Loading

அழகியே 16

 

தாமரை “என்ன அதிரா நீ வேலைக்கு கிளம்பிட்டியா? அப்பாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்டா, நான் கோவிலுக்கு வேற போகணும் இன்னிக்கு ஒரு நாள் நீ இருக்கலாம்ல, ஆதிக்கும் மீட்டிங் இருக்குன்னு ரெடி ஆகிட்டாண்டா, யாராச்சும் ஒருத்தர் கூட வரலாம்ல”என்ற அன்னையின் குரலில் அறையில் இருந்து வெளியே வந்தவன்”அம்மா எனக்கு ஆபீஸ்ல நிறைய ஒர்க் இருக்குமா. என்னோட ஹயர் ஆஃபீஸர் செழியன் சார் இன்னிக்கு லீவ். நேத்து எடுத்த எல்லா டீடெயில்ஸ்யும் ஜட்ஜ்கிட்ட ஹாண்டவர் பண்ணனும். நீங்களே அப்பாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு வந்துருங்க. அப்புறம் ஆதி ப்ராஜெக்ட் முடிச்சு வச்சிருக்கேன். கான்ஃபரென்ஸ் மீட்டிங் ஒழுங்கா அட்டென்ட் பண்ணு ப்ராஜெக்ட் பத்தி தெளிவா எக்ஸ்பிளான் பண்ணு” என்று பேசிக்கொண்டே தன் காவல் உடையை மாற்றிக்கொண்டு தயாராகி வெளியே வந்தான் அதிரமித்ரன்.

 

 

“அப்பா” என்றழைத்துக்கொண்டே வந்தவன்,மகளின் புகைப்படத்தின் முன்பு கண்ணீர் மல்க இருந்த தந்தையை கண்டதும் அமைதியாகி விட, அவரோ கை டிரீட்மெண்ட்டில் சரியாகி விட்டாலும் கால் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியிலே இருக்க வேண்டிய நிலை.

 

 

சுவற்றில் மாட்டி இருந்த வேதாவின் புகைப்படத்திற்கு மாலை போடப்பட்டு இருக்க, அதை பார்த்து கொண்டே வீல்ச்சேரில் அமர்ந்தப்படியே அதை பார்த்து கொண்டிருந்தவரின் கண்களில் கண்ணீர். அவரின் அருகில் வந்தவன் அப்பா என்று அவரின் தோளை தொட, “எங்கம்மாடா அதிரா இவ. நம்ம வாழ்க்கையில வந்த தேவதை. அவளை பாதுகாக்க தெரியாம இப்படி தொலைச்சிட்டோம்” என்றவர் வாய்விட்டு அழ, அவரின் குரல் கேட்டு வந்த இளைய மகன் ஆதிமித்ரனும் தங்கையின் முகத்தை பார்த்து கலங்கினான்.

 

 

அதிரன், ஆதியை தொட்டு தந்தையை காட்ட, தனயன்கள் இருவரும் அவரை அணைத்துக்கொண்டனர். அதிரன் தாயை தேட, அவரும் சமையலறையில் இவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டே மௌனமாய் அழுதுக்கொண்டு இருந்தார்.

 

 

அதிரன், “அப்பா ப்ளீஸ் பா… கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க, நீங்களே இப்படி அழறீங்க. அம்மாவுக்கு அதே வேதனைதான இருக்கும். மித்து நம்மள விட்டு போனது தாங்கிக்க முடியாத இழப்புதான். புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ். அவ இல்லை. அதை நம்ம ஏத்துக்கிட்டு தான் ஆகணும். ஆதியும் அழறான்பா உங்களால. நாங்க ரெண்டு பேர் இருக்கோம், உங்களுக்கு” என்று கூறி முடிக்கவே மிகவும் சிரமபட்டான்.

 

 

பெற்றோர்களுக்கும் தம்பிக்கும் தங்கையின் நியாபகம் வராமல் இருக்க வேண்டும் என்று, சொந்த ஊருலிருந்து மொத்தமாக அவர்களின் அடையாளத்தையே மாற்றி அவர்களை இங்கு நிலைப்படுத்துவதற்குள் பெரும்பாடுபட்டு போனான்.

