
அத்தியாயம் 7
“ஹரி அங்கேயே நில்லு.. என்ன டா நினைச்சுட்டு இருக்க இன்னும் ஒரு வாரத்துல கல்யாணத்தை வச்சுக்கிட்டு நீ பாட்டுக்கு சொல்லாம கொல்லாம நேத்து காலைல கோவில்ல இருந்து ஓடி போனவன் இன்னைக்கு சாய்ங்காலம் வர..எத்தனை தடவை போன் பண்றது அதையும் ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டு என்ன டா அப்படி பண்ண உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை ஹரி” என அப்போது தான் களைத்து போய் வீட்டிற்குள் நுழைந்த ஹரியை நோக்கி 1000 வாலா சரவெடி போல் வெடித்துக் கொண்டே இருந்தார் கலைவாணி.
அவரின் இந்த பொங்கலுக்கு காரணம் நம்ம ஸ்ரீயே தான். பிள்ளைக்கு நேத்து பார்த்து ஹரி மேல லவ்வு அப்படியே அடுப்புல வச்ச பால் மாதிரி பொங்கு பொங்குனு பொங்கிருச்சு. அதுனால பக்கி சாப்பிடாம தூங்காம நைட் ஃபுல்லா வாசலையே பார்த்துட்டு உக்காந்திருந்துச்சா,அதான் தன்னோட ஆசை மருமகளை இப்படி ஆக்கிட்டானேனு ஆதங்கத்துல வந்ததும் அவனை பிடித்துக் கொண்டார்.
ராங்க் டைமில் அங்கு எண்ட்ரி கொடுத்த கார்த்திக் ஹரியின் வரவைப் பார்த்து ,”டேய் த்ரோகி நீயெல்லாம் நல்லா இருப்பியா டா நேத்து போனதும் தான் போன எவன் கிட்டயாச்சும் லிப்ட் கேட்டு போய் தொலைய வேண்டி தான வேனை தூக்கிட்டு போய்ட்ட லூசு பயலே உன்னால இந்த வீரப்பன் எல்லாரையும் ஒரே வேன்ல வர சொல்லிட்டாரு டா..இந்த கிழவி என்ன வச்சு செஞ்சுருச்சு அந்த 30 நிமிசம் ட்ராவல்ல என்ன 300 வாட்டி எல்லரும் சேர்ந்து டேமேஜ் பண்ணதும் இல்லாம நீ எங்க போனனு வேற என் உயிரை வாங்கிட்டாங்க??? என்னமோ நான் உன் லவ்வர் மாதிரி என்கிட்ட பெர்மிசன் வாங்கிட்டு தான் எல்லாம் செய்ற மாதிரி எல்லாரும் பேசுறாங்க எல்லாம் என் விதி.” என பேசிக்கொண்டே போனவனை நோக்கி தன் கைகளை தலைக்கு மேல் தூக்கி கும்பிட்ட ஹரி,
” டேய் போதும் டா முடியலை ஆள் ஆளுக்கு ரவுண்ட் அப் பண்றீங்க ரொம்ப டையர்டா இருக்கு டா ஒரு கப் காப்பி குடுத்துட்டாச்சும் உங்க விசாரணைய ஆரம்பிங்க டா” என கூறி,வன் பொத்தென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.
அப்போது அவன் முகத்திற்கு நேராக காபி ட்ரேயை நீட்டியது ஒரு வளைக்கரம்.நிமிர்ந்து பார்க்காமலே அந்த கரத்திற்கு சொந்தக்காரியை கண்டுகொண்டவன் சின்ன புன்னைகையோடு காபியை எடுத்துக் கொண்டான். அவன் நாசியில் காபியின் நறுமணம் நுழைந்து ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது.
