
அத்தியாயம் 6
“வாவ்வ்வ்வ்வ்வ்” என அங்கே வந்த பஞ்ச பாண்டவிகளை பார்த்து கூறி விசிலடித்தான் கார்த்திக்.
அந்த சப்தத்தில் கலைந்த ஹரி ,’அடச்சீ ஹரி என்னடா இப்படியா அவளை புடவைல பார்த்ததும் அப்படியே தலை குப்புற விழுவ..அய்யோ அந்த குட்டி பிசாசு நம்மளை பத்தி என்ன நினைச்சிருக்கும் கோவமா இருக்க மாதிரி ஸீனை போட்டுட்டு இப்படி வாயை பொலந்துட்டு சைட் அடிக்கிறான் மானங்கெட்டவன்னு கண்டிப்பா நினைச்சுருப்பா.
இனிமேலாச்சும் இப்படி எல்லாரும் பார்க்குற மாதிரி சைட் அடிக்காம யாருக்கும் முக்கியமா அந்த குட்டி சாத்தானுக்கும் தெரியாம் சைட் அடி டா ஹரி ஆனாலும் சும்மா சொல்ல கூடாது புடவைல அந்த குட்டிபிசாசு ஆளை அசத்துறா இனிமேல் அவ புடவை கட்டாம இருந்தா தான் நல்லது இல்லைனா உன் மானம் மரியாதை எல்லாம் கப்பல் ஏறிரும்’ என தனக்குத் தானே பேசிக்கொண்டு எதற்கு வந்தானோ அதையே மறந்து விட்டு கீழே ஓடினான்.
அவன் தன்னை இரசித்துப் பார்த்ததையும் பின்பு சுதாரித்து கீழே ஓடியதையும் கண்டு மனதிற்குள் சிரித்த ஸ்ரீ, ‘டேய் கேடி இதான் உன் வீக்னெஸா இரு இனிமேல் 1 மணி நேரம் வேஸ்ட் ஆனாலும் பரவாயில்லை டெய்லி சாரி தான் கட்ட போறேன் செத்தடா மவனே’ என அவனை கவுப்பதற்கு முதல் திட்டத்தை தீட்டினாள்.
“ஹேய் காலையிலே பஞ்ச பூதங்களும் இப்படி வீட்டுக்கு வெள்ளை அடிக்க வச்சுருந்த பெயிண்ட் எடுத்து மூஞ்சில அடிச்சுகிட்டு ஷாமியானா பந்தல் போட வச்சுருந்த துணிய சுத்திட்டு எங்க கிளம்பிட்டிங்க தென்காசி அழகி போட்டிக்கா??” என கலாய்த்தது வேறு யாரு நம்ம புன்னகை மன்னன் மங்கையரின் கனவுக் கண்ணன் கார்த்திக்கே தான்.
“ஏய்ய்ய்ய்ய்!!!” என ஒரு சேர ஐவரும் கோரசாக குரலை உயர்த்தி அவனை பார்வையிலே பஸ்பம் ஆக்கி விடுவதைப் போல் முறைத்தனர்.
“அய்யோ ஆத்தா பேய்ய்ய்ய்!!! என்ன காப்பாத்துங்க இந்த பேய்ங்கட்ட இருந்து என்ன காப்பாத்த யாருமே இல்லையா” என கத்தினான்.
“யாரோ ஆஆஆனு வாய்ல காக்கா கக்கா போறது கூட தெரியாம இவ்ளோ நேரம் சைட் அடிச்சுட்டு இருந்தாங்க அந்த ஆளை யாராச்சும் பார்த்தீங்களா டி” என மது அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே வினவினாள்.
அதற்கு அவர்கள் நால்வரும் கோரசாக,” அதான அந்த வீணாப்போனவன் எங்க ” கார்த்திக்கை கலாய்த்தனர்.
