Loading

அத்தியாயம் 9

நிலாப்பெண் மேகங்களுக்குள் மறைந்து நம்மோடு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த அந்த அழகான இரவு வேளையில்,சிலு சிலுவென வீசிய தென்றல் காற்று உடலைத் தழுவிச் சென்று இதத்தைப் பரப்ப கண்மூடி அதை ஆழ்ந்து இரசித்துக் கொண்டிருந்தான் ஹரி.

அவனுக்கு அருகில் நின்றிருந்த ஸ்ரீ இவனை புரியாத பாவனையில் பார்த்துக் கொண்டிருந்தாள்,’இவன் என்ன லூசா என்கிட்ட பேசணும்னு கூட்டிட்டு வந்துட்டு இங்க என்னடானா நின்னுக்கிட்டே தூங்கிட்டு இருக்கான் இதுக்கா இந்த பேக்கு அவ்ளோ சீனை போட்டு இழுத்துட்டு வந்துச்சு’ என்று மனதிற்குள் அவனை கழுவி ஊத்தியவள் சற்று முன் கீழே நடந்ததை பற்றி நினைத்துப் பார்த்தாள்.

வீடே நிசப்தத்தில் ஆழ்ந்திருக்க இவளின்”ஆஆஆ” என்ற அலறலொலி வீடெங்கும் எதிரொலித்தது.

அவள் கையைப் பிடித்த அந்த கரம் இப்போது அவள் வாய்க்கு ஷிவ்ட்(shift) ஆகியது.பயத்தில் அந்த கையை பிடித்து கடித்து வைத்தாள் ஸ்ரீ. “அய்யோஒஒ!!!” என்று வலியில் கத்திய ஹரி கையை அவள் வாயில் இருந்து பிரித்து உதற ஆரம்பித்தான்.

‘என்ன நம்ம ஆளு சப்தம் மாதிரி இருக்கு’ என திரும்பி பார்த்தவள் .அங்கே கையை உதறிக்கொண்டே தன்னை முறைத்துக் கொண்டிருந்த ஹரியைப் பார்த்து ‘ஹிஹிஹி’ என அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தவள் ‘அய்யோ மறுபடியும் சொதப்பிட்டியே ஸ்ரீ முறைக்குறானே முறைமாமன் சமாளி டி தங்கம்’ என தனக்குள் கூறிக் கொண்டிருக்கும் போதே இவர்களிருவருன் கூச்சலில் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அங்கே பிரசன்னமாயினர்.

அதைப் பார்த்து மேலும் கடுப்பான ஹரி ‘ச்சை இந்த பிசாசு கூட போய் தனியா பேசனும்னு வந்தல்ல ஹரி உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்..கடவுளே அடுத்த பஞ்சாயத்துக்கு கூட்டத்தை கூட்டிட்டாளே சமாளிப்போம்’ என நினைத்துக் கொண்டு கேள்விக் கணைகளை எதிர்கொள்ள தயாராகி நின்றான்.

“நீங்க தானா அந்த திருட்டுப் பூனைங்க நான் கூட இன்னைக்கு இந்த கோமாளி பய தான் மாட்டிக்கிட்டான்னு ஆசையா தூக்கத்தை கூட கெடுத்துட்டு வந்தா இப்படி ஏமாத்திட்டீங்களே பிள்ளைகளா” என பாட்டி தான் ஆரம்பித்தார்.

“இந்தா பாரு கிழவி உனக்கு அப்படி என் மேல என்ன தான் கடுப்பு,காலையில இருந்து ஷாப்பிங்க் ஷாப்பிங்க்னு உயிர வாங்குன டையர்ட்ல நானே தூங்கிட்டு இருந்தா என்ன வம்பிழுக்குற நீ !!! இப்படியே பேசிட்டு இருந்த கிழவி நீ அப்பறம் தாத்தாவை பத்தி என்கிட்ட சொன்னதை எல்லார்கிட்டயும் சொல்லி வச்சுருவேன் ஜாக்கிரதை” என்று கொளுத்தி போடும் வேலையை செவ்வனே செய்தான் கார்த்திக்.