மிடறு மிடறாக பருகி முடித்தவன் நிமிர்ந்து பார்க்கும் போது மொத்த குடும்பமும் அங்கே குழுமி இருக்க, பார்த்தவனுக்கு பக்கென்று இருந்தது. ‘அய்யோ அமைதிப்புயல் அம்மாவே இன்னைக்கு இவ்வளவு பேசுறாங்க இதுல மொத்தக் குடும்பமுமா ஹரி இன்னைக்கு அடி பலமா விழுகும் போலயே சமாளிப்போம் வேற என்ன பண்றது குரங்குக்கு வாக்கப்பட்டா குட்டிக்கரணம் போட்டே ஆகனும்ற மாதிரி இந்த வீட்ல பிறந்தா டெய்லி ஒரு போருக்கு தயாரா தான் இருக்கணும்’ என மனதை திடப் படுத்திக் கொண்டு கேள்விக் கணைகளை சமாளிக்க நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றான்.(ஆமா இவரு பெரிய பாகுபாலி போருக்கு போறாரு நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு நிக்கிறாரு..உங்க ரவுசு தாங்க முடியலைடா சாமி)
முதலில் வீரப்பன் அய்யோ சாரி சாரி இந்த கழிசடை பசங்க கூட சேர்ந்து நாக்கு குழறுது ..முதலில் நாரயணசாமி தாத்தா தான் தன் பெரிய மீசையை முறுக்கி விட்டு கொண்டு ஆரம்பித்தார் ,” தம்பி எங்க போன ?? எங்க போனாலும் சொல்லிட்டு போகணும்ன்ற மரியாதை கூட தெரியாமையா நாங்க உங்களை வளர்த்திருக்கோம் என்ன பழக்கம் இது ?” என எப்போதும் போல் ஒரு கண்டிப்புடன் வினவினார்.
‘அய்யோ இவரு வேற எல்லாத்தும் மானம் போச்சு மருவாதை போச்சுனு கோவை சரளா மாதிரி ஆரம்பிச்சுருவார்.. ஒரு லெக்சர் குடுக்குறதுக்குள்ள எதாச்சும் சொல்லி அவர் வாயை ஆப் பண்ணு ஹரி’ என மூளை கட்டளையிட ஏற்கனவே மனப்பாடம் செய்து வைத்திருந்த டயலாக்கை ஒப்பிக்க ஆரம்பித்தான்.
“மன்னிச்சுருங்க தாத்தா என்னோட நண்பனுக்கு ஆக்சிடென்ட் ஆய்ருச்சு அதான் அந்த பதட்டத்துல அப்படியே ஓடிட்டேன்.இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்” என மிகவும் பவ்யமாக கூறினான்.
‘இந்த நாய் இப்படியெல்லாம் பாவமா பேசாதே ஏதோ பெருசா பண்ணிட்டு வந்திருக்கு போல’ என கார்த்திக் மைண்ட் வாய்ஸ் என நினைத்து வெளியே கூறி விட்டான்.
அவன் அருகில் நின்றிருந்த ஸ்ரீக்கு அது கேட்டு விட “டேய் கார்த்திக் பன்னி இன்னொரு தடவை என் ஹரி நாய் எருமைனு ஏதாச்சும் சொன்ன நீ சாப்பிடுறதுல பேதி மாத்திரையை கலந்து கொடுத்துருவேன்” என விரலை நீட்டி பத்திரம் காட்டினாள்.
‘அய்யோ கார்த்திக் மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டியே இந்த ஹரி வெறுப்பேத்தவாச்சும் மாமா மாமானு கூப்பிட்டுட்டு இருந்தா அதுல நீயே மண்ணள்ளி போட்டுக்கிட்டயே எதுக்கும் ஜாக்கிரதையா இருடா முதல சாப்பாட்ட கிழவிக்கு குடுத்து டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு அப்பறம் தான் சாப்பிடனும் ‘என முடிவெடுத்துக் கொண்டவன் ஸ்ரீ பார்த்து இழித்துக் கொண்டு ” இல்லை கண்ணுக்குட்டி சும்ம லுலுலாய்க்கு அவன் என் அண்ணன் உன்னோட மன்னன் நம்ம வீட்டுக் கண்ணன் அவனை போய் ஏதாச்சும் சொல்லுவேனா” என சரண்டர் ஆனான்.
“போதும் போதும் நிறுத்து ரொம்ப ஓவரா இருக்கு” என அவனிடம் கூறிவிட்டு அங்கே என்ன நடக்கிறது என்பதை கவனிக்க ஆரம்பித்தாள்.
அவனை நம்பாத பார்வை பார்த்த மதிவாணன் ,” எந்த ப்ரெண்ட் எங்களுக்கு தெரியாம ??” என வினவினார்.
‘ஷப்பா விட மாட்டாங்க போலயே’ என மனதிற்குள் நொந்து கொண்டு ” ராகவ் பா காலேஜ் ப்ரெண்ட் வேற டிபார்ட்மென்ட் முடிச்சுட்டு லண்டன் போய்ட்டான் இப்போ தான் வந்தான் அதுனால உங்களுக்கு தெரியாது” என உண்மையை கூறுவது போலயே தட்டுத் தடுமாறாமல் தெளிவாக வந்து விழுந்தது பதில்.(பின்ன வர வழியெல்லாம் மனப்பாடம் பண்ணிட்டு வந்தா இப்படி தான் இருக்கும் இத கூட சொல்லலைனா இவன் எப்படி யுனிவர்சிட்டி டாப்பர் ஆய்ருப்பான்).
