Loading

அத்தியாயம் – 20

 

நள்ளிரவு வரையில் பால்கனியிலே அமர்ந்து வானத்தை வெறித்த ஹரி,பின் ஏதோ முடிவெடுத்து விட்டு அங்கிருந்து எழுந்து தங்கள் அறைக்கு சென்றான்.

 

இந்த ஒரு வாரமாக சரியாக உறக்கம் கொள்ளாமல் இருந்ததோடு பயணக் களைப்பும் சேர்ந்து கொள்ள, ஸ்ரீ படுத்ததும் உறங்கி விட்டாள்.

 

மெத்தையில் காலை குறுக்கிக் கொண்டு தலையணையை கட்டிப்பிடித்து குழந்தை போல் உறங்கும் அவளை கண்ணெடுக்காமல் பார்த்தவனின் மனதில் வலி கூடியது..

 

‘ஐ அம் சோ சாரி லட்டு..பட் இது நம்ம ரெண்டு பேரு நல்லதுக்கு தான்..எனக்கு உன்னை என் வார்த்தைல நோகடிச்சுருவேனோன்னு பயமா இருக்கு…அதான் கொஞ்ச நாள் உன்னை விட்டு தள்ளியே இருக்கேன்..’ என மனதோடு பேசிக்கொண்டு அவளை நன்றாக படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டவன் அங்கிருந்து நகரப் போக,அது முடியாமல் போக திரும்பி பார்த்தான்..அங்கே அவன் கையை தூக்க்கத்திலே நன்றாக பற்றியிருந்தாள் அவன் மனையாள்.

 

அதை பார்த்து மேலும் மனம் கனக்க,அவள் கைகளை மெதுவாக விலக்கி விட்டவன் குனிந்து அவள் நெற்றியில் முத்தம் வைக்க போக,பின் சுதாரித்து தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டவன் அங்கிருந்த தலையணையை எடுத்துக் கொண்டு விடு விடுவென வெளியேறினான்.

 

ஹாலிற்கு வந்தவன் அங்கிருந்து சோபாவில் தன் ஆறடி உடலை குறுக்கிக் கொண்டு படுத்து கண்களை மூடினான்.

 

ஆனால் உறக்கம் தான் வரமாட்டேன் என சண்டித்தனம் செய்தது..விடிய விடிய உறங்காமல் ஏதோ சிந்தித்துக் கொண்டே இருந்து விட்டு சூரியன் உதிக்கும் முன்பே குளித்து முடித்து கிளம்பியவன் ,தூங்கும் மனைவியை சிறிது நேரம் கண்ணெடுக்காமல் இரசித்தான்.

 

தன்னையறியாமலே பெருமூச்சொன்று கிளம்ப,மண்டையை குலுக்கி தன்னை சரி செய்தவன் பின் அவளிடம் இருந்து கண்களை விலக்கிக் கொண்டு வெளியே வந்து தன்னிடம் இருந்த சாவியை வைத்து கதவை பூட்டியவன் கார்த்திக்கிடம் கால் செய்து ஸ்ரீயை கல்லூரியில் விட சொன்னான்.

 

அவன் சந்தேகத்தோடு ஏன் எதற்கு என்று ஆயிரம் கேள்வி கேட்க, அவனை எப்படியோ சமாளித்தவன் பின் வேகமாக தன் காரை எடுத்துக்கொண்டு அலுவலகம் கிளம்பி சென்று விட்டான்.

 

ஏழு மணி போல் மெதுவாக தூக்கம் கலைந்து எழுந்த ஸ்ரீ ,கண்களை திறவாமலே கைகளை கொண்டு மெத்தையில் தன் கணவனை துலாவினாள். அவனை மெத்தையில் காணமல் குழம்பியவள்,’அதுக்குள்ள எழுந்துட்டானா??? ச்சே சரியான யோகா மாஸ்டரை கல்யாணம் பண்ணிருக்க ஸ்ரீ..இவனை வச்சுகிட்டு எப்படி தான் உன் காலம் ஓட போகுதோ’ என புலம்பியவள் ,எழுந்து பாத்ரூமிற்குள் பார்க்க, ‘இங்கேயும் காணோம் ஒருவேளை சூர்யா மாதிரி சன்ரைஸ் காபியோட வந்து என்னை எழுப்பி சர்ப்ரைஸ் பண்ண ப்ளான் பண்றானோ..இருக்கும் இருக்கும்’ என குதூகலித்தவள் ,பல் துலக்கி காலைக் கடன்களை முடித்து விட்டு சமையல் கட்டை நோக்கி சென்றாள்.

 

‘என்னா டா இது இங்கேயும் காணோம்’ என குழம்பி,வீட்டில் ஒவ்வொரு இடமாக தேடினாள்.

 

எங்கு தேடியும் அவன் கிடைக்காமல் போக ,பயந்து போனவள் ,’அய்யய்யோ இவனை யாராச்சும் கடத்திட்டு போய்ட்டாங்களோ’ என தனக்குள்ளே பேச, இன்னொரு மனமோ அவள் மண்டையில் நங்கென்று கொட்டி ,’லூசு லூசு உன் புருஷன் அப்படியே இடுப்புல தூக்கி வைச்சு கொஞ்சுற ஆறு மாச பாப்பா பாரு கடத்திட்டு போக, நல்லா அர்னால்டோட அக்கா பையன் மாதிரி வளர்ந்து நிக்கிறான் அவனை போய் கடத்துறாங்களா..மொட்டை மாடியில போய் தியானம் பண்றேன்னு உட்கார்ந்திருக்க போறான் சீக்கிரம் போய் அவன் தவத்தை கலைச்சு தொலை இல்லைனா சாமியாரா போய்ற போறான்’ என அறிவுரை வழங்கியது..

 

‘ஹிஹி இது எனக்கு தோணவே இல்லை பாரேன் இதோ போறேன்’ என அசடு வழிந்து கொண்டே கதவை போய் திறக்க, அது திறக்க மாட்டேன் என ஒற்றைக்காலில் நின்றது…

 

“என்ன ஸ்ரீ உனக்கு வந்த சோதனை கேவலம் ஒரு கதவு கூட திறக்க மாட்டேன்னு வம்பு பண்ணுது” என விட்டத்தை பார்த்து புலம்ப, இப்போது மீண்டும் அவள் மண்டையில் அங்கிருந்த ரிமோட்டை எடுத்து அடித்த மனசாட்சி ,”அடியே கூறு கெட்ட குண்டாசட்டி உன் புருஷன் உன்னை உள்ள விட்டுட்டு வெளிய பூட்டிட்டு போய்ருக்கான் ..அது கூட புரிஞ்சுக்க முடியாத புண்ணாக்கா இருக்கியே..உன்னை வச்சு எப்படி தான் காலம் தள்ள போறேனோ” என ஒப்பாரி வைத்தது..

 

மனசாட்சி திட்டியதை டீலில் விட்டவள்,’என்னதூஊஊஊ என்னை வச்சு பூட்டிட்டு போய்ட்டானா?? படுபாவி இருடா உனக்கு இருக்கு..நைட்க்கு உனக்கு வர்ஷூ கையால செஞ்ச வத்தல்குழம்பை ஊத்தலை என் பேர் தன்ய ஸ்ரீ ஹரிஷ் இல்லை” என சபதம் எடுத்துக் கொண்டவள்,

 

அப்போதும் மனம் ஆறாமல் போக, அவனை திட்டுவதற்காக தன் கைபேசியை தேடி எடுத்து தன் கணவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

 

அவளிடம் இருந்து தப்பிக்க, வேகவேகமாக வீட்டிலிருந்து ஓடி வந்த ஹரி இங்கே தன் மனசாட்சியிடம் இருந்து தப்பிக்க முடியாமல் போராடினான்.

 

மனம் முழுவதும் அவளே நிறைந்திருக்க,’நீ செய்வது தவறு அவளை ரொம்ப  காயப்படுத்துற நீ..எந்தவொரு பிரச்சனைக்கும் இப்படி ஓடி ஒளியுறது தீர்வாகாது அவகிட்ட மனம் விட்டு பேசு’ என மனம் இடித்துரைக்க,

 

‘எனக்கு வேற வழி தெரியலை அவ முகத்தை பார்த்து பேசுனா கண்டிப்பா கோவத்துல நான் எதாச்சும் சந்துவை பத்தி சொல்லிருவேன்..அது அவளுக்கு இன்னும் நரக வேதனையா தான் இருக்கும்..அதுக்கு இப்போ நான் பேசாம இருக்கேன்ற கஷ்டம் எவ்வளவோ பரவாயில்லை’ என அவன் செயலுக்கு நியாயம் கற்பித்தான்.

