Loading

அத்தியாயம் 12

“ஹேய் நந்து குட்டி சீக்கிரம் போய் ஸ்ரீ யை கூட்டிட்டு வா லேட் ஆச்சு”என சாருமதி தட்டுகளை சரி பார்த்துக் கொண்டே நந்துவை விரட்டினார்.

அவர் சொன்னதை செய்ய ஸ்ரீயின் அறைக்குள் நுழைந்த நந்து அங்கு ஜன்னல் அருகில் நின்று வானத்தை வெறித்துக் கொண்டிருந்த ஸ்ரீயை பார்த்து கடுப்பானாள்.

“ஏய் எருமை அங்க எல்லாரும் உனக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க நீ என்னடான்னா கனா கண்டுட்டு இருக்க இன்னும் சேலை கூட கட்டலை” என தன் பாட்டிற்கு புலம்பிக் கொண்டே புடவையை தேடிக் கொண்டிருந்தாள்.

இவளுடைய இத்தனை சப்தத்திற்கும் பதில் ஏதும் வராது போக அவள் திரும்பி ஸ்ரீயை பார்க்க, ஸ்ரீயோ ஏதோ நினைத்து தனியாக சிரித்துக் கொண்டிருந்தாள்.

‘என்ன இவளுக்கு பைத்தியம் முத்திப் போச்சா தனியா சிரிச்சுட்டு இருக்கு’ என யோசித்துக் கொண்டே அவள் அருகில் வந்தவள் அவள் இடுப்பில் கிச்சு கிச்சு மூட்டினாள்.

அவள் தொட்டதும் துள்ளி குதித்து ப்ரேக் டான்ஸ் ஆடிய ஸ்ரீ நந்துவை முறைத்துக் கொண்டே, ” ஏய் கொரில்லா எனக்கு தான் அது வீக் பாயிண்ட் அங்க தொடக்கூடாதுன்னு தெரியும்ல அப்பறம் எதுக்கு டி தொட்ட??” வினவினாள்.

“ஆமா இவ பெரிய ஜோதிகா இவ இடுப்ப தொடுறதுக்கு நான் அலையுறேன் பாரு..குரங்கு இவ்ளோ நேரம் தொண்டை தண்ணி வத்த கத்துனா நீ நான் வந்தது கூட தெரியாம தனியா பேக்கு மாதிரி சிரிச்சுட்டு இருக்க??” என இவளும் அவள் பங்கிற்கு கத்தினாள்.

“ஹிஹி நீ வந்ததை பார்க்கவே இல்லை பேபி” என அசடு வழிந்தாள்.

“அதான் எனக்கே தெரியுமே..நேத்து நைட் அண்ணா ப்ரபோஸ் பண்ணதுல இருந்து நீ தான் மேல பறந்துட்டு இருக்கியே..சீக்கிரம் லேண்ட் ஆகு பரதேவதையே அங்க உன்ன காணோம்னு சீக்கிரம் கூட்டிட்டு வர சொன்னாங்க..ஆமா உன்னை கூட்டிட்டு வர அரை மணி நேரத்துக்கு முன்னாடியே நிஷாவை அனுப்புனாங்களே எங்க அவ?? ” என குழப்பமாக வினவினாள்.

“என்னது அவளும் வந்தாளா!!! ஹிஹி சாரி பேபி தெரியலை” என மீண்டும் வழிந்தவளை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட நந்து “சரி வந்து தொலை சீக்கிரம் கிளம்பு” என அவளை அழைத்துக் கொண்டு புடவை மாற்றி வர சொல்ல திரும்பியவள் அப்போது தான் கட்டிலில் ஒய்யாரமாக பள்ளி கொண்ட பெருமாள் போல் ஒருக்கழித்து படுத்து தலைக்கு கைகளை முட்டுக் கொடுத்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த நிஷாவை பார்த்து அவளுக்கு கோவத்தை மீறி சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது.

இவ எதுக்கு சிரிக்குறா என கட்டிலைப் பார்த்த ஸ்ரீ நிஷாவின் கோலத்தை பார்த்து

இவளுக்கும் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது..இவர்களிருவரின் சிரிப்புச் சத்தத்திலும் கூட இன்னும் தூக்கம் கலையாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் நிஷா.

இவர்களிருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கள்ளச்சிரிப்பொன்றை பரிமாறிக் கொண்டு மெதுவாக பூனை நடையிட்டு அவள் அருகில் சென்று பக்கத்தில் இருந்த பேப்பரை சுருட்டி அவள் மூக்கின் துளையில் ஆளுக்கொறு பக்கமாக நுழைத்தனர்.

