
அழகியே 17
அவர்கள் பேசியதை கேட்டவாறே படியிலிருந்து கீழே இறங்கி வந்த அரவிந்தனோ, “உஷாரு.. அதான் அவகிட்டயே சொல்லிட்டியே” என்று கூறி சிரிக்க, தேவ்வோ, “சாரி குட்டிமா, டங்க் ஸ்லிப்பாகிடுச்சு” என்றான்.
அவளோ, “இங்கதான அண்ணா வரீங்க பாத்து பத்திரமா வாங்க” என்று விட்டு போனை வைத்துவிட்டாள்.
தேவ்வோ அரவிந்த்திடம், “என்னன்னா எதுவும் பேசாம பத்திரமா வாங்கன்னு போன வச்சிட்டா. ஒருவேளை சோத்துல விஷம் வச்சிருவாளா” என்று கேட்டான். லாவண்யாவும் அரவிந்தனும். அடக்கமாட்டாமல் சிரித்து விட்டனர்.
அரவிந்த், “அப்பா நான் செழியன் வீட்டுக்கு போறேன். நீங்க இன்னைக்கு ஒருநாள் ஆபீஸ் பாத்துக்கோங்க” என்று கூற தலையாட்டியவர், “இப்போ பேசுனது அவனா?” என்று கேட்க தேவ்வோ, “அவனோட லேடி வெர்சன் மாமா” என்று கூற, புரியாமல் பார்த்தவரிடம், லாவண்யாதான் “செழியன் வைஃப் மாமா. நேத்துதான் ஜாப் முடிச்சு வந்துருக்கா” என்று கூற, அவரும் தலையாட்டி கொண்டார்.
அகரனோ, “அந்த பொண்ணா? அப்போ நீயும் அங்க தான் பேசுனியா?” என்று கேட்க, அரவிந்த் “ஆம்” என்று தலையாட்டினான்.
அகரனோ, “செழியனுக்கு என் மேல இன்னும் கோவம் போகல இல்ல” என்று கேட்டவன் வேகமாய் வெளியே சென்றுவிட்டான்.
செழியனுக்கு அரவிந்த் தந்தை போல என்றால் இவன் நண்பன் ஆயிற்றே. அன்னைக்கு சப்போர்ட் செய்து பேசியதாலோ என்னவோ இரண்டு முறை இவனாய் பேச முயற்சித்தும் செழியன் கண்டு கொள்ளாமல் சென்றுவிட, அதோடு அவனோடு பேசுவதையே விட்டு விட்டான்.
அரவிந்தன், தேவ் இருவரும் செழியனின் வீட்டுக்குள் வர, வேதா சமையல் முடித்து வர, செழியன் கேஸ் விஷயமாக தன் உதவியாளன் ஆன அதிரனிடம் அன்றைய வேலைகளை கூறிவிட்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது.
அரவிந்தன், “உள்ளே வந்ததும் வேதாமா எப்பிடிடா இருக்க?” என்று கேட்க, அவளோ, “ரொம்ப நல்லாருக்கேன் அண்ணா. அக்காவும் அருவும் வரலையா?” என்று கேட்க, “இல்லடா அவனுக்கு இன்னிக்கு KG அட்மிஷன் இருக்கு. அதான். நாளைக்கு ரெண்டு பேரும் வந்துடுவாங்க பாரேன் உன்னை பார்க்க” என்றவன், செழியனின் அருகில் அமர்ந்தவன், “ஹாப்பியா செழியா” என்றான்.
செழியனின் நிறைவான புன்னகையில் அகம் நிறைந்தவன், “ரொம்ப பெருமையை இருக்குடா உங்க ரெண்டு பேரையும் நினச்சு. அழகா உங்க லைஃப் ஆஹ் கொண்டு வந்துட்டீங்க. எனக்கு உன்னை பத்தி இருந்த பயத்துக்கு அர்த்தமே இல்லாம பண்ணிட்ட செழியா. இனி மல் உங்க ரெண்டு பேருக்கும் பிரிவே இருக்கக்கூடாது. சந்தோசமா இருங்க” என்று கூற, செழியனோ தமையனை அணைத்துக்கொள்ள, அரவிந்தன் வேதாவின் தலையை பாசமாக வருடிவிட்டான்.
