Loading

விடிவெள்ளி இன்றும் தன் தரிசனத்தை பாரில் மென்மையாய் அழுத்தியிருக்க, ஆதவன் கிழக்கில் மெல்ல தலைத் தூக்க ஆரம்பித்திருந்த வைகறை நேரம்.

கூடல் முடிந்த புதுபெண்ணின் வெட்கத்தைப் பூசியது போல் பரியவனின் தரிசனத்தால் சிவந்து நின்றிருந்தாள் வானமகள்.

குழைத்த குங்குமமும் மஞ்சள் கலந்த நிறமாக வான பெண்ணவள் அத்தனை கண்ணைப் பறித்தாள் அதிகாலை வேலையில். 

திறந்திருந்த சன்னல் வழி தென்றலும் குளிரும் மென்மையாய் தழுவ, சிவா இன்னும் ஷக்தியை தழுவிக்கொண்டான் அழுத்தமாய்.

வானபெண்ணின் வெட்க நிறம் மெல்ல மெல்ல சன்னலோடு அவர்கள் இருந்த அறைக்குள் பிரவேசிக்க, அதில் துயில் கலைந்தாள் சிவாவின் ஷக்தி.

கணவனின் இறுகிய அணைப்பில் சுருண்டிருந்தாள் பெண்ணவள். 

கண்சிமிட்டாது கேள்வனையே பார்த்திருந்தவள் மனம் நிர்மலமாக இருந்தது. அவன், அவளின் ஷிவ் மட்டுமே இப்போது அவள் கண்களுக்கு தெரிந்தான்.

அடர்த்தியான மீசையும், பட்டை உதடுகளும் சற்றே எட்டிப் பார்த்த தாடி முடிகளும் அது வளர்ந்திருந்த குட்டியாய் புஸ்ஸேன்று இருந்த அவன் கன்னங்களும் என அவள் பார்வை மெல்ல அவற்றை வருடி கடைசியாக அவளை இப்போது ஈர்க்கும் அழுத்த மூடியிருந்த அவனின் கண்களில் வந்து நிலைத்தது!

அவை கூறாத செய்திகளா அவளுக்கு? அவன் பேச நினைக்காததை எல்லாம் அவன் விழியசைவுகள் அவளுக்கு உணர்த்திவிடுமே, அவன் எண்ணத்தின் பின்பமாய் உணர்வுகளின் சங்கமமாய் அவள் மீதான அன்பையும் காதலையும் துளிகூட மறைக்காது அனைத்தையும் புடம் போட்டு அவளிடம் காட்டிவிடும் அவனின் நயனங்களின் மீது இப்போது பெரும் காதல் கொண்டிருந்தாள் அணங்கு.

பட்டென்று அவன் தோளில் கை வைத்து அவளை வசீகரிக்கும் அவன் கயலுக்கு அழுத்தமாய் முத்தமிட்டிருந்தாள் ஷக்தி.

யோசிக்கவெல்லாம் இல்லை. முதலில் எதற்க்கு யோசிக்க வேண்டும்? அவள் கணவன் அவன் என்ற நிலைப்பாட்டை அவள் ஆழ பதிந்திருந்தால் மனதில். 

இனி தடையேது? 

வானமும் புலர்ந்திருந்தது கூட அவளுள் காதலும் மலர்ந்திருந்தது!

“தப்பில்ல தப்பில்ல.. இன்னும் கொஞ்சம் நேரம் கூட இப்படி மார்னிங் கிஸ் கொடுக்கலாம்” கண்களை திறவாது அவன் சொல்ல, சட்டென்று உள்ளதில் ஒரு தடுமாறலுடனான ஒரு தயக்கம் பெண்ணிடம்.

அவளை அணைத்திருந்தக் கையில் இன்னும் அழுத்தம் கூட்டியவன், “நேத்து மார்னிங்ல இருந்து என் பொண்டாட்டியோட பர்பாமென்ஸ் கொஞ்சம் அதிகமாதான் இருக்கு. என்ன நான் தான் ஒன்னும் தெரியாத தத்தியா இருக்கேன் போல” என்றபடி அவன் மெல்ல கண் திறக்க, ஒரு விரிந்த சிரிப்பு அவளிடம்.

“அது.. உனக்கு பிடிக்காதோன்னு..” என்றவள் இழுக்க, அவளை அப்படியே பிரட்டி தனக்கு கீழாக கொண்டு வந்தவன், அவளின் மேல் தன் பாதி பாரம் படும்படியாகப் படுக்க, விழிகள் தெறிந்துவிட்டது பெண்ணவளுக்கு.

“ஷிவ்?”

“யாருடி இவ? உனக்கு தான் மேடம் என்மேல் லவ் வர லேட் ஆகியிருக்கு. நானெல்லாம் உன்ன லவ் பண்ண தொடங்கி மாசமாச்சு மண்டே” என்று அவள் நெற்றியில் முட்டியவன்,

ஒரு ஆழ்ந்த பார்வை அவளை பார்த்தபடி, “பிடிச்சிருக்கு தான ஷக்தி உனக்கு” என்றான் ஒருவித தீவிர குரலில்.

அவள் கண்களில் ஒரு அலைப்புறுதல். அவன் எதிர்பார்த்த அந்த உணர்வு அவளின் விழிகள் இல்லை. மாறாக வேறு ஒன்று, பிரித்தறிய முடியாத ஒரு கேள்வியுடனான பாவம்.

சட்டென்று அவளை விட்டு விலகி அமர்ந்துவிட்டான். அவளின் விழிகளை அவனால் நிச்சயம் சந்திக்க முடியவில்லை.

அழுந்த தலையை கோதியவனின் பின்புற டிசர்ட் இழுக்கப்பட, தடுமாறித் திரும்பியவனின் இதழை கொய்திருந்தாள் ஷக்தி ஆராதனா!

அதிர்ந்து விரிந்த கண்களோடு ஆணவன் திணற, அழுத்த மூடியிருந்த இமைகளோடு மேலும் முன்னேறினால் பெண்ணவள்.

பயிற்சியில்லாத ஒன்று, மூச்சு திணற முடியாது அவனை விட்டுவிட்டாள் பெண்ணவள்.

அவள் அவன் முகத்தை பற்றியிருந்த கையை விலக்கிய நொடி, “ஏய், என்னடி பண்ணுற” என்று கிட்டத்தட்ட அலறியிருந்தான் சிவா.

“பொண்ணாடி நீலாம்? எப்படி இப்படி மாறின ஷக்தி” என்றவன் விழிகள் விரித்தபடி கேட்க, அதில் அவள் கடுப்பாகிவிட்டாள்.

“புருஷனாடா நீ? நானே வெட்கத்த விட்டு பக்கத்தில் வந்து கிஸ் பண்ணா சும்மா பொண்ணா நீ? பொண்ணா நீன்னு நேத்து பிடிச்சு கேட்கற?” 

“அதுக்கு இப்படியா” என்றவன் குரல் ஒருமாதிரி ஒலிக்க,

“ஷிவ்வ்வ்” என்று பல்லைக் கடித்தாள் அவள்.

“பிடிச்சுருக்குன்னு தான கேட்ட, இதவிட வேற எப்படிடா சொல்ல முடியும்? நானே இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா என்னை மீட்டு வரேன், அதில என்னோட ஃபீலிங்ஸ் கூட மறைக்காம உன்கிட்ட காட்டிடுறேன். இதவிட வேற என்ன‌ எதிர்பார்க்கற ஷிவ் நீ?”

“ம்ம்ப்ச்.. விடு” என்றவன் முகம் திருப்பித் தலை கோதிக்கொள்ள,

“எப்பபார் இதை மட்டும் பண்ணு. என்னை ஹக் பண்ணுறத தவிர வேற என்ன பண்ணியிருக்கடா நீ? ஒருவேல முன்னவே நீ உன்னை எக்ஸ்பிரஸ் பண்ணியிருந்தா கூட என்னோட மைண்ட் மாறியிருக்குமோ என்னவோ” என்றவள் படபடக்க, அவளை முறைத்தான் அவன்.

“பண்ணியிருந்தா மேடம் அப்படியே என்கிட்ட வந்திருப்பீங்க பாரு? அன்னிக்கு ஹாஸ்பிடல் லோபில உன்ன ஹக் பண்ணதே உன் தவிப்பு தாங்காம தான். ஏன் என்னோட காதல முழுமையா நான் உன்கிட்ட சொல்லாம இப்படி பண்ணிட்டனேன் அத்தன கில்ட்” என்றவன் பேச,

சட்டென்று ஒரு கூச்சம் வந்து ஒட்டிக்கொண்டது அவளிடம். 

“அதுதான் என்னை உன்கிட்ட வர வெச்சது” என்றாள் உள்ளே சென்ற குரலில்.

“வாட், கம் அகைன்” அவன் புரியாது கேட்க,

“ம்ம்ப்ச்.. அப்படியாடா ஹக் பண்ணுவ” என்று அவள் சொல்லும் முன்பே அவளின் முகத்தில் வெட்கச் சாரல். அதை அவளின் கேள்வனும் கண்டுகொண்டான்.

“ஷக்தி” என்றவன் சன்ன சிரிப்புடன் அழைக்க,

“பேசத பேசத” என்று அவன் தோளில் முகம் புதைத்தாள் பெண்ணவள்.

அவர்கள் மனதில் நிறைவாய் நிறைந்த கணங்கள் அவை.

அவளின் செயலே அவனை வியப்பில் ஆழ்த்தியிருக்க இதில் அவளின் வெக்கம் வேறு. மகிழ்ச்சியில் திணறித்தான் போனான் சிவனேஷ்!

“பேசல, சொல்லு”

”ம்ம்” என்று முனங்கினாள், அவன் ஷர்டினை இழுத்தால், மெல்ல அவன் தோளில் வலிக்காது கடித்தாள்.

அத்தனையும் புதியதாய் ஒரு ஷக்தியைய் அவனுக்குக் காட்டியது. அது அவனிற்கான ஷக்தி என்றும் புரிந்தது. 

அந்த செய்கைகள் எல்லாம் இனி அவனிற்கும் அவளிற்கும் மட்டுமே ஆன சந்தோஷ பூக்கள்.

முழுமையாக இல்லாது, முன்னர் நடந்ததை முக்கால் பாகம் கடந்து வந்துவிட்டாள், ஷக்தி ஆராதனா.

“ஆரு, சொல்லுடி” என்றவன் அவனை தோளோடு அணைத்துக்கொள்ள,

அவனைப் பக்கமாக நிமிர்ந்து பார்த்தவள், “சொல்லத் தெரியல, ஆனா அந்த ஹக் புதுசா ஃபீல் பண்ணேன். உரிமையா, பாதுகாப்பா ஒரு மாதிரி டைட்டா பிடிச்ச” என்றவள் நிறுத்தி முகம் தாழ்த்தியபடி, “எந்த எல்லையும் இல்லாம” என்ற சொன்னவள் எழுந்து கொண்டால் அவன் முகம் பார்க்க லஜ்ஜையுற்று.

அதில் அவன் புன்னகை மேலும் விரிந்திற்று. அவன் மனதில் இருந்த பல வினாக்களுக்கு விடையாய் இதோ அவளின் பேச்சும் வெட்கமும் அவளின் ஆழ் முத்தமுமே சான்றுகளாய் நிறைத்து நின்றது!

இவர்களின் இந்த பிணைப்பைப் பற்றி அறியாது அங்கு பொள்ளாச்சியில் கிட்டத்தட்ட குற்றவாளிகள் போல் அமர்ந்திருந்தனர், ஆராவமுதனும் லாவண்யாவும்.

“ஆக அவளே தனியா எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணிக்கட்டும்’னு அம்மாவும் பையனும் என் மருமகள தனியா அனுப்பி வைச்சிருக்கீங்க.. ம்ம்ம்” என்று கேட்ட அந்த கம்பீரக் குரலுக்கு மத்தியில் அங்கிருந்தோரின் மூச்சு விடும் சப்தமே பேரிரைச்சலாக இருந்தது.

லாவண்யா ஒன்றும் பேசாது இருக்க, ஆராவமுதன் தலையை நிமிர்ந்தான் இல்லை. அவனை சுற்றி இருந்தவர்களின் பார்வை அவனைத் துளைக்கும் படி இருந்தாலும், அதை கண்டுகொண்டாலும் பிரதிபலிக்க அவன் விரும்பவில்லை.

சற்று தைரியத்தை வரவழைத்து கொண்ட லாவண்யா, “இல்லண்ணே சிவா கூட தானே போறான்னு” என்று இழுக்க,

“மாப்பிள்ள” என்றார் அந்த வார்த்தையில் அத்தனை அழுத்தம் கொடுத்து.

லாவண்யா ”ம்ம்” என்றபடி தலையாட்ட, ‘இந்தா அடுத்த உபன்யாசத்துக்கு புள்ளையார் சூழி போட்டாச்சு’ என்று மனதில் நினைத்து கொண்ட ஆராவமுதனை கலைத்தது அவன் சிம்பாவின் அழுகுரல்.

சட்டென்று சோபாவில் இருந்து எழுந்துவிட்டான் பிள்ளையைத் தூக்க செல்ல. அவனையே அழுத்தமாய் தொடர்ந்தது இரு ஜோடி விழிகள்.

“சிம்பா எழுந்தாச்சா.. என் துருவ் குட்டி எழுந்துட்டீங்களா” என்றுபடி அவன் மகனுடன் அறையில் பேசுவதை வெளியே இருந்தவர்களால் நன்கு கேட்க முடிந்தது.

“சொல்லு லாவண்யா, சிவா போறார்னா ஷக்திய எப்படி அனுப்புவ? அவ சொன்னா கேட்க மாட்டாதான். அதுக்குன்னு இப்படி தான் யாருமில்லாம அனுப்புவியா? நீயோ அமுதனோ போயிருக்கனும்ல?” என்று அடுக்கடுக்காய் கேள்வியைய் அடுக்கினார், முன்னாள் ராணுவ அதிகாரியும் மேக வர்ஷினியின் தந்தையுமான, காளிதாஸ்.

ஷக்தியின் தந்தை இமயவரம்பனின் பால்ய நண்பர். அத்தனை ஆழ்ந்த நட்பு இருவருக்கும். அதன் தொட்டு, ஆராவமுதன் மேகவர்ஷினியை கரம்பிடிக்க அந்த நட்பு வலுப்பெற்று உறவானது.

“கவுன்சிலிங் முடிஞ்ச உடனே மெசேஜ் பண்ணியிருக்கா எனக்கு. அதுக்கு அப்புறம் ஒன்னும் இல்லை, நீங்க இத்தன விஷயம் சொல்லுறத பார்த்தா சம்திங் அங்க தப்பு நடக்க வாய்ப்பு இருக்க மாதிரி தோனுது எனக்கு” என்றான் ப்ரமோத் காளிதாஸ், மேகவர்ஷினியின் அண்ணன்.

லாவண்யா, “கண்ணா” என்று தவிப்போடு பார்த்தவர் ஷக்தி மறுதாலி வாங்கியபோது பேசியதையும் சொல்ல, 

“இதை ஏன்த்த மொதவே சொல்லல?” என்றவன் எழுந்து ஷக்திக்கு தொலைபேசி அழைப்பு விடுக்க சென்றுவிட, அவள் எடுத்தாள் தானே.

“மருமக மனசுல உள்ளது எல்லாம் ஒன்னொன்னா வெளிய வருது இல்லையா?” என்று கேட்டு நிறுத்தினார் காளிதாஸ்.

“அவ கண்டதையும் போட்டு மனசளவுல குழப்பிக்கறான்னு தான் இந்த டாக்டர் கிட்ட போகறதுக்கே நான் ஒத்துக்கிட்டேன். இப்போ கொஞ்சம் தெளிவு அவளுக்கு வந்திருந்தாலும் புருஷன் பொண்டாட்டி நடுவுல எப்படி அண்ணே போகுறது?”

