
நின்ற இடத்திலேயே மடங்கி அமர்ந்து அழுத ஷக்தியை பார்த்த ஆராவமுதனுக்கு அவன் மனநிலையை சொல்லில் வடிக்க முடியவில்லை.
அவர்கள் தந்தை இயற்கை எய்திய பின்னர் தூணாய், அவர்களின் பிடிப்பாய் இருந்தது என்னவே ஷக்தி தான்.
தன்னையும் தேற்றி, தமயனையும் தாயையும் தாங்கி, தொழிலையும் அவள் வேலையும் சரியாக வழி நடத்தியவள் இன்று மொத்தமாய் உடைந்து போயிருந்தாள்.
அவள் வலியின் அளவு மிகப்பெரியது. அதை மேம்போக்காக மட்டுமே அவர்கள் பார்த்தனர். ஆனால் அந்த மேலோட்டம் சிறுகச் சிறுக அவளை வதைத்து அழிக்கும் என்பதை உணர்ந்திருந்தாள் இளயாள்.
எதற்கும் கலங்காதவள் தான் ஷக்தி. கண்மூடித் தனமான தைரியமும் விவேகமும் அவளின் பலமென்றால் அத்தோடு சார்ந்த அவளின் கம்பீரம் தனியழகு.
நிதானம் இருந்தாலும் ஒரு விஷயத்தை நொடியில் யோசித்து அமல்படுத்தும் spontaneous thinking அவளிடம் அதிகம். அதன் தொட்டே அவளின் வேலையும்.
இன்று அதுவெல்லாம் எங்கே சென்றது என்று தெரியாது, பொது இடத்தில் கதறியவளை பார்க்கப் பார்க்க அவனுள்ளம் கலங்கிக் கோபமுற்றது.
“ஆரா’ம்மா” என்றவன் குரலில் தான் சிவா உள்ளே வந்தான்.
அழுது சிவந்திருந்த ஷக்தியின் முகம் அவனை ஏதோ செய்ய, அவளிடம் விரைந்தவனை தடுத்தான் ஆராவமுதன்.
ஆராவமுதன், “நீ உள்ள போ” என்று சொல்லியவன் ஷக்தியை எழுப்பப் பார்க்க, அவள் இரு தோள்களையும் பற்றி தூக்கியிருந்தான் சிவனேஷ்.
“ஸ்ஸ்.. அழாத. என்னாச்சு இப்போ” என்றபடி அதட்டி அவளை அணைவாய் வைத்திருந்தவனை அடிக்கத் தான் தோன்றியது ஆராவமுதனுக்கு.
“ஈசா, ஆராவ கூட்டிட்டு வா” என்று லாவண்யா குரல் கொடுக்க, “நீ முன்ன போ அமுதா, நான் கூட்டிட்டு வரேன்”
“நீ..”
“போன்னு சொன்னேன்டா” என்றவன் அவளை வெளியே அழைத்து வந்து முகம் கழுவ வைத்து, அவள் சற்று நிதானித்த உடன் தான் உள்ளே அழைத்து வந்தான்.
“அம்மா, மாலையை போடுறதுக்கு முன்ன சரட கழுத்துல போட்டுட்டு அந்த மாங்கல்யத்தைக் கழட்டிடு” என்று குருக்கள் சொல்ல, அவளோ சிவாவின் முகத்தைப் பார்த்தால்.
அதில் இன்னும் கோபங்கள் மிச்சமிருக்க, அவனை பார்த்தபடியே அந்த மாங்கல்யத்தைக் கழற்றி கோவில் உண்டியலில் போட்டவள் மாலையை அணிந்துக் கொண்டே சிவாவின் எதிரே நின்றால்.
“மாலையை மாத்திக்கோங்கோ”
“இல்ல சாமி இப்படியே இருக்கட்டும்” என்றவள் சொல்லுக்கு,
சிவா, “ஷக்தி” என்றான் அழுத்தமாய் கோபத்தில் பல்லைக் கடித்து.