அப்போது கார்த்திக் கத்தியதில் அவனுக்கு அபயம் அளிக்க அங்கே பிரசன்னமானார் கலைவாணி.
“கார்த்திக் கண்ணா என்ன இன்னும் குளிக்காம கூட இந்த புள்ளைங்க கூட கூத்து பண்ணிட்டு இருக்க சீக்கிரம் கிளம்பு கோவிலுக்கு போகனும் தாத்தா லேட் ஆனா திட்ட போறாரு” என அவனிடம் கூறியவர்.
“அட பொண்ணுங்களா புடவைல எல்லாரும் சாமி சிலை மாதிரி அழகா இருக்கிங்க.உங்களுக்கு சுத்தி போடணும் என் கண்ணே பட்ருக்கும், ஸ்ரீ குட்டிமா கல்யாணக் கலை வந்துருச்சு டா தங்கம் உனக்கு . சரி கீழ வாங்க பூ கட்டி வச்சுருக்கேன் எல்லாரும் வச்சுக்கோங்க இன்னும் அம்சமா இருக்கும்” என அவர்களை பார்த்து வாஞ்சையாக கூறியவர் தன் வேலையை கவனிக்க கீழே சென்று விட்டார்.
“யாரு இதுங்களா சிலை மாதிரி இருக்கு மலை மாதிரி இருக்குங்க ஒவ்வொன்னும்..பெரியம்மா எதுக்கும் எனக்கு சாப்பாடு தனியா எடுத்து வச்சுருங்க நான் குளிச்சுட்டு வர்றதுக்குள்ள இந்த பஞ்ச பூதங்களும் காலி பண்ணீருங்க” என தன் பெரியம்மாவிடம் முனுமுனுத்து விட்டு இன்னும் சற்று நேரம் அங்கு நின்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை உணர்ந்தவன் சிட்டாக தன் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான்.செல்வதற்கு முன் தன்னவளை பார்த்து கண்ணடிகவும் மறக்கவில்லை.அவன் செய்கையில் பாவம் அவள் தான் தவித்துப் போனாள்.(யாரந்த அவள்??????)
அதன் பின் கீழே சென்ற ஐவரும் கலைவாணி கொடுத்த பூவை சூடிக் கொண்டு ஹாலில் அமர்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்.
சற்று நேரத்திற்கெல்லாம் அங்கே உதயமான நாரயணசாமி தன் அதிகாரக் குரலில்,”நாயகி என்ன இன்னும் யாருக்கும் கோவிலுக்கு கிளம்புற உத்தேசம் இல்லையா இன்னும் சாப்பிடாம உக்காந்து கதைச்சுட்டு இருக்கிங்க எல்லாரையும் சாப்பிட கூப்பிடுமா கிளம்பணும்” என தன் மனையாளை ஏவினார். அவர் கூறியது என்னமோ ரெங்கநாயகியிடம் தான் ஆனால் அவரின் பார்வையோ அங்கே வெட்டிக்கதை அடித்துக் கொண்டிருந்த நம் குரங்கு கூட்டத்திடமே இருந்தது.
அவர் அங்கிருந்து அகன்றதும்,”ஹேய் ஸ்ரீ உங்க தாத்தாவை நீ யங்க் மேன்னு சொல்றதுல தப்பே இல்லை டி!!!இந்த வயசுலயும் எவ்ளோ கெத்தா இருக்காரு வாய்ஸ்ல என்ன ஆளுமை இப்போ இருந்து உங்க தாத்தாவோட விசிறி ஆய்ட்டேன் டி நான்” என வர்ஷு ஸ்ரீயிடம் கூறினாள்.
