Loading

“மிஸஸ். சிவா இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க. உங்களால முடியும்” என்றார் மருத்துவர் ரமணி ராஜம். 

 

அறுபதைக் கடந்த அவர் நகரின் முக்கிய மற்றும் பிரபல மனோதத்துவ நிபுணர்.

 

பரிதவித்த கண்களுடன், “என்னால் முடியலையே டாக்டர். என்னால, என்னால அவர் பக்கத்தில வந்தா.. ம்ம்ஹும்ம்.. முடியலையே” என்று கிட்டத்தட்டக் கதறிவிட்டாள் அவர் எதிரே இருந்த பெண்ணவள்.

 

அவள் அழுத அழுகை ஆர்ப்பரித்து ஓடும் அருவியாய் அவள் முகத்தைத் தாண்டி கழுத்தில் வழிய, அதைத் துடைக்கக் கூட அவள் முற்படவில்லை.

 

அவள் மனதில் அவளின் இயலாமை மட்டுமே பிரதானமாக இருந்தது. அவளின் இயலாமையா இல்லை பிடித்தமின்மையா; விருப்பமின்மையா என்று வரையறுக்க முடியாத ஒரு உரு அவளை உலுக்கிக் கொண்டிருக்கிறது.

 

“சரி ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணாதிங்க. எல்லாத்துக்கும் நேரம் தேவைப்படும் தானே. உங்க ஹஸ்பண்ட் உங்களுக்காகக் காத்திருப்பார். கண்டிப்பா நீங்க முயற்சி செஞ்சா, உங்க மைண்ட் செட் மாறும்” என்றவர் அறிவுறுத்த,

 

“அவர் காத்திருப்பார் தான் டாக்டர். ஏன் என்னால முடியலேனா ஆயுசு முழுக்கக் கூட எனக்காக இப்படி தன்னை அடக்கிட்டு ஜடமா இருக்கவும் தயங்க மாட்டான், பைத்தியக்காரன். ஆனா..” என்றாள் திரும்பவும் மெல்ல விசும்பியபடி அழ ஆரம்பிக்கவும், தன் கையின் அருகே இருந்த மணியை அழுத்தினார்.

 

ஒரு சிறு கதவு தட்டலுடன், “மேம்?” என்ற கம்பீரக் குரல் அவளின் அழுகையைக் கீறியது.

 

“உள்ள வாங்க, மிஸ்டர். சிவா” என்ற மருத்துவரைப் பார்த்தவன், அவர் கண்ணைக் காட்டவும் தான் அவன் பார்வை அவனவளிடம் இடம் பெயர்ந்தது.

 

அழுத்தமான அதே சமயம் அன்பு தழும்பும் பார்வை அது. அவளும் அதை உணர்ந்தால் தான்.

 

அவன் எடுத்து வைக்கும் அழுத்தமான டெர்பி (Derby) ஷூக்களின் தடங்கள் அவள் காதில் அதைவிட அழுத்தமாய் பதிய, திரும்பினால் இல்லை; கண்ணைத் துடைத்தாலும் இல்லை.

 

“உட்காருங்க” என்றவர் அவன் அருகே இன்னும் அழுகையை நிறுத்தாது இருந்தவளைப் பார்த்தவாறு, “நான் உங்க வைஃப் கிட்ட பேசிட்டேன், மிஸ்டர். சிவா. ஷி இஸ் டூ எமோஷனல். இனி நீங்க தான் பார்க்கனும்” என்றவர் ‘உன் மனைவி’ என்ற சொல்லில் அத்தனை அழுத்தம் கொடுத்திருந்தார்.

 

“வில் லுக் அட் ஹர் டாக்டர்” என்றவன் குரல் மாறுபாட்டால் தலை திருப்பி அவனைப் பார்த்தாள் பெண்ணவள்.

 

அழகன் தான். நல்ல அழகன் தான் அவள் கண்களுக்கு. ஆனால் அந்த அழகானவன் அவள் வாழ்வில் நுழைந்த விதமும் இப்போது இருக்கும் அவர்களின் நிலையும் ஏணி வைத்தால் கூட எட்டாத ஒன்று!

 

அதை நினைக்க நினைக்க இன்னுமே கண்ணீர் பெருகியது அவளுக்கு. குற்ற உணர்வா அல்ல அந்த அழகனைத் தான் படுத்தும் பாட்டை நினைத்து வந்த இயலாமையா என்பது அவளுக்கே வெளிச்சம்.

 

அவனையே வைத்த கண் எடுக்காது பார்த்தவள் அவன் சட்டென்று திரும்பி அவளைப் பார்த்த போதும், அவள் பார்வையில் துளி மாற்றம் இல்லை.