அவனை ஏற்றிட்டு பார்க்கும் எண்ணம் துளியில்லை பெண்ணிடம்.
அவளோ எப்போதும் கோபத்தைக் கட்டுக்குள் வைக்க செய்யும் செயலான பெருவிரல் நகத்தை ஆள்காட்டி விரலில் வைத்து அழுத்திக் கொண்டிருந்தாள்.
அவள் அதைத் தான் செய்வாள் என்பதை யூகித்தவன் அவள் கைப் பற்றி விரல் பிரிக்க, பல்லைக் கடித்துக்கொண்டு நின்றாள் பெண்ணவள்.
“இப்போ வரை நீ சொல்லுறது தான கேட்கறேன். ஏன்னு கேட்டனா? இல்ல தான. பண்ணுற விஷயத்தை சரியா பண்ணணும் ஷக்தி, மாலை கழட்டி போட்டு விடு” என்றவன் குரலில் மெல்லிய அதட்டல் மட்டும்.
கோபம் இருந்தது உள்ளே ஆனால் அவள் ஏன் இப்போது திரும்பவும் தாலி கட்ட சொல்கிறால் என்று தெரியாது அதனை முழுமைக்கும் காட்ட அவன் எண்ணவில்லை.
“போடு ஆரா” என்ற லாவண்யா உந்த, மெல்ல தன் கழுத்தில் இருந்த மாலையை சிவாவிற்கு அணிவித்தால்.
“பல்லக் கடித்தாத” என்றவன் மெல்ல சீற, அவள் உதடுகள் துடித்தது, கோபத்தில்.
அவனும் அவளுக்கு மாலையிட மனதில் சொல்லன்னா ஒரு அமைதி.
‘அமைதியா இரு ஷக்தி, அமைதியா இரு ஷக்தி,
அமைதியா இரு ஷக்தி..” என்பது மட்டும் தான் ஷக்தியின் மனதில் ஜபமாய் சொல்லிக்கொண்டது.
குருக்கள், “அம்மா, துளி பூவ பொண்ணு தலையில வைங்கோ, தம்பி வெறும் நெத்தியா இல்லாம திருநீர் குங்குமம் வைங்க” என்றவர் பூஜை செய்து, சுவாமி மேல் இருந்த இரண்டு நீண்ட மல்லிகை மலர் சரத்தை சரிசமமாக வெட்டி எடுத்து வந்தார்.
“இதயும் மாத்துங்கோ” என்று சொன்னவர் முறையாய் மாங்கல்யத்தை அங்கிருந்தோரிடம் ஆசி வாங்கி, சுவாமியின் பாதங்களில் வைத்தவர் சிவாவிடம் தர, அவன் கைகளில் ஒரு மெல்லிய நடுக்கம்.
தலையை குனிந்திருந்த ஷக்தியின் பார்வை கூட இப்போது மாங்கல்யத்தின் மீது தான். ஏதோ நினைத்தால் அதை இப்போது நடத்தியும் காட்டப் போகிறால்.
என்ன உணர்வென்றே வரையறுக்க முடியாது ஒரு நிலையில் சிவாவை மட்டும் இப்போது நினைக்க வேண்டும் என்ற உந்துதலில் அவன் கையில் இருந்த மாங்கல்யத்தைப் பார்த்தவள் மெல்ல அவன் கண்களை ஏறிட்டால்.
பளீரென்று ஒரு ஒலி அதீதமாய் அவன் கண்களில் தெரிந்தது. அந்த ஒலியின் பெயர் தான் காதலோ என்றவள் நினைத்து முடிக்கும் முன்பு அவள் விரிந்த கண்களைப் பார்த்தபடியே இரண்டாம் முறையாய் அவள் கழுத்தில் திருமாங்கல்யத்தை பூட்டியிருந்தான் அவளின் அவன்.
இந்த சிவஷக்தியின் பரிபூரணம் இனி வாழ் நாளுக்கும் தொடரும் என்ற எண்ணம் ஆராவமுதனின் மனதில்.
அவள் நெற்றியில் குருக்கள் சொல்லுக்கு இணங்க குங்குமமும் தலையில் சிறு கிள்ளு பூவையும் வைத்தவன் அவள் முகத்தைத் தவிர எங்கும் பார்வை செல்லவில்லை.
மூக்கு நுனி சிவந்து, எதையோ தன்னுள் அடக்கிக்கொண்டு நின்றவள் முகம் அச்சாய் அவன் மனதில் பதிந்துவிட்டது.
காணிக்கை வைத்து, பூஜை பொருட்கள் சிலதை வாங்கி கொண்டு, பிரசாதம் சிறிது பெற்று நால்வரும் வெளியே வர, “ஷக்தி, வீட்டுக்கு வேண்டாம் அப்படியே கிளம்பலாம். டைம் ஆகிடுச்சு” என்ற சிவாவின் பேச்சு அதுவரை அவள் அடக்கி வைத்திருந்தது எல்லாம் ஆத்திரமாய் வெளியேறியது.
“என்ன, இல்ல என்ன? பெரிய பருப்பு மாதிரி இத்தன நேரம் பேசுன, இப்போ கூட வா’ங்கற? என்னையே வேற அடிக்கற நீ? வரக் கோபத்துக்கு உன்ன கன்னங் கன்னமா அரையத் தோனுது ஷிவ்” கோபம் பீரிட்டது அவளுக்கு.
மாமியார் மச்சான் முன்பு அவள் தன்னை கோபங்கொண்டு கத்தவும் அவனும் நிதனமிழக்க ஆரம்பித்திருந்தான்.
“ஷக்தீ” என்று அடிக்குரலில் சீறிக்கொண்டு அவள் கொடுங்கையை அவன் பற்ற,
மூச்சு வாங்கியபடி, “இதோ இதுக்குத் தான், இதுக்காக மட்டும் தான் இத்தனை அவசரமா எல்லாம் பண்ணேன். கேட்டியே, போதுமா?!” என்றவள் அவன் அணிவித்தத் தாலியை தூக்கிக் காட்டியபடி.
“எவனோ காசுல வாங்கினத, நீயே கட்டுனாலும் எனக்கு அது பிடிக்கல, தேவையும் இல்லை. கழுத்த சுத்தின பாம்பு மாதிரி தான் இத்தன நாளும் இருந்துச்சு, நீயே கழட்ட வீச சொன்ன பின்னாடி அது எதுக்கு எனக்கு?” என்றவள் சொல்லச் சொல்ல சிவாவின் முகத்தில் தோன்றிய உணர்வையும் நிறைவையும் வரையறுக்க முடியாது போனது. கூட கோபம் போன தடமும் தெரியாது போனது.
“உன் காசுல வாங்கின, நீ கட்டிவிட்ட இதுவே எனக்குப் போதும்” என்றவள் மாலையை கழற்றியபடி நடக்க, “ஆரூ” என்றவள் கைகளைப் பிடித்திருந்தான் சிவா.
பிடியின் வலிமை கூறியது அவன் நிலைமையை!
“விடு.. விடு.. விடுடா” என்றவன் கையை அவள் உதற, மீண்டும் பிடித்தான்.
“யாரும்.. யாருமே என்னோட மனச புருஞ்சுக்கற நிலையில இல்ல தானே? என் பின்னாடி நீ இருப்பேன்னு தான நான் நிச்சேன், ஆனா உனக்குக் கூட என்ன பார்த்தா பையித்தியம் போல தெரியுது தான” என்றவள் பேசப் பேச அழ,
“ஆரா” என்று அவளை தோளோடு அணைத்துக்கொண்டான், ஆராவமுதன்.
