
அத்தியாயம் 10
“ஒரு பொய்யாவது சொல் கண்ணே கண்ணே
உன் காதலன் நான் தான் என்று என்று
அந்த சொல்லில்ல்ல்ல்ல் உயிர் வாழ்வேன்ன்ன்ன்”
என்று வடிவேலு ஸ்டைலில் கத்திக் கொண்டிருந்தது சாட்சாத் நம்ம கார்த்திக்கே தான்.
ஹாலில் இளம்கன்னிகள் அனைவரும் பாட்டியோடு சேர்ந்து கதை அடித்துக் கொண்டே லட்டுக்கு உருண்டை பிடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை பார்த்து தான் நம் மன்மதன் (கார்த்திக்) பாடிக் கொண்டிருந்தான்.
ஆனால் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காத பெண்கள் தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.
இருந்தும் தன் முயற்சியை கைவிடாமல்,
“இங்கேம் இங்கேம் இங்கேம் காவாலே
சாலே இதி சாலே
நீகை நுவ்வே ஒச்சி வாலாவே
இகபை திரனாலே”
என அடுத்து தமிழைக் கொன்று காக்காக்கு போட்டது பத்தாமல் தெலுங்கை அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்தான்.
அப்போது அங்கே வந்த நல்லசிவம் ,”என்ன மாப்பிள்ளை இப்படி திட்டுற பை கேட்டா கொண்டு வந்து தர மாட்டேனா அதுக்காக காவாலினுலாம் திட்டுற?? சரி என்ன பை வேணும் கோணிப்பையா, மஞ்சப்பையா, கட்டைப்பையா, சுருக்கு பையா??? சொல்லு மாமா எடுத்துட்டு வந்து தந்துருறேன்.அதுக்காக இன்னொரு முறை மாமாவை இப்படி கெட்ட வார்த்தைலைலாம் திட்ட கூடாது சரியா??” என அப்பாவியாக(?) கூறினார்.
“யூ டூ மாமா??? சங்கீதம்னா என்னனே தெரியாத ஞானசூனியங்க இருக்க வீட்ல வந்து பிறந்துட்டேன். நான் எல்லாம் சித் ஸ்ரீராமோடா(Sid sriram) சின்னம்மா பையனா பிறக்க வேண்டியது என் கெரகம் இந்த கும்பல்ல வந்து மாட்டிக்கிட்டேன்” என கார்த்திக் புலம்பினான்.
“சங்கீதான்னா எனக்கு தெரியுமே மச்சான் உன்னோட எட்டாவது லவ்வர் தான..கணக்குல சுமார்னாலும் எப்படி உன் லவ்வர்ஸ் லிஸ்ட்ல கன் மாதிரி இருக்கேன்” என விஜய் தன் சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.
“இல்லை மாப்பிள்ளை சங்கீதானா வெஜ் ரெஸ்டாரண்டை சொல்றான் என் தொம்பி..அவனுக்கு காதலியை விட காளான் பிரியாணி மேல தான் லவ்வு ஜாஸ்தி .அப்படி தான டா தம்பி” என கார்த்திக்கை பார்த்து நக்கலடித்தான் ஹரி.
“குடும்பமா இது சரியான பைத்தியக்கார கூட்” என்று சொல்ல வந்ததை பாதியிலே முழுங்கிவிட்டு தன் முன் அனல் கக்கும் விழிகளோடு தன்னை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்த வீரப்பனை(தாத்தா) பார்த்து வாயை கப் சிப் என மூடிக் கொண்டான்.
“இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம் இங்க உக்காந்து கூத்தடிச்சுகிட்டு இருக்கீங்க..ஒரு பொறுப்பு இருக்கா..கார்த்திக் தம்பி உன்னை என்ன சொன்னேன் சொந்தக்காரங்களாம் வந்துட்டு இருக்காங்க போய் கூட்டிட்டு வந்து அவங்களை தோப்பு வீட்டுல தங்க வைக்க ஏற்பாடு பண்ண சொன்னேன்ல அத பண்ணாம இங்க உட்கார்ந்து விளையாடிட்டு இருக்க!!!! போ போய் உன்ற வேலையை கவனி..”என்று கார்த்திக்கிடம் காய்ந்தவர் பின் விஜயிடம் திரும்பி,”விஜய் மாப்பிள்ளை உங்களை உங்க மாமனார் தேடிட்டு இருந்தாரே நீங்க இந்த வெட்டி பயலுக கூட சேர்ந்து நேரத்தை வீணாக்காம போய் ஜோலிய பாருங்க..” என அவனையும் அங்கிருந்து அகற்றினார்.