அதற்கு ஸ்ரீயோ, “கைவிசிறியா இல்லை மின்விசிறியா செல்லம் பிகாஸ் எங்க யங்க் மேனுக்கு இந்த காலத்து டெக்னாலஜிலாம் சுத்தமா பிடிக்காது இன்னும் இங்க அம்மில அரைச்சு தான் எல்லாம் செய்வாங்க இங்க எல்லாமே பழமை மாறாம இருக்கணும்னு யங்க் மேனோட உத்தரவு . ரொம்ப சண்டை போட்டு தான் மத்த ரூம்ல லாம் ஃபேன் மாட்ட ஒத்துக்கிட்டாரு..ஆனா அவங்க ரூம்ல ஒன்லி தென்னை மரத்துக் காத்துக்கு மட்டும் தான் என்ட்ரி.. எங்க பாட்டி மேல இருக்க லவ்வை விட எங்க தாத்தாக்கு பழமை மேலையும் தமிழ் மேலையும் தான் லவ் அதிகம்” என தன் செல்ல தாத்தாவை பற்றி சிலாகித்துக் கூறிக் கொண்டிருந்தாள்.
“ஹேய் போதும் போதும் நிறுத்துங்க டி உங்க தாத்தா சிம்பாலிக்கா நம்மளை தான் கதை பேசாம போய் கிளம்ப சொன்னாரு.அவரு வந்து மறுபடியும் டைரக்டா நம்ம மேல தாக்குதல் நடத்துறதுக்குள்ள வாங்க போய் சாப்பாடை எடுத்து வைக்கலாம்” என நிஷா ரொம்ப அக்கறையாக கூறினாள்.
தன் கணவன் கூறிவிட்டு சென்றதை செவ்வனே செய்த ரெங்கநாயகி ,அனைவரையும் சாப்பாடு மேஜையில் ஆஜராக வத்திருந்தார் ஒருவனைத் தவிர (அதே அதே நீங்க நினைச்ச மாதிரி அது நம்ம கார்த்திக்கே தான்)
‘ஊரையே சமாளிச்சுரலாம் போல இந்த பக்கிய சமாளிக்கிறதுக்குள்ள அய்யோ ராமா முடியலை’ என புலம்பிக் கொண்டு “டேய் தடியா இன்னும் எம்புட்டு நேரம் தான் கண்ணாடி முன்னாடியே நிப்ப..சீக்கிரம் வா டா எல்லாரும் உனக்காக தான் காத்துட்டு இருக்காங்க” என கீழிருந்தே கத்தினார் ரெங்கநாயகி.
அப்போது படிகளில் அவன் இறங்கி வருவது தெரிந்தது.வந்தவனை பார்த்து பாட்டி ஆஆவென வாயைப் பிளந்தார். பின்ன நம்ம கார்த்திக் என்ட்ரி அப்படி, அடிக்கும் மஞ்சள் கலரில் சிலுக்கு சட்டையும், சிகப்பும் பச்சையும் கலந்த நிறத்தில் ஒரு வேட்டியும் கட்டிக்கொண்டு கண்களில் சிகப்பும் தங்க நிறமும் கலந்த கூலர்ஸ் அணிந்து படிகளில் ரஜினி ஸ்டைலில் நடந்து வந்தான்.
வந்தவன் கடைசி படிகளில் வேஷ்டி தடுக்கி விட அங்கு நின்ற பாட்டியை பிடித்து ஒரு வழியாக கீழே விழாமல் தப்பித்தான்.ஆனால் எங்கே கீழே விழப் போனது தெரிந்தால் கெத்து குறைந்து விடும் (அப்படி ஒன்னு உனக்கு இருக்கா) என நினைத்து பாட்டியை அப்படியே கட்டிப் பிடிப்பதை போல் சமாளித்தான்.
பாட்டியோ,”பத்மினி இங்க வா வந்து உன்ற மகனோட கோலத்தை பாரு ” என தன் மருமகளுக்கு அழைப்பு விடுத்தவர் கார்த்திக்கை நோக்கி,”டேய் கோட்டிப்பயலே தள்ளு டா என்னடா இது கோமாளி மாதிரி வேசம் போட்டுட்டு வந்திருக்க, இதத்தான் இவ்ளோ நேரம் பண்ணிட்டு இருந்தியா??? உன்ன மாறுவேடப் போட்டிக்கு யாரும் கூட்டிட்டு போல கோவிலுக்கு தான் போறோம்” என அவனை கிண்டல் செய்தார்.