மகள் மனதளவில் படும்பாட்டை பார்த்தபடி, “அம்மா உனக்காகத் தான தங்கம் இருக்கேன். அழக் கூடாது பாப்பா” என்றவள் கண்ணைத் துடைத்தபடி லாவண்யாவும் மெல்ல கண்ணீர் உகுக்க,
“என்ன இருக்கிங்க? நான் இன்னும் இவனோட வாழல அது மட்டும் தான உங்க மண்டையில ஓடுது? என்னை நினச்சிங்களா? டாக்டர் கிட்ட போறேன்னு சொல்ல அத்தனை கத்துனீங்க, இப்போ என்ன வந்து இருக்கேன் பிடிக்கேன்னுட்டு”
“ஆரூ” – சிவா
“சாவடிச்சிடுவேன்டா”
“ஏய் ஆரா” – ஆராவமுதன்
“போயிடுங்க எல்லாம். வந்துட்டாங்க இவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு” என்றவள் தன் போக்கில் நடக்க ஆரம்பித்திருந்தாள்.
“அமுதா அம்மாவ கூட்டிட்டு நீ வீட்டுக்குப் போ. நான் அவள பார்க்கறேன்”
“சாத்தப்போறேன் உங்க ரெண்டு பேரையும். எத்தன டென்ஷன், மொதல்லைய சொல்லித் தொலையாம.. எதுக்கு நாயே அவள அப்புறம் அடிச்ச?” என்று ஆராவமுதன் திரும்பவும் அவனிடம் சண்டைக்கு நிற்க,
“என்ன ஈசா இப்படி பேசற” என்று ஆட்சேப்பித்தார் லாவண்யா.
“ம்ம்ப்ச் என்ன இதவிட டென்ஷன் பண்ணினாடா, என்ன செய்ய சொல்லுற என்ன? என் பொறுமைக்கும் அளவு இருக்குத் தானே” என்றான் சிவா தன் இடையில் கை குற்றி.
“ஊஃப்ப்” என்று தன்னை நிலை படுத்தியவன், “நீங்க கிளம்புங்க. நான் ஷக்திய பார்த்துக்கறேன்” என்றபடி தாரை இயக்கி அவள் சென்ற சாலையில் பறக்கவிட்டான்.
“இதுதான்னு சொன்னா இவ என்ன கொறஞ்சிடுவாளா? எத்தன ஆட்டம் காட்டுறா சண்டிக்குதிர” என்றவன் ஸ்டியரிங்கில் குற்றியபடி சாலையில் கண்ணைப் பதிக்க, அங்கு தன் போக்கில் வேக நடையுடன் சென்று கொண்டிருந்தாள் ஷக்தி.
மரங்கள் இருபுறமும் சூழ்ந்திருக்க வெறிச்சோடி இருந்தது சாலை. நிமிடத்திற்கு ஒரு வண்டி கடந்தாலும் அது பெரிதாக சப்தம் எழுப்புவது போல தோன்ற, வானமும் சற்று கலக்கத்துடன் காணப்பட்டது.
மண்ணின் மணமும் மூளிகை செடிகளில் வாசமும் ஒருவித இயற்கை நறுமணத்தைத் தர, மழை வரும் அறிகுறி நன்கு தெரிந்தது.
“கழுத” என்று முணுமுணுத்தவன் விரைந்து வண்டியை செலுத்தினான்.
துளி பயமில்லாது சாலையில் நடந்தவளின் அருகே சட்டென்று ப்ரேக் அடித்தது நின்றது தார்.
அதை கவனித்தவள் ஒரு வெட்டும் பார்வையுடன் வண்டியைத் தாண்டிக்கொண்டு செல்ல, மீண்டும் உருமி நின்றது தார்.
இதே தொடர்கதையாக, பொறுமைகள் எருமை ஏறி சென்றிருந்தது சிவாவிற்கு.
