Loading

http://அந்த அறைக்குள் நுழைந்த ஆதித்ய தேவின் வரவு, ஒரு சூறாவளி காற்று வீசியதைப் போல இருந்தது. அவன் உள்ளே வந்த அடுத்த நொடியே அங்கிருந்த காற்று கனத்தது. நிலா, பயத்தின் உச்சத்தில் சுவரோரம் ஒடுங்கிப் போயிருந்தாள். அவளது இதயம் ஒரு கூண்டுப் பறவையைப் போலத் துடித்தது. ​ஆதித்யா அவளை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான். அந்தப் பூட்ஸ் காலணிகளின் சத்தம் நிலாவின் காதுகளில் மரண ஓலமாக எதிரொலித்தது. அவளுக்கு மிக அருகில் வந்தவன், சட்டென்று தன் கைகளை அவள் தலைக்கு இருபுறமும் சுவரில் ஊன்றி அவளைச் சிறை பிடித்தான். இப்போது நிலாவால் நகரக்கூட முடியவில்லை. ஆதித்யாவின் ஆக்ரோஷமான மூச்சுக் காற்று அவளது முகத்தில் பட்டது. அவனது கண்கள் கோபத்தில் சிவந்து, ரத்தத் தாகம் கொண்ட புலியின் கண்களைப் போல மின்னின. என் பிசினஸ் ரகசியத்தை வெளிய வித்தா என்ன நடக்கும்னு தெரியுமா?” ஆதித்யாவின் குரல் ஒரு இடி முழக்கம் போல அந்த அறையை அதிரச் செய்தது. “நீ பண்ணதுக்கு உன்னை இந்த நிமிஷமே இல்லாம பண்ணிருக்கணும்…” ​நிலா அதிர்ச்சியில் உறைந்து போனாள். அவளது உதடுகள் நடுங்கின. “நான்… நான் எதுவுமே பண்ணல சார்… அந்த ஃபைலை நான் எடுக்கல… நான் உண்மையாவே அந்த ஃபைலை பார்த்தது கூட கிடையாது சார்…” என்று விம்மினாள். ​ஆதித்யா ஏளனமாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பு நிலாவின் நம்பிக்கையைச் சுட்டெரித்தது. “பொய்! என் கண்ணைப் பார்த்துப் பொய் சொல்லாத. உன்னோட அந்தப் பிரண்ட் தப்பிக்கணும்னு நீ பலிகடா ஆகி வந்திருக்கன்னு எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா? அவ பண்ண தப்புக்கு தண்டனை உனக்குத் தான்!” என்று கர்ஜித்தான். ​நிலாவின் கண்கள் விரிந்தன. “உங்களுக்கு… உங்களுக்கு எல்லாம் தெரியுமா?” என்று அவள் அதிர்ச்சியில் கேட்டாள். ​”இந்த தேவ் எதையும் விசாரிக்காம களம் இறங்க மாட்டான் நிலா!” என்று அவள் பெயரை அவன் உச்சரித்த விதம் அவளை நடுங்க வைத்தது. “நீ உன் ரத்த பாசத்துக்காகவோ, நட்புக்காகவோ தப்பை ஏத்துக்கலாம்… ஆனா என் முன்னாடி நிக்கிறது ஒரு குற்றவாளிதான். இனி உன் வாழ்க்கை, உன்னோட ஒவ்வொரு மூச்சும் என்னோட கட்டுப்பாட்டுல தான் இருக்கும்!” நிலா அப்படியே அவன் காலடியில் விழாத குறையாகக் கெஞ்சத் தொடங்கினாள். அவளது அழுகுரல் அந்த அறையின் அமைதியைக் கிழித்தது. “ப்ளீஸ் சார்! நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுங்க. நாங்க எந்தத் தப்பும் பண்ணல. என் ஃபிரண்ட் ரம்யாவைக் கடந்த மூணு நாளா காணும் சார். அவளுக்கும் எனக்கும் இந்த உலகத்துல யாருமே இல்ல. நாங்க ரெண்டு பேரும் உங்க ஆபீஸ்ல தான் உண்மையா வேலை பார்க்கிறோம். அவ எங்கே இருக்கான்னு தெரியாம நான் தவிச்சிட்டு இருக்கேன். தயவு செஞ்சு நம்புங்க சார்…” என்று அவள் கதறினாள். ​அவளது கண்ணீர், அவளது பால் போன்ற கன்னங்களில் வழிந்தோடி அவன் காலடியில் விழுந்தது. ஆனால், அந்த ஆதித்ய தேவ் ஒரு இரும்பு மனிதன். அவளது கண்ணீரோ, அழகோ அவனது இதயத்தைத் துளியும் அசைக்கவில்லை. மாறாக, அவனது முகத்தில் ஒருவிதக் குரூரமான எள்ளல் தான் மிஞ்சியது. ப்ளீஸ்… ஸ்டாப் யுவர் நான்சென்ஸ் (Stop your nonsense)!” என்று அவன் மீண்டும் கர்ஜித்ததில், நிலா தூக்கி வாரிப் போடப்பட்டு அப்படியே அமைதியானாள். ​அவன் அவள் அருகில் குனிந்து, அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தபடி பேசத் தொடங்கினான். “இடியட்! என் ஆபீஸ் ஃபைலை திருடிட்டு உன் ஃபிரண்ட் தப்பிச்சு ஓடிட்டா. இப்போ நீ அவளைத் தேடுற மாதிரி என்கிட்டயே நடிச்சு, என்னையே ஏமாத்தப் பார்க்கிறியா? இப்போ அழுது சீன் போடுவ… அப்புறம் யாருக்கும் தெரியாம அவகூட சேர்ந்து நீயும் தப்பிச்சுப் போய்டுவ… இதான் உன் பிளான்? நீ சொல்ற இந்தக் கதையை நம்பறதுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல!” ​அவனது ஒவ்வொரு வார்த்தையும் நிலாவின் இதயத்தில் ஈட்டியாய் வந்து பாய்ந்தது. தான் தேடி வந்த தோழி எங்கே என்று தெரியாத துக்கம் ஒருபுறம், செய்யாத தப்புக்காகத் தன்னைக் குற்றவாளியாகச் சித்தரிக்கும் இந்த ‘அரக்கனிடம்’ மாட்டிக்கொண்ட வேதனை ஒருபுறம் என நிலா நிலைகுலைந்து போனாள். ​ஆதித்யாவின் பார்வையில் அவள் ஒரு துரோகி; நிலாவின் பார்வையில் அவன் ஒரு இரக்கமற்ற மிருகம். இந்த மர்மமான முடிச்சுகள் எப்படி அவிழப் போகின்றன? ஆதித்யாவின் பிடியில் இருக்கும் நிலாவின் எதிர்காலம் என்ன? அரக்கன் வருவான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்