 

‘இப்போ நீ மட்டும் அவகூட பேசாம சந்தோஷமா இருக்கியா..அவளை விட அவ கஷ்டப்பட்டா நீதான் கஷ்டப்படுவ..இந்த வலி உனக்கு வேண்டுமா?? நல்லா யோசி ஹரி..உண்மையை ஒருநாள் ஸ்ரீ சந்திச்சு தான் ஆகனும் அதை இப்போவே சொல்றதுல என்ன தப்பு’ என மனம் கேள்வி கேட்க,

 

தன் மனமே இப்படி இரண்டாக பிரிந்து சண்டையிடுவதில் மேலும் தவித்துப் போன ஹரி தலையில் கைவைத்து அமர்ந்துவிட ,அப்போது தன் கைபேசி திரையில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்து மனம் பரபரக்க, வேகமாக அந்த அழைப்பை ஏற்த்து காதில் வைத்து,”ஹலோ என்னாச்சு இப்போ நிலமை எப்படி இருக்கு பரவாயில்லையா” என தவிப்போடு வினவினான்.

 

“….”

 

“நான் உடனே கிளம்பி வரேன்”

 

“….”

 

“சொன்னா புரிஞ்சுக்கோ..ப்ளீஸ்..என்னால இங்க நிம்மதியா இருக்க முடியலை”

 

“….”

 

“சரி !!! நான் வரலை போதுமா… பார்த்துக்கோ..எதுனாலும் உடனே கால் பண்ணு” என மனமே இல்லாமல் கூறியவன் அழைப்பை துண்டித்தான்.

 

அப்போது மீண்டும் தன் கைபேசி ஒலியெழுப்ப, யாரது என எடுத்து பார்த்தவன் அழைப்பு ஸ்ரீயிடம் இருந்து வருவதைக் கண்டு இப்போது இருந்த மனநிலை மாறி மீண்டும் அவளை பற்றி நினைக்க ஆரம்பித்தது மனம்.

 

இவன் சிந்தனையிலே இருக்க முழுவதுமாக அடித்து ஓய்ந்த கைபேசி மீண்டும் அழைக்க, தன் சிந்தனையில் இருந்து மீண்டவன் ‘இவள் எடுத்து பேசாமல் விடமாட்டாள்’ என நினைத்து போனை எடுத்து காதில் வைப்பதற்கு முன் அவள் கத்தியது காதை வந்தடைந்தது,

 

“டேய் லூசு மாங்க மடையா..இப்படியா ஒரு பிள்ளையை வீட்டுல வச்சு பூட்டிட்டு போவ?? குரங்கு..எவ்ளோ நேரம் உன்னை தேட…சொல்லிட்டு போக மாட்டியா டா சொறக்கா மண்டையா…இந்த காலங்காத்தால எங்க போய் தொலைஞ்ச கெடாமாடு” என அவனுக்கு கேப்பே கொடுக்காமல் இவள் கத்திக்கொண்டே இருக்க,

 

அவள் பேசியது(திட்டியது) அவனுக்கு அப்போதும் சிரிப்பை வரவழைக்க,அதை கட்டுப்படுத்திக் கொண்டு முயன்று வரவழைத்த கடினக் குரலில்,”எனக்கு ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங்க் அதான் சீக்கிரமே வந்துட்டேன்..உன் கிட்ட இருக்க சாவியை வச்சு திறந்துக்கோ..அப்பறம் உங்களுக்கு இன்னைக்கு சாப்பாடு விஜய் வீட்டில இருந்து கொண்டு வர சொல்லிருக்கேன்..சாப்பிட்டு பத்திரமா காலேஜ் கிளம்பு..கார்த்திக் கூட்டிட்டு போய்ட்டு அவனே கூட்டிட்டு வருவான்” என அவள் அடுத்து பதில் கூறுவதற்கு வாய்ப்பளிக்காமல் காலை கட் செய்திருந்தான்.

 

‘ஐ அம் சாரி பொண்டாட்டி!!!’ என மானசீகமாய் அவளிடம் மன்னிப்பு கோரியவன் ,தன் மனதை கடிவாளமிட்டு அடக்கி வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

 

இங்கே ஸ்ரீயோ ,அவன் வைத்தது தெரியாமல்,”அதெல்லாம் முடியாது..நீ என்ன பெரிய பில்கேட்ஸ்ஸா அப்படியே மைக்ரோஸாப்ட் கம்பெனி வச்சு நடத்துற ஒழுங்கா நீ வந்து கூட்டிட்டு போகலை!!! நான் அங்க வந்துருவேன் பார்த்துக்கோ” என தனியாக பேசிக் கொண்டிருந்தாள்.

 

அவன் வைத்துவிட்டதை மிகவும் தாமதமாகவே உணர்ந்தவள் , ‘இவனுக்கு என்ன ஆச்சு!! மறுபடியும் வேதாளம் வேப்பை மரத்துக்கு தாவிருச்சோ’ என பயந்தவள் பின் ,’சே சே இருக்காது நிஜமாவே வேலையா தான் இருக்கும்..இவன் தான் கடமை கண்ணாயிரம் ஆச்சே அதான் ஓடிருப்பான்.’ என தனக்குத்தானே ஏதோ சமாதானம் கூறிக்கொண்டவள், காலேஜுக்கு கிளம்ப சென்றாள்.

 

 

 

 

“அண்ணியாரே அண்ணியாரே!!!” என தன் வாசலில் முன் நின்று கொண்டு கத்திக் கொண்டிருந்தான் கார்த்திக்.

 

அப்போது பக்கத்து வீட்டில் நேத்து பார்த்த ஆன்ட்டி எங்கோ செல்ல வெளியே கிளம்பி வந்தவர் இவனை பார்த்து “merde Oh non encore ce secousse” என எப்போதும் போல் அவனை ப்ரென்ச்சில் திட்டியவர் அவனை முறைத்துவிட்டு சகுனம் சரியில்லை என மீண்டும் உள்ளே சென்று கதவை நன்றாக பூட்டிக்கொண்டார்.

 

“அப்பாடி தப்பிச்சோம் நல்ல வேளை நேத்து மாதிரி அடிக்காம விட்டுச்சே என்னாஆஆ அடி” என நேற்று இரவு நடந்ததை மீண்டும் மனதில் ஓட்டிப் பார்த்தான்.

 

குக்கர் பூரியிடம் இருந்து ஒருவழியாக தப்பித்து வந்த கார்த்திக், ஹரியின் தயவால் swiggyயின் துணையோடு ஒரு வழியாக வயிற்றை நிரப்பியவன், எப்போதடா படுக்கையில் விழுவோம் தூக்கம் கண்ணைக் கட்டுகிறது என தங்கள் அறைக்குள் நுழைய போக,அறை உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது..

 

சரி வர்ஷூ உடை மாற்றுகிறாள் என வெளியிலே சில நிமிடம் காத்திருந்தவன் , பத்து நிமிடத்திற்கு மேலாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் கொண்டு கதவை தட்டினான்.

 

அதற்கு எந்தவொரு பதிலும் வராமல் போக, “வர்ஷூ கதவை திற உள்ள என்ன பண்ற” என மீண்டும் தட்டினான்.

 

உள்ளேயிருந்து சப்தத்தையே காணவில்லை என்றதும் வர்ஷூவிற்கு என்னானதோ ஏதானதோ என பயந்து போனவன் பதறியடித்து மாஸ்டர் கீயை தேடி எடுத்து கதவை திறந்து உள்ளே போக அங்கே வர்ஷூ இருந்த கோலத்தைக் கண்டு நொந்து போய் விட்டான்.

 

அங்கே வர்ஷூ மெத்தையில் நடுநாயகமாக அமர்ந்திருக்க,அவளைச் சுற்றி ஒரு மினி ஆனந்த பவனே திறந்து வைத்திருந்தாள்.

 

ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த அனைத்து திண்பண்டங்களையும் கடை பரப்பி வைத்து காதில் வயர்லெஸ் ஹெட் போனை மாட்டிக்கொண்டு அங்கு பொருத்தப்பட்டிருந்த டிவியில் “அவெஞ்சர்ஸ்” படத்தை ஆவென பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

இவன் உள்ளே வந்ததைக் கூட கவனிக்காமல் ,திண்பண்டங்களை கொரித்துக் கொண்டு படத்தில் மூழ்கியிருந்தவளை கண்டு கடுப்பின் எல்லைக்கு போன கார்த்திக், அவள் காதில் மாட்டிருந்த ஹெட்போனை பிடுங்கி எறிந்தான்.

 

“எவன் அவன்” என எரிச்சலோடு நிமிர்ந்தவள், கார்த்திக்கை பார்த்து ,”ஹேய் நீ இங்க எப்படி வந்த நான் தான் கதவை மூடி இருந்தேன்ல” என துள்ள,

 

“பக்கி பக்கி எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு பாரு..எதுக்கு நீ இப்போ கதவை சாத்திட்டு ஏதோ கில்மா படம் பார்க்குற மாதிரி பில்ட் அப் குடுக்குற..அவெஞ்சஸ்ர்ஸ் தான பார்க்கூற..அதுக்கு கதவை சாத்தி என பயமுறுத்தி..நான் மாஸ்டர் கீயை தேடி எடுத்து உள்ள வரேன்..இதெல்லாம் தேவையா” என கடிந்து கொள்ள,

 

‘நான் நீ வரக்கூடாதுன்னு தான கதவையே பூட்டுனேன்’ என நினைத்துக் கொண்டவள், “நான் என்ன குழந்தையா..தனியா இருக்கேன்னு பயப்பட..இப்படி என்னை டிஸ்டர்ப் பண்ணாம அந்த ரூம்ல போய் படு” என கூறினாள்.

 

அதில் மேலும் அதிர்ந்தவன் ,”ஹேய் இதெல்லாம் போங்கு..அங்க வீட்ல மட்டும் ஒரே ரூம்ல ஒரே பெட்ல படுத்தோம் இப்போ மட்டும் என்ன..நான் தான் உன்னை ஒன்னும் ப்ண்ண மாட்டேன்னு சொன்னேன்ல என்மேல உனக்கு நம்பிக்கையே வராதா?? ச்சை” என சலிப்போடு கூற,

 

‘அடப்பக்கி எனக்கு என் மேல தான் நம்பிக்கை இல்லை..நான் நேத்து உருண்டு வந்து உன் பக்கத்துல படுத்தே பாதி மானம் போச்சு..இனிமேலும் அதையே கன்டின்யூ பண்ண நான் என்ன லூசா’ என மனதில் கூறிக் கொண்டவள்,”இதுல எங்க இருந்து நம்பிக்கை வந்துச்சு ..உளறாம போய் அங்க படு..எனக்கு நாளைக்கு ப்ராஜக்ட் ரிவ்யூ இருக்கு..சோ நான் தனியா இருந்தா தான் அதெல்லாம் ப்ரீயா பண்ண முடியும்” என சமாளித்தாள்.

 

“இது நம்புற மாதிரி இல்லை…அப்போ நான் இங்க படுக்க கூடாது இதான் உன் முடிவு அப்படி தான” என கேட்டான் கார்த்திக்,

 

“ஆமா” என அவளும் தன் முடிவில் இருந்து மாறாமல் இருக்க,

 

“சரி அப்போ நான் பக்கத்து வீட்டு ஆன்ட்டி வீட்டுக்கு போறேன்..அந்த ஆன்ட்டி தான் என்னை கூப்பிட்டாங்கள..” என கூற,

 

அதைக்கேட்டு இரகசியமாக சிரித்தவள்,’இருக்கு இன்னைக்கு நமக்கு என்டெர்டெய்ன்மென்ட் நிறைய இருக்கு’ என நினைத்துக் கொண்டு ,”ஓஹோ அப்படியா போ போ இன்னும் இங்க எதுக்கு நிக்கிற கிளம்பு” என அவனை விரட்ட,

 

“அடிப்பாவி நடுராத்திரில புருஷன் இன்னொரு வீட்டுக்கு போறேன்னு சொல்றேன் ..போய்ட்டு வான்னு துரத்துற நீயெல்லாம் தமிழ் பொண்ணு தானா” என அவளுக்கு பொறாமை கொஞ்சம் கூட வரவில்லையே என கடுப்பில் கேட்க,

 

“அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்ட ராஜா..அதான் போன்னு சொல்றேன்..கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்” என கூறியவள் தன் ஹெட்போனை எடுத்து மீண்டும் படத்தை பார்க்க தொடங்க,

 

“நிஜமாகவே போய்ருவேன்” என மீண்டும் மிரட்டியவனை திரும்பி பார்த்தவள்,”இன்னும் கிளம்பலையா நீ” என கேட்க, இருடி இதோ போறேன் என சவால் விட்டுவிட்டு, தங்கள் அறையில் உள்ள பால்கனிக்கு சென்றான்..

 

கார்த்திக் மற்றும் அந்த ஆன்ட்டியின் பால்கனிகள் பக்கத்தில் பக்கத்தில் இருப்பதால் ஓரே ஜம்ப்பில் அந்த வீட்டிற்கு தாவி விட, இதை கவனித்த வர்ஷூ,”கடவுளே ரொம்ப சேதாரம் இல்லாம அனுப்பி வை” என வேண்டிக்கொண்டு அங்கு என்ன நடக்கிறது என எட்டிப் பார்த்தாள்.

 

ஆன்ட்டியின் பால்கனியில் ஏதோ ஒரு தைரியத்தில் குதித்துவிட்ட கார்த்திக்,’சும்மாவே அந்தம்மா புரியாத பாஷைல அந்த திட்டு திட்டும்..இப்போ இந்த ராத்திரில நம்மளை பார்த்துச்சு அவ்ளோ தான் அடிச்சே கொன்றும்..தேவையில்லாத முடிவு எடுத்துட்டோமோ..பேசாம மானம் ரோஷம் பார்க்காம வீட்டுக்கே போய் இழுத்து போத்திட்டு தூங்கு டா கார்த்திக்” என மூளை அறிவுருத்த, மீண்டும் தன் வீட்டு பால்கனிக்கே குதிக்க எத்தனித்தான்.

 

அப்போது சரியாக தூக்கம் வராமல் காற்று வாங்க பால்கனிக்கு வந்த ஆன்ட்டி இவனைக் கண்டு ,”voleur voleur” (திருடன்) என கத்தியவர் அவனை போக விடாமல் பிடித்து அவனின் விலா எழும்பிலே ஒரு குத்து விட்டார்.

 

“ஆத்தி போச்சே!!!!” என வலியில் கத்தியவன் அந்த ஆன்ட்டியிடம் கெஞ்ச துவங்க, அது அவனை கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டே மேலும் நன்றாக கும்மியது மட்டுமல்லாமல் போலிஸ்க்கு தகவல் சொல்லப்போக, ஒரு வழியாக கெஞ்சி கூத்தாடி அவரிடம் இருந்து தப்பித்து வருவதற்குள் கார்த்திக்கிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது..

 

அப்போது அவன் தோளில் ஒரு கரம் விழ, பயந்து போய் ,”ஆன்ட்டி நான் ஒன்னும் பண்ணலை” என கத்தியவனை வித்தியாசமாக பார்த்த ஸ்ரீ ,”ஏய் லூசு கார்த்திக் என்ன டா உளருற” என அவனை உலுக்க,

 

நினைவுக்கு வந்தவன் தன் முன்னால் தன்னையே குழப்பமாக நின்றிருந்த ஸ்ரீயை பார்த்து ,’அய்யோ இந்த பிசாசுக்கு தெரிஞ்சா உலகத்துக்கே பரப்பிருவாளே’ என பயந்தவன் “வாங்க அண்ணியாரே என்ன எங்க அண்ணன் உனக்கு பயந்துட்டு உன்னை உள்ள வச்சு பூட்டிட்டு போய்ட்டானாமே” என பேச்சை மாற்ற,

 

அந்த மரமண்டையும் இதை விட்டுவிட்டு ,”ஆமா டா அந்த லூசுக்கு இன்னைக்கு இருக்கு..அவனுக்கு தண்டனை குடுக்க உன் பொண்டாட்டியை தான் மலை போல நம்பியிருக்கேன்” என சோகமாக கூற,

 

“என்னாஆஆஆது என் பொண்டாட்டி எதுக்கு அவனுக்கு தண்டனை குடுக்க” என புரியாமல் வினவ,

 

“அவ கையால செஞ்ச வத்தல் குழம்பு தான் நைட் அவனுக்கு டின்னர்..அதுக்கு தான்” என மனசாட்சியே இல்லாமல் ஸ்ரீ கூற,

 

“அடிப்பாவி உன் புருஷன் உயிரோட இருக்கது உனக்கு பிடிக்கலையா…உனக்கு எப்படியோ ஆனா எனக்கு என் அண்ணன் உயிர் முக்கியம்..இந்த விபரீத விளையாட்டு எல்லாம் வேணாம்” என ஹரிக்காக பரிந்து பேச,

 

அங்கே வந்த வர்ஷூ,”என்ன இங்க சத்தம் என் பேரு வேற அடிபட்டுச்சு” என கேட்டுக்கொண்டே கதவை மூட,

 

“வாடி என் செல்லக்குட்டி உன்னை தான் தேடிட்டு இருந்தேன்..நைட் உன் புருஷனுக்கும் என் புருஷனுக்கும் உன் கையால சமைச்சது தான் வேண்டுமாம் அதான் என்ன செய்ய சொல்லலாம்னு பேசிட்டு இருந்தோம் அப்படி தான கொழுந்தனாரே” என ராகம் பாட,

 

“தெய்வமே என்னை ஆளை விடுங்க..உங்களுக்கு காலேஜ்க்கு நேரமாச்சோ இல்லையோ எனக்கு வேலையிருக்கு..சீக்கிரம் வந்து தொலைங்க” என இருவரையும் இழுத்துக் கொண்டு சென்றான்.

 

அவர்களை அழைத்துக்கொண்டு கல்லூரியில் போய் விட்டவன் இருவரிடமும் ஆயிரம் முறை பத்திரமாக இருக்க சொல்லிவிட்டு , மாலை தான் வந்து அழைத்த பின்பே கல்லூரியை விட்டு வெளியே வர சொன்னவன் அவர்கள் சரி என்று உத்தரவாதம் கொடுத்ததும் தான் அங்கிருந்து கிளம்பினான்.

 

பல நாட்கள் கழித்து கல்லூரிக்கு வந்ததால் பஞ்ச பாண்டவிகளை கையில் பிடிக்க முடியவில்லை.

 

இன்னும் கல்லூரி முடிய சில நாட்களே இருப்பதால் ஸ்ரீக்கும்,வர்ஷூவுக்கும் திருமணம் ஆனதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என அனைவரும் முன்பே பேசி முடிவெடுத்து விட்டதால் எங்கே இவ்வளவு நாளாய் காணோம் என கேட்டவர் அனைவருக்கும் ஸ்ரீ ஊரில் திருவிழா என ஐவரும் சொல்லி வைத்தது போல் கூறி சமாளித்தனர்.

 

அன்று இவர்களின் ப்ராஜெக்ட்டுக்கு இரண்டாம் ரிவியூ என்பதால் காலை வேளையெல்லாம் ஆட்டம் போட்ட ஐவரும் , மதியம் ப்ரெஷன்டேஷன் தயார் செய்வதில் பிசியாக இருந்தனர்.

 

அப்போது அவர்கள் முன் தோன்றினான் கல்லூரியின் கனவுக் கண்ணன் வருண்.

 

அவனைக் கண்ட நிஷா,”வந்துட்டான்யா வந்துட்டான்” என வடிவேலு பாணியில் சொல்ல,

 

அப்படி யார் வந்தது என மற்ற நால்வரும் நிமிர்ந்து பார்த்தனர்.

 

அங்கே தன் அக்மார்க் புன்னகையுடன் காஞ்ச மாடு கட்லெட்டை பார்ப்பது போல் ஸ்ரீயையே பார்த்துக் கொண்டிருந்தான் வருண்.

 

அதைக் கண்டு கடுப்பான நந்து, “ஏய் லூசு அவளுக்கு கல்…” திருமணம் முடிந்து விட்டது என சொல்வதற்குள் அவள் வாயில் கைவைத்து தடுத்த மது அவள் காதுக்குள் ,”சும்மா இருடி..இந்த ப்ராஜெக்டை கட்டிக்கிட்டு மண்டை காய்ஞ்சு போய் இருக்கு..இவனை வச்சு கூல் பண்ணிக்குறேன் அதை கெடுக்காத” என கூற,அவளை முறைத்த நந்து ,”ஹேய் இதெல்லாம் தப்பு டி..பாவம் டி அவன்” என அவனுக்காக பரிந்து பேச,

 

“சும்மா இரு டி பாவம் புண்ணியம்னு பாட்டி மாதிரி பேசிக்கிட்டு..எல்லார்கிட்டயும் நம்ம பொய் தான சொன்னோம்..இவன் மட்டும் என்ன ஸ்பெஷல் ஒழுங்கா வாயை மூடிட்டு இரு” என அவளை அடக்கியவள் அங்கு நடப்பதை சுவாரசியமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

 

