
அத்தியாயம் 11
தாமரைகுளத்தின் மையத்தில் வீற்றிருந்த நாராயணசாமியின் அந்த மாளிகை கல்யாண வீட்டிற்கே உரிய பரபரப்போடு காணப்பட்டது.வீடெங்கிலும் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ,சீரியல் விளக்குகள் ,மாவிளைத் தோரணங்கள் என பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருந்தது. வீடெங்கும் சொந்த பந்தங்களின் சிரிப்பு சப்தம் காதை நிறைத்தது.
தீபாவளி ,பொங்கல், கிருஸ்துமஸ்,இரம்ஜான் போன்ற பண்டிகைகள் தனித்தனியாக வந்தாலே நம்மை கையில் பிடிக்க முடியாது.இவை அனைத்தும் ஒன்றாக வந்தால் கேட்கவா வேண்டும்??? அப்படி விழாக்காலம் போல் கட்சியளித்தது நாராயணசாமி தாத்தாவின் இல்லம். அதுவும் இது கிராமம் என்பதால் மொத்த ஊரும் அங்கே தான் குழுமி இருந்தது.அனைவரும் இது தங்கள் வீட்டு கல்யாணம் போல் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருந்தனர். விஜயின் தாய் தந்தை நம் பஞ்ச பாண்டவிகளின் பெற்றோர்கள் என அனைவரும் திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பே அங்கே வ்ந்து விழாவை சிறப்பித்துக் கொண்டிருந்தனர்.
சிறார்கள் அனைவரும் வீடு முழுக்க ஓடி ஆடி விளையாடி மகிழ்ந்து கொண்டிருக்க, இளம் வயதினரோ ஒருவர் காலை இன்னொருவர் வாரிவிட்டுக்கொண்டு ,நன்றாக சைட் அடித்துக் கொண்டு, தங்கள் வயதிற்கே உரிய கேலி கிண்டல்களோடு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தனர். பெண்கள் அனைவரும் ஆயிரெத்தெட்டு வேலை இருந்தாலும் முகத்தில் புன்னகையை பூசிக்கொண்டு வாய் ஒரு பக்கம் கதை பேசிக் கொண்டிருக்க கை அதன் போக்கில் வேலையை செய்து கொண்டிருந்தது(மல்டி டாஸ்கிங்க்) ,ஆண்கள் அனைவரும் நாங்கெல்லாம் காசு குடுத்தா தான் சிரிப்போம் , இந்த கல்யாணமே எங்களை நம்பி தான் இருக்கு நாங்க இல்லைன்னா ஒன்னுமே நடக்காதுனு எப்பொழுதும் பரபரப்பாகவே சுற்றிக் கொண்டு திரிந்தனர். ஆக மொத்தம் இது கல்யாண வீடென்று அனைவரும் நிரூபித்தனர்.
அய்யய்யோ நான் நம்ம செல்லங்கள வரவேற்கவே இல்லை..நம்ம ஹரி ஸ்ரீ கல்யாணத்துக்காக அவங்க வேலையெல்லாம் விட்டுட்டு சென்னை ,மதுரை,ஹரூர் இன்னும் பல ஊர்கள்ன்னு இப்படி தமிழ்நாட்டுல இருந்து மட்டும் இல்லாம மும்பைன்னு இந்தியால மட்டும் இல்லாம இலங்கைல இருந்துலாம் நம்ம செல்லங்க ட்ரைன் ஃப்ளைட் லாம் பிடிச்சு 3 நாளைக்கு முன்னாடியே வந்துட்டாங்க.வந்தது மட்டும் இல்லாம எல்லா வேலையும் ஓடி ஆடி செஞ்சுட்டு இருக்க நம்ம செல்லக்குட்டீஸ் அனைவருக்கும் ஹரி ஸ்ரீ மற்றும் நாராயணசாமி தாத்தா குடும்பத்தின் சார்பா ஒரு வார்ம் வெல்கம் அண்ட் மிக்க நன்றி(ஹி ஹி தாத்தா சொல்ல சொன்னாரு).
ஓகே சரி வாங்க வீட்டுக்குள்ள போலாம் என்ன பண்ணிட்டு இருக்காங்க இந்த வாலில்லா வானரங்கள்ன்னு போய் பார்ப்போம்.