தன் மாமனாரைப் பற்றி செய்தி என்றதும் குஷியான பத்துவும் கலையும் ” டேய் கார்த்தி என்னடா அது அத்தை என்ன சொன்னாங்க ” என மிகவும் ஆர்வமாக வினவினர்.

“ஏய் சும்மா இருங்க ரெண்டு பேரும் இந்த கோட்டி பய சொல்றத நம்பிக்கிட்டு என்னன்னு வேற கேக்குறீங்க போய் எல்லரும் தூங்குங்க நாளைக்கு நிறைய வேலை கிடக்கு ” என அனைவரையும் விரட்டினார்.

” ஓய் கிழவி எஸ்கேப் ஆக ப்ளான் பண்றியா என்ன கோட்டிப்பயன்னு சொன்னதுக்காகவே சொல்றேன் இரு” என்று ஆரம்பித்தவன் அனைவரையும் பார்த்து,

“ஒருநாள் இந்த கிழவி கிட்ட பேசிட்டு இருக்கும் போது ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம், அதை கேக்கவான்னு கேட்டேனா” என்று கதை சொல்வது போல் கூற ஆரம்பித்தான்,

அவர்களும் கதை கேட்கும் ஆர்வத்துடன் ” ம்ம்ம்ம்ம்” கொட்டினர்.

“என்ன சந்தேகம்?? கேழுடானு அதுவும் சொல்லுச்சா”

“ம்ம்ம்ம்”

“கிழவி கிழவி நீ தான உன் பிள்ளைக அதாவது என் அப்பா பெரியப்பா அத்தை எல்லாருக்கும் பேரு வச்சன்னு கேட்டேனா”

“ம்ம்ம்ம்”

“ஆமா டா என் புள்ளைக மூனுக்கும் நான் தான் பேரு வச்சேன்னு பெருமை பீத்திக்கிட்டு இதுவா உன் சந்தேகம்னு கேட்டுச்சா”

“ம்ம்ம்ம்”

“ச்சி ச்சி இல்லை நீ ஏன் மூணு பேருக்கும் மதிவாணன், மதியழகன், சாருமதினு ‘மதி’ வர்ற மாதிரியே பேரு வச்சுருக்க உனக்கு நிலான்னா ரொம்ப பிடிக்குமான்னு கேட்டேனா”

“ம்ம்ம்ம்”

“அதுக்கு இந்த கிழவி ,’அட கூறுகெட்டவனே மதினா நிலா மட்டும் இல்லை அறிவுன்னும் அர்த்தம் இருக்கு தெரியும்ல’ அப்படின்னு கேட்டுச்சா”

“ம்ம்ம்”

“ஓ எல்லாரும் அறிவாளின்னு முன்னாடியே தெரிஞ்சு அப்படி பேரு வச்சுட்டியா சூப்பர் கிழவின்னு சொன்னேனா அதுக்கு இந்த கிழவி,’டேய் அவசரக்குடுக்கை முழுசா சொல்ல விடுடா, உங்க தாத்தவோட பரம்பரைல வந்த யாருக்குமே அறிவுன்னு ஒன்னு இல்லவே இல்லை அதான் இவங்களுக்காச்சும் பேருல மட்டுமாச்சும் அறிவு இருக்கட்டுமேன்னு ஒரு நல்ல எண்ணத்துல வச்சேன் டா பேராண்டி , ஆனா உங்க அப்பன் பெரியப்பன் அத்தைக்காரி யாருக்கும் அந்த நல்ல எண்ணம் கூட இல்லை உங்க யாருக்கும் பேருல கூட அறிவு இருக்க கூடாதுன்னு இப்படி வச்சுட்டாங்க’ அப்படின்னு சொல்லிட்டு சிரிக்குது பா இந்த கிழவி” என போட்டுக் கொடுத்தான்.

இதைக்கேட்டு வீட்டிற்கு வாக்கப்பட்டு வந்தவர்கள் சிரிக்க வீட்டில் வாரிசாக பிறந்த அனைவரும் பாட்டியை பாசப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா இந்த லூசுப்பய நம்ம உயிருக்கே உலை வச்சுருவான் ரெங்கநாயகி எஸ்கேப்’ என்று மனதிற்குள் கூறிக்கொண்டு ” அய்யோ கை காலெல்லாம் ரொம்ப வலிக்குதே என்னால முடியலை நான் போய் படுக்குறேன்” என்று பாட்டி முனுமுனுத்துவிட்டு ரெடி ஜூட் என்று எஸ்கேப் ஆகினார்.

வீரப்பன் ஐய்யோ சாரி தாத்தா கூட பாட்டியின் செய்கையில் சிரித்து விட்டு எல்லாரும் போய் படுங்க என்று வந்த விஷயத்தையே மறந்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

‘அப்பாடா நம்ம தப்பிச்சோம்’ என்று பெருமூச்சு விட்டு திரும்பிய ஹரியும் ஸ்ரீயும் அங்கே இவர்களையே நக்கலாக பார்த்துக் கொண்டிருந்த சிறியவர்களை பார்த்து ‘இந்த லூசுங்களை வேற சமாளிக்கனுமா ‘ என நினைத்துக் கொண்டு ஈஈஈஈ என பல்லைக் காட்டி வைத்தனர்.

“என்ன ப்ரோ உனக்கு திறமையே பத்தலை இப்படியா கத்தி ஊரையே கூட்டி ரொமான்ஸ் பண்ணுவ நல்ல வேலை நான் உன்னை காப்பத்தலைனா இந்நேரம் என்ன ஆய்ருக்கும் இதுக்காக நீ என் கால்லுல லாம் விழ வேணாம் அதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது” என கார்த்திக் தன்னை யாரும் புகழ மாட்டார்கள் என்று உணர்ந்து தன் கையே தனக்கு உதவி போல தன்னைத்தானே பாரட்டிக் கொண்டான்.

“ஹலோ மிஸ்டர் மங்கூஸ் மண்டை அவங்களை சமாளிக்கிறது கூட ஈஸி உங்க டார்ச்சர்ல இருந்து தப்பிக்கிறது தான் ரொம்ப கஷ்டம்” என வர்ஷு அவனை கலாய்த்தாள்.

“கரெக்டா சொன்ன டி தங்கம்” என மது அவளுக்கு ஹைபை கொடுத்தாள்.

நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சிவாஜி போல் ஆக்ட் செய்த கார்த்திக் ,”நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது” என அவர்களிருவரையும் பார்த்து பாட ஆரம்பித்தான்.

“அவர் பாட ஆரம்பிச்சுட்டார் நம்ம ஓட ஆரம்பிச்சுருவோம்” என நந்து கூறிவிட்டு ஸ்ரீயின் கண்ணசைவை கரெக்டாக கேட்ச் செய்து விட்டு அங்கிருந்து அவள் உயிர்த்தோழிகளை இழுத்துக் கொண்டு உள்ளே போனாள்.

விஜய் கார்த்திக்கை நோக்கி,”சில்லரை இல்லை மச்சான் இரு பாட்டி சுருக்கு பைல இருக்கான்னு கேட்டுட்டு வரேன்” என்று கலாய்த்து விட்டு ஆதியை தள்ளிக்கொண்டு தங்கள் அறைக்கு சென்று மறைந்தான்.

“கார்த்தி மாமா கவலைப் படாத உனக்கு நான் இருக்கேன் என்கிட்ட நிறைய சில்லரை இருக்கு ரூமுக்கு போய் எடுத்துட்டு வரேன்” என்று தன் பங்கிற்கு அஷ்வினும் கலாய்த்து விட்டு அங்கிருந்து ஓடினான்.

“ஒரு பாடகனை பிச்சைக்காரனா மாத்திட்டீங்களே டா” என்று புலம்பியவன், ஹரியை பார்த்து

“இனிமேலாச்சும் கத்தி மாட்டிக்காம ரொமான்ஸ் பண்ணுங்கடா” என்று கூறினான்.

“நீ இப்போ மரியாதையா போறியா இல்லையா டா எருமைமாடு பொம்பளை பிள்ளைய வச்சுட்டு பேசுற பேச்சா இது” என ஹரி எரிந்து விழுந்தான்.

“இதென்னடா கொடுமையா இருக்கு அவ உன் பொண்டாட்டி ஆகப் போறவ தான விட்டா அஞ்சு வயசு பாப்பாகிட்ட ஆபாசமா பேசுன வாலிபர்னு தலைப்புச் செய்தி போட்டு விட்ருவ போல என்னமோ பண்ணி தொலைங்கடா நல்லதுக்கே காலம் இல்லை” என தன் பாட்டிற்கு புலம்பிக் கொண்டே தன் அறைக்குள் சென்று மறைந்தான் கார்த்திக்.

அவன் செய்கையில் சிரித்து விட்ட ஸ்ரீயை முறைத்த ஹரி ” மாடிக்கு வா கத்தாம… பேசனும்” என்று கூறி விட்டு மாடிப் படிகளை நோக்கி சென்றான்.

‘பெரிய துரை ஆர்டர் போடுறாரு இருடா மவனே கல்யாணம் மட்டும் முடியட்டும் அப்பறம் இருக்கு உனக்கு’ என கறுவிக் கொண்டு அவனை பின் தொடர்ந்தாள்.

நிகழ்காலத்திற்கு வந்தவள் இன்னும் அவன் அதே நிலையிலே இருப்பதைக் கண்டு கடுப்பாகி,’டேய் பன்னாடை வந்து பதினைஞ்சு நிமிசம் ஆச்சுடா காத்து வேற நல்லா அடிக்குது விட்டா நான் இங்கயே தூங்கிருவேன்டா..அப்பறம் அன்னைக்கு பாட்டு பாடுன மாதிரி இன்னைக்கு தனியா தான் நீ பேசிட்டு இருக்கணும் அதுக்கு நான் பொருப்பில்லை’ என மனதில் நினைத்துக் கொண்டு “ம்க்கும்” என செறுமி அவனின் மோன நிலையை கலைத்தாள்.

மெதுவாக திரும்பி அவளை பார்த்தவன் , “உன் கிட்ட கொஞ்சம் பேசனும்” என்று ஒரு வழியாக தன் திருவாய் மலர்ந்து கூறினான்.

‘என்னடா நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மாதிரி பேசணும் பேசணும்னு ரொம்ப நேரமா சொல்றான் என்ன பேசணும்னு சொல்ல மாட்றான் அடி கிடி பட்ருச்சோ’ என மைன்ட்வாய்சில் பேசியவள் வெளியே ,” ம்ம்ம் சொல்லு” என மட்டும் கூறினாள்.

“உனக்கும் எனக்கும் நடுவுல இருக்க சண்டை, கோபம்,காயம்,வலி எல்லாமே இன்னும் அப்படியே தான் இருக்கு” என்று கூறினான்.

‘அய்யய்யோ கல்யாணத்தை நிறுத்த சொல்ல போறானோ கடவுளே அவன் வாயை அடைக்குற மாதிரி ஒரு உப்மாவை போட்டு உடனே அனுமர் கொரியர் சர்வீஸ்ல கொடுத்துவிடு இவன் அடுத்து எதும் சொல்றதுக்கு முன்னாடி அவன் வாயை ஒட்டனும்’ என கடவுளிடம் முறையிட்டவள் வெளியே ஏதும் பேசாமல் அவன் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவள் முகத்தை வைத்தே அவள் என்ன நினைத்திருப்பாள் என்று கண்டுகொண்டவனுக்கு லேசாக முறுவல் தோன்றியது.

“ரொம்ப பயப்படாத கல்யாணத்தை நிறுத்த சொல்லலாம் கூப்பிடலை அதுனால உன்னோட வேண்டுதலை கேன்சல் பண்ணிரு எப்படி இருந்தாலும் எனக்கு ஆப்பு வைக்க தான் வேண்டிருப்ப அதுனால தான் சொல்றேன்” என்று புன்சிரிப்போடு கூறினான்.

‘அப்பாடி’ என் பெருமூச்சு விட்டவள் ‘கொஞ்ச நேரத்துல பயமுறுத்திட்டான் வேற என்ன சொல்லப் போறான்?? ஒருவேலை ஐ லவ் யூ சொல்லுவானோ?? ச்சி ச்சி இந்த சிடு மூஞ்சியா?? இருக்காது.. ஓவரா ஆசைப்படாத ஸ்ரீ’ என்று மனதிற்குள் பேசிக் கொண்டிருந்தவளை பார்த்து கடுப்பகியவன் ,”ஹேய் நீ நான் பேசிட்டு போன பின்னாடி பொறுமையா உன் மனசுகூட பேசிக்கோ இப்போ நான் சொல்றத கேக்குறியா” என அவள் முன் சொடுக்குப் போட்டு வினவினான்.

பூம்பூம் மாடு மாதி வேகமாக தலையாட்டியவளை பார்த்து சிரித்தவன் ,”நமக்குள்ள இருக்க பிரச்னை ஒரு ஓரமா அப்படியே இருக்கட்டும் இந்த கல்யாணம் நம்ம வாழ்க்கைல ஒரு முறை நடக்குறது அதை இந்த கோபத்துனால நான் கெடுத்துக்க விரும்பலை ..வாழ்நாள் முழுவதும் என்னால கோவத்தை தூக்கிட்டு இருக்க முடியாது என்னைக்கோ ஒருநாள் போய்ரும் அதுக்காக இந்த திரும்ப கிடைக்காத நாட்களை வீணடிச்சுட்டு பின்னாடி நான் வருத்தப்பட விரும்பலை ..சோ இந்த கல்யாணம் முடியுற வரைக்கும் பழசெல்லாம் மறந்துட்டு ஒரு நல்ல ப்ரெண்ட்ஸ் ஆஹ் இருக்கலாம் உனக்கு ஓகே தான” என்று கடகடவென தான் பேச நினைத்ததை சொல்லி முடித்தான்.

‘அப்பாடி நான் கூட பயந்துட்டே இருந்தேன் கல்யாண போட்டோல உம்முனாமூஞ்சியா இருந்தா எங்க பேரப்பிள்ளைங்க இந்த தாத்தவை ஏன் கல்யாணம் பண்ணீங்கன்னு கேட்குமோனு நல்ல வேளை அவனே அப்படியெல்லாம் இருக்க வேணாம்னு சொல்லிட்டான். கட்டிக்கப்போற பொண்டாட்டிக்கிட்ட ப்ரெண்ட்ஸ் ஆஹ் இருப்போம்னு சொல்ற பைத்தியம் நீதான் டா ஏதோ இந்த அளவுக்கு ஆச்சும் இறங்கி வந்தானே’ என குத்தாட்டம் போட்டுக் கொண்டு “டபுள் ஓகே” என மகிழ்ச்சியோடு கூறினாள்.

“ரொம்ப சந்தோஷப் படாத நம்ம சண்டைக்கு முற்றும் போடலை சிறிய விளம்பர இடைவேளைக்குப் பின் தொடரும்னு தான் போட்ருக்கு” என்று அவள் மண்டையில் கொட்டி விட்டு கீழே செல்ல படிகளை நோக்கி சென்றான்.

“எனக்கும் அது தெரியும் எனக்கு இப்போதைக்கு இது போதும்..இது போதும் எனக்கு இது போதுமே வேறென்ன வேண்டும் நீ போதுமே ” என்ற அவளின் பாடல் அவன் நடையை தடை செய்தது.

“ஹேய் வாலு பாட்டுப் பாடி என்னை பயமுறுத்தாத மோகினி பிசாசு வேற சுத்துற டைம் நீ இப்படி பாடி எங்கோ போற ஆத்தா என்மேல வந்து ஏறு ஆத்தான்னு அத இங்க கூப்பிட்டுறாத” என அவளை கலாய்த்தான்.

“அப்போ நீ பாடு க்ரிஷ் அந்த பாட்டு இந்த சுச்சுவேஷனுக்கு செமையா இருக்கும் சில்லுனு காத்து ,இரவு நேரம்,வானமெல்லாம் நிலா நட்சத்திரம் ,மொட்டை மாடி ,நீயும் நானும் மட்டும் ..என்னோட ட்ரீம் தெரியுமா உன் தோள்ல சாஞ்சுட்டு இந்த பாட்டை நீ பாட நான் அதை இரசிக்க ..ப்ளீஸ் க்ரிஷ் ” என தன்னை மறந்து கூறிக் கொண்டிருந்தாள்.

பல வருடங்கள் கழித்து கேட்ட அவளின் க்ரிஷ் என்ற அழைப்பிலையே கரைந்தவன் அவளின் பேச்சைக்கேட்டு வெயிலில் வைத்த ஐஸ்க்ரீம் போல உருகினான்.

அவளை அழைத்து தன் தோள் மீது சாய்த்துக் கொண்டு, கண்களை மூடி பாட ஆரம்பித்தான்..

“மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ

நெரஞ்ச மௌனோ நீ பாடும் கீததோ

பௌர்ணமி இரவு பனி வீழும் காடு

ஒத்தையடி பாத உன் கூடு பொடி நட

இது போதும் எனக்கு இது போதுமே

வேறேன்ன வேணு நீ போதுமே

இது போதும் எனக்கு இது போதுமே

வேறேன்ன வேணு நீ போதுமே

மூங்கில் தோட்டோ மூலிகை வாசோ

நெரஞ்ச மௌனோ நீ பாடும் கீததோ

குளத்தாங் கரையில குளிக்கும் பறவைக

சிறகு உலக்குமே துளிக தெரிக்குமே

முன் கோபம் விடுத்து முந்தானை எடுத்து

நீ மெல்ல துடைக்க நான் ஒன்ன அணைக்க

இது போதும் எனக்கு இது போதுமே

வேறேன்ன வேணு நீ போதுமே

இது போதும் எனக்கு இது போதுமே

வேறேன்ன வேணு நீ போதுமே

மரங்கள் நடுங்கும் மார்கழி எரிக்க

ரத்தம் ஒரையும் குளிரும் நிருத்த

உஷ்னோ யாசிக்க உடலும் இருக்க

ஒத்த போர்வையில இருவரும் இருக்க

இது போதும் எனக்கு இது போதுமே

வேறேன்ன வேணு நீ போதுமே

இது போதும் எனக்கு இது போதுமே

வேறேன்ன வேணு

நீ போதுமே…”

என அந்தப் பாடலிலே மூழ்கியவன் மெதுவாக கண்களை திறந்து அவளை பார்த்தான்.அவளும் அவனைத்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த நிமிடம் அப்படியே உறைந்து போகாதா என இருவரும் எண்ணிக் கொண்டிருக்கையில் தூரத்தில் கேட்ட நாயின் ஊளை விடும் சப்தத்தில் இருவரும் கலைந்தனர்.

ஒரு புன்முறுவலோடு அவள் தலையை கலைத்து விட்ட ஹரி ,”லேட் ஆச்சு போய் தூங்கு” என்று கூறி அவளை கீழே அனுப்பி வைத்தான்.

அவளும் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல அவன் சொன்னதை செய்தாள். அவள் சென்ற பின்பு ‘என்ன டா ஹரி பண்ணிட்டு இருக்க அவ பண்ண தப்பு அவ்ளோ சீக்கிரம் மன்னிக்க கூடியதா?? இப்போ அவளை கொஞ்சிட்டு இருக்க ?? சரி என்னதான் நடக்கும் நடக்கட்டுமேன்னு இருக்க வேண்டிதான்..அவ மூஞ்சிய பார்த்தா கோவமெல்லாம் போய்ருது.. பார்ப்போம் எது வரைக்கும் இது போகுதுனு’ என நினைத்துக் கொண்டு அவனும் தன் அறைக்குச் சென்றான்.

