Loading

வணக்கம், கதை திங்களன்று நிறைவுறும். வாசிக்க விரும்புவோர் துவங்கலாம். ஹேப்பி ரீடிங் ♥️

டைட்டில் ரிசர்வ் : அமுதூறும் மேகங்கள்! (பாகம் – 02)

 

•🤩•🤩•🤩•🤩•

ஆறு வருடங்கள் கடந்து…

ஜாம்நகர், குஜராத்.

கீழ் வானம் சிவந்து செந்தூரமாய் மாறியிருக்க, மெல்ல மெல்ல கருமேகங்கள் ஒருபுறம் சூழ ஆரம்பித்திருந்த பின்னந்தி மாலை நேரம்.

வார இறுதி நாளும் மங்களமான வரலஷ்மி பூஜை தினமுமாக அமைந்த அந்த வெள்ளிக்கிழமை அன்று போக்குவரத்தில் திக்குமுக்காடி போயிருந்தது நகர்.

“சிவாவுக்கு கால் பண்ணியா ஆரா?” என்று உரக்கக் கத்தினான், ப்ரமோத்.

அவனை முறைபடி அழுத்தமாய் அமர்ந்திருந்தான் அவன்.

“அசயுறானா பாரு. அழுத்தம், அப்டியே அவன் அத்தைய கொண்டு” என்று திட்டிக்கொண்டிருந்தாள், மேகவர்ஷினி.

ஷக்தி, “என்ன இப்போ உங்களுக்கு? ஆளாளுக்கு அவன ஏதாவது வந்தது பிடிச்சு சொல்லிட்டே இருக்கீங்க? நீங்க அத்தகிட்ட வாங்க சின்னப்பா” என்று அழைத்தவள் அருகே வந்தமர்ந்தான், துருவ் இமயவரம்பன்.

அச்சாய் ஷக்தியின் தந்தையாய் பிறந்திருந்தவனை ஒற்றை வார்த்தை யாரும் சொல்லிவிட முடியாது, ப்ரமோத்தைத் தவிர்த்து.

அழுத்தமும் ஆளுமையும் தேவைக்கு இரக்கமும் ஈகையுமாய் பத்து வயதிலேயே அத்தனை முதிர்ச்சியாக இருந்தான் அவன்.

பாட்டி, அத்தையின் செல்லமாய், அவன் தாயின் தோழனாய், அவன் சிவா மாமாவின் ரசிகனாய் இருப்பவன் பயம் கொள்ளும் ஒரே நபர், ப்ரமோத் மட்டும்.

ப்ரமோத், “சிம்பா, வாடா இங்க. ஆரா பக்கத்தில போகக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன் தான?”

அதற்கும் அழுத்தமும் மௌனமுமே பதில்.

“ஏய் ஆரா, அய்யனார் வந்தானா அப்புறம் தெரியும் சங்கதி. இவனோட போராடியே என் மொத்த உயிரும் போகுது” என்று அவள் உண்மைக்கும் அழுக்க,

“பே’ப்பா (பெரியப்பா)” என்ற மழலைக் குரலில் திரும்பினான்‌, ப்ரமோத்.

அழுது சிவந்த முகத்துடன், தலை முடி கலைந்து, உடை கசங்கி உதடு துடிக்க அவனிடம் ஓடினாள், ஈஷா இமயவள்ளி.

நான்கை தொட்டிருந்தவளைத் தூக்கியவன், “ஈஷா குட்டிக்கு அழுகை போச்சா? ம்ம்” என்று அவள் விழிகள் திரண்டிருந்த கண்ணீரை மேலும் அவன் துடைத்துவிட, அவர்களையே பார்த்திருந்தாள், ஷக்தி ஆராதனா.

“எப்படித்தான் இவன நீ சமாளிக்கறையோ மேகா. முக்கால் மணிநேரமா போராடி ஈஷாவ க்ளீன் பண்ணியிருக்கேன்” என்ற ஜான்வி,

“துருவ், பேபிகிட்ட இப்படியா நடப்ப? அவ முகத்தைப் பாரு? எவ்வளவு அழறா, உன் சிவா மாமா வந்தா என்ன சொல்லுவார். இனி இப்படி எல்லாம் பண்ணக்கூடாது, புரியுதா?” என்க,

துருவ், “அப்போ என் ஆணடாள்கிட்ட இனி இவ போகக்கூடாதுன்னு சொல்லி வைங்க” என்றான் அத்தனை நேர மௌனத்தைக் கலைத்து!