தும்மல் வர சட்டென்று வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த நிஷா எதிரில் நின்றிருந்தவர்களை பார்த்து ‘புஷ் புஷ் ‘ என கோப மூச்சுகளை வெளியிட்டு அவர்களை முறைத்தாள். ஆனால் அதை ஒழுங்காக செய்ய விட முடியாதபடி தொடர்ச்சியாக தும்மல் வந்து கொண்டே இருந்தது.

ஒரு வழியாக 10 நிமிடம் கழித்து தும்மல் நின்றது ..ஆனால் பாவம் பிள்ளையின் முகம் தான் சிவந்து போனது!!!!…

“ஹேய் பிசாசுங்களா எதுக்கு டி ஒரு மனுசியை நிம்மதியா தூங்க கூட விட மாட்டீங்களா..எவன் இந்த கல்யாணம்லாம் கண்டுபிடிச்சது அவனை செருப்பால அடிக்கணும் 1 வாரமா நிம்மதியா சாப்பிட விட மாட்றானுங்க(?) தூங்க விட மாட்றானுங்க..எப்ப பாரு வேலை சொல்லிகிட்டே இருக்காங்க..இதுல நைட்டு 3 மணி ஆய்ருச்சு படுக்கவே காலைல 6 மணிக்கெல்லாம் எழுப்பி விட்டுடானுங்க நிம்மதியா இப்பவாச்சும் தூங்கலாம்னா அதுவும் உங்களுக்கு பொறுக்கலை.இனிமேல் யாரு கல்யாணத்துக்கும் போக கூடாது முக்கியமா நான் கல்யாணம் பண்ணிக்கவே கூடாதுனு ஒரு சபதம் எடுத்துருக்கேன்” என விடாது தன் மனக்குமுறலை கொட்டி தீர்த்தாள்.

அதற்குள் இவர்களைக் காணாது பத்மினியை அங்கு அனுப்பி வைத்திருந்தார் சாருமதி.

உள்ளே வந்து பார்த்தவர் ஸ்ரீ இன்னும் கிளம்பாமல் இருப்பதைப் பார்த்து அவள் முதுகில் செல்லமாய் தட்டியவர்,”ஹேய் கேடி ஒழுங்கா கிளம்பு அங்க உங்க அம்மா கால்ல சுடுதண்ணி ஊத்தி சுத்திட்டு இருக்கா நீ இன்னும் கிளம்பாம கூலா கூத்தடிச்சுட்டு இருக்க” என அவளை அதட்டி புடவை கட்ட ஆரம்பித்தவர் ,நந்து ,நிஷாவை பார்த்து,”உங்களை கூட்டிட்டு வர சொன்ன இவளோட சேர்ந்து விளையாடிட்டு இருக்கீங்க..நல்ல பிள்ளைங்களா இருக்கீங்க மா” என அவர்களுக்கும் குட்டு வைக்க மறக்கவில்லை.

வேகமாக உடை மாற்றி தலை வாரி விட்டவர் 10 நிமிடத்தில் கிளப்பி கீழே அழைத்து சென்றார்.

கீழே அவள் வந்ததும் அவளை முறைத்த சாரு உறவினர்கள் அருகில் இருந்ததால் எதுவும் பேசாமல் அவளை அழைத்துக் கொண்டு போய் மனையில் உட்கார வைத்தார்.

முதலில் பாட்டி வந்து நலங்கை தொடங்கி வைக்க, அதன் பின் கலைவாணி ,பத்மினி, சாருமதியை தொடர்ந்து உறவினர்கள் அனைவரும் நலங்கு வைக்க ஆரம்பித்தனர்.

என்னதான் அவர்களுடன் சிரித்து பேசினாலும் அவள் கண்களோ தன் மணாளனை அந்த ஹால் முழுக்க தேடிக் கொண்டிருந்தது.ஆனால் பாவம் அவன் தான் சிக்கிய பாடில்லை…மனம் சோர்வுற நலங்கில் ஆர்வமில்லாமல் கடமையே என்று உட்காந்திருந்தாள்.அப்போது…..

“கற்பூர கன்னிகையே வாராய்

அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்

நீ வாங்கள மகராணியே… வலது காலையெடுத்து வாராய் நீயே

நீ வந்த இடம் வளமாக சென்ற இடம் வளமாக

சேர்ந்த இடம் சுகமாக வாழப்போற… ” என்று பாடல் ஒலிக்க நிமிர்ந்து பார்த்தால் அங்கே இவள் தோழியர் ,தங்கைகள்(உறவினர்கள்),நாத்தனார் என அனைவரும் ஆடிக் கொண்டிருந்தனர்.