“ஏய் கிழவி யூ கன்ட்ரி ஃபூல் கொஞ்சமாச்சும் ஃபேஷன்னா என்னனு தெரியுதா உன்ன வச்சுக்கிட்டு ஒரே ரோதனையா போச்சு” என சலித்துக் கொண்டான்.
அதற்குள் பாட்டியின் சப்தத்தை கேட்டு அங்கே வந்த அனைவரும் அவனின் வேஷத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்க,
அவர்களை அடக்கிய நாரயணசாமி ,”தம்பி என்ன இது போய் கோவிலுக்கு போற மாதிரி வெள்ளை வேஷ்டி சட்டை போட்டுட்டு வா இன்னும் 5 நிமிஷத்துல கீழ வர எல்லாரும் வந்து சாப்பிடுங்க” என அனைவருக்கும் கட்டளையிட்டு விட்டு சாப்பிட சென்றார்.
‘இந்த கிழவிய என்ன பண்ணலாம் என் ஆள் முன்னாடி இப்படி என் இமேஜை டேமேஜ் பண்ணிருச்சே,இந்த வீரப்பன் வேற நான் என்ன நூத்துக் கிழவனா வெள்ள வேட்டி சட்டை போட.. விட்டா கதர் வேட்டி சட்டையும் நெத்தில பட்டையை போட்டு கழுத்துல ஒரு ருத்ராட்ச கொட்டைய மாட்டி விட்டு என்ன ஞானப்பழமா மாத்திருவாரு போல ..எல்லாம் இந்த கிழவியால வந்தது ..உனக்கு இதுக்கெல்லாம் சேர்த்து இருக்கு’ என மனதிற்குள் புலம்பிக் கொண்டு பாட்டியை முறைத்துக் கொண்டே உடை மாற்ற சென்றான்.
பின் அவன் கிளம்பி வரவும் அனைவரும் உண்டு விட்டு பூஜைக்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்தவர்கள் 30 கி.மி தள்ளி உள்ள தங்களின் குலதெய்வ கோவிலுக்கு இரு வேனில் கிளம்பிச் சென்றனர்.
ஒரு வேனில் பெரியவர்கள் அனைவரும் இன்னொரு வேனில் சிறியவர்கள் அனைவரும் தங்கள் பயணத்தை தொடங்கினர்..அஷ்வினும் நேற்று இரவே பள்ளிக்கு டிமிக்கி அடித்து விட்டு இவர்கள் ஜோதியில் ஐக்கியமானான்..
ஹரி,கார்த்திக், அஷ்வின் ஒரு இருக்கையிலும் ,அவர்களுக்கு எதிரே உள்ள இருக்கையில் ஸ்ரீ,நந்து மற்றும் வர்ஷு அமர்ந்திருந்தனர்.பின்னால் உள்ள இருக்கையில் மது, நிஷா மற்றும் ஆதிரா அமர்ந்து வந்தனர்.
ஹரியும் அஷ்வினும் மாமன் மச்சான் கதையை பேசிக் கொண்டு வர கார்த்திக் சிறிது நேரம் யாருக்கும் தெரியாமல் தன்னவளை இரசித்தவன் பின் தன் சேஷ்டையை ஆரம்பித்தான்.
“நேக்கு கல்யாண வயசு தான் வந்துடுச்சி டி
Date பண்ணவ?
இல்ல chat பண்ணவா?
உன் கூட சேர்ந்து வாழ ஆசை தான் வந்துடுச்சி டி
Meet பண்ணவா?
இல்ல wait பண்ணவா?
எனக்கு இப்போ marriage வயசு தான் வந்துடிச்சி டி
Hall பார்கவா?