“ஹரிரிரிரி” என வீடே அதிரும் படி கத்திக் கொண்டிருந்தாள் ஸ்ரீ.
தன் அறையில் யாருடனோ கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த ஹரி இவளின் கூச்சலில் என்னானதோ ஏதானதோ என அடித்துப் பிடித்து ஓடி வந்தவன் அங்கு கண்ட காட்சியில் அவளை முறைத்தான்.
அவள் கைகளில் ஒரு கிண்ணத்தை வைத்துக் கொண்டு ஹால் முழுக்க சுற்றி சுற்றி ஆடிக் கொண்டிருந்தாள். கூடவே அவளின் நண்பிகளும் அவளோடு சேர்ந்து ஆடுகிறேன் பேர்வழி ஹாலின் பரப்பளவு சுற்றளவை அளந்து கொண்டிருந்தனர்.
“ஹேய் அரைவேக்காடு பெரிய நாட்டியப் பேரொளி பத்மினினு நினைப்பா உனக்கு?? கீழ விழுந்து இடுப்பை உடைச்சு வச்சுக்காத!!! நீ இந்த கிண்ணத்தை வச்சு இப்படி லூசு மாதிரி சுத்துறத பார்க்க தான் ஏதோ கின்னஸ் ரெகார்ட் பண்ற ரேஞ்சுக்கு கத்தி கூப்பாடு போட்டியா” என கடுப்பாக வினவினான்.
“இல்லை நாதா எம் பொன்னான கரங்களை மேலும் சிவக்க வைக்கவே தங்களை அழைத்தோம்” என்று நாடக பாணியில் பதிலளித்தாள்.
அவள் பதிலில் மேலும் கடுப்பானவன் “டேய் கார்த்தி !!!! எருமை இங்க வா டா” என வெளியே வேலை செய்து கொண்டிருந்தவனை அழைத்தான்.
“இதோ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தவன் அங்கிருந்த மிதியடியில் கால் தடுக்கி விட்டு அப்படியே முன்னால் விழப்போனவனை கீழே விழாமல் தாங்கி பிடித்தது ஒரு வளைக்கரம்.
‘ஐய்ய் படத்துல வர்ற மாதிரி ஸீன் லாம் நம்ம லைஃப்ல கூட நடக்குதே..மாமன் மேல அம்புட்டு லவ்வா நான் பேசுனா முகத்தை திருப்பிக் கிட்டு போன இப்ப மாமனுக்கு ஒன்னுனா பதறுதா இரு இரு நானும் படத்துல வர்ற மாதிரி ஸ்லோ மோஷன்ல மெதுவா உன்ன பார்க்குறேன் அதுல நீ மயங்கிப் போய்ருவ(ஓ அது தான் அழகுல மயங்குறதா)’என நினைத்துக் கொண்டே மெதுவாக நிமிர்ந்து முகத்தைப் பார்த்தவன் “ஆத்தாஆஆஆ பேய்ய்ய்ய்ய்” என அரண்டு போய் பின்னால் விழுந்தான்.
அங்கே முகம் நிறைய ரோஸ் பவுடர், ஃபவுன்டேஷன், உதட்டிற்கு டார்க் ரெட் லிப்ஸ்ட்டிக்,கண்களில் பெரிதாக மை தீட்டி, ஃப்ரீ ஹேர் விட்டு,தன் தெத்துப்பல் மட்டுமல்லாது அனைத்து பற்களும் தெரியும்படி ஈஈஈ என சிரிப்போடு, மேக்ஸி அணிந்து அவனையே ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தார் அந்த வீட்டில் 35 வருடமாக பணிபுரியும் காத்தாயி.
அவன் விழுந்ததை பார்த்து பஞ்ச பாண்டவிகள் மற்றுமல்லாது வீட்டில் கூடியிருந்த நைத்து சொந்தங்களும் கொல்லென சிரித்தனர்.
“ஹேய் காத்து என்ன இது கூத்து..இப்படியா என்ன பயமுறுத்துவ டார்லிங்க் ஒரு நிமிசம் மூச்சே நின்றுச்சு” என நெஞ்சில் கை வைத்து ‘ஊஃப்’ என பெருமூச்சு விட்டான் கார்த்திக்.