கட் பண்ணி ஓபன் பண்ணா நாராயணசாமி தாத்தா வீடே ஒரே கோலகலமா திருவிழா போல இருக்குது. வெய்ட் வெய்ட் கல்யாணம்னு டக்குன்னு அங்க போய்றாதீங்க இன்னைக்கு நிச்சயதார்த்தம் தான் அதான் இந்த பரபரப்பு.

“டேய் மாரிமுத்து சமையல் ஆய்ருச்சான்னு பாரு ..கண்ணாயி போய் வந்தவங்களுக்கெல்லாம் குடிக்க ஏதாச்சும் குடுத்தியா? செவ்வாழை டவுனுக்கு வண்டி அனுப்புனியா சொந்த காரங்க வந்துட்டு இருக்காங்க” என பாட்டி அங்குள்ள அனைவருக்கும் வேலை கொடுத்துக் கொண்டு பம்பரமாக சுற்றிக் கொண்டிருந்தார்.

பின்னே தங்கள் வீட்டின் முதல் கல்யாணம் அதுவும் தன் ஆசைப் பேரன் பேத்திக்கு அப்போ பாட்டிய கையில பிடிக்க முடியுமா என்ன??, மகிழ்ச்சியில் 10 வயது குறைந்து விட்டதைப் போல் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தார்.அவர் மட்டுமல்ல வீட்டில் இருந்த அனைவருமே அதே நிலையில் தான் இருந்தனர், இத்தனை வருட சோகங்களுக்கு பிறகு இன்று தான் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

அனைத்து சொந்தங்களும் வீட்டின் ஹாலில் குழுமியிருக்க ஹரி அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அந்த விழாவின் நாயகனாக கல்யாண மாப்பிள்ளைக்கே உரிய தேஜஸ்ஸோடும் தனக்கே உரித்தான கம்பீரத்தோடும் வீற்றிருந்தான். ஆனால் பாவம் பக்கட்து சீட் இன்னும் காலியா தான் இருக்கு பொண்ணு வரலை.

கார்த்திக்,விஜய்,அஷ்வின் மற்றும் இன்று வந்திருந்த ஹரியின் நண்பர்கள் அனைவரும் அவனை ஓட்டித் தள்ளிக் கொண்டிருந்தனர்.

பெரியவர்கள் அனைவரும் ஊர்க்கதை உலகக்கதை பக்கத்து வீட்டுக்கதை எதிர்த்த வீட்டுக் கதையெல்லாம் பேசிக் கொண்டிருக்க ஒரு பெரியவர் மட்டும் ,”சீக்கிரம் பொண்ணை அழைச்சிட்டு வாங்க ப்பா” என கூவினார்.

“இந்த டயலாக்கை சொல்ல ஒருத்தரை காசு குடுத்து எல்லா கல்யாணத்துலயும் செட் பண்ணி வச்சுருவாங்க போலயே கரெக்டா வேலை பார்க்குறாரு..டேய் ஹரி உண்மையை சொல்லு நீ தான அந்த தாத்தாக்கு காசு குடுத்து சொல்ல சொன்ன” என கார்த்திக் வாலாட்டிக் கொண்டிருந்தான்.

ஆனால் அதை கவனிக்க ஹரி அங்கு இருக்க வேண்டுமே , அவன் தான் படியில் ஒரு மலர்வனம் அசைந்து இறங்கி வருவதைப்போல தன் தோழியர் படை சூல வந்து கொண்டிருந்த தன் தேவதையை பர்த்து வேறு லோகத்திற்கு சென்று விட்டானே.