 

பொருளாதார ரீதியாக நிலைமை மிக நன்றாகவே இருந்தது. அனைத்து சொத்துக்களையும் வித்துவிட்டுதான் சென்னைக்கே வந்திருந்தனர். ஆதி அவனின் விருப்பப்படி தொழிலில் இறங்கிட, அதிரனுக்கு போலீஸ் ஆக விருப்பம். அதற்கு தயார் செய்தவன் வேலையிலும் சேர்ந்து விட்டான். செழியனுக்கு கீழ்தான் வேலை செய்கிறான். கடந்த ஒரு வருடமாக.

 

 

பெற்றோரை ஒரு வழியாக சமாதான படுத்தி, வேலைக்கு கிளம்பியவனுக்கு தெரியவில்லை அன்றே அவர்களின் வேதனைக்கு

சொந்தக்காரியை சந்திக்கப்போவதை…

 

 

…………

 

 

 

 

 

 

இங்கே கதிரவன் தன்னாட்சியை தொடங்கி ஒரு மணி நேரம் கழிந்தே செழியன் கண் விழிக்க, அவன் மார்பில் முகம் புதைத்து உறக்கத்தில் இருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டவன், “ஹாப்பி மார்னிங்” என்று கூற அவளோ, “குட் நைட்” என்று கூறியவள் மீண்டும் தன் தூக்கத்தை தொடங்க, அதில் சிரித்தவன், அவளை தலையணையில் படுக்க வைத்து விட்டு எழுந்து குளித்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தான்.

 

 

சமையலறைக்கு சென்று காபியை கலக்க தொடங்க, அவன் முடிக்கும் சமயம் அவனின் முதுகில் முகம் வைத்து தேய்த்தவள், “குட் மார்னிங்” என்று கூற, அவனோ, “இப்போதான் குட் நைட் சொன்ன மாதிரி இருந்துச்சு, விடிஞ்சுருச்சா என்ன” அவளின் கையில் காபியை கொடுக்க, “தூங்க ட்ரை பண்ணேன். ஆனால் உங்க காபி வாசம் இங்க இழுத்துட்டு வந்துருச்சு” என்றவள் ஒவ்வொரு சிப்பாக ரசித்து குடித்தவள், “நான் குளிச்சிட்டு வந்து சமைக்கிறேன். தேங்க் யூ போர் தி டேஸ்ட்டி காபி” என்றவாறே அவனின் கன்னத்தில் முத்தமிட்டவள், அவன் ஏய் என்று அவளை இழுப்பதற்குள் ஓடியே விட்டாள்.

 

 

இங்கு அரவிந்தன் இல்லத்தில்,

 

 

அவன் சோபாவில் அமர்ந்து நியூஸ் பேப்பர் படித்து கொண்டிருந்தான். மீனாட்சி பேரனுக்கு உணவை ஊட்டி கொண்டிருக்க, அறிவழகன் பேரனின் சேட்டைகளை ரசித்தவாறே உணவை உண்டு கொண்டிருந்தார். அகரன் டீயை குடித்து கொண்டிருக்க, வேதநாயகி பூஜை அறையில் இருந்து அப்போதுதான் வந்து அரவிந்தனின் அருகில் அமர்ந்தார்.

 

 

அர்ச்சனா கல்லூரிக்கு செல்ல, நேரமாக கிளம்பி கொண்டு இருந்தாள். அரவிந்தனின் போன் சார்ஜரில் இருந்து அடிக்க, பாதி ரிங்கில் கட்டாகி மீண்டும் அடிக்க, மீண்டும் கட்டானது.

 

 

அரவிந்தனுக்கு புரிந்து போனது இது யார் வேலை என்று. “லாவி போன் எடுத்து குடேன், எடுக்கறவரை அந்த வாலு இப்படிதான் பண்ணிட்டே இருப்பா” என்று கூற, மேலும் இரண்டு முறை போன் வந்து கட்டாகி இருந்தது.

 

 

லாவண்யா சிரித்துக்கொண்டே போனை எடுத்து வந்து அரவிந்திடம் தர, அட்டென்ட் செய்து காதில் வைத்ததும், “டூ பேட் அரவிந்த் அண்ணா, எவ்ளோ தடவ கால் பண்றேன். எடுக்கவே இல்ல. என்னை மறந்துடீங்க தான. நான் வந்துட்டேனு தெரியும் தான, ஏன் இன்னும் வரல. நான் கோவமா இருக்கேன்” என்றாள் வேதா.