அவனை தூக்கி நிறுத்திய காத்தாயி,”என்ன இராசா பண்ணுது , வா ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு வந்துரலாம் நல்ல நாள் அதுவுமா ஒன்னு கெடக்க ஒன்னு ஆய் போய்ருச்சுனா என்ன பண்றது” என பதறினார்.
அவரை முறைத்த கார்த்திக் ,”காத்து நான் உன்னோட வேசத்தை பார்த்து தான் பயந்துட்டேன் எதுக்கு இப்படி பேய் மாதிரி மேக்கப் போட்டுகிட்டு நைட்டி வேற போட்டு சுத்திகிட்டு பயமுறுத்துற..உனக்கு தான் புது பட்டு சேலை வாங்கி கொடுத்தோம்ல அது எங்க” என வினவினான்.
“டேய் பன்னாடை நான் உன்ன கூப்பிட்டா அங்க பஞ்சாசயத்து பண்ணிக்கிட்டு இருக்க ..இதென்ன உலக மகா இரகசியமா எல்லாம் இந்த எருமைங்க வேலையா தான் இருக்கும் நீ முதல இங்க வா” என அவனை அழைத்த ஹரி,.காத்தாயியிடம் திரும்பி,”காத்தாயி பாட்டி ஒழுங்கா தாத்தா வர்றதுக்குள்ள போய் இந்த வேசத்தை கலைச்சிருங்க இல்ல சேதாரத்துக்கு நாங்க பொறுப்பில்லை “என எச்சரித்தான்.
தாத்தா என்ற சொல்லிலே அங்கிருந்து அடித்தேன் பிடித்தேன் என ஓடி மறைந்தார் அந்த வெகுளி பெண்மணி.
தன் அருகே இடுப்பை பிடித்து தாங்கி தாங்கி நடத்து வந்த கார்த்திக்கின் மண்டையில் நங்கென்று கொட்டினான் ஹரி.
வலியில் மண்டையை தேய்த்துக் கொண்டே,”டேய் பரதேசி என்ன அடிக்க தான் கூப்பிட்டியா நான் என்ன டா பாவம் பண்ணேன் உனக்கு” என காரமாக கார்த்திக் வினவ,
“நீ என்ன டா பண்ணலை ..ஆல்ரெடி இது ஒரு அரைலூசு(ஸ்ரீயை கைகாட்டி கூறினான்)..இதுல போட்டி அது இதுனு ப்ராக்டீஸ் பண்ண சொல்லி இது முழு லூசாவே மாறிடுச்சு..இங்க பாரு முழுசா மெண்டல்லா மாறியிருக்க உன் அத்தை பெத்த இரத்தினத்தை பாரு …எப்படி டா இவளை நான் கல்யாணம் பண்ணிக்க ?? இது எல்லாத்துக்கும் நீதான் காரணம்” என அவன் முதுகில் இன்னும் நான்கு அடியை போட்டான்.
அதை சட்டையில் ஒட்டிய தூசு போல் தட்டியவன் ஸ்ரீயிடம் திரும்பி, ” என்ன டா கண்ணுகுட்டி என்ன பண்ண உன் புருஷன் இப்படி பொங்குறான்.கையில என்ன டா மாமாக்கு குலாப் ஜாமுனா எங்க கொடு எப்படி இருக்குனு பார்ப்போம்” என அவளிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தான்.
“அய்யோ இல்லை அத்தான். இது மருதாணி என் மனம் கவர்ந்த மணாளர் இதை எம் கரங்களில் வைத்து விட வேண்டியே நாம் அவரை அழைத்தோம்” என மீண்டும் தன் பழைய புராணத்தை ஆரம்பித்தாள்.
“என்னாஆஆது அத்தானாஆஆ??? மருதாணி மணாளர் ஆஹ் என்ன டா பட்டுக்குட்டி ஆச்சு அய்யய்யோ ஏய் கிழவி, பெரியம்மா ,அம்மா, அத்தை, பாசமலரே எல்லாரும் இங்க வாங்க இந்த பிள்ளைய ஏதோ சங்ககால பேய் பிடிச்சுருச்சு ,கல்யாணத்துக்கு வேற இன்னும் ரெண்டு நாள் தான இருக்கு இப்போ போய் எப்படி பேய் ஓட்ட ..டேய் ப்ரோ போய் தாத்தாவோட சாட்டையை எடுத்துட்டு வா நானே இந்த பேயை ஓட்றேன்” என கூச்சல் போட்டான் கார்த்திக்.