அமர்ந்திருந்த சோஃபாவின் பிடியில் அடித்தவாறு, “அடரா சக்க” என்று கத்தியிருந்தாள், ஷக்தி.

அதேநேரம் வாயிலில், “ஷக்தி” என்ற அழுத்தமான குரலில் அவளவன் வரவைத் தெரிந்தவள், துருவைத் தன்னோடு அணைத்துக்கொண்டாள்.

“உன்ன கத்தாதேன்னு எத்தன நடவத் தான் நான் சொல்லுறது. ஒன்னு சொன்னா கேட்கவே கூடாதுன்னுட்டு இருக்கீயா நீ” என்று வழக்கம் போல் அவன் ஆரம்பிக்கவும்,

ஈஷா, “ப்பாஹ்” என்று அவனிடம் தாவ முற்பட்டாள்.

மகளின் முகம் பார்த்தவன், “என்னாச்சு ஷக்தி ஈஷாவுக்கு” என்றான் ஷக்தியிடம் அதட்டலாக.

அதில் ஆற்றாமை பொங்க, “இவன நாலு அடியாவது அடியேன் சிவா. சின்ன பிள்ளைன்னு கூடப் பார்க்காம எத்தனை தொல்ல பண்ணுறான் அந்த பிள்ளையை” என்று லேசாக அழுகைக் கூட வந்துவிட்டது மேக வர்ஷினிக்கு.

“அண்ணி, அவ நல்லாத் தானே இருக்கா? எதுக்கு நீங்க அழறீங்க இப்போ?”

“அம்மாவாடி நீ எல்லாம்? புள்ள அந்த அழுக அழறா, கசங்கிப் போய் எப்டி இருக்கா பாரு? அத்தனையும் பண்ணீட்டு கமுக்கமா இருக்கறவனை ஒன்னும் சொல்லாத நீ” என்று ஷக்தியிடம் சண்டைக்கு சென்றாள் மேகா.

அதற்குள், “அப்பு” என்று நன்மதி ஓடிவர, அவளை சிவாவிடம் செல்லாது விரைந்து தூக்கிக்கொண்டான், துருவ்.

“டேய்” என்ற சப்தங்கள் அறையெங்கும் கேட்க, சிவாவிடம் சென்றான் துருவ்.

மகளை அதுவும் அவனின் ஆசை செல்ல மகளை தூக்கியபடி தன் எதிரே நின்றிருந்தவனை இளைய மகளை தூக்கியபடி பார்த்து நின்றிருந்தான், சிவனேஷ் வீரபத்திரன்.

அவன் ஜாம்நகர் எஸ்.பியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவுற்றிருக்கிறது.

அங்கிங்கு தலையில் நரை எட்டிப்பார்த்து அவன் முப்பதின் இறுதியில் இருக்கிறான் என்று கூறியது. அவ்வளவுதான்!

அதே பழைய கட்டுக்கோப்பான உடல்வாகும், அழுத்தமான இதழ்களும், மகள்களிடம் இளகும் மனமும், கடினமான முகமுமாய் இருப்பவன் ஷக்தியிடம் மட்டும் அவனின் வசீகரிக்கும் சிரிப்பு வெளிப்படும்.

“மாமா, ஆண்டாள்ல ஈஷா கடிச்சிட்டா, இதோ பாருங்க.” என்று பிள்ளையின் மேற்புற கையை அவன் காட்ட, அதில் ஈஷாவின் பல் வரிசையின் அச்சு அப்பட்டமாய் தெரிந்து சிவந்திருந்தது.

மேகா, “அதுக்குனு ஈஷா மேல நெயில் பாலிஷ் ஊத்துவியாடா நீ?”

அதை பிடித்துக்கொண்ட ஈஷாவோ சிவாவின் முகத்தை தன்னை நோக்கித் திருப்பியவள், “அப்பா, இச் பர்னிங் ஃபார் ஈசா” என்று உதட்டைப் பிதுக்கினாள்.

“அக்காவ கடிச்சியா நீ” என்று தகப்பன்‌ குரலில் சில டெசிபல் அழுத்ததைக் கூட தாங்காதவள், ‘ஓஓ’ என்று அழுகையைக் கூட்டியபடி ப்ரமோத்திடம் திரும்ப சென்றாள்.

“இத்தன நேரம் நெயில் பாலிஷ் ரிமூவர் வெச்சு அவ முகத்தையும் மூடியையும் பஞ்சு வெச்சு எடுக்கறதுக்குள்ள உயிரே போயிடுச்சு எங்களுக்கு. அவ கடிச்சா, எங்ககிட்ட சொல்ல வேண்டியது தானடா? நீயா எதுக்கு அவள இப்படி பாடா படுத்துற?” மேகா திரும்பவும் ஆரம்பிக்க,

“சரி விடுங்கண்ணி. ஒன்னுக்கு ஒன்னு சலச்சதில்லை. ஷிவ், ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க” என்றவள் ப்ரமோத்தின் கையில் இருந்த இளையமகளிடம்,

“இனி ஈஷா இந்த மாதிரி பெஹேவ் பண்ண, அம்மா ஈஷா கூட பேச மாட்டேன். பார்த்துக்க” என்றவள் தன் ஒன்பது மாத வயிற்றை பற்றியபடி அறைக்குள் சென்றாள்.

நன்மதியைத் தூக்கி இருந்த துருவோ, “நீ அவ என்ன பண்ணாலும் சிவா மாமாகிட்ட‌ இல்லேனா என்கிட்ட சொல்லு ஆண்டாள். அத்து அவள பார்த்துக்கறேன். சில்லி கேர்ள்” என்க, ஜான்வி அவன் பேச்சில் புருவம் உயர்த்தினாள்.

“ப்ரமோ” என்றவள் தன்னை மீறி கணவனை அழைத்திட, “நா சில்லி இல்ல, நீ தான். போடா” என்று அழுத்தமாக சொன்ன ஈஷாவை முறைத்தான் துருவ்.

“நோ, இட்ஸ் ராங் ஈஷா” என்று ப்ரமோத் அதட்ட,

“அவனும் பேட் (Bad) தான் பே’ப்பா” என்றாள் பிள்ளை.

“அடேய், இது மினியேச்சர் ஷக்திடா” என்றுவிட்டாள் ஜான்வி.

அழுகையில் அமர்ந்திருந்த மேகாவிடம் சென்ற ப்ரமோத் ஈஷாவை அவளிடம் தர, தாவி கட்டிக்கொண்டாள் மருமகளை.

ஈசன் ஆராவமுதனை அச்சில் வார்த்தபடி இருந்தாள், ஈஷா.

சிற்சில முக மாற்றங்களை தவிர்த்து அவள் மொத்தமும் தாய்மாமனின் உரு தான்.

அதை உணர்ந்தோ என்னவோ மகளுக்கு அவன் நண்பர் பெயர் போலொரு ஒற்றுமையிலேயே பெயர் வைத்திருக்கிறான், சிவனேஷ்.

மேகாவிற்கு நன்மதியைவிட ஈஷாவின் மேல் அதிகமாய் ஒரு பிடிப்பு இருக்க காரணமும் அதுவே தான்.

“ஈஷாகுட்டிக்கு வலிக்கிதா? இப்போ பர்ன் ஆகுதா தங்கத்துக்கு? அத்த ஸாரிடா” என்று அழுதவளை,

“நீ எப்போ குன்னூர் போற மேகா?” என்றான் ப்ரமோத்.

அதில் அவள் முகம் இறுக, “உனக்கு நானும் என் பையனும் தொல்லையா இருந்தா சொல்லிடு அண்ணா, எங்க வழிய பார்த்துக்கறோம்” என்க, சப்பென்று ஒரு அரையை வாங்கியிருந்தாள் அவள்.

“வழியப் பார்ப்பியா, எங்க போவ மேகா? இத உன்கிட்ட நாங்க எதிர்பார்க்கல. உங்கண்ணா அப்படித்தான் உன்னை நினைக்கிறாரா? சொல்லுடீ” என்று ஜான்வி அரைந்த கையுடன் அவளை உழுக்கினாள்.

“பைத்தியமாட்டம் ஏதாவது உளறிட்டே தான் இருப்பியா நீ? முழுசா ஏழு மாசமாச்சு அமுதன விட்டு நீ வந்து. அவன் என்னனானா? எப்டி இருக்கான் எதாவது கேட்டீயா? இல்ல உன் பையனத் தான் பார்க்க விட்டியா? இல்ல பார்க்கப் போனியா? கண்டதே காட்சி, கொண்டதே கோலம்ன்னு நினச்சிட்டு நீயா உன் வாழ்க்கையை கெடுத்துக்கற” என்றவள் ஆவேசமாய் பேச,

“அப்பா, மாமா வந்திருக்கார். உங்களப் பார்க்கனும்னு வெளிய கார் ஷெட்ல நிக்கறார்” என்று வந்து நின்றாள், பதிமூன்று வயது ப்ரத்வி.

“ம்ம்ப்ச் என்ன ஹனி, உள்ள கூப்பிட‌ மாட்டியா” என்றபடி அவன் வெளியேற,

“நா கூப்பிட்டேன் ப்பா. மாமா வரலேன்னுட்டார். ருதி தண்ணியும் மாமாவுக்கு சாப்பிடவும் எடுத்துட்டு போனா” என்றபடி பாவாடை தாவணியில் தகப்பனை பின் தொடர்ந்தாள் அவள்.

“எஸ்.பி ஸர் என்ன இன்னிக்கு இத்தன சூடா வந்திருக்கார்” என்றபடி அவர்கள் அறைக்குள் நுழைந்தாள், ஷக்தி.

ஆண்டாள் நன்மதி பிறந்த அடுத்த இரண்டு வருடங்களில் மீண்டும் தாய்மை உற்று ஈஷாவை பெற்றேடுத்திருந்தாள் அவள்.

நன்மதியோடு இல்லாத ஏக்கங்கள் அனைத்தையும் ஈஷாவை அவள் தாங்கிய சமயத்தில் ஈடு செய்திருந்தான், சிவனேஷ் வீரபத்திரன்.

ஆனபோதும், இப்போது மூன்று வருடங்கள் சென்று சிவாவின் பேச்சை சற்றும் காதில் வாங்காது மூன்றாவது குழந்தையை முப்பத்து ஐந்து வயதில் சுமப்பவளை அவன் என்ன தான் செய்ய முடியும்?

அவள் உடல்நிலையைப் பார்த்தவன் பிள்ளையை வேண்டாம் என்றிருக்க, அப்போது ஆரம்பித்த சண்டைகளும் சமாதானங்களும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

இருந்தும் சற்று மனதளவில் சுணக்கம் இல்லாமல் இல்லை சிவாவிற்கு.

“ரெண்டு போதாதா உனக்கு? அடுத்த வருஷம் நாற்பது வயசாகப் போகுதுடீ எனக்கு? இதில திரும்பவும் ஒன்ன பெத்துக்கறேன்னு நிக்கற நீ? தப்புப் பண்ணிட்டேன், உன் பேச்ச கேட்டேன் பாரு, அப்போவே நான் ஆப்ரேட் பண்ணியிருக்கனும். என்னைய சொல்லனும்” என்ற அத்தனை பேச்சு.

இப்போது, “தள்ளிப்போ ஷக்தி” என்றவன் பேச்சால் முகத்தைச் சுருக்கியவள், “ஸ்ஸ்” என்று மெல்ல முணங்கி அவள் நகர, “என்ன” என்றபடி அவள் கை பிடித்து அருகே வந்துவிட்டான்.

அவளின் துளி வலி கூட அவனுக்குத் தான் தாங்காதே!

“உன் புள்ளைங்க எல்லாரும் ஏன் இப்படி அப்பா கோண்டாவே இருக்குதுங்க? ப்பாஹ் என்னா ஒதை” என்றவள் அங்கிருந்த ஒற்றை சோஃபாவில் அமர,

அவள் அருகே குத்திட்டு அமர்ந்தவன், “வலிக்கிதா இல்ல ஒதைக்கரானா சரியா சொல்லு ஷக்தி” அதட்டினான் மீண்டும்.

அதற்கு அவனை முறைத்தவள், “இது மூனாவதுடா! வித்தியாசம் கூடவா எனக்குத் தெரியாது?” என்க, மின்னலாய் மீண்டும் ஒரு உதையை கொடுத்தது பிள்ளை.

“அப்பு, மாமா வந்திருக்கார்” என்று நன்மதி பட்டு பாவாடையை தூக்கியபடி உள்ளே வர,

“அமுதாவா?” என்றான் உள்ளூர அதிர்ந்தபடி.

“ஆமா, ஆமா. உங்கள பெரிப்பா கூட்டிட்டு வர சொன்னார்.” என்றவள் ஷக்தியின் வயிற்றை தொட்டுப் பார்த்தபடி,

“ம்மா, தம்பி தூங்கறானா? என்ன சாப்பிட்டான்?” என்று இரட்டை குடுமியை ஆட்டியபடி அவள் கேட்க,

“என்னாங்க” என்று சிவாவைத் தான் பார்த்தாள் அவள்.

“அம்மா” என்று திரும்பவும் நன்மதி அழைக்க, “ப்பாஹ்” என்று அறைக்குள் ஓடிவந்தாள், ஈஷா.

“பே’ப்பா கூப்தார்” என்க,

ஷக்தியிடம், “நீ வராத வெளிய. நான் போய் என்னுட்டு பார்த்துட்டு வரேன்” என்றவன் வெளியேறிவிட்டான் மகள்களையும் மனைவியையும் அறையில் வைத்து பூட்டியபடி.

“அம்மா”

“ம்மா”

“ஷக்தி”

“மம்மா”

என்று பிள்ளைகள் இருவரும் அவளை விதவிதமாக அழைக்க, எதற்கும் அவள் அசைந்தபாடில்லை.

அவள் எண்ணங்கள் முழுவதும் ஆராவமுதனிடமே தான் இருந்தது.

கடைசியாக நன்மதி, “ஆரும்மா” என்க, விழித்தவளை இரண்டு புறமிருந்தும் பிள்ளைகள் கட்டிக்கொண்டது.

“மம்மா, தம்பி எப்போ வருவான்”, ஈஷா திரும்பவும் ஆரம்பிக்க,

“ஈஷா, உள்ள இருக்கற பேபி கேர்ள்லா கூட இருக்கலாம்.‌ சோ, ஈஷாவுக்கு சிஸ்டர் கூட வரலாம் இல்லையா” என்க, முகம் கூம்பியது அவளுக்கு.

“அப்போ சிஸ்டர், பேபி ப்ரதர் வரமாட்டாங்களா?” என்று இரட்டை குழந்தையாக வெளிய வராதா என்று நினைத்து நன்மதி கேட்க,

“ஒரு பேபி தான் தங்கம் அம்மா டம்மிகுள்ள இருக்காங்க” என்றாள் ஷக்தி, நன்மதியின் கன்னத்தை லேசாக கிள்ளி.

“குஜராத் வர தெரிஞ்சவனுக்கு வீட்டுக்குள்ள வர முடியாதா?” கத்தியபடி வெளியே வந்தான், சிவனேஷ்.

ஈசன் ஆராவமுதன், முப்பதின் இறுதியில் முகம் இன்னும் கடுத்து கடினமாகி, அவன் சிரித்த முகம் காணாது அழுத்த முகமாக வியாபித்து ஒருவித பெரிய மனித தோற்றத்துடன் நின்றிருந்தவன் கையை பிடித்தபடி நின்றிருந்தான் அவனின் இரண்டாவது மகன், ஷ்ரவன் இமயவரம்பன்.

அமைதியாய் தந்தையை ஒட்டி நின்றிருந்தவன் பிள்ளை முகம் அத்தனை வாட்டியது ப்ரமோத்தையும் சிவாவையும்.

ஆறு வயது குழந்தை அவனுக்கு இன்னும் பேச்சு வரவில்லை. அதுவேறு அவர்களை கொல்ல இப்போது ஆராவமுதன் மேகாவின் பிரிவு அவர்களின் இரு குழந்தைகளின் எதிர்காலத்தோடு அவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியில் தொங்குகிறது!

சிவாவின் முகத்தைப் பார்த்தவண்ணம், “நா ஆராவ தான் பார்க்க வந்தேன்” என்று நிறுத்தி, “எஸ்.பி ஸார்” என்றான் அழுத்தமாய்.

“பர..” என்று திட்ட வந்தவனை, ப்ரமோத் பார்வையால் அடக்கினான்.

ப்ரமோத், “சோ, ஸார் ஆராவ மட்டும் தான் பார்க்க வந்திருக்கீங்க, ரைட்?”

“ம்ம்”

ப்ரமோத், “ருதி, ஷ்ரவன அத்தகிட்ட கூட்டிட்டு போங்க” என்றான் தன் இளைய மகளிடம்.

“ஷ்ரவன் குட்டி, அம்மா பார்க்க வேண்டாமா” என்று பிள்ளையிடம் கேட்க, அவன் பால் முகம் நொடியில் விழுந்துவிட்டது.

ஆராவமுதனின் விரல்களை இறுக பிடித்துக்கொண்டவன் தந்தையை விட்டு இம்மி நகரவில்லை.

“ப்பா” என்ற துருவின் குரல் கேட்கவும், அமுதன் அழுத்தமாய் நின்றிருந்தானே தவிர்த்து, மகனிடம் திரும்பவில்லை.

“இவன” என்று பல்லைக் கடித்த சிவா, “துருவ், வா இங்க” என்க, பாய்ந்தோடி மாமானிடம் வந்தான் அவன்.

அத்தனை ஏக்கம் அவன் கண்களின். தகப்பன் ஒரு பார்வை தன்னை பார்க்கமாட்டானா என்ற பரிதவிப்பு வேறு.

சிவா, “ஷ்ரவன கூட்டிட்டு அம்மாகிட்ட போ” என்க, ஷ்ரவன் அண்ணனைத் தான் பார்த்து நின்றிருந்தான்.

அவன் பிடி மெல்ல இளகியது.

உள்ளுக்குள் இருந்த மேகாவிற்கு அத்தனை தவிப்பு. ஷ்ரவனை பார்க்க அத்தனை ஏக்கமும் பதட்டமும் போட்டிபோட அமர்ந்திருந்தவளை ஆத்திரமாய் பார்த்து நின்றிருந்தாள், ஜான்வி.

துருவ் அமுதனை நெருங்க நெருங்க அத்தனை இறுக்கம் கூடியது அவனிடம்.

“ப்பா, சிம்பா வேணாமா” என்றவன் அழுக, தந்தையுள்ளம் உள்ளூர கலங்கித் தவித்தது.

“ப்பா” என்று அவன் அமுதனை அணைத்துக்கொள்ள அவன் நெஞ்சு வரை வளர்ந்திருந்த மகனை அணைக்க முடியாது அத்தனை தவித்தான் தகப்பன்.

விழிகள் கலங்கித் தவிக்க அவன் முகத்தை திருப்பிக்கொண்டான்.

“ப்ரமோத்’ண்ணா இட்ஸ் இனாஃப். இதுக்கு மேலையும் என்னைய கன்ரோல் பண்ணாதீங்க” என்றவன், “கலீசி (Khaleesi) ரெண்டு பேரையும் அத்தகிட்ட கூட்டிட்டு போ” என்று விக்ருதியிடம் சொல்ல, துருவையும் ஷ்ரவனையும் இழுத்துக்கொண்டு ஓடினாள் அவள்.

பிள்ளைகள் தலை மறைந்ததும் ஆராவமுதனை சிவா அரைந்த அரையில் அவன் உதடுகள் கிழிந்தது.

“புள்ள வந்து அணைக்கறான் அத்தன அழுத்தம் கேட்குதாடா பரதேசி” என்று திரும்பவும் அவன் அடிக்க, “சிவா, போதும் உள்ள இழுத்துட்டு வா இவன” என்ற ப்ரமோத்தின் பேச்சால் ஆராவமுதனை இழுத்துக்கொண்டு வந்தான் சிவா.

உள்ளே வந்த ஆராவமுதனின் நிலையைப் பார்த்த ஜான்வி, “அமுதா” என்று அவனிடம் விரைய,

“அம்மா” என்ற சொல்லைக் கேட்டு அனைவரும் ஸ்தம்பித்து விட்டனர், அமுதனைத் தவிர்த்து!

★★★

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
13
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

5 Comments

  1. இடைப்பட்ட காலத்தில் நிறைய நடந்திருக்கும் போல்…அமுதன்- மேகா பிரிவா??? என்னாச்சு?? ஷக்திக்கு மூன்றாவது குழந்தையா?? ரொம்ப சந்தோஷம்…❤️❤️

    1. Author

      ஆமாம் 🤩 மூன்றாவது தான் highlight 😆
      பாகம் 2 அதற்கான லீட் தான் இனி வரும் மூன்று epilogue பகுதிகளும் 😍

  2. அமுதூறும் மேகங்கள் – அமுது- மேகா பற்றிய பாகமா??😊💐

  3. அமுதூறும் மேகங்கள் – அழகான தலைப்பு

    பள்ளி காலம் தொட்டு தொடர்ந்த காதல் கதை கேட்க ஆவலாக உள்ளோம்.

    வில்லங்கத்துடனே தான் கதை ஆரம்பிப்பேன் என்ற சபதமா எழுத்தாளரே?

    பரபரப்பான ஆரம்பம்.

    பாசப்பினைப்புடன் கூடிய உறவுகள்.