“ஸ்ரீ என்னாச்சு உனக்கு இரண்டு வாரமா நீ இல்லாதது எனக்கு இரண்டு யுகம் மாதிரி இருந்துச்சு தெரியுமா..எங்க போன சொல்லிட்டு போக மாட்டியா” என உரிமையாக வருண் கேட்க,

 

ஏற்கனவே ஹரி தன்னிடம் சொல்லிவிட்டு செல்லவில்லை என கடுப்பில் இருந்தவளை இவன் உரிமையாக சொல்லிவிட்டு செல்ல மாட்டியா என கேட்டு வேப்பிலை அடித்துவிட, “நீ யாரு எனக்கு ..என் மாமனா மச்சானா ..நீ பாட்டுக்கு உரிமையாசொல்லிட்டு போக மாட்டியான்னு கேக்குற?? நான் ஏன் உன்கிட்ட சொல்லிட்டு போகனும்….உனக்கும் எனக்கும் என்ன டா..ஏன் நான் எங்க போனாலும் வந்து என் உயிரை வாங்குற?? உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கலை பிடிக்கவும் பிடிக்காது..புரிஞ்சுதா..இனிமேல் இப்படி பினாத்திக்கிட்டு என் கிட்ட வந்த அசிங்கமாய்ரும் சொல்லிட்டேன்” என தன் தோழிகள் தடுப்பதைக் கூட பொருட்படுத்தாமல் மனதில் உள்ளதை கொட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டாள்.

 

இவ்வளவு கோபத்திலும் இவள் ஹரியை பற்றி கூறாதிருந்தது தான் விதியோ??? ஹரியைப் பற்றி வருண் அறியும் போது நிலமை கைமீறி போயிருக்கும் என ஸ்ரீக்கு புரிவது எப்போது??

 

அவள் திட்டிவிட்டு சென்றதும் முகம் வாடியவன் பின் தன்னை சமாளித்துக் கொண்டு , நந்துவிடம் ,”அவ என்மேல உள்ள கோபத்துல அப்படியே போய்ட்டா அவளை போய் சாப்பிட வைங்க..ரிவ்யூ நல்லா பண்ண ஆல் தெ பெஸ்ட்” என அவள் கோபம் தன் காதலை ஒன்றும் செய்யாது என்பது போல் கூறிவிட்டு அங்கிருந்து செல்ல,

 

அவனைக் கண்டு நந்துவிற்கு பாவமாக இருந்தது, அப்போது நிஷா,”ஆனாலும் இந்த ஸ்ரீ குட்டி என்னை ஏமாத்திட்டா ” என புலம்ப,

 

“அவ என்ன டி பண்ணா??” என வர்ஷு புரியாமல் கேட்டாள்.

 

“பின்ன அவனை மாமனா மச்சானான்னு கேட்டா நான் அப்படியே மானங்கெட்டவனேனு கட்டபொம்மன் டையலாக்கை சொல்லுவான்னு பார்த்தா இவளா ஏதோ டையாலாக் ரெடி பண்ணி பேசிட்டு போய்ட்டா” என வருத்தமாக கூற,

 

அவளின் முகத்தைக் கண்டு நால்வரும் “அடிப்பாவி” என அவள் மண்டையில் கொட்டினர்.

 

அதன்பின் அந்த ராட்சஷி மகா தான் பானல் (panel) மெம்பராக இருக்க,வேண்டுமென்றே இவர்களை கடைசியில் தான் அனுமதித்தது..

 

ஒருவழியாக ரிவ்யூ முடிந்து வெளியே வர இரவு ஏழு மணியாகிவிட, வர்ஷூ கார்த்திக்கிற்கு கால் செய்து அவனை வர சொல்ல, இருவரும் அங்கே காத்திருந்தனர்.

 

ஸ்ரீக்கு மிகவும் பசிப்பது போலிருக்க, இளநீர் குடிக்கலாம் என நினைத்து, கல்லூரியை விட்டு இருவரும் வெளியே வந்து எதிர்புறம் இருந்த இளநீர் கடைக்கு போக எட்டு வைக்க,

 

அப்போது அங்கே தங்களுக்கு மிக அருகில் விரைவாக வந்து கொண்டிருந்த லாரியை கவனித்த இருவரும் பயத்தில் கண்களை மூடிக்கொண்டு “அம்மாஆஆஆஆ” என கத்தினர்!!!!!!

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்