 

 

அவனோ, “முடிஞ்சுதா” என்று கேட்க, அவளோ, “ஹ்ம்ம் அவளோதான். யோசிச்சேன். இன்னொன்னு அந்த எருமைக்கு ரெடி பண்ணி வச்சிருக்கேன் பேசி காட்டவா” என்று கேட்க, அதில் வாய் விட்டு சிரித்தவனோ, ”ஒவ்வொருத்தர திட்றதுக்கும் எழுதி வச்சு மனப்பாடம் பண்ணி திட்ற அங்க நிக்குற வேதாமா நீ வேற லெவல்” என்றான்.

 

 

அங்கிருந்த அனைவருமே அரவிந்தனைதான் பார்த்து கொண்டிருந்தனர். அவன் யாரிடமும் அது போல் பேசி பார்த்ததில்லை. அர்ச்சனாவே பெரியவன் என்று அவனிடம் இடைவெளி விட்டு தான் பழகுவாள். அதனாலயே எந்த எதிர்பார்ப்பும் இன்றி அண்ணா, அண்ணா என்று தன்னிடம் வம்பு வளர்க்கும் வேதாவிடம் அவனுக்கு அதீத அன்புதான்.

 

 

“அண்ணா நீங்க என்ன கிண்டல் பண்றீங்க” என்று கோவம் கொள்ள, “அட புரிஞ்சுடுச்சே பரவால்ல. சரி மேடம் நான் உங்களுக்கு மாமா முறை வரணும் நியாபகம் இருக்குல்ல. அப்புறம் என்ன இன்னும் அண்ணா” என்று கேட்க,

 

 

அவளோ, “நோவே.. என் ஹஸ்பண்ட் மட்டும்தான் மாமா சொல்வேன்” என்றவள் தன்னருகில் உட்கார்ந்து அவர்கள் பேசுவதை சிரிப்புடன் கேட்டுகொண்டிருந்தவனின் கன்னத்தில் முத்தமிட, அவனோ பெரிதாய் விழி விரித்து அவளை பார்த்தான்.

 

 

“பக்கத்துல என்னமோ சத்தம் கேட்டமாதிரி இருந்துச்சே என்ன சத்தம்” என்று கேட்க, அவளோ, “மெதுவாதான குடுத்தேன். அவளோ சத்தமாவா கேட்டுச்சு” என்று கேட்க, செழியனோ தலையில் கைவைத்து கொள்ள, அரவிந்த் பக்கென சிரித்து விட, வேதாவோ நாக்கை கடித்து கொண்டாள்.

 

 

அரவிந்தன் சிரிப்பதை கண்டதும் லாவண்யா என்ன என்று கேட்டவாரே போனை வாங்கியவள், “ஹாப்பி மோர்னிங் பாப்பு” என்று கூற, “ஹாப்பி மோர்னிங் அக்கா எப்படி இருக்கீங்க, அர்னவ் குட்டி என்ன பண்றான்” என்று அவளிடம் பேச ஆரம்பிக்க அவளோ, “பைன்டா, அவன் சாப்பிடுறான்” என்று கூறியவள், “என்ன சொன்ன மாமா இப்படி சிரிக்குற அளவுக்கு” என்று கேட்டாள்.

 

லாவன்யாவின் அருகில் வந்த அரவிந்தோ, “சொல்லு வேதாமா, நீதான் தைரியசாலி ஆச்சே” என்று கூற, அவளோ, “அதெல்லாம் ஒண்ணுமில்ல அக்கா. லிப் ஸ்லிப்பாகி கன்னத்துல பட்ருச்சு. அதுக்கு போய் அப்படி கிண்டல் பன்றாரு. நீங்களே கேளுங்க. நான் போன வைக்குறேன்” என்றாள்.

 

லாவன்யாவோ, “அதனால என்ன? நீங்க எதுக்கு அவளை கிண்டல் பண்றீங்க” என்று கேட்க, அருகில் நின்று கேட்டுகொண்டிருந்த அரவிந்தன், “யார் கன்னத்துல கேளேன்” என்றவன் அடக்க முடியாமல் சிரிக்க, அவன் கூறியது புரிய அவளும் தாராளமாய் இதழ் பிரித்துகொண்டாள்.

 

 

அகரனோ, “யாருடா போன்ல” என்று கேட்க, அவனோ, “என் சிஸ்டர்” என்றவன் மேல சென்றுவிட, அகரன் அர்ச்சனாவை பார்க்க அவளுமே அரவிந்தைதான் பார்த்து கொண்டிருந்தாள்.