இன்னும் சந்தேகம் தீராத பாட்டி,”நிஜமாவே உன்ற நண்பனுக்கு அடி பட்டுருந்தாலும் ஒரு வார்த்தை சொல்லிட்டு போறதுக்கு என்ன..இல்லைனா அங்க போய் கூட சொல்லிருக்கலாமே இப்படி எல்லாமே மறந்து போற அளவுக்கு அவ்வளவு நெருங்கிய சிநேகிதன்னா உன்ற அப்பா அம்மாக்கு கூடவா தெரியாம போய்ருக்கும்?? ” என பாயிண்ட்டைப் பிடித்தார்.
‘இந்த பாட்டி இருந்தாலும் இவ்வளவு அறிவா பிறந்திருக்க கூடாது’ என நொந்து கொண்டு ” பாட்டி இப்ப என்னமோ நான் பொய் சொல்ற மாதிரி நிக்க வச்சு கேள்வி கேட்டுட்டே இருக்கீங்க உங்களுக்கு தெரியாம நான் என்ன பண்ண போறேன் இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல சொல்லிட்டேன் ” என கோபமாக கேட்பது போல் நடித்தான்.
இதில் மேலும் சந்தேகம் வலுப்பெற, ஸ்ரீ தன் அத்தையிடம் “ஆட்டம்மா செல் ஏன் ஆப் பண்ணி வச்சிருந்தாங்கனு கேளுங்க ” என எடுத்துக் கொடுத்தாள்.
‘ஆமா அவங்களே மறந்தாலும் இவ இருக்காளே ராட்சஷி எரியுற தீயில பெட்ரோல் ஊத்திட்டு’ என அவளை வறுத்தெடுத்துக் கொண்டு கார்த்திக்கை நோக்கி ‘ஏதாவது செய்து காப்பாத்து டா’ என்பது போல் பார்வையாலே கெஞ்சினான்.
அவனும் தான் பார்த்துக் கொள்வதாக கூறி கண்களை மூடி திறந்தவன் அனைவரையும் நோக்கி ,” இதென்ன கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத குடும்பத்துல வந்து பிறந்துட்டேன் போல ஒருத்தனுக்கு ஆக்ஸிடென்ட் ஆய்ருச்சுனு சொல்லுறான் அந்த பையன் எப்படி இருக்கான்னு ஒருத்தவங்களாச்சும் கேட்டீங்களா இப்போ அவன் எவ்வளவு களைச்சுப் போய் வந்திருக்கான் அவனை ரெஸ்ட் எடுக்க விடாம எல்லாரும் இப்படி ரவுண்டு கட்டுறீங்க ப்ரோ நீ பர்ஸ்ட் போய் ப்ரெஷ் ஆகு அப்பறம் பார்த்துக்கலாம்” என அவனை போகுமாறு கண்களால் ஜாடை காட்டினான்.
அதை புரிந்து கொண்ட ஹரியும் விட்டால் போதும் என்று தப்பித்தோம் பிழைத்தோம் என்று தன் அறைக்கு ஓடினான்.அவன் சென்றதும் அப்பாடா என பெருமூச்சு விட்டு திரும்பிய கார்த்திக்கை மொத்த குடும்பமும் கொலைவெறியோடு முறத்துக் கொண்டிருந்தனர்.
‘அவனை காப்பாத்த போய் இப்போ உன்ன காப்பாத்த வேண்டிய நிலைமை வந்துருச்சே கார்த்திக் இங்க இருந்தா பார்த்தே பஸ்பம் ஆக்கிருவாங்க எஸ்கேப் ஆய்ரு ரெடி ஜூட்’ என கூறிக்கொண்டு அவனும் தன் அறைக்கு ஓடி விட்டான்.
“சரியான வாலுங்க” என முனுமுனுத்துவிட்டு அனைவரும் தத்தம் வேலையை பார்க்க கலைந்து சென்றனர்.
மேலே சென்ற கார்த்திக் நேராக சென்றது ஹரியின் அறைக்கு தான்.. இருவர் மீதும் சந்தேகம் கொண்ட ஸ்ரீ அவனை பின் தொடர்ந்தாள்.