அவர் சொல்லுறதுக்கு முன்னாடி நம்மலே எஸ்கேப் ஆய்ருவோம் என அங்கிருந்து நகரப்போன ஹரியை தடுத்தவர்,”என்ன தம்பி மாப்பிள்ளைனா வேலை எதுவும் செய்ய கூடாதுனு யாராச்சும் சொன்னாங்களா தலைக்கு மேல வேலை கெடக்குது எல்லாரும் விளையாடிட்டு கெடக்கீங்க..போய் மளிகை ஜாமானெல்லாம் வந்துருச்சானு பாரு உருப்படியா” என மாப்பிள்ளை என்ற சலுகை கூட இல்லாமல் அவனுக்கும் மண்டகப்பெடி கிடைத்தது..(பின்ன தாத்தா ரொம்ப நேர்மையானவர் எதுலயும் பாராபட்சமே எல்லாருக்கும் சமமா பிரிச்சு குடுத்துருவாரு அவ்ளோ நல்ல்ல்ல்லவரு)
மூவரும் கடுப்போடு அவர் குடுத்த வேலையை செய்ய கலைந்து சென்றனர்.
சரி சரி அவங்க போய்ட்டாங்க வாங்க நம்ம இந்த லட்டு கோஷ்டிக கிட்ட போய் நமக்கும் ஏதாச்சும் ஒன்னு ரெண்டு லட்டு தேருமான்னு பார்க்கலாம்.
லட்டை பிடிக்கிறேன் என்று பெயர்செய்து கொண்டு முக்கால்வாசி லட்டை தன் வயிற்றுக்கு பார்சல் அனுப்பிக் கொண்டிருந்த நிஷாவை பார்த்து கடுப்பான மது,
“தின்னு தின்னு நல்லா தின்னு!!! சோத்து மூட்டை எல்லா லட்டையும் நீயே காலி பண்ணிட்டா வர்றவங்களுக்கு நாமம் தான் சாத்தணும். வயித்துக்குள்ள ஒரு பெரிய அண்டா வச்சிருப்பியோ உள்ள தள்ளிக்கிட்டே இருக்க” என எப்போதும் போல் அவளை வசை பாடத் தொடங்கினாள்.
அவளை தடுத்த பாட்டி,”சும்மா பிள்ளையை பார்த்து கண்ணு போடாத தங்கம்..அப்பறம் கல்யாண சமயத்துல பிள்ளைக்கு மேலுக்கு எதாச்சும் வந்துற போகுது” என அவளுக்கு சப்போர்ட்டுக்கு வந்தார்.
“யாரு இவ பச்சை பிள்ளையா பாட்டி நீங்க வேற சும்மா இருங்க இவ பசி வந்துச்சுனா உங்களை கூட சாப்பிட்டு ஏப்பம் விட்ருவா” என ஸ்ரீ அவளை கலாய்த்தாள்.
அதை பார்த்து கோபப்பட்ட சாருமதி,”ஸ்ரீ என்ன பழக்கம் இது எப்போ பார்த்தாலும் நிஷா குட்டியை இப்படியே வம்பிழுத்துகிட்டு இருக்கீங்க அவ மனசு கஷ்டப்படாதா ஒழுங்கா மன்னிப்பு கேழு கல்யாணமே நடக்கப் போகுது இன்னும் பொறுப்பே இல்லை” என அவளை அதட்டினார்.