Block பண்ணவா?
உன்கூட சேர்ந்து living’u together கூட எனக்கு ஒகே டி
House பார்கவா?
பால் காச்சவா?”
என பெண்களை நோக்கி தன் கொடூரமான குரலால் பாட ஆரம்பித்தான்.
அங்கிருந்த அனைவரும் அவனை என்ன செய்தால் தகும் என முறைத்துக் கொண்டிருந்தனர்.சாலையில் கவனத்தை வைத்திருந்த டிரைவர் கூட இவன் கத்தலில் வண்டி ஓட்டுவதை நிறுத்தி விட்டு இவனை திரும்பி பார்த்து விட்டு மீண்டும் வண்டியை எடுத்தார்.
“வாய மூடி சும்மா இருடா!
ரோட்டை பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!”
என ஹரி அவன் பாட்டிற்கு எசைப்பாட்டு பாடினான்.
இப்போது இருவரையும் பெண்கள் அனைவரும் ஒருசேர முறைத்தனர்.பின் தங்களுக்குள் ஜாடை செய்து கொண்டு 6 பெண்களும் கோரசாக
“போ(ங்க)டா போ(ங்க)டா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
போ(ங்க)டா போ(ங்க)டா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு” என பாட ஆரம்பித்தனர்..
“வாய மூடுங்கககக!!!” என சப்தமாக ஒரு குரல் ஒலித்தது.பெண்கள் அனைவரும் தங்கள் பாட்டை நிறுத்தி விட்டு குரல் வந்த திசையை நோக்கினர்.அஷ்வின் தான் காதில் கை வைத்து பாவமாக அமர்ந்திருந்தான்.
“டேய் தம்பிப்பையா எதுக்கு டா கத்தி எங்கள் இசை மழைய குடை போட்டு ஸ்டாப் பண்ண???” என நிஷா அஷ்வினை பார்த்து ஆதங்கத்தோடு வினவினாள்.
அவளை கொல்லும் வெறியோடு பார்த்தவன்,”உங்க இசை மழையை நிறுத்தலைனா என் காதுல இருந்து இரத்த வெள்ளம் ஓடிருக்கும் ஆல்ரெடி கார்த்தி மாமா கத்துனதுலயே ரைட் சைட் காது பீஸ் போச்சு இப்போ நீங்க கத்துனதுல ரெண்டும் போச்சு மனுசங்களா நீங்க எல்லாம் ?? இதுக்கு நான் ஸ்கூலுக்கு போய் அந்த கருமம் பிடிச்ச சைக்கிள் டெஸ்ட் கார் டெஸ்ட் ராக்கெட் டெஸ்ட்னு அதையே எழுதிருப்பேன் உங்களை நம்பி ஸ்கூல் கட் அடிச்சுட்டு வந்தேன்ல என் புத்திய அடிடாஸாலயே நல்லா அடிச்சுக்கணும்”.
“ப்ரோ எனி ஹெல்ப் பட் சாரி இப்போ அடிடாஸ் என்கிட்ட இல்லை பாட்டா தான் இருக்கு நம்ம கோவிலுக்கு டாட்டா போய்ட்டு வந்த பின்னாடி வேணா வீட்ல எடுத்து தரேன் ஓகே வா” என ஸ்ரீ ரொம்ப அக்கறையாக கூறினாள்.
அவளை முறைத்த அஷ்வின் ஹரியை நோக்கி ” மாமா இவங்க பாடுனதுல என் காது பஞ்சர் ஆய்ருச்சு அத நீங்க பாடி தான் சரி பண்ணனும் நீங்க பாடி கேட்டு எவ்ளோ நாள் ஆச்சு இன்னைக்கு கண்டிப்பா நீங்க பாடியே ஆகணும் ” என கட்டளை இட்டான்.
ஸ்ரீ, கார்த்திக்கை தவிர மீதமிருந்த அனைவரும் அவனை பாட சொல்லி வற்புருத்தினார்கள்.
ஸ்ரீ வெளியே கூறாமல், ‘நான் மட்டும் பாட சொன்னா கண்டிப்பா பாடவே மாட்டன்னு எனக்கு தெரியும் டா ..ஸ்ரீ குட்டி அவனை கண்டுக்கவே கண்டுக்காத நம்ம ஒட்டுனா அவன் வெட்டுவான் சோ நம்ம விலகி இருக்க மாதிரியே ஆக்ட் பண்ணுவோம்’ என எப்போதும் போல் மனதிற்குள்ளேயே பேசிக்கொண்டு ஜன்னல் பக்கம் திரும்பி ரொம்ப சுவாரசியமாக அங்கு தெரிந்த எருமை மாடுகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
கார்த்திக்கோ இதில் எதிலும் பங்கு கொள்ளாமல் தன்னவளுக்கு விழிகளாலயே காதல் அப்ளிகேஷனை கொரியர் அனுப்பிக் கொண்டிருந்தான்.ஆனால் அவளோ அதை திறந்து கூடப் பார்க்காமல் அதை குப்பைத்தொட்டிக்கு பார்சல் அனுப்பினாள்.
ஹரி முறையாக சங்கீதம் கற்றவன்.மேலும் கிடார் , வயலின் , பியானோ போன்ற இசை கருவகளை வாசிப்பதில் வல்லவன்.அதனால் தான் அனைவரும் அவனை பாட சொல்லி அன்புத்தொல்லை செய்து கொண்டிருந்தனர். அவனும் ஸ்ரீயை மனதில் நினைத்துக் கொண்டு அவளுக்காகப் பாட ஆரம்பித்தான் கண்களை மூடிக்கொண்டு.
“மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்
இப்படி இங்கொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீர்ந்ததை
எண்ணித்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான்”
என்ற பாடலை கசிந்துருகி பாடியவன் அதிலேயே கலந்து விட்டான்.
பாடி முடித்தவன் கண்களை திறந்து ஆசையாக ஸ்ரீயை பார்க்க,அவளோ ஜன்னல் கம்பிகளில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.
பாட்டை இரசிச்சுட்டு இருக்கான்னு நீங்க நினைச்சா அதுக்கு நான் பொறுப்பு இல்லை.பக்கி பாட்டை கேட்டுட்டு காத்தடிக்கவும் நல்லா தூங்கிருச்சு.
அவளை பார்த்த அனைவரும் ஹரியின் நிலமையை எண்ணி விழுந்து விழுந்து சிரித்தனர்.
வெறும் வாய்லயே வட சுடுற கார்த்திக்கு இப்படி லட்டு மாதிரி மேட்டர் கிடைச்சா சும்மாவா இருப்பான்?
“டேய் ப்ரோ இவளுக்காகவா அப்படி உருகி உருகி பாடுன??? இவளுக்கு என் பாட்டே அதிகம் உன்னை நினைச்சா சிப்பு சிப்பா வருதுடா அண்ணா”என அவனை போட்டு கலாய்த்து தள்ளி விட்டான்.
‘கிராதகி இப்படி அசிங்க படுத்திட்டாளே ..இவளுக்கு போய் பாடுனல ஹரி உனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் எப்படி தூங்குறா பாரு எருமை’என மனதிற்குள் குமைந்து கொண்டு வெளியே
” நான் யாருக்காகவும் பாடலை இந்த பாட்டு பிடிக்கும் அதான் பாடுனேன் நீயா கிளப்பி விடாத” என கார்த்திக்கிடம் எரிந்து விழுந்தான் ஹரி.
அவனைக் காப்பாற்ற வேண்டி கோவில் வந்து விட்டதால் தப்பித்தோம் பிழைத்தோம் என முதல் ஆளாக வேனில் இருந்து இறங்கி ஓடி விட்டான்.அவர்கள் அனைவரின் சிரிப்பொலி அவனை தொடர்ந்தது.
வேன் நின்றதில் தூக்கத்தில் இருந்து கலைந்த ஸ்ரீயை அனைவரும் நடந்ததை சொல்லி ஒரு வழி செய்து விட்டனர்.
‘அய்யோ இப்படியா சொதப்புவ ஸ்ரீ அவனே இறங்கி வந்து நமக்காக பாடிருக்கான் நீ இப்படி பண்ணிட்டயே இப்போ அந்த வேதாளத்தை எப்படி மலை இறக்குறது கடவுளே சக்தி கொடு’ என மைன்ட் வாய்ஸில் பேசிக் கொண்டு கோவில் உள்ளே சென்றாள்.
அங்கே பத்திரிக்கை வைத்து பூஜைக்கு அனைத்தும் தயார் நிலையில் இருந்தது.அனைவரும் வந்நதும் பூஜை தொடங்கியது.
‘கடவுளே இந்த கல்யாணம் நல்ல முறையில நடக்கனும் என் ஸ்ரீ மேல இருக்க கோபத்துனால அவளை எந்த விதத்திலும் நான் கஷ்டப்படுத்திற கூடாது..அதுக்கு நீதான் துணை புரியணும்..அவ எப்போதும் சந்தோஷமா இருக்கனும்’என ஹரி அவளுக்காக வேண்டினான்.
‘ரொம்ப நன்றி கடவுளே கனவுல கூட கிடைக்குமானு ஏங்குன வாழ்க்கைய கைல குடுத்துட்ட நான் பண்ண தப்புக்கு ஹரி என்ன பதிலுக்கு எவ்வளவு காயப்படுத்தினாலும் அதை தாங்கிக்கிற சக்திய கொடு..அவன் எப்போதும் சந்தோஷமா இருக்கனும் கடவுளே..’என அவனுக்காக ஸ்ரீ பிரார்த்தனை செய்தாள்.
அப்போது ஹரிக்கு ஒரு போன் கால் வந்தது ..அதை எடுத்து பேசியவனின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக பதற்றத்திற்கு மாறியது, “நீ கவலைப் படாத நான் உடனே வரேன்” என பதிலளித்து விட்டு.. யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்றான் (ஓடினான்).
“ஹரி கண்ணா நில்லு எங்க போற”
“ப்ரோ என்னை மட்டும் கோர்த்து விட்டுட்டு போகாதடா”
“மாமா எங்க போறிங்க”
என தன்னை தொடர்ந்த எந்த குரலுக்கும் செவி சாய்க்காமல் விரைவாக கோவிலை விட்டு வெளியேறினான்.
அனைவரும் அவன் சென்ற திசையையே குழப்பத்தோடு பார்த்து கொண்டு நின்றிருந்தனர்.
“வருண் வருண் கண்ணா” என வருணின் பெயரை ஏலம் விட்டுக்கொண்டே அந்த வீட்டை வலம் வந்து கொண்டிருந்தார் அவனின் அன்னை மீனாட்சி.
எங்கு தேடியும் அவனைக் காணாமல் போக, ஹாலில் அமர்ந்து தனது லேப்டாப்பை நோண்டிக் கொண்டிருந்த தன் மகள் மினியிடம் சென்றவர் ,”மினி உன் அண்ணனை பார்த்தியா டா?” என கேள்வியெழுப்ப,
அவளோ மனதில் மூண்ட எரிச்சலுடன் ,”மாம் உனக்கு எத்தனை டைம் சொல்றது… அவன் எனக்கு அண்ணன் இல்லை.. வீ ஆர் ட்வின்ஸ்.. எனக்கு ஒரு நிமிஷம் முன்னாடி பிறந்ததுக்காக அவனை அண்ணன்னு எல்லாம் கூப்பிட முடியாதுன்னு உங்களுக்கு எத்தனை டைம் சொல்றது.. ச்சே இர்ரிட்டேட்டிங்க் மாம்.. ப்ளீஸ் கெட் லாஸ்ட்” என கத்தினாள் மினி.