 

‘ஏன்டா இப்படி பண்ணுற?’ என்ற கேள்வி அவள் கண்களில்,

 

‘என்ன ஆனாலும் சரி, வாழ்ந்து பார்த்துடலாம்’ என்ற பதில் அவனிடம்.

 

இருவரையும் பார்த்த மருத்துவருக்கு இதழோரம் ஒரு மென்னகை.

 

“அடுத்த சிட்டிங் வரும் போது ஷக்திகிட்ட கொஞ்சம் இம்ப்ரூவ் மெண்ட் கண்டிப்பா இருக்கனும் மிஸ்டர். சிவா, அது உங்க கையில தான் இருக்கு” என்றவர் பார்வை மொத்தமும் ஷக்தியிடம்.

 

ஷக்தி ஆராதனா, சுருங்க ஷக்தி. இருபத்தி ஆறு வயதைப் பூர்த்தி செய்ய இன்னும் சில மாதங்கள் இருந்தன அவளுக்கு.‌ நல்ல திருத்தமான அழகு முகமும் புட்டேன்ற உடல்வாகும் கொண்டவள். 

 

கோதுமை நிறம், ஐந்தரை அடி உயரம். புடவையில் அத்தனை கச்சிதமாய் இருப்பாள் ஆனால் உடுத்துவது என்னவோ சல்வாரும் ஷார்ட் குர்தா – ஜீன்ஸ் தான்.

 

தோளுக்குக் கீழ் வரை இருந்த கூந்தல் மருதாணியின் பயனால் காஃபி தூள் கலரில் மின்னியது. அதிலும் அவள் முத்துப் பற்கள் தெரியச் சிரித்தால், சிவா சொத்தையே எழுதி வைப்பான்.

 

படித்தது MBA அதுவும் பிட்ஸ்ஸில் (BITS PILLANI).

இப்போது தற்காலிக விடுமுறையில் சிவாவின் மனைவியாகப் பதவி உயர்வில் இருப்பவள்.

 

அவனையே பார்த்திருந்த மருத்துவரிடம், “ஓகே டாக்டர். பார்த்துக்கறேன்” என்றான்.

 

“அடுத்து உங்களுக்கும் கவுன்சிலிங் இருக்கும் சிவா. பீ ரெடி” என்று அடுத்த குண்டை அவர் போட,

 

உடனே, “ஏன் அவனுக்கு என்ன? அவன் நார்மல் தான் மேம், அவனுக்கு‌ எதுக்கு அதெல்லாம். ஒன்னும் வேண்டாம். நான்.. நான் சரி.. நான் சரியாக ட்ரை பண்ணுறேன்” என்று கிட்டத்தட்டப் படபடத்துக் கத்தியிருந்தால் ஷக்தி.

 

திரும்பி சிவாவின் கையை தன் இருக்கைகளால் பற்றியபடி, “உனக்கு ஒன்னுமில்லை ஷிவ், நீ.. நீலாம் ஒன்னும் கவுன்சிலிங் வரவேண்டாம். நான்.. நான் சரி பண்ணிக்கிறேன் என்னை, சரியா?” என்று அழுத கண்களை வேகமாகத் துடைத்துக் கொண்டவள்,

 

“மேம், என் மைண்ட நான் ப்ரீயா வெச்சுக்கறேன். டீப் திங்க் பண்ணாம இருக்க முயற்சி பண்ணுறேன். தென், என்கிட்ட தானே ப்ராபளம், என்னை மட்டும் ட்ரீட் பண்ணுங்க. ப்ளிஸ் டோன்ட் ஆஸ்க் ஹிம் டூ சிட் ஃபார் எ செஷன்” என்று அழுத்தமாக முடித்திருந்தாள், ஷக்தி.

 

அவள் பேச்சில் ஒரு தீர்க்கம் இருந்தது. என்னை எது வேண்டுமானாலும் செய்துகொள்ள ஆனால் என்னவனை எங்கும் விடேன் என்ற கூற்று அவள் மொழியில் இருந்தது. ஆனால் அந்த பிரித்தறியும் பேதம் அவளிடம் இல்லாததே இப்போது பிரச்சனை.

 

மூச்சு வாங்க அவள் உட்கார்ந்திருந்த தோற்றம் அம்மருத்துவருக்குச் சிரிப்பைக் கொடுக்க, அதைத் தேர்ந்து அடக்கியவர் சிவாவிடம், “நீங்க போகலாம் மிஸ்டர். சிவா. அடுத்த சிட்டிங்ல பார்க்கலாம்” என்றவர் சொன்னது தான் தாமதம் விருட்டென்று சிவாவின் கைகளைப் பற்றி இழுத்தபடி வெளியேறினால் ஷக்தி.