‘இதென்ன புது ஐட்டமா இருக்கே..நம்ம கிட்ட எவனுமே சொல்லலை எனக்கு தெரியாம இதுங்க எப்போ ப்ராக்டீஸ் பண்ணுச்சுங்க..ஆனாலும் இது கூட ஒரு மாதிரி ஜாலியா தான இருக்கு எல்லரும் நமக்கு சர்ப்ரைஸ் தராங்க ஜாலியா என்ஜாய் பண்ணுவோம்’ என நினைத்து கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

அப்போது அங்கே கூட்டத்திற்கு நடுவில் தெரிந்த தன்னவனின் உருவத்தைக் கண்டு துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது.இருக்கும் இடத்தை மனதில் கொண்டு தன்னை சமாளித்துக் கொண்டாள்.

“மதுரைக்கு போகாதடி.. அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்

தஞ்சாவூரு போகாதடி தலையாட்டாம பொம்மை நிற்கும்

தூத்துக்குடி போனா சில கப்பல் கரை தட்டும்

கொடைக்கானல் போனா அங்க மேகமுந்தான் சுத்தும்” என பாடிக் கொண்டே வந்த ஹரி யாரும் எதிர்பாரா வண்ணம் ஸ்ரீயின் அருகில் வந்து சந்தனம் குங்குமம் பூசி அவளுக்கு நலங்கு வைத்தான்.

அதை பார்த்து அங்கிருந்தவர் அனைவரும் “ஓஓஓஓஓ…” என கத்தி ஆர்ப்பரித்தனர்.

“அசருது அசருது ஊர் மொத்தம்மா

அதுயென்ன அதுயென்ன உன் குத்தம்மா

அசருது அசருது ஊர் மொத்தம்மா

அதுயென்ன அதுயென்ன உன் குத்தம்மா” என அவள் அருகில் விஜய்,கார்த்திக்,அஷ்வின் வந்து கோரசாக பாடி ஆடியவர்கள் அவளையும் மனையில் இருந்து இழுத்து வந்து ஆட வைத்தனர்..

அவளுக்கு ஸ்டெப் தெரியாவிட்டாலும் தனக்கு தோன்றியதை அவர்களோடு சேர்ந்து ஆடிக் கொண்டிருந்தாள்.

“ஓ… கெட்டிமேளம் நாதஸ்வரம் அது சேந்து கேட்கும் நேரம் சுகம்

டும் டும் டும் டும் டுடு டுடு டும் டும் டும் டும்” என்ற வரிகளை ஸ்ரீ ஹரியை பார்த்து பாடிக்கொண்டே கைகளை கழுத்துக்கு அருகில் கொண்டு போய் முடிச்சிடுவது போல் செய்து ‘எப்போ தாலி கட்டப்போற??’ என செய்கையால் வினவினாள்.

“ஓ… மஞ்சள் குங்குமம் தாலியின் சிறப்பு

பெண்களுக்கெல்லாம் இன்னொரு பொறப்பு ” என அடுத்த வரிகளைப் பாடியவன் அவளைப் பார்த்து தாலி கட்டுவது போல் செய்கை செய்து ஓகே வா என கண்களால் வினவினான்.

“டும் டும் டும் டும்” என அடுத்த வரிகளை பாடியவள் டபுள் ஓகே என தலையை நன்றாக பூம் பூம் மாடு மாதிரி ஆட்டினாள்.

“டும் டும் டும் டுடும் டுடும் டும் டும் டும் டும்” என அவன் வரிகளை பாடிய ஹரி அவள் தலையில் செல்லமாக முட்டினான்.

“ஓ சந்திரனில் ஒரு பாதி இந்திரனில் ஒரு பாதி

சுந்தரனே என்ஜோடி ஆனதென்ன…” என பாடியவள் அவனை பின்னாலிருந்து அணைத்து தோளோடு சாய்ந்து கொண்டாள்.

அய்யோ எங்கேயோ புகையுற வாசனை வருதே எங்க எங்க??? ஓ அது நம்ம கார்த்திக் தானா பாவம் புள்ள டான்ஸ் ஆடுறத கூட மறந்துட்டு இவங்களை பாசமா பார்த்துட்டு இருக்கு.