மினி வருணின் இரட்டை சகோதரி.. ஒரே கருவில் ஒன்றாக பிறந்திருந்தாலும் இருவரின் குணமும் இருவேறு துருவமாக இருந்தது.
இருவரைப் பற்றியும் அறிந்த மீனாட்சி ஒரு பெருமூச்சுடன் அவ்விடம் விட்டு நகர்ந்தார்.
அப்போது வீட்டிற்குள் சோகமாக நுழைந்த வருணைக் கண்ட மினி ,”வந்துட்டான் இரிட்டேட்டிங்க் இடியட்” என வாய்க்குள் முனுமுனுத்துவிட்டு அங்கிருந்து எழுந்து தன்னறைக்குச் சென்றுவிட்டாள் அவனின் தங்கை.
அவனோ ஸ்ரீயை இரண்டு நாளாய் கல்லூரியில் காணவில்லை என்ற கவலையில் அவளைக் கண்டுகொள்ளாமல் அப்படியே சோபாவில் பொத்தென்று விழ, அவன் தலையை ஆதரவாய் கோதியது ஒரு கரம்.
அதை வைத்தே அது யாரென கண்டுகொண்டவன், “ம்மா பக்கத்துல வந்து உட்காருங்க மா” என அவரின் கையைப் பிடித்து தன் அருகில் அமர்த்திக் கொண்டவன் அப்படியே அவர் மடியில் தலை சாய்த்துக் கொண்டான்.
அவன் சிறு செய்கையிலே அவனின் மன சஞ்சலத்தை அறிந்து கொண்ட அந்த தாயுள்ளம் வாஞ்சையுடன் அவனை வருடிக் கொடுத்தது.
“என் வருண் செல்லத்துக்கு என்னாச்சு?” என அவன் மெதுவாக வினவ,
“ப்ச் அதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா.. காலேஜ்ல ப்ராஜெக்ட் வொர்க் ஜாஸ்தி அதான்.. கொஞ்ச நேரம் உங்க மடியில படுத்தா எல்லாம் சரியா போய்ரும்” என அவரை வயிற்றோடு கட்டிக்கொண்டு படுத்துவிட்டான் அந்த வளர்ந்த குழந்தை.
அவரும் அவன் சொன்னதை நம்பிவிட்டு அவனுக்கு தட்டிக் கொடுத்துக் கொண்டே மெதுவாக தான் பேச நினைத்ததை பேசத் தொடங்கினார் ,”வருண் அப்பா நம்மளை பார்க்கணுமாம்.. நாம ஏன் அங்க போய்ட்..” என அவர் அந்த வார்த்தையைக் கூட முடிக்கவில்லை,சரேலென்று அவர் மடியில் இருந்து எழுந்த வருண் கோபமாக ,”இன்னொரு முறை அந்தாளைப் பத்தி பேசுனீங்க நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. உங்களுக்கு வேணும்னா நீங்க போய்ட்டு வாங்க… கூட அந்த மேனாமினுக்கியையும்(மினி) கூட்டிட்டு போங்க.. இத்தனை வருஷம் தனியா தான இருந்தேன்… இப்போவும் அப்படி இருந்துக்குவேன்.. ச்சை மனுஷனுக்கு எங்கேயும் நிம்மதி இல்லை” என கத்தியவன் விறுவிறுவென மாடியேறி தன் அறைக்குச் சென்று கதவை பட்டென அரைந்து சாற்றினான்.
அவன் பேச்சில் அதிர்ந்து போய் அமர்ந்திருந்த மீனாட்சி, இது ஒன்றும் தனக்கு புதுசல்ல என்பதனால் தன் விதியை நொந்து கொண்டு கண்ணீருடன் அங்கிருந்து சென்று விட்டார்!!!!
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
8
+1
+1