ஹரி தேர்வு செய்த புடவை,அதற்கு மேட்ச்சிங்காக நகைகள், தலை நிறைய மல்லிகைப்பூ , இது மட்டுமல்லாமல் ப்யூட்டிசியன் வேறு அவரின் கைவண்ணத்தை காட்டியிருந்ததால் மேலும் அழகாகி ரம்பை ஊர்வசிக்கே சவால் விடுவதப் போல் இருந்தாள் அவனின் ஸ்ரீ.

(கேமெரா மேன் கொஞ்சம் ஹரியை விட்டுட்டு கார்த்திக் பக்கம் கேமெராவை திருப்புங்க பயபுள்ள ஹரியை விட ஓவரா ஜொல்லு விட்டு சுனாமி வர வச்சுருவான் போல)

ஸ்ரீயின் தோழிகள் நால்வரும் ஒரே மாதிரியான தாவணி அணிந்திருந்தனர்.

கார்த்திக் தன்னவளை முதன்முறையாக பாவடை தாவணியில் பார்ப்பதால் “ஆஆஆ” என்று வாயைப் பிழந்து கொண்டு சுற்றுப்புறம் மறந்து இரசித்துக் கொண்டிருந்தான்.

ஹரியின் மீதிருந்த பார்வையை விலக்கி அப்போது தான் அருகில் இருந்த கார்த்திக்கை பார்த்த விஜய்,”இந்த நாதாரி யாரை இப்படி வாயை பொலந்துட்டு பார்க்குது அங்க ஸ்ரீ வர்றா ,அவ அவனுக்கு அண்ணியாரா போய்ட்டா அவனுக்கு சோ அவ ரிஜெக்டட், கூட வர்றது மது, வர்ஷு,நிஷா,நந்து.. நந்துவும் ஆதியும் இவனுக்கு ஒன்னு சோ தங்கச்சி மாதிரி அவ ரிஜெக்டட், மிச்ச மூனுல யாரை பார்க்குறான், இருடா மவனே கல்யாணத்துக்குள்ள கண்டுபுடிச்சு பாட்டிகிட்ட போட்டு விடுறேன்” என தனக்குள் பேசிக் கொண்டான்.

ஸ்ரீயும் அவனைத் தான் சைட் அடித்துக் கொண்டிருந்தாள்.வேஷ்டி சட்டையில் மிகவும் கம்பீரமாக இருந்த ஹரியை விட்டு கண்களை நகர்த்த முடியவில்லை.

அவள் அருகில் வந்ததும் இருவரின் நண்பர்களும் தங்கள் கேலியை மீண்டும் தொடர அவர்களை அடக்கிய நாரயணசாமி ஐயரை பார்த்து லக்ன பத்திரிக்கையை வாசிக்க சொன்னார்.அது முடிந்ததும் இரு வீட்டினரும் எழுந்து தாம்பூலம் மாற்றிக் கொண்டனர்.

பின்பு சாருமதி ஸ்ரீயின் கையில் ஒரு வைர மோதிரத்தைக் கொடுக்க அங்கே கலைவாணி ஹரியின் கையில் கொடுத்து இருவரையும் மாற்றிக் கொள்ளச் சொல்லினர்.

மெதுவாக அவள் அருகில் வந்த ஹரி, ஓகேவா என கண்களால் வினவினான்.இவளும் சம்மதம் என்பதை போல கண்களை மூடி திறந்தவுடன் அவன் மென்பிஞ்சு விரல்களைப் பற்றி மெதுவாக கைகளுக்கு வலித்து விடுமோ என அணிவித்து விட்டான். அதில் ஒரு முறை தேகம் சிலிர்த்து அடங்கியது ஸ்ரீக்கு.சந்தோஷத்தில் முகம் மலர அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே அவன் கைகளில் மோதிரத்தை அவளும் அணிவித்து விட்டாள்.

நான்கு கண்களும் அங்கே கதை பேசிக் கொண்ட அந்த அழகான தருணத்தை புகைப்பட நிபுணர் அழகாக படம்பிடித்துக் கொண்டார்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்