“சரி தான் லாவண்யா, நாம அவங்க நடுவுல போக வேண்டாம். மாப்பிள்ளையே பார்த்துப்பார் தான். அவரோடு குடும்பம், அந்த ***” என்று திட்டியவரால் கோபத்தைக் குறைக்க முடியவில்லை.

காளிதாஸிற்கு ஷக்தி சிவாவோடு சென்றது பிரச்சனை இல்லை. மாறாக தனியாக அங்கு சென்றதே இப்போது பிரச்சனையாக பட்டது. அதுவும் அவள் ஒரு கசப்பான நிகழ்வில் இருந்து வெளிவர பார்க்க, அதன் தொடக்கத்திற்கு அவளை தனியாக அனுப்பிய இருவர் மீதும் அத்தனை கோபம்.

“எத்தன நாளுக்கு அண்ணா நாம கூட போக முடியும் சொல்லுங்க? அவர் தான் இனி அவளுக்குன்னு ஆன பின்னாடி, அவரோட குடும்பத்தையும் ஏத்து சமாளிக்கக் கத்துக்கட்டுமே.”

“எதுக்கு இன்னும் அவள மோசமா வார்த்தையாள குத்தவா அத்த” – ப்ரமோத்

“இல்ல கண்ணா, பெண்ணா பொறந்தா குடும்ப வாழ்க்கைக்குத் தக்க, அங்க இருக்க மனுஷங்களுக்கு ஏத்தாப்படி நடந்துக்கத் தெரியனும். உடனே நீ கோபப்படாத, நான் ஒன்னும் ஷக்திய அடங்கிப் போக சொல்லல, அந்த மனுஷங்க என்ன பேசினாலும் கடந்து போக அவளுக்குத் தெரியும். அந்த பக்குவமும் என் பொண்ணுகிட்ட இருக்கு. 

இப்போ அவளே போறேன்னு சொல்லும் போது, நாம ஏன் தடுக்கனும்? அவளுக்குத் தெரியாதா யார எப்படி ஃபேஸ் பண்ணேன்னு.”

“பாரு ப்ரமோ, லாவி சொல்லுறதும் சரி தான். அவ பழகட்டும்.‌ அந்த ஆளுங்க தான் இனி அவளுக்கு. சிவாவ ஏத்துக்கிட்டா அவரோட சொந்தமும் வேணும் தான? அவங்கள விடவா முடியும்? அதுவும் அவர பெத்தவங்கள? ஆரா சமாளிப்பா, உங்கள எல்லாம் சமாளிக்க தெரிஞ்ச பொண்ணுக்கு இது கூடவா தெரியாம போகும்” என்றார்‌ காளிதாஸின் மனைவி, யமுனா.

காளிதாஸ் பேசாது அமர்ந்திருக்க, “என்னங்க, சொன்னது சரிதான” என்றார் யமுனா.

“எல்லாம் வாஸ்தவம் தான். ஆனா ஆராவ அன்னிக்கு மாதிரி எவனாவது பேசுனான்னு தெரிஞ்சது, அப்புறம் இருக்கும் சங்கதி. ப்ரமோ, அங்க என்ன நடக்குதுன்னு அப்போ அப்போ கால் பண்ணி கேட்டுக்க. ரொம்ப சூழ்நிலை சரியா இல்லாத மாதிரி தோனினா சொல்லு, நானும் அமுதனும் போய் ஆராவ கூட்டிட்டு வரோம்” என்றவர் எழுந்து சென்றுவிட்டார்.

தூக்கம் கலைந்த மகனை தோளில் போட்டப்படி வந்த ஆராவமுதனோ, “நான் அமுதனாம், அவன் மாப்பிள்ளையாம்? என்ன ப்ரமோத்தண்ணா லாஜிக் இது” என்று அவன் கேட்ட திணுசில் எல்லோர் முகத்திலும் புன்னகை மலர்ந்திருந்தது.

 

 

•••

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்