“அய்யோ அம்மா நீங்க அவளை எதும் சொல்லாதீங்க..இவங்க இப்படிலாம் பேசலைனா தான் நான் வறுத்தப்படுவேன்..இவங்க மட்டும் தான் என்ன கலாய்ப்பாங்க மத்தவங்க என்ன கிண்டல் பண்ற மாதிரி ஒரு பார்வை பார்த்தா கூட இவங்க நாலு பேரும் அவங்களை உண்டு இல்லைன்னு பண்ணிட்டு தான் அடுத்த வேலையே பார்ப்பாங்க..இப்படி என்ன கிண்டல் பண்றவங்க தான் நான் ஒரு வேளை சாப்பிடலைனா கூட அவ்ளோ கோவப்பட்டு நான் சாப்பிடுற வரைக்கும் விட மாட்டாங்க ..இந்த எருமைங்களுக்கு என் மேல அவ்ளோ பாசம் ஆனா வெளிய மட்டும் வேசம் போடுங்க” என நிஷா உணர்ச்சி மிகுதியில் கூறிக் கொண்டிருந்தாள்.
நிலைமையை சகஜமாக்க பாட்டி நிஷாவை பார்த்து,” அவங்க கிடக்கட்டும் கண்ணு நம்ம வாழுறது இப்படி ஓடி ஓடி சம்பாரிக்கிறதே நல்லா சாப்பிடுறதுக்கு தான,நீ தான் அத ஒழுங்கா பண்ணுற ..இவங்களை பாரு முட்டை மாதிரி ஆகணும்னு சாப்பிடாம கொள்ளாம ஏதோ சீக்கு வந்தவங்க மாதிரி நோஞ்சானா இருக்காங்க..” என அங்கலாய்த்தார்.
அவர் சொன்னது புரியாமல்,” அது என்ன பாட்டி முட்டை மாதிரி ஆகுறது ???” என வர்ஷு பாட்டியிடம் தன் சந்தேகத்தை கேட்டாள்.
அவளை பார்த்து சிரித்துக் கொண்டே,” வர்ஷு குட்டி அது முட்டை இல்லை டி ஜீரோ சைஸ்(zero size) தான் பாட்டி தமிழ் ல சொல்லுறாங்க ..அப்படி தான பாட்டி” என இழுத்து பேசி பாட்டியை வம்பிழுத்தாள் ஸ்ரீ.
“அது என்ன கன்றாவியோ போங்க இப்போ அந்த கத்திரிக்காய் கைப்பிள்ளை மாதிரி இருக்கவங்க எல்லாரும் எப்படி இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்பறம் நம்ம குஷ்பூ மாதிரி கொழு கொழு ஆக தான போறீங்க அப்போ பார்த்துக்குறேன்” என நொடித்துக் கொண்டார் பாட்டி.
இந்த முறை ட்ரான்ஸ்லேட்டர்(translator) இல்லாமலே பாட்டி கூறியது கத்ரீனா கைப்(katrina kaif) என்று புரிந்து கொண்டவர்களால் தங்கள் சிரிப்பை அடக்க முடியவில்லை.
ஒருவழியாக சிரிப்பலை ஓய்ந்ததும் பாட்டி அங்கிருந்த இளம் பெண்களைப் பார்த்து,”என்ன குட்டிங்களா கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு இன்னும் உங்க மூஞ்சி கை காலுக்குலாம் அலங்காரம் பண்ணலயா” என வினவினார்.
அதற்கு அலுத்துக் கொண்ட ஆதிரா,” ஆமா இந்த ஊருல எங்க போய் பாட்டி பார்லரை(parlour) தேட கோயம்புத்தூர்ல கல்யாணத்தை வச்சுருக்கலாம் இல்லையா அட்லீஸ்ட் கல்யாணத்தை தள்ளியாச்சும் வச்சுருக்கலாம் இந்த ரெண்டு நாள்ல இருக்க வேலையெல்லாம் விட்டுட்டு கோயம்புத்தூர் போக சொல்றீங்களா” என வினவினாள்.
“அட இதுக்கு எதுக்கு கோயம்புத்தூர் போகணும் குட்டிமா?” என பாட்டி பதில் கேள்வி கேட்டார்.
“பின்ன நீயே எங்க எல்லாருக்கும் facial,manicure ,pedicure எல்லாமே பண்ணி விடப் போறியா பாட்டி” என கிண்டல் செய்தாள் ஸ்ரீ.