அவனை முறைத்த ஸ்ரீ,”டேய் மங்கூஸ் மண்டையா உனக்கு தான் டா பேய் பிடிச்சிருக்கு எனக்கு பேய் ஓட்றியா நீ ..மவனே இந்த ஊர விட்டே உன்ன ஓட விட்ருவேன் பார்த்துக்கோ” என மிரட்டினாள்.
“அப்பாடி பேய் ஓடிருச்சு பார்த்தீயா இப்போ …இதுக்கு தான் கார்த்திக் வேணும்ங்கிறது.ஆமா உன் புருஷன் கூட தான் உன்ன மெண்டல்னு சொன்னான் அவன் மட்டும் மனம் கவர்ந்த மணாளன் நாங்க மங்கூஸ் மண்டையா நல்லா இருக்குமா உன் நியாயம்.” என கிண்டல் பண்ணினான்.
‘ஆமா அவனே இப்போ தான் மனசிறங்கி ஃப்ரெண்ட்ஸ்னு வந்திருக்கான் இதுல அவன் கூட வம்பிழுத்து அவன் கல்யாணத்தை நிப்பாட்டுறதுக்கா..ஏண்டா உனக்கு இந்த நல்ல எண்ணம்’ என மனதிற்குள் நினைத்தவள் அவன் கேள்வியை டீலில் விட்டுவிட்டு ஹரியின் முன் அந்த கிண்ணத்தை நீட்டி, “க்ரிஷ் க்ரிஷ் எல்லா சீரியல் படம் எல்லாத்துலயும் பார்த்தேன் கட்டிக்க போறவன் மருதாணி வச்சுவிட்டா கை எவ்ளோ சிவக்குதோ அவ்ளோ லவ் அவன் அவ மேல வச்சிருக்கான்னு அர்த்தமாம்.சோ நீ எனக்கு வச்சு விடு க்ரிஷ்” என மூக்கை சுருக்கி பாவமாக கூறினாள்.
அவள் பாவனையில் மயங்கினாலும் கெத்தை விட்டுக் கொடுக்காமல்,” இதென்ன லூசுத்தனமா உடம்புல இருக்க பித்தத்தை பொருத்து தான் கை சிவக்கும் லூசு மாதிரி அவன் சீரியல்ல சொன்னா அதை டெஸ்ட் பண்ண நான் தான் கிடைச்சேனா ஒழுங்கா ஓடி போயிரு எனக்கு ஆயிரெத்தெட்டு வேலை கிடக்கு” என்று கூறிவிட்டு நகரப்போனவனை தடுத்த கார்த்திக் ஹரியின் காதில் இரகசியமாக, “டேய் கூறுகெட்டவனே இந்த தாத்தா வந்தாருனா வேலை கொடுத்தே உன்ன சாவடிச்சிருவாரு அதுவும் இல்லாம இப்போ விட்டா இவ ரொம்ப பிஸி ஆய்ருவா கல்யாணத்தப்போ கூட பேச முடியாது..பழம் அதுவா நழுவி பால்ல விழுந்த கதையா அவளே வர்றா ஒழுங்கா சான்ஸை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிக்கோ” என ஐடியா வழங்கினான்.
அவன் சொல்வதிலும் நியாயம் இருந்ததால் நம் புத்திசாலி(?) ஹரி கெத்து குறையாமல்,”சரி கல்யாணப் பொண்ணு ஆசைப் பட்டுட்ட முடியாதுனா ஏங்கி போய்ருவ அதுனால பண்றேன் அதை குடு” என கையை நீட்டினான்.
‘ஆமா பெரிய லாடு லபக்கு தாஸ் ..இருடி இப்போ எல்லாத்துக்கும் பொறுமையா போறேன்னு ஓவரா ஆடுற கல்யாணம் முடிஞ்சதும் வட்டியும் முதலுமா திருப்பி தரலை என் பேரு தன்ய ஸ்ரீ இல்லை வெரும் ஸ்ரீ’ என மனதிற்குள் சவால்(?) விட்டுக் கொண்டு கிண்ணத்தை அவன் கைகளில் திணித்தாள்.