உள்ளே சென்ற கார்த்திக் கதவை சாற்றி விட்டு ஹரியிடம் போய் பேசிக் கொண்டிருந்தான். கதவை சாற்றியதால் சாளரத்தின் வழியே விழியை நுழைத்து பார்த்த ஸ்ரீக்கு பெரிதாய் ஒன்றும் புரியவில்லை..இருவரும் ஏதோ சீரியசாக பேசிக் கொள்கிறார்கள் என்று மட்டும் தெரிந்தது..அவர்கள் அமைதியாக பேசியதால் அதுவும் அது ஒரு விசாலமான அறை என்பதால் ,அதில் அந்த மூலையில் இருந்து பேசியது இவளுக்கு ஆடியோ இல்லாமல் விஷுவல் மட்டுமே தெரிந்தது ஊமைப்படம் பார்ப்பது போல..
‘சரியான கேடிங்க ஏதோ ரெண்டு பேரும் பண்றானுங்க ஆனா என்னனு தான் தெரியலை கூடிய சீக்கிரம் கண்டு பிடிக்கிறேன் ‘ என சூளுரைத்துக் கொண்டு தன் அறைக்கு சென்றாள்.
மறுநாள் காலை கார்த்திக்கும் ஹரியும் எழுந்து கீழே வரும் போதே பஞ்ச பாண்டவிகள் அனைவரும் குளித்து தயாராகி ஹாலில் உட்கார்ந்து தங்களுக்குள் சீரியசாக எதையோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்து குழம்பிய ஹரி , கார்த்திக்கிடம் “டேய் என்னடா இது வீடு எதும் மாறி வந்துட்டோமா ??? காலங்காத்தால இந்த பூதங்க எல்லாம் எங்க போக கிளம்பி உக்காந்துருக்குங்க ?? இதுங்களுக்கு பத்து மணி தான விடிகாலை இப்ப என்னடானா 6.30க்கு இவ்ளோ கோட்டிங்க் மூஞ்சில போட்டுட்டு பேய் மாதிரி காட்சி குடுக்குதுங்க ..இன்னைக்கு என்ன ஆப்போ டேய் உனக்கு தெரியுமா டா எங்க போறாங்கனு??”என வினவினான்.
அவனை முறைத்த கார்த்திக் ” டேய் நாதாரி நேத்து உன்னை காப்பாத்த போய் குடும்பமே என்ன வச்சு கும்மி அடிக்க பார்த்துச்சு..எப்படியோ எஸ்கேப் ஆகி நானே ரூமுக்கு வந்தவன் தான்..நைட் சாப்பிடவே இல்லை தெரியுமா ??? ரூம் ல இருந்த 5 பிஸ்கட் பாக்கெட் ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை அப்பறம் கொஞ்சமே கொஞ்சம் முறுக்கு அதிரசம்..இவ்ளோ தான் சப்பிட்டு வெறும் வயித்தோட படுத்துட்டு இப்போ உன் கூட தான வரேன் எனக்கு மட்டும் எப்படி தெரியும்..ஆனா ஒன்னு மட்டும் நல்லா புரியுது..நம்மளுக்கு ஏதோ பெரிசா ஆப்பு ஆவி பறக்க ரெடி ஆய்ட்டு இருக்குனு நினைக்கிறேன்..” என ஹரியை நோக்கி பாவமாக கூறினான்.
“பரதேசி!!! பாண்டா மாதிரி தின்னுட்டு பட்டினி கிடந்தேனு வேற சொல்றியா?? உன்னை அப்பறம் கவனிச்சுக்கிறேன் முதல்ல இந்த கூத்து எதுக்குனு கண்டுபிடிக்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கு காபி கொண்டு வந்து கொண்டிருந்த தன் சிற்றன்னையை அழைத்து,
“சித்தி எங்க இந்த வானரங்களாம் கிளம்பி உக்காந்திருக்கு ஊர் சுத்தி பார்க்க போகுதுங்களா?? ” என வினவினான்.
குறும்போடு அவனை பார்த்த பத்மினி ,” ஹரி கண்ணா உன்னோட கேள்வில சின்ன திருத்தம் போறாங்களா இல்ல போறோம்..எங்க போறோம்னா கல்யாணத்துக்கு துணி வாங்க போறோம்..கார்த்திக் நீ எஸ்கேப் ஆக ப்ளான் பண்ணாத பை தூக்க நீ தான் வரணும்னு குடும்பமே நேத்தே முடிவு பண்ணிருச்சு” என்று ஒரு அனுகுண்டை அசால்டாக இருவர் தலையிலும் போட்டு விட்டு அங்கிருந்து அகன்றார்.