“அட போங்கடி கூறு கெட்டவளுங்களா .. என்ன பெரிய பேசியலு கீசியலு..தினமும் நீங்க சாப்பிடுற சாப்பாட்டுல எவ்வளவு நல்ல மருத்துவ குணம் இருக்கு தெரியுமா ..தினமும் தக்காளி சாப்பிடுறீங்களே அதுல உள்ள சத்து நம்மளை புற ஊதா(ultra violet rays) கதிர்கள்ல இருந்து நம்ம சருமத்தை பாதுகாக்குது…உங்க முகத்துல வர்ற பருக்கள் மறஞ்சாலும் அதுல இருக்க தழும்புகள் மறையாது அதுக்கு இந்த தக்காளிச்சாறையும் வெள்ளரிச்சாறையும் சம அளவுல எடுத்து பஞ்சுல தொட்டு தடவி காஞ்சதும் கழுவிறனும் இதே மாதிரி தொடர்ந்து கொஞ்ச நாள் பண்ணா அது மறைஞ்சே போய்ரும்.சருமத்தை பொலிவாக்குற திறன் கூட தக்காளில இருக்கு.இந்த காலத்து பிள்ளைங்கலாம் மஞ்சள் போட்டு குளிக்கிறது ஏதோ பட்டிக்காட்டான் பண்ணுறது அப்படின்னு நாகரிகம்ன்ற முகமூடி போட்டுக்கிட்டு இத ஒதுக்கிட்டீங்க ஆனா அதுல எவ்வளவு நன்மை இருக்கு தெரியுமா. தோள் நோய்கள் வர விடாம தடுக்குற மருந்து அது. இந்த கஸ்தூரி மஞ்சளை போட்டு குளிக்காம அப்பறம் மீசை வந்துருச்சு அத போய் எடுக்க போறேன்னு அங்க போய் அவங்க ஒவ்வொன்ன இழுத்து பிடுங்க வலியை பொறுத்துட்டு இருக்கீங்க ..இது மட்டுமா புருவ முடியை திருத்துறேன்னு போறீங்களே அதுனால எவ்வளவு பின் விளைவுகள் இருக்குனு தெரியுமா??? இந்த புருவ முடிகள் தான் பிராணன் இயங்கும் இடம்.சாகப் போறவனுக்கு தான் பிராணன் குறைஞ்சு புருவ முடிகள்லாம் கொட்டிப் போகும் ஆனா இங்க நீங்களே அழகுன்ற பேருல உங்க ஆயுள குறைச்சுக்கிறீங்க.நீங்க ஒவ்வொரு முறை உங்க புருவ முடியை திருத்துறப்போயும் உங்க பிராண சக்தி குறைஞ்சு உங்க ஆயுள் குறையிறது மட்டும் இல்லாம நீங்க பெத்துக்குற குழந்தைகள்,உங்க சந்ததிக்கே ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும்.புருவ முடிகள்ளையும் கண்ணுலயும் விளக்கெண்ணெய் விடுறதுனால பிராண சக்தி அதிகமாகும் நோயும் கம்மியாகும்.இப்படி நீங்க சாப்பிடுற எலுமிச்சம்பழம் ,வெள்ளரி,புதினா,தேன்,கடலை மாவு,கறிவேப்பிலை இன்னும் நம்ம அன்றாட வாழ்வுல பயன்படுத்துற எல்லாத்துலயும் மருத்துவ குணம் மட்டும் இல்லாம உங்க அழகு மெருகேத்துறத்தும் நிறைய சக்தி இருக்கு. ஆனா நீங்க தான் வெளிநாட்டு மோகம் பிடிச்சு போய் ஆடுறீங்க …எல்லாத்துலயும் அவசரம் .ஆங்கில மருந்து சாப்பிட்டா உடனே நீங்க நினைக்குறது எல்லாம் சரி ஆய்ரும்… தற்காலிகமா!!!!! ஆனா நம்ம முன்னோர்கள் சொன்னதை நம்ம உபயோகப்படுத்துனா பொறுமையா குணம் ஆனாலும் திரும்ப அது வரவே முடியாத படி தடுக்கும் வல்லமை நிறைஞ்சது. உணவே மருந்துன்னு நம்ம முன்னோர்கள் சும்மாவா சொல்லி வச்சாங்க அதெல்லாம் உங்களுக்கு எங்க புரியப் போகுது ..சம்பாதிக்கிறது எல்லாம் ஹாஸ்பிட்டல்லயே போய் கொட்ட வச்சுட்டாங்க..உங்களுக்கு தர்ற மருந்துக எல்லாம் நோயை தடுக்க இல்லை இன்னும் பெரிய நோயை உங்க உடம்புல கொண்டு வர இது என்னைக்கு உங்களுக்கு புரிய போகுதோ ” என தன் மனக்குமுறலை கொட்டித் தீர்த்தார் பாட்டி.