அங்கே வந்த விஜய்யும் இவர்களைப் பார்த்து விட்டு ஆதிராவிற்கு நான் தான் வைத்து விடுவேன் என அடம் பிடித்து அவள் கைகளைப் பற்றினான்.
அங்கே தனியாக நின்று கொண்டிருந்த கார்த்திக் விட்டத்தை பார்த்து,”அப்போ நான் மட்டும் தான் அவுட்டா!!!! இருங்கடா எனக்கும் ஒரு காலம் வரும் அப்போ நான் கை கால் மூஞ்சி எல்லாத்துக்குமே மருதாணி வைக்குறேன் ” என தனியாக பேசிக் கொண்டிருந்தான்.
அவனைக் கடந்து சென்ற உறவினர்கள்,”நம்ம கார்த்திக் தான இது அய்யோ பாவம் இப்படி ஆய்ட்டானே நல்லா இருந்த பையன் இப்போ இப்படி பைத்தியமா தனியா பொலம்புறத பார்க்குறப்போ கஷ்டமா இருக்கு” என நக்கல் பண்ணிவிட்டு சென்றனர்.
“யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க ” என அவர்களை பார்த்து பாடிக்கொண்டே வெளியில் செல்லப்போனவனை அங்கிருந்த ரூமுக்குள் இழுத்து கதவை சாற்றினாள் அவள்.
உள்ளே வந்தவன் ஆனந்த அதிர்ச்சியாகி ,”ஹேய் மைமா மாமனைத் தேடி நீயே வந்துட்டியா ..ரொம்ப ஓவரா பண்ணுற டி ஒரு லுக்காச்சும் விடுறியா என்னை பார்த்து.. எவ்ளோ நாள் தான் நானும் இப்படியே இருக்கது..நீ நல்லா ஜாலியா அந்த பிசாசுங்களோடவே சுத்திட்டு இருக்க மாமனையும் கொஞ்சம் கவனி புள்ள” என ஆசையாக கூறினான்.
“இதோ பாரு என் ஃப்ரெண்ட்ஸ் அஹ் பிசாசுன்னு சொன்ன மவனே மண்டைய உடைச்சு மாவிளக்கு போட்ருவேன் பார்த்துக்கோ” என மிரட்டினாள் அவள்.
“இதை சொல்ல தான் கையை பிடிச்சு வேகமா இழுத்தியாக்கும் சரிமா உன் நண்பிக எல்லாரும் பிசாசுங்க இல்ல பராசக்திங்க போதுமா நான் போறேன்” என முறுக்கிக் கொண்டான்.
“ஓவரா பண்ணாத நீ என் மேல எவ்வளவு லவ் வச்சிருக்கன்னு டெஸ்ட் பண்ண தான் உன்ன கூப்பிட்டேன் இந்தா என் கைல சீக்கிரம் வச்சு விடு” என கையையும் மருதாணியையும் அவன் புறம் நீட்டினாள்.
‘கடவுள் இருக்கான் குமாரு!!!!’ என மனதிற்குள் விசிலடித்துக் கொண்டவன் அவள் மென் விரல்களை பிடித்து பொறுமையாக வைக்க ஆரம்பித்தான்.
“பார்த்து பார்த்து இன்னும் மெதுவா வை ஏன்னா அடுத்த வருஷம் தான கல்யாணம் பாரு..வேகமை வை டா பரதேசி பரதேசி எவனாச்சும் வந்து பார்த்தா அவ்ளோ தான்..படுத்துறானே என்னைய” என வடிவேலு ஸ்லாங்கில் புலம்பிக் கொண்டிருந்தாள் அவள்.
“ஷ்ச் சும்மா இரு பேபி கைல அழகா வைக்க வேண்டாமா “என கைகளில் கோலம் போட்டுக் கொண்டிருந்தான்.
அங்கே ஹரி விஜயும் அதே நிலமையில் தான் இருந்தனர். தங்கள் தேவதைகளின் அருகாமையில் தொலைந்து போய் ஏதோ கனவுலகிலே மிதந்து கொண்டு கைகளில் கிறுக்கிக் கொண்டிருந்தனர்.