“என்னாது ஷாப்பிங்கா !!!!!!!” என ஷாக் ஆகி நின்ற இருவரையும் உலுக்கிய பாட்டி ,” என்ன பேராண்டிகளா நேத்து எஸ்கேப் ஆகி ஓடுனதுக்கு தண்டனை தான் இது ஒழுங்கா சீக்கிரம் போய் ரெடி ஆய்ட்டு வாங்க ஒரு 7.30 கிளம்புனா தான் கடை சாத்துறதுக்குள்ள கொஞ்சமாச்சும் எடுக்க முடியும்” என அவர்களை விரட்டினார்.
“ஏய் கிழவி இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன் தண்டனை குடுக்குறதுன்னா வடிவேலை பண்ண மாதிரி மரத்துல தொங்க விட்டு நாலு நாள் கூட அடி இந்த மாதிரி விபரீத விளையாட்டுக்கு எல்லாம் நான் வரலை..இதோ இவனுக்கு தானே கல்யாணம் இவனை மட்டும் கூட்டிட்டு போங்க ..எனக்கு கல்யாணத்துக்கு புது ட்ரெஸ்ஸே வேணாம் ..கேவலம் ஒரு வேட்டி சட்டைக்காக உயிரை பணயம் வைக்க நான் தயாரா இல்லை..ஓடுடா ஓடுடா கைப்பிள்ளை ” என்று நகரப் போனவனை தடுத்து நிறுத்திய ஹரி,” த்ரோகி ” என அவன் காதில் முனுமுனுத்தவன், பாட்டியிடம் திரும்பி
“பாட்டி நாங்க எதுக்கு அங்கலாம் தாத்தா அப்பா சித்தப்பா மாமா எல்லாரும் இருக்காங்கல அவங்களை கூட்டிட்டு போக வேண்டி தான நாங்க வந்தா நீங்க பொறுமையாவே செலக்ட் பண்ண முடியாது சோ நீங்க என் செல்ல பாட்டில நீங்களே போய் இவனுங்க வேணாம்னு சொல்லிருங்க பாட்டி” என ஐஸ் வைத்தான்.
நீ பனிப்பாறையே தூக்கி தலைல வச்சாலும் ஒன்னும் வேலைக்கு ஆகாது என்பது போல் நின்ற பாட்டி ,” இதோ பாருங்க எந்த சாக்கும் சொல்லி தப்பிக்க முடியாது ஒழுங்கா போய் கிளம்பி வாங்க ஊர்ப்பட்ட வேலை இருக்கு எல்லாருக்கும்.. பத்திரிக்கை குடுக்க உன்ற அய்யனும் இந்த கோட்டிபயல பெத்த அந்த மவராசனும் போறாங்க , உன்ற மாமா சமையலுக்கு அட்வான்ஸ் குடுக்க போறாரு ,தாத்தாக்கு வயல்ல அறுவடை வேற நிறைய வேலை கிடக்கு தம்பி ஒழுங்கா போய் கிளம்பி வர வழிய பாருங்க” என்று கூறிவிட்டு தன் வேலையை கவனிக்க சென்றார்.
“அப்போவே நினைச்சேன் இந்த பேய்ங்க இவ்வளவு ஆர்வமா கிளம்பி உக்கார்ந்த போதே என் மண்டைல அபாய மணி அடிச்சுச்சு..அதெப்படி பொண்ணுங்களுக்கு ஷாப்பிங்க் போறது ஷவர்மா சாப்பிடுறது போல இருக்கும் போல சை எப்படி நம்ம பர்ஸ்ஸை காலி பண்ணலாம்னு தான் காலங்காத்தால பட்டிமன்றம் நடத்துச்சுங்க போல ..இனிமேல் அந்த கடவுளே வந்தாலும் நம்மளை இந்த கண்டத்துல இருந்து காப்பாத்த முடியாது” என்று தங்கள் விதியை நொந்து கொண்ட கார்த்திக் ஹரியை அழத்துக் கொண்டு தயாராக சென்றான்.
என்னதான் பொறுமையாக கிளம்பினாலும் ஒரு மணி நேரத்தைக்கூட அவர்களால் நெட்டித் தள்ள முடியவில்லை.ஒரு வழியாக கிளம்பி வந்த இருவரும் கடைசி நேரத்தில் ஏதாவது அதிசயம் நடந்து தாங்கள் தப்பித்து விட மாட்டோமா என பிரார்த்தித்துக் கொண்டே வந்தவர்களின் காதை வந்து நிறைத்தது அந்த தேன் குரல்.
அதைக்கேட்டு இருவரின் முகமும் 1000 வாட்ஸ் பல்ப் போல பிரகாசமடைந்தது….
அந்த தேன் குரலுக்கு சொந்தக்காரர் யார்????
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
4
+1
+1