 

 

மீனாட்சி லாவண்யாவிடம், “கூட பொறந்தவ கிட்ட பேச வாய் வலிக்குற உன் புருசனுக்கு, இப்படி கொஞ்சி பேசுறதுக்கு புது தங்கச்சி எங்க கிடைச்சா.. நீயும் அவனோட சேர்ந்துகிட்ட” என்று மூக்கை விடைத்துக்nகொண்டு கேட்டார்.

 

 

அறிவழகன், “பசங்க யார் சந்தோசமா இருந்தாலும் உனக்கு பிடிக்காதா மீனாட்சி. என்ன கேள்வி இது. அர்ச்சனாதான் அவன்கிட்ட பேச தயங்கி நிக்குறா. இப்போ அரவிந்தன் போன் பேசும்போது பார்த்தியா? அவன் கண்ணுல அப்படி ஒரு பாசம். முகத்துல சிரிப்பு. இது போல அவனுங்க கட்ட இவளும் இருந்தா அவங்களும் நல்லாதான் நடந்துக்குவாங்க. எங்க நீதான் உன்ன போலவே குணத்துல கூட காப்பி அடிச்சு பெத்து வச்சிருக்கியே” என்றவர் எழுந்து கைகழுவ சென்றுவிட்டார்.

 

அதே சமையம் தேவ் உள்ளே வர, அவனை கண்ட மீனாட்சி முகத்தை சுழித்து கொள்ள, அதை கண்டுகொள்ளாதவன், “மாமா இந்தாங்க ஏதோ டெண்டர் பைல் போல அப்பா குடுத்துட்டு வர சொன்னாரு” என்று கைகழுவி வந்த அறிவழகனிடம் நீட்ட அதை வாங்கியவரோ, “இன்னிக்கு டூட்டி இல்லையா? என்றவாறே அவனின் ஜீன்ஸ் ட்ஷிர்ட் பார்த்து கேட்க, “இல்ல மாமா இன்னிக்கு லீவ் எடுத்திருக்கேன். ஒரு முக்கியமான ஒருத்தங்களை பாக்க போகணும்” என்று கூறினான்.

 

 

 

 

அப்போது அவனின் போன் அடிக்க, “அடேய் அண்ணா.. அறிவு கெட்ட ஆந்தை கண்ணா.. ஹாஸ்டல்ல இருக்கும்போது போன் பண்ணி எப்போ வருவ வருவன்னு இம்சை பண்ணிட்டு நேத்துலருந்து கால் பண்றேன் எடுக்க முடியாதா உன்னால” என்று கேட்க, பக்கத்தில் இருந்த செழியனோ சத்தமாக சிரித்தான்.

 

 

“செம்ம ரைமிங் தங்கமே.. லெந்த்தி டயலாக். தண்ணி குடிச்சுட்டு திட்டு” என்று கூற, “அய்யா செழியா நல்ல வருவய்யா? நீ ரொம்ப நல்லா வருவ. திட்டு வாங்குனது நானு தண்ணி அவளுக்கு. மவனே உன்னை வந்து வச்சிக்குறேன் இரு” என்றவன், “குட்டிமா அண்ணா ஆன் தி வே” என்றான்.

 

 

செழியனோ, “ஏன்டா அவளோ கேவலமா திட்றாளே வெக்கமா இல்ல உனக்கு” என்று கேட்க, அவனோ, “எதுக்கு.. பேசுனத்துக்கு நான் ரிப்ளை பண்ணுவேன். மறுபடியும் அந்த குட்டி சைத்தான் என்னை அண்டா அண்டாவா கழுவி ஊத்துவா. தேவையா? நான்லாம் உஷார் தெரியும்ல” என்றான்.

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ஹே சூப்பர் பா எல்லாரும் எவ்ளோ ஜாலியா பேசுறாங்க … அன்பா இருக்காங்க … அது மீனாட்சி கண்ணை உறுத்திடுச்சே …

    வேதா அவங்க பேமிலி கூட சேர போறாளா … எதும் பிரச்சனை வருமோ …

  2. செழியன் வேதா காதல் அழகு.

    அரவிந்தன், லாவண்யா, தேவ் என்று அனைவரிடமும் மிக இயல்பான பாசத்தோடும் உரிமையோடும் பழகுகிறாள் வேதா.

    இதே அன்பையும் கலகலப்பையும் தானே அவளது குடும்பத்தினருக்கும் தந்திருப்பாள்.

    அவர்கள் இவளது பிரிவினில் இன்னமும் இவள் உயிரோடு இருப்பது தெரியாமல் வருந்திக்கொண்டு உள்ளனர்.

    செழியன் அவர்களை தேட எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லையா?