ஒருவழியாக வைத்து முடித்தவுடன் கார்த்திக்கை வெளியில் அனுப்பிய அவள் சிறிது நேரம் கழித்து யாருக்கும் தெரியாமல் அவளும் வெளியேறினாள். ஆனால் இரு கண்கள் இவர்கள் உள்ளே சென்றது முதல் வெளியே வந்தது வரை அனைத்தையும் நோட்டமிட்டுக் கொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை.
வீட்டிலிருந்த அனைத்து பெண்களும் சிறியவர் முதல் பெரியவர் வரை பாராபட்சமின்றி கைகளில் மருதாணி மெஹந்தி இட்டுக் கொண்டு அந்த விழாவை அழகாக கொண்டாடி முடித்தனர்.
இந்த மூன்று மங்கைகளின் கைகளுமே நன்றாக சிவந்திருந்தது( அது உடல் பித்தத்துனால சிவந்துச்சா இல்ல இவங்காளுங்க இவங்க மேல பித்துப்பிடிச்சு போய் இருக்கதுனால சிவந்துச்சான்னு அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்).
வண்ண வண்ண அலங்கார விளக்குகள் மின்ன அந்த வீடே தங்கம் போல் ஜொலி ஜொலித்தது( நீங்க என்ன பண்ணுங்க சிநேகா அக்கா சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்துக்கு ஜொலி ஜொலி ஜொலிக்குதுனு சூப்பரா படுவாங்களே அத Backgroundல போட்டுக்கோங்க கரெக்டா மேட்ச் ஆகும்)
தோட்டத்தில் மேடை போட்டு அலங்காரம் செய்து ,மைக் செட் ,ஸ்பீக்கர் என சங்கீத்க்கு தேவையான அனைத்தும் தயார் நிலையில் இருந்தது …அங்கே அனைத்தும் சரியாக இருக்கிறதா என பார்க்க வந்த விஜயின் காதுக்கு அருகில் திடீரென
“மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே
மரிக்கொழுந்தே என் மல்லிகை பூவே”
என ஸ்பீக்கரில் இருந்த வந்த சத்தத்தில் பயந்து போய் நான்கு அடி பின்னால் சென்று விழுந்தான்.
அங்கு இருந்த அனைவரும் அவனைப் பார்த்து சிரிக்க , காதை தேய்த்துக் கொண்டே எழுந்தவன் சவுண்ட் ஆபரேட்டரிடம் சென்று ,” யோவ் லூசாய்யா நீ காதுக்குள்ள கத்த விடுற காதே போச்சு ” என கடுப்பாக வினவினான்.
“சாரி ஜி சாரி ஜி நீங்க அங்க இருந்ததை பார்க்கலை சவுண்ட் செக் பண்ணேன்” என மன்னிப்பு கோறினான்.
” என்னத்தை செக் பண்ணியோ ஏண்டா சங்கீத்துக்கு போடுற பாட்டாடா இது ஒரு மனசாட்சி வேணாமா டா விட்டா செல்லாத்தா செல்ல மாரியாத்தா கூல் காய்ச்சி ஊத்திருவ போல..நாங்க குடுத்த பென் ட்ரைவ் மட்டும் போடு டா சாமி” என புலம்பி விட்டு எல்லோரையும் அழைத்து வரச் சென்றான்.
ஹரி தங்க நிறத்தில் ஷெர்வாணி அணிந்திருக்க ,கார்த்திக்கும் விஜயும் ஒன்று போல் வெள்ளை நிறத்தில் ஷெர்வாணி அணிந்திருந்தனர். பார்ப்பதற்க்கு மூவரும் ராஜ தோரணையோடு கம்பீரமாக இருந்தனர்.
ஸ்ரீ ஹரிக்கு ஏற்றவாரு தங்க நிறத்தில் காக்ரா சோலி அணிந்திருந்து அவளும் மின் விளக்குகளுக்கு போட்டியாக ஜொலி ஜொலித்தாள். மற்ற ஐவரும் ஒன்று போல் வெள்ளையும் சிகப்பும் கலந்து காக்ரா சோலி அணிந்து அந்த இடத்தையே வண்ணமயமாக்கி கொண்டிருந்தனர்.