 

“ஷக்தி வெயிட், டாக்டர்கிட்ட சொல்லிட்டு வரேன்”

 

“ஒன்னும் தேவலே. மொத நான் டாக்டர் கிட்ட வந்ததே தப்போன்னு இருக்கு. இல்ல இந்த டாக்டர ச்சூஸ் பண்ணது தான் தப்பு. வா, போலாம்” என்றவள் அவனை இழுக்க, சற்றும் அசைந்தான் இல்லை.

 

நிச்சயம் அவள் பேச்சு மருத்துவருக்கு நன்றாகக் கேட்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில், அவள் குரல் அத்தனை அடர்த்தியாக இருக்கும், இயல்பாகவே!

 

அவன் அசையமாட்டான் என்று தெரிந்தவள், “என்னமோ பண்ணு, போ” என்றபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

 

கையைக் கட்டிக் கொண்டு அவளையே அவன் பார்க்க, அவள் முகத்தில் அத்தனை சோகம். அதை அப்படியே அவனிடம் அவள் கண்வழி காட்ட, “உன்னால இப்படி பிஹெவ் பண்ண முடியாது ஷக்தி! கம், ஆஸ் ஹேர் ஸாரி” என்றான்.

 

“நா ஏன் இப்படியெல்லாம் பண்ணுறேன். ம்ம்ப்ச், என்னமோ எனக்கு..” என்றவள் கலங்க, “எழும்புடீ” என்று அவள் தோளில் கை கொடுத்து எழுப்பியவன் அவளை இறுக அணைத்திருந்தான்.

 

அத்தனை இறுக்கம் அவன் அணைப்பில். அந்த அணைப்பின் வித்தியாசமும் அவளால் நன்றாக உணர முடிந்தது. 

 

எத்தனையோ முறை இருவரும் அணைத்துக் கொண்டுள்ளனர் தான். ஆனால் அது வேறு, இப்போது? 

 

கணவனாய் அவளை எந்தவித ஒதுக்கமும் மனதில் எழாமல், சங்கோஜம் படாமல் அவள் பெண்மையின் பாகங்களை உரசியும் அப்பட்டமாகத் தொட்டும் சென்ற அவன் கைகளின் இறுக்கத்தில் கூசி சிலிர்த்தால் பெண்.

 

“என் ஷக்தி பத்தி எனக்கு நல்லா தெரியும். யார் என்ன சொன்னாலும் நான் எதுவும் ரியாக்ட் பண்ண மாட்டேன்னு உனக்கு தெரியாதா?” என்று அவன் அவள் முகம் நோக்க,

 

அவனைப் பார்க்காது அவள், “ம்ம்” என்றாள்.

 

“என்ன பார்த்து பேசு” என்றவனை எப்படி அவளால் ஏறிட முடியும்?

 

அவனின் தாடை முடியும் இடத்தில் இடித்து நின்ற அவளின் நெற்றியில் குத்திய அவனின் மெல்லிய கூர் ரோமங்களின் தாக்கத்தால் அவள் ஹார்மோன்கள் சென்செக்ஸ் போல் எகிறித் துடிக்கத் துவங்கியிருந்தன.

 

படபடத்த நெஞ்சைச் சமன் செய்யும் வழி தெரியாது, அவனையே ஒண்டி நின்ற பெண்ணோ முதல்முறையாக தன்னுள் ஏற்பட்ட மாற்றத்தை நினைத்து அதிர்ந்தால்.

 

அதை உணர்ந்த போது அவள் மனம் உணர்த்தியது ஒன்று தான், அவளின் உடல் இதற்கு முன்பு இவ்வாறு நடந்த போது ஏன் இப்படி மாற்றம் கொள்ளவில்லை? அப்போது அது தவறா? அல்ல இது தான் சரியா?

 

தனக்குள்ளேயே அத்தனை போராட்டத்தை அவள் நடத்த, அவனை அவள் பார்க்கவே இல்ல.

 

“ஷக்தி!”

 

“…”

 

“ஷக்தி!”

 

“…”

 

“ஆரு” என்றவன் குரலுக்கு அவள் நிமிர, அவன் கண்களில் அதுவரை அவள் காணாத ஒரு பாவம்.

 

மின்னி மறைந்த அவன் கண்கள் பேசிய மொழி, அதை உள்வாங்கும் தன்மை அவளுக்கு இருந்தாலும் அதை அவளால் ஏற்க முடியவில்லை.