தேவோ, “ஹேய் நான் இங்க ஒருத்தன் இருக்கேன் தெரியுதா? நீங்க பாட்டுக்கு பேசிட்டே இருக்கீங்க. வீட்டுக்கு வந்தவங்கள எப்படி மதிச்சு மரியாதை கொடுக்கணும்னு கூட தெரியல, ச்சே டூ பேட்” என்று கைகளை கட்டிக்கொண்டு எங்கோ பார்த்தவாறு கூற,
வேதா, “அச்சோ சாரி அண்ணா. உன்னை மிதிச்சு.. சாரி மதிச்சு வாங்கன்னு கூப்பிட மறந்துட்டேன். வாங்க.. வந்து உட்காருங்க, டீ எடுத்துட்டு வரேன்” என்றவள் உள்ளே செல்ல சட்டை காலரை தூக்கிவிட்டவன், “பார்த்தீங்கல்ல எப்படி அரண்டு போய்ட்டா” என்று கூற, செழியனும் அரவிந்தனும் சரியில்லையே என்று ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டனர்.
வேதா காபி எடுத்து வந்தவள், அரவிந்தனுக்கும் செழியனுக்கும் தன் கரங்களால் எடுத்து கொடுத்தவள், தேவ்வுக்கு நீட்ட அவனே எடுத்து கொண்டான்.
ஒரு வாய் முதலில் குடித்தவன் கண்கள் விரிய செழியனையும் அரவிந்தனையும் பார்க்க அரவிந்தோ, “வேற லெவல் காபிடா.. இவ்ளோ வருஷமானாலும் இது மட்டும் மாறவே இல்லை” என்று கூற, செழியனும் கையை சூப்பர் என்று காட்ட, தேவ்வோ தனக்குத்தான் அப்படி தோன்றுகிறதா என்று மீண்டும் குடித்தவன், அதன் உவர்ப்பு சுவையில் அதை முழுங்கவும் முடியாமல் துப்பாமல் அவதிபட்டவன்.
ஒருவாறு கஷ்டப்பட்டு அதை விழுங்கியவன் வேதாவை பார்க்க, அவளோ அவனின் முகபாவங்களை கண்டு கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்க, “என்ன தேவ் அண்ணா, காபி எப்படி இருக்குனு சொல்லவே இல்லை. நல்லாருக்கா.. டேஸ்ட்டா இருக்கா தேவண்ணா” என்று கேட்க, இருவரும் திரும்பி அவனை பார்க்க வேதாவோ, “உப்புல காபி கொஞ்சம் கம்மியா இருக்கா.. நான் வேணா இன்னும் கொஞ்சம் போட்டு தரவா” என்று சிரிக்காமல் கேட்க,
அரவிந்தனுக்கு குடித்த காபி புரையேறியது. செழியன் அவனின் தலையை தடவி கொடுத்தவன், தண்ணீர் குடுக்க, அவனால் சிரிக்காமலும் இருக்க முடியவில்லை. கண்ணீர் வழிய சிரித்து முடித்தவன் தண்ணீரை வாங்கி குடித்தான். தேவ் பாவமாக அவளையும் காபியையும் பார்க்க, அவனின் தலையில் ஓங்கி கொட்டு வைத்தவள், “போதுமா இல்ல குட்டி சைத்தான் என்ன செய்யும்னு செஞ்சுகாட்டவா” என்று அவன் கையில் இருந்த காபியை பார்க்க, அவனோ அதை வேகமாக கீழே வைத்தவன்,
“வேணாம் குட்டிமா அண்ணா பாவம்ல” என்று கூற, “அண்ணனா நீ ஆந்தைகண்ணா கொன்னுடுவேன் பாத்துக்கோ” என்று சிறுபிள்ளையாய் மிரட்ட, செழியனோ அவளின் குழந்தைத்தனத்தை ரசித்துக் கொண்டிருக்க, அரவிந்தனின் கண்களுக்கும் அவள் வளர்ந்த குழந்தையாகதான் தெரிந்தாள்.