சரியாக 10 மணிக்கு மைக்கை எடுத்து கொண்டு மேடையேறிய கார்த்திக் ,”மைக் டெஸ்ட்டிங்க் 1, 2, 3 என கூறினான்.”
இன்னொரு மைக்கில் இருந்து சவுண்ட் ஆபரேட்டர்,” ஜி மைக் டெஸ்டிங்க்லாம் நங்க பண்ணியாச்சு நீங்க உங்க வேலையை ஸ்டார்ட் பண்ணுங்க” என அசிங்க படுத்தினான்.
“ஹிஹி ஓகே ப்ரோ” என சிரித்து சமாளித்தவன், “ஓகே வணக்கம் வந்தனம் நமஸ்தே நமஸ்கார்..குட் ஈவ்னிங்க் பீப்ஸ் … i’m glad to welcome you all on this pleasant evening” என்று பீட்டர் விட்டவனை கீழே இருந்து கூச்சலிட்டு தடுத்தனர்.
விஜய் எழுந்து ,”மச்சி நீ படம் ஓட்டுனது போதும் ஃபங்க்ஷன் ஸ்டார்ட் பண்ணிரலாம் லேடிஸ் ஃபர்ஸ்ட் போங்க போங்க” என பெண்களை விரட்டினான்.
‘நான் பாட்டுக்கு செவனென்னு தான டா இருந்தேன் யாரு வம்பு தும்புக்காச்சும் போனேனா காம்பயர் பண்ணுனு கூப்பிட்டு வச்சு அசிங்க படுத்துறானுங்க’ என புலம்பிக் கொண்டே அங்கிருந்து வந்தான் கார்த்திக்.
“அடி நீயிங்கே…அடி நீயிங்கே…
நீயிங்கே நீயிங்கே பூச்சூடும் வாளெங்கே தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானா”
என்ற பாடல் ஒலிக்க மேடையில் ஆறு பெண்களும் மயில் போல அழகாக நடனம் ஆடினர்.
இவர்களின் இந்த நடனத்தை பார்த்து பாவம் ஆண்கள் தான் மூச்சு விடவும் மறந்து அமர்ந்திருந்தனர்.
“வந்து மூன்று முடிச்சு போடு பின்பு முத்த முடிச்சு போடு என்னை மொத்தமாக மூடு மூடு
நீ எனக்குள் புதையலெடுக்க நானும் உனக்குள் புதையலெடுக்க உயிரின் ஆழம் சென்று தேடு தேடு
இளமையின் தேவை எது எது என்று அறிந்தோம் நீயல்லவா
இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் அன்பே நீ சொல்ல வா” என்ற வரிகளுக்கு நடனம் ஆடும் போது ஸ்ரீ ஹரியின் கண்களை பார்த்து பாடிக் கொண்டிருந்தாள். அவனும் ஏதோ கடிவாளம் இட்ட குதிரை போல் கண்களை அவளை விட்டு வேறெங்கும் அசைக்கவில்லை.
ஒருவழியாக அவர்கள் ஆடி முடித்ததும் விசில் சப்தமும் சந்தோஷ கூச்சலும் காதை கிழித்தது.
அது அடங்கியதும் அடுத்ததாக ஆண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வந்தனர்.
ஹரியின் நண்பர்கள் சிலரும் சேர்ந்து கொள்ள பாடல் ஒலிக்க தொடங்கியது.
“ஹர ஹர மஹா தேவகி ” என்ற சப்தம் கேட்க இந்த பாடலை யாரும் எதிர்பார்க்கவே இல்லை என்பது அனைவர் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது .”என்ன கூத்து பண்ண காத்திருக்காங்களோ இன்னைக்கு” என நினைத்துக் கொண்டு மேடையைப் பார்க்க ஆரம்பித்தனர்.
அதற்குள் விஜய் தன் மனைவியின் 10000 ரூபாய் டிசைனர் சேலையை சுத்திக் கொண்டு வந்து( இவர் தான் லக்ஷ்மி ராயாமா) நடுவில் நின்று ஆட ஆரம்பித்தான்.அவனை கட்டித் தழுவி இடித்துக் கொண்டு மற்ற அனைவரும் ஆட ஆரம்பித்தனர்.