 

“சொல்லு” என்றான் அதி மென்மையாய்.

 

அவன் கண்களிலும் அவனிலும் கட்டுண்டவள், “தெரியும்” என்றாள் அவனைப் போலவே.

 

“தென்? என்னைவிட நீ தான பெருசா எதையும் கண்டுக்க மாட்டா? இப்போ என்ன? எங்க என் ஷக்தி” என்றவன் கைகள் அவள் கொடுங்கையைப் பற்றி சற்று அழுத்த, சுற்றம் பார்த்து அவனிடம் விலகினாள் மங்கையவள்.

 

யாரும் இல்லாத லாபி (Lobby) தான். ஆனால், அதுவரை இருவரும் அணைத்து நின்று இருந்தது ஒருவித சங்கோஜம் தந்தது. 

 

“சொல்லிட்டு போலாம் வாங்க” என்று அவள் முன்னே நடக்க, அவன் முகத்தில் ஒரு சன்ன புன்னகை மலர்ந்தது.

 

உள்ளே நுழையும் போதே, “என்ன மிஸ்டர். சிவா, எவ்வளவு பெரிய ஆபிஸர்ஸ் நீங்க ரெண்டு பேரும். இப்படி தான் பப்ளிக்கா கட்டிண்டு நிற்பாங்க?” என்று கேட்ட டாக்டரின் குரலில் அத்தனை நக்கல்.

 

வெளியே மாட்டியிருந்த சிசிடிவி கேமராவின் உபயத்தால் அவரிடம் கவுன்சிலிங் வருவோரின் நடவடிக்கைகளை உள்ளிருந்தே நுணுக்கமாக கவனித்து ஆராய்வார் அவர். 

 

அதில் ஷக்தி நெளிய, “என் வைஃப் தான மேம்” என்று அவனும் சிரிக்க, 

 

“போறப் போக்கப் பார்த்தா எனக்கு அடுத்த சிட்டிங் ஃபீஸ் வராது போலையே” அவர் மீண்டும் சிரிக்க,

 

ஷக்தி, “ஸாரி மேம்” என்றாள் அவர் முகம் நோக்க.

 

“நோ வெரிஸ். உங்க மைண்ட் சரியானா போரும் எனக்கு. இப்போ வெளிய எக்ஸ்பிரஸ் பண்ணீங்களே, அதே மாதிரி ட்ரை டூ பி. அவர் உங்க ஹஸ்பண்ட் தான், நீங்க அவர் மனைவி தான். இதுல மாற்றம் இல்லை, வீணா உங்கள குழப்பிக்காதிங்க ஷக்தி” என்றவர் சிவாவிடம்,

 

“என்னோட பேச்ச விட உங்க ட்ரீட்மெண்ட் தான் உங்க வைஃப்க்கு சரி சிவா” என்றார் சன்ன சிரிப்புடன். 

 

அதில் மெல்ல அவனுக்கு வெட்கமும் எட்டிப் பார்த்தது, கண்ணுக்கே புலப்படாது.

 

ஓரிரு வார்த்தைகள் பேசிய பின்பு, மீண்டும் தன் தவறுக்காக வருந்தியவள் சற்று இடைவேளை விட்டபடி சிவாவுடன் புறப்பட்டாள்.

அவள் செய்கைகள் எல்லாம் உன்னிப்பாகக் கவனித்த மருத்துவரோ, “Relationship Dilemma” என்று அவர்களுக்கான கேஸ் ஷீட்டில் எழுதியவர் உடன் “Unidentified Love” என்று முடித்திருந்தார்.

 

(Relationship Dilemma – உறவில் இருக்கும் குழப்பம்)

 

•••

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
10
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. Relationship Dilemma – வித்தியாசமான topic.

    நெருங்கியே இருந்தவர்கள் இதுவரை உணராத ஒன்றை திடீர் என்று உணர வேண்டும் என்று சமூகத்தால் உறவின் பெயரால் நிர்பந்திக்கப்படும் பொழுது தயக்கங்கள் நேர்வது இயல்பு.

    அதில் ஒருவரோ அல்லது இருவருமோ அடுத்தடுத்த படிநிலைகளை நோக்கி செல்ல நேரம் தாழ்த்தினால் நம்மால் இயலாதோ? ஏன் என்ற குழப்பங்கள் எழும்.

    அழகான ஆரம்பம். வாழ்த்துகள் சகோதரி 👏🏼🥰🥰♥️

    1. Author

      மிக்க நன்றி சிஸ் ❤️

  2. அருமையான தொடக்கம் … கதாபாத்திர அறிமுகம் …