அவர் பேசிய பின் அங்கே சில நிமிடம் கனத்த அமைதி நிலவியது, பாட்டி கூறியதில் உள்ள உண்மை அவர்களை சுட்டது ,’தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது மருத்துவ துறையிலும் நிறைய புதிய யுக்திகளை கையாண்டு பல சாதனைகள் புரிகிறார்கள்.. அதைப் பற்றி மட்டுமே சிந்தித்த நாம் இதோடு சேர்ந்து நாளுக்கு நாள் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டிருப்பதையும் …தினமும் புதிது புதியாய் முளைவிடும் நோய்களைப் பற்றியும் ஏன் சிந்திக்க மறந்தோம்’ என அனைவரும் தத்தம் சிந்தனைகளில் மூழ்கி இருந்தனர்.
அந்த அமைதியை பொறுக்காத ஆதி, “பாட்டி நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை..ஆனால் அவசரமா ஓடிட்டு இருக்க இந்த உலகத்துல நாமும் அதோட வேகத்துக்கு ஓடி தான் ஆகனும்.இப்போ நான் காய்ச்சல்னு படுத்துட்டு நாட்டு மருந்து சாப்பிட்டு சரி ஆகுற வரைக்கும் வெய்ட் பண்ணா எங்க வீட்ல ஒரு வேலையும் நடக்காது ..அதுனால தான் எல்லோரும் இந்த மருத்துவமுறைல பாதிப்பு பின் விளைவுகள் எல்லாம் இருக்குனு தெரிஞ்சும் அதுல தலைய விடுறாங்க..இது எல்லாரும் மனசு வச்சு ஒத்துழைச்சாலே இந்த சுழல்ல இருந்து வெளிய வர்றது கஷ்டம் தான். ஆனால் இனிமேல் நீங்க சொன்ன மாதிரி நம்ம சாப்பாட்டு முறையை பழங்காலம் மாதிரி மாத்துனா ஒரு விடிவு கிடைக்கும். பட் நீங்க சொன்ன காய்கறி, பழம், பால் கூட இப்போ இயற்கை தந்தது கிடைக்கிறது இல்ல.இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால எல்லாமே செயற்கை ஆய்ருச்சு.தானா கனிய வேண்டியதை கூட பொறுமை இல்லாம ஊசி போட்டு கனிய வைக்குறாங்க..இந்த லட்சணத்துல எங்க பாட்டி உணவை மருந்தா எடுத்துக்க இதுலயே ஆயிரத்தெட்டு பிரச்சனை இருக்கு.இன்னும் கிராமங்கள்ல மட்டும் தான் இது நுழையாம இருக்கு ஆனா இன்னும் கொஞ்ச நாள்ல விவசாய நிலமெல்லாம் ப்ளாட் போட்டு வித்துருவாங்க அப்போ கிராமமே அழிஞ்சு போகும் இதுல எங்க நீங்க சத்துள்ள காய்கறி பழங்களை விழைவிப்பீங்க ??”என சலித்துக் கொண்டாள்.
இவர்களின் விவாதத்தை பார்த்துக் கொண்டு வந்த கலைவாணி,” அட என்ன பிள்ளைங்களா ரெண்டு நாள்ல கல்யாணத்தை வச்சுக்கிட்டு இப்படி ஒரே சீரியசா பேசிகிட்டு இருக்கீங்க …இதெல்லாம் பொறுமையா கல்யாணம் முடிஞ்சதும் விவாதிக்கலாம், இப்போ நாளைக்கு மெஹந்திக்கு என்ன டிசைன் போட போறீங்கன்னு செலக்ட் பண்ணுங்க” என சூழ்நிலையை சகஜமாக்கினார்.
“இல்லை அம்மா நாங்க நாளைக்கு மருதாணி வச்சுக்க போறோம் நம்ம தோட்டத்துல இருக்குல அத வச்சுக்கிட்டா கைல செமயா வாசம் வரும்மா நீங்க தான் வச்சுவிடப் போறீங்க” என மது இப்போதே மருதாணி கைகளில் உள்ளதை போல் மூச்சை உள்ளிழுத்து அனுபவித்து கூறினாள்.
அனைவரும் அதையே ஆமோதிக்க ,பாட்டி சிரித்துக் கொண்டே,”சரி பிள்ளைங்களா நாங்களும் வச்சு ரொம்ப நாள் ஆச்சு நம்ம ஈஸ்வரிய விட்டு பிடுங்கிட்டு வர்ற சொல்லி அம்மில கொட்டை எல்லாம் வச்சு அரைக்கலாம் நல்லா சிவக்கும்” என மகிழ்ச்சியாக கூறினார்.
அவர்கள் அனைவரும் குஷியாக “டபுள் ஓகே” என கட்டை விரலை தூக்கி காண்பித்தனர்.
சரியாக அதே நேரத்தில் அங்கே என்ட்ரி கொடுத்த கார்த்திக்,” என்ன செல்லங்களா எல்லரும் சல்மான் கானோட சேர்ந்து தம்ப்ஸ் அப்(Thumbs up) கூல் ட்ரிங்க்ஸ்க்கு ப்ராண்ட் அம்பாஸிடர்(Brand Ambassador) ஆகிட்டீங்களா?? அப்ப இனிமேல் எனக்கு ஃப்ரீயா ஜூஸ் கிடைக்கும் ஜாலி தான்.அவங்க கிட்ட சொல்லி கல்யாணத்துக்கும் சப்ளை பண்ணிற சொல்லுங்க எதுக்கு ஜூஸுக்கு வேஸ்டா காசை செலவளிக்கனும்” என்று கமென்ட் செய்து கன்னிகளின் முறைப்பை பரிசாக பெற்றுக் கொண்டான்.
“என்ன ப்ரோ உங்களை தான் அப்போவே தாத்தா வந்து திட்டி வேலை பார்க்க சொன்னாருல்ல இங்க என்ன பண்ணுறீங்க” என்று நந்து அவனிடம் வினவினாள்.
“ஆமா அவர் எனக்கு மிலிட்டரில வேலை வாங்கி தந்துட்டாரு நான் அந்த கடமையை செய்ய தவறிட்டேன் பாரு. ட்ரைவர் வேலை தான பார்க்க சொன்னாரு அதெல்லாம் பார்த்தாச்சு பார்த்தாச்சு. நான் இங்க வந்ததே நாளைக்கு சங்கீத் ல பாய்ஸ்(Boys) Vs கேர்ல்ஸ்(Girls) போட்டி நடக்கப் போகுது.சோ மானம் போகாத அளவுக்கு டான்ஸ் ப்ராக்டீஸ் ,பாட்டு ப்ராக்டீஸ் லாம் செஞ்சுக்கோங்க.தோற்க்க தான் போறீங்க கொஞ்சம் டீசன்டா தோல்விஅடைய வாழ்த்துக்கள் சொல்ல தான் வந்தேன்.” என்று தான் வந்ததின் நோக்கத்தை கூறினான்.
“நாளைக்கு பார்க்கலாம் யாரு ஜெய்க்குறா யாரு தோக்குறான்னு ஓவரா ஆடாதடா பேராண்டி நாளைக்கு நீங்க மண்ணைக் கவ்வ போறீங்க.. பொண்ணுங்க தான் ஜெய்ப்பாங்க” என பாட்டி சவால் விட்டார்.
அங்கிருந்த அனைத்து பெண்களும் அதையே வழி மொழிந்தனர்.
“சரி சரி நாளைக்கு களத்துல சந்திப்போம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து பறந்தான் கார்த்திக்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
3
+1
+1