‘டேய் த்ரோகி உன்ன பார்த்தா அவ மேல கோவமா இருக்கன்னு சொன்னா எந்த கிறுக்கனாச்சும் நம்புவானா..நேத்து என்னடான்னா பூவை கொடுக்குற முட்டி எல்லாம் போடுற அவளும் வெக்கமே இல்லாம கட்டி பிடிக்கிறா இன்னைக்கு அப்போ நீ டான்ஸ் ஆடனும்னு கூட்டிட்டு வந்தது அவளா வந்து உன்னை கட்டி பிடிக்க நீ போட்ட ப்ளானா..படுபாவி இது தெரியாமா நைட்டெல்லாம் தூங்காம ப்ராக்டீஸ் பண்ணனே டா ஆனா நீ படம் ஓட்டிட்டு இருக்க??உன் அளவு திறமை என் கிட்ட இல்லையே டா சண்டை சண்டைன்னு சொல்லியே கல்யாணம் பண்ற ,கட்டிப் பிடிக்குற, ஆனா எனக்குனு வந்து வாய்ச்சதை பாரு ஏதோ ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ போட்டிக்கு வந்த மாதிரி உசுற குடுத்து ஆடிகிட்டு இருக்கு..எல்லாம் என் நேரம்!! பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே இந்த அநியாயத்தை நீயாச்சும் தட்டிக்கேழு ஒருத்தன் நேத்து இருந்து ‘அடல்ட்ஸ் ஒன்லி ‘ படம் காமிச்சுட்டு இருக்கான் அதை எல்லாரும் இரசிச்சு பாக்குறாங்க நான் ஒரு கிழவிய பார்த்தா கூட “அய்யய்யோ என்ன பார்த்துட்டான் பார்த்துட்டான்னு” கத்தி கூப்பாடு போட்டு பஞ்சாயத்தை கூட்டுறானுங்க நீயாவது இதை தட்டிக்கேழு’ என தனியாக புலம்பிக் கொண்டிருந்தான் கார்த்திக்(டேய் இராசா ஷாப்பிங்க் போனப்போ நீ அடிச்ச ஜல்சாவை இன்னும் இந்த உலகம் மறக்கலை அத மனசுல வச்சுட்டு புலம்பு).

இவன் புலம்புவதற்குள் இந்த பாட்டு முடிந்து அடுத்த பாடல் தொடங்கியது..அதற்கு ஆண்கள் போய் தனியாக அமர்ந்து கொள்ள பெண்கள் மட்டும் அரங்கத்தை அதிர வைத்தனர்..என்ன பாட்டுன்னு பார்ப்போம்..

“தந்தன நா … தான தந்தன நா ….

கும்மியடி பெண்ணே கும்மியடி

கூடி கோலாவையும் போட்டு கும்மியடி

குமரி பொண்ணுக்கு மாலை வந்தது

குழைஞ்சு குழைஞ்சு கும்மியடி

வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது

வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி

எங்க வீட்டு தங்க விளக்கு

ஏங்கி நிக்குது கும்மியடி

என்னை ஊற்றி திரிய தூண்ட

ஆளு வந்தது கும்மியடி”

என்ற பாடலுக்கு பெண்கள் ஸ்ரீயை ஓட்டி தள்ளிவிட அவள் முகம் வெக்கத்தில் செவ்வானமாய் சிவந்தது.

அதை ஏதோ எட்டாவது அதிசயம் போல அங்கிருந்த அனைவரும் ஹரி உட்பட வியந்து போய் பார்த்தனர்.

அடுத்து கார்த்திக் நீங்க மட்டும் தான் ஆடுவீங்களா என கூறிக் கொண்டு ,

“யம்மாடி ஆத்தாடி

உன்ன எனக்கு தருயாடி” என்ற பாடலுக்கு ஆடினான் கார்த்திக்.

“நீ பாதி” என்ற வரிகளுக்கு வலது கையால் ரெங்கநாயகி பாட்டியை இழுத்து ஆடியவன்

“நான் பாதி” அடுத்த வரிகளுக்கு இடது கையால் காத்தாயி பாட்டியை இழுத்து ஆடினான்.