ஆதிரா தலையிலே அடித்துக் கொண்டு “கர்மம் கர்மம் இப்படி அசிங்கப்படுத்துறானே” என மனதிற்குள் பொருமினாள்.
ஒரு வழியாக ஆடி முடித்து வந்தவர்களை இளைஞர் படை பலத்த ஆரவாரங்கள் மற்றும் கரகோஷங்களுடன் வரவேற்றது.
அதன் பின் ஒருவர் மாற்றி ஒருவராக நடனமாட தொடங்கினர்.பெரியவர்கள் முதல் சிறார்கள் வரை பாரபட்சமின்றி இறங்கி குத்தினர்.
போட்டி எல்லாம் மறந்து போய் அங்கே சந்தோஷம் மட்டுமே நிறைந்திருந்தது.
மேயாதமான் படத்தில் இருந்து தங்கச்சி பாடலுக்கு ஹரி கார்த்திக் ஆதிரா மூவரும் தரை லோகலாக குத்தினர்.
இறுதியாக “இடிச்ச பச்சரிசி” பாடலுக்கு மொத்த குடும்பமும் ஆடி பாடி முடிய இரவு 2 மணி ஆகி விட்டது.
எல்லாம் முடிந்தது என நினைத்து அனைவரும் கலைந்து செல்ல நினைத்த போது,
வெய்டிங் ஃபாா் தி புன்னகை… சிாிடி…
காணவில்லை ஹாா்ட் பீட்… திருடி…
அடடா நான் கவிஞன்…
உனை பாா்த்து கெட்டுப்போன கவிஞன்…
ஹானஸ்ட்டா நான் பேசவா…
இல்ல இது போதுமா…
ஓ மை டாா்லிங்… நாங்க கம்மிங்…
புது புது கணக்கெல்லாம் பென்டிங்…
ஓ கோரஸ்ஸா நான் கேட்கவா…
எஸ்சா… எஸ்சா… நோவா…
எஸ்சா…
அழகியே… மோி மீ மோி மீ… அழகியே…
பிளிா்ட் வித் மீ கெட் ஹை வித் மீ… அழகியே…
கோவம் வந்தா கூச்சம் வந்தா டோன்ட் ஒா்ாி …
அழகியே ஹே அழகியே…
என ஹரியின் பாட்டுக் குரலால் அனைவரின் நடையும் தடைபட்டது.
ஸ்ரீயை பார்த்து பாடிக்கொண்டே வந்தவன் பாடல் முடிந்ததும் ஒளித்து வைத்திருந்த சிகப்பு ரோஜா பூங்கொத்தை அவளிடம் நீட்டினான்.
சந்தோஷத்தில் திக்கு முக்காடி போன ஸ்ரீ பேச மறந்து சிலையாக அவனையே பார்த்தவாறு நின்றாள்.
அனைவரின் கரகோஷத்தில் நினைவிற்கு வந்தவள் அவன் கொடுத்த பூங்கொத்தை மார்போடு சேர்த்து அனைத்துக் கொண்டாள்.
அவள் எதிர்பாரா வண்ணம் அவள் முன் முழங்காலிட்டு அமர்ந்தவன் ” வில் யூ பீ மை பெட்டர் ஹாஃப் லட்டு” என அவள் கண்களோடு கலந்து மோதிரத்தை அவள் முன் நீட்டி வினவினான்.
மகிழ்ச்சியில் கண்கள் கலங்க ” ஐ லவ் யூ டா என் மங்குனி மாமாஆஆஆஆஆ” என அனைவரும் அங்கிருப்பதை கண்டுகொள்ளாமல் அவனை கட்டிக் கொண்டாள்.
இதைக் கண்ட அனைவரும் கத்தி கூச்சலிட்டனர். இந்த நள்ளிரவில் இவர்களின் சப்தம் பக்கத்து ஊர் வரை காதை கிழித்தது.
அங்கே காற்றில் கூட சந்தோஷ அலைகள் பரவியிருக்க, அனைவரும் மகிழ்ச்சியுடன் உறங்கச் சென்றனர்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1


காற்றாய் நுழைந்தாள் என்னுள்ளே - மேக வாணி