
விதிகள் மீறிய ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், குடிசை பகுதிகள், அங்கீகாரம் பெறாத கட்டிடங்கள், உரிமம் முடிவடைந்த நுகர்வோர் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலை என்று நகரின் உள்ளும் புறமும் ஏராளமான இடங்களை/கட்டிடங்களைக் கோவை மாநகரில் களையெடுக்க ஆரம்பித்திருந்தது ஆட்சியரின் கீழ் இயங்கும் ஷக்தியின் குழு.
அதில் தலைமை ஆட்சியராக இருந்தாலும் முழு அதிகாரம் ஷக்திக்குக் கொடுத்திருந்தனர். அவளுக்குக் கீழ் மூன்று குழுக்கள் இயங்க, அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுத்து உடன் பணியில் இருந்தது புகழேந்திரனின் குழு.
சிறிய நபர்கள் துவங்கி பெரும் புள்ளிகள் வரை தொண்டத் தொண்ட எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது.
“இண்டஸ்ட்ரீ, காலேஜ்காரனுங்க தான் ரொம்ப பண்ணுவாங்கன்னு பார்த்தா, ஃபைன் கட்டிட்டு கம்முனு இருக்காங்க. இந்த நடுவுல இருக்கறவன் தொல்ல தான்” என்று அலுத்தான் சம்பத், ஷக்தியின் பிஏ.
“இதுல லஞ்சம் கொடுக்கறவன் கிட்ட இருந்து தப்பிக்கறது தான் ஸர் பெரும்பாடு” என்றான் மற்றொருவன்.
“விட்டா கையில கொண்டுவந்து திணிப்பாங்க போல! அதையும் வீடியோ எடுத்து ‘லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர், குற்றம் நடந்தது என்ன’ ந்யூஸ்ல போட்டு கிழிப்பான்னுங்க, அவனுங்க தப்ப மறைக்க” என்றார் அந்த குழுவில் இருந்த மூத்த நபர், விஜயன்.
“ரொம்ப யோசிக்காதீங்க விஜயண்ணா. இவனுங்க இத்தன பண்ணுவாங்கன்னு தானே ப்ரிகாஷனா நாம இத்தன வேலை பார்த்துட்டு போறோம்” என்றாள் ஷக்தி.
ஷர்ட் பட்டன், வாட்ச், கண்களில் அணியும் கண்ணாடி, பேனா என்று அவர்கள் ரைட் செல்லும் போது மைக்ரோ கேமரா, ரெக்கார்டர் எல்லாம் பொருத்திய படி தான் செல்வர் முன் எச்சரிக்கையாக.
இருந்தும் ஏதாவது ஒரு இடத்தில் அவர்களைத் தப்பாகச் சித்தரித்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் போட்டு தவறான செய்திகளும் பரவாமல் இல்லை.
அன்று அவர்கள் நகரின் முக்கிய இடத்தில் அமைந்திருந்த ‘ரூக்ஸ் ப்ளாஸா’ என்ற முறையற்ற அனுமதி பெறாத கட்டிடத்திற்குச் சீல் வைத்திருந்தனர்.
அது அந்த பகுதியில் ஏதோ ஒரு பெரும் புள்ளியின் கட்டிடம் போலும், இல்லாத பிரச்சனையாக அத்தனை தகராற்றில் ஈடுபட்டிருந்தான் அவன். இதில் மிரட்டல்கள் வேறு ஏகமாய் வர, மீடியாவை முன்னிறுத்தி போலிஸாரை வைத்து அந்த நபரைக் கைது செய்திருந்தாள் ஷக்தி!
“இன்னிக்கு இது கண்டிப்பா பெரிய ந்யூஸ் தான். அந்த ஆள் பெரிய கை வேற, என்னோட இருந்தனால உங்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க சொல்லியிருக்கேன் கலெக்டர் ஸர்கிட்ட. கொஞ்சம் கவனமா இருங்க. டிஸ்பர்ஸ்” என்றவள் வீட்டிற்குச் சென்றாள்.
அடுத்த நாள் சனி, ஞாயிறாக இருக்க, தொடர் ஓட்டம் உடலளவில் சிறு சுணக்கை ஏற்படுத்தியிருந்தது.
லாவண்யா, ஆராவமுதன், மேகா இப்போது கோவை வீட்டிற்கே வந்துவிட, முன்பிருந்த தனிமையும் பாதுகாப்பின்மையும் வெகுவாக குறைந்த உணர்வு ஷக்தியிடம்.
தவிர்த்து, அனைவரும் ஒன்றாக இருக்கும் போது வரும் தைரியத்தைத் தான் இத்தனை நாட்கள் அவர்கள் இழந்திருந்தனர். அதுவும் மீட்கப்பட்ட உணர்வோடு இருந்தனர் அவர்கள் நால்வரும்.
“இப்போதான் வீடு வீடாட்டம் இருக்கு” என்றபடி உள்ளே வந்தவளை,
“இன்னிக்கு என்ன இப்படி ஃபையர் விட்டுட்டு வந்திருக்க ஆரா” என்றாள் மேகா.
“ஃபையரா? அதவிட வேற வேர்ட் இருக்கான்னு பாருங்க அண்ணி. செம்மையா பர்பாமென்ஸ் பண்ணிட்டு வந்திருக்கேன், லோக்கல் ந்யூஸ்ல வந்துச்சா?” என்று வினவியபடியே அவள் அறைக்குள் சென்றாள்.
“லோக்கல் ந்யூஸா? யோவ் ப்ரமோத் கால் பண்ணிக் கேட்டான். நீ வேற” என்றவள் பதில் காற்றோடு அவள் காதையும் எட்டியது.
இரவு உணவை முடித்துக்கொண்டு படுக்கும் நேரம் பதினென்றைத் தாண்டியிருந்தது.
“மூடிக்கொண்டு நாளைக்கு மால் வரவும்! நான் உன்ன பார்க்கனும், பேசனும், கடலை வறுக்கனும். டாட்” என்று குறுஞ்செய்தியை சிவாவிற்கு அனுப்பினாள் ஷக்தி.
“வீட்டுக்கு வரேன்டீ”
“நோ, வெளியே போகலாம்”
“மேகாவ கூட்டிட்டு வா”
“அவங்க புருஷனோட நாளைக்கு குன்னூர் போறாங்க” உடனே பதில் வந்தது.
“ரைட்.. மார்னிங் டைம் சொல்லுறேன். இப்போ தூங்கு, குட் நைட் எறும” என்றவன் ஆப் லைன் சென்றுவிட்டான்.
காலை பத்து மணியளவில் அந்த மாலில் சிவாவிற்காகக் காத்திருந்தாள் பெண்ணவள்.
“பில்டிங் பின்னாடி இருக்கற ஸ்ட்ரீட் வா” என்றொரு குறுஞ்செய்தி வந்தது அவனிடம்.
யோசனையுடன் அங்குச் சென்றால், சிவாவின் கையில் சிக்கியிருந்தான் அவன்.
தரணி, சில நாட்களுக்கு முன்னர் ஹைவேஸ்லில் ஷக்தி சீல் வைத்த கட்டிடத்தின் உரிமையாளன் அவன். அவனை அடையாளம் காணவும் அவளால் முடிந்திருந்தது, காரணம் அன்று நடந்த நிகழ்வு!
“என்னச்சு ஷிவ்?” என்று கேட்டபடி வந்தவள் அத்தனை ஆத்திரத்துடன் பார்த்து நின்றிருந்தான் தரணி.
“எல்லாம் உன்னாலதான்டி” என்றவன் அவளை அடிக்கப் பாய, சிவா கிடுக்கு பிடியில் நிறுத்தியிருந்தான் அவனை.
புருவ சுருங்கலுடன், “தேவையில்லாம பேசாத. என்ன வேணும்?”
“என்ன வேணுமா? ***” என்றவன் முறையற்ற வார்த்தை பிரயோகத்தில் பட்டென்று அரைந்துவிட்டாள் அவனை.
அதில் அவன் ஆத்திரம் மேலும் மூல, ஷக்தியைக் கத்தியால் குத்த முனைந்தான். அதில் அவள் தப்பவும், சிவாவின் கையைக் கீறிவிட்டு ஷக்தியையும் தள்ளி விட்டு ஓடினான்.
அந்த திடீர் தாக்குதலை எதிர்ப்பாக்காத சிவா, அங்கிருந்த குழியில் விழ அவனைத் தொடர்ந்து விழுந்த ஷக்தியோ அங்கிருந்து மரக்கிளையைப் பிடித்தபடி கீழே விழாது தன்னை நிலைப் படுத்திக்கொண்டாள்.
அத்தனை ஆத்திரம் அவளுள் மூழ்ந்தது. “ஷிவ், நான் அவன பிடிக்கறேன். நீ மேல வா” என்றவள் சற்று நிதானித்து அவன் சென்ற வழியில் ஓடினாள்.
அது ஒரு கட்டி முடிக்கப்படாத கட்டிடம். அதற்குள் சென்றவனை எங்குச் சென்று தேட என்றவள் நினைத்து நிற்க, சரியாக அவள் கண்ணில் சிக்கிக்கொண்டான் அவன்.
அதே சமயம், காவலன் செயலியை உயிர்ப்பித்திருந்தாள் அவள்.
அங்கு நிறைய அறைகள் இருக்கத் தரணி ஒவ்வொரு அறைக்குள்ளும் புறமும் ஓடி அவளைக் கலைத்து, ஏமாற்றப் பார்த்தான்.
அவனின் யுக்தியைச் சற்று நேரம் சென்று புரிந்தவள் ஓடுவதை நிறுத்திவிட்டு அங்கு மையமாய் இருக்கும் அறையை நோக்கிச் சென்றாள்.
அந்த அறை நடுநாயகமாக இருக்க அதனைச் சுற்ற சுமார் ஏழு அறைகள் இருந்தன. அவற்றில் மூன்று அறையின் வழி வெளியே தப்பிக்கலாம் தான், ஆனால் கீழே குழி இருக்க நிச்சயம் குதித்தால் காலில் பலத்த அடி நேரும்! அவனை எளிதாகவும் பிடித்துக் கொள்ளும் படியாகவும் இருந்தது.
காவலன் SOS செயலியில் அவள் செய்தி கொடுத்துச் சரியாக பத்து நிமிடங்கள் கடந்திருந்தது. நிச்சயம் காவல்துறையினர் வந்துவிடுவார்கள் தான். ஆனால் அதற்குள் இவனைத் தப்பிக்க விடாது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தவள் கண்ணில் பட்டது அந்த பொருள்.
சரியாக அதேசமயம், தரணி அங்கிருந்த கயிற்றின் உபயத்தால் கீழே செல்ல முயன்று கயிற்றைப் போட்டு இறங்கினான்.
அவர்கள் இருந்தது மூன்றாவது மாடியில். தரணி ஆட்டம் காட்டியதில் கீழே இருந்து மேலே வரை வந்திருந்தனர் ஷக்தியும் அவனும்.
இதில் அவன் கீழே இருந்தே தப்பியிருக்கலாம் தான் ஆனால் ஷக்தி பள்ளத்தில் விழுந்து அவனைத் துரத்தவும் அவன் தன் திட்டத்தை மாற்றிவிட்டான். காரணம் ஷக்தியின் அக்ரோஃபோயியா!
அக்ரோஃபோபியா (Acrophobia) உயரமான இடத்தைப் பார்த்தால் ஏற்படும் பயம் தான் இந்த அக்ரோஃபோபியா.
ஷக்தியிடம் இருந்த இந்த பயத்தை நன்கு அறிந்திருந்த தரணி அவளை மேலே கூட்டிச்சென்று தப்பிக்கப் பார்த்தான். ஆனால் அது அவனுக்கு எதிராகத் திரும்பியது.
அவளால் நிச்சயம் படியில் இறங்கிச் சென்று அவனைப் பிடிக்க முடியாது. கூட அவன் செல்லும் வழி கயிற்றின் உபயத்தாலும் செல்ல முடியாது.
யோசித்தாள், அந்த கயிற்றை வெட்டியும் விடமுடியாத படி உறுதியாக இருந்தது. சட்டென்று மூளையில் அவள் பார்த்து வந்த பொருள் பொறிதட்ட, துணிந்து எடுத்து வந்தாள்.
என்ன வந்தால் விசாரணை கமிஷனும் மனித உரிமை கமிஷனும் தானே வருவார்கள் என்ற நினைப்புடன், கையிலிருந்த ஸ்னைப்பரை கீழே இறங்கி ஓட தயாரான தரணியின் காலை நோக்கிக் குறி பார்த்தாள்.
அவள் வைத்த இலக்கு தான் தப்பாகுமா. நிமிர்ந்து நின்று அவள் ரைபிளை ஏந்தியபடி கீழே ஓடுபவனைச் சூட்ட நொடி, அவள் பின்னிருந்து பாய்ந்து வந்தது மற்றொரு தோட்டா.
அவள் சுட்ட தோட்டா தரணியின் காலை துளைக்க, அவள் பின்னே இருந்து வந்தது அவன் பின் தோள்பட்டையைப் பதம் பார்த்திருந்தது.
எஃகாய் விரைத்து நின்று, துளி பிசகாகு, கழுகாய் அவள் கண்கள் கூர்ந்து பார்த்துச் சுட்டதைப் பார்த்த புகழேந்திரனுக்கு அவள் செய்கையில் மலைப்பு.
தேர்ந்து பயிற்சி எடுத்த அவனால் சுடமுடியும் துல்லியம் அவளிடம் இருந்ததை அவனால் மெச்சாமல் இருக்க முடியவில்லை.
அவள் ரைபிளை கையில் எடுத்த பாங்கு, அதை லோட் செய்து எடுத்துப் பிடித்த ஸ்டைல், குறிபார்க்க எடுத்துக் கொண்ட சில விநாடிகள், அதை சுட்டபின் கீழே இறக்கிய விதம் என்று அனைத்திலும் அவளின் கெத்து கொள்ளையிட்டது அவனை. உள்ளூர அதை அத்தனை ரசித்தான்.
அவனின் நிலை புரிய, “மிஸ். ஷக்தி ஆராதனா இமயவரம்பன், கோல்ட் மேடல் இன் ரைபில் சூட்டிங். பர்சனலி ட்ரைண்ட் பை ஆர்மி ஆபிசர்ஸ்” என்ற சிவாவின் பேச்சைக் பின்னால் இருந்து கேட்டவனால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை.
“ஹோ” என்றவன் அவளையே கூர்ந்து பார்த்திருந்தான்.
ஆளுமை. பெண்ணவளின் அந்த ஆளுமையில் வீழ்ந்து போனான் ஆணவன்!
“ஷிவ், இது SSG 3000 ஆர்மி யூஸ். இங்க எப்படி வந்துச்சுன்னு விசாரி” என்றபடி அவள் அந்த ரைபிளைத் தூக்கிக் கொண்டே நடக்க,
“மேம், அத ஹேன்ட் ஓவர் பண்ணுங்க” என்ற புகழின் குரல் அவளைத் தடுத்தது.
“ஹான்.. என்ன டி.எஸ்.பி ஸர், இப்படி சொல்லுறீங்க?” என்றவள் நக்கலாகச் சிரிக்க, அவள் நக்கலில் எரிந்தவன் அவள் முக வசீகரத்தில் வீழ்ந்தான்.
“வாட்?”
“இது ஸ்னைப்பர் ரைபில்! அப்படியே நீங்கக் கேட்ட உடனே கொடுக்க முடியாது. நான் வேற அவன சுட்டிருக்கேன், பொசுக்குனு உங்ககிட்ட எப்படிக் கொடுக்க முடியும்?? ம்ம்ம்”
“அதுக்கு ஸ்பாட்ல இருந்து எவிடென்ஸ் வெப்பன எடுத்துட்டு போவீங்களா டெஃப்டி கலெக்டர் மேடம்” அவனிடமும் இடக்கான கேள்வி வர,
“ஓ நீங்க தான இன்சார்ஜ் ஆபிசர்? ரைட். ஷிவ், மொதல்ல இந்த ஸ்னைப்பர பிக் எடுத்து ப்ரமோத் அண்ணாவுக்கு அனுப்பீடு. தென், கமிஷ்னர் ஆபிஸ்’ல இன்பார்ம் பண்ணிட்டு, நாயகம் ஸர் டீம் வந்து என்கிட்ட இருந்து இத எடுத்துட்டுப்போக சொல்லு. மறக்காம பேப்பர்ஸ் கொண்டுவர சொல்லு மேன். அவங்க வரவரைக்கும் ஐ வில் பி ஹெர்” என்றவள் அங்கு ஓரமாய் அமர்ந்து கொள்ள, தரணியை அதற்குள் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தான் புகழ்.
ஷக்தியிடம் விசாரித்து, ஒரு எழுத்துப்பூர்வ பதிவையும் வாங்கிக் கொண்டான்.
“ஓகே மிஸ்டர் புகழ். கமிஷனர் ஆஃபிஸ்’ல இருந்து வருவாங்க, ஸ்பார்ட் மார்க் பண்ணிட்டு எவிடென்ஸ் கலெக்ட் பண்ணிப்பாங்க. நீங்க ஃபாலோ பண்ணிக்கோங்க” என்றாள் தன் அளவில் காய்களைச் சரியாக நகர்த்தி பாதையைச் சீராக்கினாள்.
அவள் தெளிவில் ஒரு மெச்சுதல் அவனிடம். அவளை விட்டுத் தள்ளி சிவாவிடம் வந்தவன்,
“யாருடா ப்ரமோத்?”
“விஜயவாடா கலெக்டர்”
“பிக்சர்கே வராத ஆளுக்கு எதுக்கு பிக் அனுப்பனும்?”
“அந்த அவர் தானே ஷக்திக்கு சூட்டிங் சொல்லிக்கொடுத்தது” என்றான்.
“ஆர்மி ஆபிசர்ஸ் சொன்ன?”
“அது ப்ரமோத் அண்ணா அப்பா, எக்ஸ் மேஜர் ஜெனரல். இது ஒரு சேஃப்டி மெசர், அவ்வளவு தான். சூட் பண்ணா அண்ணாவுக்கு தெரியாம எதுவும் நாங்க செய்ய மாட்டோம். ப்ரமோத் அண்ணா, ஷக்தி, மேகா, அமுதா, நான் எல்லாருக்கும் அவர் தான் மாஸ்டர்” என்றான்.
ஒரு புருவ சுருங்கலுடன், “நீயும் தனியா ட்ரையின் ஆகியிருக்கியா என்ன?”
“ஆமா” என்றான் அலட்டாது.
ஏனோ சிவாவின் பதில் புகழேந்திரனுக்கு பிடிக்காது போனது, வழக்கம் போல்.
வேலைகள் எல்லாம் முடிந்து, ஷக்தியை அனுப்பிவிட்டு, நாயகம் டீம் வந்ததும் அந்த இடத்தை சல்லடையாகத் தேடியதில் நிறைய கை துப்பாக்கிகளும் ஸ்னைபர்களும் கையகப்படுத்தப் பட்டது.
விஷயம் பெரியது என்றும் தெரிந்து போனது புகழேந்திரனுக்கு.
உயர் அதிகாரிகள் அந்த கட்டிடத்தைப் பார்வையிட வந்துவிட, விசாரணை முடுக்கிவிட பட்டிருந்தது. இதுவெல்லாம் முடியவே மாலை ஆகியிருந்தது.
அரசு மருத்துவமனையில் காவலர்கள் பாதுகாப்பில் தரணிக்குச் சிகிச்சை நடந்துகொண்டிருந்தது.
ஆபத்தான தாக்குதல் இல்லை என்றாலும் அவனை இரண்டு நாட்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்றனர்.
“அஞ்சு பிசி கூடவே இருக்க மாதிரி பார்த்துக்கோங்க புகழ். டே & நைட் வாட்ச் பண்ணிட்டே இருங்க, கண்டிப்பா இவன காப்பாத்த இல்ல அட்டாக் பண்ண வாய்ப்பிருக்கு.” என்று அவனுக்கான அறிவுறுத்தலைக் கொடுத்துக் கொண்டிருந்தார் மாவட்ட எஸ்பி.
“அப்புறம் அந்த டெஃப்டி கலெக்டர், செக்யூரிட்டி டைட் பண்ணுங்க. மேலிட ஆர்டர்” என்று கடைசியாக அவர் சொல்லிச் செல்லவும் தான் அவனுக்கு ஷக்தியின் எண்ணமே வந்தது.
அவனிட்ட கணக்கின் படி, ஷக்தியின் சமயோசிதம் அவனுக்குப் பிடிக்காது போனது!
ஆனாலும் அவளைப் பிடித்திருந்தது இப்போது. அவளுடன் பயணிக்க ஆரம்பித்த இந்த மூன்று மாதங்களில் அவன் மனதில் கல் எறிந்திருந்தாள், ஷக்தி ஆராதனா.
அவளின் பதவியும் சமூக அந்தஸ்தும் அதில் அடக்கம் என்றாலும் அவளின் ஆளுமை.
அந்த ஆளுமையில் கண் கொட்டாது மனதையும் அவனையும் இழந்திருந்தான், புகழேந்திரன்.
அதிலும் அவன் தூங்கும் நேரங்களில் அவளின் அந்த சிரிப்பு அவனை மூன்று மாதங்களாக அவன் நித்திரையைக் காவு வாங்கியிருந்தது.
“ம்ம்ப்ச்.. இவள யாரு பெரிய பருப்பு மாதிரி அவன சுடச் சொன்னது. ஸ்னைபர் இருந்தா ரெக்கவர் பண்ணுறத விட்டுட்டு, இதெல்லாம் தேவையா.. என்னைய கூப்பிடறது விட்டுட்டு, sos வேற இன்பார்ம் பண்ணி.. ச்ச” என்று ஷக்தியின் இருப்பிடம் செல்ல கிளம்பினான்.
“கார்த்தி, ஷக்தி மேம் வீட்டுக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு காட்ஸ் போடுங்க. அவங்க கூட ஒரு ஷீல்ட் (பாதுகாவலர்) இருக்கற மாதிரி பார்த்துக்கோங்க” என்று பேசியபடியே ஷக்தியின் வீட்டிற்கு வந்துவிட்டான்.
கடந்த சில நாட்களாக அவன் வேலை நிமித்தமாக அங்கு வருவது அதிகரித்திருந்தது. இரவு நேரம் சென்றால் அவன் தான் ஷக்தியை வீட்டில் விடுவது, ஏதாவது மிக முக்கிய இடத்தை அவள் சீல் வைப்பது, சண்டை என்று வரும் நாட்களில் கூட அவனே முன்வந்து அவளை அழைத்து வந்திருந்தான்.
இப்போது அவளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மீதுற, காவலுக்கு ஆட்களை இணைத்திருப்பதை ஒரு சாக்காக வைத்து அவளைப் பார்க்க வந்திருந்தான், புகழேந்திரன்.
கதவு திறந்திருந்தது. நாகரிகமாக அவன் அழைப்பு மணி அடிக்க எண்ணி எதேச்சையாக உள்ளே பார்க்க, அங்கு ஷக்தி சிவாவின் அணைப்பில் அடங்கி நின்றிருப்பதையே!
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
19
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஆம், ஒன்றாய் இருக்கும் போது உணர்வுகளின் அலைப்புறுதல் குறைந்து நிம்மதியும் பாதுகாப்பு உணர்வும் கூடும்.
பெண்ணவள் ஆளுமையில் வீழ்ந்த ஆணவன். ✨
பிக்சர்ல வராத ஆளுக்கு எதுக்கு பிக்சர். 🤣🤣
எந்த வகை திறமையையும் இவனை விட அதிகமாக பெற்றுவிடக் கூடாதா அவன்.
அவளது கம்பீரத்தில் மனம் கரைந்து அவளை காண வந்தவன் காண நேர்ந்தது சிவாவின் அணைப்பில் அடங்கி இருந்த சக்தியை. ❤️