“ஹேய் ஷக்தி” என்றவள் கை பற்றி இழுத்து வந்திருந்தான் ஒரு கட்டத்தில்.
“அவன் காசுல வாங்கினத கட்ட மாட்டேன்னு அன்னிக்கே சொன்னா என்னடி” என்று எடுத்தவுடன் அவன் ஆரம்பிக்க, தார் மெல்ல சாலையில் வழுக்கியது.
“எங்க போற நீ? நா ஒன்னும் உங்கூட வரல. நிறுத்து, வண்டிய நிறுத்து மொத” என்றவள் ஹேன்ட் பிரேக் போட முயல,
“அரஞ்சு தள்ளிடுவேன் உன்ன. எத்தன டென்ஷன் பண்ணிட்டே காலேல இருந்து. வாய், வாய் மட்டும் நல்லா பேசு. இதுதான்டான்னு சொல்ல தோனிச்சா உனக்கு? எல்லாத்துலையும் அவசரம், அடம்”
“அதான் அப்போவே அடிச்சியே” என்றாள் நைந்த குரலில். அதுவரை கத்தியவள் அவன் அரைந்தது நினைவில் வர, மனதில் ஏதோ அடைத்தது.
இதுவரை அவளை யாரும் அடித்ததே இல்லை என்றெல்லாம் சொல்லுவதற்கு இல்லை தான். ஆனால் அவனிடமிருந்து வாங்குவது முதல்முறை. அதுவும் மனதே விட்டுவிட்ட உணர்வோடு இப்போது அவனுடனே பயணிப்பது நரக வேதனை.
“நீயும் என்னை புருஞ்சுக்கலத் தான ஷிவ்” என்றவள் கண்ணில் உயிர் தேக்கம்.
கன்னத்து சதையைக் கடித்து தன் உணர்வை கட்டுக்குள் அவன் கொண்டுவர, “என்னடி புருஞ்சுக்கல?” என்றான் வள்ளென்று.
அத்தனை அடக்கப் பார்த்தான் தன்னை. இருந்தும் மனித இயல்பு வெளியே வந்துவிட்டது. அதைவிட பாரதியின் தொடர் அழைப்புகள் வேறு அவனை எரிச்சல் கொள்ள வைத்திருந்தது.
நேற்றைய தினம் மருத்துவரிடம் அவன் பேசியது மனதில் நிழலோட அவனையே பார்த்திருந்தாள் பெண். அவனை நோக்கி அவனிடம் செல்ல மெல்ல மெல்ல தன்னின் கால் தடங்களை பதிக்கிறாள். ஆனாலும் அவையெல்லாம் அவளுக்கு வலியைத் தான் தருகின்றது.
தன் மன ஓட்டத்தை நினைத்து நேற்று அவளுள் ஏற்பட்ட போராட்டத்தையும் மீறி தான் இன்று காலை அவனை அணைத்தால், ஆத்மார்த்தமாக.
அதை அவள் தவறாகவும் எடுக்கவில்லை மாறாக தன் கணவனுடனான ஒன்றல் தான் என்று மனதளவில் அதை அவள் மனதிலும் மூளையிலும் பதிவு செய்தாள் பெண்.
இருந்தும் ஒரு தடை. அது எதுவென்று அவளை உணர வைத்தது சிவாவின் இன்றைய பேச்சு. அது அவனுக்கே புரியாது போனாலும் அவன் பேச்சு தந்த ஒரு பொறி (spark) அவள் உள்மன ரணத்தைப் போக்க நினைத்து இதோ, அதை நடத்தியும் இருந்தால். மனதில் அதுநாள் வரை இருந்த பெரும் பாரம் நீங்கிய உணர்வு!
ஆனாலும் அவன் அரைந்தது வலிக்கிறது. ஏன் கோபம் கூட வந்தது. இருந்தும், அதில் இருந்த உரிமை புதியது. முற்றும் புதியது அவளுக்கு. அதற்காக அவன் அரைந்ததை அவள் ஏற்றால் என்றெல்லாம் சொல்லுவதற்கு இல்லை. அது எப்போதாவது திருப்பி தரப்படும், அவன் தவறும் இடத்தில்!
அவளின் அசைவற்ற பார்வையை உணர்ந்தவன் வண்டியை கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் நோக்கி விரட்டினான்.
ஷக்தியை அடித்ததால் அவனிற்கு குற்றவுணர்வு வந்தது என்று சொன்னால் அது அபத்தம். அவன் செய்தது தவறாக இருந்தாலும் அது ஷக்தியிடத்தில் தவறாக செல்லவில்லை என்பது மட்டும் சரியாக இருந்தது.
அவனின் செய்கையில் அவனுக்கு ஒரு நியாயம் இருக்கும் அவள் செய்கையில் அவளுக்கு ஒரு நியாயம் இருந்தது போல்.
இப்படி இனி அவர்கள் வாழ்க்கையில் பல சண்டைகளும் கை நீட்டல்களும் வரும். வராமலும் போகும். ஆனால் என்ன நடந்தாலும் அதை சரியாய் புரிந்து எடுத்து செல்வதில் தான் அவர்களின் உறவின் பலமே இருக்கிறது.
ஒன்றரை மணிநேரம் பயணம். அதை தொடர்ந்து காந்திபுரத்தில் வந்து தூத்துக்குடி செல்ல பேருந்தில் பயணப்பட்டனர்.
ஷக்தியோ சிவாவோ நெடுந்தூரம் வாகனத்தை ஓட்ட விரும்ப மாட்டார்கள். முதலில் எல்லாம் றெக்கை இல்லாமல் வாகனத்தில் பறந்தவர்கள் தான் ஆனால் மூன்று வருடத்திற்கு முன்பு நடந்த ஒரு கோர சாலை விபத்து முற்றிலும் அவர்
களை மாற்றியிருந்தது.
இதோ தன்னின் புகுந்த வீட்டாரை மீண்டும் காண கணவனுடன் ஆழ்வார்திருநகரிக்கு பயணப்படுகிறாள் ஈரோடு மாவட்ட துணை ஆட்சியர்!
[துணை ஆட்சியர் – Deputy Collector]
•••
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
7
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஒரு பெண் அவளோட உணர்வுகள் இப்படி எல்லாத்தையும் அழகா காடியிருக்கீங்க .. அதே சமயம் எதார்த்தமா கதை நகருது ..
மிக்க நன்றி ❤️😍
நிர்பந்தம் என்பது நம் வாழ்வில் இருந்துகொண்டே தான் இருக்கும். குழந்தையாக நடை பயில்வதில் தொடங்கி பேச்சு, படிப்பு, வேலை, வயதில் திருமணம், குழந்தை, அடுத்த குழந்தை பிறகு குழந்தைக்காக வாழ்வை வாழ் என்பது வரை.
அதிலும் அதனை செய்வது நமக்கு உணர்வுபூர்வமாக நெருக்கமானவர்கள் எனும் போது, நம்மால் செயல்பட முடியாத நிலையில் இயலாமை வலி கொடுக்கும்.
மனதை பக்குவப்படுத்த அவர்களை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். எந்நேரமும் நெருக்கடிக்குள் இருந்தால் அதில் இருந்து எவ்வகையிலாவது வெளியில் வர தான் அதிகம் முயல்வரே தவிர, நல்ல முறையில் சரி செய்ய முயலும் அவர்களது செயலின் வேகம் குறையும்.
கழுத்தில் ஏறி மனதை உறுத்திய ஒன்றை தூக்கி எறிந்தாயிற்று.
கவிதையாய் ஒரு பின்னூட்ட அலங்கரிப்பு 😍