“அரைச்ச மாவ அரைப்போமா

துவச்ச துணிய

துவப்போமா

ராமன் கதைய கேட்போமா

வில்ல வளைச்சு

பார்ப்போமா

என மூவரும் குத்தாட்டம் போட்டு முடித்ததும் தமிழ் பாடல் போதுமென முடிவெடுத்து தெலுங்கிற்கு தாவினான்.(தெலுங்கு ஜிலேபிய பிச்சு போட்ட மாதிரி இருந்ததுனால தங்கிலிஷ் ல தான் வரிகள் போட்ருக்கேன்)

“Nuvvu Ready Nenu Ready

Tara Rum pum pum, tara rum pam pam, tara ram pum pum pum ” என்ற நாகர்ஜுனா பாடலுக்கு அனைத்து இளம் கன்னியரோடும் ஜல்சா பண்ணுங்கடா குஜாலா ஜில்பா காட்டுங்கடான்னு என்ஜாய் செய்து கொண்டிருந்தான்.(பி.கு: இந்த பாட்டுல நாகார்ஜுனாவா விட அதிக பெண்களோட நம்ம கலியுகக் கண்ணன் கார்த்திக் ஆடிக்(?) கொண்டிருந்தார் என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன்)

ஒரு வழியாக இந்த டிராமா முடிந்ததும் விஜயும் ஆதிராவும்

“ஹே என் கோலி சோடாவே

என் கறிக்கொழம்பே

உன் குட்டி பப்பி நான்

டேக் மீ டேக் மீ

ஹே என் சிலுக்கு சட்ட

நீ வெயிட்டு கட்ட

லவ் சொட்ட சொட்ட

டாக் மீ டாக் மீ”

என ரவுடி பேபிக்கு ,தனுஷ் சாய்பல்லவிக்கே சவால் விடுமளவு நடனத்தில் புகுந்து விளையாடினர்.(மொத்தத்துல நாங்க ஹாப்பி பேபிஸ்)

இவங்களாம் ஆடும் போது நம்ம ஹீரோ ஹீரோயின் ஆடலானா எப்படி சோ அவங்க டூயட் பெர்பாமன்ஸ் உங்களுக்காக இதோ ,,

“ஒன் மேல ஒரு கண்ணு

நீதான் என் மொரப் பொண்ணு ” என சுச்சுவேஷன் சாங்கிற்கு அழகான டூயட் ஆடி நம் கண்களுக்கு விருந்து படைத்தனர் ஹரி ஸ்ரீ.

அடுத்து ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து நம் தலைவர் பாடலுக்கு ஆடினர்..

“மாத்தாடு மாத்தாடு மல்லிகே

மாத்தாடு மாத்தாடு மல்லிகே”

என்ற பாடலுக்கு தாத்தா, பாட்டி ,அப்பா ,அம்மா ,அத்தை, மாமா, அப்பறம் நம்மளோட செல்லங்கள்(நீங்க தாங்க) என்று அனைவரும் கூடி கும்மியடிச்சு ஒரு வழியாக முடிக்க போக , கார்த்திக் அனைவரையும் பார்த்து இந்த பாட்டு இல்லாம நம்ம முடிச்சா இவ்ளோ பண்ணதே வேஸ்ட் சோ எல்லாரும் வாங்க கையைப் பிடிங்க இப்போ சங்கிலி மாதிரி எல்லரும் கை கோர்த்து காலை மட்டும் மாத்தி மாத்தி தூக்கணும் அவ்ளோ தான் ஈஸியான ஸ்டெப் வாங்க வாங்க என நொடியில் கோரியோகிராபராக(choreographer) மாறி அனைவரையும் வரிசை படுத்தி நிற்க வைத்த பின் ” ஸ்டார்ட் மியூசிக்” என சவுண்ட் குடுத்தான்.

“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை

எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை

எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே

இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்”

என்ற பாடல் ஒலியோடு பின்னால் இவர்களின் “லாலாலா ” ஒலியும் வீடை நிறைத்தது.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என எல்லாம் முடித்து நகரப் போனவர்களை தடுத்த பாட்டி, அனைவரையும் ஒன்றாக அமர்த்தி முச்சந்தியில் எடுத்த மண்,வரமிளகாய்,உப்பு என அனைத்தையும் காப்பிடியில் போட்டு

“ஊரு கண்ணு…

உறவு கண்ணு…

நாய் கண்ணு…

நரி கண்ணு…

நல்ல கண்ணு…

நொள்ள கண்ணு…

கொல்லி கண்ணு…

கண்ட கண்ணு….

முண்டை கண்ணு…

கரிச்சு கொட்டும் எல்லா கண்ணும்…

கண்ட பிணி தொலையட்டும்…

கடுகு போல வெடிக்கட்டும்…

நல்லதெல்லாம் நடக்கட்டும் நாடும் காடும் செழிக்கட்டும்.

…”

எனக் கூறி சுற்றியவர் அனைவரும் துப்பியதும் அதை காத்தாயியிடம் குடுத்து அனுப்பினார்.

பின் அனைவரும் நாளை விடியலை ஆவலாக எதிர்நோக்கிக் கொண்டே உறங்க தத்தம் அறைக்கு சென்றனர்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment