறுகியவர், சாகும் முன் ஒருமுறையாவது மகளை பார்த்துவிட வேண்டும் என்று தவித்தார்.

 

 

இன்று அவரின் இத்தனை வருட தவத்தின் பலனாய் பெற்ற மகள் கண் முன் பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்க, இந்த விஷயத்தை அறிவழகனிடம் கூறவும் பயமாக இருக்க, மகள் கண் விழிக்கும் வரை பொறுமையாக இருக்க முடிவெடுத்தவர் மகளின் அருகிலேயே அமர்ந்திருந்தார்.

 

மருத்துவர், “பிபி அதிகமானதால் வந்த மயக்கம் எனவும், காயத்திற்கு மருந்து வைத்து கட்டியிருப்பதாகவும் கண் விழித்ததும் அழைத்து செல்லலாம்” என்று கூறிவிட்டு சென்றார்.

 

 

அரைமணி நேரம் சென்றதும் தாமரை கண் விழித்தவர் தன் எதிரில் அமர்ந்திருந்த அன்னையை கண்டு அதிர்ந்து போனார். கண்கலங்க வார்த்தை வராமல் தவித்தவர், “அம்மா” என்றழைக்க, “தாமரை கண் முழிச்சுட்டியா? உனக்கு ஒன்னும் ஆகலையே. இத்தனை வருஷம் கழிச்சு என் பொண்ண பாக்குறேன் இந்த நிலமைல பாக்க வச்சிட்டானே அந்த ஆண்டவன்” என்றவர் மகளை கட்டிக்கொண்டு அழ, “அம்மா என்ன மன்னிச்சிருங்க அம்மா” என்று அழுதவரை கண்டு வேதநாயகிக்கு சப்த நாடியும் ஒடுங்கியது. தாமரையின் கண்ணீர் நிற்க வேயில்லை. அவருக்கு மீண்டும் எதுவும் ஆகி விடுமோ என்று அவரின் தாயுள்ளம் அவரின் அழுகையை நிறுத்த முடியாமல் பரிதவித்து போனது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. இதென்ன புது ப்ளாஷ்பேக் … தாமரை வேதா அம்மா தான … சூப்பர் … அதான் பொண்ணுக்கு வேதா அப்படின்னு பேர் வச்சிருக்காங்க … எல்லாரும் ஒண்ணு சேர போறாங்களோ … செழியா அது உன் அத்தை பொண்ணு தான் … விட்ட குறை தொட்ட குறையா … நல்ல ட்விஸ்ட் …

  2. அகரன் இத்தனை ஏங்குவதற்கு செழியனிடம் சென்று பேசலாம்.

    வேதாவின் அம்மா தாமரை நாயகி பாட்டியின் மகளா? அதனால் தான் அவரது அன்னையின் பெயரான வேதா என்பதையே தனது மகளுக்கும் வைத்துள்ளார்.

    நீண்ட வருடங்களுக்கு பிறகான சந்திப்பு. அம்மா மகளை ஏற்றுக்கொண்டதை போல், அறிவழகன் தங்கையை ஏற்றுக்கொள்வாரா பார்ப்போம்.