அவனின் கையில் இருந்த காபியை வாங்கியவள் வேற எடுத்துட்டு வரேன் என்று கூற அரவிந்தோ, “ஜஸ்ட் மிஸ்ஸு விஷம் வைக்கல உப்புதானடா, நீ அதிஷ்டசாலி” என்று கூற, அவனின் வாயை பொத்தியவனோ, “இதுக்கு விஷமே நல்லா இருந்துருக்கும்” என்று கூற, சமையலறையில் இருந்தவளோ, “அது கூட இருக்கு கலந்து தரவா, டேஸ்ட் எப்படி இருக்குனு சாம்பிள் பாக்குறீங்களா” என்று குரல் கொடுக்க, அதுவரை சிரிப்பை அடக்கி கொண்டு இருந்த செழியனுமே சிரித்துவிட்டான்.
தேவின் நிலைமைதான் கவலைக்கிடமாக இருந்தது. வேதா காபி எடுத்து வந்து அவன் கையில் கொடுக்க, அதை வாங்கியவனோ திருதிருவென விழிக்க அவளோ, “சுகர்தான் ஆட் பண்ணிருக்கேன். நம்பி குடிக்கலாம்” என்ற பிறகே அதை குடித்தான்.
வீடே கலகலப்பாக இருந்தது. மதியம் வரை இருந்தவர்கள், மதிய உணவை உண்டுவிட்டு தேவ்வும் அரவிந்தனும் கிளம்பி செல்ல, வேதா அவர்களுக்காக கொண்டு வந்த பொருட்களை எல்லாம் கொடுத்தனுப்பியவள் உள்ளே வர, செழியன் அவளையே பார்த்து கொண்டு இருக்க, உனக்கு உன் அண்ணன்களை ரொம்ப பிடிக்குமா தங்கமே” என்று கேட்டான்.
அவளோ, “ரொம்ப பிடிக்கும். அவங்க ரெண்டு பேரையும்தான் ரொம்ப மிஸ் பண்றேன். எங்க இருக்காங்கனு தெரியல” என்றவள் கண்கலங்க அவனை அணைத்து கொண்டாள்.
மாலை இருவரும் கடைக்கு சென்றவர்கள் தேவையான பொருட்களை வாங்கி விட்டு, வீட்டுக்கு வரும் வழியில் செழியனின் போன் அடிக்க நிறுத்தி பேசியவனோ, “சரி வரேன்” என்று கூறியவன் அவளிடம், “தங்கமே கோச்சுக்காம அதோ அந்த மரத்தடியில் பத்து நிமிஷம் உட்கார்ந்து இரு. இதோ நான் ஒரு பத்து நிமிஷம் பக்கத்துல போனதும் வந்துறேன்” என்று கூற, சரியென்று கூறியவள் அங்கே சென்றவள் அமர்ந்தாள்.
அங்கு ஒரு சிறுமி பால் விளையாண்டு கொண்டிருக்க, அவளை பார்த்த அந்த குட்டியோ அவளின் அருகில் வந்தவள், “ஆண்ட்டி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க பேர் என்ன?” என்று கேட்க, “ஓ தேங்க் யூ பேபி. என்னோட பேரு வேதா. உங்க பேரு என்ன நீயும் கியூட்டா இருக்க” என்று அவளிடம் பேச, அந்த பெண்ணின் தாயும் அவர்களருகே வந்தவள் ஏதோ பேச, அவர்களுக்கு எதிரே இருந்த மெடிக்கலில் இருந்து தந்தைக்கான மருந்தை வாங்கிக்கொண்டு வந்த அதிரன் வேதாவை பார்த்து விட அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டான்.
“டேய் ஆதி அது நம்ம குட்டிமா மாதிரி இல்ல. அங்க பாரு” என்று கைகாட்ட, அங்கு திரும்பி பார்த்தவன், “ஹே ஆமா.. ஆனால் அது எப்படி அதி எனக்கு எதுவும் புரியலடா” என்று அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே செழியன் வந்து விட, அந்த குழந்தைக்கும் அவளின் தாய்க்கும் கை காட்டியவள் ஏறி சென்றுவிட்டாள்.
செழியன் ஹெல்மெட் அணிந்திருந்ததால் யாரென்று அடையாளமும் தெரியவில்லை அதிரனுக்கு. ஆதி வேகமாய் ஓடிவந்தவன் அந்த பெண்ணிடம், “அக்கா நீங்க இப்போ பேசிட்டு இருந்தீங்களே ஒரு பொண்ணு, அவங்கள உங்களுக்கு தெரியுமா? எங்கிருக்காங்க அட்ரஸ் தெரியுமா? என்று கேட்க, அந்த பொண்ணோ தெரியல தம்பி. நான் முன்னபின்ன அந்த பிள்ளையை பார்த்ததில்லை. என் பொண்ணுதான் பேசிட்டு இருந்தா என்று கூற, ஆதி அந்த குழந்தையிடம், “குட்டி இப்போ ஒரு அக்கா போனாங்கல்ல அவங்க எங்க இருக்காங்க தெரியுமா?” என்று கேட்க,
“தெரியல அங்கிள், அவங்க கிட்ட நான் நீங்க அழகா இருக்கீங்க உங்க பேர் என்ன கேட்டேன். அவங்க நீயும் கியூட்டா இருக்கேன் சொன்னாங்க அவளோ தான்” என்று கூற, அதிரனோ, “அவங்க பேர் என்னடா சொன்னாங்க” என்று கேட்க, “வேதா” என்ற அந்த குழந்தை அவள் தாயுடன் சென்று விட்டாள்.
இது எப்படி சாத்தியம் என்று யோசித்தவர்கள் பெற்றோர்களிடம் இந்த விஷயத்தை உடனே கூற வேண்டும் என்று வீட்டிற்கு சென்றவர்களின் கண்ணில் பட்டதென்னவோ மாலை மாட்டியிருந்த அவளின் புகைப்படம் தான். ஆதி ஓடிச்சென்று அந்த மாலையை எடுத்து வீசியவனோ, போட்டோவை எடுத்து நெஞ்சோடு அணைத்து கொண்டவன், ஹாலில் அமர்ந்து அவனையே தவிப்புடன் பார்த்து கொண்டிருந்த பெற்றோரிடம் “அம்மா அப்பா நம்ம மித்… மித்து குட்டி உயிரோடதான் இருக்கா. இந்த மாலை வேணாம். அவ வந்துருவா. நம்மள தேடி சீக்கிரம் வந்துருவா” என்று கூறினான்.
அதிரனும் கண்ணீருடன் அவர்களையே பார்த்து கொண்டிருக்க, ஆதி நடந்த அனைத்தையும் கூறி முடிக்க அன்பரசனோ, “அப்போ என் பொண்ணு வந்துருவாளா? என்தாயி உயிரோடதான் இருக்கா.. உயிரோடதான் இருக்கா” என்று அழ, தாமரை பேச்சற்று மகன்களையே பார்த்து கொண்டு இருக்க அதிரனோ “என்னமா” என்று கேட்க, “அப்போ ஏன் அவ நம்மள பாக்க வரல. அவ யாருகூட போனா. பின்னாடி போயிருக்கலமில்ல. என்பிள்ள எதுவும் தப்பான ஆள் கையில மாட்டியிருந்தா” என்று தவித்தார்.
ஆதியோ, “ம்மா ப்ளீஸ் அதெல்லாம் யோசிக்காதீங்க. அப்டி எதுவும் இருக்காது” என்று கூறி சமாதானப்படுத்த, இறந்துவிட்டாள் என்று நினைத்த மகள் உயிரோடு அதுவும் அவர்கள் இருக்கும் அதே ஊரில் இருக்கிறாள் என்று தெரிந்ததும் அன்பரசனின் மனம் தெளிவாய் இருக்க, மகளை காண துடித்தார்.
அது நடக்கும் போது அவர் மகள் சுய நினைவில் இருக்கமாட்டாள் என்று அறியவில்லை அவர்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஹையோ ட்விஸ்ட் வேற இருக்கா … வேதா க்கு என்ன ஆக போகுதோ
குழந்தைத்தனமான செய்கைகளால் மற்றவரையும் மகிழ்வித்து தானும் தனது கவலைகளை மறந்து மகிழ்வாய் இருக்கின்றாள் வேதா.
அவளது பிரிந்து சென்ற குடும்பத்தை எண்ணி வருந்தி முடங்காமல், இருப்போரை குடும்பமாக பாவித்து நேசிக்கின்றாள்.
வேதாவின் சகோதரர்களுக்கு இவள் உயிரோடு இருப்பது தெரிந்துவிட்டது. அவளை மீண்டும் சந்திக்கும் நேரம் எப்படி இருக்குமோ?